மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் (1)

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 300

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். அவன் தேவனைப் பார்க்க முடியாமல் போனால், அப்படியே அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ஆளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்! இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் “உயர் கல்வி நிறுவனங்களில்” கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய பிரசன்னத்தைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் இராஜ்யத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்ச கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைத் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 301

மனிதனின் அசுத்தமான மனநிலையானது அவனுடைய வாழ்வு சாத்தானால் நஞ்சூட்டப்பட்டு, நசுக்கப்பட்டதிலிருந்தும், அவனுடைய சிந்தனை, அறநெறி, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மேல் சாத்தான் விளைவித்த மோசமான தீங்கிலிருந்தும் தோன்றுகிறது. அதனுடைய மிகச்சரியான காரணம் என்னவென்றால் மனிதனின் அடிப்படைக் காரியங்கள் சாத்தானால் கெடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவைகளை உண்மையாக எப்படிப் படைத்தாரோ அதைப்போல முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. மனிதன் தேவனை எதிர்த்து, சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல் போகிறான். இப்படி, மனிதனுடைய மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய புரிதலையும், சத்தியத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றக்கூடிய அவனுடைய சிந்தனை, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும். மிக ஆழமாகக் கெடுக்கப்பட்டிருக்கிற இடங்களில் பிறந்தவர்கள், தேவன் யார் அல்லது தேவனை நம்புவது என்றால் என்ன என்று இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர். எவ்வளவு அதிகமாக ஜனங்கள் கெடுக்கப்படுகிறார்களோ, அவ்வளவு குறைவாக அவர்கள் தேவன் இருப்பதை அறிந்திருப்பார்கள், மேலும் அவர்களுடைய பகுத்தறிவும் உள்ளுணர்வும் அவ்வளவு மோசமானதாக இருக்கும். தேவனுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மையின் மூலக்காரணம் மனிதன் சாத்தனால் கெடுக்கப்பட்டிருப்பதாகும். சாத்தானுடைய கெடுதலினால் மனிதனுடைய மனசாட்சி மரத்துப் போய்விட்டது. அவன் நெறிகெட்டு இருக்கிறான், அவனுடைய நினைவுகள் சீர்கெட்டதாக இருக்கின்றன, அவனுக்கு பின்னோக்கிய மனக்கண்ணோட்டம் இருக்கிறது. சாத்தானால் கெடுக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் இயல்பாகவே தேவனைப் பின்பற்றினான், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிந்தான். அவன் இயற்கையாகவே நல்ல பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் இயல்பான மனிதத்தன்மையுடன் இருந்தான். சாத்தானால் கெடுக்கப்பட்டப் பிறகு, மனிதனின் உண்மையான பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனிதத்தன்மை மந்தமாகி, சாத்தானால் பலவீனமடைந்தது. இவ்வாறு, தேவனிடத்திலான கீழ்ப்படிதலையும் அன்பையும் அவன் இழந்துபோனான். அவனுடைய அறிவு ஒழுக்கம் தவறிப்போனது. அவன் மனநிலை மிருகத்தின் மனநிலையைப் போலவே மாறிவிட்டது. தேவனைப் பற்றின அவனுடைய கலகத்தன்மை ஏராளமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் மாறிவிட்டது. ஆயினும், மனிதன் இதை அறிந்திருக்கவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை, வெறுமனே எதிர்க்கிறான், கண்மூடித்தனமாக கலகம் செய்கிறான். மனிதனுடைய பகுத்தறிவு, உணர்வு மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடுகளில் அவனுடைய மனநிலை வெளிப்படுகிறது. ஏனென்றால் அவனுடைய பகுத்தறிவும், உள்ளுணர்வும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவனுடைய மனசாட்சி மிகப்பெரிய அளவில் மழுங்கிப் போயிற்று. இவ்வாறு அவனுடைய மனநிலை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறதாய் இருக்கிறது. மனிதனுடைய அறிவும், உள்ளுணர்வும் மாற முடியாவிட்டால், அவனுடைய மனநிலையில் மாற்றங்கள் என்பது தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நடக்காத ஒன்றாகவே இருக்கும். மனிதனுடைய உணர்வு சீர்கெட்டதாக இருந்தால், அவனால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது, தேவனால் பயன்படுத்தப்பட தகுதியற்றவனாவான். “இயல்பான உணர்வு” என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது, அவருக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்காக வாஞ்சையாக இருப்பது, தேவனிடத்தில் முழுமையுடன் இருப்பது மற்றும் தேவனைக் குறித்த மனசாட்சியைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அது ஒரு மனதோடு, ஒரு சிந்தையோடு தேவனிடத்தில் இருப்பதையும், வேண்டுமென்றே தேவனை எதிர்க்காமல் இருப்பதையும் குறிக்கிறது. ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்டிருப்பது இது போன்றதல்ல. மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டதிலிருந்து, அவன் தேவனைக் குறித்த கருத்துக்களை எழுப்புகிறான், அவனுக்கு தேவனிடத்தில் விசுவாசமோ அவரிடத்தில் வாஞ்சையோ இருந்ததில்லை, தேவனிடத்திலான உணர்வைக் குறித்துச் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை‌. மனிதன் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறான். அவர் மீது நியாயத்தீர்ப்புகளை வழங்குகிறான். மேலும் அவருடைய முதுகுக்குப் பின்னாக வசைமொழிகளை வீசியெறிகிறான். அவர் தேவன் என்ற தெளிவான புரிதலோடு, மனிதன் தேவனுடைய முதுகுக்குப் பின்பாக நியாயத்தீர்ப்பை வழங்குகிறான்; தேவனுக்குக் கீழ்ப்படிகிற எண்ணம் மனிதனுக்கு இல்லை. அவன் வெறுமனே கண்மூடித்தனமான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அவரிடத்தில் வைக்கிறான். ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்ட இத்தகைய ஜனங்களால் தங்கள் சொந்த இழிவான நடத்தையை அறிந்துகொள்ளவோ அல்லது அவர்களுடைய கலகத்தன்மைக்காக வருத்தப்படவோ இயலாது. ஜனங்களால் தங்களையே அறிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் உணர்வை சிறிதளவு திரும்பப் பெற்றிருப்பார்கள். இன்னும் தங்களைக் குறித்து அறிய முடியாத ஜனங்கள் தேவனை எத்தனை அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களின் உணர்வு அத்தனைக் குறைவுடன் இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 302

மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடானது அவனுடைய மனசாட்சி, அவனுடைய தீங்கிழைக்கும் சுபாவம் மற்றும் அவனுடைய ஆரோக்கியமற்ற உணர்வு ஆகியவற்றைத் தவிர வேறொன்றிலும் உருவாகிறதில்லை. மனிதனுடைய மனசாட்சியும் உணர்வும் மீண்டும் இயல்பானதாக மாற முடியுமானால், அவன் தேவனுக்கு முன்பாகப் பயனுள்ள மனிதனாக மாற முடியும். ஏனென்றால் மனிதனின் மனசாட்சி எப்பொழுதும் உணர்ச்சியற்றதாக இருப்பதாலும், ஒருபோதும் நேர்மையாக இல்லாத மனிதனுடைய உணர்வு இன்னும் மந்தமாகி விட்டதாலும், மனிதன் தேவனிடத்தில் மேலும் மேலும் கலகம் செய்கிறவனாக இருப்பதாலுமேயன்றி வேறில்லை. அவன் இயேசுவையே சிலுவையில் அறைந்து, தன் வீட்டிற்குள் கடைசிக் கால தேவனுடைய மனுஷ அவதரிப்பை மறுத்து, தேவனுடைய மாம்சத்தை நிந்தித்து, அதைக் கீழ்த்தரமாய்ப் பார்க்கிறான். மனிதனுக்குச் சிறிதளவேனும் மனிதத்தன்மை இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் உணர்வு இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு இரக்கமற்றவனாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் மனசாட்சி இருந்திருந்தால், அவன் தேவனின் மனுஷ அவதரிப்புக்கு இவ்வகையில் “நன்றி செலுத்தியிருந்திருக்க” மாட்டான். தேவன் மாம்சமாக வந்த இந்த காலக்கட்டத்தில் மனிதன் வாழ்கிறான். ஆயினும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்த முடியாமல் இருக்கிறான். மாறாக அவன் தேவனுடைய வருகையைச் சபித்து அல்லது தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையை முற்றிலும் புறக்கணித்து, வெளிப்படையாய் அதற்கு எதிராகவும், அதைக்குறித்து சோர்வடைந்தும் போகிறான். தேவனுடைய வருகையை மனிதன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், சுருங்கச் சொன்னால், மனிதன் தேவனிடத்தில் கண்மூடித்தனமாக விண்ணப்பங்களை ஏறெடுத்து, அவரைச் சிறிதளவாகிலும் வரவேற்கவில்லை என்றாலும், தேவன் எப்போதும் அவருடைய கிரியையைப் பொறுமையாக நடத்திக் கொண்டுவந்திருக்கிறார். மனிதனின் மனநிலை மிகக் கொடூரமானதாக மாறிவிட்டது, அவனுடைய உணர்வு மிகவும் மந்தமாகி விட்டது, அவன் மனசாட்சி தீயவனால் முழுவதுமாக நசுக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு முன்பாகவே மனிதனுடைய உண்மையான மனசாட்சியாக இருப்பதை நிறுத்திக்கொண்டுள்ளது. மனிதகுலத்திற்கு இவ்வளவு அதிக ஜீவனையும் கிருபையையும் ஈந்ததற்காக மனித உருவான தேவனுக்கு மனிதன் நன்றி கெட்டவனாக இருப்பது மட்டுமல்ல, அவனுக்கு சத்தியத்தைத் தந்ததற்காக தேவனிடம் மிகவும் மனங்கசந்தும் கொள்கிறான்; மனிதனுக்கு சத்தியத்தின் மீது சிறிதளவும் விருப்பம் இல்லாததால் தான் அவன் தேவன் மீது மனக்கசப்படைகிறான். மனிதனாக அவதரித்த தேவனுக்காக மனிதனால் தன் ஜீவனைக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவன் அவரிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். மனிதன் தேவனுக்காகக் கொடுத்ததை விட டஜன் கணக்கு அதிகமான வட்டியைக் கோருகிறான். அத்தகைய மனசாட்சியையும் உணர்வையும் உடைய ஜனங்கள் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று நினைக்கின்றனர். அவர்கள் தேவனுக்காகத் தங்களையே அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்றும், தேவன் தங்களுக்கு மிகக்குறைவாகவே கொடுத்திருக்கிறார் என்றும் இன்னும் நம்புகின்றனர். ஒரு கிண்ணம் தண்ணீரை எனக்குக் கொடுத்து விட்டு, என்னிடத்தில் தங்கள் கரங்களை நீட்டி, இரண்டு கிண்ணம் பாலுக்கான பணத்தை அவர்களுக்கு நான் செலுத்தும்படி கோருகிறார்கள் அல்லது எனக்கு ஒரு இரவுக்கு ஒரு அறையைக் கொடுத்து விட்டு, பல இரவுகளுக்கான வாடகையை நான் செலுத்தும்படி கோருகிறார்கள். இத்தகைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் கொண்ட நீங்கள் எப்படி இன்னும் ஜீவனை அடைய விரும்புகிறீர்கள்? எத்தனை வெறுக்கத்தக்க பாவிகள் நீங்கள்? மனிதனிலிருந்த இவ்வகை மனிதத்தன்மையும், அவனில் இருந்த இவ்வகை மனசாட்சியும் மனிதனாக அவதரித்த தேவனை பூமியில் தங்க இடமில்லாமல் சுற்றிலும் அலைந்துத் திரிய வைத்த காரணங்களாகும். மனசாட்சியையும், மனிதத்தன்மையையும் உண்மையாகக் கொண்டிருக்கிறவர்கள் மனிதனாக அவதரித்த தேவனை ஆராதிக்கவும், அவருக்கு முழுமனதோடு ஊழியம் செய்யவும் வேண்டும். அவர் எவ்வளவு கிரியைகளைச் செய்தார் என்பதற்காக அல்லாமல், அவர் எந்த கிரியையுமே செய்யாவிட்டாலும் கூட அப்படிச் செய்ய வேண்டும். இதுதான் நல்ல உணர்வுள்ளவர்களால் செய்யப்பட வேண்டும், இது மனிதனின் கடமையாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவனுக்குச் செய்கிற ஊழியத்தில் நிபந்தனைகளைப் பற்றிக் கூட பேசுகிறார்கள். அவர் தேவனா அல்லது மனிதனா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களுடைய சொந்த நிபந்தனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றவே நாடுகிறார்கள். நீங்கள் எனக்காக உணவு சமைத்தால், சேவைக் கட்டணத்தை கோருகிறீர்கள், நீங்கள் எனக்காக ஓடினால், ஓடும் கட்டணத்தைக் கேட்கிறீர்கள், நீங்கள் எனக்காக வேலை செய்தால், வேலைக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் என்னுடைய வஸ்திரங்களைத் துவைத்தால், சலவைக் கட்டணத்தை கோருகிறீர்கள், நீங்கள் சபைக்காக எதையாகிலும் கொடுத்தால், மீட்புச் செலவைக் கோருகிறீர்கள், நீங்கள் பிரசங்கம் பண்ணினால் பிரசங்கியாருக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் புத்தகங்களை விநியோகித்தால், விநியோகக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எழுதினால், எழுத்துக் கட்டணத்தைக் கோருகிறீர்கள். நான் கையாண்ட நபர்கள் கூட என்னிடத்தில் இழப்பீட்டைக் கோருகிறார்கள், வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்களோ அவர்கள் பெயருக்கு வந்த பாதிப்புக்காக இழப்பீட்டைக் கோருகிறார்கள். விவாகமாகாதவர்கள் வரதட்சணையை கோருகிறார்கள், அல்லது தங்களின் இழக்கப்பட்ட வாலிபத்திற்காக இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறார்கள். ஒரு கோழியைக் கொல்லுகிறவர்கள் கசாப்புக்காரரின் கட்டணத்தைக் கோருகிறார்கள், உணவை வறுக்கிறவர்கள் வறுப்பதற்கான கட்டணத்தைக் கோருகிறார்கள், சூப் தயாரிப்பவர்கள் அதற்கும்கூட கட்டணத்தைக் கோருகிறார்கள். இது உங்களுடைய இறுமாப்பான, வலுவான மனிதத்தன்மை ஆகும். இவைகள் உங்களுடைய வெதுவெதுப்பான மனசாட்சி கட்டளையிடும் செயல்களாகும். உங்கள் அறிவு எங்கே? உங்கள் மனிதத்தன்மை எங்கே? நான் உங்களுக்குச் சொல்கிறேன்! இப்படியே நீங்கள் தொடர்ந்தால், நான் உங்களிடையே கிரியை செய்வதை நிறுத்தி விடுவேன். மனித உடையில் இருக்கும் மிருகக்கூட்டங்களிடையே நான் கிரியை செய்ய மாட்டேன், கொடிய இருதயங்களை மறைத்துக் கொண்டிருக்கும் அழகான முகங்கள் கொண்ட ஜனக்கூட்டத்திற்காக நான் இப்படி பாடுபட மாட்டேன், சிறிதளவேனும் இரட்சிப்புக்கு சாத்தியமில்லா இந்த மிருகக் கூட்டங்களை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். நான் உங்களைக் கைவிடும் அந்த நாள் நீங்கள் மரிக்கும் நாளாகும், அந்த நாள் இருள் உங்கள் மேல் வருகிற நாளாகும், ஒளியினால் நீங்கள் கைவிடப்படும் நாளாகும். நான் உங்களுக்குச் சொல்கிறேன்! மிருகங்களை விடவும் கீழ்நிலையில் இருக்கும் உங்களுடைய கூட்டத்தைப் போல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு நான் ஒருபோதும் நன்மைசெய்கிறவராக இருக்க மாட்டேன். என்னுடைய வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் வரம்புகள் உண்டு. உங்களிடத்தில் இருக்கும் உங்களுடைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் அப்படியே மாறாமல் இருக்கும்போது, அவற்றை வைத்துக்கொண்டு நான் இனிமேல் எந்த கிரியையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உங்கள் மனசாட்சியில் மிகக் குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி விட்டீர்கள். உங்களின் இழிவான சுபாவம் என்னை மிகவும் வெறுப்பூட்டுகிறது. மனிதத்தன்மையிலும் மனசாட்சியிலும் மிகவும் குறைவுள்ளவர்களாக இருக்கும் ஜனங்கள் இரட்சிப்புக்குரிய வாய்ப்பை ஒருபோதும் பெற மாட்டார்கள். இதுபோன்ற இதயமற்ற, நன்றியுணர்வில்லாத ஜனங்களை நான் ஒரு போதும் இரட்சிக்க மாட்டேன். என்னுடைய நாள் வரும்போது, ஒரு சமயம் என்னுடைய கடுங்கோபத்தைத் தூண்டின கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மேல் நித்திய காலமாய் என்னுடைய கொளுத்தும் அக்கினியை பொழியப்பண்ணுவேன். ஒரு சமயம் என்மேல் கடுஞ்சொற்களை வீசியெறிந்து, என்னை நிராகரித்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய நித்திய தண்டனையைச் சுமத்துவேன். ஒருசமயம் என்னோடு உண்டு, என்னோடுகூட ஒன்றாக வாழ்ந்து, ஆனால் என்னை விசுவாசிக்காமல், என்னை அவமதித்து, எனக்குத் துரோகம்பண்ணின இந்த கீழ்ப்படியாமையின் புத்திரர்களுக்காக நான் எப்போதும் என் கோபத்தின் அக்கினியிலே பற்றியெரிவேன். என்னுடைய கோபத்தைத் தூண்டின அனைவரையும் என்னுடைய தண்டனைக்கு உட்படுத்துவேன். ஒரு சமயம் எனக்குச் சமமானவர்கள் போல என் அருகில் நின்றபோதும் என்னை ஆராதிக்காமல், எனக்குக் கீழ்ப்படியாமல் இருந்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய கோபம் முழுவதையும் பொழியப்பண்ணுவேன். முன்பு என் பராமரிப்பை அனுபவித்த, முன்பு நான் பேசின மறைப்பொருள்களால் மகிழ்ச்சியுற்ற, முன்பு என்னிடத்திலிருந்து பொருள் இன்பங்களை எடுக்க முயற்சித்த அந்த மிருகங்கள் மேல் நான் மனிதனை அடிக்கின்ற கோல் விழும். என்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒருவரைக்கூட நான் மன்னிப்பதில்லை. என்னிடத்திலிருந்து உணவையும், உடைகளையும் பறித்துக்கொள்ள முயற்சித்த ஒருவனைக் கூட நான் தப்பவிடமாட்டேன். இப்போதைக்கு நீங்கள் தீங்கிலிருந்து விடுதலையாகி, என்னிடத்தில் நீங்கள் செய்யும் கோரிக்கைகளில் மிதமிஞ்சுவதைத் தொடருங்கள். என்னுடைய கோபத்தின் நாள் வரும்போது, என்னிடத்தில் இனிமேல் நீங்கள் எந்த கோரிக்கைகளையும் வைக்க மாட்டீர்கள். அந்த நேரத்தில் உங்கள் இருதயம் திருப்தியாகும் வரையிலும் உங்களை “மகிழ்ச்சியுற” அனுமதிப்பேன். உங்கள் முகத்தை பூமிக்குள் தள்ளுவேன். உங்களால் திரும்பவும் ஒருபோதும் எழும்ப முடியாது. மிகச்சீக்கிரத்தில் நான் இந்தக் கடனை உங்களுக்குத் “திருப்பிச்செலுத்த” போகிறேன். அந்த நாள் வருவதற்காக நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 303

தேவனுக்கு உணர்ச்சி இருப்பதாலும் அல்லது தன்னை மனிதன் ஆதாயமாக்கிக் கொள்வதற்கு விருப்பமற்றவராய் தேவன் இருப்பதாலும் அல்ல, மாறாக மனிதன் தேவன் தன்னை ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பாததால், அவரை உடனடியாகத் தேட விரும்பாததால், அவன் அவரை ஆதாயமாக்கிக் கொள்ளத் தவறுகிறான். தேவனை உண்மையாய்த் தேடுகிறவர்களில் ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? நல்ல உணர்வும், உணர்வுள்ள மனசாட்சியும் கொண்ட ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? தேவனை உண்மையாய் ஆராதித்து, அவருக்கு ஊழியம் செய்கிற ஒருவர் எப்படி அவருடைய கோபத்தின் அக்கினியினால் விழுங்கப்பட முடியும்? தேவனுக்கு மகிழ்ச்சியாய்க் கீழ்ப்படியும் ஒருவர் எப்படி தேவனுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட முடியும்? தேவனை அதிகமாக நேசிக்கும் ஒருவர் எப்படி தேவனுடைய தண்டனையில் வாழ முடியும்? தேவனுக்காக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாய் விட்டுவிடுகிற ஒருவர் எப்படி ஒன்றுமில்லாமல் விடப்படுவார்? மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்புவதில்லை, தன்னுடைய உடைமைகளைத் தேவனுக்காக செலவழிக்க விரும்புவதில்லை, வாழ்நாளின் பிரயாசத்தைத் தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, தேவனைப் பற்றின அதிகக் காரியங்கள் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதாயிருக்கும்படி, தேவன் மிக தூரம் போய்விட்டார் என்று அவன் சொல்லுகிறான். இப்படிப்பட்ட மனிதத்தன்மையுடன், நீங்கள் உங்கள் பிரயாசங்களில் தாராளமாக இருந்தாலும் கூட, தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள உங்களால் முடியாமல் போகும். நீங்கள் தேவனைத் தேடவில்லை என்ற உண்மையைக் குறித்து உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் மனித இனத்தின் குறைபாடுள்ள சரக்குகள் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைவிட கீழான மனிதத்தன்மை வேறில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களை கனப்படுத்த மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை ஓநாயின் தகப்பன், ஓநாயின் தாய், ஓநாயின் மகன் மற்றும் ஓநாயின் பேரன் என்று அழைக்கிறார்கள். நீங்கள் ஓநாயின் சந்ததிகள், ஓநாயின் ஜனங்கள் ஆவீர்கள். உங்களின் சொந்த அடையாளம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. நீங்கள் உங்களை ஏதோ மேலான பிரபலம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் மனுக்குலத்தின் நடுவில் மிகக் கொடூரமான மனிதரல்லாத கூட்டம். இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியாதா? உங்களிடத்தில் கிரியை செய்கிறதால் நான் எத்தனை பெரிய இடர்நேரும் நிலையை எதிர்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உணர்வு மீண்டும் இயல்பானதாக மாற முடியாவிட்டால், உங்களுடைய மனசாட்சி இயல்பானதாக இயங்க முடியாவிட்டால், நீங்கள் “ஓநாய்” என்ற பெயரை ஒருபோதும் தள்ளிவிட முடியாது. நீங்கள் ஒருபோதும் சாபத்தின் நாளிலிருந்தும், உங்கள் தண்டனையில் நாளிலிருந்தும் தப்ப முடியாது. நீங்கள் தாழ்ந்தவர்களாக, எந்த மதிப்பும் இல்லாத ஒரு காரியமாய்ப் பிறந்தீர்கள். நீங்கள் சுபாவப்படி பசியாயிருக்கும் ஓநாய்க் கூட்டம், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல், நான் உங்களைப் போலல்லாமல் உங்களிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களிடம் கிரியை செய்யாமல், மாறாக என்னுடைய கிரியைத் தேவைப்படுவதால் அப்படிச் செய்கிறேன். நீங்கள் இப்படியே தொடர்ந்து கலகத்தன்மை உள்ளவர்களாக இருந்தால், நான் என்னுடைய கிரியையை நிறுத்திவிடுவேன். மீண்டும் ஒருபோதும் உங்களிடத்தில் கிரியை செய்ய மாட்டேன். மாறாக நான் என்னுடைய கிரியையை என்னைப் பிரியமான மற்றொரு கூட்டத்திற்கு கைமாற்றி விடுவேன். இவ்வகையில் நான் உங்களை என்றென்றும் விட்டு விலகுவேன். ஏனென்றால் என்னை விரோதிக்கிறவர்களை நோக்கிப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அப்படியானால், நீங்கள் என்னுடன் ஒத்துப்போக விரும்புகிறீர்களா அல்லது என்னை விரோதிக்க விரும்புகிறீர்களா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 304

எல்லா மனுஷர்களும் இயேசுவின் நிஜமான முகத்தைக் காண விரும்புகிறார்கள், அனைவரும் அவருடன் இருக்க விரும்புகிறார்கள். எந்தவொரு சகோதரனும் சகோதரியும் தனக்கு இயேசுவைக் காணவோ அல்லது அவருடன் இருக்கவோ விரும்பவில்லை என்று சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் இயேசுவைக் காண்பதற்கு முன், நீங்கள் மனுஷரூபத்திலுள்ள தேவனைக் காண்பதற்கு முன், நீங்கள் எல்லா வகையான யோசனைகளையும் உத்தேசிக்க வாய்ப்புள்ளது, எடுத்துக்காட்டாக, இயேசுவின் தோற்றம், அவருடைய பேசும் முறை, அவருடைய வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றி உத்தேசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் அவரை உண்மையிலேயே பார்த்தவுடன், உங்கள் கருத்துகள் விரைவாக மாறிவிடும். இது ஏன்? நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? மனுஷனின் சிந்தனையைப் புறக்கணிக்க முடியாது, அது நிஜம்—ஆனால் அதைவிட, கிறிஸ்துவின் சாராம்சம் மனுஷன் ஏற்படுத்தும் மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாது. நீங்கள் கிறிஸ்துவை அழிவில்லாதவர் அல்லது ஒரு ஞானி என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவரை யாரும் மகிமையை சாராம்சமாகக் கொண்ட ஒரு சாதாரண மனுஷராகக் கருதுவதில்லை. அதே போல், தேவனைக் காண இரவும் பகலும் ஏங்குகிறவர்களில் பலர் உண்மையில் தேவனின் எதிரிகள், அவருக்கு இணக்கமாய் இராதவர்கள். இது மனுஷனின் தரப்பில் உள்ள தவறல்லவா? இப்போது கூட நீங்கள் கிறிஸ்துவின் முகத்தைக் காண உங்களைத் தகுதியுடையவராக்க உங்கள் நம்பிக்கையும் விசுவாசமும் போதுமானது என்று நினைக்கிறீர்கள், ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான பல விஷயங்களால் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்படி நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்! கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும், கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் இருந்த பலர் தோல்வியுற்றனர் அல்லது தோல்வியடைவார்கள்; அவர்கள் அனைவரும் பரிசேயர்களின் பாத்திரத்தை வகிக்கிறார்கள். உங்கள் தோல்விக்கு காரணம் என்ன? உங்கள் கருத்துப்படி உயர்ந்த மற்றும் போற்றுதலுக்குரிய ஒரு தேவன் இருக்கிறார் என்பதே இதற்கு துல்லியமான காரணம். ஆனால் நிஜம், மனுஷன் விரும்பியப்படி இருப்பதில்லை. கிறிஸ்து உயர்ந்தவரல்ல என்பது மட்டுமல்ல, அவர் குறிப்பாகச் சிறியவர்; அவர் ஒரு மனுஷர் மட்டுமல்ல, அவர் ஒரு சாதாரண மனுஷர்; அவர் பரலோகத்திற்கு எழும்புவது இல்லை என்பது மட்டுமல்ல, பூமியில் கூட அவரால் சுதந்திரமாக நகர முடியாது. இது இவ்வாறு இருக்கையில், “நிஜமான கிறிஸ்துவின்” வருகைக்காக காத்திருக்கும்போதெல்லாம் ஜனங்கள் அவரை ஒரு சாதாரண மனுஷனை நடத்துவது போலவே நடத்துகிறார்கள்; அவர்கள் அவருடன் இருக்கும்போது சாதாரணமாக அவரை நடத்துகிறார்கள், அவரிடம் அஜாக்கிரதையாகப் பேசுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே வந்த கிறிஸ்துவை ஒரு சாதாரண மனுஷனாகவும், மற்றும் அவருடைய வார்த்தைகளை சாதாரண மனுஷனின் வார்த்தைகளாகவும் கருதுகிறீர்கள். இந்தக் காரணத்திற்காக, நீங்கள் கிறிஸ்துவிடமிருந்து எதையும் பெறவில்லை, அதற்குப் பதிலாக உங்கள் சொந்த அசிங்கத்தை முற்றிலுமாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளீர்கள்.

கிறிஸ்துவுடனான தொடர்புக்கு முன்னர், நீ உனது மனநிலை முழுமையாக மாற்றப்பட்டிருப்பதாக, நீ கிறிஸ்துவை விசுவாசத்துடன் பின்பற்றுபவனாக, உன்னைவிட கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களைப் பெறும் தகுதி யாருக்கும் இல்லை என்று நம்பியிருக்கலாம்—மேலும், பல சாலைகளில் பயணித்து, அதிக வேலைகளைச் செய்து, அதிக பலன்களைக் கொண்டுவந்த நீ, இறுதியில் கிரீடத்தைப் பெறுபவர்களில் ஒருவனாக நிச்சயமாக இருப்பாய். ஆயினும், நீ அறியாத ஒரு உண்மை உள்ளது: மனுஷனின் சீர்கெட்ட மனப்பான்மையும், அவனுடைய கலகமும் எதிர்ப்பும் அவன் கிறிஸ்துவைப் பார்க்கும்போது அம்பலப்படுத்தப்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் வெளிப்படும் கலகமும் எதிர்ப்பும் வேறு எதையும் விட முற்றிலும் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்து சாதாரண மனுஷத்தன்மையைக் கொண்ட மனுஷகுமாரன் என்பதே இதற்கு காரணம்—எனவே மனுஷன் அவரை மதிப்பதோ மரியாதை கொடுப்பதோ இல்லை. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் மனுஷனின் கலகம் மிகவும் முழுமையாகவும் தெளிவான விவரங்களுடனும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவின் வருகை மனுஷகுலத்தின் அனைத்து கலகத்தையும் கண்டுபிடித்து, மனுஷகுலத்தின் தன்மையை வெளிப்படையாக்கியுள்ளது என்று நான் சொல்கிறேன். இது “ஒரு புலியை மலையிலிருந்து கவர்ந்திழுப்பது” மற்றும் “ஒரு ஓநாயை அதன் குகையிலிருந்து கவர்ந்திழுப்பது” எனப்படுகிறது. நீ தேவனுக்கு விசுவாசமுள்ளவன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலைக் காட்டுகிறேன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ கலகம் பண்ணுவதில்லை என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? சிலர் கூறுவார்கள்: “தேவன் எப்போதெல்லாம் என்னை ஒரு புதிய சூழலில் வைக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் கீழ்ப்படிகிறேன், மேலும் நான் தேவனைப் பற்றிய எந்தக் கருத்துக்களையும் உத்தேசிப்பதில்லை.” சிலர் இவ்வாறு கூறுவார்கள்: “தேவன் எனக்கு என்ன வேலையைக் கொடுத்தாலும், நான் எனது திறனுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறேன், ஒருபோதும் நான் கவனக்குறைவாக இருந்ததில்லை.” அவ்வாறான நிலையில், நான் உங்களிடம் இதனைக் கேட்கிறேன்: நீங்கள் கிறிஸ்துவுடன் வாழும்போது அவருடன் இணக்கமாக இருக்க முடியுமா? நீங்கள் எவ்வளவு காலம் அவருடன் இணக்கமாக இருப்பீர்கள்? ஒரு நாள்? இரண்டு நாட்கள்? ஒரு மணி நேரம்? இரண்டு மணி நேரம்? உங்கள் விசுவாசம் பாராட்டத்தக்கதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் வைராக்கியமான வழியில் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்க மாட்டீர்கள். நீ உண்மையிலேயே கிறிஸ்துவோடு வாழ்ந்தவுடன், உன் சுயநீதியும் சுய முக்கியத்துவமும் உன் சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும், மேலும் அதே போல் உன் இருமாப்பு ஆசைகளும், உன் கீழ்ப்படியாத மனநிலையும் அதிருப்தியும் இயல்பாகவே வெளிப்படும். இறுதியாக, நீ அக்கினியையும் ஜலத்தையும் போலவே கிறிஸ்துவுக்கு அதிகமாக முரண்பட்டு இருக்கும் வரையிலும் உனது அகந்தை இன்னும் அதிகமாகிவிடும், பின்னர் உனது இயல்பு முற்றிலும் வெளிப்படும். அந்த நேரத்தில், உனது கருத்துக்களை இனி மூடிமறைக்க முடியாது, உனது புகார்களும் இயல்பாகவே வெளிவரும், மேலும் உனது மோசமான மனுஷத்தன்மை முழுமையாக வெளிப்படும். ஆயினும்கூட, நீ உனக்கு சொந்தமாக கலக மனப்பான்மை இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய், அதற்குப் பதிலாக இது போன்ற ஒரு கிறிஸ்துவை மனுஷன் ஏற்றுக்கொள்வது எளிதானது அல்ல, அவர் மனுஷனை மிகவும் வற்புறுத்துகிறார், மற்றும் அவர் இரக்கமுள்ள கிறிஸ்துவாக இருந்தால் நீ முழுமையாகக் கீழ்ப்படிவாய் என்று நம்புகிறாய், உங்கள் கலகக் குணம் நியாயமானது என்றும், அவர் உங்களை அதிக தூரம் தள்ளும்போது மட்டுமே நீங்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை தேவனாகப் பார்க்க வேண்டுமென்றும், அவருக்கு கீழ்ப்படியும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றும் நீங்கள் ஒருபோதும் கருதவில்லை. மாறாக, உனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப கிறிஸ்து செயல்பட வேண்டும் என்று நீ பிடிவாதமாக வலியுறுத்துகிறாய், உனது சொந்த சிந்தனைகளுக்கு முரணான ஒற்றைக் காரியத்தை அவர் செய்தவுடன், அவர் தேவன் அல்ல மனுஷன் என்று நீ நம்புகிறாய். இந்த வழியில் அவருடன் வழக்காடிய பலர் உங்களிடையே இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் யாரை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் எந்த வழியில் தேடுகிறீர்கள்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 305

நீங்கள் எப்போதுமே கிறிஸ்துவைக் காண விரும்புகிறீர்கள், ஆனால் உங்களை இவ்வளவு உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்; யாரும் கிறிஸ்துவைக் காணலாம், ஆனால் கிறிஸ்துவைக் காணும் தகுதி யாருக்கு இல்லை என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், மனுஷனின் இயல்பு தீமை, அகம்பாவம் மற்றும் கலகத்தால் சூழப்பட்டிருக்கிறது, நீ கிறிஸ்துவைக் காணும் தருணத்தில், உனது இயல்பு உன்னை அழித்து, உனக்கு மரண தண்டனையைக் கொடுக்கும். ஒரு சகோதரர் (அல்லது ஒரு சகோதரி) உடனான உனது ஐக்கியம் உன்னைப் பற்றி அதிகமாகக் காட்டாமல் போகலாம், ஆனால் நீ கிறிஸ்துவோடு உன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்போது அது அவ்வளவு எளிதல்ல. எந்த நேரத்திலும், உனது கருத்துகள் வேரூன்றக்கூடும், உனது ஆணவம் முளைக்கத் தொடங்கும், மேலும் உனது கலகம் பலன்களைக் கொடுக்காது. அத்தகைய மனுஷத்தன்மையுடன் நீ கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதற்கு எவ்வாறு தகுதியுடையவனாக இருப்பாய்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னால் அவரை தேவனாகக் கருத முடியுமா? தேவனுக்கு நிஜமாக உன்னால் ஒப்புக்கொடுக்க முடியுமா? காணக்கூடிய கிறிஸ்துவை ஒரு மனுஷனாகக் கருதி, உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் உயர்ந்த தேவனை யேகோவாவாக தொழுகிறீர்கள். உங்கள் உணர்வு மிகவும் தாழ்ச்சியானது மற்றும் உங்களின் மனுஷத்தன்மை மிகவும் தாழ்ந்தது! கிறிஸ்துவை எப்போதும் தேவனாகப் பார்க்க உங்களால் இயலவில்லை; எப்போதாவது, நீங்கள் விரும்பினால், நீங்கள் அவரைப் பற்றிக்கொண்டு தேவனாக வணங்குவீர்கள். இதனால்தான் நீங்கள் தேவனின் விசுவாசிகள் அல்ல, கிறிஸ்துவுக்கு எதிராகப் போராடும் குற்றத்திற்குத் துணைப்போகும் கூட்டாளிகள் என்று நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் மனுஷர்களுக்குக்கூட கைம்மாறு அளிக்கப்படுகிறது, ஆனாலும் உங்களிடையே இதுபோன்ற கிரியைகளைப் புரிந்த கிறிஸ்து, மனுஷனின் அன்பையோ, அவனுடைய கைம்மாறையோ கீழ்ப்படிதலையோ பெறவில்லை. இது மிகுந்த கவலையளிக்கும் ஒன்றல்லவா?

தேவன் மீது நீ விசுவாசம் கொண்டிருந்த எல்லா ஆண்டுகளிலும், நீ ஒருபோதும் யாரையும் சபிக்கவில்லை அல்லது ஒரு கெட்ட செயலைச் செய்யவில்லை, ஆனால் கிறிஸ்துவுடனான உனது தொடர்பில், உன்னால் சத்தியத்தைப் பேசவோ, நேர்மையாகச் செயல்படவோ, அல்லது கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படியவோ முடியவில்லை; அவ்வாறான நிலையில், நீ தான் உலகிலேயே மிகவும் கொடியவன் மற்றும் வஞ்சகமானவன் என்று நான் சொல்கிறேன். நீ உனது உறவினர்கள், நண்பர்கள், மனைவி (அல்லது கணவன்), மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகவும் நட்புள்ளவனாகவும், அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கலாம், மற்றவர்களை ஒருபோதும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாதவனாகவும் இருக்கலாம், ஆனால் உன்னால் கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்க இயலவில்லையென்றால், உன்னால் அவருடன் இணக்கமாகச் செயல்பட முடியாவிட்டால், நீ உனது அண்டைவீட்டாருக்கு உனது பணம் அனைத்தையும் செலவிட்டாலும் அல்லது உனது தந்தை, தாய், மற்றும் உனது குடும்ப உறுப்பினர்களை மிகக் கவனமாக கவனித்துக் கொண்டாலும்கூட, நீ இன்னும் பொல்லாதவன் என்றும், மேலும் தந்திரங்கள் நிறைந்தவன் என்றும் நான் கூறுவேன். நீ மற்றவர்களுடன் பழகுவதாலோ அல்லது சில நல்ல செயல்களைச் செய்வதாலோ நீ கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்கிறாய் என்று நினைக்க வேண்டாம். உனது தொண்டு செய்யும் நோக்கம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைத் தந்திரமாகப் பெற்றுத்தரும் என்று நீ நினைக்கிறாயா? ஒரு சில நல்ல செயல்களைச் செய்வது உனது கீழ்ப்படிதலுக்கு மாற்றாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா? உங்களில் ஒருவரால் கூட கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் சாதாரண மனிஷத்தன்மையைத் தழுவுவதற்கு சிரமப்படுகிறீர்கள், இருந்தபோதிலும் நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி தொடர்ந்து எக்காளமிடுகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற விசுவாசம் பொருத்தமான பதிலடியைக் குறைக்கும். பகட்டான மாயைகளில் ஈடுபட்டு கிறிஸ்துவைக் காண விரும்புவதை நிறுத்துங்கள், ஏனென்றால் நீங்கள் மிகவும் சிறியவர்கள், எந்த அளவுக்கு என்றால் நீங்கள் அவரைப் பார்க்க கூட தகுதியற்றவர்கள். நீ உனது கலகத்தன்மையைப் பரிபூரணமாக நிவர்த்தி செய்தால், மற்றும் உன்னால் கிறிஸ்துவோடு இணக்கமாக இருக்க முடிந்தால், அந்தத் தருணத்தில் தேவன் இயல்பாகவே உனக்குத் தோன்றுவார். நீ கிளைநறுக்குதலுக்கோ அல்லது நியாந்தீர்ப்பளித்தலுக்கோ உள்ளாவதற்கு முன் தேவனைக் காணச் சென்றால், நீ நிச்சயமாக தேவனின் எதிராளியாவாய் மற்றும் உனக்கு அழிவு விதிக்கப்படும். மனுஷனின் இயல்பு தேவனுக்கு இயல்பாகவே விரோதமானது, ஏனென்றால் எல்லா மனுஷர்களும் சாத்தானின் மிக ஆழமான அழிவிற்கு ஆளாகியுள்ளனர். மனுஷன் தனது சொந்த அழிவின் மத்தியில் இருந்து தேவனுடன் ஐக்கியப்பட முயன்றால், இதனால் எந்த நல்லதும் நடக்காது என்பது உறுதி; அவருடைய செயல்களும் வார்த்தைகளும் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் அவனது அழிவை அம்பலப்படுத்தும், மேலும் தேவனுடன் ஐக்கியப்படுவதில் அவனுடைய கலகத்தன்மை அதன் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படும். தன்னை அறியாமல், மனுஷன் கிறிஸ்துவை எதிர்ப்பதற்கும், கிறிஸ்துவை ஏமாற்றுவதற்கும், கிறிஸ்துவை கைவிடுவதற்கும் வருகிறான்; இது நிகழும்போது, மனுஷன் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பான், இது தொடர்ந்தால், அவன் தண்டனைக்குரிய பொருளாக மாறுவான்.

தேவனுடன் ஐக்கியப்படுவது மிகவும் ஆபத்தானது என்றால், தேவனை தூரத்தில் வைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்று சிலர் நம்பலாம். இது போன்ற ஜனங்கள் எதைப் பெறக்கூடும்? அவர்களால் தேவனுக்கு விசுவாசமாக இருக்க முடியுமா? நிச்சயமாக, தேவனோடு ஐக்கியமாவது மிகவும் கடினமானதுதான்—ஆனால் அதற்கு காரணம் மனுஷன் சீர்கெட்டுவிட்டான் என்பதே தவிர தேவனால் அவனுடன் ஐக்கியப்பட முடியவில்லை என்பதால் அல்ல. சுயத்தை அறிந்து கொள்வதற்கான உண்மைக்கு அதிக முயற்சியை அர்ப்பணிப்பது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் ஏன் தேவனின் நன்மைகளைப் பெறவில்லை? உங்கள் மனநிலை ஏன் அவருக்கு அருவருப்பானது? உங்கள் பேச்சு ஏன் அவருடைய வெறுப்பைத் தூண்டுகிறது? நீங்கள் கொஞ்சம் விசுவாசத்தை வெளிக்காட்டியவுடன், நீங்கள் உங்கள் சொந்தப் புகழைப் பாடுகிறீர்கள், மேலும் ஒரு சிறிய பங்களிப்புக்கு வெகுமதியைக் கோருகிறீர்கள்; நீங்கள் கொஞ்சம் கீழ்ப்படிதலைக் காட்டும்போது மற்றவர்களைக் குறைத்துப் பார்க்கிறீர்கள், ஏதோ சிறிய பணியைச் செய்து முடித்தபின் தேவனை அவமதிக்கிறீர்கள். தேவனை உபசரிக்க, நீங்கள் பணம், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைக் கேட்கிறீர்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுப்பதற்கு உங்கள் மனதை வலிக்கச் செய்கிறது; நீங்கள் பத்து கொடுக்கும்போது, நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறவும், மேலும் மேன்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு மனுஷத்தன்மையைப் பற்றி பேசுவதோ கேட்பதோ நிச்சயமாகத் தீங்குவிளைவிக்கும். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பாராட்டத்தக்கதாக ஏதாவது இருக்கிறதா? தங்கள் கடமையைச் செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்; வழிநடத்துபவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள்; தேவனை வரவேற்பவர்கள் மற்றும் வரவேற்காதவர்கள்; காணிக்கை அளிப்பவர்கள் மற்றும் அளிக்காதவர்கள்; பிரசங்கிப்பவர்கள், வார்த்தையைப் பெறுபவர்கள், மேலும் பலர்: அத்தகைய மனுஷர்கள் அனைவரும் தங்களைப் புகழ்ந்துக் கொள்கிறார்கள். இது நகைப்புக்குரியதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீங்கள் தேவனை நம்புகிறீர்கள் என்பதை முழுவதுமாக அறிந்திருந்தாலும், உங்களால் தேவனுக்கு இணக்கமாய் இருக்க முடியவில்லை. நீங்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரே மாதிரியாக பெருமை பேசுகிறீர்கள். உங்களிடம் இனி சுய கட்டுப்பாடு இல்லை என்ற அளவுக்கு உங்கள் உணர்வு மோசமடைந்துள்ளதாக நீங்கள் உணரவில்லையா? இது போன்ற உணர்வோடு, தேவனுடன் ஐக்கியப்படும் தகுதி உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் நீங்கள் உங்களுக்காக பயப்படவில்லையா? உங்கள் மனநிலை ஏற்கனவே நீங்கள் தேவனுடன் இணைந்து இருக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. இது அவ்வாறு இருக்கையில், உங்கள் விசுவாசம் நகைப்புக்கு உரியதாய் இருக்காதா? உங்கள் விசுவாசம் போலித்தனமானது இல்லையா? உன் எதிர்காலத்தை நீ எவ்வாறு அணுகப் போகிறாய்? எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீ எவ்வாறு தேர்வு செய்யப் போகிறாய்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 306

நான் பல வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளேன், மேலும் எனது சித்தத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளேன், ஆனாலும்கூட, ஜனங்களால் என்னை அறிந்து கொள்ளவும் என்னை விசுவாசிக்கவும் இயலவில்லை. அல்லது, ஜனங்களால் இன்னும் எனக்குக் கீழ்ப்படிய இயலவில்லை என்று கூறலாம். வேதாகமத்திற்குள் வாழ்பவர்கள், நியாயப்பிரமாணத்திற்குள் வாழ்பவர்கள், சிலுவையில் வாழ்பவர்கள், கோட்பாட்டின்படி வாழ்பவர்கள், இன்று நான் புரியும் கிரியையின் மத்தியில் வாழ்பவர்கள் ஆகியோரில் யார் எனக்கு இணக்கமாய் இருக்கிறார்கள்? நீங்கள் ஆசீர்வாதங்களையும் வெகுமதிகளையும் பெறுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள், ஆனால் உண்மையில் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டும், அல்லது எனக்கு எதிராக இருப்பதிலிருந்து உங்களை நீங்களே எப்படி தற்காத்துக் கொள்வது என்று சிந்தித்ததே இல்லை. நான் உங்களில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், ஏனென்றால் நான் உங்களுக்கு மிக அதிகமாகக் கொடுத்திருக்கிறேன், ஆனாலும் நான் உங்களிடமிருந்து மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். உங்கள் மோசடி, உங்கள் ஆணவம், உங்கள் பேராசை, உங்கள் களியாட்ட ஆசைகள், உங்கள் துரோகம், உங்கள் கீழ்ப்படியாமை ஆகியவற்றில் எது எனது கவனத்திலிருந்து தப்பிக்க முடியும்? நீங்கள் என்னுடன் கவனக்குறைவாக இருக்கிறீர்கள், நீங்கள் என்னை முட்டாளாக்குகிறீர்கள், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள், நீங்கள் என்னை நயமாக ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் பலிகளைக் கொடுத்து நிர்ப்பந்திக்கிறீர்கள் மற்றும் என்னை மிரட்டுகிறீர்கள்—இதுபோன்ற தீமையால் நான் அளிக்கும் தண்டனையை எவ்வாறு தவிர்க்க முடியும்? இந்த தீமைகள் அனைத்தும் எனக்கு எதிரான உங்கள் பகைமைக்குச் சான்றாகும், மேலும் என்னுடன் நீங்கள் இணக்கமாய் இராத தன்மைக்குச் சான்றாகும். நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் மிகவும் இணக்கமாய் இருப்பதாக விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அப்படி இருந்தால், அத்தகைய மறுக்கமுடியாத சான்றுகள் யாருக்கு பொருந்தும்? நீங்கள் என் மீது மிகுந்த நேர்மையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் மிகவும் கனிவானவர்கள், மிகவும் இரக்கமுள்ளவர்கள், எனக்காக இவ்வளவு அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எனக்கு போதுமானதை விட அதிகமாக செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் செயல்களுக்கு எதிரானதாக இதனை எப்போதாவது வைத்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள், ஏராளமாகப் பேராசை கொண்டவர்கள், ஏராளமாக அக்கறையற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; நீங்கள் என்னை முட்டாளாக்கும் தந்திரங்கள் ஏராளமாக புத்திசாலித்தனமானவை, மேலும் உங்களிடம் ஏராளமான அற்பமான நோக்கங்களும் அற்பமான முறைகளும் உள்ளன. உங்கள் விசுவாசம் மிகக் குறைவு, உங்கள் உற்சாகம் மிகவும் அற்பமானது, உங்கள் மனசாட்சி இன்னும் குறைவு. உங்கள் இதயங்களில் அதிகப்படியான தீங்கிழைக்கும் தன்மை உள்ளது, மேலும் உங்கள் தீமையிலிருந்து யாரும் விடுபடவில்லை, நான்கூட இல்லை. உங்கள் பிள்ளைகளுக்காக, அல்லது உங்கள் கணவருக்காக அல்லது உங்கள் சுய பாதுகாப்பிற்காக நீங்கள் என்னை வெளியேற்றுகிறீர்கள். என் மீது அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் குடும்பம், உங்கள் குழந்தைகள், உங்கள் அந்தஸ்து, உங்கள் எதிர்காலம் மற்றும் உங்கள் சொந்த மனநிறைவைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பேசியதைப் போல் அல்லது செயல்பட்டதைப் போல் என்னை நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கடுங்குளிர் நாட்களில், உங்கள் சிந்தனை உங்கள் குழந்தைகள், உங்கள் கணவன், உங்கள் மனைவி அல்லது உங்கள் பெற்றோரிடம் திரும்பும். கடும்வெயில் நாட்களில், உங்கள் சிந்தனையில் எனக்கு இடமில்லை. நீ உன் கடமையைச் செய்யும்போது, நீ உன் சொந்த நலன்களைப் பற்றியும், உன் சொந்த பாதுகாப்பைப் பற்றியும், உன் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் சிந்திக்கிறாய். எனக்காக நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய்? நீ எப்போது என்னைப் பற்றி சிந்தித்திருக்கிறாய்? என்ன நடந்தாலும் எப்போது நீ என்னிடமும் எனது கிரியையிடமும் உன்னை அர்ப்பணித்திருக்கிறாய்? என்னுடன் நீ இணக்கமாய் இருப்பதற்கான சான்று எங்கே? நீ எனக்கு விசுவாசமாக இருப்பதன் நிதர்சனம் எங்கே? நீ எனக்கு கீழ்ப்படிவதன் நிதர்சனம் எங்கே? உன் நோக்கங்கள் எனது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக என்று எப்போது இல்லாமல் இருந்தது? நீங்கள் என்னை முட்டாளாக்கி, ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் சத்தியத்துடன் விளையாடுகிறீர்கள், சத்தியத்தின் இருப்பை மறைக்கிறீர்கள், சத்தியத்தின் சாராம்சத்தைக் காட்டிக் கொடுக்கிறீர்கள். இந்த வழியில் எனக்கு எதிராகச் செல்வதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது? நீங்கள் வெறுமனே குழப்பமான தேவனுடன் இணக்கமாய் இருக்க நாடுகிறீர்கள், குழப்பமான நம்பிக்கையை நாடுகிறீர்கள், ஆயினும் நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இல்லை. துன்மார்க்கனுக்கு கிடைக்க வேண்டிய அதே பதிலடியை உங்கள் குறைபாடு பெறவில்லையா? அந்த நேரத்தில், கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராத எவரும் கோபாக்கினை நாளிலிருந்து தப்ப முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், மேலும் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் மீது என்ன வகையான பழிவாங்கல் உருவாக்கப்படும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அந்த நாள் வரும்போது, தேவன் மீது நீங்கள் வைத்துள்ள உங்கள் விசுவாசத்துக்காக ஆசீர்வதிக்கப்படுவது, பரலோகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவது குறித்த உங்கள் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிடும். ஆயினும், கிறிஸ்துவோடு இணக்கமாய் இருப்பவர்களுக்கு அது அவ்வாறு இருக்காது. அவர்கள் எவ்வளவு இழந்திருந்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், நான் மனுஷகுலத்திற்குக் கொடுக்கும் சுதந்தரம் அனைத்தையும் அவர்கள் பெறுவார்கள். இறுதியில், நான் மட்டுமே நீதியுள்ள தேவன் என்பதையும், மனுஷகுலத்தை அவனுடைய அழகான இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல என்னால் மட்டுமே கூடும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 307

தேவன் மனுஷரிடம் அதிக விஷயங்களை ஒப்படைத்திருக்கிறார், மேலும் அவர்களின் பிரவேசித்தலையும் எண்ணற்ற வழிகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஜனங்களின் திறமை கணிசமான அளவிற்கு மோசமாக இருப்பதால், தேவனின் பல வார்த்தைகள் வேரூன்றத் தவறியிருக்கின்றன. இந்த மோசமான திறமைக்கு, மனுஷனின் சிந்தனை மற்றும் ஒழுக்க சீர்கேடு மற்றும் வளர்த்தவிதம் சரியில்லாதது; மனுஷனின் இருதயத்தை தீவிரமாகப் பிடித்திருக்கும் நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகள்; மனுஷ இருதயத்தின் ஆழமான மூலைகளில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் மோசமான மற்றும் நலிந்த ஜீவித முறைகள்; கலாச்சார கல்வியறிவில் மேலோட்டமான நாட்டம், அதாவது கிட்டத்தட்ட தொண்ணூற்றெட்டு சதவிகித ஜனங்கள் கலாச்சார கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அதிலும், மிகக் குறைந்த அளவிலானவர்களே உயர்ந்த கலாச்சார கல்வியைப் பெறுகிறார்கள், இதுபோன்ற பல்வேறு காரணங்கள் மனுஷனின் மோசமான திறமைக்குக் காரணங்களாக இருக்கின்றன. ஆகையால், தேவன் அல்லது ஆவியானவர் என்பது எதைக் குறிக்கிறது என ஜனங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதற்குப்பதிலாக நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்ட தேவனின் தெளிவற்ற மற்றும் துல்லியமற்ற பிம்பத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகால “தேசியவாதத்தின் உயர்ந்த ஆவியானது” மனுஷ இருதயத்தில் ஆழமாக விட்டுச்சென்ற அபாயகரமான தாக்கங்கள்; அதே போல் சுதந்திரம் இல்லாமல், ஆசைப்படவோ அல்லது விடாமுயற்சியோ இல்லாமல், முன்னேற்றத்திற்கான விருப்பம் இல்லாமல், அதற்கு பதிலாக செயலற்றவர்களாக மற்றும் பிற்போக்குத்தனமானவர்களாக, அடிமை மனநிலையில் நிலைபெற்றிருப்பது, மற்றும் பல நிலப்பிரபுத்துவ சிந்தனையால் ஜனங்கள் கட்டப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது—இந்த புறநிலை காரணிகள், கருத்தியல் கண்ணோட்டம், இலட்சியங்கள், அறநெறி மற்றும் மனுஷகுலத்தின் மனநிலை ஆகியவற்றிற்கு அழியாத, இழிந்த மற்றும் அசிங்கமான பங்கை வழங்கியிருக்கின்றன. யாரும் மீற முற்படாத பயங்கரவாதம் கொண்ட ஒரு இருண்ட உலகில் மனுஷர் ஜீவித்திருப்பது போல தெரியும், அவர்களில் யாரும் ஒரு சிறந்த உலகத்திற்கு செல்லவும் நினைப்பதில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஜீவிதத்தில் நிறைய விஷயங்களில் திருப்தி கொள்கிறார்கள், குழந்தைகளைச் சுமந்து அவர்களை வளர்ப்பது, பாடுபடுவது, வியர்வை சிந்துவது, தங்கள் வேலைகளைச் செய்வது, ஒரு வசதியான மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கனவு காண்பது, மற்றும் கனிவான பாசம், கடமை தவறாத குழந்தைகள், தங்கள் ஜீவிதங்களை நிம்மதியாக ஜீவிக்கும்போது அவர்களின் அந்தி ஆண்டுகளில் இருக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கனவு காண்பது…. பல தசாப்தங்களாக, ஆயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஜனங்கள் இவ்வாறாகவே தங்கள் நேரத்தை வீணடித்து வருகிறார்கள், யாரும் ஒரு முழுமையான ஜீவிதத்தை உருவாக்கவில்லை, அனைவருமே இந்த இருண்ட உலகில் பரஸ்பரம் படுகொலை செய்யவும், புகழ் மற்றும் அதிர்ஷ்டம் பெறுவதற்கான பந்தயத்தில் பங்கெடுக்கவும், மற்றும் ஒருவருக்கொருவர் சதி செய்வதை மட்டுமே நோக்கங்களாகக் கொண்டிருக்கிறார்கள். தேவனின் சித்தத்தைத் தேடியவன் யார்? தேவனின் கிரியையை யாராவது கவனித்திருக்கிறார்களா? இருளின் ஆதிக்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மனுஷகுலத்தின் அனைத்து பகுதிகளும் நீண்ட காலமாக மனுஷ சுபாவங்களாக மாறியிருக்கின்றன, ஆகவே தேவனின் கிரியையைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது, மேலும் இன்று தேவன் தங்களிடம் ஒப்படைத்துள்ளவற்றில் கவனம் செலுத்துவதற்கு ஜனங்களுக்கு இருதயமே இருப்பதில்லை. எப்படியிருந்தாலும், இந்த வார்த்தைகளை நான் உச்சரிப்பதை ஜனங்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நான் விசுவாகிறேன், ஏனென்றால் நான் பேசுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறாக இருக்கிறது. வரலாற்றைப் பற்றி பேசுவது என்பது உண்மைகளைப் பற்றி பேசுவது தான், மேலும், அனைவருக்கும் வெளிப்படையான அவதூறான விஷயங்களையும் பேசுவதும் வரலாறு தான், எனவே உண்மைக்கு முரணான விஷயங்களை சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? ஆனால் நியாயமான ஜனங்கள், இந்த வார்த்தைகளைப் பார்த்தவுடன், விழித்தெழுந்து முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன். மனுஷர் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் ஜீவிக்கவும் அதே நேரத்தில் தேவனை நேசிக்கவும் முடியும் என்று தேவன் விசுவாசிக்கிறார். மனுஷகுலம் அனைவரும் ஓய்வெடுக்க வேண்டும் என்பது தேவனின் சித்தம்; இதை விட, தேசங்கள் முழுவதையும் தேவனின் மகிமையால் நிரப்புவது தேவனின் பெரிய ஆசை. மனுஷர் மறதிக்குள் மூழ்கி, விழித்திருக்காமல், சாத்தானால் மோசமாக சீர்கெட்டிருப்பது வெட்கக்கேடானது, இன்று அவர்களிடம் மனுஷரின் ஒற்றுமையும் இருப்பதில்லை. எனவே மனுஷ சிந்தனை, அறநெறி மற்றும் கல்வி ஆகியவை ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்குகின்றன, கலாச்சார கல்வியறிவுக்கான பயிற்சி இரண்டாவது இணைப்பை உருவாக்குகிறது, இவற்றின்மூலம் மனுஷரின் கலாச்சார திறனை உயர்த்தவும் அவர்களின் ஆவிக்குரிய கண்ணோட்டத்தை மாற்றவும் முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிரியையும் பிரவேசித்தலும் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 308

ஜனங்களின் ஜீவித அனுபவங்களில், அவர்கள் பெரும்பாலும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். நான் எனது குடும்பத்தையும் ஜீவிதத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டேன், அவர் எனக்கு என்ன கொடுத்தார்? நான் அதைச் சேர்க்க வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்—சமீபத்தில் எனக்கு ஏதேனும் ஆசீர்வாதம் கிடைத்ததா? இந்த நேரத்தில் நான் நிறைய கொடுத்திருக்கிறேன், நான் ஓடினேன் ஓடினேன். மிகவும் கஷ்டப்பட்டேன்—அதற்கு பதிலாக தேவன் எனக்கு ஏதாவது வாக்குத்தத்தங்களை அளித்துள்ளாரா? அவர் என் நல்ல கிரியைகளை நினைவில் வைத்திருக்கிறாரா? என் முடிவு என்னவாக இருக்கும்? தேவனுடைய ஆசீர்வாதங்களை என்னால் பெற முடியுமா? … ஒவ்வொரு மனிதரும் தொடர்ந்து இத்தகைய கணக்கீடுகளை தங்கள் இருதயத்திற்குள் செய்கிறார்கள். அவர்கள் தேவனிடம் தங்களின் உந்துதல்கள், லட்சியங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனை மனநிலையைத் கொண்டிருகிறார்கள். அதாவது, தன் இருதயத்தில் மனிதன் தொடர்ந்து தேவனைச் சோதித்து வருகிறான். தொடர்ந்து தேவனைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகிறான். தனது சுய முடிவுக்காக தேவனோடு தொடர்ந்து வழக்கை வாதாடுகிறான். தேவனிடமிருந்து ஒரு அறிக்கையைப் பிரித்தெடுக்க முயற்சிக்கிறான். அவனது தேவைகளுள் தேவனால் அவனுக்கு எதைக் கொடுக்க முடியும், எதைக் கொடுக்க முடியாது என்பதைப் பார்க்கிறான். தேவனைப் பின்பற்றும் அதே நேரத்தில், மனிதன் தேவனை தேவனாக கருதுவதில்லை. மனிதன் எப்போதுமே தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றான். அவன் இடைவிடாமல் எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான். ஒவ்வொரு அடியிலும் அவரை அழுத்துகிறான். ஒரு அங்குலம் வழங்கப்பட்ட பிறகு ஒரு மைல் தூரம் பெற முயற்சிக்கிறான். தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் அதே நேரத்தில், மனிதன் அவருடன் வாதாடுகிறான். அவர்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் சில சூழ்நிலைகளில் தங்களைக் கண்டறிந்தால், பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும், தங்கள் கிரியையில் மந்தமானவர்களாகவும், தேவனை பற்றி குறை கூறுபவர்களாக மட்டுமே இருப்பார்கள். மனிதன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து, அவன் தேவனை ஒரு அமுதசுரபி என்றும் சுவிஸ் இராணுவ கத்தி என்றும் கருதினான். தேவன் மிகப் பெரிய அளவில் தனக்குக் கடன் பட்டுள்ளதாக அவன் கருதினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முயற்சிப்பது அவனது உள்ளார்ந்த பூரணம் மற்றும் கடமை என்று கருதினான். தேவனுடைய பொறுப்பு மனிதனைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், அவனுக்காக வழங்குவதும் ஆகும் என்று கருதினான். தேவனை நம்புகிற அனைவருக்கும் “தெய்வ நம்பிக்கை” பற்றிய அடிப்படை புரிதல் இதுதான். தெய்வ நம்பிக்கை பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் இதுதான். மனிதனுடைய இயல்பின் சாராம்சம் முதல் அவரது அகநிலை தேடல் வரை, தெய்வ பயத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. தேவனை நம்புவதில் உள்ள மனிதனுடைய நோக்கத்துக்கும் தேவனை வழிபடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனை நம்புவது என்பது தேவனுக்கு பயந்து அவரை வணங்க வேண்டும் என்று மனிதன் ஒருபோதும் கருதவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை. இத்தகைய நிலைமைகளின் வெளிச்சத்தில், மனிதனுடைய சாராம்சம் வெளிப்படையானது. இதன் சாராம்சம் என்ன? மனிதனுடைய இருதயம் தீங்கிழைக்கும், துரோகத்தையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. நேர்மறையான, நேர்மை மற்றும் நீதியை அது நேசிப்பதில்லை. அதனிடம் அவமதிப்பு மற்றும் பேராசை உள்ளது. மனிதனுடைய இருதயம் தேவனிடம் நெருக்கமாக முடியவில்லை. மனிதன் அதை தேவனுக்குக் கொடுக்கவில்லை. தேவன் ஒருபோதும் மனிதனுடைய உண்மையான இருதயத்தைப் பார்த்ததில்லை. அவ்ர் மனிதனால் வணங்கப்படவில்லை. தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரையம் கொடுத்தாலும், அவர் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர் மனிதனுக்கு எவ்வளவு வழங்கினாலும், மனிதன் குருடனாகவும், எல்லாவற்றிலும் முற்றிலும் அலட்சியமாகவும் இருக்கிறான். மனிதன் ஒருபோதும் தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தை தனக்காக வைத்துக்கொள்ள விரும்புகிறான். தன் சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறான்—இதன் உட்பொருள் என்னவென்றால், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது இறையாண்மைக்கும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய மனிதன் விரும்பவில்லை என்பதாகும். தேவனை தேவனாக வணங்கவும் அவர் விரும்பவில்லை. இன்றைய மனிதனுடைய நிலை இதுதான்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 309

பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும் உபதேசத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் தேவனை எதிர்க்கவில்லையா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கவில்லையா? இதுபோன்றவர்களின் அனுபவங்கள் மேலோட்டமானவை என்றாலும், அவர்கள் இயல்பாகவே அகந்தையுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாவும் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியமாக கருதுகின்றனர், பரிசுத்த ஆவியானவரின் ஒழுக்கங்களைப் புறக்கணிக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை “உறுதிப்படுத்த” தங்கள் பழைய அற்பமான வாக்குவாதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு செயலைச் செய்கின்றனர், மேலும் தங்கள் சொந்த கல்வி மற்றும் புலமையை முழுமையாக நம்புகின்றனர், மேலும் அவர்களால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லவா, புதிய யுகத்தால் அவர்கள் அகற்றப்படமாட்டார்களா? தேவனுக்கு முன்பாக வந்து அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அறியாதவர்களாகவும், விவரமறியாத அற்பமானவர்களாக இல்லையா, அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் என்பதைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள் அல்லவா? வேதாகமத்தைக் குறித்த மிகக் குறைவான அறிவைக் கொண்டு, அவர்கள் உலகின் “கல்வியாளர்களை” தடுமாறச் செய்ய முயற்சி செய்கிறார்கள்; ஜனங்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு மேலோட்டமான உபதேசத்தைக் கொண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறார்கள், மேலும் அது தங்களின் சொந்த சிந்தனை முறையைச் சுற்றியே சுழல முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறுகிய பார்வையுடைவர்களாக இருப்பதனால், 6,000 ஆண்டுகால தேவனுடைய கிரியையை ஒரே பார்வையில் பார்க்க முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கென்று குறிப்பிடத் தகுந்த எந்த அறிவும் கிடையாது! உண்மையில், தேவனைப் பற்றிய அறிவை ஜனங்கள் எந்த அளவுக்கு அதிகமாக கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மெதுவாக அவருடைய கிரியையை நியாயந்தீர்க்கிறார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய இன்றைய கிரியையைப் பற்றிய அறிவைக் குறித்து சிறிதளவு பேசுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நியாயத்தீர்ப்புகளில் கண்முடித்தனமாக இருப்பதில்லை. ஜனங்கள் தேவனை எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாகவும், அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர், அந்த அளவுக்கு அவர்கள் தேவன் இருப்பதை தேவையில்லாமல் பறைசாற்றுகின்றனர், ஆனாலும் அவர்கள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், உண்மையான ஆதாரங்கள் எதையும் கொடுப்பதில்லை. இதுபோன்றவர்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பவர்கள் அற்பமானவர்களே! பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இல்லாதவர்கள், தங்கள் வாயால் அலம்புகிறார்கள், விரைவாக நியாந்தீர்க்கிறார்கள், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சரித்தன்மையை மறுக்க தங்கள் இயல்பான உள்ளுணர்வுக்கு அளவுக்குமீறிய சுதந்திரம் கொடுக்கிறார்கள் மற்றும் அதை அவமதிக்கிறவர்களாகவும் தூஷிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள், இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியம் செய்யவில்லையா? மேலும், அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாவும், இயல்பாகவே பெருமை கொண்டவர்களாகவும், கட்டுப்பாடில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா? இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாள் வந்தாலும், தேவன் அவர்களை சகித்துக்கொள்ள மாட்டார். தேவனுக்காக கிரியை செய்பவர்களை அவர்கள் குறைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்கிறார்கள். இதுபோன்ற முட்டாள்தனமானவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்த யுகத்திலோ அல்லது வரவிருக்கும் யுகத்திலோ, அவர்கள் என்றென்றும் நரகத்தில் அழிந்து போவார்கள்! இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதாக பாசாங்கு செய்கின்றனர். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தேவனுடைய நிர்வாக ஆணைகளுக்கு இடறலுண்டாக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே கட்டுப்பாடில்லாத, ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படியாத இறுமாப்புள்ளவர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடக்கவில்லையா? எப்போதும் புதியவரும், ஒருபோதும் முதுமையடையாதவருமான தேவனை அவர்கள் நாளுக்கு நாள் எதிர்க்கவில்லையா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 317

மனிதன் காலம் காலமாக இருளின் அதிகாரத்தின் மறைவில், சாத்தானின் அதிகாரம் எனும் அடிமைத்ததிற்குள் அடைபட்டு, அதிலிருந்து தப்பிக்க முடியாமல் வாழ்ந்து வந்துள்ளான், மேலும் சாத்தானால் பீடிக்கப்பட்ட அவனது மனநிலையும் மிகவும் சீர்கெட்டுப் போகிறது. மனிதன் எப்போதுமே தனது சீர்கேடான சாத்தானின் மனநிலைக்கு நடுவில்தான் வாழ்கிறான், மேலும் அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிவதில்லை என்று சொல்லலாம். இது இப்படியிருக்க, மனிதன் தேவனை நேசிக்க விரும்பினால், அவனது சுய—நீதி, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆணவம், தற்பெருமை, மற்றும் சாத்தானின் மனநிலையிலுள்ள அனைத்தும்ம் அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், அவனது அன்பு தூய்மையற்ற அன்பாக, சாத்தானின் அன்பாக, தேவனின் அங்கீகாரத்தை முற்றிலும் பெற முடியாததாகவே இருக்கும். பரிசுத்த ஆவியினால் நேரடியாக பரிபூரணப்படுத்தப்படாமல், சரிகட்டப்படாமல், நொறுக்கப்படாமல், திருத்தப்படாமல், ஒழுங்குபடுத்தப்படாமல், சிட்சிக்கப்படாமல் மற்றும் சுத்திகரிக்கப்படாமல், ஒருவராலும் தேவனை உண்மையாக அன்பு செய்ய முடியாது. உனது மனநிலையின் ஒரு பகுதி தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதனால் உன்னால் தேவனை உண்மையாக அன்பு செய்ய முடிகிறது என்று நீ சொன்னால், உனது வார்த்தைகளில் கர்வம் நிறைந்துள்ளது, நீ விபரீதமானவன். அதுபோன்றவர்கள் தான் பிரதான தேவதூதர்கள்! மனிதனின் சுபாவங்கள் தேவனை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவை அல்ல; அவன் தேவனின் பரிபூரணத்தின் மூலமாக தனது சுபாவங்களைக் கைவிட வேண்டும், அப்போதுதான் தேவனின் சித்தத்தில் அக்கறை காட்டுவதன் மூலம், தேவனின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம், மற்றும் பரிசுத்த ஆவியின் செயலுக்கு உட்படுத்துவதன் மூலமும், அவன் வாழ்கின்ற வாழ்க்கை தேவனின் அங்கீகாரத்தைப் பெறும். பரிசுத்த ஆவியினால் ஒரு மனிதன் பயன்படுத்தப்பட்டாலே தவிர, மாம்சத்தால் ஆன உடலில் வாழ்கின்ற எவர் ஒருவராலும் நேரடியாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனினும், இதுபோன்ற ஒரு நபருக்கு கூட, அவனது மனநிலை மற்றும் அவன் வாழும் விதம் முழுமையாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சொல்ல முடியாது; அவன் வாழ்கின்ற வாழ்க்கை பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும். அத்தகைய ஒரு மனிதனின் மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தாது.

மனிதனின் மனநிலை தேவனால் நியமிக்கப்பட்டது என்றாலும் (இது கேள்விக்கு அப்பாற்பட்டது மேலும் ஒரு நேர்மறையான விஷயமாக கூட கருதலாம்), அது சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளது, அதனால் மனிதனின் மனநிலைகள் யாவும் சாத்தானின் மனநிலையாகும். செய்யும் செயல்களில் நேர்மையாக இருப்பது தேவனின் மனநிலையாகும், தங்களிடமும் இந்த மனநிலை வெளிப்படுத்தப்படுகிறது, அவர்களது குணமும் இப்படித்தான் இருக்கின்றன, அதனால் தங்களது மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ஒருசில மக்கள் கூறுகின்றனர். இவர்கள் என்ன மாதிரியான மக்கள்? சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமா? தங்களது மனநிலை தேவனின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது என்று அறிவிக்கும் யாரும் தேவனை நிந்திக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியை அவமதிக்கின்றனர்! பரிசுத்த ஆவி செயல்படுகின்ற விதமானது, பூமியின் மீது செய்யப்படும் தேவனின் பணி வெற்றிச் சிறக்கும் பணி என்பதைக் காட்டுகிறது. இதுபோல், மனிதனிடம் உள்ள பல்வேறு சாத்தானுக்குரிய மனநிலைகள் இன்னும் சுத்திகரிக்கப்படவில்லை, அவன் வாழும் விதம் இப்போதும்கூட சாத்தானின் சாயலாகத்தான் உள்ளது, இதைத்தான் மனிதன் நல்லது என்று நம்புகிறான், இது மனிதனின் மாம்சத்தின் செயல்களைக் குறிக்கிறது; துல்லியமாகச் சொன்னால், இது சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துமே தவிர கண்டிப்பாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது. இந்த பூமியின்மேல் பரலோக வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய அளவிற்கு யாராவது ஒருவர் ஏற்கனவே தேவனில் அன்புகூருகிறவராக இருந்தால், “தேவனே! என்னால் உம்மை போதுமான அளவு நேசிக்க முடியாது” என்று அவர்கள் கூறலாம். மேலும் தாங்கள் மிக உயர்ந்த சாம்ராஜ்யத்தை அடைந்துவிட்டனர் என்பன போன்ற வாக்கியங்களை உரைப்பார்கள், இருந்தாலும் அவர்கள் தேவனைப் போல் வாழ்கின்றனர் என்றோ அல்லது தேவனைக் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றோ கூற முடியாது, ஏனெனில் மனிதனின் காரியம் தேவனைப் போன்றதல்ல, மேலும் மனிதன் தேவனாக முடியாது, அவனால் ஒருபோதும் தேவனைப் போல் வாழக்கூட முடியாது. தேவன் மனிதனிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டாரோ அப்படித்தான் மனிதன் வாழ்வை வாழ வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் கட்டளையிட்டுள்ளார்.

சாத்தானின் அனைத்து செயல்களும் செய்கைகளும் மனிதனிடம் வெளிப்படுகிறது. இன்று மனிதனின் அனைத்து செயல்களும் செய்கைகளும் சாத்தானின் ஒரு வெளிப்பாடாகத்தான் உள்ளது, அதனால் அவன் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனிதன் சாத்தானின் உருவகமாக உள்ளான், அதனால் மனிதனின் மனநிலை தேவனின் மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்த முடிவதில்லை. சில மக்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்; தேவன் அத்தகைய மக்களின் குணங்களின் மூலமாக சில கிரியைகளைச் செய்யலாம், அவர்கள் செய்யும் செயல்கள் யாவும் பரிசுத்த ஆவியின் கட்டளையின்படி நடக்கிறது. எனினும் அவர்களது மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அவர்கள் மீது தேவன் செய்யும் கிரியையானது ஏற்கெனவே அவர்களுக்குள் உள்ளவற்றுடன் கிரியை செய்து அதை மேம்படுத்துவதுதானே தவிர வேறு எதுவுமில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளாக இருந்தாலும் சரி அல்லது தேவனால் பயன்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, யாராலும் நேரடியாக அவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மக்கள் சூழ்நிலைகளின் கட்டாயத்தினால்தான் தேவன் மீது அன்பு செலுத்துகின்றனர், ஒரு நபர் கூட தங்களது சொந்த விருப்பத்துடன் ஒத்துழைப்பு அளிக்க முயற்சி செய்யவில்லை. நேர்மறை விஷயங்கள் என்னென்ன? தேவனிடமிருந்து நேரடியாக வருவது அனைத்துமே நேர்மறையானவைதான்; எனினும், மனிதனின் மனநிலை சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளது, அது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அன்பு, உபத்திரவப்படுவதற்கான மனோதிடம், நீதி, கீழ்படிதல், தாழ்மை மற்றும் மனித உருவில் அவதரித்த தேவன் மறைந்திருத்தல் ஆகியவையே தேவனை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஏனென்றால் அவர் வந்தபோது, அவர் ஒரு பாவ சுபாவம் இல்லாதவராக வந்தார் மேலும் சாத்தானால் செயல்படுத்தப்படாமல் தேவனிடமிருந்து நேரடியாக வந்தார். இயேசு பாவ மாம்சத்தின் தோற்றத்தில் வாழ்ந்தாரே தவிர, அவர் பாவத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; அதனால், சிலுவையில் அறையப்பட்டு அவர் தனது பணியை நிறைவு செய்யும் வரை (அவர் சிலுவையில் அறையப்பட்ட சமயம் உள்பட) அவரது செயல்கள், செய்கைகள், மற்றும் வார்த்தைகள், ஆகிய அனைத்தும் நேரடியாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாக உள்ளன. பாவ சுபாவத்தைக் கொண்ட எந்த நபரும் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனிதனின் பாவம் சாத்தானை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை நிரூபிக்க இயேசுவின் உதாரணமே போதுமானதாகும். தெளிவாக கூறுவதென்றால், பாவம் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, தேவன் பாவமற்றவர். மனிதன் மீது பரிசுத்த ஆவி நடப்பித்த கிரியையைக் கூட, பரிசுத்த ஆவியினால் கட்டளையிடப்பட்டதாகத்தான் கருத முடியும், அது தேவனுக்காக மனிதனால் செய்யப்பட்டது என்று கூற முடியாது. ஆனால், மனிதனைப் பொறுத்தவரை, அவனது பாவமோ அவனது மனநிலையோ தேவனை பிரதிநிதித்துவப்படுத்தாது. கடந்த காலம் முதல் இன்றுவரை பரிசுத்த ஆவியானவர் மனிதன் மீது நடப்பித்த கிரியையைப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவி அவன் மீது கிரியை செய்த காரணத்தால்தான் மற்ற அனைத்தையும் விட அவன் சிறப்பாக வாழ்வதற்கான அம்சம் அவனில் உள்ளது என்பதை ஒருவர் காண்கிறார். ஒரு சிலரால் தான் பரிசுத்த ஆவியானவரால் சரிகட்டப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட பின்னர் வாழ்நாள் முழுவதும் இப்படி உண்மையாக வாழ முடிகிறது. சொல்லப்போனால், பரிசுத்த ஆவியின் கிரியைதான் உள்ளது; மனிதனின் சார்பாக ஒத்துழைப்பே இல்லை. இதை இப்போது உன்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? இது இவ்வாறு இருக்க, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது அவருடன் முழுமையாக ஒத்துழைத்து உனது பணியை நிறைவேற்ற உன்னால் இயன்றதை நீ எப்படிச் செய்வாய்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 318

தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் பின்தொடர்தல், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்: நீ செய்யும் அனைத்தும் வழக்கத்தில் இருக்கவேண்டும், மேலும் நீ மாயையான மற்றும் கற்பனையான காரியங்களைத் பின்தொடரக்கூடாது. இந்த வழியில் நடப்பதற்கு எந்த மதிப்பும் இல்லை, மேலும், அத்தகைய ஜீவனத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால், உன் ஜீவனும் பின்தொடர்தலும் பொய் மற்றும் வஞ்சகத்தைத்தவிர வேறொன்றும் இல்லை, மேலும் நீ மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தகாரியங்களை பின்தொடராததால், நீ சத்தியமற்ற அபத்தமான பகுத்தறிவையும் உபதேசத்தையும் மட்டு மேகாரியங்களாக பெறமுடியும். இதுபோன்ற காரியங்கள் நீ இருப்பதன் முக்கியத்துவத்துக்கும் மதிப்புக்கும் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, மேலும் உன்னை ஒரு வெறுமைக்குள் மட்டுமே கொண்டு வரமுடியும். இந்த வழியில், உன் முழுஜீவனும் எந்தமதிப்பும் அர்த்தமும் இல்லாமல் இருக்கும்—நீ அர்த்தமுள்ள ஜீவனத்தைத் தொடராதிருந்தால், நீ ஒரு நூறு ஆண்டுகள் ஜீவித்தாலும், அது அனைத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லாததாக இருக்கும். அதனை எவ்வாறு ஒரு மனித ஜீவனம் என்று அழைக்க முடியும்? இது உண்மையில் ஒரு மிருக ஜீவனம் அல்லவா? அதே போல், நீங்கள் தேவனின் விசுவாசப் பாதையை பின்பற்ற முயற்சித்தாலும், காணக்கூடிய தேவனைப்பின் தொடர எந்த முயற்சியும் செய்யாமல், அதற்கு பதிலாக ஒரு அதரிசனமான மற்றும் புரிந்துக்கொள்ள முடியாத தேவனைத் தொழுகிறீர்கள் என்றால், அத்தகைய பின்தொடர்தல் இன்னும் வீணானதல்லவா? இறுதியில், உன்னுடைய பின்தொடர்தல் அழிவுகளின் குவியலாக மாறும். இது போன்ற ஒருபி ன்தொடர்தலால் உங்களுக்கு என்ன பயன்? மனிதனுடனான மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவனால் காணவோ தொடவோ முடியாத காரியங்களை மட்டுமே நேசிக்கின்றான், காரியங்கள் மிகவும் மர்மமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது, மேலும் இவை மனிதனால் கற்பனைச்செய்ய முடியாத மற்றும் வெறுமையான மனுஷர்களால் அடைய முடியாததாக உள்ளது. இந்தகாரியங்கள் எந்தளவுக்கு நம்பத்தகாததாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அவை ஜனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் ஜனங்கள் எல்லாவற்றையும் கவனிக்காமல் அவற்றைப் பின்தொடர்கிறார்கள், அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு அவை நம்பத்தகாதவைகளாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நெருக்கமாக ஜனங்கள் அவற்றை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்கிறார்கள், வெகுதொலைவிற்கு சென்றாலும் அவர்களைப் பற்றிய தங்களுடைய முழுமையான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். மாறாக, எந்த அளவிற்கு நம்பத்தகுந்த காரியங்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள் அவைகள் பக்கமாக உள்ளார்கள்; அவர்களிடத்தில் வெறுமனே தங்கள் முகத்தைச் சுருக்கி ஏளனமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இன்று நான் செய்யும் நம்பத்தகுந்த கிரியையைப் பற்றிய உங்கள் துல்லியமான அணுகுமுறை இது இல்லையா? இது போன்ற காரியங்கள் மிகவும் நம்பத்தகுந்தவை, நீங்கள் அவர்களுக்கு எதிராக எவ்வளவு பாரபட்சம் காட்டுகிறீர்கள். அவைகளை ஆராய நீங்கள் எந்த நேரத்தையும் செலவிடவில்லை, ஆனால் அவைகளைப் புறக்கணிக்கிறீர்கள்; இந்த நம்பத்தகுந்த, குறைந்ததரத் தேவைகளுக்கு நீங்கள் முகத்தைச் சுருக்கி தாழ்வாக பார்க்கிறீர்கள், மேலும் இந்த உண்மையான தேவனைப்பற்றிய எண்ணற்ற கருத்துக்களைக்கூட வைத்திருக்கிறீர்கள், அவருடைய பொருளையும் இயல்பையும் ஏற்றுக்கொள்ள இயலாது இருக்கிறீர்கள். இந்த வழியில், நீங்கள் தெளிவற்ற விசுவாசத்தைப் பிடித்திருக்கவில்லையா? கடந்த காலத்தின் தெளிவற்ற தேவன் மீது நீங்கள் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், மேலும் இன்றைய உண்மையான தேவன் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை. நேற்றைய தேவனும் இன்றைய தேவனும் இரு வேறு யுகங்களிலிருந்து வந்தவர்கள் அல்லவா? நேற்றைய தேவன் பரலோகத்தில் உன்னத தேவனாக இருக்கிறார், அதேசமயம் இன்றைய தேவன் பூமியில் ஒரு சிறிய மனிதர் அல்லவா? மேலும், மனிதனால் ஆராதிக்கப்படும் தேவன் அவருடைய கருத்துக்களால் உருவாக்கப்பட்டவராக இருக்கிறார், அதே சமயம் இன்றைய தேவன் உண்மையான மாம்சத்தால், பூமியில் உருவாக்கப்படுகிறார் அல்லவா? எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இன்றைய தேவன் மிகவும் உண்மையானவர் என்பதால் மனிதன் அவரைப் பின்தொடரவில்லை அல்லவா? இன்றைய தேவன் ஜனங்களிடம் துல்லியமாகக் கேட்பது ஜனங்கள் மிகவும் செய்ய விரும்பாததும், அவர்கள் வெட்கி நாணமடையக்கூடியதும் ஆகும். இது ஜனங்களுக்கு காரியங்களைக் கடினமாக்கவில்லையா? இது வெறுமையான ஜனங்களுக்கு வடுக்களை ஏற்படுத்தவில்லையா? இந்த வழியில், யதார்த்தத்தைப் பின்பற்றாதவர்களில் அநேகர் மாம்சத்தில் வந்த தேவனின் சத்துருக்களாகி, அந்திக்கிறிஸ்துகளாக மாறுகிறார்கள். இது தெளிவான உண்மை அல்லவா? கடந்தகாலத்தில், தேவன் இன்னும் மாம்சமாக மாறியிராதபோது, நீ ஒரு மதபிரமுகராகவோ அல்லது பக்தியுள்ள விசுவாசியாகவோ இருந்திருக்கலாம். தேவன் மாம்சமாக மாறிய பிறகு, இது போன்ற அநேக பக்தியுள்ள விசுவாசிகள் அறியாமலேயே அந்திக்கிறிஸ்துகளாக மாறினார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தவில்லை அல்லது சத்தியத்தைத் பின்தொடரவில்லை, மாறாக பொய்யானவைகள் மீது மூர்க்கவெறி கொண்டீர்கள்—இது மாம்சத்தில் வந்த தேவனுக்கு உன் பகைமையின் தெளிவான ஆதாரமல்லவா? மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், எனவே மாம்சத்தில் வந்த தேவனை விசுவாசிக்காத அனைவரும் அந்திக்கிறிஸ்துக்கள் அல்லவா? ஆகவே, நீ மாம்சத்தில் வந்த இந்த தேவனை உண்மையாக அன்பு செலுத்தி விசுவாசிக்கிறீர்களா? மிகவும் உண்மையாகவும் விசேஷித்த இயல்புமாய் இருக்கிற தேவன் ஜீவனும் சுவாசமுமாய் உண்மையில் இருக்கிறாரா? உன் பின்தொடர்தலின் மெய்யான நோக்கம் என்ன? இது பரலோகத்தில் அல்லது பூமியில் உள்ளதா? இது ஒரு கருத்தா அல்லது இது ஒரு சத்தியமா? இது தேவனா அல்லது இது சில இயற்கைக்கு அப்பாற்பட்டதா? உண்மையில், சத்தியம் என்பது ஜீவனத்தின் பழமொழிகளில் மிகவும் உண்மையாதாகவும், மேலும் சகலம னிதகுலத்திடமும் இதுபோன்ற பழமொழிகளில் மிக உயர்ந்ததாகவும் இருக்கிறது. ஏனென்றால், தேவன் மனிதனை உருவாக்க இது தேவையாய் இருக்கிறது, மேலும் இது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியை, எனவே இது “ஜீவனத்தின் பழமொழி” என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோவொன்றிலிருந்து சுருக்கமாக உரைக்கப்பட்ட ஒரு பழமொழியும் அல்ல, ஒரு பெரிய மனிதரின் பிரபலமான மேற்கோளும் அல்ல. மாறாக, வானங்களுக்குக்கும் பூமிக்கும் மற்றும் சகல காரியங்களுக்கும் எஜமானனாகியவரிடமிருந்து மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்ட வார்த்தையாக இது இருக்கிறது; இது மனிதனால் சுருக்கப்பட்ட சில வார்த்தைகள் அல்ல, ஆனால் தேவனின் ஜீவனிலிருந்து இயல்பாகவே வரப்பெற்றவை. எனவே இது “சகல ஜீவன்களின் பழமொழிகளிலும் மிக உயர்ந்தது” என்று அழைக்கப்படுகிறது. சத்தியத்தை வழக்கத்துக்குக் கொண்டு வருவதற்கான ஜனங்களின் பின்தொடர்தல் அவர்களின் கடமையின் செயல்திறனாக இருக்கிறது—அதாவது தேவனின் தேவையைத் திருப்திப்படுத்துவதற்கானப் பின்தொடர்தலாகும். எந்தவொரு மனிதனும் அடையக்கூடிய வெறுமையான உபதேசத்தைக் காட்டிலும், இந்தத் தேவையின் சாராம்சம் அனைத்து சத்தியங்களிலும் மிகவும் உண்மையானது. உன் பின்தொடர்தல் உபதேசமற்றதாகவும் பொருளற்றதாகவும் இருந்தால், நீ சத்தியத்திற்கு எதிரான கலகக்காரன் அல்லவா? நீ சத்தியத்தை உடைக்கும் ஒருவர் அல்லவா? அத்தகைய ஒரு நபர் தேவனை நேசிக்க விரும்பும் ஒருவராக எவ்வாறு இருக்க முடியும்? யதார்த்தமில்லாத ஜனங்கள் சத்தியத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள், மேலும் அவர்கள் அனைவரும் இயல்பாகவே கலகக்காரர்களுமாக இருக்கிறார்கள்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்கள் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 319

நீங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக பலனைப் பெறவும் மற்றும் தேவனால் தயவை பெறவும் விரும்புகிறீர்கள். எல்லோரும் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது எல்லோரும் இதுபோன்ற காரியங்களை நம்புகிறார்கள், ஏனென்றால் எல்லோரும் உயர்ந்த காரியங்களைத் தேடுவதில் ஆர்வமாக முன்பே எண்ணம் கொண்டிருக்கிறார்கள், யாரும் மற்றவர்களுக்குப் பின்தங்கியிருக்க விரும்புவதில்லை. இதுதான் ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது. துல்லியமாக இந்த காரணத்திற்காக, தொடர்ந்து பரலோகத்திலுள்ள தேவனுக்கு உகந்தவராக இருக்க உங்களில் அநேகர் முயற்சிக்கிறார்கள், ஆனாலும், உண்மையாகவே, தேவன்மீதான உங்கள் விசுவாசமும், கள்ளங்கபடமற்ற மனமும் உங்கள் மீதான உங்களுடைய விசுவாசத்தையும், கள்ளங்கபடமற்ற மனதையும் விட மிகக் குறைவு. இதை நான் ஏன் சொல்லுகிறேன்? ஏனென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை நான் ஒப்புக் கொள்ளவேயில்லை, மேலும், ஏனென்றால் உங்கள் இருதயங்களில் தேவன் இருப்பதை நான் மறுக்கிறேன். அதாவது, நீங்கள் தொழுதுகொள்ளும் தேவன், நீங்கள் போற்றும் தெளிவற்ற தேவன், உண்டாயிருக்கவில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லக் காரணம், நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசத்திற்கு காரணம் உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் விக்கிரகமே. இதற்கிடையில், என்னைப் பொருத்தமட்டில் நீங்கள் பெரியவருமல்ல சிறியவருமல்ல என்று பார்க்கும் தேவனை, நீங்கள் வெறுமனே வார்த்தைகளாலேயே ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள் என்று நான் கூறும்போது, நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து தொலைவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அப்பொழுது அந்த தெளிவற்ற தேவன் அருகில் இருப்பதுபோலத் தெரிகிறது. “பெரியதல்ல” என்று நான் கூறும்போது, இந்த நாளில் நீங்கள் விசுவாசிக்கிற தேவன் எப்படி பெரிய திறன் இல்லாத ஒரு நபராக, மிக உயர்ந்தவராக இல்லாத ஒரு நபராகத் தோன்றுகிறார் என்பதைக் குறிக்கிறது. “சிறியதல்ல” என்று நான் கூறும்போது, இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த நபரால் காற்றை வரவழைத்து மழையை கட்டளையிட முடியாது என்றாலும், வானங்களையும் பூமியையும் உலுக்கும் கிரியையைச் செய்ய தேவனின் ஆவியானவரை அவர் அழைக்க முடிந்தாலும் கூட, ஜனங்களை முற்றிலும் குழப்பத்தில் கொண்டு விடுகிறது. வெளிப்புறமாக, நீங்கள் எல்லோரும் பூமியில் இந்த கிறிஸ்துவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவர்களாகத் தோற்றமளிக்கிறீர்கள், ஆனாலும் உண்மையான சாரத்தில், நீங்கள் அவரை விசுவாசிக்கவும் இல்லை, நீங்கள் அவரை நேசிக்கவுமில்லை. அதாவது, நீங்கள் உண்மையிலேயே விசுவாசிக்கும் ஒன்று உங்கள் சுய உணர்வுகளின் தெளிவற்ற தேவனே, மற்றும் நீங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒன்று நீங்கள் இரவும் பகலும் ஏக்கம் கொண்டிருக்கிற தேவன், ஆனால் இன்னும் நேரில் பார்த்திருக்கவில்லை. இந்த கிறிஸ்துவிடமான, உங்கள் விசுவாசம் ஒரு சிறு பகுதியே தவிர, உங்கள் அன்பு ஒன்றும் இல்லை. விசுவாசம் என்பது நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தல் ஆகும். அன்பு என்றால் ஒருவரின் இருதயத்தில் ஒருபோதும் பிரிந்து செல்லாத அர்ப்பணிப்பு மற்றும் போற்றுதல் ஆகும். ஆயினும், இன்றைய தினத்தின் உங்களுடைய கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் அன்பும் இதற்கு மிகக் குறைவாக இருக்கிறது. விசுவாசம் என்று வரும்போது, நீங்கள் அவரை எவ்வாறு விசுவாசிக்கிறீர்கள்? அன்பு என்று வரும்போது, நீங்கள் அவரை எந்த முறையில் நேசிக்கிறீர்கள்? அவருடைய மனநிலையைக் குறித்த வெறும் புரிந்து கொள்ளுதல் உங்களுக்கு இல்லை, அவருடைய சாரத்தைக் குறித்து இன்னும் குறைவாகவே உங்களுக்குத் தெரியும், எனவே எப்படி அவர் மீது நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள்? அவர்மீதுள்ள உங்கள் விசுவாசத்தின் யதார்த்தம் எங்கே? நீங்கள் அவரை எப்படி நேசிக்கிறீர்கள்? அவருக்கான உங்கள் அன்பின் யதார்த்தம் எங்கே?

அநேகர் இன்றுவரை தயங்காமல் என்னைப் பின்தொடர்ந்துள்ளனர். எனவே, கடந்த அநேக ஆண்டுகளாக நீங்கள் அதிக சோர்வை சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த தன்மையையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் நான் தெள்ளத் தெளிவுடன் புரிந்துகொண்டிருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்புகொள்வது என்பது வியக்கத்தக்க நிலையில் கடினமானதாக இருக்கின்றது. பரிதாபம் என்னவென்றால், நான் உங்களைப் பற்றி அதிகம் புரிந்து கொண்டிருந்தாலும், நீங்கள் என்னைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழப்பமான தருணத்தில் ஒருவரின் தந்திரத்திற்கு இணங்கி நீங்கள் விசுவாசித்ததாக ஜனங்கள் சொல்வதில் ஆச்சரியமில்லை. உண்மையில், நீங்கள் என் மனநிலையைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, என் மனதில் இருப்பதை குறைவாகவே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இன்று, என்னைக் குறித்த உங்கள் தவறான புரிதல்கள் வேகமாகப் பெருகுகின்றன, மற்றும் என் மீதான உங்கள் விசுவாசம் ஒரு குழப்பமான விசுவாசமாகவே உள்ளது. நீங்கள் என் மீது விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் அனைவரும் எனக்கு உகந்தவராகவும், எனனை நோக்கி கெஞ்சவும் முயற்சிக்கிறீர்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனக்கு பலன் அளிக்கக் கூடியவர்களை நான் பின்பற்றுவேன், பெரிய பேரழிவுகளிலிருந்து தப்பிக்க யார் என்னை அனுமதிக்கிறார்களோ, அவர் தேவனாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தேவனாக இருந்தாலும் நான் விசுவாசிக்கிறேன் என்னும் உங்கள் நோக்கங்கள் மிகவும் எளிமையானவை. இவை எதைக்குறித்துமே எனக்கு எந்த கவலையும் இல்லை. உங்களிடையே இதுபோன்றோர் அநேகர் உள்ளனர், இந்த நிலை மிகவும் அபாயமானது. ஒரு நாள், உங்களில் எத்தனை பேர் கிறிஸ்துவின் சாரத்தைக் குறித்த நுண்ணறிவால் விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள் என்று ஒரு சோதனை இருந்திருந்தால், உங்களில் ஒருவர் கூட எனக்கு திருப்திகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்வியைக் கருத்தில் கொள்வது புண்படுத்தாது. நீங்கள் விசுவாசிக்கிற தேவன் என்னிடமிருந்து மிகவும் வேறுபட்டவர், இது அவ்வாறு இருப்பதால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் சாராம்சம் என்ன? உங்கள் தேவன் என்று அழைக்கப்படுவதை நீங்கள் எவ்வளவு அதிகமாக விசுவாசிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் என்னிடமிருந்து விலகிவிடுவீர்கள். அப்படியானால், இந்த பிரச்சினையின் சாராம்சம் என்ன? உங்களில் யாரும் இதுபோன்ற கேள்வியைக் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் அதனுடைய ஈர்ப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? இந்த வழியில் தொடர்ந்து விசுவாசிப்பதன் விளைவுகளை நீங்கள் சிந்தித்துள்ளீர்களா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பூமியில் தேவனை அறிவது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 320

மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களை நான் விரும்புகிறேன். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் பாதுகாக்கப்பட்டிருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகத்தின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனை சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ பொறுப்பேற்கிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களிலும் மிகவும் வஞ்சிக்கிறவன். சிறு குணங்களின் மன்னிக்க முடியாத பாவம், நியாயமும் காரணமும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களுக்கு கொடுக்கப்படுதல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைப் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதில்லை! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் விசுவாசிக்கிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைப் குறித்த உங்கள் அறிவு இந்த தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் நிந்தனையும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலக்கக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன். அநேக வருடங்களின் கிரியை முழுவதுமாக, நீங்கள் அநேக சத்தியங்களைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் என் காதுகள் கேட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் சத்தியத்தை ஏற்க தயாராக இருக்கிறார்கள்? நீங்கள் சத்தியத்திற்கான விலையை செலுத்த தயாராக உள்ளீர்கள் என்று நீங்கள் அனைவரும் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் உங்களில் எத்தனை பேர் சத்தியத்திற்காக உண்மையிலேயே துன்பப்பட்டீர்கள்? உங்கள் இருதயங்களில் அநீதியைத் தவிர வேறொன்றுமில்லை, இது எல்லோரும், அவர்கள் யாராக இருந்தாலும் சமமாக வஞ்சகர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், தேவன் அவதாரம் எடுப்பது ஒரு சாதாரண மனிதனைப் போலவே கனிவான இருதயம் அல்லது கருணைமிக்க அன்பு இல்லாமல் இருக்க முடியும் என்ற அளவிற்குக் கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அதற்கும் மேலாக, ஒரு உன்னத குணமும், இரக்கமுள்ள, கருணைமிக்க இயல்பும் பரலோகத்தில் உள்ள தேவனுக்குள் மட்டுமே இருப்பதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அத்தகைய ஒரு பரிசுத்தவான் இல்லை, பூமியில் இருளும் தீமையும் மட்டுமே ஆட்சி செய்கின்றன, அதே சமயம் ஜனங்கள் நன்மைக்கும் அழகுக்குமான ஏக்கத்தை ஒப்படைப்பதே தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் மனதில், பரலோகத்தில் உள்ள தேவன் மிகவும் உயர்ந்தவர், நீதியுள்ளவர், பெரியவர், தொழுதுகொள்வதற்கும் போற்றுதலுக்கும் தகுதியானவராக இருக்கிறார். இதற்கிடையில், பூமியிலுள்ள இந்த தேவன், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மாற்றாகவும் கருவியாகவும் இருக்கிறார். இந்த தேவன் பரலோகத்தின் தேவனுக்கு சமமாக இருக்க முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அவரைப் போலவே அதே சுவாசத்தில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனின் மகத்துவம் மற்றும் மரியாதை என்று வரும்போது, அவை பரலோகத்திலுள்ள தேவனின் மகிமைக்கு உரியவை, ஆனால் அது இயல்பு மற்றும் மனிதனின் சீர்கேடு என்று வரும்போது, அவை பூமியில் உள்ள தேவனுக்கு ஒரு பங்கைக் கொண்டிருக்கும் பண்புகளாகும். பரலோகத்தில் உள்ள தேவன் நித்தியமாக உயர்ந்தவர், பூமியில் உள்ள தேவன் என்றென்றும் முக்கியமற்றவர், பலவீனமானவர், திறமையற்றவர். பரலோகத்தில் உள்ள தேவன் உணர்ச்சிக்காக அல்லாமல் நீதிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் சுயநலமான நோக்கங்களை மட்டுமே கொண்டிருக்கிறார், எந்த நியாயமும் காரணமும் இல்லாமல் இருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவனுக்கு சிறிதளவும் வக்கிரம் இல்லை, என்றென்றும் உண்மையுள்ளவர், பூமியில் உள்ள தேவன் எப்போதும் நேர்மையற்ற பகுதியைக் கொண்டிருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவன் மனிதனை மிகவும் நேசிக்கிறார், பூமியில் உள்ள தேவன் மனிதனுக்கு போதிய அக்கறை காட்டவில்லை, அவனை முற்றிலுமாக புறக்கணிக்கவும் செய்கிறார். இந்த தவறான அறிவு நீண்ட காலமாக உங்கள் இருதயங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடும். நீங்கள் கிறிஸ்துவின் அனைத்து கிரியைகளையும் அநியாயக்காரர்களின் நிலைப்பாட்டில் இருந்து கருதுகிறீர்கள், மேலும் அவருடைய எல்லா கிரியைகளையும், அவருடைய அடையாளத்தையும் சாரத்தையும் துன்மார்க்கரின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு முன் வருபவர்களால் செய்யப்படாத ஒரு கடுமையான தவறைச் செய்துள்ளீர்கள், . அதாவது, நீங்கள் பரலோகத்தில் உயர்ந்த தேவனுக்கு மட்டுமே தலையில் கிரீடம் வைத்து சேவை செய்கிறீர்கள், மேலும் முக்கியமற்றவராக நீங்கள் கருதும் உங்களால் அதரிசனமான தேவனை நீங்கள் எப்போதும் கவனிப்பதில்லை. இது உங்களுடைய பாவம் அல்லவா? தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? நீங்கள் பரலோகத்திலுள்ள தேவனை ஆராதிக்கின்றீர்கள். நீங்கள் உயர்ந்த சொரூபங்களை வணங்குகிறீர்கள், அவர்களின் சொல் ஆற்றலுக்காக புகழ்பெற்றவர்களை மதிக்கிறீர்கள். உன் கைகளை செல்வங்களால் நிரப்புகிற தேவனால் நீ மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்படுகிறாய், மேலும் உன் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடிய தேவனுக்காக ஏங்குகிறாய். இந்த உயர்ந்தவர் அல்லாதவரே நீ வணங்காத ஒரே தேவன் ஆவார். நீங்கள் வெறுக்கிற ஒரே காரியம், இந்த தேவனொடு இணைந்திருப்பதுதான். நீ செய்ய விரும்பாத ஒரே காரியம், உனக்கு ஒருபோதும் ஒரு காசும் கொடுக்காத இந்த தேவனை சேவிப்பதே ஆகும், மேலும் உன்னை அவருக்காக ஏங்க வைக்க முடியாத ஒரே ஒருவர் இந்த அன்பற்ற தேவன் ஆவார். இந்த வகையான தேவனால் உன் எல்லைகளை விரிவுபடுத்தவும், நீ ஒரு புதையலைக் கண்டுபிடித்ததைப் போல உணரவும், நீ விரும்புவதை நிறைவேற்றவும் முடியாது. அப்படியானால், நீ அவரை ஏன் பின்பற்றுகிறாய்? இது போன்ற கேள்விகளுக்கு உன் சிந்தனையை அளித்துள்ளாயா? நீ செய்வது இந்த கிறிஸ்துவை புண்படுத்தாது. மிக முக்கியமாக, அது பரலோகத்தில் உள்ள தேவனை புண்படுத்துகிறது. இது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம் அல்ல என்று நான் நினைக்கிறேன்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பூமியில் தேவனை அறிவது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 321

உங்களுக்குள் தேவன் மகிழ்ந்திருக்க நீங்கள் ஏங்குகிறீர்கள், ஆனாலும் நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். இங்கே காரியம் என்ன? நீங்கள் அவர்மீது முழு விசுவாசம் வைத்திருக்க அவருடைய வார்த்தைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவருடைய கையாளுதலையோ அல்லது பராமரிப்பையோ அல்ல, அவருடைய ஒவ்வொரு ஒழுங்கையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அப்படியானால், இங்கே காரியம் என்ன? கடைசி ஆய்வில், உங்கள் விசுவாசம் ஒருபோதும் ஒரு குஞ்சை உருவாக்க முடியாத ஒரு வெற்று முட்டைக் கூடாகும். உங்கள் விசுவாசம் உங்களுக்கு சத்தியத்தைக் கொண்டு வரவில்லை அல்லது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கவில்லை, மாறாக உங்களுக்கு ஒரு மாயையான விசுவாச ஆதாரத்தின் உணர்வை அளித்துள்ளது. இந்த விசுவாச ஆதாரத்தின் உணர்வுதான் தேவனை விசுவாசிப்பதில் உங்கள் நோக்கமாயிருக்கிறது, யதார்த்தமும் ஜீவனும் அல்ல. ஆகவே, தேவன்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் போக்கு, அடிமைத்தனம் மற்றும் வெட்கமின்மை ஆகியவற்றின் மூலம் தேவனுக்கு உகந்தவராக முயற்சிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, எந்த வகையிலும் உண்மையான விசுவாசமாக கருதப்பட முடியாது. இது போன்ற விசுவாசத்தால் ஒரு குஞ்சு எப்படி பிறக்கக் கூடும்? வேறு விதாமாக சொல்வதானால், இது போன்ற விசுவாசம் என்னத்தை சாதிக்க முடியும்? தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம், உங்கள் சொந்த நோக்கங்களை அடைந்திட அவரைப் பயன்படுத்துவதாகும். மேலும், இது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலின் யதார்த்தம் அல்லவா? நீங்கள் பரலோகத்தில் தேவன் இருப்பதை விசுவாசிக்கிறீர்கள், பூமியில் உள்ள தேவனின் இருப்பை மறுக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் கருத்துக்களை நான் அங்கீகரிக்கவில்லை. தரையில் கால்களை வைத்து, தேவனை பூமியில் சேவிப்பவர்களை மட்டுமே நான் பாராட்டுகிறேன், ஆனால் பூமியில் இருக்கும் கிறிஸ்துவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அத்தகையவர்கள் பரலோகத்திலுள்ள தேவனிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கடைசியில் அவர்கள் துன்மார்க்கரைத் தண்டிக்கும் என் கைக்கு தப்பிக்க மாட்டார்கள். இந்த ஜனங்கள் பொல்லாதவர்கள். அவர்கள் தேவனை எதிர்க்கும் பொல்லாதவர்கள் மற்றும் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவில்லை. நிச்சயமாக, அவர்களின் எண்ணிக்கை கிறிஸ்துவைத் தெரியாத மேலும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. நீ பரலோகத்திலுள்ள தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் வரை நீ விரும்பியபடி கிறிஸ்துவுக்காக செயல்பட முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தவறு! கிறிஸ்துவைக் குறித்த உன் அறியாமை பரலோகத்தில் உள்ள தேவனை அறியாமல் இருப்பது ஆகும். பரலோகத்திலுள்ள தேவனிடம் நீ எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், அது வெறும் பேச்சும் மற்றும் பாசாங்கும் தான், ஏனென்றால் பூமியிலுள்ள தேவன் மனிதன் சத்தியத்தையும் அதிக ஆழமான அறிவையும் பெறுவதில் கருவியாக இருக்கிறார், ஆனால் அதைவிட அதிகமான கருவியானது மனிதனைக் கண்டனம் செய்தல், பின்னர் துன்மார்க்கரைத் தண்டிப்பதற்கான உண்மைகளைக் கைப்பற்றுவது ஆகும். இங்குள்ள நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நீ புரிந்து கொண்டாயா? நீ அவற்றை அனுபவித்திருக்கிறாயா? ஒரு நாள் இந்த உண்மையை விரைவில் புரிந்து கொள்ள உங்களுக்காக நான் விரும்புகிறேன். தேவனை அறிய, நீ பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, பூமியிலுள்ள தேவனையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னுரிமைகள் குழப்பமடைய வேண்டாம் அல்லது இரண்டாம் நிலையானது முதன்மையானதை மீற அனுமதிக்காதீர்கள். இந்த வழியில் மட்டுமே நீ உண்மையிலேயே தேவனோடு ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும், தேவனிடம் நெருங்கி பழகலாம், மேலும் உன் இருதயத்தை அவருக்கு அருகில் கொண்டுவர முடியும். நீ அநேக ஆண்டுகளாக விசுவாசமாக இருந்திருந்தால், என்னுடன் நீண்ட காலமாக இணைந்திருந்தும், என்னிடமிருந்து தொலைவில் இருந்தால், நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் நீ அடிக்கடி தேவனின் மனநிலையை புண்படுத்துகிறாய், உன் முடிவு கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். என்னுடன் அநேக ஆண்டுகளாக இணைந்திருப்பது உன்னை மனிதத்தன்மையையும் சத்தியத்தையும் கொண்ட ஒரு நபராக மாற்றத் தவறியது மட்டுமல்லாமல், மேலும், உங்கள் பொல்லாத வழிகளை உங்கள் இயல்புக்குள் பதித்திருந்தால், உங்களுக்கு முன்பு போல இரு மடங்கான அகந்தை மட்டுமல்லாமல், என்னைக் குறித்த உங்கள் தவறான புரிதல்களும் பெருகிவிட்டன, அதாவது நீ என்னை உன் சிறிய சேவகனாகக் கருதுகிறாய், பிறகு நான் சொல்கிறேன், உன் துன்பம் இனி தோல் ஆழம் மட்டும் இல்லை, ஆனால் உன் எலும்புகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. உன் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக நீ காத்திருக்க வேண்டும். நீ உன் தேவனாக இருக்கும்படி என்னை மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் நீ மரணத்திற்கு தகுதியான பாவத்தை, மன்னிக்க முடியாத பாவத்தை செய்துள்ளாய். நான் உன்னிடம் கருணை காட்ட முடிந்தாலும், பரலோகத்தில் உள்ள தேவன் உன் ஜீவனை எடுக்கும்படி வலியுறுத்துவார், ஏனென்றால் தேவனின் மனநிலைக்கு எதிரான உன் குற்றம் சாதாரண பிரச்சினை அல்ல, ஆனால் மிகவும் கடுமையான இயல்புடையது. நேரம் வரும்போது, உன்னிடம் முன்பே சொல்லாததற்காக என்னைக் குறை கூற வேண்டாம். நீ பூமியிலுள்ள தேவனான கிறிஸ்துவுடன் ஒரு சாதாரண மனிதனாக இணைந்திருக்கும்போது, அதாவது, இந்த தேவன் ஒரு நபரைத் தவிர வேறில்லை என்று நீ விசுவாசிக்கும்போது, இது அனைத்தும் இதற்கே மீண்டும் வருகிறது, அப்போதுதான் நீ அழிந்துவிடுவாய். இது உங்கள் அனைவருக்குமான எனது ஒரே அறிவுரை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பூமியில் தேவனை அறிவது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 322

மனிதனிடம் விசுவாசத்தின் நிச்சயமற்ற வார்த்தையே உள்ளது, விசுவாசத்தை எது உருவாக்குகிறது என்றும், அதைவிட அவனுக்கு ஏன் விசுவாசம் இருக்கிறது என்றும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லை. மனிதன் மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளுகிறான், மற்றும் மனிதன் மிகக் குறைவுள்ளவனாகவும் இருக்கிறான்; என்னிடம் அவனுக்கு விசுவாசம் இருப்பினும், அது அக்கறையற்றதும் அறியாமைகொண்டதுமே ஆகும். விசுவாசம் என்றால் என்னவென்றும், அல்லது அவனுக்கு ஏன் என்னிடம் விசுவாசம் உள்ளது என்றும் தெரியாவிட்டாலும், அவன் தொடர்ந்து விடாப்பிடியான ஒரு வெறியோடு என்னை விசுவாசிக்கிறான். நான் மனிதனிடம் கேட்பது என்னவென்றால் இவ்விதம் வீணாக விடாப்பிடியான வெறியோடு என்னை நோக்கிக் கூப்பிட வேண்டாம் அல்லது முறையற்ற வகையில் என்னில் விசுவாசம் கொள்ள வேண்டாம் என்பதே, ஏனெனில் நான் செய்யும் கிரியை மனிதன் என்னைப் பார்ப்பதற்காகவும் என்னைத் தெரிந்துகொள்ளுவதற்காகவுமே அல்லாமல் என்னால் ஈர்க்கப்பட்டு என்னை ஒரு புதிய வெளிச்சத்தில் காண்பதற்காகவல்ல. நான் ஒருகாலத்தில் அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன் மேலும் பல அதிசயங்களைச் செய்துகாட்டினேன் மற்றும் அக்காலத்தின் இஸ்ரவேலர்கள் என்னிடம் மாபெரும் அபிமானத்தைக் காட்டினார்கள் மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளை விரட்டிய என் அசாதாரணமான வல்லமையைப் போற்றிவணங்கினார்கள். அக்காலத்தில், யூதர்கள் என் சுகமளிக்கும் வல்லமை உன்னதமானது, அசாதாரணமானது என்று எண்ணினர்—மற்றும் என்னுடைய பல கிரியைகளின் காரணமாக, அவர்கள் யாவரும் என்னை வணங்கினார்கள், மேலும் என்னுடைய சகல வல்லமைக்காகவும் மிகுந்த அபிமானம் கொண்டார்கள். இவ்வாறு, நான் அதிசயங்களைச் செய்வதைப் பார்த்த பலர் என்னை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார்கள். நான் நோயாளிகளைக் குணப்படுத்துவதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துகொண்டார்கள். நான் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன், இருப்பினும் மக்கள் என்னை ஒரு கைதேர்ந்த வைத்தியர் போல்தான் பார்த்தார்கள்; அவ்வாறே, அக்காலத்தில் நான் மக்களிடம் பல போதனை வார்த்தைகளைப் பேசினேன், இருந்தாலும் அவர்கள் தமது சீடனை விட மேலான ஒரு வெறும் போதகரைப் போன்றே என்னைக் கருதினார்கள். இன்றும், என் கிரியைகளின் வரலாற்று ஆவணங்களை மனிதன் கண்ட பின்னும், நான் நோயாளிகளைக் குணப்படுத்தும் ஒரு பெரும் வைத்தியர் என்றும், அறியாமையில் இருக்கிறவர்களுக்கு ஒரு போதகர் என்றுமே தொடர்ந்து விளக்கம் அளிக்கிறார்கள், மேலும் அவர்கள் என்னை இரக்கமுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வரையறுத்துள்ளார்கள். வேதவசனங்களை வியாக்கியானம் செய்பவர்கள் குணப்படுத்தலில் என் வல்லமையை விஞ்சியிருக்கலாம், அல்லது தங்கள் போதகரைத் தற்போது விஞ்சியிருக்கும் சீடர்களாகக் கூட இருக்கலாம், ஆயினும் உலகெங்கும் அறியப்பட்ட பெயர்களைக் கொண்ட பெரும் புகழ்பெற்ற இத்தகைய மனிதர்கள், என்னை வெறும் வைத்தியர் என்றே மிகக் கீழாகக் கருதுகின்றனர். என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையை பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட் செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது. என் கிருபைக்காக யூதர்கள் என்னைப் பின்பற்றினார்கள், நான் சென்ற இடம் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்தார்கள். குறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட இந்த அறியாமையில் இருக்கும் மனிதர்கள் நான் வெளிக்காட்டிய அடையாளங்களையும் அற்புதங்களையும் மட்டுமே காண விரும்பினார்கள். மாபெரும் அதிசயங்களை செய்யக்கூடிய யூதர் வீட்டாரின் தலைவராகவே அவர்கள் என்னைக் கருதினர். ஆகவே, மேலும் மனிதர்களிடம் இருந்து நான் பிசாசுகளைத் துரத்தியபோது அது அவர்களிடையே அதிக விவாதத்தை எழுப்பியது: நான் எலியா என்றும், நானே மோசே என்றும், நானே எல்லா தீர்க்கதரிசிகளிலும் முந்தியவர் என்றும், எல்லா வைத்தியர்களிலும் நானே பெரியவர் என்றும் அவர்கள் கூறினார்கள். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்று நானே கூறினேனே அல்லாமல் நான் இருப்பதையோ அல்லது என் அடையாளத்தையோ யாரும் அறிய முடியவில்லை. என் பிதா இருக்கும் இடம் பரலோகம் என்று நான் கூறினேனே தவிர நானே தேவனின் குமாரன் என்றும் நானே தேவன் என்றும் யாரும் அறியவில்லை. எல்லா மனிதகுலத்திற்கும் மீட்பைக் கொண்டுவந்து மனிதகுலத்தை மீட்பேன் என்று நானே கூறினேனே அல்லாமல், மனிதகுலத்தின் மீட்பர் நானே என்று ஒருவரும் அறியவில்லை, மேலும் மனிதன் என்னை ஒரு தயாளமும் இரக்கும் கொண்ட மனிதர் என்றே அறிந்திருந்தனர். என்னைப் பற்றிய யாவையையும் என்னால் விளக்க முடிந்ததே தவிர, ஒருவரும் என்னை அறியவில்லை, மற்றும் ஒருவரும் நானே ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்று நம்பவில்லை. இதுவே மக்கள் என்னிடத்தில் வைத்த விசுவாசம், மற்றும் அவர்கள் என்னை முட்டாளாக்க முயற்சிசெய்த விதம். என்னைப் பற்றி இத்தகைய எண்ணம் கொண்டிருக்கும் போது அவர்களால் எனக்கு சாட்சியாக எப்படி இருக்க முடியும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 323

ஜனங்கள் நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் “தேவன்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளாமலே, வெறுமையாகக் கலக்கத்துடனே பின்பற்றுகிறார்கள். ஏன் மனிதன் தேவனை அவ்வாறு விசுவாசிக்க வேண்டும், அல்லது தேவன் என்றால் என்ன என்று அவர்கள் எந்த விவரமும் பெற்றிருக்கவில்லை. தேவனை விசுவாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் மட்டுமே ஜனங்களுக்குத் தெரியும், ஆனால் தேவன் என்றால் யாரென்று தெரியவில்லை, அவர்கள் தேவனை அறியவில்லை என்றால், இது ஒரு சிறந்த பெரிய நகைச்சுவை அல்லவா? இவ்வளவு தூரம் வந்திருந்து, ஜனங்கள் அநேக பரலோக மறைபொருட்களைக் கண்டிருந்தாலும், மனிதனால் முன்பு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிக ஆழமான அறிவைக் கேட்டிருந்தாலும், மனிதனால் சிந்திக்கப்படாத மிக அடிப்படையான அநேக சத்தியங்களை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். சிலர், “நாங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசிக்கிறோம். தேவன் என்றால் யார் என்று எங்களுக்கு எப்படித் தெரியாதிருக்கும்? இந்த கேள்வி எங்களைக் குறைத்து மதிப்பிடவில்லையா?” என்று சிலர் கூறலாம். இருப்பினும், உண்மையில், இன்று ஜனங்கள் என்னைப் பின்தொடர்ந்தாலும், இன்றைய எந்த கிரியையும் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் மிகத் தெளிவான மற்றும் எளிதான கேள்விகளைக் கூட கிரகித்துக் கொள்ளமால் விட்டு விடுகிறார்கள், தேவனைப் பற்றிய மிகவும் சிக்கலான கேள்விகளை ஒருபுறம் தனியே விட்டு விடுகிறார்கள். நீ எந்த அக்கறையும் கொள்ளாத, நீ அடையாளம் காணாத கேள்விகளே நீ புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்விகள் என்பதை அறிந்துகொள், ஏனென்றால் எதைக் கொண்டு உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில், நீ கவனம் செலுத்தாமலும், நீ அக்கறைக் கொள்ளாமலும், ஜனக்கூட்டத்தைப் பின்பற்ற மட்டுமே உனக்கு தெரிகிறது. நீ தேவன் மீது ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் என்பது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் என்றால் யார் என்று உனக்கு உண்மையாகவே தெரியுமா? மனிதன் என்றால் யார் என்று உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் மீது விசுவாசம் கொண்ட ஒரு மனிதனாக, நீ இந்த காரியங்களைப் புரிந்துகொள்ளத் தவறினால், தேவனுடைய விசுவாசி என்ற மேன்மையை நீ இழக்கவில்லையா? இன்று எனது கிரியை இதுதான்: ஜனங்கள் அவர்களின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் செய்யும் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், தேவனின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது எனது ஆளுகைத் திட்டத்தின் இறுதி செயலும், இது எனது கிரியையின் கடைசி கட்டமுமாகும். அதனால்தான் வாழ்வின் இரகசியங்கள் அனைத்தையும் முன்கூட்டியே நான் உங்களுக்கு சொல்கிறேன், இதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும். இது இறுதி யுகத்தின் கிரியை என்பதால், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத வாழ்வின் அனைத்து சத்தியங்களையும் நான் உங்களுக்கு கட்டாயமாகச் சொல்ல வேண்டும், நீங்கள் வெறுமனே மிக குறைபாடுள்ளவராகவும் மற்றும் மிக மோசமானவராகவும் இருப்பதால் அவற்றைப் புரிந்துகொள்ளவோ அல்லது தாங்கவோ திறமையற்று இருக்கிறீர்கள். நான் என் கிரியையை முடிப்பேன்; நான் செய்ய வேண்டிய கிரியையை நான் முடிப்பேன், இருள் இறங்கும்போது நீங்கள் மீண்டும் வழிதவறி, தீய ஒருவரின் ஆலோசனைகளுக்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக நான் உங்களுக்காக நியமிக்கப்பட்ட அனைத்தையும் உங்களுக்குச் சொல்வேன். இங்கு உங்களுக்கு புரியாத பல வழிகள் உள்ளன, அவற்றில் நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் அறியாதவர்கள்; உங்கள் ஸ்தானமும் உங்கள் குறைகளும் எனக்கு முற்றிலும் நன்றாகத் தெரியும். ஆகையால், நீங்கள் புரிந்துகொள்ள இயலாத அநேக வார்த்தைகள் இருந்தாலும், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத இந்த சத்தியங்களை நான் உங்களுக்கு சொல்ல இன்னும் ஆயத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் உங்கள் தற்போதைய ஸ்தானத்தில், நீங்கள் எனக்கு அளித்த சாட்சியத்தில் நீங்கள் உறுதியாக நிற்க முடியுமா என நான் கவலைப்படுகிறேன். இதை உங்களில் நான் சிறிதளவும் எண்ணவில்லை; நீங்கள் அனைவரும் எனது வழக்கமான பயிற்சிக்கு உட்படுத்தப்படாத மிருகங்கள், மேலும் உங்களுக்குள் எவ்வளவு மகிமை இருக்கிறது என்பதை என்னால் முற்றிலும் காண இயலாது. நான் உங்களிடம் அதிக ஆற்றலை செலவிட்டிருந்தாலும், உங்களில் உள்ள நேர்மறையான அம்சங்கள் வழக்கத்தில் இல்லை என்று தோன்றுகிறது, மேலும் எதிர்மறை அம்சங்களை ஒருவரின் விரல்களால் எண்ணி விடலாம், மற்றும் சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டுவரும் சாட்சியங்களாக மட்டுமே ஊழியம் செய்யுங்கள். உங்களில் உள்ள எல்லாவற்றிலும் சாத்தானின் விஷம் இருக்கிறது. நீங்கள் இரட்சிப்பிற்க்கு அப்பாற்பட்டவர் போல நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். விஷயங்களைப் பொருத்து, நான் உங்களின் பல்வேறு உணர்வுகளையும் மற்றும் நடத்தைகளையும் பார்க்கிறேன், இறுதியாக, உங்கள் உண்மையான ஸ்தானத்தை நான் அறிவேன். இதனால்தான் நான் எப்போதும் உங்கள் மீது வருத்தம் கொள்கிறேன்: தங்கள் சொந்த வாழ்க்கையை ஜீவிக்க விடப்பட்ட மனிதர்கள், அவர்கள் இன்று இருப்பதைக் காட்டிலும் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்களா அல்லது ஒப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா? உங்களின் குழந்தைத்தனமான ஸ்தானம் உங்களைக் கவலையடையச் செய்யவில்லையா? தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைப் போல நீங்கள் உண்மையிலேயே எல்லா நேரங்களிலும், என்னில் மட்டுமே விசுவாசம் கொண்டவர்களாக இருக்க முடியுமா? உங்களிடமிருந்து வெளிப்படுவது தங்கள் பெற்றோரிடமிருந்து விலகிச் சென்ற பிள்ளைகளின் குறும்புத்தனம் அல்ல, ஆனால் அது எஜமானர்களின் சவுக்குகளை அடைய முடியாத விலங்குகளிடமிருந்து வெளிப்படும் மிருகத்தன்மையாக இருக்கிறது. நீங்கள் உங்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், இதுவும் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் பலவீனமாக உள்ளது; இது உங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வியாதியாக உள்ளது. ஆகவே, இன்று நான் உங்களுக்கு அளிக்கும் ஒரே புத்திமதி என்னவென்றால், எனக்கு நீங்கள் அளித்த சாட்சியத்தில் உறுதியாக நிற்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், பழைய வியாதியை மீண்டும் வெளி வர அனுமதிக்க வேண்டாம். சாட்சியத்தை ஏற்பது மிக முக்கியமானதாக உள்ளது—இது எனது கிரியையின் இருதயமாகும். ஒரு சொப்பனத்தில் தனக்கு வந்த யேகோவாவின் வெளிப்பாட்டை மரியாள் ஏற்றுக்கொண்டது போல நீங்களும் எனது வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் கீழ்ப்படிதலினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மட்டுமே பரிச்சுத்தமானது என்ற தகுதியைப் பெறுகிறது. என் வார்த்தைகளை அதிகம் கேட்கும் நீங்கள் என்னால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என் விலையேறப்பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ளீர்கள்; நீங்கள் சாதாரணமாகவே ஒருவருக்கொருவர் வேறுபட்டு உள்ளீர்கள். ஆனால் அவர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பெற்றுள்ளீர்கள்; அவர்கள் என் பிரசன்னத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும்போது, நீங்கள் என்னுடன் இனிமையான நாட்களைக் கழித்து, என் நன்மையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, என்னோடு கத்தி வீண்சண்டையிடுவதற்கும், என் சொத்துக்ககளில் உங்கள் பங்கைக் கோருவதற்கும் உங்களுக்கு எது உரிமை கொடுக்கிறது? நீங்கள் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லையா? நான் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகத் தருகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு மனதை உருக்கும் துக்கத்தையும் மற்றும் சஞ்சலத்தையும், அடக்கமுடியாத கோபத்தையும் மற்றும் அதிருப்தியையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் முரண்பட்டவர்கள்—ஆனாலும் நீங்களும் பரிதாபகரமானவர்கள், அதனால் எனது அதிருப்தியை உட்கிரகித்துக்கொண்டு, என்னுடைய எதிர்ப்புகளை உங்களிடம் திரும்பத் திரும்ப சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகால கிரியைகளில், நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஏனென்றால் மனிதகுலத்தின் வளர்ச்சியையே முழுவதும் கண்டறியப் பெற்றேன், பழங்காலத்தின் புகழ்பெற்ற மூதாதையர்களால் உங்களுக்கு எஞ்சியிருக்கும் விலைமதிப்பற்ற பரம்பரைச் சொத்துக்களைப் போல, உங்களிடையே உள்ள “புரளிகள்” மட்டுமே மிகவும் புகழ்பெற்றவையாக மாறிப்போயுள்ளன. அந்த மனிதநேயமற்ற பன்றிகளையும் நாய்களையும் எப்படி நான் வெறுக்கிறேன். உங்கள் மனசாட்சியில் அதிக குறைபாடு உள்ளது! நீங்கள் ஒரு பழமைவாதி! உங்கள் இருதயங்கள் மிகவும் கடுமையானவை! நான் இத்தகைய வார்த்தைகளை எடுத்து இஸ்ரவேல் புத்திரரிடம் கிரியைப் புரிந்திருந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே மகிமை அடைந்திருப்பேன். ஆனால் உங்கள் நடுவில் இதனை அடைய முடியாததாக இருக்கிறது; உங்கள் நடுவில், தயவற்ற அலட்சியமும், உங்கள் புறக்கணிப்பும் மற்றும் உங்கள் சாக்குபோக்குகளும் மட்டுமே உள்ளன. நீங்கள் மிகவும் உணர்ச்சியற்றவராக, முற்றிலும் மதிப்பற்றவராக இருக்கிறீர்கள்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 324

இப்போது நீங்கள் அனைவரும் தேவன் மீதான விசுவாசத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு நான் பேசிய தேவன் மீதான விசுவாசத்தின் அர்த்தமானது உங்கள் நேர்மறையான துவக்கத்துடன் தொடர்புடையதாகும். இன்று வித்தியாசமானதாக இருக்கிறது. இன்று தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் அர்த்தம் என்னவென்று ஒரு பகுப்பாய்வு செய்யப்போகிறேன். நிச்சயமாகவே இது உங்களை எதிர்மறையான கருத்துகளில் இருந்து விலக்கி வழிநடத்தும். இதை நான் செய்யவில்லையென்றால் நீங்கள் உங்களுடைய உண்மையான சுயரூபத்தை அறியாமல், எக்காலத்திலும் உங்களுடைய பக்தியைக் குறித்தும் விசுவாசத்தைக் குறித்தும் மேன்மை பாராட்டிக்கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ள அருவருப்பை நான் எடுத்து கூறவில்லையென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு எல்லா மகிமையையும் நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் என்று சொல்வது நியாயமானதாக இருக்கும். உங்களுடைய ஆணவம், இறுமாப்பான சுபாவங்களினால் உந்தப்பட்டு உங்களுடைய சொந்த மனசாட்சியை மறுதலித்து, கிறிஸ்துவுக்கு விரோதமாக கலகம் செய்து, அவரை எதிர்த்து, உங்கள் அவல நிலையை வெளிப்படுத்துகிறீர்கள், இதன் மூலம் உங்கள் உள்நோக்கங்கள், எண்ணங்கள், களியாட்ட வாஞ்சைகள், பேராசை மயக்கம் ஆகியவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இன்னமும் கிறிஸ்துவின் கிரியையைக் குறித்த உங்கள் நீண்ட கால உணர்வுகளைப் பற்றியே பிதற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்; மேலும் கிறிஸ்து நீண்ட காலங்களுக்கு முன்பு பேசிய சத்தியங்களையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் பரிசுத்தமில்லாத உங்கள் விசுவாசம். நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தை தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகத்துதிகளை பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன். விசுவாசம் என்று வரும்போது அநேகர் தங்களுக்கு விசுவாசம் இருப்பதால் தாங்கள் தேவனை பின்பற்றுகிறோம் என்று எண்ணுகிறார்கள், மற்றபடி இதுபோன்ற துன்பங்களை சகித்துக்கொள்ள மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவன் உண்டென்று நம்புவீர்களானால் ஏன் அவரை தொழுதுகொள்ளுகிறது இல்லை? ஏன் அவரைப் பற்றி சிறிதளவு பயம் உங்கள் இருதயத்தில் இருப்பதில்லை? நீங்கள் கிறிஸ்துவை மனித அவதாரம் எடுத்த தேவன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் அவரை அவமதிக்கிறீர்கள்? நீகள் ஏன் அவரிடம் அவபக்த்தியுடன் நடந்துகொள்ளுகிறீர்கள்? நீங்கள் ஏன் வெளிப்படையாக அவரை நியாயம் தீர்க்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் அவருடைய திட்டங்களுக்கு ஒப்புக்கொடுப்பதில்லை? ஏன் அவருடைய வார்த்தைகளின்படி செயல்படுவதில்லை? ஏன் அவருடைய காணிக்கைகளை கொள்ளையடித்து பறித்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்? ஏன் கிறிஸ்துவின் ஸ்தானத்திலிருந்து பேச வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? அவருடைய கிரியைகளும் வார்த்தைகளும் சரியானதுதானா என்று ஏன் நியாயம் தீர்க்கப் பார்க்கிறீர்கள்? அவருக்கு பின்னால் ஏன் தைரியமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்? இவைகளும் இன்னும் மற்றவைகளும்தான் உங்களுடைய விசுவாசத்தை கட்டி எழுப்புகின்றனவா? என்ற கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடைய வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் கிறிஸ்துவின் மீதுள்ள அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகள் மட்டுமே வெளிப்படுகின்றன. நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் உள்ள உள்நோக்கத்திலும் குறிக்கோள்களிலும் உங்களுடைய அவிசுவாசமே வெளிப்படுகிறது. உங்களுடைய கூர்மையான பார்வையின் தன்மையில் கிறிஸ்துவின்மீதுள்ள அவிசுவாசமே இருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு நிமிடமும் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளை பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு வினாடியும் நீங்கள் கிறிஸ்துவை மறுதலிக்கும் ஆபத்தில் இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்களுடைய உடம்பில் ஓடும் இரத்தம் மானிட உருவெடுத்து வந்த கிறிஸ்துவின் மீது அவிசுவாசத்தினாலே நிரம்பியுள்ளது. ஆகவே தேவன் மீது கொண்டுள்ள விசுவாசப் பாதையில் நீங்கள் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகள் நிஜமானவை அல்ல என்று சொல்கிறேன். நீங்கள் தேவன் மீதான விசுவாச பாதையில் நடந்தாலும், உங்களுடைய பாதங்களை தரையில் உறுதியாகப் பதிக்கவில்லை. நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை ஒருபோதும் முழுமையாக விசுவாசிப்பதில்லை மற்றும் அதை உடனடியாக அப்பியாசிக்க முடியாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு கிறிஸ்துவின் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. எப்போதும் கிறிஸ்துவைக் குறித்து கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள், இதுவே உங்களுக்கு அவர் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கான மற்றொரு காரணமாகும். கிறிஸ்துவின் கிரியையைக் குறித்து எப்போதும் சந்தேகத்துடன் இருப்பது, செவிடனின் காதில் கிறிஸ்துவின் வார்த்தைகளை புகுத்துவது, கிறிஸ்துவால் செய்யப்பட்ட எந்த கிரியையாக இருப்பினும் அது குறித்து கருத்துக் கூறுவது, இந்த கிரியையை சரியாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பது, என்ன விளக்கங்களை கேட்டாலும் உங்களுடைய கருத்தை புறம்பே தள்ள சிரமப்படுவது மற்றும் இதுபோன்ற காரியங்கள் எல்லாம் உங்களுடைய இருதயத்தில் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளாக கலந்து இருக்கின்றன. நீங்கள் கிறிஸ்துவின் கிரியையைப் பின்பற்றி, ஒருபோதும் பின்னாக விழுந்துபோகாமல் இருந்தாலும், அதிகமான கலகக் குணம் உங்கள் இருதயத்தில் கலந்து இருக்கிறது. இந்த கலகக் குணமே தேவன் மீதான உங்கள் விசுவாசத்திலுள்ள பரிசுத்தமற்றதன்மையாகும். ஒருவேளை நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்கலாம், ஆனால் இதனுள் உள்ள உங்கள் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பீர்களேயானால், நீங்கள் அழிவுக்கான மக்களில் ஒருவராக இருக்கிறீர்கள், ஏனென்றால் தேவன் அவர்மீது சந்தேகம் கொண்டவர்களையோ, அவரை தேவன் என்று ஒருபோதும் விசுவாசியாமல் அவரை ஆர்வமில்லாமல் பின்தொடர்கிறவர்களையோ அல்ல, அவரை உண்மையாய் விசுவாசிக்கிறவர்களை மட்டுமே அவர் பரிபூரணப்படுத்துகிறார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 325

ஒருசில மக்கள் சத்தியத்தைக் குறித்தோ, நியாயத்தீர்ப்பைக்குறித்தோ சிறிதளவேனும் மகிழ்ச்சியடைவதில்லை. அதற்கு மாறாக அதிகாரத்திலும் ஐசுவரியத்திலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுபோன்ற மக்கள் அதிகாரத்தை நாடித் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தில் உள்ள செல்வாக்கான சபைகளையே தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் வேதாகமக் கல்லூரிகளிலிருந்து வரும் போதகர்களையும் ஆசிரியர்களையும் மட்டுமே தேடி அலைந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் சத்தியத்தின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதியளவு விசுவாசம் உடையவர்களாவர். அவர்கள் தங்கள் மனதையும் இருதயத்தையும் முழுவதுமாக கொடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாய் தேவனுக்கென்று பயன்படுத்தப்படும் என்று கூறும், ஆனால் அவர்கள் பிரபலமான போதகர்களையும் ஆசிரியர்களையும் கவனித்துக்கொண்டு இருப்பார்கள், மேலும் அவர்கள் கிறிஸ்துவை இரண்டாம் ஸ்தானத்திலும் வைப்பதில்லை. அவர்களின் இருதயம் புகழ்ச்சியின்மீதும் சந்தர்பங்களின்மீதும் மேன்மையின்மீதும் நிலைத்து இருக்கும். இதுபோன்ற அற்பமான மனிதனால் அநேக மக்களை மேற்கொள்ள சாத்தியமில்லை என்றும், ஆர்வமில்லாத நபரால் மனிதனை பரிபூரணமாக்க சாத்தியமில்லை என்றும் எண்ணுகிறார்கள். புழுதியின்மீதும் குப்பைமீதும் இருக்கும் அற்பமான மனிதர்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களாக இருக்க சாத்தியமில்லை என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தேவனுடைய இரட்சிப்பின் இலக்குகளாக இருந்தார்களானால், வானமும் பூமியும் தலைகீழாகிவிடும் என்றும், எல்லா மனிதர்களும் இத்தகையோரைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒன்றுமில்லாதவர்களை தேவன் பரிபூரணப்படுத்த தெரிந்துகொண்டார் என்றால், இந்த சிறந்த மனிதர்கள் தேவனாகவே மாறிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இவர்களுடைய கண்ணோட்டங்கள் அவிசுவாசத்தினால் கறைபடிந்து விட்டது. அவிசுவாசத்திற்கு அப்பால் இவர்கள் ஒரு மதிகெட்ட மிருகங்கள் ஆவார்கள். அவர்கள் தகுதி, அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்கள் பெரிய கூட்டங்களையும் சபை பிரிவுகளையும் மட்டுமே மதிக்கிறார்கள். கிறிஸ்துவினால் வழி நடத்தப்படுபவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கிறிஸ்துவுக்கும், சத்தியத்திற்கும், ஜீவனுக்கும் தங்கள் புறமுதுகைக் காட்டுகிற துரோகிகளாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் போற்றுவது கிறிஸ்துவின் தாழ்மையை அல்ல, மாறாக முக்கிய நிலையில் காணப்படும் அந்த கள்ள போதகர்களையே போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் அன்பையோ அல்லது ஞானத்தையோ ஆராதிக்கவில்லை. ஆனால் இவுலகின் அழுக்கில் புரண்டுக்கொண்டு இருக்கும் தன்னிச்சை பிரியர்களையே ஆராதிக்கிறீர்கள். நீங்கள் தலை சாய்க்க இடமில்லாத கிறிஸ்துவின் வேதனையைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த காணிக்கைகளை வஞ்சிக்க தேடி அலைந்து ஒழுக்கக் கேட்டில் வாழும் பிணங்களைப் போற்றுறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதை விரும்பவில்லை; ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் உங்களுக்கு மாம்சத்தையும், வார்த்தைகளையும், கட்டுப்பாட்டையும் மட்டுமே கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷமாக அந்த பொறுப்பற்ற அந்திகிறிஸ்துவின் கரங்களிலேயே உங்களை ஒப்புக்கொடுக்கின்றீர்கள். இப்போதும்கூட உங்கள் இருதயம் இன்னும் அவர்களுக்கு நேராகவும் அவர்களுடைய பெயர்புகழ், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவைகளின் பக்கமாகவும் திரும்புகிறது. இருந்தாலும் நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமானது என்றும், இதைச் செய்ய விருப்பம் இல்லை என்ற ஒரு எண்ணத்தையும் உடையவராக இருக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறுகிறேன். இந்த நாட்களில் உங்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் அவரை பின்பற்றுகிறீர்கள். மிகவும் பிரபலமானவர்களின் உருவங்கள் உங்கள் இருதயத்தில் குவிந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும், கிரியைகளையும் அல்லது அவர்களது செல்வாக்கான வார்த்தைகளையும், கரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்கள் உங்களுடைய இருதயத்தில் எக்காலத்திலும் உயர்வானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்துவுக்கு அவ்வாறு இடமளிக்கப்படவில்லை. அவர் உங்களுடைய இருதயத்தில் முக்கியமற்றவராக ஆராதிக்க தகுதியற்றவராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரணமானவராகவும், குறைந்த செல்வாக்கு உள்ளவராகவும், உயர்வற்றவராகவும் இருக்கின்றார்.

எந்த நிலையிலும் சத்தியத்தை மதிக்காதவர்கள் சத்தியத்திற்கு அவிசுவாசிகளாகவும் துரோகிகளாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்துவின் அங்கீகாரத்தை பெறமுடியாது. இப்போது உங்களுக்குள் எந்த அளவிற்கு அவிசுவாசமும், கிறிஸ்துவை மறுதலித்தலும் இருக்கிறது என்று காண முடிகிறதா? நீங்கள் சத்தியத்தின் வழியைத் தெரிந்துகொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சேவிக்க வேண்டும்; தெளிவற்றவர்களாகவும், அரை மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டாம் என்று நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவன் இந்த உலகத்திற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் யாரெல்லாம் உண்மையாக அவரை விசுவாசிக்கிறார்களோ, அவரைத் தொழுது கொள்ளுகிறார்களோ, பக்தியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கே உரியவர்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 326

தங்கள் விசுவாசத்தில், தேவன் அவர்களுக்கு ஒரு பொருத்தமான சென்றடையும் இடத்தையும் அவர்களுக்குத் தேவையான எல்லா கிருபையையும் அளிப்பதையும், அவரைத் தங்கள் ஊழியக்காரராக மாற்றவும், எந்தச் சூழலிலும் தங்களுக்கு இடையில் ஒருபோதும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாத வண்ணம் அவர்களோடு அவர் ஒரு சமாதானமான, நட்புரீதியான உறவைப் பேணுவதையும் ஜனங்கள் நாடுகிறார்கள். அதாவது, வேதாகமத்தில் அவர்கள் வாசித்திருக்கும், “நான் உங்கள் எல்லா விண்ணப்பங்களுக்கும் செவிகொடுப்பேன்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அவர் அவர்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்கும் வாக்குத்தத்தம் அளித்து அவர்கள் எதற்காகவெல்லாம் ஜெபிக்கிறார்களோ அவற்றை எல்லாம் தந்தருளுவதே தேவனிடம் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம் கோருகிறது. அவர்கள் தேவன் யாரையும் நியாயந்தீர்க்கவோ அல்லது தண்டிக்கவோ கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அவர் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நல்ல உறவைப் பேணும், எப்போதும் இரக்கம் உள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாக எப்போதும் இருக்கிறார். தேவனை ஜனங்கள் விசுவாசிக்கும் விதம் இதுவே: தாங்கள் கலகக்காரர்களாக அல்லது கீழ்ப்படிகிறவர்களாக இருந்தாலும் அவர் கண்மூடித்தனமாக அவர்களுக்கு எல்லாவற்றையும் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வெட்கம் இல்லாமல் தேவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அவர் தங்களுக்கு எந்தத் தடையும் இன்றி அதுவும் இரட்டத்தனையாக “திருப்பிச் செலுத்த” வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் தொடர்ந்து தேவனிடம் இருந்து “கடன்களை வசூலிக்கிறார்கள்”; அவர்கள் நினைக்கிறார்கள், தேவன் அவர்களிடம் இருந்து எதையும் பெற்றாரோ இல்லையோ, அவர் அவர்களால் ஏமாற்றப்பட மட்டுமே முடியும், மற்றும் அவரால் ஜனங்களைத் தன்னிச்சையாகத் திட்டமிட்டுக் கையாள முடியாது, அதைவிட, பல ஆண்டுகளாக மறைந்திருக்கும் அவரது ஞானத்தையும் நீதியான மனநிலையையும் தாம் விரும்பும் போதெல்லாம் அவர்களுடைய அனுமதி இல்லாமல் ஜனங்களிடம் வெளிப்படுத்த முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேவன் அப்படியே விடுவித்துவிடுவார், அவ்வாறு செய்வதில் அவர் வெறுப்படைய மாட்டார், மற்றும் இது என்றென்றும் இப்படியே தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் வெறுமனே தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுகிறார்கள். தேவன் ஊழியம் கொள்ளும்படி வராமல், மனிதர்களுக்கு ஊழியம் செய்யவே வந்தார், மற்றும் அவர் இங்கே அவர்களது ஊழியக்காரராக இருக்கிறார் என்று வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் அவர்களுக்கு சும்மா கீழ்ப்படிவார் என்று நம்பி அவர்கள் தேவனுக்கு வெறுமனே உத்தரவிடுகிறார்கள். எப்போதும் நீங்கள் இந்த வகையிலேயே நம்பிவிட்டீர்கள் அல்லவா? எப்போதெல்லாம் உங்களுக்கு தேவனிடத்தில் இருந்து ஏதாவது ஒன்றைப் பெற முடியாவிட்டால், நீங்கள் ஓடிவிட விரும்புகிறீர்கள்; ஏதாவது ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் மனக்கசப்பு அடைகிறீர்கள், மற்றும் அவருக்கு எதிராக எல்லா வகையான நிந்தனைகளையும் வீசும் அளவுக்குப் போகிறீர்கள். நீங்கள் தேவன் தமது ஞானத்தையும் அற்புதத்தையும் முழுமையாக வெளிப்படுத்தக் கூட அனுமதிப்பதில்லை; பதிலாக, தற்காலிகமான தொல்லைகள் அற்ற ஆறுதலை அனுபவிக்க மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள். இப்போது வரை, தேவனை விசுவாசிப்பதில் உங்கள் சிந்தை அதே பழைய பார்வைகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. தேவன் சிறிதளவு தம் மகத்துவத்தைக் காட்டினாலே, நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள். உங்கள் வளர்ச்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று இப்போது நீங்கள் பார்க்கிறீர்களா? உண்மையில் உங்கள் பழைய பார்வைகள் மாறாமல் இருக்கும்போது நீங்கள் எல்லோரும் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதாக கருதாதீர்கள். உனக்கு ஒன்றும் நேரிடாதபோது, நீ எல்லாம் சீராகச் செல்வதாக நம்புகிறாய், மேலும் தேவனிடத்தில் உன் அன்பு உச்சத்தை எட்டுகிறது. ஏதாவது சிறிய அளவில் நேர்ந்தால், நீ பாதாளத்தில் விழுந்து விடுகிறாய். இதுதான் தேவனுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பதா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 328

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்: தேவனை விசுவாசிப்பவர்கள் தங்கள் காரியங்களைக் கையாளும் முறை இதுதான். உங்களால் தேவனை திருப்திப்படுத்த முடியும் என்பதாலும், தேவனின் விசாரிப்பையும், பாதுகாப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதாலும், நீங்கள் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவீர்கள். தேவனின் பார்வையில், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிபூரணம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டவர்கள், அவரால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே நீதிமான்கள், அவர்கள் அனைவரையுமே அவர் விலையேறப்பெற்றவர்களாகக் கருதுகிறார். தேவனின் தற்போதைய வார்த்தைகளை நீங்கள் எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனின் சித்தத்தைப் பெறவும், புரிந்துகொள்ளவும் முடியும், மேலும் நீங்கள் இன்னும் அதிகமாக தேவனின் வார்த்தைகளை நிறைவேற்றவும் அவருடைய தேவைகளை திருப்தி செய்யவும் முடியும். இதுதான் உங்களுக்கான தேவனின் கட்டளை, மற்றும் இதை நீங்கள் அனைவரும் அடைய முடிய வேண்டும். தேவன் அசையாத களிமண் சிலையாக இருக்கிறார் என்பது போல அவரை மதிப்பிடவும் வரையறுக்கவும் உங்கள் சொந்தக் கருத்துகளைப் பயன்படுத்தினால், நீங்கள் வேதாகமத்தின் எல்லைக்குள் தேவனை முழுவதுமாக வரையறுத்து, ஒரு குறிப்பிட்ட வேலை வரம்பிற்குள் அவரை அடக்கி வைத்தால், நீங்கள் தேவனை நிந்திக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த யூதர்கள், தேவனை அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் ஓர் உருமாறாத சிலையாக வைத்திருந்தார்கள், தேவனை மேசியா என்று மட்டுமே அழைக்க முடியும், மேசியா என்று அழைக்கப்படுபவர் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்றும், தேவனை ஒரு (உயிரற்ற) களிமண் சிலை போல கருதி அவருக்கு மனிதகுலம் ஊழியம் செய்து வணங்கியதால், அவர்கள் அந்தக் காலத்தில் வந்த இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள், அவருக்கு மரண தண்டனை அளித்தார்கள். குற்றமற்ற இயேசு இவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவொரு குற்றத்திற்கும் தேவன் பாத்திரமற்றவர், ஆனாலும் மனுஷன் அவரைக் காப்பாற்ற மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி வற்புறுத்தினான், அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். தேவன் எப்போதும் மாறாதவர் என்று மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான், வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அவரை வரையறுக்கிறான், தேவனின் ஆளுகையைப் பற்றி மனுஷனுக்கு ஒரு முழுமையான புரிதல் இருப்பதைப் போலவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் மனுஷன் தன் உள்ளங்கையில் வைத்திருப்பதைப் போலவும் விசுவாசிக்கிறான். ஜனங்கள் மிகவும் புத்தியீனமானவர்கள், மிகவும் ஆணவக்காரர்கள், அவர்கள் அனைவருக்கும் மிகைப்படுத்திக் கூறும் ஒரு இயல்பான திறமை உள்ளது. தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தேவனை அறியவில்லை என்றும், நீங்கள் தேவனை மிகவும் எதிர்க்கும் ஒருவர் என்றும், தேவனை நிந்திக்கிறீர்கள் என்றும் நான் இன்னும் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் தேவனின் செயலுக்குக் கீழ்ப்படிந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட பாதையில் நடக்கவும் முற்றிலும் திரணியில்லாதவர்கள். மனுஷனின் செயல்களில் தேவன் ஏன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை? ஏனென்றால், மனுஷனுக்கு தேவனைத் தெரியாது, ஏனென்றால் அவனுக்குப் பல கருத்துகள் உள்ளன, மேலும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு எந்த வகையிலும் யதார்த்தத்துடன் உடன்படவில்லை, மாறாக, ஒரே கருத்தை ஒரே மாதிரியாக மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் சொல்கிறான், மேலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்துகிறான். எனவே, தேவன் இன்று பூமிக்கு வந்தால், மீண்டுமொருமுறை மனிதனால் சிலுவையில் அறையப்படுவார். என்ன ஒரு கொடூரமான மனிதகுலம்! சதிக்கு உடந்தையாயிருத்தல் மற்றும் சூழ்ச்சி, ஒருவரிடமிருந்து ஒருவர் அபகரித்துக்கொள்ளுதல் மற்றும் பிடுங்குதல், புகழ் மற்றும் அதிர்ஷ்டத்திற்கான போராட்டம், பரஸ்பரப் படுகொலை ஆகியவை எப்போது முடிவுக்கு வரும்? தேவன் பேசிய நூறாயிரக்கணக்கான வார்த்தைகள் இருந்தபோதிலும், யாரும் அவர்களின் உணர்வுக்கு வரவில்லை. ஜனங்கள் தங்கள் குடும்பங்கள், மகன்கள் மற்றும் மகள்களுக்காக, தங்கள் தொழில், எதிர்கால வாய்ப்புகள், பதவி, வீண்புகழ்ச்சி மற்றும் பணம் ஆகியவற்றிற்காகவும், உணவு, உடை மற்றும் மாம்சம் ஆகியவற்றிற்காகவும் செயல்படுகிறார்கள். ஆனால், தேவனுக்காக உண்மையிலேயே எவருடைய செயல்களும் உள்ளனவா? தேவனுக்காக செயல்படுபவர்களில் கூட, தேவனை அறிந்தவர்கள் மிகக் குறைவு. எத்தனை பேர் தங்கள் சொந்த நலன்களுக்காகச் செயல்படவில்லை? தங்கள் சொந்த அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை பேர் மற்றவர்களை ஒடுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை? ஆகவே, எண்ணத்தகாத முறையில் தேவன் பலவந்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார், எண்ணற்ற காட்டுமிராண்டித்தனமான நீதிபதிகள் தேவனை குற்றப்படுத்தி அவரை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள். தேவன் நிமித்தம் உண்மையிலேயே செயல்படுவதால் எத்தனை பேர் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவார்கள்?

ஒரு பரிசுத்தவானாக அல்லது நீதிமானாக தேவனுக்கு முன்பாகப் பரிபூரணமாக இருப்பது அவ்வளவு எளிதானதா? “இந்தப் பூமியில் நீதிமான்கள் இல்லை, நீதிமான்கள் இந்த உலகில் இல்லை” என்பது ஒரு உண்மையான கூற்று. நீங்கள் தேவனுக்கு முன்பாக வரும்போது, நீங்கள் அணிந்திருப்பதைக் கவனியுங்கள், உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும், செயலையும் கவனியுங்கள், உங்கள் ஒவ்வொரு சிந்தனையையும், யோசனையையும் கவனியுங்கள், ஒவ்வொரு நாளும் நீங்கள் கனவு காணும் கனவுகளை கவனியுங்கள்—அவை அனைத்தும் உங்கள் சுயத்திற்காகவே. இது காரியங்களின் உண்மையான நிலை அல்லவா? “நீதி” என்றால் மற்றவர்களுக்கு தர்மம் செய்வது என்று அர்த்தமல்ல. உங்களைப் போல் பிறனை அன்புகூறுவது என்று அர்த்தமல்ல, மேலும் சண்டைகள் மற்றும் தகராறுகள் அல்லது கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடாமல் விலகியிருப்பது என்று அர்த்தமல்ல. நீதி என்றால் கர்த்தராகிய இயேசு செய்த எல்லாவற்றையும் போலவே, நேரத்தையும் இடத்தையும் பொருட்படுத்தாமல் தேவனின் கட்டளையை உங்கள் கடமையாக எடுத்துக்கொள்வதும், தேவனின் ஒழுங்கையும், ஏற்பாடுகளையும் பரலோகத்திலிருந்து அருளப்பட்ட உங்கள் தொழிலாகக் கடைப்பிடிப்பதுமாகும். தேவன் பேசிய நீதி இதுவே. லோத்து நீதிமான் என்று அழைக்கப்படலாம், ஏனென்றால் தேவன் அனுப்பிய இரண்டு தேவதூதர்களையும் அவன் தனது சொந்த ஆதாயத்தையும், இழப்பையும் கருத்தில் கொள்ளாமல் காப்பாற்றினான்; அந்த நேரத்தில் அவன் செய்ததை நீதியானது என்று அழைக்கலாம், ஆனால் அவனை நீதிமான் என்று அழைக்க முடியாது. லோத்து தேவனைக் கண்டதால் தான், தேவதூதர்களுக்கு ஈடாக தனது இரண்டு மகள்களையும் கொடுத்தான், ஆனால் அவன் கடந்த காலத்தில் கொண்டிருந்த நடத்தைகள் அனைத்தும் நீதியைக் கொண்டிருக்கவில்லை. எனவே நான் சொல்கிறேன் “இந்தப் பூமியில் நீதிமான்கள் இல்லை.” மீட்பின் பாதையில் இருப்பவர்களிடையே கூட, யாரையும் நீதிமான்கள் என்று அழைக்க முடியாது. உங்கள் செயல்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், தேவனின் பெயரை மகிமைப்படுத்த நீங்கள் எப்படித் தோன்றினாலும், மற்றவர்களை அடிப்பதோ, சபிப்பதோ இல்லை என்றாலும், மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதும், திருடுவதும் இல்லை என்றாலும், உங்களை இன்னும் நீதிமான்கள் என்று அழைக்க முடியாது, ஒரு சாதாரண மனுஷன் கொண்டிருக்கும் திறன் இதுதான். இப்போது முக்கியமானது என்னவென்றால், நீங்கள் தேவனை அறியவில்லை. தற்போது உங்களிடம் சாதாரண மனிதநேயம் கொஞ்சம் இருக்கிறது என்று மட்டுமே கூற முடியும், ஆனால் தேவன் கூறும் நீதியின் எந்த அம்சங்களும் இல்லை, எனவே நீங்கள் செய்யும் எதுவும் தேவனை நீங்கள் அறிவீர்கள் என்பதை நிரூபிக்க இயலாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “துன்மார்க்கன் நிச்சயமாக தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 329

இதற்கு முன்பு, தேவன் பரலோகத்தில் வீற்றிருந்தபோது, மனுஷன் தேவனை வஞ்சிக்கும் விதத்தில் செயல்பட்டான். இன்று, தேவன் மனுஷர்களிடையே இருக்கிறார்—எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பது யாருக்கும் தெரியாது—ஆனாலும் காரியங்களைச் செய்வதில் மனுஷன் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறான் மற்றும் அவரை முட்டாளாக்க முயற்சிக்கிறான். மனுஷன் தன் சிந்தனையில் மிகவும் பின்தங்கியவனல்லவா? யூதாஸிடமும் அப்படித்தான் இருந்தது: இயேசு வருவதற்கு முன்பு, யூதாஸ் தன் சகோதர சகோதரிகளை பொய்களைச் சொல்லி வஞ்சித்து வந்தான், இயேசு வந்த பிறகும் அவன் மாறவில்லை; அவன் இயேசுவை அறிந்திருக்கவில்லை, இறுதியில் அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இது அவன் தேவனை அறியாததால் அல்லவா? இன்று, நீங்கள் இன்னும் தேவனை அறியவில்லை என்றால், நீங்கள் மற்றொரு யூதாஸாக மாற வாய்ப்புள்ளது, இதைத் தொடர்ந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருபையின் காலத்தில் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட பெருந்துயரம் மீண்டும் நடைபெறும். இதை நீங்கள் நம்பவில்லையா? இது ஒரு உண்மை! தற்போது, பெரும்பான்மையான ஜனங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ளனர். இதை நான் கொஞ்சம் விரைவில் சொல்லிக்கொண்டிருக்கலாம். அத்தகையவர்கள் அனைவரும் யூதாஸின் பாத்திரத்தை நடிக்கின்றனர். நான் முட்டாள்தனமானவற்றைப் பேசவில்லை, ஆனால் உண்மையின் அடிப்படையில் பேசுகிறேன். உங்களால் முடியாது, ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் பலர் மனத்தாழ்மையாக இருப்பதாக பாசாங்கு செய்தாலும், அவர்களின் இருதயங்களில் பயனற்ற நீர் திரள் கொண்டிருக்கும், அது துர்நாற்றம் வீசும் நீரைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது தேவாலயத்தில் இதுபோன்றவர்கள் பலர் உள்ளனர், இது எனக்கு முற்றிலும் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இன்று, என் ஆவி எனக்காக தீர்மானிக்கிறது, எனக்காக சாட்சியம் அளிக்கிறது. எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் மோசமான எண்ணங்கள், உங்கள் இருதயங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் விஷயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? தேவனிடமிருந்து சிறந்ததைப் பெறுவது அவ்வளவு எளிதானதா? நீங்கள் விரும்பும் விதத்தில் அவரை நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த காலத்தில், நீங்கள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க நான் கவலைப்பட்டேன், எனவே நான் உங்களுக்கு சுதந்திரம் அளித்துக்கொண்டே இருந்தேன், ஆனால் நான் அவர்களுக்கு நல்லவராக இருக்கிறேன் என்று மனுக்குலத்தால் சொல்ல முடியவில்லை, நான் ஒரு அங்குலம் கொடுத்தபோது அவர்கள் ஒரு முழத்தை எடுத்துக்கொண்டார்கள். உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்: நான் கிட்டத்தட்ட யாரையும் ஒருபோதும் கையாண்டதில்லை, யாரையும் லேசாக கண்டித்ததில்லை, ஆனாலும் மனுஷனின் உள்நோக்கங்கள் மற்றும் கருத்துகள் குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். தேவனைக் குறித்து சாட்சியம் அளிக்கும் தேவன் ஒரு முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த விஷயத்தில், நீங்கள் பெரிய குருடர் என்று நான் சொல்கிறேன்! நான் உங்களை அம்பலப்படுத்த மாட்டேன், ஆனால் நீங்கள் எவ்வளவு துன்மார்க்கம் நிறைந்தவராவீர்கள் என்று பார்ப்போம். உங்கள் புத்திசாலித்தனமான சிறிய உத்திகள் உங்களை காப்பாற்ற முடியுமா, அல்லது தேவனை நேசிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்தாலும், உங்களைக் காப்பாற்ற முடியுமா என்பதைப் பார்ப்போம். இன்று, நான் உங்களைக் கண்டிக்க மாட்டேன்; தேவனுடைய காலத்தில், அவர் உங்கள்மீது எவ்வாறு பழிவாங்குவார் என்பதைப் பார்ப்போம். உங்களுடன் இப்போது சும்மா வீண் அரட்டை செய்ய எனக்கு நேரமில்லை. மேலும் எனது பெரிய ஊழியத்தை உங்கள் நிமித்தம் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. உங்களைப் போன்ற ஒரு புழுவைக் கையாள தேவன் நேரத்தை செலவிடுவதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. எனவே நீங்கள் எவ்வளவு நெறிதவறிப் போவீர்கள் என்பதைப் பார்ப்போம். இதுபோன்றவர்கள் தேவனைப் பற்றிய அறிவைச் சிறிதளவும் பின்பற்றுவதில்லை, அவர் மீது சிறிதளவும் அன்பு கொண்டிருக்கவில்லை, இன்னும் தேவன் அவர்களை நீதிமான்கள் என்று அழைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், இது நகைச்சுவையல்லவா? ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்பதால், நான் தொடர்ந்து மனுஷனுக்கு வாழ்க்கை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இன்று நான் செய்து முடிக்க வேண்டியதை மட்டுமே நான் செய்து முடிப்பேன், ஆனால் எதிர்காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் செய்ததைப் பொறுத்து நான் தகுந்த தண்டனையைக் கொண்டுவருவேன். நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன், ஏனென்றால் இது துல்லியமாக நான் செய்யும் செயல். நான் செய்யக்கூடாததை அல்ல, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே செய்கிறேன். ஆயினும்கூட, நீங்கள் பிரதிபலிபலனாக அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்: தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு உண்மை? நீங்கள் தேவனை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறையும் ஒருவரா? என் இறுதி வார்த்தைகள் இதுவே: தேவனைச் சிலுவையில் அறைகிறவர்களுக்கு ஐயோ!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “துன்மார்க்கன் நிச்சயமாக தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 332

இப்போது நீங்கள் உயிர்வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமானதாகும், இது உங்கள் இலக்குக்கும் உங்கள் விதிக்கும் மிகவும் முக்கியமானதாகும், எனவே இன்று உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்க வேண்டும், மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்தையும் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். நீங்கள் இந்த வாழ்க்கையை வீணாக வாழ்ந்திருக்காத விதத்தில், உங்களால் முடிந்தவரை அதிக ஆதாயங்களைப் பெறும் விதத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவழித்து உங்களை செதுக்கவேண்டும். நான் ஏன் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசுகிறேன் என்று நீங்கள் குழப்பமடையலாம். வெளிப்படையாகச் சொல்வதானால், உங்கள் யாருடைய நடத்தையிலும் எனக்கு சிறிதளவும் மகிழ்ச்சியில்லை, ஏனென்றால் உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைகள் இன்று நீங்கள் இருப்பது போல இல்லை. அதனால்தான், நான் இப்படிச் சொல்கிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள், உங்கள் கடந்த காலம் உதவிக்காக கண்ணீர் வடிக்கிறது, மேலும் சத்தியத்தைத் தொடர்வதற்கான மற்றும் வெளிச்சத்தைத் தேடுவதற்கான முன்னாள் இலக்குகள் அவற்றின் முடிவை நெருங்குகின்றன. இதுதான் உங்கள் கைமாறின் இறுதி காட்சி, இது நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்றாகும். நீங்கள் என்னை பெரிதும் ஏமாற்றிவிட்டீர்கள் என்பதற்காக உண்மைகளுக்கு மாறாக நான் பேச விரும்பவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம், நிஜத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம், ஆனாலும் நான் இதை உங்களிடம் கண்டிப்பாக கேட்டாக வேண்டும்: இத்தனை வருடங்கள், உங்கள் இருதயங்கள் சரியாக எதனால் நிரப்பப்பட்டுள்ளன? அவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன? இந்த கேள்விகளை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லாதீர்கள், நான் ஏன் இதுபோன்ற கரியங்களைக் கேட்டேன் என்று என்னிடம் கேட்காதீர்கள். இதை அறிந்து கொள்ளுங்கள்: ஏனென்றால் உங்களை எனக்கு நன்றாக தெரியும், உங்கள் மீது மிகவும் அதிகமாக அக்கறை காட்டுகிறேன், உங்கள் நடத்தையிலும் செய்கைகளிலும் எனது இருதயத்தை மிகவும் அதிகமாக ஈடுபடுத்தியுள்ளேன், எனவே நிறுத்தாமலும் கசப்பான மனநிலை கொள்ளாமலும் உங்கள் தவறுக்கு கணக்குக் கொடுக்குமாறு உங்களை அழைத்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் எனக்கு அக்கறையின்மையையும் தாங்க முடியாத பிரிவையும் தவிர வேறு எதையும் திருப்பித் தரவில்லை. நீங்கள் என்னைக் குறித்து மிகவும் அலட்சியமாக இருக்கிறீர்கள்; எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாமால் இருக்க சாத்தியமுள்ளதா? நீங்கள் இதைத்தான் நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையிலேயே என்னை தயவுடன் நடத்தவில்லை என்பதையே இது மேலும் நிரூபிக்கிறது. எனவே, உங்கள் தலைகளை நீங்கள் மணலில் புதைக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருக்கிறீர்கள், அப்படியானல் எனக்கு கணக்குக் கொடுப்பதற்கு நீங்கள் எதை பயன்படுத்துவீர்கள்?

என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்கிற கேள்வி என்னவென்றால், உங்கள் இருதயங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள், யாருக்காக வாழ்கிறீர்கள் என்று உங்களுக்குள்ளேயே கேட்க முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் இந்த கேள்விகளைப் பற்றி ஒருபோதும் கவனமாக சிந்திக்காமல் இருந்திருக்கலாம், எனவே நான் உங்களுக்கு பதில்களை வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்?

மனிதன் தனக்காகவே வாழ்கிறான், தனக்கே விசுவாசமாக இருக்கிறான் என்ற உண்மையை ஞாபகசக்தி கொண்ட எவரும் ஒப்புக்கொள்வார்கள். உங்கள் பதில்கள் முற்றிலும் சரியாக இருக்கும் என்று நான் நம்பமாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வாழ்க்கையில் வாழ்கிறீர்கள், ஒவ்வொருவரும் உங்கள் சொந்த துயரத்தில் துயரப்படுகிறீர்கள். நீங்கள் நேசிக்கிறவர்களுக்கும், உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களுக்குமே விசுவாசமாக இருக்கிறீர்கள்; நீங்கள் உங்களுக்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சுற்றியுள்ள மக்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்களால் தூண்டப்படுவதனால், நீங்கள் உண்மையிலேயே உங்களுக்கு விசுவாசமாக இல்லை. நீங்கள் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்காக அல்ல, ஏதாவது ஒரு காரியத்தில் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதற்காகவே நான் இந்த வார்த்தைகளை பேசுகிறேன், ஏனென்றால் பல வருடங்களாக, உங்களில் யாரிடமிருந்தும் நான் ஒருபோதும் விசுவாசத்தைப் பெறவில்லை. இத்தனை வருடங்கள் நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் என் மீது சிறிதளவு கூட விசுவாசத்தைக் காண்பிக்கவில்லை. மாறாக, நீங்கள் நேசிக்கும் நபர்களையும் உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களையும் சுற்றியே பெரிதும் வலம் வந்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் எல்லா நேரங்களிலும், அவற்றை உங்கள் இருதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள், அவற்றை ஒருபோதும் கைவிடவில்லை. நீங்கள் நேசிக்கிற எந்தவொரு காரியத்தைப் பற்றியும் நீங்கள் ஆர்வமாக அல்லது ஆவலாக இருக்கும்போதெல்லாம், நீங்கள் என்னைப் பின்பற்றும் போது அல்லது என் வார்த்தைகளைக் கேட்கும்போதுகூட இதுதான் நடக்கிறது. ஆகையால், நான் உங்களிடம் கேட்கும் விசுவாசத்தை, நீங்கள் விரும்பும் உங்களது “விருப்பமானவைகளுக்கு” பயன்படுத்தி எனக்குப் பதிலாக அவைகளுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் எனக்காக ஒன்று அல்லது இரண்டு காரியங்களை தியாகம் செய்தாலும், அது உங்களுக்குரிய அனைத்தையும் குறிப்பிடாது, மேலும் நீங்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்காது. உங்களுக்கு ஆர்வமுள்ள காரியங்களிலேயே நீங்கள் ஈடுபாட்டுடன் காணப்படுகிறீர்கள்: சிலர் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், மற்றவர்கள் கணவன்மார்கள், மனைவிமார்கள், செல்வம், வேலை, மேலதிகாரிகள், அந்தஸ்து அல்லது பெண்கள் ஆகியோருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். நீங்கள் விசுவாசமாக இருக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர மாட்டீர்கள்; மாறாக, இந்த காரியங்களை அதிக அளவிலும் உயர் தரத்திலும் வைத்திருக்க நீங்கள் இன்னும் ஆர்வம் கொள்வீர்கள், நீங்கள் ஒருபோதும் அவற்றை விட்டுவிட மாட்டீர்கள். நானும் எனது வார்த்தைகளும் நீங்கள் ஆர்வமாக இருக்கிறபொருட்களுக்குப் பின்னாலேயே தள்ளப்படுகிறோம். அவற்றை கடைசியாக வரிசைப்படுத்துவதற்கு உங்களுக்கு வேறு வழியில்லை. தாங்கள் விசுவாசமாக இருக்கிற காரியங்களை கடைசி இடத்தில் வைக்கிறவர்களை கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய இருதயங்களில் என்னைப் பற்றிய ஒரு சிறிய தடயம்கூட இருப்பதில்லை. நான் உங்களிடம் அதிகம் கேட்பதாக அல்லது உங்கள் மீது தவறாக குற்றஞ்சாட்டுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும்போது, நீங்கள் ஒருபோதும் எனக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்ற உண்மையை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற நேரங்களில், இது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்போதும், உங்கள் உழைப்புகளுக்காக நீங்கள் வெகுமதி பெறும்போதும், போதுமான சத்தியத்தினால் நீங்கள் நிரப்பப்படவில்லை என்று நீங்கள் சோகமாக உணரவில்லையா? எனது அங்கீகாரத்தைப் பெறாததற்காக நீங்கள் எப்போது அழுதீர்கள்? உங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் திருப்தியடையவில்லை; அவர்கள் சார்பாக நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், அவர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யவில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும், என்னைப் பற்றி நீங்கள் எப்போதும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருக்கிறீர்கள்; நான் உங்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறேன், ஆனால் நான் உங்கள் இருதயங்களில் வசிக்கவில்லை. எனது அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் நீங்கள் ஒருபோதும் உணர்வதில்லை, நீங்கள் அவற்றை ஒருபோதும் பாராட்டியதில்லை. நீங்கள் சுருக்கமான பிரதிபலிப்பில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள், இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறீர்கள். நான் நீண்ட காலமாக ஏங்கிய “விசுவாசம்” இது அல்ல, ஆனால் நான் இதை நீண்ட காலமாக வெறுக்கிறேன். ஆனாலும், நான் என்ன சொன்னாலும், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு காரியங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள்; உங்களால் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் நீங்கள் அனைவரும் மிகவும் “தன்னம்பிக்கையுடன்” இருக்கிறீர்கள், நான் பேசிய வார்த்தைகளிலிருந்து எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் தேர்வு செய்கிறீர்கள். நீங்கள் இன்றும் இவ்வாறே இருந்தால், உங்கள் தன்னம்பிக்கையை கையாள்வதற்கான சில வழிமுறைகள் என்னிடம் உள்ளன. மேலும் என்னவென்றால், எனது வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை என்றும், அவற்றில் எதுவும் சத்தியங்களை சிதைக்காது என்றும் உங்களை ஒப்புக்கொள்ள வைப்பேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 333

இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதை தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தை தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஒரு அமைதியான குடும்பத்திற்கும் உடைந்த குடும்பத்திற்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்; செல்வத்திற்கும் கடமைக்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், கரைக்குத் திரும்ப விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள்;[அ] ஆடம்பரத்திற்கும் வறுமைக்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்களுக்கும் எனக்கும் இடையில் யாரை தேர்வு செய்வது என்று வரும்போது, நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; கருத்துக்கும் சத்தியத்திற்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைத்து விதமான உங்கள் தீய செயல்களையும் பார்த்த நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டேன். உங்கள் இருதயங்கள் மென்மையாக இருக்க பெரிதும் மறுக்கின்றன என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாக சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்? இன்னும் முந்தையதாகவே இருக்குமா? நீங்கள் இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் தாங்க முடியாத துக்கத்தையுமே கொண்டு வருவீர்களா? உங்கள் இருதயங்கள் இன்னும் சிறிதளவு சௌகரியத்திலேயே இருக்குமா? என் இருதயத்தை ஆறுதல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? இந்த நேரத்தில், நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஒப்புக்கொடுப்பீர்களா அல்லது அவற்றில் சோர்வடைவீர்களா? எனது நாள் உங்கள் கண்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் எதிர்கொள்வது ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியாகும். இருப்பினும், இந்த தொடக்கப் புள்ளி கடந்த புதிய வேலையின் ஆரம்பம் அல்ல, ஆனால் பழைய வேலையின் முடிவு என்பதை நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அதாவது, இதுதான் இறுதி செயல். இந்த தொடக்க புள்ளி பற்றிய அசாதாரணமானது எது என்பதை உங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இருப்பினும், விரைவில் ஒரு நாளில், இந்த தொடக்க புள்ளியின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், எனவே நாம் அதை ஒன்றாகக் கடந்து சென்று, வரவிருக்கும் முடிவை வரவேற்போம்! ஆனாலும், உங்களைப் பற்றிய எனது தொடர்ச்சியான கவலை என்னவென்றால், அநீதியையும் நீதியையும் எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்போதும் முந்தையதையேத் தேர்வு செய்கிறீர்கள். இருப்பினும், இவை எல்லாம் உங்கள் கடந்த காலத்தில் நடந்தவை. இதைச் செய்வது மிகவும் கடினம் என்றாலும், நான் உங்களுடைய கடந்த கால செயல்கள் அனைத்தையும் மறந்துவிடுவேன் என்று நம்புகிறேன். ஆனாலும், அதைச் செய்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறை என்னிடம் உள்ளது: எதிர்காலம் கடந்த காலத்தை மாற்றட்டும், உங்களுடைய இன்றைய உண்மையான சுயத்தைக் கொடுத்து உங்கள் கடந்த காலத்தின் நிழல்களைப் போக்க விடுங்கள். எனவே ஒரு முறைக்கூட தேர்வு செய்ய நான் உங்களைத் தொந்தரவு செய்துதான் ஆகவேண்டும்: நீங்கள் உண்மையில் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடிக்குறிப்பு:

அ. கரைக்குத் திரும்புதல்: இது ஒரு சீன வழக்குச் சொல், இதற்கு “தீய வழிகளில் இருந்து திரும்புதல்” என்று அர்த்தம்.

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 334

சென்றடையும் இடமானது குறிப்பிடப்படும்போதெல்லாம், நீங்கள் இதை சிறப்பு கவனத்துடன் நடத்துகிறீர்கள்; மேலும், இது நீங்கள் அனைவரும் குறிப்பாக உணர்ச்சிவசப்படக்கூடிய விஷயமாகவும் இருக்கிறது. சிலர் நல்லவிதமான சென்றடையும் இடத்தைப் பெறுவதற்காக தேவனுக்கு முன்பாகத் தங்கள் தலைகளை தரை வரை தாழ்த்தவும் தரையில் முட்டிக்கொள்ளவும் காத்திருக்க முடிவதில்லை. உங்கள் ஆர்வத்தைக் கண்டு எம்மால் அடையாளம் காண முடியும், இதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தேவையில்லை. இது உங்கள் மாம்சமானது பேரழிவிற்குள் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்பதோடு, எதிர்காலத்தில் நித்திய தண்டனையில் இறங்கவும் நீங்கள் விரும்புவதில்லை என்பதாகும். நீங்கள் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, இன்னும் கொஞ்சம் எளிதாக ஜீவிக்க நீங்களே உங்களை அனுமதிக்க வேண்டும் என்று நம்புகிறீர்கள். எனவே, சென்றடையும் இடமானது குறிப்பிடப்படும்போதெல்லாம் நீங்கள் குறிப்பாக கலக்கமடைகிறீர்கள், நீங்கள் போதுமான கவனத்துடன் இல்லாவிட்டால், நீங்கள் தேவனைப் புண்படுத்தக்கூடும், இதனால் நீங்கள் தகுதியுள்ள பழிவாங்கலுக்கு ஆளாக நேரிடும் என்று ஆழ்ந்த பயம் கொள்கிறீர்கள். உங்கள் சென்றடையும் இடத்திற்காக நீங்கள் சமரசம் செய்ய தயக்கம் கொள்ளவில்லை, ஒரு காலத்தில் வஞ்சகராவும் மரியாதையற்றவராகவும் இருந்த உங்களில் பலரும் திடீரென்று குறிப்பாக மென்மையாகவும் நேர்மையாகவும் மாறியிருக்கிறீர்கள்; உங்கள் நேர்மையின் தோற்றமானது ஜனங்களின் மஜ்ஜைகளைச் சில்லிட வைக்கிறது. ஆயினும்கூட, உங்கள் அனைவருக்கும் “நேர்மையான” இருதயங்கள் இருக்கின்றன, மேலும் நீங்கள் உங்கள் இருதயங்களில் இருக்கும் ரகசியங்களை தொடர்ந்து எமக்குத் திறந்துகாட்டுகிறீர்கள், அது குறையாகவோ, வஞ்சமாகவோ அல்லது பக்தியாகவோ என எதுவாக இருந்தாலும் எமக்குத் திறந்துகாட்டுகிறீர்கள். மொத்தத்தில், உங்கள் தன்மையின் ஆழமான இடைவெளிகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை நீங்கள் மிகவும் நேர்மையாக “ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்”. நிச்சயமாக, நான் ஒருபோதும் இதுபோன்ற விஷயங்களைச் சுற்றி வந்ததில்லை, ஏனென்றால் அவை அனைத்தும் எமக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டன. தேவனின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒரு முடியை இழப்பதை விட, நீங்கள் சென்றடையும் இடத்திற்காக நீங்கள் அக்கினிக் கடலுக்குள்ளும் நுழைவீர்கள். இது நான் உங்களுடன் மிகவும் பிடிவாதமாக இருக்கிறேன் என்பதற்கான அர்த்தம் இல்லை; நான் செய்யும் எல்லாவற்றையும் நேருக்கு நேர் பார்க்க நீங்கள் பக்தியின் இருதயத்தில் பெரும்பாலானவற்றை கொண்டிருக்கவில்லை என்பது தான் அர்த்தம். நான் இப்போது கூறியதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், எனவே நான் உங்களுக்கு ஒரு எளிய விளக்கத்தை அளிக்கிறேன்: உங்களுக்கு தேவைப்படுவது சத்தியமும் ஜீவனும் இல்லை, உங்களை எப்படி நடத்துவது என்பதற்கான கொள்கைகளும் இல்லை, மேலும் எமது மிகக் கடினமான கிரியையும் இல்லை. மாறாக, நீங்கள் மாம்சத்தில் கொண்டிருக்கும் எல்லாம் தான் உங்களுக்கு தேவைப்படுகிறது—செல்வம், அந்தஸ்து, குடும்பம், திருமணம் மற்றும் பல. நீங்கள் எமது வார்த்தைகளையும் கிரியைகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறீர்கள், எனவே உங்கள் விசுவாசத்தை ஒரே வார்த்தையில் என்னால் தொகுக்க முடியும், “அக்கறையில்லாமை” என்பது தான் அந்த வார்த்தை. நீங்கள் உங்களை முற்றிலும் நியமிக்கும் விஷயங்களை அடைய நீங்கள் எந்த எல்லைக்கும் செல்வீர்கள், ஆனால் தேவன் மீதான உங்கள் விசுவாசத்தைப் பற்றிய விஷயங்களுக்காக நீங்கள் அதே விஷயத்தைச் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். மாறாக, நீங்கள் ஒப்பீட்டளவில் அர்ப்பணிப்புள்ளவராகவும், ஒப்பீட்டளவில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறீர்கள். அதனால்தான் மிகவும் நேர்மையான இருதயம் இல்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதில் தோல்வி கண்டவர்கள் என்று நான் சொல்கிறேன். கவனமாக சிந்தியுங்கள்—உங்களிடையே தோல்வி கண்டவர்கள் பலர் இருக்கின்றனரா?

தேவனை விசுவாசிப்பதில் வெற்றி என்பது ஜனங்களின் சொந்த செயல்களின் விளைவாக அடையப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; ஜனங்கள் வெற்றிபெறாமல் தோல்வியுற்றால், அதுவும் அவர்களின் சொந்த செயல்களால் தான் ஏற்படுகிறது, வேறு எந்த காரணிகளாலும் எந்தப் பாத்திரமும் வகிக்கப்படுவதில்லை. தேவனை விசுவாசிப்பதை விட மிகவும் கடினமான மற்றும் அதிக துன்பத்தை அனுபவிக்கும் எதையும் நீங்கள் செய்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், மேலும் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் நீங்கள் அதைப் பொறுத்துக்கொள்ள விரும்பாத அளவிற்கு மிகவும் தீவிரமாக அதனை நடத்துவீர்கள்; இவை அனைத்தும் நீங்கள் உங்கள் சொந்த ஜீவிதத்தில் செலுத்தும் இடைவிடாத முயற்சிகள் ஆகும். உங்கள் சொந்த குடும்பத்தின் எந்த உறுப்பினரையும் நீங்கள் ஏமாற்றாத சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் எமது மாம்சத்தை ஏமாற்றும் திறன் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இதுதான் உங்களது நிலையான நடத்தையாக இருக்கிறது, மேலும் நீங்கள் ஜீவிக்கும் கொள்கையும் இதுதான். நீங்கள் சென்றடையும் இடமானது மிகவும் அழகாகவும், நீங்கள் விரும்பும் அனைத்தும் இருக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக எம்மை ஏமாற்ற நீங்கள் இன்னும் ஒரு தவறான முகப்பை முன்வைப்பதில்லையா? உங்களது நேர்மையைப் போலவே, உங்களது பக்தியும் தற்காலிகமானது தான் என்பதை நான் அறிவேன். நீங்கள் தீர்மானமாக இல்லையா, மேலும் நீங்கள் செலுத்தும் விலைக்கிரயமானது தற்போதைய தருணத்தின் பொருட்டு மட்டும்தானா, எதிர்காலத்திற்காக இல்லையா? வர்த்தகத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன், ஒரு அழகான சென்றடையும் இடத்தைப் பெற முயலும் இறுதி முயற்சியை மட்டுமே நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். சத்தியத்திற்குக் கடன்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், நான் செலுத்திய விலைக்கிரயத்திற்கு எமக்கு திருப்பிச் செலுத்துவதற்காகவும் நீங்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. சுருக்கமாக, நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கு புத்திசாலித்தனமான உத்திகளைப் பயன்படுத்த மட்டுமே நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் அதற்காக வெளிப்படையான யுத்தம் செய்ய நீங்கள் தயாராக இருப்பதில்லை. இது உங்கள் இதயப்பூர்வமான விருப்பமல்லவா? நீங்கள் வேஷம்மாறக்கூடாது, மேலும் உங்களால் புசிக்கவோ அல்லது நித்திரை கொள்ளவோ முடியாத அளவுக்கு உங்கள் சென்றடையும் இடத்தைப் பற்றி யோசிப்பதில் உங்கள் மூளையைக் கசக்கக்கூடாது. உங்கள் விளைவானது ஏற்கனவே இறுதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்பது உண்மையல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் திறந்த மற்றும் நேர்மையான இருதயங்களுடன் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த கடமையைச் செய்ய வேண்டும், மேலும் அதற்குத் தேவையான எந்த விலைக்கிரயத்தையும் செலுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் கூறியுள்ளது போல, அந்த நாள் வரும்போது, தேவனுக்காக துன்பம் அனுபவித்த அல்லது விலைக்கிரயம் செலுத்திய எவரைப் பற்றிய விஷயத்திலேயும் தேவன் அஜாக்கிரதையாக இருக்க மாட்டார். இந்த வகையான நம்பிக்கையை நிலைநிறுத்துவது மதிப்புமிக்கது தான், நீங்கள் அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதும் சரிதான். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய விஷயங்களில் எமது மனதை எம்மால் எளிமையாக்க முடிகிறது. இல்லையெனில், நீங்கள் என்றென்றும் எமது மனதை எளிதாக்க முடியாத நபர்களாக இருப்பீர்கள், மேலும் நீங்கள் என்றென்றும் எமது வெறுப்பின் பொருட்களாகவே இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சியைப் பின்பற்றி, உங்கள் அனைத்தையும் எமக்காகக் கொடுக்க முடிந்தால், நீங்கள் எமது கிரியைக்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால், ஜீவிக்கும் நாட்களின் சக்தியை எமது சுவிசேஷ கிரியைக்காக அர்ப்பணித்தால், எமது இருதயமானது பெரும்பாலும் உங்களுக்காக களிகூராமல் இருக்குமா? இவ்வாறாக, உங்களைப் பற்றிய விஷயங்களில் எமது மனதை முழுமையாக எளிதாக வைக்க முடியும், இல்லையா? நான் எதிர்பார்க்கும் விஷயத்தில் நீங்கள் செய்வது மிகச் சிறிய பகுதி தான் என்பது வெட்கக்கேடான செயல் ஆகும். இதுபோன்ற நிலையில், நீங்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்களைத் தேட உங்களுக்கு எப்படி தைரியம் வருகிறது?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 335

நீங்கள் சென்றடையும் இடமும் உங்கள் தலைவிதியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை—அவற்றிற்கு மிகுந்த அக்கறை உண்டு. நீங்கள் மிகுந்த கவனத்துடன் காரியங்களைச் செய்யாவிட்டால், நீங்கள் சென்றடையும் ஒரு இடத்தை தேடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றும், உங்கள் சொந்த தலைவிதியை நீங்களே அழித்துவிட்டீர்கள் என்றும் அர்த்தமாவதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால், தங்களது சென்றடையும் இடத்திற்காக மட்டுமே முயற்சி செய்யும் ஜனங்கள் வீணாக உழைக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அத்தகைய முயற்சிகள் உண்மையானவை இல்லை—அவை போலியானவை, வஞ்சகம் மிக்கவை. அப்படியானால், தங்களது சென்றடையும் இடத்தின் பொருட்டு மட்டுமே கிரியை செய்பவர்கள் தங்கள் இறுதி வீழ்ச்சியின் வாசலில் இருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மீது ஒருவனின் விசுவாசத்தில் தோல்வி என்பது வஞ்சகத்தினால் ஏற்படுகிறது. நான் முகஸ்துதி செய்யப்படுவதையோ அல்லது கஷ்டப்படுவதையோ அல்லது உற்சாகத்துடன் நடத்தப்படுவதையோ விரும்புவதில்லை என்பதை நான் முன்பு கூறியிருக்கிறேன். எமது சத்தியத்தையும் எமது எதிர்பார்ப்புகளையும் நேர்மையானவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், ஜனங்கள் எமது இருதயத்தின் மீது மிகுந்த அக்கறையையும் எண்ணத்தையும் காட்டும்போதும், எம்பொருட்டு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்போதும் நான் அதை விரும்புகிறேன். இவ்வாறாக மட்டுமே எமது இருதயத்தால் ஆறுதலடைய முடியும். இப்போது, உங்களைப் பற்றி நான் விரும்பாத விஷயங்கள் எத்தனை இருக்கின்றன? உங்களைப் பற்றி நான் விரும்பும் விஷயங்கள் எத்தனை இருக்கின்றன? உங்கள் சென்றடையும் இடத்தின் பொருட்டு நீங்கள் முன்வைத்த அசிங்கத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் அனைத்தையும் நீங்கள் யாரும் உணரவில்லை என்பதாக இருக்குமா?

எமது இருதயத்தில், நேர்மறையான மற்றும் மேலே செல்ல விரும்பும் எந்தவொரு இருதயத்தையும் புண்படுத்த நான் விரும்புவதில்லை, மேலும் விசுவாசத்துடன் தனது கடமையைச் செய்கிற எவருடைய ஆற்றலையும் குறைக்கவும் எமது இருதயத்தில் நான் விரும்புவதில்லை. ஆயினும்கூட, உங்கள் குறைபாடுகள் மற்றும் உங்கள் இருதயங்களின் ஆழமான இடைவெளிகளில் இருக்கும் இழிந்த ஆத்துமாவை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. எமது வார்த்தைகளை நேருக்கு நேர் சந்திப்பதில் உங்களால் உங்களது உண்மையான இருதயத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் அவ்வாறு செய்கிறேன், ஏனென்றால் எமக்கு எதிரான ஜனங்களின் வஞ்சகத்தை நான் மிகவும் வெறுக்கிறேன். எமது கிரியையின் கடைசி கட்டத்தில், உங்களால் மிகச்சிறந்த செயல்திறனை வழங்க முடியும் என்றும், நீங்கள் முழு மனதுடன் உங்களை நியமிப்பீர்கள் என்றும், இனி அரை மனதுடன் இருக்க மாட்டீர்கள் என்றும் மட்டுமே நம்புகிறேன். நிச்சயமாக, உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல சென்றடையும் இடம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆயினும்கூட, எமக்கான தேவை எமக்கு இன்னும் இருக்கிறது, அதாவது உங்கள் ஒரே மற்றும் இறுதி பக்தியை எமக்கு வழங்குவதில் நீங்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவனுக்கு அந்த ஒரே பக்தி இல்லையென்றால், அவன் நிச்சயமாக சாத்தானின் பொக்கிஷமான உடைமையாக இருக்கிறான், நான் இனியும் அவனைப் பயன்படுத்த மாட்டேன், ஆனால் அவனது பெற்றோரால் கவனிக்கப்படுவதற்காக அவனை அவனது வீட்டிற்கு அனுப்புவேன். எமது கிரியையானது உங்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கிறது; நான் உங்களிடமிருந்து நேர்மையான மற்றும் மேலே செல்ல விரும்பும் ஒரு இருதயத்தைத்தான் பெற விரும்புகிறேன், ஆனால் இதுவரை என் கைகள் வெறுமையாகவே இருக்கின்றன. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: ஒரு நாள், சொல்லக்கூடிய சொற்களுக்கும் அப்பால் வேதனைப்படுகிறேன் என்றால், பிறகு உங்களைப் பற்றிய எமது அணுகுமுறை என்னவாக இருக்கும்? அந்த நேரத்தில் நான் இப்போது இருப்பதைப் போல உங்களிடம் நட்பாக இருப்பேனா? அந்த நேரத்தில் இப்போது இருப்பதைப் போல எமது இருதயம் அமைதியாக இருக்குமா? வயலில் சிரமப்பட்டு உழைத்தும் ஒரு தானியத்தைக் கூட அறுவடை செய்யாத ஒருவனின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஒரு பெரிய அடியைச் சந்தித்தபோது ஒருவனின் இருதயம் எவ்வளவு காயமடைகிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒரு சமயம் நம்பிக்கையால் நிறைந்திருந்த, மோசமான காரியங்களில் பங்கெடுக்க வேண்டியிருக்கும் ஒருவனின் கசப்புத்தன்மையை உங்களால் ருசிக்க முடியுமா? எரிச்சலடைந்த ஒருவனிடமிருந்து வரும் கோபத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பகை மற்றும் வஞ்சகத்துடன் நடத்தப்பட்ட ஒருவனிடம் இருக்கும் பழிவாங்கலுக்கான ஆர்வத்தை உங்களால் அறிய முடியுமா? இந்த ஜனங்களின் மனநிலையை நீங்கள் புரிந்து கொண்டால், தேவனின் பழிவாங்கும் நேரத்தில் அவர் கொண்டிருக்கும் அணுகுமுறையை கற்பனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்! இறுதியாக, நீங்கள் உங்களது சென்றடையும் இடத்திற்காக தீவிர முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்று நம்புகிறேன், ஆனாலும் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வஞ்சகமான வழிகளைப் பயன்படுத்த வேண்டாம், இல்லையென்றால் எமது இருதயத்தில் நான் உங்களை எண்ணி தொடர்ந்து ஏமாற்றமடைவேன். அத்தகைய ஏமாற்றம் எதற்கு வழிவகுக்கிறது? நீங்களே உங்களை முட்டாளாக்குவதாக இல்லையா? தங்களது சென்றடையும் இடத்தை நினைத்துக்கொண்டே அதை அழிப்பவர்கள் இரட்சிக்கப்படவே முடியாது. அவன் சினங்கொண்டவனாகவும் கோபமுள்ளவனாகவும் மாறினாலும், அத்தகையவன் மீது யார் பரிதாபப்படுவார்கள்? மொத்தத்தில், நீங்கள் ஒரு பொருத்தமான மற்றும் நல்ல சென்றடையும் இடத்தை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும், நீங்கள் யாரும் பேரழிவிற்குள் விழமாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: IX. மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல்

அடுத்த: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் (2)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

ஒருவர் தேவனை நம்பும்போது, எப்படி, சரியாக, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்? தேவனுக்கு ஊழியம் செய்பவர்களால் என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட...

சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

சரியான திருச்சபை வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் பிரசங்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் ஏன் இன்னும்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக