தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 232

நான் நீதியுள்ளவர், நான் நம்பத்தக்கவர், நான் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராய்ந்து அறியும் தேவன்! யார் உண்மையானவர் யார் பொய்யானவர் என்பதை நான் உடனே வெளிப்படுத்துவேன். கவலைப்பட வேண்டாம்; எல்லாக் காரியங்களும் என் நேரத்திற்கு ஏற்பச் செயல்படுகின்றன. யார் என்னை உண்மையாக விரும்புகிறார்கள், யார் விரும்பவில்லை என்பதை நான் ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் என் சமூகத்தில் வரும்போது, போஜனம் பண்ணவும், பானம் பண்ணவும் மற்றும் என்னிடம் நெருங்கி வரவும் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், நானே என் கிரியையைச் செய்வேன். துரிதமான முடிவுகளுக்காக மிகவும் கவலைப்பட வேண்டாம்; எனது கிரியை எல்லாம் உடனடியாக நிறைவேற்றக் கூடிய ஒன்றல்ல. அதற்குள்ளாக என் படிகளும் என் ஞானமும் உள்ளன, அதனால்தான் என் ஞானம் வெளிப்படுத்தக்கூடியதாய் உள்ளது. தீமைக்கான தண்டனையும் நன்மைக்கான பலனும் என் கரங்களால் செய்யப்படுவதை நீங்கள் பார்க்க நான் அனுமதிப்பேன். நான் நிச்சயமாக யாருக்கும் பாரபட்சம் காண்பிக்க மாட்டேன். என்னை உண்மையாக நேசிப்பவனே, நான் உன்னை உண்மையாக நேசிப்பேன்: என்னை உண்மையாக நேசிக்காதவர்களைப் பொறுத்தவரை, என் கோபம் எப்போதும் அவர்களுடன் இருக்கும், அதனால் அவர்கள் நான் உண்மையான தேவன் என்பதையும், மனிதனுடைய உள்ளான இருதயத்தை ஆராய்கிற தேவன் என்பதையும் அவர்கள் நித்திய காலத்திற்கும் நினைவில் கொள்வார்கள். மற்றவர்களின் முகங்களுக்கு முன்பாக ஒரு விதமாகவும், அவர்களின் முதுகுக்குப் பின்பாக வேறொரு விதமாகவும் நடந்து கொள்ளாதே; நீ செய்யும் அனைத்தையும் நான் தெளிவாகப் பார்க்கிறேன், நீ மற்றவர்களை முட்டாளாக்கினாலும், உன்னால் என்னை முட்டாளாக்க முடியாது, நான் அதை எல்லாம் தெளிவாகப் பார்க்கிறேன், உன்னால் எதையும் மறைக்க முடியாது; எல்லாம் என்னுடைய கரங்களுக்குள் உள்ளன. உன்னுடைய சின்னச்சின்ன கணக்கீடுகள் உனக்கு நன்மைகளை அளிப்பதால், நீயே உன்னை மிகவும் புத்திசாலி என்று நினைக்க வேண்டாம். நான் உனக்குச் சொல்லுகிறேன்: மனிதன் பல திட்டங்களைப் போட்டாலும், அவை ஆயிரக்கணக்கில் அல்லது பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், முடிவில் அவர்களால் என் உள்ளங்கையிலிருந்து தப்பிக்க முடியாது. எல்லாக் காரியங்களும் எல்லாப் பொருட்களும் என் கரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஒரு தனி நபரை ஒருபோதும் பொருட்படுத்தாதே! என்னிலிருந்து விலகி இருக்கவோ, மறைந்து கொள்ளவோ முயற்சிக்காதே, இனிமையான வார்த்தைகளால் ஏமாற்றவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்காதே. என் மகிமை பொருந்திய முகமும், என் கோபமும், என் நியாயத்தீர்ப்பும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நீ இன்னும் காணவில்லையா? யாரெல்லாம் என்னை உண்மையாக விரும்பவில்லையோ, அவர்களை நான் இரக்கமின்றி உடனடியாக நியாயந்தீர்ப்பேன். என் இரக்கம் முடிவுக்கு வந்துவிட்டது; இனி எதுவும் மிச்சமில்லை. இனி ஒருபோதும் மாயக்காரனாக இருக்காதே, உன்னுடைய காட்டுத்தனமான, பொறுப்பற்ற வழிகளை நிறுத்திவிடு.

என் மகனே, கவனமாயிரு; என் சமூகத்தில் அதிக நேரம் செலவிடு, நான் உன்னைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுவேன். பயப்படாதே, என்னுடைய கூர்மையான, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் கொண்டு வந்து, என் சித்தத்தின்படி, கடைசிவரை சாத்தானுடன் யுத்தம் செய். நான் உன்னைப் பாதுகாப்பேன், எதற்கும் கவலைப்படாதே. மறைக்கப்பட்ட எல்லாக் காரியங்களும் திறக்கப்பட்டு, வெளிப்படுத்தப்படும். நான் இரக்கமின்றி எல்லா இருளையும் ஒளியூட்டும் வெளிச்சம் தரும் சூரியன். என் நியாயத்தீர்ப்பு முழுவதுமாக வந்துவிட்டது; திருச்சபை ஒரு போர்க்களம். நீங்கள் அனைவரும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு, உங்கள் முழுமையையும் இறுதியான, தீர்க்கமான யுத்தத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்; எனக்கான நல்ல, வெற்றிகரமான போராட்டத்தை நீ போராடும்படி நான் உன்னை நிச்சயமாகப் பாதுகாப்பேன்.

கவனமாக இருங்கள், இப்போதெல்லாம் ஜனங்களுடைய இருதயங்கள் வஞ்சகமாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன, மற்றவர்களின் நம்பிக்கையை வெல்ல அவர்களிடம் எந்த வழியும் இல்லை. நான் மட்டுமே முற்றிலும் உங்களுக்காக இருக்கிறேன். என்னிடத்தில் எந்த வஞ்சகமும் இல்லை; என் மீது அப்படியே சாய்ந்து கொள்ளுங்கள்! முடிவான, தீர்க்கமான யுத்தத்தில் என் குமாரர்கள் நிச்சயமாக வெற்றியடைவார்கள், மேலும் அதிக நிச்சயமாக சாத்தான் மரணப் போராட்டத்திற்காக வெளியே வருவான். பயப்பட வேண்டாம்! நானே உன்னுடைய வல்லமை, நானே உனக்கு எல்லாம் ஆனவர். காரியங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டாம், உன்னால் பல எண்ணங்களைச் சமாளிக்க முடியாது. நான் முன்பே சொல்லியிருக்கிறேன், நான் இனி உங்களை இடையில் வற்புறுத்த மாட்டேன், ஏனென்றால், நேரம் மிகவும் அவசரமாக உள்ளது. உங்கள் காதுகளைப் பிடித்து, உங்களை ஒவ்வொரு திருப்பத்திலும் எச்சரிக்க எனக்கு இனி நேரமில்லை, அது சாத்தியமில்லை! யுத்தத்திற்கான உங்கள் ஆயத்தங்களை நீங்கள் முடித்துக் கொள்ளுங்கள். உனக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்; எல்லாமே என் கரங்களுக்குள் இருக்கின்றன. இது மரணத்திற்கான ஒரு யுத்தம், இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ அழிவு உறுதி. ஆனால் நீ இதில் தெளிவாக இருக்க வேண்டும்: நான் என்றென்றும் ஜெயமுள்ளவராகவும், தோற்கடிக்கப்படாதவராகவும் இருக்கிறேன், சாத்தான் நிச்சயமாக அழிந்து போவான். இதுவே எனது அணுகுமுறை, எனது கிரியை, எனது சித்தம் மற்றும் எனது திட்டமாகும்!

முடிந்தது! எல்லாம் முடிந்தது! சோர்வான இருதயத்துடனோ பயப்படவோ வேண்டாம். நான் உன்னுடன், நீ என்னுடன் என்றென்றும் ராஜாக்களாக இருப்போம்! எனது வார்த்தைகள், ஒருமுறை பேசப்பட்டவுடன், ஒருபோதும் மாறாது, நிகழ்வுகள் விரைவாக உங்கள் மீது வரும். கவனமாக இருங்கள்! ஒவ்வொரு வரியையும் நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும்; என் வார்த்தைகளைக் குறித்து இனி ஒருபோதும் தெளிவற்று இருக்க வேண்டாம். நீங்கள் அவற்றைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்! நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்—உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என் சமூகத்தில் செலவிடுங்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 44” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 233

தீமை செய்பவர்களையும், அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களையும் தேவனுடைய குமாரர்களை துன்புறுத்துபவர்களையும் தண்டிக்க நான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டேன். இனிமேல், எனது ஆட்சிமுறை ஆணைகளின் கரமானது தங்கள் இருதயங்களில் என்னை மறுப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். இதை அறிந்து கொள்ளுங்கள்! இது என் நியாயத்தீர்ப்பின் ஆரம்பமாகும், யாருக்கும் எந்த இரக்கமும் காண்பிக்கப்பட மாட்டாது, யாரும் தப்பிப் போகவும் முடியாது, ஏனெனில் நான் நீதியைச் செயல்படுத்துகிற பாரபட்சமற்ற தேவனானவர்; இதை நீங்கள் அனைவரும் கண்டுணர்ந்து கொள்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

தீமை செய்பவர்களை நான் தண்டிக்க விரும்புகிறேன் என்பதல்ல: மாறாக, இது அவர்கள் தங்கள் சொந்தத் தீமையான செயல்களால் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொண்ட தகுந்த தண்டனையாகும். நான் யாரையும் தண்டிக்க அவசரப்படுவதில்லை, யாரையும் அநியாயமாகவும் நடத்துவதில்லை, நான் அனைவருக்கும் நீதியுள்ளவர். நான் நிச்சயமாக என் குமாரர்களை நேசிக்கிறேன், என்னை எதிர்க்கிறவர்களை நான் நிச்சயமாக வெறுக்கிறேன்; இதுவே என் செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கையாகும். எனது ஆட்சிமுறை ஆணைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் சில உட்பார்வை இருக்க வேண்டும்; அப்படி உங்களுக்கு இல்லையென்றால், உங்களுக்கு துளியளவு பயமும் இருக்காது, எனக்கு முன்பாக நீங்கள் கவனக் குறைவாகச் செயல்படுவீர்கள். நான் எதை அடைய விரும்புகிறேன், நான் எதை நிறைவேற்ற விரும்புகிறேன், நான் எதைப் பெற விரும்புகிறேன், அல்லது என் ராஜ்யத்திற்கு எந்த மாதிரியான நபர் தேவை என்பதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

எனது ஆட்சிமுறை ஆணைகளாவன:

1. நீங்கள் யார் என்பது முக்கியமல்ல, உங்கள் இருதயத்தில் என்னை மறுத்தால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.

2. என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எந்த ஒரு தவறான சிந்தனைக்காகவும் உடனடியாக ஒழுங்குபடுத்தப்படுவார்கள்.

3. என்னை நம்பாதவர்களை ஒரு பக்கமாக வைப்பேன். நான் அவர்களை முழுமையாகத் தண்டித்து, ஒழுங்குபடுத்தும்போது அவர்கள் பேசவும், இறுதிவரை கவனக் குறைவாக செயல்படவும் நான் அவர்களை அனுமதிப்பேன்.

4. என்னை எப்போதும் நம்புபவர்களை நான் கவனித்துப் பாதுகாப்பேன். எல்லா நேரங்களிலும் நான் அவர்களுக்கு இரட்சிப்பின் மூலம் ஜீவனை வழங்குவேன். இந்த ஜனங்கள் என் அன்பைக் கொண்டிருப்பார்கள், அவர்கள் நிச்சயமாக வீழ்ச்சியடையவோ தங்கள் பாதையை இழக்கவோ மாட்டார்கள். அவர்களிடம் உள்ள எந்தப் பெலவீனமும் தற்காலிகமாக மட்டுமே இருக்கும், நான் அவர்கள் பலவீனங்களை நிச்சயமாக நினைவில் கொள்ள மாட்டேன்.

5. நம்புவதாகக் காட்டிக்கொண்டு, ஆனால் உண்மையில் அவ்வாறு செய்யாதவர்கள், ஒரு தேவன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆனாலும் கிறிஸ்துவைத் தேடாதவர்கள், இன்னும் எதிர்க்காதவர்கள் கூட, இவர்கள் மிகவும் பரிதாபகரமான ஜனங்கள், என் செயல்களின் மூலம், நான் அவர்களைத் தெளிவாகக் காண வைப்பேன். எனது செயல்களின் மூலம், அத்தகையவர்களை நான் இரட்சித்து அவர்களை மீண்டும் கொண்டுவருவேன்.

6. முதற்பேறான குமாரர்களாகிய என் நாமத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்! நான் நிச்சயமாக உங்களுக்குச் சிறந்த ஆசீர்வாதங்களை வழங்குவேன், உங்கள் இருதயங்களின் திருப்திக்கு அவற்றை அனுபவிக்க உங்களை அனுமதிப்பேன்; இதை ஒருவரும் தடுக்கத் துணிய மாட்டார்கள். இவை அனைத்தும் உங்களுக்காக முழுமையாக ஆயத்தமாக உள்ளன, ஏனென்றால் இது எனது ஆட்சிமுறை ஆணையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 56” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 234

என் வார்த்தைகளைப் படித்து அவை நிறைவேறும் என்று நம்புகிறவர்கள் பாக்கியவான்கள். நான் உன்னைத் தவறாக நடத்த மாட்டேன்; நீ நிறைவேறும் என்று நம்புகிறதை நான் உன்னில் நிறைவேற்றுவேன். உன் மேல் வருகிற என்னுடைய ஆசீர்வாதம் இதுவே. ஒவ்வொரு நபரிடமும் மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்களை என் வார்த்தைகள் முழுமையாக உணரச் செய்யும். அனைவருக்கும் மரணக்காயங்கள் உள்ளன, நான் அவற்றைச் சுகப்படுத்தும் நல்ல மருத்துவர்: வெறுமனே நீ என் சமூகத்தில் வா. எதிர்காலத்தில் இனி துக்கமும் கண்ணீரும் இருக்காது என்று நான் ஏன் சொன்னேன்? அது இந்தக் காரணத்திற்காகவே. என்னில் எல்லாமே நிறைவேற்றப்பட்டன, ஆனால் மனிதரில், அனைத்தும் கலகம் நிறைந்தவையாக, வெறுமையானதாக மற்றும் மனிதரை வஞ்சிப்பதாக இருக்கின்றன. என் சமூகத்தில் நீ எல்லாவற்றையும் பெறுவது உறுதி, மேலும் நீ ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத எல்லா ஆசீர்வாதங்களையும் உன்னால் நிச்சயமாய்ப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியும். என் முன் வராதவர்கள் நிச்சயமாகக் கலகக்காரர்களும், என்னை முற்றிலும் எதிர்ப்பவர்களுமாவர். நான் நிச்சயமாக அவர்களை லேசாக விடமாட்டேன். அத்தகையவர்களை நான் கடுமையாகத் தண்டிப்பேன். இதை நினைவில் கொள்! அது கிருபையாக மாத்திரம் இருந்தாலும் கூட, எத்தனை அதிகமாக ஜனங்கள் என் முன் வருகிறார்களோ, அத்தனை அதிகமாக அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் அவர்கள் இன்னும் பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.

உலகத்தை உருவாக்குவதற்கு, நான் இந்த மனிதர்களை, அதாவது இன்றைய உங்களை முன்னரே தீர்மானித்து தேர்வு செய்யத் தொடங்கினேன். உங்கள் மனோபாவம், திறமை, தோற்றம் மற்றும் அந்தஸ்து, நீங்கள் பிறந்த உன் குடும்பம், உன் வேலை, மற்றும் உங்கள் திருமணம் உன் முடியின் நிறம் மற்றும் உன் தோல், மற்றும் உன் பிறந்த நேரம் என அனைத்தும் என் கரங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. நீ செய்யும் காரியங்களையும், ஒவ்வொரு நாளும் நீ சந்திக்கும் மனிதர்களையும் நான் என் கரத்தால் ஏற்பாடு செய்தேன். உன்னை இன்று என் முன்னிலையில் கொண்டு வருவது உண்மையில் எனது ஏற்பாட்டின் விளைவு என்ற உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உன்னை ஒழுங்கின்மைக்குள் கொண்டு செல்லாதே. நீ அமைதியாகத் தொடர வேண்டும். இன்று நான் உன்னை அனுபவிக்க அனுமதித்தது உனக்குத் தகுதியான ஒரு பங்காகும். இது, உலகத்தைச் சிருஷ்டிக்கையில் என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். மனிதர்கள் அனைவரும் மிகத் தீவிரமானவர்கள்: ஒன்று அவர்கள் அதிகப்படியான தலைக்கனமுள்ளவர்கள் அல்லது முற்றிலும் வெட்கமில்லாதவர்கள். என்னுடைய திட்டம் மற்றும் ஏற்பாடுகளுக்கு ஏற்ப அவர்களால் காரியங்களைச் செய்ய முடிவதில்லை. இதை இனி ஒரு போதும் செய்ய வேண்டாம். எனக்குள், அனைத்தும் விடுவிக்கப்பட்டன. உன் வாழ்வு இழந்து போகும்படி உன்னை நீயே கட்டிப் போடாதே, இதை நினைவில் கொள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 74” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 235

நான் தனித்துவமான தேவன், மேலும், நான் ஒருவரே தேவனுடையவரானவர். இன்னும் அதிகமாக, நான் மாம்சத்தின் முழுமையும், தேவனுடைய முழுமையான வெளிப்பாடுமானவர். என்னை வணங்காதபடித் துணிகிற யாரானாலும், தங்கள் கண்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிகிற யாரானாலும், எனக்கு விரோதமான வார்த்தைகளைச் சொல்லத் துணிகிற யாரானாலும் நிச்சயமாக என் சாபங்கள் மற்றும் கோபத்தால் மரித்துப் போவார்கள் (என் கோபத்தின் காரணமாக சாபம் உண்டாகும்). மேலும், என்னிடம் விசுவாசமற்று அல்லது பக்தியற்று இருக்கத் துணியும் யாரானாலும், என்னை ஏமாற்ற முயற்சிக்கும் யாரானாலும், என்னுடைய வெறுப்பால் நிச்சயம் மரித்துப் போவார்கள். என் நீதியும், மாட்சிமையும், நியாயத்தீர்ப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். முதலில், நான் அன்பாகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தேன், ஆனால் எனது முழுமையான தெய்வீகத்தின் மனநிலை இதுவல்ல; நீதி, மாட்சிமை மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவை முழுமையான தேவனான என் மனநிலையை வெறுமனே உள்ளடக்கியதாகும். கிருபையின் காலத்தில், நான் அன்பாகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தேன். நான் முடிக்க வேண்டிய கிரியையின் காரணமாக நான் கிருபையும் இரக்கமும் கொண்டிருந்தேன்; ஆனாலும், அதற்குப் பிறகு, இதுபோன்ற விஷயங்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை (அதற்குப் பிறகு ஒருவரும் இருக்கவில்லை). இது அனைத்தும் நீதி, மாட்சிமை மற்றும் நியாயத்தீர்ப்பாகும், மேலும் இது எனது முழுமையான தெய்வீகத்தன்மைடன் இணைந்திருக்கும் எனது சாதாரணமான மனிதத்தன்மையின் முழுமையான மனநிலை ஆகும்.

என்னை அறியாதவர்கள் பாதாளக் குழியில் அழிவார்கள், அதே சமயம் என்னைப் பற்றி உறுதியாக இருப்பவர்கள், என் அன்பிற்குள் கவனித்துப் பாதுகாக்கப்படும்படி என்றென்றும் வாழ்வார்கள். நான் ஒரு வார்த்தையைக் கூறுகிற அந்தத் தருணத்தில், முழு பிரபஞ்சமும் பூமியின் கடையாந்தரங்களும் நடுங்கும். யாரால் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு பயத்தில் நடுங்காமல் இருக்க முடியும்? எனக்காகப் பயபக்தியினால் பொங்காமல் யாரால் தயங்கி நிற்க முடியும்? மேலும் என் செயல்களிலிருந்து என் நீதியையும் மாட்சிமையையும் அறிய இயலாதவர் யார்! என் செயல்களுக்குள் என் சர்வவல்லமையையும் ஞானத்தையும் பார்க்க முடியாதவர் யார்! கவனம் செலுத்தாதவர் நிச்சயமாக மரிப்பார்கள். ஏனென்றால் கவனம் செலுத்தாதவர்களும் என்னை எதிர்ப்பவர்களும் என்னை அறியாதவர்களுமாவர்; அவர்கள் பிரதான தூதரும், எந்த அக்கறையுமின்றி மோசமாக நடந்து கொள்பவர்களுமாவர். உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்: எந்த அக்கறையுமின்றி மோசமாக நடந்து கொள்பவர்களும், சுயநீதியுள்ள, அகந்தையும், ஆணவமும் கொண்ட எவரும் நிச்சயமாக என் வெறுப்புக்குரிய ஒரு பொருளாக இருக்கின்றனர், மேலும் அவர்கள் நிச்சயமாக அழிந்து போவார்கள்.

நான் இப்போது என் ராஜ்யத்தின் நிர்வாகக் கட்டளைகளைக் கூறுகிறேன்: எல்லாக் காரியங்களும் என் நியாயத்தீர்ப்புக்குள்ளும், எல்லாக் காரியங்களும் என் நீதிக்குள்ளும், எல்லாக் காரியங்களும் என் மாட்சிமைக்குள்ளும் உள்ளன, நான் அனைவரிடமும் என் நீதியைச் செயல்படுத்துகிறேன். என்னை நம்புவதாகக் கூறுபவர்கள் ஆனால், ஆழத்தில் எனக்கு முரண்படுபவர்கள் அல்லது என்னைக் கைவிட்ட இதயங்களை உடையவர்கள் வெளியேற்றப்படுவார்கள்—ஆனால் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட சரியான நேரத்தில் நடக்கும். என்னைப் பற்றி கேலி பேசும் மக்கள் ஆனால் மற்றவர்கள் கவனிக்காத வகையில் பேசுபவர்கள், உடனடியாக மரிப்பார்கள் (அவர்கள் ஆவி, சரீரம் மற்றும் ஆத்துமாவில் அழிவார்கள்). எனக்குப் பிரியமானவர்களை ஒடுக்குபவர்கள் அல்லது புறக்கணிப்பவர்கள் என் கோபத்தால் உடனடியாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், நான் நேசிப்பவர்கள் மீது பொறாமை கொள்பவர்கள், என்னை அநீதியுள்ளவர் என்று நினைப்பவர்கள், எனக்குப் பிரியமானவரால் நியாயந்தீர்க்கப்படும்படி ஒப்படைக்கப்படுவார்கள். நல்ல நடத்தை உள்ளவர்களும், எளிய மற்றும் நேர்மையான (ஞானம் இல்லாதவர்கள் உட்பட) மற்றும் ஒரே மனதுடன் நேர்மையாக என்னை நடத்துகிற அனைவரும் என் ராஜ்யத்தில் தொடர்ந்து இருப்பார்கள். பயிற்சி பெறாதவர்கள் அதாவது ஞானமும் அறிவும் இல்லாத நேர்மையான ஜனங்கள் என் ராஜ்யத்தில் அதிகாரம் பெறுவார்கள். இருப்பினும் அவர்களும் கையாளப்பட்டு உடைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி பெறாதவர்கள் முழுமையானவர்கள் அல்லர். மாறாக, இந்த விஷயங்களின் மூலமாக நான் அனைவருக்கும் என் சர்வவல்லமையையும் என் ஞானத்தையும் காண்பிப்பேன். என்னை இன்னும் சந்தேகிக்கும் அனைவரையும் நான் வெளியேற்றுவேன்; அவர்கள் ஒருவரையும் நான் விரும்பவில்லை (இதுபோன்ற நேரத்தில் என்னைச் சந்தேகிக்கும் மக்களை நான் வெறுக்கிறேன்). முழு பிரபஞ்சத்திலும் நான் செய்யும் செயல்களின் மூலம் நேர்மையான மக்களுக்கு எனது செயல்களின் அற்புதத்தை நான் காண்பிப்பேன், அதன் பிறகு அவர்களின் ஞானம், அறிவு மற்றும் பகுத்தறிவை வளரச் செய்வேன். எனது அதிசயச் செயல்களின் விளைவாக வஞ்சகமான மக்களை ஒரு நொடியில் அழித்து விடுவேன். என் நாமத்தை முதலில் ஏற்றுக் கொண்ட அனைத்து முதற்பேறான குமாரர்களும் (அதாவது அந்தப் பரிசுத்தமான மற்றும் கறைபடாத நேர்மையான மக்கள்) முதலாவதாக என் ராஜ்ஜியத்திற்குள் நுழைவார்கள் மற்றும் என்னுடன் இணைந்து எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்வார்கள், ராஜ்யத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்து எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் நியாயத்தீர்ப்பார்கள் (இது ராஜ்யத்தில் உள்ள அனைத்து முதற்பேறான குமாரர்களையும் குறிக்கிறது, மற்றவர்களை அல்ல). நியாயந்தீர்க்கப்பட்ட எல்லாத் தேசங்களிலும் எல்லா ஜனங்களிலும் மனந்திரும்பியவர்கள் என் ராஜ்யத்திற்குள் நுழைந்து என் ஜனங்களாக மாறுவார்கள், அதே நேரத்தில் பிடிவாதமாகவும் மனந்திரும்பாதவர்களாகவும் இருப்பவர்கள் பாதாளக்குழியில் (என்றென்றும் அழியும்படி) தள்ளப்படுவார்கள். ராஜ்யத்தில் செய்யப்படும் நியாயத்தீர்ப்பே கடைசியாக இருக்கும், மேலும் இது உலகத்திற்கான என்னுடைய முழுமையானச் சுத்திகரிப்பாகும். இனி எந்த அநீதியும், துக்கமும், கண்ணீரும், அல்லது பெருமூச்சுகளும் இருக்காது, இன்னும் அதிகமாக சொல்வதென்றால், உலகமும் கூட இனி இருக்காது. அனைத்தும் கிறிஸ்துவின் வெளிப்பாடாக இருக்கும், அனைத்தும் கிறிஸ்துவின் ராஜ்யமாக இருக்கும்! அத்தகைய மகிமை! அத்தகைய மகிமை!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 79” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 236

இப்போது நான் உங்களுக்காக எனது நிர்வாக ஆணைகளை அறிவிக்கிறேன் (அவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருகிறது, வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சிட்சைகள் வழங்கப்படுகின்றன):

நான் எனது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறேன், மேலும் அனைத்தும் எனது கையில் தான் இருக்கின்றன: எவன் சந்தேகிக்கிறானோ அவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். எந்தவொரு பரிசீலனைக்கும் இடமில்லை; அவர்கள் உடனடியாக அழிக்கப்படுவார்கள், இதன்மூலம் எனது இருதயத்தில் இருந்து வெறுப்பானது அகற்றப்படும். (இப்போது முதல் கொல்லப்படுபவர்கள் எனது ராஜ்யத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது, சாத்தானின் சந்ததியினராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.)

முதற்பேறான குமாரர்களான நீங்கள் உங்களுக்கான நிலைகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், மேலும் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் உங்கள் சொந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனது நிர்வாகத் திட்டத்திற்காக நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும், நீங்கள் எனக்கு நல்ல சாட்சி கொடுத்து, எனது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். வெட்கக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்; எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருங்கள். ஒரு கணம் கூட ஒழுக்கம் தவறாதீர்கள்: நீங்கள் எப்போதும் முதற்பேறான குமாரர்களின் அடையாளத்தை ஏந்திக் கொண்டு அனைவருக்கும் முன்பாகத் தோன்ற வேண்டும், அடிமைத்தனமாக இருக்கக்கூடாது; மாறாக, நீங்கள் நிமிர்ந்த தலைகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். எனது நாமத்தை இழிவுபடுத்தாமல் மகிமைப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன். முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று தனிப்பட்ட செயல்பாடு இருக்கிறது, யாராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. இதுதான் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பாகும், அதைத் தட்டிக்கழிக்கக்கூடாது. நான் உங்களிடம் ஒப்படைத்ததை நிறைவேற்றுவதற்காக, உங்கள் முழு மனதுடனும், உங்கள் முழு பெலத்துடனும், உங்களை முழு இருதயத்துடன் நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.

இந்த நாளிலிருந்து, பிரபஞ்ச உலகம் முழுவதிலும், எனது குமாரர்களையும் எனது ஜனங்கள் அனைவரையும் வழிநடத்துவதற்கான கடமையை நிறைவேற்றும் காரியம் எனது முதற்பேறான குமாரர்களிடம் ஒப்படைக்கப்படும், மேலும் அதை நிறைவேற்ற தங்கள் முழு இருதயத்தையும் மனதையும் அர்ப்பணிக்க முடியாத எவரையும் நான் தண்டிப்பேன். இதுவே எனது நீதியாகும். எனது முதற்பேறான குமாரர்களைக் கூட நான் விட்டுவிடவோ அல்லது தப்பிக்கவோ விட மாட்டேன்.

எனது முதற்பேறான குமாரர்களில் ஒருவரை ஏளனம் செய்து அவமதிப்பவர்கள் யாராவது எனது குமாரர்களிடையேயோ எனது ஜனங்களிடையேயோ இருந்தால், நான் அவர்களைக் கடுமையாக தண்டிப்பேன், ஏனென்றால் எனது முதற்பேறான குமாரர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; யார் அவர்களுக்கு என்ன செய்தாலும், அவர்கள் அதனை எனக்கும் செய்கிறார்கள். எனது நிர்வாக ஆணைகளில் இதுவே மிகவும் கடுமையானதாகும். இந்த ஆணையை மீறும் எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்களுக்கும் எதிராக எனது நீதியை எனது முதற்பேறான குமாரர்களின் விருப்பப்படி அவர்களை நிர்வகிக்க அனுமதிப்பேன்.

என்னை அற்பமாகக் கருதுகிறவர்களையும், எனது போஜனம், ஆடை, நித்திரை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறவர்களையும், எனது வெளி விவகாரங்களில் மட்டுமே கலந்துகொள்கிறவர்களையும், எனது பாரத்தைக் கருத்தில் கொள்ளாதவர்களையும், தங்களின் சொந்த செயல்பாடுகளைச் சரியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாதவர்களையும் நான் படிப்படியாகக் கைவிடுவேன். காதுள்ள அனைவருக்கும் இது சொல்லப்படுகிறது.

எனக்காக ஊழியத்தை நிறைவேற்றுகிற யாவரும் சச்சரவு இல்லாமல் கீழ்ப்படிதலுடன் சென்றுவிட வேண்டும். கவனமாக இரு, இல்லையெனில் நான் உன்னைத் தண்டிப்பேன். (இது ஒரு கூடுதலான ஆணை.)

எனது முதற்பேறான குமாரர்கள் இப்போதிருந்து இரும்புக் கோலை எடுத்துக்கொண்டு, எல்லா தேசங்களையும் ஜனங்களையும் ஆளவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் நடந்து செல்லவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் எனது நியாயத்தீர்ப்பையும், நீதியையும், மகத்துவத்தையும் நிறைவேற்றுவதற்கும் எனது அதிகாரத்தை செயல்படுத்தத் தொடங்குவார்கள். எனது குமாரர்களும் எனது ஜனங்களும் இடைவிடாமல் எனக்குப் பயப்படுவார்கள், என்னைத் துதிப்பார்கள், என்னை உற்சாகப்படுத்துவார்கள், என்னை மகிமைப்படுத்துவார்கள், ஏனென்றால் எனது நிர்வாகத் திட்டம் நிறைவேறியிருக்கிறது, எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ஆட்சி செய்ய முடியும்.

இது எனது நிர்வாக ஆணைகளின் ஒரு பகுதியாகும்; இதற்குப் பிறகு, கிரியையானது முன்னேறிச் செல்லும்போது நான் அவற்றை உங்களுக்குச் சொல்வேன். மேலே உள்ள நிர்வாக ஆணைகளிலிருந்து, நான் எனது கிரியையைச் செய்யும் வேகத்தையும், எனது கிரியை எந்த கட்டத்தை எட்டியுள்ளது என்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஒரு உறுதிப்படுத்தலாக இருக்கும்.

நான் ஏற்கனவே சாத்தானை நியாயந்தீர்த்திருக்கிறேன். ஏனென்றால், எனது சித்தம் தடையின்றி இருப்பதாலும், எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் மகிமையை அடைந்திருப்பதாலும், நான் ஏற்கனவே எனது நீதியையும் மகத்துவத்தையும் உலகத்தின் மீதும் சாத்தானுக்குரிய எல்லாவற்றின் மீதும் பயன்படுத்தியிருக்கிறேன். சாத்தானுக்கு எதிராக நான் ஒரு விரலைக்கூட உயர்த்துவதில்லை அல்லது அவன்மீது கவனம் செலுத்துவதும் இல்லை (ஏனென்றால் அவன் என்னுடன் உரையாடக்கூட தகுதியற்றவனாக இருக்கிறான்). நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்கிறேன். எனது கிரியையானது சுமூகமாக, படிப்படியாக முன்னேறுகிறது, மேலும் எனது சித்தமானது பூமி முழுவதும் தடையின்றிப் பரந்திருக்கிறது. இது சாத்தானை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெட்கப்படுத்தியிருக்கிறது, மேலும் அவன் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டான், ஆனாலும் இது எனது சித்தத்தை நிறைவேற்றவில்லை. எனது முதற்பேறான குமாரர்களின் மீதும் எனது நிர்வாக ஆணைகளை நிறைவேற்ற நான் அனுமதிக்கிறேன். ஒருபுறம், அவன் மீதான எனது கோபத்தைக் காண மட்டுமே நான் சாத்தானை அனுமதிக்கிறேன்; மறுபுறம், அவனை எனது மகிமையைக் காண நான் அனுமதிக்கிறேன் (எனது முதற்பேறான குமாரர்கள் சாத்தானின் அவமானத்திற்கு மிகச் சிறந்த சாட்சிகள் ஆவர்). நான் அவனை நேரில் தண்டிப்பதில்லை; மாறாக, எனது முதற்பேறான குமாரர்களுக்கு எனது நீதியையும் மகத்துவத்தையும் செயல்படுத்த அனுமதிக்கிறேன். ஏனென்றால், சாத்தான் எனது குமாரர்களை துஷ்பிரயோகம் செய்திருக்கிறான், எனது குமாரர்களைத் துன்புறுத்தியிருக்கிறான், எனது குமாரர்களை ஒடுக்கியிருக்கிறான், இன்று, அவனது சேவை முடிந்ததும் நான் எனது முதிர்ச்சியடைந்த முதற்பேறான குமாரர்களை அதைக் கண்டுபிடிக்க அனுமதிப்பேன். விழுதலுக்கு எதிராக சாத்தான் வல்லமையற்றவனாக இருக்கிறான். உலகின் அனைத்து தேசங்களின் முடக்கமும் சிறந்த சாட்சியமாக இருக்கிறது; ஜனங்கள் சண்டை போடுவதும் மற்றும் யுத்தத்தில் ஈடுபடும் தேசங்களும் சாத்தானின் ராஜ்யத்தின் வீழ்ச்சியின் வெளிப்படையான வெளிப்பாடுகள் ஆகும். கடந்த காலத்தில் நான் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை என்பதற்கான காரணம் என்னவென்றால் சாத்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதும், படிப்படியாக எனது நாமத்தை மகிமைப்படுத்துவதுமாகும். சாத்தான் முற்றிலுமாக அழிந்து முடிந்ததும், நான் எனது வல்லமையைக் காட்டத் தொடங்குகிறேன்: நான் சொல்வது நடைமுறைக்கு வருகிறது, மேலும் மனுஷக் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிறைவேறும் (இவை விரைவில் வரவிருக்கும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றன). நான் நடைமுறையான தேவன் என்பதாலும், எனக்கு எந்த விதிகளும் இல்லை என்பதாலும், மேலும் எனது நிர்வாகத் திட்டத்தின் மாற்றங்களின்படி நான் பேசுவதாலும், கடந்த காலத்தில் நான் கூறிய விஷயங்கள் நிகழ்காலத்தில் பொருந்தவேண்டிய அவசியமில்லை. உங்கள் சொந்த கருத்துக்களையே பற்றிக்கொண்டிருக்க வேண்டாம்! நான் விதிகளைக் கடைபிடிக்கும் தேவன் அல்ல; என்னுடன், எல்லாம் சுதந்திரமாகவும், தலை சிறந்ததாகவும் மற்றும் முற்றிலும் விடுதலையோடும் இருக்கிறது. ஒருவேளை நேற்று கூறப்பட்டவை இன்று காலாவதியாகி இருக்கலாம், அல்லது ஒருவேளை அது இன்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் (இருப்பினும், எனது நிர்வாக ஆணைகளானது அறிவிக்கப்பட்டிருப்பதால், அவை ஒருபோதும் மாறாது). இவையே எனது நிர்வாகத் திட்டத்தின் படிகளாகும். விதிமுறைகளைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சமும், புதிய வெளிப்பாடுகளும் தோன்றுகின்றன, இதுவே எனது திட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனது வெளிச்சமானது உன்னில் வெளிப்படும், எனது குரலானது பிரபஞ்ச உலகிற்கு வெளிப்படுத்தப்படும். உனக்குப் புரிகிறதா? இதுவே உனது கடமையாகும், நான் உன்னிடம் ஒப்படைத்த பொறுப்பும் இதுதான். ஒரு கணம் கூட நீ இதைப் புறக்கணிக்கக்கூடாது. நான் அங்கீகரிக்கும் ஜனங்களை நான் இறுதிவரை பயன்படுத்துவேன், இது ஒருபோதும் மாறாது. நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதால், எந்த வகையான நபர் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், அதேபோல் எந்த வகையான நபரால் எந்த மாதிரியான காரியத்தைச் செய்ய முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இதுவே எனது சர்வவல்லமையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 88” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 237

நான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரத்தையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டுள்ளது, என் வார்த்தைகளை யாராலும் மாற்ற முடியாது. என் வார்த்தைகள் வெளிவந்தவுடன், என் வார்த்தைகளுக்கேற்ப காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்; இதுவே என் மனநிலையாகும். என் வார்த்தைகள் அதிகாரமுடையவை மற்றும் அவற்றை மாற்றுகிற யாரானாலும் என் தண்டனையை அவமதிக்கிறார்கள், நான் அவர்களை அடித்துக் கீழே தள்ள வேண்டும். தீவிர நிகழ்வுகளில் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அழிவை வருவித்துக் கொள்கிறார்கள் மேலும் அவர்கள் பாதாளத்திற்கு, அல்லது பாதாளக் குழிக்குள் செல்கிறார்கள். இதுவே நான் மனுக்குலத்தைக் கையாளும் ஒரே வழியாகும், அதை மாற்ற மனிதனுக்கு எந்த வழியும் இல்லை, இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும். இதை நினைவில் கொள்ளுங்கள்! எனது ஆணையை அவமதிக்க ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை; காரியங்கள் என் சித்தப்படியே செய்யப்பட வேண்டும்! கடந்த காலத்தில், நான் உங்களைக் கனிவாக நடத்தினேன், நீங்கள் என் வார்த்தைகளை மட்டுமே எதிர்கொண்டீர்கள். ஜனங்களை அடிப்பதைப் பற்றி நான் பேசின வார்த்தைகள் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் இன்று முதல், எனது சித்தத்திற்கு இணங்காத அனைவரையும் தண்டிக்கும்படி அனைத்துப் பேரழிவுகளும் (இவை எனது ஆட்சிமுறை ஆணைகளுடன் தொடர்புடையவை) ஒன்றன்பின் ஒன்றாக வரும். உண்மைகளின் வருகை இருக்க வேண்டும் இல்லையெனில் ஜனங்கள் என் கோபத்தைப் பார்க்க முடியாமல் தங்களை மீண்டும் மீண்டும் சீர்கெடுத்துக் கொள்வார்கள். இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு படியாகும், எனது கிரியையின் அடுத்த படியை நான் இவ்வாறே செய்கிறேன். நான் இதை முன்கூட்டியே உங்களுக்குச் சொல்லுகிறேன், அதனால் நீங்கள் குற்றம் புரிவதையும் நித்திய அழிவை அனுபவிப்பதையும் என்றென்றும் தவிர்க்க முடியும். அதாவது, இன்று முதல் என் முதற்பேறான குமாரர்களைத் தவிர அனைத்து ஜனங்களையும் என் சித்தத்திற்கேற்ப உரிய இடங்களை எடுத்துக் கொள்ளச் செய்வேன், நான் அவர்களை ஒவ்வொருவராகத் தண்டிப்பேன். அவர்களில் ஒருவரைக் கூட நான் தண்டிக்காமல் விட மாட்டேன். நீங்கள் மீண்டும் சீரழியத் துணிகிறீர்கள்! நீ மீண்டும் கலகம் பண்ணத் துணிகிறாய்! நான் எல்லோரிடமும் நீதியாக இருக்கிறேன் என்று முன்பே நான் சொல்லியிருக்கிறேன், நான் கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறேன், இது என் மனநிலை அவமதிக்கப்படக் கூடாது என்பதைக் காண்பிக்க உதவுகிறது. இதுவே என் ஆள்தத்துவமாகும். இதை யாராலும் மாற்ற முடியாது. எல்லா ஜனங்களும் என் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், எல்லா ஜனங்களும் என் மகிமையான முகத்தைப் பார்க்கிறார்கள். அனைத்து ஜனங்களும் எனக்கு முழுமையாக நிச்சயமாகக் கீழ்ப்படிய வேண்டும், இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும். பிரபஞ்சம் முழுவதிலும் மற்றும் பூமியின் கடையாந்தரங்களில் உள்ள அனைத்து ஜனங்களும் என்னைத் துதித்து மகிமைப்படுத்த வேண்டும், ஏனென்றால் நானே தனித்துவமான தேவனானவர், ஏனென்றால் நான் தேவனுடையவர். யாராலும் என் வார்த்தைகளையும் என் பேச்சுக்களையும், என் பிரசங்கத்தையும் நடத்தையையும் மாற்ற முடியாது, ஏனெனில் இவை எனக்கு மட்டுமே சொந்தமானவையும், மிகவும் பழங்காலத்திலிருந்தே நான் கொண்டிருப்பவையும் என்றென்றும் இருக்கக் கூடியவையும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 100” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 238

எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக உங்களை என் ராஜ்யத்திற்குள் கொண்டு சென்றபின், நீங்கள் செய்யவேண்டிய எனது மற்ற கோரிக்கைகள் உள்ளன; அதாவது, இந்த யுகத்தை நான் ஆளுகை செய்வதற்கான சட்டதிட்டங்களின் சாசனத்தை உங்கள் முன் பிரகடனப்படுத்துவேன்:

நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், உங்களால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்; அதாவது, சோதனையின் மத்தியில் சாட்சியம் அளிக்க முடியும். யாராவது என்னை இனிய சொற்களால் ஏமாற்றி, என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயன்றால், அல்லது என் முதுகுக்குப் பின்னால் அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அத்தகையவர்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல், நான் அவர்களைக் கையாள்வதற்காகக் காத்திருக்கும் படிக்கு, துரத்தப்பட்டு என் வீட்டிலிருந்து அகற்றப்படுவார்கள். கடந்த காலங்களில் என்னிடம் விசுவாசமற்றவர்களாகவும், வாரிசுரிமைக்கு ஒவ்வாதவர்களாகவும் இருந்தவர்கள், வெளிப்படையாக என்னை நியாயந்தீர்க்க இன்று மீண்டும் எழுந்தவர்கள்—அவர்களும் என் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள். என் ஜனங்களாக இருப்பவர்கள் தொடர்ந்து என் பாரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே போல் என் வார்த்தைகளை அறியவும் நாட வேண்டும். இதுபோன்றவர்களுக்கு மட்டுமே நான் பிரகாசத்தைத் தருவேன், அவர்கள் நிச்சயமாக என் வழிகாட்டுதலிலும் பிரகாசத்தின் கீழும் வாழ்வார்கள், ஒருபோதும் சிட்சையை எதிர்கொள்வதில்லை. என் பாரங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியவர்கள், தங்கள் சொந்த எதிர்காலங்களைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்துகிறவர்கள்—அதாவது, என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதைத் தங்கள் செயல்களின் நோக்கமாகக் கொள்ளாதவர்கள், அதற்கு மாறாக இலவசச் சலுகைகளைத் தேடுவோர்—இந்தப் பிச்சைக்காரர் போன்ற ஜீவன்களைப் பயன்படுத்துவதற்கு நான் முற்றிலும் மறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் பிறந்த காலத்திலிருந்தே, என் பாரங்களைக் கருத்தில் கொள்வதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இயல்பான அறிவு இல்லாதவர்கள்; அத்தகைய ஜனங்கள் மூளையின் “ஊட்டச்சத்துக் குறைபாட்டால்” பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சில “ஊட்டச்சத்துக்காக” வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமாயிருக்கிறது. அத்தகையவர்களால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. என் ஜனங்கள் மத்தியில், எல்லோரும் என்னை அறிவது ஒரு கட்டாயக் கடமையாகக் கருதப்படுவது முடிவு வரைக்கும் பார்க்கப்படவேண்டும், அதாவது புசிப்பது, உடுத்துவது, மற்றும் தூங்குவது போன்றவை, எப்படி ஒரு கணம் கூட மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ அதுபோல, அதனால் இறுதியில் என்னை அறிவது சாப்பிடுவதைப் போலவே பழக்கமாகிவிடும்—நீங்கள் சிரமமின்றி, நடைமுறையில் கைமுறைப் பழக்கத்தில் அதைச் செய்வீர்கள். நான் பேசும் சொற்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றும் மிகுந்த விசுவாசத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுமையாகத் தன்மயமாக்கப்பட வேண்டும்; அதில் எந்தவொரு ஏனோதானோவென்ற அரை நடவடிக்கைகளும் இருக்க முடியாது. என் வார்த்தைகளில் கவனம் செலுத்தாத எவரும் என்னை நேரடியாக எதிர்ப்பதாகக் கருதப்படுவார்கள்; என் வார்த்தைகளைப் புசிக்காத, அல்லது அவற்றை அறிய முற்படாத எவரும் என்மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதப்படுவார்கள், மேலும் நேரடியாக என் வீட்டின் கதவுக்கு அப்பால் துடைத்தெறியப் படுவார்கள். இது ஏனென்றால், கடந்த காலத்தில் நான் கூறியுள்ளது போல், நான் விரும்புவது ஏராளமான ஜனங்களை அல்ல, ஆனால் சிறப்பானவர்களையே. ஒரு நூறு பேரில், ஒரே ஒருவர் மட்டுமே என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முடிந்தால், அந்த ஒருவருக்குப் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அளிப்பதில் கவனம் செலுத்தும்படிக்கு மற்ற அனைவரையும் நான் விருப்பத்துடன் தூக்கி எறிந்துவிடுவேன். இதிலிருந்து, அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மட்டுமே என்னை வெளிப்படுத்தி எனக்காய் வாழ முடியும் என்பது உண்மையல்ல என்பதை நீங்கள் காணலாம். நான் விரும்புவது கோதுமையே (விதைகள் முழுமையாக இல்லாவிட்டாலும்) களைகளை அல்ல (விதைகள் போற்றத்தக்க அளவுக்கு முழுமையாக இருந்தாலும்கூட). தேடுவதைப் பொருட்படுத்தாமல், மாறாக மந்தமான முறையில் நடந்துகொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற வேண்டும்; அவர்கள் தொடர்ந்து என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரக்கூடாது என்பதற்காக நான் அவர்களை இனி பார்க்க விரும்பவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 5” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 239

நீங்கள் என் வீட்டின் மக்களிடையே இருப்பதால், நீங்கள் என் ராஜ்யத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பதால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் என் தேவைப்பாடுகளின் தரங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஒரு மிதக்கும் மேகத்திற்கு மேலாக இருக்கவேண்டும் என்று நான் கேட்கவில்லை, ஆனால் நீ பிரகாசிக்கும் பனியாக, அதன் சாராம்சத்தைக் கொண்டவனாக, அதற்கும் மேல் அதன் மதிப்பையும் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், நான் பரிசுத்த தேசத்திலிருந்து வருகிறேன், நான் தாமரையைப் போன்றவன் அல்ல, அதற்கு ஒரு பெயர் மட்டுமே உண்டு, சாரம் இல்லை, ஏனென்றால் அது சேற்றில் இருந்து வருகிறது, பரிசுத்தமான தேசத்தில் இருந்து அல்ல. ஒரு புதிய வானம் பூமியில் இறங்கி மேலும் ஒரு புதிய பூமி வானத்தில் பரவியிருக்கும் நேரமே துல்லியமாக நான் மனிதர்களிடையே முறைப்படி கிரியை செய்யும் நேரமாகும். மனிதர்களில் என்னை யார் அறிவார்கள்? நான் வந்த தருணத்தை யார் பார்த்தார்கள்? எனக்கு ஒரு பெயர் உண்டு என்பது மட்டுமல்ல, அதற்கும் மேல், சாரமும் கொண்டுள்ளேன் என்பதை யார் பார்த்தார்கள்? நான் வெண் மேகங்களை என் கையால் விலக்கிவிட்டு வானத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறேன்; விண்வெளியில் என் கையால் ஏற்பாடு செய்யப்படாதது எதுவும் இல்லை, அதற்குக் கீழே, என் வலிமைமிக்க முயற்சியின் சாதனைக்கு யாரும் அவனது அல்லது அவளது சிறு சொந்த முயற்சி மூலமாகவும் பங்களிப்பதில்லை. நான் பூமியிலுள்ள மக்களின் மீது கடுமையான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, ஏனென்றால் நான் எப்போதுமே நடைமுறை தேவனாகவே இருக்கிறேன், ஏனென்றால் நான் மனிதர்களைப் படைத்த சர்வவல்லமையுள்ளவர், அவர்களை நன்கு அறிவேன். எல்லா மக்களும் சர்வவல்லவரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறார்கள். பூமியின் தொலைதூர மூலைகளில் இருப்பவர்கள் கூட என் ஆவியின் கண்காணிப்பை எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்கள் என் ஆவியை “அறிந்திருக்கிறார்கள்” என்றாலும், அவர்கள் இன்னும் என் ஆவியைப் புண்படுத்துகிறார்கள். என் வார்த்தைகள் எல்லா மக்களின் அசிங்கமான முகங்களையும், அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும் தோலுரித்துக் காட்டுகின்றன, மேலும் பூமியிலுள்ள அனைவரையும் என் ஒளியால் தெளிவுபடுத்தி, என் கண்காணிப்புக்கு இடையில் வருமாறு செய்கின்றன. இருப்பினும், அவர்கள் கீழே வீழ்ந்தாலும், அவர்களின் இதயங்கள் என்னிடமிருந்து விலகிச் செல்வதற்குத் துணிவதில்லை. சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில், என் காரியங்களின் விளைவாக என்னை நேசிக்க வாராதவர் யார்? என் வார்த்தைகளின் விளைவாக எனக்காக ஏங்காதவர் யார்? என் அன்பின் விளைவாகப் பாசமான உணர்வுகள் யாரில் பிறக்கவில்லை? சாத்தானின் சீரழிவினால்தான் மனிதர்கள் எனக்குத் தேவையான நிலையை அடைய முடியவில்லை. சாத்தான் கலவரத்தை நடத்தும் மற்றும் வெறித்தனமான சர்வாதிகாரமாக இருக்கும் இந்த யுகம் அல்லது மனிதர்களின் உடல்கள் முழுவதுமாக அசுத்தமாக மூழ்கியிருக்கும் படிக்குச் சாத்தானால் மிதிக்கப்பட்ட காலத்தில்—இன்றைய நாளைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை, எனக்குத் தேவைப்படும் மிகக் குறைந்த தரநிலைகள் கூட மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகின்றன. எப்போது மனிதர்கள் தங்கள் மனச்சோர்வின் விளைவாக என் இருதயத்தைக் கவனித்துக்கொள்ளத் தவறியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை? நான் சாத்தானுக்காகப் பரிதாபப்படுகிறேன் என்று இருக்குமோ? என் அன்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறேன் என்று இருக்குமோ? மக்கள் எனக்குக் கீழ்ப்படியாதபோது, என் இருதயம் ரகசியமாக அழுகிறது; அவர்கள் என்னை எதிர்க்கும்போது, நான் அவர்களைச் சிட்சிக்கிறேன்; அவர்கள் என்னால் இரட்சிக்கப்படும்போது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படும்போது, நான் அவர்களை மிகுந்த கவனத்துடன் போஷிக்கிறேன்; அவர்களை என்னிடம் ஒப்புவிக்கும்போது, என் இதயம் எளிதாகிறது, மேலும் வானத்திலும் பூமியிலும் எல்லாவற்றிலும் பெரிய மாற்றங்களை நான் உடனடியாக உணர்கிறேன். மனிதர்கள் என்னைத் துதிக்கும்போது, நான் எப்படி அதை அனுபவிக்காமல் இருக்க முடியும்? அவர்கள் எனக்குச் சாட்சியம் அளிக்கும்போதும் என்னால் ஆதாயப்படுத்தப்படும்போதும் நான் எப்படி மகிமை அடையாமல் இருக்க முடியும்? இருப்பினும் மனிதர்களின் செயல்பாடுகளும் நடத்தையும் என்னால் நிர்வகிக்கப்படுவதும் வழிகாட்டப்படுவதும் இல்லை என்று இருக்குமோ? நான் வழிகாட்டுதல் வழங்காதபோது, மக்கள் எந்த அசைவும் இன்றி சும்மா இருப்பார்கள்; மேலும், என் முதுகுக்குப் பின்னால், அவர்கள் அந்த “பாராட்டத்தக்க” அசிங்கமான நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள். என்மீது நான் உடுத்திக் கொண்டுள்ள மாம்சத்துக்கு உன் செயல்கள், உன் நடத்தை மற்றும் உன் வார்த்தைகள் எதுவும் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? பல ஆண்டுகளாக நான் காற்றையும் மழையையும் தாங்கிக்கொண்டேன், மனித உலகத்தின் கசப்பையும் நான் அனுபவித்திருக்கிறேன்; இருப்பினும், கவனமான சிந்தனைக்குப்பிறகு, எந்தவிதமான துன்பங்களும் மாம்சமான மனிதர்கள் என்மீது நம்பிக்கை இழக்கும்படிச் செய்யாது, அதுபோலவே எந்தவொரு இனிமையும் மாம்சமான மனிதர்கள் என்மீது வெறுப்பை வளர்த்துக்கொள்ளவோ, மனச்சோர்வடையவோ அல்லது என்னை நிராகரிக்கவோ வழிவகுக்காது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு உண்மையில் ஒரு துன்பம் இல்லாமை அல்லது ஓர் இனிமையின் குறைபாடு ஆகியவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 9” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 240

இன்று, நான் உங்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றதிலிருந்து, நான் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன், எனது சொந்த நோக்கங்கள் உள்ளன. அவற்றை நான் உங்களுக்குச் சொல்வதாக இருந்தால், நீங்கள் உண்மையிலேயே அவற்றை அறிந்து கொள்ள முடியுமா? மனிதனின் மனதின் சிந்தனைகள் மற்றும் மனிதனின் இருதயத்தின் விருப்பங்களை நான் நன்கு அறிவேன்: தங்களுக்கு என்று ஒரு வழியை ஒருபோதும் தேடாதவர் யார்? தங்கள் சொந்த வாய்ப்புகளை ஒருபோதும் நினைக்காதவர்கள் யார்? ஆயினும், மனிதன் ஒரு செறிவுள்ள மற்றும் பளபளக்கும் புத்தியைக் கொண்டிருந்தாலும், யுகங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே நிகழ்ந்ததுபோல் நிகழ்காலம் மாறிவிடும் என்று யாரால் கணிக்க முடிந்தது? இது உண்மையில் உனது சொந்த அகநிலை முயற்சிகளின் பலனா? இது உனது அயராத விடாமுயற்சிக்கான கிரயமா? உனது மனதால் கருதப்பட்ட அழகான ஒப்பனைக்காட்சி இதுதானா? எல்லா மனிதர்களுக்கும் நான் வழிகாட்டவில்லை என்றால், எனது ஏற்பாடுகளிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ளவும் வேறு வழியைக் கண்டுபிடிக்கவும் யாருக்கு இயலக்கூடும்? மனிதனின் கற்பனைகளும் விருப்பங்களும்தான் அவனை இன்றைய நாளுக்கு அழைத்து வந்துள்ளனவா? பலர் தங்கள் முழு வாழ்க்கையிலும் தங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களின் சிந்தனையில் உள்ள தவறுதான் இதற்குக் காரணமா? பலரது வாழ்க்கை எதிர்பாராத மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் நிரம்பியுள்ளது. இது, உண்மையாகவே அவர்கள் மிகக் குறைவாக எதிர்பார்க்கிறார்கள் என்பதால்தானா? ஒட்டுமொத்த மனிதகுலத்திலும் சர்வவல்லமையுடையவரின் பார்வையில் யார் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்? சர்வவல்லமையுடையவரின் முன்குறித்தல் மத்தியில் யார் வாழவில்லை? மனிதனின் வாழ்க்கையும் மரணமும் அவனது விருப்பப்படி நடக்கிறதா? மனிதன் தன் சொந்த விதியைக் கட்டுப்படுத்துகிறானா? பலர் மரணத்திற்காகக் கூக்குரலிடுகிறார்கள், ஆனால் அது அவர்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது; பலர் வாழ்க்கையில் வலிமையானவர்களாகவும், மரணத்திற்குப் பயந்தவர்களாகவும் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியாமல், அவர்கள் மரிக்கும் நாள் நெருங்கி, மரணம் என்ற படுகுழியில் ஆழ்த்துகிறது; பலர் வானத்தைப் பார்த்து ஆழ்ந்து பெருமூச்சு விடுகிறார்கள்; பலர் பலமாகக் கூக்குரலிடுகிறார்கள், தேம்பி அழுது ஒப்பாரி வைக்கிறார்கள்; பலர் சோதனைகளுக்கு மத்தியில் விழுகிறார்கள்; மேலும் பலர் இச்சைகளின் கைதிகளாக மாறுகிறார்கள். மனிதன் என்னைத் தெளிவாகக் காண அனுமதிக்க நான் நேரில் தோன்றவில்லை என்றாலும், பலர், நான் அவர்களைத் தாக்குவேன், நான் அவர்களை அழிந்துபோகுமாறு செய்வேன் என்று ஆழ்ந்த பயம் கொண்டு, என் முகத்தைப் பார்க்க அஞ்சுகிறார்கள். மனிதன் என்னை உண்மையாக அறிந்திருக்கிறானா, அல்லது அவன் அறியவில்லையா? உறுதியாக யாரும் இதனைச் சொல்ல முடியாது. இது அப்படி அல்லவா? நீ எனக்கும் என் தண்டனைக்கும் அஞ்சுகிறாய், ஆனாலும் நீ எழுந்து நின்று என்னை வெளிப்படையாக எதிர்த்து என்மீது நியாயத்தீர்ப்பு வழங்குகிறாய். இது அப்படிப்பட்ட ஒன்று இல்லையா? ஏனென்றால் மனிதன் என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் அவன் என் முகத்தைப் பார்த்ததில்லை அல்லது என் சத்தத்தைக் கேட்டதில்லை. ஆகவே, நான் மனிதனின் இருதயத்திற்குள் இருந்தாலும்கூட, யாருடைய இருதயத்தில் மந்தமாகவும் தெளிவற்றும் நான் இல்லாது இருக்கிறேன்? யாருடைய இருதயத்தில் நான் பரிபூரணமான தெளிவுடன் இருக்கிறேன்? என் ஜனங்களாக இருந்துகொண்டு, தெளிவின்றியும், மனம் மழுங்கியும் அவர்கள் என்னைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை, இதனால் நான் இந்த மாபெரும் கிரியையை மேற்கொள்கிறேன்.

நான் அமைதியாக மனிதனின் மத்தியில் வருகிறேன், நான் மென்மையாகப் புறப்படுகிறேன். யாராவது என்னை எப்போதாவது பார்த்திருக்கிறார்களா? சூரியன், அதன் எரியும் தீப்பிழம்புகள் இருக்கும் காரணத்தால், என்னைப் பார்க்க முடியுமா? சந்திரன், அதன் பளபளக்கும் தெளிவு இருக்கும் காரணத்தால் என்னைப் பார்க்க முடியுமா? விண்மீன்கள் வானத்தில் அவை இடம் பெற்றிருக்கும் காரணத்தால் என்னைப் பார்க்க முடியுமா? நான் வரும்போது, அது மனிதனுக்குத் தெரியாது, அனைத்து ஜீவன்களுமே அதனை அறியாமலே இருக்கின்றன, நான் புறப்படும்போது, அப்போதும் அது மனிதனுக்குத் தெரியாது. எனக்கு யார் சாட்சியமளிக்க முடியும்? இது பூமியிலுள்ள ஜனங்களின் துதியாக இருக்க முடியுமா? வனாந்தரங்களில் மலரும் லீலி புஷ்பங்களாக இருக்க முடியுமா? அவை வானத்தில் பறக்கும் பறவைகளா? அவை மலைகளில் கர்ஜிக்கும் சிங்கங்களா? யாரும் எனக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க முடியாது! நான் செய்யும் கிரியையை யாராலும் செய்ய முடியாது! அவர்கள் இந்தக் கிரியையைச் செய்தாலும், அது என்ன விளைவை ஏற்படுத்தும்? ஒவ்வொரு நாளும் நான் பலருடைய ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் பலருடைய இருதயங்களையும் மனங்களையும் தேடுகிறேன்; என் நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் ஒருபோதும் தப்பவில்லை, என் நியாயத்தீர்ப்பின் யதார்த்தத்தை யாரும் அவர்களாகவே ஒருபோதும் களைவதில்லை. நான் வானத்திற்கு மேலே நின்று வெகு தூரத்திற்குள் பார்க்கிறேன்: எண்ணற்ற ஜனங்கள் என்னால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும், எண்ணிக்கையில் அடங்காத ஜனங்கள் என் கருணை மற்றும் அன்பின் மத்தியில் வாழ்கிறார்கள். நீங்களும் அத்தகைய சூழ்நிலைகளில் வாழவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 11” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 241

பூமியில், மனிதர்களின் இருதயங்களில் நிலைத்திருக்கும் நடைமுறை தேவன் நானே; பரலோகத்தில், எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானன் நானே. நான் மலைகள் மீதேறி, ஆறுகளைக் கடந்து சென்றுள்ளேன், மனிதர்களின் உள்ளேயும் வெளியேயும் நான் அலைந்திருக்கிறேன். நடைமுறை தேவனையே வெளிப்படையாக எதிர்க்கத் தைரியம் கொண்டவர் யார்? சர்வவல்லவரின் ராஜரீகத்திலிருந்து விலகிச்செல்லத் துணிந்தவர் யார்? ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால், பரலோகத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்லத் துணிந்தவர் யார்? மேலும், நான் பூமியில் இருக்கிறேன் என்று மறுக்கமுடியாமல் கூறுவதற்கு தைரியம் கொண்டவர் யார்? நான் வசிக்கும் இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் மனிதர்களில் ஒருவரும் இல்லை. நான் பரலோகத்தில் இருக்கும்போதெல்லாம், நானே இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன், நான் பூமியில் இருக்கும்போதெல்லாம், நானே நடைமுறை தேவன் என்பதனால் இருக்குமா? நிச்சயமாக நான் நடைமுறை தேவனா இல்லையா என்பதை எல்லா சிருஷ்டிகளையும் ஆளுகை செய்கிறவராக இருப்பதாலோ அல்லது மனித உலகின் துன்பங்களை நான் அனுபவிப்பதன் மூலமோ தீர்மானிக்க முடியாது. அதுதான் பிரச்சினை என்றால், எல்லா நம்பிக்கையையும் தாண்டி மனிதர்கள் அறியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லவா? நான் பரலோகத்தில் இருக்கிறேன், ஆனால் நான் பூமியிலும் இருக்கிறேன்; சிருஷ்டியின் எண்ணற்ற பொருட்களின் மத்தியில் நான் இருக்கிறேன், ஆனால் ஜனங்களிடையேயும் நான் இருக்கிறேன். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் என்னை தொடலாம்; மேலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் என்னைப் பார்க்க முடியும். மனிதர்களைப் பொறுத்தவரை, நான் சில நேரங்களில் ஒளிந்திருக்கிறேன், சில சமயங்களில் புலப்படும்படியாக இருக்கிறேன்; நான் உண்மையில் இருப்பதாகத் தெரிகிறது, ஆனாலும் நானும் இல்லை என்று தெரிகிறது. மனிதர்களால் ஆழங்காண முடியாத புரியாத மர்மங்கள் என்னில் உள்ளன. எல்லா மனிதர்களும் என்னில் இருக்கும் இரகசியங்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு நுண்ணோக்கி மூலம் என்னை உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது, இது அவர்களின் இருதயங்களில் அந்தச் சங்கடமான உணர்வை அகற்றும் என்று நம்புகிறார்கள். எனினும், அவர்கள் ஊடுகதிர்களை பயன்படுத்தினாலும், நான் வைத்திருக்கும் எந்த இரகசியங்களையும் மனிதர்களால் எவ்வாறு கண்டறிய முடியும்?

என் கிரியையின் விளைவாக, என் ஜனங்கள் என்னுடன் மகிமையை அடையும் தருணத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை கண்டுபிடிக்கப்பட்டு, சேறு மற்றும் அழுக்கு அனைத்தும் சுத்தமாகத் துடைக்கப்படும், மற்றும் எண்ணற்ற ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள மாசுபட்ட நீர் அனைத்தும், எனது எரியும் நெருப்பில் உலர்ந்துவிடும், இதற்குமேல் அது இருக்காது. அதன்பிறகு, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் அழிந்துவிடும். வலுசர்ப்பத்தால் பறிக்கப்படாமல் இருக்க என் அன்பான பராமரிப்பின் கீழ் இருக்க நீங்கள் உண்மையிலேயே தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் உண்மையில் அதன் வஞ்சகத் தந்திரங்களை வெறுக்கிறீர்களா? எனக்கு வலுவான சாட்சியை யார் அளிக்க இயலும்? என் நாமத்திற்காகவும், என் ஆவியானவர் நிமித்தமாகவும், எனது முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவர்களுடைய எல்லா பலத்தையும் யார் காணிக்கையாக அளிக்க முடியும்? மனித உலகில் ராஜ்யம் இருக்கும் இன்றைய நாள்தான், நான் மனிதர்கள் மத்தியில் நேரில் வந்த காலம். இது அவ்வாறு இல்லையென்றால், எந்தவிதமான நடுக்கமும் இல்லாமல் என் சார்பாகப் போர்க்களத்தில் இறங்கக்கூடிய எவரும் இருக்கிறார்களா? ராஜ்யம் வடிவம் பெறும்படி, என் இருதயம் திருப்தியடையும்படி, மேலும், என்னுடைய நாள் வரும்படி, இதனால் சிருஷ்டியின் எண்ணற்ற பொருட்கள் மறுபடி பிறந்து ஏராளமாக வளரும் காலம் வரும்படி, இதனால் மனிதர்கள் அவர்களுடைய துன்பக் கடலிலிருந்து மீட்கப்படும்படி, நாளைய தினம் வரும்படி, அது அற்புதமாக, மலர்ந்து செழித்து வளரும்படி, மேலும், எதிர்காலத்தின் இன்பம் நிறைவேறும்படி, எனக்காகத் தங்களையே பலியாக்கிக் கொள்வதில் எதனையும் விட்டுவைக்காமல், எல்லா மனிதர்களும் தங்கள் முழு வலிமையுடனும் போராடுகிறார்கள். வெற்றி ஏற்கனவே என்னுடையது என்பதற்கு இது அறிகுறி அல்லவா? இது எனது திட்டம் முடிந்ததற்கான அடையாளம் அல்லவா?

கடைசி நாட்களில் ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் உலகின் வெறுமையை உணருவார்கள், மேலும் ஜீவிதத்துக்கான தைரியம் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இந்தக் காரணத்திற்காக, எண்ணற்ற ஜனங்கள் ஏமாற்றத்தில் இறந்துவிட்டனர், எண்ணற்ற மற்றவர்கள் தங்கள் தேடல்களில் ஏமாற்றமடைந்துள்ளனர், மேலும் எண்ணற்ற மற்றவர்கள் சாத்தானின் கையால் கையாளப்படுவதற்கு வருந்துகிறார்கள். நான் பலரையும் மீட்டு, அவர்களில் பலரையும் ஆதரித்திருக்கிறேன், மேலும், மிகவும் அடிக்கடி, மனிதர்கள் ஒளியை இழந்துவிட்டபோது, அவர்களை மீண்டும் ஒளியுள்ள ஓர் இடத்திற்கு நகர்த்தியுள்ளேன், இதனால் அவர்கள் என்னை வெளிச்சத்திற்குள் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியின் மத்தியில் என்னை அனுபவிப்பார்கள். என் ஒளியின் வருகையின் காரணமாக, என் ராஜ்யத்தில் வாழும் ஜனங்களின் இருதயங்களில் வழிபடுவது வளர்கிறது, ஏனென்றால் நான் மனிதர்கள் நேசிக்கும் ஒரு தேவன்—மனிதர்கள் பாசப்பிணைப்புடன் பற்றிக்கொள்ளும் ஒரு தேவன்—அவர்கள் என் வடிவம் பற்றிய ஒரு நிலையான எண்ணத்தால் நிறைந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இது ஆவியானவர் செயலா அல்லது மாம்சத்தின் செயல்பாடா என்பதைப் புரிந்து கொள்பவர் எவரும் இல்லை. இந்த ஒரு விஷயத்தை விரிவாக அனுபவித்து உணர ஜனங்களுக்கு முழு வாழ்நாளும் எடுத்துக்கொள்ளும். மனிதர்கள் ஒருபோதும் என்னைத் தங்கள் இருதயங்களின் உள்ளார்ந்த ஆழத்தில் இகழ்ந்ததில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஆவிகளின் ஆழத்தில் என்னைப் பற்றிக்கொள்கிறார்கள். என் ஞானம் அவர்களின் அபிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது, நான் செய்யும் கிரியையின் அதிசயங்கள் அவர்களின் கண்களுக்கு ஒரு விருந்து, என் வார்த்தைகள் அவர்களின் மனதைக் கவரும், ஆனாலும் அவற்றை அவர்கள் மிகவும் விருப்பத்துடன் நெஞ்சார நேசிக்கிறார்கள். எனது யதார்த்தம் மனிதர்களை இழப்பிலும், வாயடைத்துப் போகும்படியும், குழப்பத்திலும் ஆழ்த்துகிறது, ஆனாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இது உண்மையிலேயே மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கான துல்லியமான அளவீடு அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 242

1. மனிதன் தன்னைத்தானே மகிமைப்படுத்தவோ, தன்னைத்தானே பெருமைப்படுத்தவோ கூடாது. அவன் தேவனையே தொழுதுகொண்டு அவரையே உயர்த்தவேண்டும்.

2. தேவனின் கிரியைக்கு நன்மையாக இருக்கும் எல்லாவற்றையும் செய்வாயாக மற்றும் தேவனுடைய கிரியையின் நலன்களுக்குப் பாதகமான எதையும் செய்யாதே. தேவனுடைய நாமம், தேவனின் சாட்சி, மற்றும் தேவனின் கிரியை ஆகியவற்றைப் பாதுகாப்பாயாக.

3. பணம், பொருட்கள், மற்றும் தேவனின் வீட்டில் இருக்கும் அனைத்துச் சொத்துக்களும் மனிதனால் கொடுக்கப்பட வேண்டிய காணிக்கைகள் ஆகும். மனிதனின் காணிக்கைகள் தேவன் அனுபவிப்பதற்கானவை, ஆதலால் இந்தக் காணிக்கைகளை ஆசாரியன் மற்றும் தேவன் மட்டுமே அனுபவிக்கலாம். தேவனே இந்தக் காணிக்கைகளை ஆசாரியனுக்குப் பகிர்ந்தளிக்கிறார்; அவற்றில் எந்த ஒரு பகுதியையும் அனுபவிக்க வேறு யாரும் தகுதியுள்ளவர்களோ அல்லது உரிமையுள்ளவர்களோ அல்ல. மனிதனின் எல்லா காணிக்கைகளும் (பணம் மற்றும் அனுபவிக்கக் கூடிய பொருட்கள்) தேவனுக்கு அளிக்கப்படுகின்றன, மனிதனுக்கு அல்ல, ஆகவே இந்தப் பொருட்களை மனிதன் அனுபவிக்கக் கூடாது; மனிதன் அவற்றை அனுபவித்தால், அது காணிக்கையைத் திருடுவது என்பதாகும். இதைச் செய்கிற எவன் ஒருவனும் யூதாஸே, ஏனெனில், யூதாஸ் ஒரு துரோகி மட்டுமல்லாமல், பணப் பையில் போட்டவற்றைத் தனக்காகவும் பயன்படுத்திக்கொண்டான்.

4. மனிதன் ஒரு சீர்கெட்ட மனநிலையைக் கொண்டவன் மற்றும் உணர்ச்சிகளால் ஆட்டிப்படைக்கப்படுகிறவன். இவ்வாறிருக்க, தேவனைச் சேவிக்கும் வேளையில் உடன் யாரும் இல்லாதபோது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலை பார்க்கக்கூடாது. அவ்வாறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்படும் யார் ஒருவரும் விதிவிலக்கின்றி வெளியேற்றப்படுவார்.

5. தேவனைக் குறித்து நியாயந்தீர்க்கவோ அல்லது தேவன் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்து சாதாரணமாக விவாதிக்கவோ கூடாது. மனிதன் செய்யவேண்டியது போல் செய்யுங்கள், மேலும் மனிதன் பேசவேண்டியது போல் பேசுங்கள், மற்றும் வரம்புகளை மீறவோ எல்லைகளைக் கடக்கவோ வேண்டாம். தேவனின் மனநிலையைப் புண்படுத்தும் எதையும் தவிர்க்க உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள் மற்றும் எங்கு அடியெடுத்து வைக்கும்போதும் கவனமாக இருங்கள்.

6. மனிதனால் செய்யப்பட வேண்டியவற்றைச் செய், உன் கடமைகளை நிறைவேற்று, உன் பொறுப்புகளை நிறைவேற்று, மற்றும் கடமையைக் கடைப்பிடி. நீ தேவனை விசுவாசிக்கிறபடியால் நீ தேவனின் கிரியைக்கு உன் பங்களிப்பை வழங்க வேண்டும்; இல்லையென்றால், தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும், பானம் பண்ணவும் உனக்குத் தகுதி இல்லை, மேலும் தேவனுடைய வீட்டில் வாழ்வும் தகுதியற்றவன்.

7. சபையின் கிரியை மற்றும் காரியங்களில், தேவனுக்குக் கீழ்ப்படிவதோடல்லாமல், ஒவ்வொன்றிலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் மனிதனின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். இலேசான மீறுதல் கூட ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஆகும். கீழ்ப்படிதலில் முழுமையுள்ளவர்களாக இருங்கள், மேலும் சரியா தவறா என்று பகுத்தாரய வேண்டாம்; எது சரி அல்லது தவறு என்பது உங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது. நீங்கள் முழுமையான கீழ்ப்படிதலிலேயே அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

8. தேவனை விசுவாசிக்கிறவர்கள் தேவனுக்குக் கீழ்படிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்; யாரொருவரையும் பெருமைப்படுத்தாதே அல்லது நோக்கிப்பார்க்காதே; தேவனை முதலாவதாகவும், நீ நோக்கிப்பார்ப்பவரை இரண்டாவதாகவும், உன்னை மூன்றாவதாகவும் வைக்காதே. உன் இருதயத்தில் யாரொருவரும் இடம்பெறக் கூடாது, மற்றும் நீ ஆட்களை தேவனோடு வைத்தோ அல்லது அவருக்கு இணையாகவோ—குறிப்பாக நீ போற்றுபவர்களைக்—கருதக் கூடாது. இது தேவனால் பொறுத்துக்கொள்ள முடியாதது ஆகும்.

9. சபையின் கிரியையில் உன் சிந்தனைகளை வை. உன் சொந்த மாம்சத்தின் கண்ணோட்டங்களை ஒதுக்கி வை, குடும்ப விஷயங்கள் குறித்துத் தீர்க்கமாக இரு, தேவனின் கிரியைகளுக்கு முழு இருதயத்தோடு உன்னை அர்ப்பணி, தேவனின் கிரியைக்கு முதலிடம் கொடுத்து உன் சொந்த வாழ்க்கையை இரண்டாம் பட்சமாக வை. இதுவே ஒரு பரிசுத்தவானுக்குரிய கண்ணியமாகும்.

10. விசுவாசத்தில் இல்லாத உறவுகளை (உன் குழந்தைகள், உன் கணவன் அல்லது மனைவி, உன் சகோதரிகள் அல்லது உன் பெற்றோர்கள், போன்றோர்) கட்டாயப்படுத்தி சபைக்குள் கொண்டுவரக் கூடாது. தேவனின் வீட்டில் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை, மேலும் பயனற்ற மக்களால் அதன் எண்ணிக்கையை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. சந்தோஷமாக விசுவாசிக்காத எவரையும் சபைக்குள் வழிநடத்தக்கூடாது. இந்தக் கட்டளை எல்லா மக்களுக்குமானது. நீங்கள் சரிபார்த்து, கண்காணித்து, இந்த விஷயம் குறித்து ஒருவருக்கொருவர் நினைவூட்ட வேண்டும்; யாரும் இதை மீறக்கூடாது. விசுவாசத்தில் இல்லாத உறவினர் யாரும் தயக்கத்தோடு சபைக்குள் வந்தாலும், அவர்களுக்குப் புத்தகங்களோ அல்லது ஒரு புதுப் பெயரோ கொடுக்கக் கூடாது; இத்தகையவர்கள் தேவனின் வீட்டார் இல்லை, மேலும் தேவைப்படும் எந்த வழியிலும் அவர்கள் சபைக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும். பிசாசுகளின் ஆக்கிரமிப்பால் சபைக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீதான் வெளியேற்றப்படுவாய் அல்லது உன் மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மொத்தத்தில், இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு, நீ பொறுப்பற்றும் நடந்துகொள்ளக் கூடாது அல்லது அதை பயன்படுத்தித் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்ளவும் கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் காலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய பத்து நிர்வாகக் கட்டளைகள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 243

ஜனங்கள் செய்ய வேண்டிய பல கடமைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் செய்ய வேண்டியதைப் பரிசுத்த ஆவியானவரே செய்யட்டும்; மனிதன் அதில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது. மனிதனால் செய்யப்பட வேண்டியதை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும், அதில் பரிசுத்த ஆவியானவருக்கு எந்த தொடர்புமில்லை. இது மனிதனால் செய்யப்பட வேண்டியதே தவிர வேறொன்றுமில்லை, பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதைப் போலவே இவை கட்டளைகளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இப்போது நியாயப்பிரமாணத்தின் காலமாக இல்லாமல் இருந்தாலும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைகளைப் போலவே பல வார்த்தைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தொடுதலை நம்பியதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, மாறாக, அவை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக:

நடைமுறைத் தேவனின் கிரியை குறித்து நீங்கள் நியாயந்தீர்க்கக்கூடாது.

தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனை நீங்கள் எதிர்க்கக்கூடாது.

தேவனுக்கு முன்பாக, நீங்கள் உங்கள் இடத்தை வைக்க வேண்டும், ஒழுக்கக்கேடாக இருக்கக்கூடாது.

நீங்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனுக்கான ஏற்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

தேவனின் சாட்சியத்தை நீங்கள் கனப்படுத்த வேண்டும். தேவனின் கிரியையையும் அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.

தேவனுடைய வார்த்தைகளின் தொனியையும் நோக்கங்களையும் நீங்கள் பாவனை செய்யக்கூடாது.

வெளிப்படையாகச் சொன்னால், தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனைப் பகிரங்கமாக எதிர்க்கும் எதையும் நீங்கள் செய்யக்கூடாது.

இவை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு காலத்திலும், தேவன் நியாயப்பிரமாணங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய மற்றும் மனிதனால் பின்பற்றப்பட வேண்டிய பல விதிகளைக் குறிப்பிடுகிறார். இதன் மூலம், அவர் மனிதனின் மனநிலையைக் கட்டுப்படுத்தி, அவனது நேர்மையைக் கண்டறிகிறார். உதாரணமாக, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைகள் இன்று பொருந்துவதில்லை; அந்த நேரத்தில், அவை மனிதனின் வெளிப்புற மனநிலைகள் சிலவற்றை மட்டுமே கட்டுப்படுத்தி, தேவன் மீதான மனிதனுடைய விசுவாசத்தின் நேர்மையை நிரூபிக்கப் பயன்படுத்தப்பட்டன, மேலும் தேவனை விசுவாசித்தவர்களின் அடையாளமாக அவை இருந்தன. இப்போது ராஜ்யத்தின் காலமாக இருக்கின்ற போதிலும், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இன்னும் உள்ளன. கடந்த கால விதிகள் பொருந்தாது, இன்றும் மனிதன் செய்ய வேண்டிய, அவனுக்கு அவசியமான, பல பொருத்தமான வழக்கங்கள் உள்ளன. அவை பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஈடுபடுவதில்லை, அவை மனிதனாலேயே செய்யப்பட வேண்டும்.

கிருபையின் காலத்தில், நியாயப்பிரமாணத்தின் கால பல வழக்கங்கள் நீக்கப்பட்டன, ஏனெனில் இந்த நியாயப்பிரமாணங்கள், குறிப்பாக அந்த நேரத்தில் கிரியைக்குப் பயனுள்ளதாக இல்லை. அவை நீக்கப்பட்ட பின்னர், காலத்திற்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன, அவை இன்றைய பல விதிகளாக மாறிவிட்டன. இன்றைய தேவன் வந்தபோது, இந்த விதிகள் கைவிடப்பட்டு, அதற்குமேல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போனது, மேலும் இன்றைய கிரியைக்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. இன்று, இந்த வழக்கங்கள் விதிகளாக இல்லை, மாறாக அவை பலன்களை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன; அவை இன்றைக்கும், நாளைய தினத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன, ஒருவேளை அவை விதிகளாக மாறக்கூடும். மொத்தத்தில், நீ இன்றைய கிரியைக்குப் பலனளிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். நாளைய தினத்தில் கவனம் செலுத்த வேண்டாம்: இன்று செய்யப்படுவது இன்றைய தினத்தின் நிமித்தமாகவே செய்யப்படுகிறது. நாளை வரும்பொழுது, நீ செயல்படுத்த வேண்டிய சிறந்த வழக்கங்கள் இருக்கும், ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். மாறாக, தேவனை எதிர்ப்பதைத் தவிர்ப்பதற்காக இன்று கடைப்பிடிக்க வேண்டியதைக் கடைப்பிடியுங்கள். இன்று, பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதை விட மனிதனுக்கு மிக முக்கியமானது எதுவுமில்லை:

உன் கண்களுக்கு முன்பாக நிற்கும் தேவனை இனிய வார்த்தைகளால் ஏமாற்றவோ, அவரிடமிருந்து எதையும் மறைக்கவோ நீ முயற்சிக்கக்கூடாது.

உன் முன் உள்ள தேவனுக்கு முன்பாக இழிவான அல்லது அகங்காரமான வார்த்தையைச் சொல்லக்கூடாது.

தேவனின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத் தேன் போன்ற இனிமையான வார்த்தைகளாலும் நியாயமான பேச்சுகளாலும், உங்கள் கண்களுக்கு முன்பாக தேவனை வஞ்சிக்கக்கூடாது.

நீங்கள் தேவனுக்கு முன்பாகப் பயபக்தியின்றி செயல்படக்கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் அனைத்திற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அவருடைய வார்த்தைகளைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, வாதிடவோ கூடாது.

தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளுக்கு உங்களுக்குத் தகுந்தமாதிரி நீங்கள் விளக்கமளிக்கக்கூடாது. துன்மார்க்கரின் வஞ்சகமான திட்டங்களுக்கு நீ இரையாகிவிடாமல் இருக்க, உன் நாவினைக் காக்க வேண்டும்.

தேவனால் உனக்காக அமைக்கப்பட்ட எல்லைகளை மீறுவதைத் தவிர்க்க உன் அடிச்சுவடுகளைப் பாதுகாக்க வேண்டும். நீ மீறினால், இது உன்னைத் தேவனின் நிலையில் நின்று, இறுமாப்பாகவும் பகட்டாகவும் பேசும் வார்த்தைகளை உருவாக்கக் காரணமாகிறது, இதனால் நீ தேவனால் வெறுக்கப்படுவாய்.

தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளை நீ கவனக் குறைவாகப் பரப்பக்கூடாது, அவ்வாறு செய்தால் பிறர் உன்னைப் பரியாசம் பண்ணுவார்கள், பிசாசுகள் உன்னை மூடனாக்கும்.

இன்றைய தேவனின் அனைத்து கிரியைகளையும் நீ கடைப்பிடிக்க வேண்டும். நீ அதைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், நீ அது குறித்து நியாயந்தீர்க்கக்கூடாது; நீங்கள் செய்ய வேண்டியது, தேடிச்சென்று ஐக்கியம் கொள்வதாகும்.

எந்தவொரு மனிதனும் தேவனுடைய உண்மையான ஸ்தானத்தை மீறக்கூடாது. மனிதனின் நிலையில் இருந்து இன்றைய தேவனைச் சேவிப்பதைத் தவிர வேறு எதுவும் உன்னால் செய்ய முடியாது. மனிதனின் நிலையிலிருந்து இன்றைய தேவனுக்கு உன்னால் போதிக்க முடியாது, அவ்வாறு செய்வது தவறான வழிகாட்டுதலாகும்.

தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனின் இடத்தில் யாரும் நிற்கக்கூடாது; உன் வார்த்தைகள், செயல்கள் மற்றும் உள்ளார்ந்த எண்ணங்களில், நீ மனிதனின் நிலையில் நிற்கிறாய். இதை மனிதனின் பொறுப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும், இதை யாரும் மாற்றக்கூடாது; அவ்வாறு முயற்சிப்பது நிர்வாக ஆணைகளை மீறுவதாகும். இது அனைவராலும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “புதிய காலத்திற்கான கட்டளைகள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 244

நீங்கள் அடைவதற்கு அநேக காரியங்கள் உள்ளன என நான் நம்புகிறேன், ஆனாலும் நான் கேட்பதை நிறைவேற்ற, உங்கள் கிரியைகள் அனைத்தாலும், உங்கள் ஜீவனைக் குறித்த அனைத்தாலும் முடியவில்லை, எனவே நான் நேராகக் கருத்துக்கு வந்து என் சித்தத்தை உங்களுக்கு விளக்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களின் பகுத்தறிதல் மோசமானதாக இருப்பதாலும் மற்றும் உங்களின் புரிதல் இதேபோல் மோசமானதாக இருப்பதாலும், நீங்கள் எனது மனநிலையையும் சாராம்சத்தையும் முற்றிலும் அறியாதவர்களாக இருக்கின்றீர்கள். ஆகவே அவற்றைக் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஓர் அவசர காரியமாகும். இந்தச் சிக்கல்களை எந்த அளவிற்கு நீ முன்பு புரிந்து கொண்டாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு புரிந்துகொள்ள விரும்பினாலும், அவற்றை நான் இன்னும் விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும். இந்தச் சிக்கல்கள் உங்களுக்கு முற்றிலும் அந்நியமானவை அல்ல, ஆனாலும் உங்களுக்கு அவற்றில் உள்ள அர்த்தத்தைக் குறித்து அதிகப் புரிதலும், அதிக பரிச்சயமும், இருப்பதில்லை. உங்களில் அநேகருக்கு அதைக் குறித்து தெளிவில்லாத மற்றும் ஓரளவு மற்றும் அரைகுறையாக புரிதல் மட்டுமே உள்ளது. சத்தியத்தை நன்றாக கைக்கொள்ள, அதாவது என் வார்த்தைகளை நன்றாக கைக்கொள்ள உங்களுக்கு உதவுவதற்கு இந்தப் பிரச்சனைகளைத்தான் நீங்கள் முதலும் முக்கியமாக அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் விசுவாசம் தெளிவற்றதாகவும், பாசாங்குத்தனமாகவும், மதத்தின் கண்ணிகளால் நிரப்பப்பட்டதாகவும் இருக்கும். தேவனின் மனநிலையை நீ புரிந்து கொள்ளாவிட்டால், நீ அவருக்காகச் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது உனக்கு சாத்தியமில்லை. தேவனின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ அவரிடம் பயபக்தியையும் பயத்தையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, கவனக்குறைவான வேடிக்கையான தன்மையும் இரண்டகம் பேசுவதும் மேலும், திருத்த முடியாத தேவதூஷணமும் மட்டுமே இருக்கும். தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது உண்மையில் முக்கியமானது என்றாலும், தேவனின் சாரத்தை அறிந்து கொள்வதை கவனிக்காதிருக்க முடியாது என்றாலும், இந்த பிரச்சினைகளைக் குறித்து யாரும் முழுமையாக ஆராயவோ அல்லது அதற்குள் மூழ்கிடவோ இல்லை. நான் வழங்கிய நிர்வாகக் கட்டளைகளை நீங்கள் அனைவரும் தள்ளிவிட்டீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது பெரும்பாலும் நிகழக்கூடியதே. அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது தேவனின் கோபத்தைத் தூண்டுவதற்கு ஒப்பாகும், இந்நிலையில் நிர்வாகக் கட்டளைகளை மீறுவதே உன்னுடைய கிரியைகளின் கடைசிப் பலனாக இருக்கும். தேவனின் சாராம்சத்தை நீ அறிந்திருக்கும்போது, அவருடைய மனநிலையையும் நீ புரிந்துகொள்ள முடியும் என்பதை இப்போது நீ உணர வேண்டும். அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ளும்போது, நிர்வாகக் கட்டளைகளையும் நீ புரிந்துகொள்வாய். நிர்வாகக் கட்டளைகளில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தேவனின் மனநிலையைத் தொடுகிறது என்று சொல்லத் தேவையில்லை, ஆனால் அவருடைய மனநிலை எல்லாம் நிர்வாகக் கட்டளைகளுக்குள் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, தேவனின் மனநிலையைப் பற்றிய உங்கள் புரிதலை வளர்ப்பதில் நீங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 245

தேவனின் மனநிலை என்பது அனைவருக்கும் மிகச்சுருக்கமாகத் தெரியும் ஒரு காரியமாகும், மேலும், அது யாரும் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானதல்ல, ஏனென்றால் அவருடைய மனநிலை ஒரு மனிதனின் குணாதிசயத்தைப் போன்றதல்ல. தேவனும், தனது சொந்த உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார், ஆனால் இந்த உணர்ச்சிகள் மனிதனின் உணர்ச்சிகளிலிருந்து வேறுபடுகின்றன. தேவன் தேவன்தான், அவரிடம் உள்ளவற்றையே அவர் பெற்றிருக்கிறார். அவர் வெளிப்படுத்துவதும் மற்றும் தெரியப்படுத்துவதும் எல்லாம் அவருடைய சாராம்சமாகும் மற்றும் அவரது தனித்துவத்தை உருவகப்படுத்துபவையாகும். அவர் என்னவாக இருக்கிறார், அவரிடம் உள்ளவை எவை, அத்துடன் அவருடைய சாராம்சம் மற்றும் தனித்துவத்துவம் ஆகியவை எந்தவொரு மனிதனாலும் மாற்ற முடியாத காரியங்களாகும். அவரது மனநிலையானது மனிதகுலத்தின் மீதான அவரது அன்பு, மனிதகுலத்தின் மீதான ஆறுதல், மனிதகுலத்தின் மீதான வெறுப்பு மற்றும் இன்னும் அதிகமாக, மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதலை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், மனிதனின் குணாதிசயம் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பானதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம். தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, மேன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத ஓர் அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்). அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது. ஆனால் மனிதனின் குணாதிசயம் என்பது மிருகத்தின் மீதான மனிதனின் சிறிய மேன்மையின் வெறும் அடையாளத்திற்கு மேலானதல்ல. மனிதனுக்கு அவனுக்குள்ளும், அவனைப் பற்றியும், எந்த அதிகாரமும் இல்லை, சுய உரிமையும் இல்லை, சுயத்தை மீறும் திறனும் இல்லை, ஆனால் அவனது சாராம்சத்தில் ஜனங்களின் எல்லா வகையான நடத்தைகளின், நிகழ்வுகளின் மற்றும் காரியங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழானவனாக முடங்கிப்போகிறான். இருள் மற்றும் தீமைகள் அழிக்கப்படும் காரணத்தால் நீதியும் வெளிச்சமும் இருப்பதும் மற்றும் வெளிப்படுவதும் தேவனின் சந்தோஷம் ஆகும். மனிதகுலத்திற்கு வெளிச்சத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவருவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது மகிழ்ச்சி ஒரு நீதியான மகிழ்ச்சி, நேர்மறையானவை அனைத்தும் இருப்பதற்கான அடையாளமாகவும், அதைவிட, ஜெயத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தீமை மற்றும் இருள் இருப்பதாலும், சத்தியத்தை விரட்டும் காரியங்கள் இருப்பதாலும், இன்னும் அதிகமாக, நன்மையான மற்றும் அழகாக இருப்பதை எதிர்க்கும் காரியங்கள் இருப்பதாலும், அநீதியின் நிகழ்வும் மற்றும் குறுக்கீடும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கே தேவனின் கோபத்திற்கு காரணமாகும். அவருடைய கோபமானது எதிர்மறையானவை எல்லாம் இனி இருக்காது என்பதற்கான அடையாளமாகும், அதற்கும் மேலாக, அது அவருடைய பரிசுத்தத்தின் அடையாளமாகும். அவருடைய துக்கம் மனிதகுலத்தினால் ஏற்படுகிறது, அவனுக்காக அவர் நம்பிக்கை வைத்துள்ளார், ஆனால் அவன் இருளில் விழுந்திருக்கிறவன், ஏனென்றால் அவர் மனிதனில் செய்யும் கிரியை அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்காது, மேலும் அதனால் அவர் நேசிக்கும் மனிதகுலத்தவர் அனைவருமே வெளிச்சத்தில் வாழ முடியாது. குற்றமற்ற மனிதகுலத்துக்காகவும், நேர்மையான ஆனால் ஏதுமறியாத மனிதனுக்காகவும், நல்லவனாக இருந்தும் தன் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவனுக்காகவும் அவர் துக்கப்படுகிறார். அவரது துக்கமானது அவருடைய நற்குணம் மற்றும் அவரது இரக்கத்தின் அடையாளமாகும், இது அழகு மற்றும் தயவின் அடையாளமாகும். அவருடைய மகிழ்ச்சி, நிச்சயமாக, அவருடைய எதிரிகளைத் தோற்கடித்து, மனிதனின் நேர்மையான எண்ணங்களை ஆதாயமாக்குகிறது. இதை விட, இது எதிரியின் அனைத்து வல்லமைகளையும் வெளியேற்றுவதிலிருந்தும் அழிப்பதிலிருந்தும் எழுகிறது, ஏனென்றால் மனிதகுலம் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையைப் பெறுகிறது. தேவனின் மகிழ்ச்சி மனிதனின் மகிழ்ச்சியைப் போன்றதல்ல. மாறாக, இது நல்ல பழங்களைக் களஞ்சியத்தில் சேர்ப்பது போன்ற உணர்வாகும், இது மகிழ்ச்சியை விட பெரிய உணர்வாகும். இவரது மகிழ்ச்சி, இந்த நேரத்திலிருந்து மனிதகுலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாகும், மேலும் மனிதகுலம் வெளிச்சத்தின் உலகத்தில் நுழைவதின் அடையாளமாகும். மறுபுறம் மனிதகுலத்தின் உணர்ச்சிகள் எல்லாம், நீதிக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ அல்லது அழகானதற்காகவோ, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தால் வழங்கப்பட்ட கிருபைக்காகவோ அல்ல, அவனது சொந்த நலன்களுக்காகவே தோன்றுகின்றன. மனிதகுலத்தின் உணர்ச்சிகள் சுயநலமானவை மற்றும் இருளின் உலகத்தைச் சேர்ந்தவை. அவை தேவனுடைய சித்தத்தின் பொருட்டும் இல்லை, தேவனின் திட்டத்தின் பொருட்டும் இல்லை, எனவே மனிதனையும் தேவனையும் ஒருசேர்ந்தாற்போலப் பேச முடியாது. தேவன் என்றென்றும் உயர்ந்தவர், எப்போதும் மேன்மையுள்ளவர், அதே சமயம் மனிதன் என்றென்றும் இழிவானவன், என்றென்றும் பயனற்றவன். இது ஏனென்றால், தேவன் என்றென்றும் தியாகங்களைச் செய்கிறார், மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். இருப்பினும், மனிதன் என்றென்றும் தனக்காக மட்டுமே மேற்கொண்டு முயலுகிறான். மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர். தேவன் நீதியானதும், நல்லதும், அழகானதுமான எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அதே நேரத்தில் மனிதன் எல்லா அருவருப்புகளையும் தீமையையும் வெளிப்படுத்துவதில் வெற்றியடைகிறான். தேவன் ஒருபோதும் தனது நீதியின் மற்றும் அழகின் சாராம்சத்தை மாற்றமாட்டார், ஆனாலும் மனிதன் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதிக்குத் துரோகம் செய்யவும் தேவனிடமிருந்து விலகிச் செல்வதற்கும் மிகவும் திறனுள்ளவனாக இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 246

நான் பேசிய ஒவ்வொரு வாக்கியத்திலும் தேவனின் மனநிலை இருக்கிறது. நீங்கள் என் வார்த்தைகளைக் கவனமாக நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து பெரிதும் ஆதாயம் அடைவீர்கள். தேவனின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம், ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவனின் மனநிலையைப் பற்றி குறைந்தபட்ச கருத்தாவது இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படியானால், நீங்கள் மேலும் தேவனின் மனநிலையைப் புண்படுத்தாமல் நீங்கள் செய்தவற்றை எனக்கு அதிகமாகக் காண்பிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்போது எனக்கு உறுதியளிக்கப்படும். உதாரணமாக, தேவனை எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தில் வைத்திரு. நீ கிரியை செய்யும்போது, அவருடைய வார்த்தைகளின்படி செய். எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களைத் தேடு, தேவனை அவமதிக்கும் மற்றும் அவமானமான கிரியைகளைச் செய்வதைத் தவிர். உன் இருதயத்தில் எதிர்கால வெறுமையை நிரப்ப தேவனை சிறிதளவேனும் உன் மனதின் பின்புறத்தில் வைக்கக் கூடாது. நீ இதைச் செய்தால், நீ தேவனின் மனநிலையைப் புண்படுத்தியிருப்பாய். மீண்டும், உன் வாழ்நாள் முழுவதும் நீ ஒருபோதும் தேவனுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துக்களையோ, புகார்களையோ கூறுவதில்லை என்பதாலும், மறுபடியும், அவர் உன்னிடம் ஒப்படைத்த எல்லாவற்றையும் நீ சரியாக வெளிப்படுத்த முடிகிறது என்பதாலும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் உன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்க முடிகிறது என்பதாலும், நீ நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக மீறுவதைத் தவிர்ப்பாய். உதாரணமாக, “அவர் தேவன் என்று நான் ஏன் நினைக்கவில்லை?” “இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் சில ஞானத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்,” “என் கருத்துப்படி, தேவன் செய்யும் எல்லாம் சரியானதாக இருக்க அவசியமில்லை,” “தேவனின் மனிதத்தன்மை என்னுடையதை விட உயர்ந்ததல்ல,” “தேவனின் வார்த்தைகள் வெறுமனே நம்பமுடியாதவை,” அல்லது இதுபோன்ற வேறு தவறானக் கருத்துக்களை நீ எப்போதாவது கூறியிருந்தால், உன் பாவங்களை அடிக்கடி அறிக்கையிட்டு மனந்திரும்பும்படி நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இல்லையெனில், நீ ஒருபோதும் மன்னிப்பிற்கான வாய்ப்பைப் பெற மாட்டாய், ஏனென்றால் நீ ஒரு மனிதனை அல்ல, ஆனால் தேவனையே புண்படுத்துகிறாய். நீ ஒரு மனிதனை நியாயந்தீர்க்கிறாய் என்று நீ நம்பலாம், ஆனால் தேவனுடைய ஆவியானவர் அதை அவ்வாறு கருதுவதில்லை. அவருடைய மாம்சத்திற்கு நீ இடறலுண்டாக்குவது அவரை அவமதிப்பதற்கு சமம். இது அப்படியே இருப்பதால், நீ தேவனின் மனநிலையை புண்படுத்தியிருக்கவில்லையா? தேவனுடைய ஆவியானவரால் செய்யப்படும் எல்லாம் மாம்சத்தில் அவருடைய கிரியையைப் பாதுகாப்பதற்காகவும், இந்தக் கிரியை சிறப்பாகச் செய்யப்படுவதற்காகவும் செய்யப்படுகிறது என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இதைப் புறக்கணித்தால், நீ தேவனை விசுவாசிப்பதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாத ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ தேவனின் கோபத்தைத் தூண்டிவிட்டாய், எனவே அவர் உனக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப் பொருத்தமான தண்டனையைப் பயன்படுத்துவார்.

தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வது அற்பமான காரியம் அல்ல. அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில், நீ படிப்படியாகவும் அறியாமலும் தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வாய். இந்த அறிவுக்குள் நீ நுழைந்ததும், உயர்ந்த மற்றும் அழகான நிலைக்குள் நீ அடியெடுத்து வைப்பதை நீ காண்பாய். முடிவில், நீ உன் அருவருப்பான ஆத்துமாவைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும், உன் அவமானத்திலிருந்து மறைந்து கொள்ள இடமில்லை என்று உணருவாய். அந்த நேரத்தில், தேவனின் மனநிலையைப் புண்படுத்துவது குறைவாகவும் அதற்கான உன் நடத்தையும் குறைவாகவும் இருக்கும், உன் இருதயம் தேவனின் இருதயத்திற்கு அருகில் நெருக்கமாக வரும், மேலும் உன் இருதயத்தில் அவர் மீதான அன்பு படிப்படியாக வளரும். இது மனிதகுலம் ஓர் அழகான நிலைக்குள் நுழைவதற்கான அறிகுறியாகும். ஆனால் இதுவரை, நீங்கள் இதை அடைந்திருக்கவில்லை. உங்கள் விதியின் பொருட்டு நீங்கள் அனைவரும் விரைந்து செல்லும்போது, தேவனின் சாராம்சத்தை அறிய முயல்வதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? இது தொடர வேண்டுமா, ஏனென்றால் நீங்கள் தேவனின் மனநிலையை மிகக் குறைவாகவே புரிந்துகொள்வதால் நீங்கள் அறியாமலேயே நிர்வாக கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறுவீர்கள். எனவே, நீங்கள் இப்போது செய்வது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் குற்றங்களுக்கு ஓர் அஸ்திபாரத்தை அமைக்கிறது அல்லவா? நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது எனது கிரியையிலிருந்து விலகியிருக்கவில்லை. நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி அத்துமீறினால், உங்களில் யார் தண்டனையிலிருந்து தப்புவார்கள்? அப்போது எனது கிரியை முற்றிலும் வீணாகியிருக்கும் அல்லவா? எனவே, நான் இன்னும் கேட்கிறேன், உங்கள் சொந்த நடத்தையை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் உங்களிடம் முன்வைக்கும் உயரிய கோரிக்கையும் இதுதான், நீங்கள் அனைவரும் இதைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்கள் ஊக்கமான நோக்கத்தை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கிரியைகள் என் ஆத்திரத்தை மிகவும் தூண்டுகிற ஒரு நாள் வந்தால், பின்விளைவுகள் உங்களுடையதாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், உங்களுக்குப் பதிலாக தண்டனையைத் தாங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 247

தேவன் ஒரு நீதியுள்ள தேவன், மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடரும் வரை, அவர் நிச்சயமாக மனிதனிடம் நடுநிலையானவராக இருப்பார். ஏனென்றால் அவர் மிகவும் நீதியுள்ளவர் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்தால், மனிதனை ஒதுக்கி வைக்க அவரால் முடியுமா? நான் எல்லா மனிதர்களிடமும் நடுநிலையானவராக இருக்கிறேன், எல்லா மனிதர்களையும் என் நீதியுள்ள மனநிலையோடு நியாயந்தீர்க்கிறேன், ஆனாலும் நான் மனிதனிடமிருந்து எதிர்பார்க்கும் தேவைகளுக்குப் பொருத்தமான நிபந்தனைகள் உள்ளன, மேலும் அவர்கள் யார் என்றாலும், எல்லா மனிதர்களாலும் என் தேவைகளானவை நிறைவேற்றப்பட வேண்டும். உன் தகுதிகள் எப்படி இருக்கின்றன, அல்லது அவற்றை நீ எவ்வளவு காலம் கொண்டிருக்கிறாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நீ என் வழியில் நடக்கிறாயா, சத்தியத்தை நேசித்து அதற்காகத் தாகமாயிருக்கிறாயா இல்லையா என்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன். நீ சத்தியத்தைக் கொண்டிராமல், அதற்குப் பதிலாக என் நாமத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி, என் வழியின்படி கிரியை செய்யாமல், அக்கறையோ கவனிப்போ இல்லாமல் வெறுமனே பின்பற்றினால், அந்த நேரத்தில் உன் தீமைக்காக நான் உன்னை அடித்துக் கீழே தள்ளி தண்டிப்பேன், அப்போது சொல்வதற்கு உனக்கு என்ன இருக்கும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று உன்னால் சொல்ல முடியுமா? இன்று, நான் பேசிய வார்த்தைகளுக்கு நீ இணங்கியிருந்தால், நான் அங்கீகரிக்கும் நபர் நீ தான். தேவனைப் பின்தொடரும் போது நீ எப்போதும் கஷ்டப்பட்டிருக்கிறாய், நல்ல மற்றும் கெட்ட காலங்களிலும் அவரைப் பின்தொடர்ந்தாய் என்றும், நல்ல மற்றும் கெட்ட நேரங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டாய் என்றும் நீ சொல்கிறாய், ஆனால் நீ தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளின்படி வாழவில்லை. நீ தேவனுக்காக அங்குமிங்கும் ஓடவும், ஒவ்வொரு நாளும் தேவனுக்காக உன்னையே ஒப்புக்கொடுக்கவும் மட்டுமே விரும்புகிறாய், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ ஒருபோதும் நினைத்ததில்லை. “எப்படியிருந்தாலும், தேவன் நீதியுள்ளவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவருக்காகக் கஷ்டப்பட்டேன், அவருக்காக ஓடினேன், அவருக்காக என்னை அர்ப்பணித்தேன், எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் கடுமையாக உழைத்தேன்; அவர் என்னை நினைவில் வைத்திருப்பது உறுதி,” என்று நீ கூறுகிறாய். தேவன் நீதியுள்ளவர் என்பது உண்மைதான், ஆனாலும் இந்த நீதியானது எந்த அசுத்தங்களாலும் கறைபடவில்லை. அதில் எந்த மனித சித்தமும் இல்லை, அது மாம்சத்தினால் அல்லது மனிதப் பரிவர்த்தனைகளால் களங்கப்படுத்தப்படவில்லை. கலகக்காரர்களாகவும், எதிரானவர்களாவும் உள்ள அனைவரும், அவருடைய வழிக்கு இணங்காத அனைவரும், தண்டிக்கப்படுவார்கள்; யாரும் மன்னிக்கப்படுவதில்லை, யாரும் காப்பாற்றப்படுவதில்லை! சில ஜனங்கள், “இன்று நான் உமக்காக ஓடுகிறேன்; முடிவு வரும்போது, நீர் எனக்கு ஒரு சிறிய ஆசீர்வாதம் தர முடியுமா?” என்று கேட்கிறார்கள். எனவே நான் உன்னிடம், “நீ என் வார்த்தைகளுக்கு இணங்கினாயா?” என்று கேட்கிறேன். நீ பேசும் நீதியானது ஒரு பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. நான் எல்லா மனிதர்களிடமும் நீதியுள்ளவராகவும், நடுநிலைத் தவறாதவனாகவும் இருக்கிறேன் என்றும், கடைசிவரை என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும் மட்டுமே நீ நினைக்கிறாய். “என்னைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவது உறுதி” என்ற எனது வார்த்தைகளுக்கு உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது: என்னைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் தான் என்னால் முழுமையாக ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவர்கள் தான் என்னால் ஜெயம் கொள்ளப்பட்ட பிறகு, சத்தியத்தைத் தேடி, பரிபூரணமாக்கப்படுகிறார்கள். நீ என்ன நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாய்? நீ கடைசி வரை என்னைப் பின்தொடர்வதை மட்டுமே சாதித்திருக்கிறதல்லாமல் வேறு என்ன சாதித்திருக்கிறாய்? நீ என் வார்த்தைகளுக்கு இணங்கியிருக்கிறாயா? எனது ஐந்து தேவைகளில் ஒன்றை நீ நிறைவேற்றியுள்ளாய், ஆனால் மீதமுள்ள நான்கை நிறைவேற்ற உனக்கு எந்த நோக்கமும் இல்லை. நீ வெறுமனே சிக்கலற்ற, எளிதான பாதையைக் கண்டுபிடித்து, அதிர்ஷ்டத்தைப் பெறும் நம்பிக்கையுள்ள மனப்பான்மையுடன் அதைப் பின்தொடர்ந்தாய். உன்னைப் போன்ற ஒரு நபருக்கு என் நீதியான மனப்பான்மை சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், அது நீதியான தண்டனையாகும், மேலும் அது எல்லாப் பொல்லாதவர்களுக்கும் நீதியான தண்டனையாகும்; என் வழியில் நடக்காத அனைவரும் கடைசிவரை பின்பற்றினாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். இது தேவனின் நீதியாகும். மனிதனின் தண்டனையில் இந்த நீதியான மனப்பான்மை வெளிப்படுத்தப்படும்போது, மனிதன் பேச்சில்லாதவன் போலாவான், மேலும் தேவனைப் பின்தொடரும் போதும், அவர் வழியில் நடக்கவில்லை என்று அவன் வருத்தப்படுவான். “அந்த நேரத்தில், நான் தேவனைப் பின்தொடரும் போது கொஞ்சம் கஷ்டம் மட்டுமே அடைந்தேன், ஆனால் தேவனின் வழியில் நடக்கவில்லை. என்ன சாக்குப்போக்குகள் உள்ளன? தண்டிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!” ஆனாலும் அவனது மனதில், “எப்படியிருந்தாலும், நான் கடைசிவரை பின்பற்றினேன், எனவே நீர் என்னைச் சிட்சித்தாலும், அது மிகவும் கடுமையான சிட்சையாக இருக்க முடியாது, மேலும் இந்த சிட்சையைச் செய்தபின்னும் நீர் என்னை விரும்புவீர். நீர் நீதியுள்ளவர் என்று எனக்குத் தெரியும், என்னை என்றென்றும் அவ்வாறு நடத்தமாட்டீர். எல்லாவற்றிற்கும் மேலாக, அழிக்கப்படுபவர்களைப் போல நான் இருக்கவில்லை; அழிக்கப்பட வேண்டியவர்களுக்குக் கடுமையான சிட்சை கிடைக்கும், அதேசமயம் என் சிட்சையோ இலகுவாக இருக்கும்” என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். நீதியான மனநிலை என்பது நீ சொல்வது போல் இல்லை. தங்கள் பாவங்களை அறிக்கைசெய்வதில் தேர்ந்தவர்கள் மென்மையுடன் கையாளப்படுகிறார்கள் என்பது காரியம் அல்ல. நீதியே பரிசுத்தம், இது மனிதனின் குற்றத்தைச் சகிக்கமுடியாத தன்மையுள்ள ஒரு மனநிலையாகும், மேலும் அசுத்தமான மற்றும் மாறாத எல்லாம் தேவனுடைய வெறுப்பின் இலக்காகும். தேவனின் நீதியான மனப்பான்மை சட்டம் அல்ல, ஆனால் நிர்வாகக் கட்டளையாக இருக்கிறது. இது ராஜ்யத்திற்குள்ளான நிர்வாகக் கட்டளையாகும், மேலும் இந்த நிர்வாக கட்டளை என்பது சத்தியத்தைக் கொண்டிராத மற்றும் மாறாத எவருக்கும் நீதியான தண்டனையாகும், மேலும் இரட்சிப்பிற்கு இடமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் வகையின்படி வகைப்படுத்தப்படும்போது, நல்லவர்களுக்குப் பலன் கிடைக்கும், பொல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மனிதனின் இலக்கு தெளிவுபடுத்தப்படும் போது இது நடக்கும். இரட்சிப்பின் கிரியை முடிவுக்கு வரும் காலம் இது, அதன் பிறகு, மனிதனை இரட்சிக்கும் கிரியை இனி செய்யப்படாது, தீமை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 248

நான் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பு, இடறலை நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். மனுஷர் அனைவரும் எம்மால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதால், நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், அவர்கள் கலகம் செய்யக்கூடாது. எனது கிரியையில் தலையிட ஜனங்களுக்கு உரிமை இல்லை, எனது கிரியையிலும் எனது வார்த்தைகளிலும் எது சரி எது தவறு என்பதை ஆராய அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான்தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் எனக்குத் தேவையான அனைத்தையும் பயபக்தியுடனான இருதயத்துடன் அடைய வேண்டும்; அவர்கள் என்னுடன் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது, குறிப்பாக, அவர்கள் எதிர்க்கக்கூடாது. எனது அதிகாரத்தினால் நான் எனது ஜனங்களை ஆளுகிறேன், எனது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவரும் எனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். இன்று நீங்கள் எனக்கு முன்பாக தைரியமாகவும், அகந்தையோடும் இருந்தாலும், நான் உங்களுக்குப் போதிக்கும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும், உங்களிடம் எந்த பயமும் இல்லை என்றாலும், நான் உங்களது கலகத்தன்மையை சகிப்புத்தன்மையுடன் மட்டுமே எதிர்கொள்கிறேன்; சிறிய, அற்பமான புழுக்கள் குப்பையில் உள்ள அசுத்தத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், நான் கோபப்பட்டு எனது கிரியையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நான் வெறுக்கிற எல்லாவற்றின் இருப்பையும் நான் தாங்கிக்கொள்கிறேன், எனது பிதாவின் சித்தத்திற்காக நான் வெறுக்கிற எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொள்கிறேன், எனது வெளிப்பாடுகள் நிறைவடையும் வரை, எனது கடைசி தருணம் வரை நான் இதைச் செய்வேன். கவலைப்படாதே! நாமமிடப்படாத புழுக்கள் இருக்கும் அதே மட்டத்திற்கு என்னால் மூழ்க முடியாது, மேலும் எனது திறமையின் அளவை உன்னுடன் ஒப்பிடவும் மாட்டேன். நான் உன்னை வெறுக்கிறேன், ஆனாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது. நீ எனக்குக் கீழ்ப்படிவதில்லை, ஆனால் உன்னை நான் தண்டிக்கும் நாளில் உன்னால் தப்பித்துக்கொள்ள முடியாது, இது எனது பிதாவினால் எனக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. சிருஷ்டிக்கும் கர்த்தருடன் சிருஷ்டிக்கப்பட்ட புழுவை ஒப்பிட முடியுமா? இலையுதிர்காலத்தில், உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்புகின்றன; நீ உனது “பிதாவின்” வீட்டிற்குத் திரும்பிச் செல்வாய், நான் எனது பிதாவின் பக்கமாகத் திரும்பிச் செல்வேன். நான் அவருடைய கனிவான பாசத்துடன் இருப்பேன், நீ உனது தகப்பனின் நடையை பின்பற்றுவாய். எனது பிதாவின் மகிமை எனக்கு இருக்கும், நீ உன்னுடைய தகப்பனின் அவமானத்தைப் பெறுவாய். நான் நீண்ட காலமாக என்னிடம் வைத்திருந்த உனக்குக் கொடுக்க வேண்டிய சிட்சையைப் பயன்படுத்துவேன், மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீர்கெட்டுப் போயிருக்கும் உன்னுடைய கெட்டுப்போன மாம்சத்துடன் நீ எனது சிட்சிப்பை எதிர்கொள்வாய். சகிப்புத்தன்மையுடன் உனக்குள் எனது வார்த்தைகளின் கிரியையை நான் முடித்திருப்பேன், எனது வார்த்தைகளிலிருந்து பேரழிவை அனுபவிக்கும் பங்கினை நீ நிறைவேற்றத் தொடங்குவாய். நான் இஸ்ரவேலில் மிகுந்த சந்தோஷத்துடன் கிரியை செய்வேன்; நீ அழுது பற்களை நறநறவென கடித்து, ஜீவித்து அப்படியே சேற்றில் விழுந்து இறந்துபோவாய். நான் எனது சுயமான வடிவத்தை மீண்டும் பெறுவேன், இனியும் உன்னுடன் அசுத்தத்தில் இருக்க மாட்டேன், அதே நேரத்தில் நீ உனது சுயமான அருவருப்பான தோற்றத்தை மீண்டும் பெற்று குப்பைக்குள் தொடர்ந்து புதையுண்டு போவாய். எனது கிரியையும் வார்த்தைகளும் நிறைவடைந்தவுடன், அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உனது எதிர்ப்பும் கலகமும் முடிவிற்கு வரும்போது, அது நீ அழுகிற நாளாக இருக்கும். நான் உன்னிடம் அனுதாபப்பட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் பார்க்கவும் மாட்டாய். நான் இனி உன்னுடன் உரையாடலிலும் ஈடுபட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் சந்திக்கவும் மாட்டாய். உனது கலகத்தனத்தை நான் வெறுப்பேன், மேலும் நீ எனது சௌந்தரியத்தை இழப்பாய். நான் உன்னை அடிப்பேன், நீ எனக்காக வருந்துவாய். நான் உன்னிடமிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்வேன், எனக்கான உன்னுடைய கடனை நீ அறிந்து கொள்வாய். நான் உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன், ஆனால் நீ எப்போதும் எனக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பாய். நான் உன்னை வெறுப்பேன், ஏனென்றால் நீ தற்போது என்னை எதிர்க்கிறாய், நீ என்னை இழக்க நேரிடும், ஏனெனில் நான் தற்போது உன்னை சிட்சிக்கிறேன். நான் உன்னுடன் ஜீவிக்க விரும்பவில்லை, ஆனால் நீ அதற்காகக் கடுமையாக ஏங்கி நித்தியமாக அழுவாய், ஏனென்றால் நீ என்னிடம் செய்த எல்லாவற்றிற்கும் நீ வருந்துவாய். உனது கலகத்தன்மை மற்றும் எதிர்ப்பிற்காக நீ வருந்துவாய், நீ வருத்தத்துடன் தரையில் முகங்குப்புற எனது முன் விழுந்து, மீண்டும் ஒருபோதும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வாய். இருப்பினும், உனது இருதயத்தில், நீ என்னை நேசிக்க மட்டுமே செய்வாய், ஆனாலும் உன்னால் ஒருபோதும் எனது சத்தத்தைக் கேட்க முடியாது. உன்னை எண்ணி நீயே வெட்கங்கொள்ளச் செய்வேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 249

தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்குத் துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்குத் தந்திடாத மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் அல்ல, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனுக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனுக்குலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனுக்குலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனுக்குலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனுக்குலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்தக் கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு அலுவலாக இருந்தது பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக, போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய்க் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. உபத்திரவத்தின் காலத்திலே உங்களுடைய அன்பும், விசுவாசமும் ஆழம் இல்லாமல் இருந்ததினால், அப்போது உங்களுடைய செயல்கள் முற்றிலும் பொருத்தமானது என்று கருத முடியாது, ஒன்று நீங்கள் உங்களைக் கோழையாகவோ அல்லது கடுமையாகவோ காட்டியிருப்பீர்கள். அதைப் பொறுத்தவரை நன்மையா அல்லது தீமையா என்று மாத்திரமே நான் ஒரு நியாயத்தீர்ப்பு வழங்குவேன். என் அக்கறை எல்லாம் நீங்கள் எந்த வழியில் நடக்கிறீர்கள் என்பதிலும், எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலுமே தொடர்கிறது, அதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவை நான் தீர்மானிப்பேன். எனினும், என் இரக்கம் அதுவரையே நீட்டிக்கப் பட்டிருப்பதால், உபத்திரவத்தின் காலத்திலே சிறிதளவாயினும் விசுவாசத்தைக் காட்டாதவர்களுக்கு நான் நிச்சயமாக அதற்குமேல் இரங்குவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என்னை காட்டிக்கொடுத்த அல்லது துரோகம் செய்த யார்மீதும் நான் அதற்குமேல் என் விருப்பத்தை வைப்பதில்லை. தன் நண்பர்களின் நன்மையை விற்றுப் போடுபவர்களிடமும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. யார் அந்த நபராக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. என் இருதயத்தை உடைப்பவர்கள் யாராயினும் என்னிடமிருந்து இரண்டாம் முறை கருணையைப் பெற முடியாது என்பதை நான் உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். மேலும் எனக்கு உண்மையாக இருப்பவர்களோ என் இருதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 250

தேவன் பூமிக்கு வந்தபோது, அவர் உலகத்துக்கு உரியவராக இல்லை, மற்றும் உலகத்தை அனுபவிக்க அவர் மாம்சமாக மாறவில்லை. எங்கு அவரது கிரியை அவரது மனநிலையை வெளிப்படுத்துமோ மற்றும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ அந்த இடத்தில்தான் அவர் பிறந்தார். அது பரிசுத்தமான தேசமாக இருந்தாலும் சரி அல்லது இழிவான தேசமாக இருந்தாலும் சரி, மற்றும் அவர் எங்கு கிரியை செய்தாலும் சரி, அவர் பரிசுத்தமானவர். சாத்தானால் அனைத்தும் சீர்கெடுக்கப்பட்டிருந்தாலும் பூமியில் உள்ள யாவும் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவையே. இருப்பினும், இன்னும் எல்லா காரியங்களும் அவர்க்கு உரியவையே; அவை எல்லாம் அவருடைய கரங்களிலேயே இருக்கின்றன. அவர் இழிவான ஒரு தேசத்துக்கு வருகிறார், தமது பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்படி அங்கு கிரியை செய்கிறார்; அவரது கிரியைக்காக மட்டுமே அவர் இதைச் செய்கிறார், இந்த இழிவான தேசத்தின் ஜனங்களை இரட்சிக்கும் பொருட்டு இத்தகையக் கிரியையைச் செய்வதற்காக அவர் பெரும் அவமானத்தைச் சகித்துக்கொள்ளுகிறார் என்பது இதன் அர்த்தம். அனைத்து மனுக்குலத்துக்கும் சாட்சியாக விளங்கும்படி இது செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கிரியை ஜனங்களுக்கு காண்பிப்பது தேவனுடைய நீதி ஆகும். தேவனின் மேலாதிக்கத்தை இதனால் சிறந்த முறையில் காண்பிக்க முடியும். பிறரால் வெறுக்கப்படும் ஒரு தாழ்ந்த மக்கள் குழுவின் இரட்சிப்பில் அவரது மகத்துவமும் நேர்மையும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஓர் இழிந்த தேசத்தில் பிறந்தது அவரைத் தாழ்ந்தவர் என்று நிச்சயமாக நிரூபிக்கவில்லை; அவரது மாட்சிமையையும், மனுக்குலத்தின் மேல் அவருக்குள்ள உண்மையான அன்பையுமே அது அனைத்து சிருஷ்டிகளும் காண அனுமதிக்கிறது. அவர் இவ்வாறு அதிகமாகச் செய்யும் போது, அது இன்னும் அதிகமாக அவருடைய பரிசுத்தமான அன்பையும், மனுஷனிடம் அவருக்குள்ள மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது. தேவன் பரிசுத்தமானவரும் நீதியுள்ளவரும் ஆவார். கிருபையின் காலத்தில் இயேசு பாவிகளோடு வாழ்ந்தது போல, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்திருந்தாலும் கூட, முற்றிலும் இழிவான ஜனங்களோடு அவர் ஜீவித்துவரும் போதும், அவரது கிரியையின் ஒவ்வொரு பகுதியும் முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக வேண்டி செய்யப்படவில்லையா? மனுக்குலம் மாபெரும் இரட்சிப்பை அடைவதற்காக அல்லவா இவை எல்லாம் செய்யப்படுகின்றன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பல ஆண்டுகள் அவர் பாவிகளோடு வாழ்ந்தார். அது மீட்பின் பணிக்காக. இன்று, அவர் இழிவான, தாழ்ந்த ஒரு ஜனக்குழுவுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இது இரட்சிப்புக்காக. அவரது கிரியைகள் யாவும் மனுக்குலமாகிய உங்களுக்காக அல்லவா? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், ஒரு மாட்டுக்கொட்டிலில் பிறந்து பல ஆண்டுகள் பாவிகளோடு ஜீவித்து அவர் ஏன் துன்பப்பட்டிருக்க வேண்டும்? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், அவர் ஏன் இரண்டாவது முறையாக மாம்ச தேகத்துக்குத் திரும்பிவந்து, பிசாசுகள் கூடும் இந்த தேசத்தில் பிறந்து, சாத்தானால் ஆழமாக சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனங்களோடு ஜீவிக்க வேண்டும். தேவன் உண்மையுள்ளவர் இல்லையா? அவருடைய கிரியையில் எந்தப் பகுதி மனுக்குலத்துக்கானது அல்ல? எந்தப் பகுதி உங்கள் விதிக்கானது அல்ல? தேவன் பரிசுத்தமானவர்—இது மாற்ற முடியாதது. அவர் ஓர் இழிவான தேசத்துக்கு வந்திருக்கும் போதிலும் அவர் இழிவானவற்றால் அசுத்தமாக மாட்டார்; மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு மிகமிக சுயநலமற்றது மேலும் அவர் சகித்துக்கொள்ளும் துன்பமும் அவமானமும் மிகமிக அதிகமானது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்! உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் அவர் எவ்வளவு பெரிய அவமானத்தால் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும் ஜனங்களையும் அல்லது பணக்கார மற்றும் வலிமைமிக்க குடும்பங்களின் குமாரர்களையும் இரட்சிப்பதற்கு மாறாக, கீழாகவும் அற்பமாகவும் பார்க்கப்படுபவர்களை இரட்சிப்பதையே அவர் முக்கியமாகக் கருதுகிறார். இவை எல்லாம் அவருடைய பரிசுத்தம் அல்லவா? இவை எல்லாம் அவருடைய நீதி அல்லவா? முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்து ஒவ்வொரு அவமானத்தையும் தாங்குவார். தேவன் மிக உண்மையானவர்—அவர் பொய்யான கிரியைகளைச் செய்யமாட்டார். கிரியையின் ஒவ்வொரு கட்டமும் இத்தகைய நடைமுறைக்குகந்த வழியில் செய்யப்படவில்லையா? எல்லா ஜனங்களும் அவதூறாக அவர் பாவிகளோடு உண்கிறார் என்று கூறினாலும், ஜனங்கள் எல்லாம் அவரைக் கேலி செய்து அவர் இழிவான மற்றும் கீழான ஜனங்களோடு வாழ்கிறார் என்று சொன்னாலும், அவர் இன்னும் தம்மை சுயநலமில்லாமல் அளிக்கிறார், மேலும் இவ்வாறு அவர் இன்னும் கூட மனுக்குலத்தால் புறக்கணிக்கப்படுகிறார். அவர் சகிக்கும் துன்பம் உங்களுடையதை விடப் பெரிதல்லவா? நீங்கள் செலுத்திய கிரயத்த்தை விட அதிகமான கிரியையை அல்லவா அவர் செய்கிறார்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 251

இந்த அருவருப்பான மற்றும் சீர்கேடான ஜனங்களுக்குள் தமது கிரியையைச் செய்யும் அளவிற்கு தேவன் தம்மையே தாழ்த்தியுள்ளார், மேலும் அவர் இந்த ஜனக்குழுவை பரிபூரணப்படுத்துகிறார். தேவன் மனிதர்களிடையே வாழவும், போஜனம்பண்ணவும், ஜனங்களை மேய்க்கவும், ஜனங்களுக்குத் தேவையானதை வழங்கவும் மட்டுமே மாம்சமாகவில்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் தமது வல்லமையான இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார் மற்றும் சகித்துக் கொள்ள முடியாத சீர்கேடான ஜனங்களை ஜெயங்கொள்ளுகிறார். ஜனங்களில் இந்த மிகச் சீர்கேடானவர்களை இரட்சிக்கவும், இதனால் அனைத்து ஜனங்களும் மாற்றப்பட்டு, புதியவர்களாக மாறவும் அவர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் இதயத்திற்கு வந்தார். தேவன் சகிக்கும் பெரிதான கஷ்டம் தேவனுடைய மனுவுரு சகிக்கும் கஷ்டம் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுடைய ஆவியானவர் மிகுந்த அவமானத்தை அனுபவிக்கிறார், அவர் ஒரு சாதாரண நபராக மாறும் அளவிற்கு தம்மையே தாழ்த்தி மறைத்துக் கொள்கிறார். அவர் சாதாரண மனித வாழ்க்கையையும் சாதாரண மனிதனின் தேவைகளையும் கொண்டிருப்பதை ஜனங்கள் பார்க்கும்படி, தேவன் மனுவுருவெடுத்து மாம்ச ரூபத்தை எடுத்தார். தேவன் மிகப் பெரிய அளவிற்குத் தம்மையே தாழ்த்தினார் என்பதை நிரூபிக்க இது போதுமானதாகும். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் உணரப்படுகிறார். அவரது ஆவியானவர் மிக உயர்ந்தவரும் பெரியவரும் ஆவார், ஆனாலும் அவருடைய ஆவியானவரின் கிரியையைச் செய்வதற்காக அவர் ஒரு சாதாரண மனித ரூபத்தை, ஓர் அற்பமான மனித ரூபத்தை எடுத்துக் கொள்கிறார். உங்கள் ஒவ்வொருவரின் தகுதிப்பாடும், உள்ளுணர்வும், உணர்வும், மனிதத்தன்மையும் மற்றும் வாழ்க்கையும் இவ்வகையான தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ள நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. உனக்காக இத்தகைய கஷ்டங்களை தேவனைச் சகிக்க அனுமதிப்பதற்கு நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள். தேவன் மிகவும் பெரியவர். அவர் மிகவும் உயர்ந்தவர், ஜனங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள், ஆனாலும் அவர் இன்னும் அவர்களிடம் கிரியை செய்கிறார். அவர் ஜனங்களுக்கு வழங்குவதற்காக, ஜனங்களிடம் பேசுவதற்காக மனுவுரு எடுத்தது மட்டுமின்றி, அவர் ஜனங்களுடனும் ஒன்றாக வாழ்கிறார். தேவன் மிகவும் தாழ்மையானவர், மிகவும் அன்பானவர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “செயல்படுத்தலில் கவனம் செலுத்துபவர்களை மட்டுமே பரிபூரணப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 252

மனுக்குலத்தின் கிரியைக்காக தேவன் சகித்திருக்கிற உறக்கமற்ற இரவுகள் பல உள்ளன. உயரத்திலிருந்து மிகக் தாழ்வான ஆழத்திற்கு, மனுஷன் வாழ்கிறதான, வாழ்ந்துகொண்டிருக்கிற நரகத்தில் மனுஷனுடன் தன் நாட்களைக் கழிக்க அவர் இறங்கி வந்திருக்கிறார், மனுஷனிடையே உள்ள இழிநிலையைப் பற்றி அவர் ஒருபோதும் குறை கூறவுமில்லை, அவனது கீழ்ப்படியாமைக்காக மனுஷனை நிந்திக்கவுமில்லை, ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதால் மிகப்பெரிய அவமானத்தைத் தாங்குகிறார். தேவன் எப்படி நரகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும்? அவர் தமது ஜீவனை எப்படி நரகத்தில் கழிக்க முடியும்? ஆனால், முழு மனிதகுலத்திற்காக, முழு மனிதகுலமும் விரைவில் இளைப்பாற வேண்டும் என்பதற்காக, அவர் பூமிக்குவரும்படி, அவர் அவமானங்களைத் தாங்கி, அநீதியைச் சகித்துக்கொண்டு, மனுஷனை இரட்சிக்க, தனிப்பட்ட முறையில் புலியின் குகைக்குள், “நகரம்” மற்றும் “பாதாளத்திற்குள்” பிரவேசித்தார். தேவனை எதிர்க்க மனுஷன் எப்படித் தகுதியுள்ளவனாகிறான்? அவன் தேவனைப் பற்றிக் குறைகூறக் காரணம் என்ன? தேவனை நோக்கிப் பார்க்க அவனால் எப்படி துணிச்சலைப் பெற்றிருக்க முடியும்? பரலோக தேவன் இந்த மிகவும் அசுத்தமான தேசத்திற்கு வந்துள்ளார், மேலும் ஒருபோதும் தனது மனவருத்தங்களை வெளிப்படுத்தியதில்லை, அல்லது மனுஷனைப் பற்றிக் குறைகூறியதில்லை, மாறாக மனுஷனின் நாசமாக்குதல்[1] மற்றும் ஒடுக்குமுறையை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார். மனுஷனின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அவர் ஒருபோதும் பதிலடி கொடுத்ததில்லை, மனுஷனிடம் அதிகப்படியான கோரிக்கைகளை வைத்ததில்லை, மனுஷனிடம் அநியாயமான கோரிக்கைகளை அவர் ஒருபோதும் வைத்ததுமில்லை; அவர் மனுஷனுக்குத் தேவையான அனைத்து கிரியைகளையும்: போதித்தல், பிரகாசிப்பித்தல், கடிந்துகொள்ளுதல், வார்த்தைகளைப் புடமிடுதல், நினைவூட்டுதல், அறிவுறுத்துதல், ஆறுதல்படுத்துதல், நியாயத்தீர்ப்பளித்தல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றைக் குறைகூறாமல் செய்கிறார். அவருடைய படிகளில் எது மனுஷனுடைய வாழ்க்கைக்காக இருக்கவில்லை? மனுஷனின் வாய்ப்புகளையும் விதியையும் அவர் நீக்கிவிட்டாலும், தேவனால் செயல்படுத்தப்பட்ட எந்தப் படி மனுஷனின் தலைவிதிக்காக இல்லை? அவற்றில் எது மனுஷனின் பிழைப்புக்காக இருக்கவில்லை? இந்த துன்பத்திலிருந்தும், இரவைப் போல இருண்ட அந்தகார வல்லமைகளின் அடக்குமுறையிலிருந்தும் மனுஷனை விடுவிக்க அவைகளில் எது இருந்ததில்லை? அவற்றில் எது மனுஷனுக்காக இல்லை? ஒரு அன்பான தாயின் இருதயத்தைப் போல் இருக்கிற தேவனுடைய இருதயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய வாஞ்சையுள்ள இருதயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய உணர்ச்சிமிக்க இருதயம் மற்றும் தீவிர எதிர்பார்ப்புகள் உணர்வற்ற இருதயங்களுடனும், இரக்கமற்ற, அலட்சியமான கண்களுடனும், மனுஷனின் தொடர்ச்சியான நிந்தனைகள் மற்றும் அவமதிப்புகளாலும் திருப்பிச் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன; கடுமையான கருத்துக்கள், பழிச்சொல் மற்றும் சிறுமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் அவைகள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன; மனுஷனின் பரியாசத்துடனும், அவனுடைய நசுக்குதல் மற்றும் நிராகரிப்புடனும், அவனுடைய தவறான புரிதல்கள், புலம்பல், பிரிதல், தவிர்த்தல் மற்றும் வஞ்சகம், தாக்குதல்கள் மற்றும் கசப்புடன் மட்டுமே அல்லாமல் வேறொன்றினாலும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. தயையுள்ள வார்த்தைகள் கடுமையான புருவங்களையும், அசையும் ஆயிரம் விரல்களின் பலமான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளன. தேவனால் தலையைத் தாழ்த்தி, விருப்பமுள்ள எருது போல் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய மட்டுமே முடியும்.[2] அநேக முறை சூரியன்களையும் சந்திரன்களையும், அநேக முறை நட்சத்திரங்களையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார், அநேக முறை விடியற்காலையில் புறப்பட்டுச் சென்று அந்தி சாயும் வேளையில் திரும்பியிருக்கிறார், அவர் தம்முடைய பிதாவை விட்டுப் பிரிந்த வேதனையைவிட ஆயிரம் மடங்கு அதிக வேதனையைச் சகித்துக் கொண்டு, மனுஷனின் தாக்குதல்களையும் முறிவடைதலையும், மற்றும் மனுஷனின் நடத்துதலையும் கிளைநறுக்குதலையும் சகித்துக்கொண்டு அலைந்து திரிந்தார். தேவனுடைய மனத்தாழ்மை மற்றும் மறைந்திருக்கும் தன்மை மனுஷனின் தவறான பாரபட்சத்துடனும்[3], மனுஷனுடைய நியாயமற்ற பார்வைகளுடனும் மற்றும் நியாயமற்ற நடத்துதலுடனும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன, மேலும் அமைதியான முறையில் தேவன் மறைவில் கிரியை செய்வது, அவரது பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை மனுஷனின் பேராசை கொண்ட பார்வையால் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கின்றன; மனுஷன் மனச்சாட்சியில் உறுத்தல் இல்லாமல், தேவனை மிதித்துக் கொல்ல முயற்சிக்கிறான், மேலும் தேவனைத் தரையில்போட்டு மிதிக்க முயற்சிக்கிறான். தேவனை நடத்துவதில் மனுஷனின் மனப்பான்மை “அரிய புத்திசாலித்தனம்” ஆகும், மேலும், மனுஷனால் கொடுமைப்படுத்தப்படும் மற்றும் அலட்சியப்படுத்தப்படும் தேவன், பல்லாயிரக்கணக்கான ஜனங்களுடைய கால்களுக்குக் கீழே நேரடியாக நசுக்கப்படுகிறார், அதே நேரத்தில், மலையின் ராஜாவாக இருக்கப்போவதைப் போல, முழுமையான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும்[4], திரைக்குப் பின்னால் இருந்து நீதிமன்றத்தை நடத்தவும், அவரை எதிர்த்துப் போராடவோ அல்லது தொந்தரவு செய்யவோ அனுமதிக்கப்படாதவனாக, திரைக்குப் பின்னால் மனச்சாட்சி மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படும் இயக்குநராக தேவனை மாற்றவும் விரும்புவது போல மனுஷன் தான்மட்டுமே உயர்ந்து நிற்கிறான். தேவன் கடைசி பேரரசரின் பங்கை ஆற்ற வேண்டும், அவர் எல்லா சுதந்திரமும் அற்ற ஒரு பொம்மையாக[5] இருக்க வேண்டும், மனுஷனுடைய கிரியைகள் சொற்களால் வெளிப்படுத்த முடியாதவை, அப்படியானால், தேவனிடம் இதையும் அதையும் கோருவதற்கு அவன் எப்படித் தகுதியுள்ளவனாவான்? தேவனிடம் ஆலோசனைகளை முன்வைக்க அவன் எப்படித் தகுதியுள்வனாவான்? அவனுடைய பலவீனங்களுக்கு தேவன் அனுதாபம் காட்ட வேண்டும் என்று கோருவதற்கு அவன் எப்படித் தகுதியுள்ளவனாவான்? தேவனுடைய இரக்கத்தைப் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? தேவனுடைய பெருந்தன்மையை மீண்டும் மீண்டும் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? தேவனுடைய மன்னிப்பை மீண்டும் மீண்டும் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? அவன் மனச்சாட்சி எங்கே? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுடைய இருதயத்தை உடைத்துவிட்டான், அவன் நீண்ட காலமாக தேவனுடைய இருதயத்தைத் துண்டு துண்டாக்கிவிட்டான். சிறிதளவு அரவணைப்புடன் மட்டுமே இருந்தாலும், மனுஷன் தன்னிடத்தில் கருணையுடன் இருப்பான் என்ற நம்பிக்கையில், தேவன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் மனுஷர்களிடையே வந்தார். ஆயினும், தேவனுடைய இருதயம் மனுஷனால் ஆறுதல் பெறத் தாமதமாகிறது, அவர் பெற்றதெல்லாம் பனிப்பந்து[6] தாக்குதல்கள் மற்றும் வேதனைகள் மட்டுமே ஆகும். மனுஷனின் இருதயம் மிகவும் பேராசை கொண்டது, அவனது ஆசை மிகவும் அதிகமாக உள்ளது, அவனால் ஒருபோதும் திருப்தியடைய முடிவதில்லை, அவன் எப்போதும் தீங்கு விளைவிப்பவனாகவும், மூடத்தனமானவனாகவும் இருக்கிறான், அவன் எந்த சுதந்திரத்திற்கும் பேச்சுரிமைக்கும் தேவனை அனுமதிப்பதில்லை, மேலும், தேவன் அவமானத்திற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக விட்டுவிடுகிறான், மற்றும் மனுஷன் தன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அவரைக் கையாள அவனை அனுமதிக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (9)” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

1. “நாசமாக்குதல்” என்பது மனிதகுலத்தின் கீழ்ப்படியாமையை அம்பலப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

2. “கடுமையான புருவங்களையும், அசையும் ஆயிரம் விரல்களின் பலமான எதிர்ப்பையும் எதிர்கொண்டு, தலையைத் தாழ்த்தி, விருப்பமுள்ள எருது போல் ஜனங்களுக்கு ஊழியம் செய்தல்” என்பது முதலில் ஒரே வாக்கியமாக இருந்தது, ஆனால் இங்கே, விஷயங்களைத் தெளிவாக்குவதற்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்கியத்தின் முதல் பகுதி மனுஷனின் செயல்களைக் குறிக்கிறது, அதேநேரத்தில் இரண்டாவது வாக்கியம் தேவன் அனுபவித்த துன்பங்களையும், தேவன் தாழ்மையானவர் மற்றும் மறைவாக இருக்கிறவர் என்பதையும் குறிக்கிறது.

3. “பாரபட்சத்துடனும்” என்பது ஜனங்களுடைய கீழ்ப்படியாத நடத்தையைக் குறிக்கிறது.

4. “முழுமையான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும்” என்பது ஜனங்களுடைய கீழ்ப்படியாத நடத்தையைக் குறிக்கிறது. அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள், மற்றவர்களைக் கட்டிப்போடுகிறார்கள், தங்களைப் பின்பற்றச் செய்கிறார்கள், தங்களுக்காகத் துன்பப்பட வைக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமான வல்லமைகள்.

5. “பொம்மை” என்பது தேவனை அறியாதவர்களை பரியாசம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

6. “பனிப்பந்து” என்பது ஜனங்களின் தாழ்ந்த நடத்தையை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்படுகிறது.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 253

இயேசு சிலுவையில் அறையப்பட்டது போல தேவன் செய்யும் எல்லாவற்றின் முக்கியத்துவத்திலும் கணிசமான ஆழம் இருக்கிறது. இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது? அது முழு மனுக்குலத்தையும் மீட்பதற்காக அல்லவா? அதுபோலவேதான் தேவனுடைய இந்த மனுவுருவெடுத்தலும் உலகின் துன்பத்தை அவர் அனுபவித்தலும் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டதாக இருக்கிறது: அது மனுக்குலத்தின் அழகான சென்றுசேரும் இடத்துக்கானதாக இருக்கிறது. தம்முடைய கிரியையில் தேவன் எப்போதும் தேவையானதையே சரியாகச் செய்கிறார். மனிதன் தேவனுக்கு முன்பாக வரும் நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டிருப்பதற்கு மனிதன் பாவமற்றவனாக இருப்பதை தேவன் ஏன் பார்க்கிறார்? இது ஏனென்றால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மனிதனின் பாவங்களைச் சுமந்து, மனிதனை மீட்டுக்கொண்டார். பின் ஏன் மனுக்குலம் இனிமேலும் துன்பம் அடையாது, வேதனையை உணராது, கண்ணீர் சிந்தாது, மேலும் இனிமேலும் பெருமூச்சு விடாது? இது ஏனெனில் இந்த முறை மனுவுருவான தேவன் இந்தத் துன்பங்கள் அனைத்தையும் மனிதனின் சார்பில் தாமே ஏற்றுக்கொண்டிருக்கிறார், மேலும் இந்தத் துன்பங்கள் எல்லாம் மனிதனின் சார்பாக சகித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தன்னுடைய குழந்தை நோய்வாய்ப்பட்டத்தைக் காணும் ஒரு தாய் பரலோகத்தை நோக்கி ஜெபித்து தன் குழந்தை குணமாக்கப்படுமானால் தன் ஜீவித காலம் குறைந்தாலும் பரவாயில்லை என்று விரும்புவது போலானதாகும் இது. தேவனும் இவ்விதமாகவே கிரியை செய்கிறார். மனுக்குலத்தைத் தொடர்ந்து வரும் அழகிய சென்றடையும் இடத்துக்கு ஈடாக தன் வேதனையை வழங்குகிறார். இனிமேலும் வேதனை இல்லை, கண்ணீர் இல்லை, பெருமூச்சுகள் இல்லை, மேலும் துன்பம் இருக்கப் போவது இல்லை. மனுக்குலத்துக்குத் தொடர்ந்து கிடைக்கப்போகும் அழகான சென்றடையும் இடத்துக்கு ஈடாக தனிப்பட்ட முறையில் உலகத்தின் துன்பத்தை அனுபவித்து தேவன் விலையை—கிரயத்தை—செலுத்துகிறார். அழகான சென்றடையும் இடத்துக்கு “ஈடாக” என்று சொல்லும்போது அது, மனுக்குலத்துக்கு ஓர் அழகிய சென்றடையும் இடத்தை வழங்க தேவனுக்கு வல்லமையும் அதிகாரமும் இல்லை என்று அர்த்தமாகாது. ஆனால் மாறாக ஜனங்களை முற்றிலுமாக நம்பவைக்க மேலும் அதிக நடைமுறையான மற்றும் வல்லமையுள்ள சான்றைக் கண்டறிய தேவன் விரும்புகிறார். தேவன் ஏற்கெனவே இந்தத் துன்பத்தை அனுபவித்திருக்கிறார். ஆகவே அவர் தகுதியுள்ளவராக இருக்கிறார். அவரிடம் வல்லமை உள்ளது. மேலும் இன்னும் அதிகமாக அவருக்கு மனுக்குலத்தை அழகிய சென்றடையும் இடத்துக்கு வழங்கவும், மனுக்குலத்துக்கு இந்த அழகிய சென்றடையும் இடத்தையும் வாக்குத்தத்தத்தையும் அளிக்கவும் உரிமை உள்ளது. சாத்தான் தானாகவே தேவனிடம் சரணடையும், மற்றும் பிரபஞ்சத்தின் எல்லா சிருஷ்டிகளும் தாங்களாகவே தேவனிடம் சரணடைவார்கள். முடிவில், மனுக்குலம் தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் அன்பையும் பெற அவர் அனுமதிப்பார். தேவன் செய்யும் அனைத்தும் நடைமுறையானது, அவர் எதையும் விருதாவாக செய்கிறதில்லை, அவர் அவை எல்லாவற்றையும் தாமே அனுபவிக்கிறார். மனுகுலத்துக்கு சென்றடையும் ஓர் இடத்தை அளிப்பதற்கு ஈடாக தேவன் தனது சொந்த வேதனையின் அனுபவத்தை விலைக்கிரயமாக செலுத்துகிறார். இது நடைமுறைக் கிரியை அல்லவா? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஒரு உளப்பூர்வமான விலையைச் செலுத்தலாம், இது அவர்களுடைய குழந்தைகளின் மேல் அவர்களுக்கு இருக்கும் முழுமையான அன்பைப் பிரதிபலிக்கிறது. இதைச் செய்வதில், மனுஷ ரூபமான தேவன் நிச்சயமாக, மனுகுலத்துக்கு மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார். தேவனின் சாரம் உண்மையானது; அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறார், அவர் எதைச் செய்கிறாரோ அதை நிறைவேற்றுகிறார். அவர் மனுஷர்களுக்காகச் செய்யும் அனைத்தும் நேர்மையானவை. அவர் வெறுமனே பேசுவது மட்டும் இல்லை; ஒரு விலைக்கிரயம் செலுத்துவதாக அவர் கூறும்போது, அவர் உண்மையிலேயே அந்த விலைக்கிரயத்தைச் செலுத்துகிறார். மனுகுலத்தின் துன்பங்களை மேற்கொண்டு, அவர்களுக்கு பதிலாகத் துன்பப்படுவேன் என்று அவர் கூறும்போது, அவர் உண்மையிலேயே அவர்கள் மத்தியில் வாழ்வதற்கும், தனிப்பட்ட முறையில் இந்த வேதனையை உணர்வதற்கும் அனுபவிக்கவும் வருகிறார். அதன்பிறகு, பிரபஞ்சத்தில் உள்ள எல்லாம் தேவன் செய்யும் அனைத்தும் சரியானது, நீதியானது என்பதையும், தேவன் செய்வதெல்லாம் யதார்த்தமானது என்பதையும் ஒப்புக்கொள்வார்கள்: இது ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். இத்துடன் கூடவே, எதிர்காலத்தில் மனுகுலத்திற்கு ஓர் அழகான சென்றடையும் இடம் இருக்கும், எஞ்சி இருப்பவர்கள் அனைவரும் தேவனைப் புகழ்வார்கள்; தேவனின் செயல்கள் உண்மையில் மனுகுலத்தின் மீதான அன்பினால் செய்யப்பட்டவை என்று அவர்கள் புகழாரம் சூட்டுவார்கள். தேவன் ஒரு சாதாரண மனிதராக தாழ்மையுடன் மனிதர்களிடையே வருகிறார். அவர் வெறுமனே சில கிரியைகளைச் செய்து விட்டு, சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, பின்னர் கடந்துசெல்வதில்லை; அதற்குப் பதிலாக, அவர் உலகின் வலியையை அனுபவிக்கும்போதே உண்மையாகப் பேசி கிரியை செய்கிறார். இந்த வலியை அவர் அனுபவித்து முடித்த பின்புதான் அவர் கடந்துசெல்வார். தேவனுடைய கிரியை எவ்வளவு யதார்த்தமானது மற்றும் எவ்வளவு நடைமுறையானது; அதற்காக எஞ்சி இருப்பவர்கள் அனைவரும் அவரைப் புகழ்வார்கள், மேலும் மனிதரிடத்தில் தேவன் உண்மையுடன் இருப்பதையும், அவருடைய இருதயத்தின் கனிவான தன்மையையும் அவர்கள் காண்பார்கள். தேவனின் அழகு மற்றும் நற்குணத்தின் சாராம்சத்தை அவர் மாம்சத்தில் மனுவுருவெடுத்ததன் முக்கியத்துவத்தில் காணலாம். அவர் எதைச் செய்தாலும் அது நேர்மையானது; அவர் சொல்வதெல்லாம் உளப்பூர்வமானதும் உண்மையுள்ளதும் ஆகும். அவர் செய்ய விரும்பும் எல்லாவற்றையும், அவர் உண்மையில் செய்கிறார், ஒரு விலைக் கிரயத்தைச் செலுத்தும்போது, அவர் உண்மையில் அதைச் செலுத்துகிறார்; அவர் வெறுமனே பேசுவது மட்டும் இல்லை. தேவன் நீதியுள்ள ஒரு தேவனாவார்; தேவன் உண்மையுள்ள ஒரு தேவனாவார்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷரூபமெடுப்பதன் முக்கியத்துவத்தின் இரண்டாவது அம்சம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 254

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவனின் சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார், மேலும் தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவத்தண்ணீரின் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகைச் சிருஷ்டித்தது முதலே, வாழ்க்கையின் முக்கிய ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவன்தாமே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவன்தாமே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாவார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவும், மனித இருப்புக்கான வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்திலும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி, மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், அதில் முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது, மேலும் எந்தச் சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமை எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சுகிறது. அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி வல்லமையாலும் வெற்றிகொள்ளப்பட முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது இருக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தைப் பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய ராஜரீகத்தை விஞ்ச இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 255

நீ உண்மையிலேயே நித்திய ஜீவனுக்கான வழியைப் பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டால், அதைத் தேடுவதில் நீ வாஞ்சையாக இருந்தால், முதலில் இந்தக் கேள்விக்குப் பதிலளி: தேவன் இன்று எங்கே இருக்கிறார்? “தேவன் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறார், நிச்சயமாக அவர் உன் வீட்டில் வாசம் பண்ணமாட்டார், இல்லையா?” என்று நீ ஒருவேளை பதிலளிக்கலாம். தேவன் வெளிப்படையாக எல்லாவற்றிலும் வாசம் பண்ணுகிறார் என்று நீ ஒருவேளை சொல்லலாம். அல்லது தேவன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார், அல்லது தேவன் ஆவிக்குரிய உலகில் இருக்கிறார் என்று நீ சொல்லலாம். நான் இவற்றில் எதையும் மறுக்கவில்லை, ஆனால் நான் பிரச்சனையைத் தெளிவுபடுத்த வேண்டும். தேவன் மனுஷனுடைய இருதயத்தில் வாசம் பண்ணுகிறார் என்று சொல்வது முற்றிலும் சரியல்ல, ஆனால் அது முற்றிலும் தவறும் அல்ல. ஏனென்றால், தேவனுடைய விசுவாசிகளுக்கு மத்தியில், மெய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், பொய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், தேவன் அங்கீகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் அங்கீகரிக்காதவர்களும் இருக்கிறார்கள், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், அவர் வெறுக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் பரிபூரணமாக்குகிறவர்களும் இருக்கிறார்கள், அவர் புறம்பாக்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையால், ஒரு சிலரின் இருதயங்களிலேயே தேவன் வாசம் பண்ணுகிறார் என்று நான் சொல்கிறேன், இவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனை மெய்யாகவே விசுவாசிப்பவர்களும், தேவன் அங்கீகரிப்பவர்களும், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் மற்றும் அவர் பரிபூரணமாக்குபவர்களும் ஆக இருக்கிறார்கள். அவர்கள் தான் தேவனால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனால் வழிநடத்தப்படுவதால், நித்திய ஜீவனுக்கான தேவனுடைய வழியை ஏற்கனவே கேள்விப்பட்டவர்களும் பார்த்தவர்களுமாக இருக்கிறார்கள். தேவன் மீதான விசுவாசத்தைப் பொய்யாகக் கொண்டிருக்கிறவர்களும், தேவனால் அங்கீகரிக்கப்படாதவர்களும், தேவனால் வெறுக்கப்படுபவர்களும், தேவனால் புறம்பாக்கப்படுபவர்களும் தேவனால் புறக்கணிக்கப்படுவார்கள், அவர்கள் நிச்சயமாக ஜீவனுக்கான வழியில்லாமல் இருக்கிறார்கள் மேலும் தேவன் எங்கே இருக்கிறார் என்பதை நிச்சயமாக அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, யாருடைய இருதயங்களில் தேவன் வாசம் பண்ணுகிறாரோ அவர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்குத்தான் தேவன் நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்கிறார், அவர்கள்தான் தேவனைப் பின்பற்றுகிற ஜனங்களாக இருக்கிறார்கள். தேவன் எங்கே இருக்கிறார் என்று இப்போது உனக்குத் தெரியுமா? தேவன் மனிதனின் இருதயத்திலும் மனிதனின் பக்கத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஆவிக்குரிய உலகில் மட்டுமின்றி, மனிதன் வாழும் பூமியின் மீதும் இன்னும் அதிகமாக வாசம் பண்ணுகிறார். ஆகையால் கடைசி நாட்களின் வருகை தேவனுடைய கிரியையைப் புதிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. சகலத்தின் மீதும் தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் மனிதனுடைய இருதயத்தில் முக்கிய ஆதாரமாக இருக்கிறார். மேலும், அவர் மனிதர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். இவ்விதமாக மாத்திரமே அவர் மனுக்குலத்திற்கு ஜீவனுக்கான வழியைக் கொண்டுவர இயலும், மேலும் மனிதனை ஜீவனுக்கான வழியில் கொண்டுவர இயலும். மனுஷன் ஜீவனுக்கான வழியைப் பெறுவதற்காகவும், மேலும் மனுஷன் ஜீவிப்பதற்காகவும் தேவன் பூமிக்கு வந்து, மனுஷர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். அதே நேரத்தில், தேவன் மனுஷர் மத்தியில் அவர் செய்யும் தமது நிர்வாகத்த்துடன் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு சகலத்திற்கும் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார். ஆகையால், தேவன் பரலோகத்திலும் மனுஷருடைய இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார் என்ற போதனையை மாத்திரமே நீ ஏற்றுக்கொண்டு, மனுஷர்களுக்கு மத்தியில் தேவன் வாசம் பண்ணுகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் சத்தியத்திற்கான வழியைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், போதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, மேலும் அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் ஊட்டத்தை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; வாழ்வின் ஏற்பாடுகளை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகத் தொழுதுகொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாழும்போது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய கிரியை செய்யும் முறையாகவும் இருக்கிறது. கடந்த காலங்கள் முதல் இன்றுவரை தேவன் பேசிய வார்த்தைகளின் பதிவுகளை நீ பயன்படுத்தினால், அது உன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக்குகிறது. மேலும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் நிபுணனாக உன்னை விவரிப்பதே சிறந்த வழியாகும். ஏனென்றால், தேவன் கடந்த காலங்களில் செய்த கிரியையின் அடையாளங்களை நீ எப்போதும் விசுவாசிக்கிறாய், அவர் முன்பு மனுஷர்களுக்கு மத்தியில் கிரியை செய்தபோது விடப்பட்ட தேவனுடைய நிழலை மாத்திரமே விசுவாசிக்கிறாய், மேலும் முந்தைய காலங்களில் தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்த வழியை மாத்திரமே விசுவாசிக்கிறாய். இன்று தேவனுடைய கிரியையின் வழிகாட்டுதலை நீ விசுவாசிக்கவில்லை, இன்று தேவனுடைய மகிமையான முகத்தை நீ விசுவாசிக்கவில்லை, தற்போது தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் வழியை நீ விசுவாசிக்கவில்லை. ஆகையால் நீ நிச்சயமாகவே நிஜத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு பகல் கனவு காண்கிறவனாக இருக்கிறாய். இப்போது மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்க இயலாத வார்த்தைகளையே நீ பிடித்துக்கொண்டிருந்தால், நீ நம்பிக்கையற்ற ஒரு செத்துப்போன மரக்கட்டையாக[அ] இருக்கிறாய். ஏனென்றால் நீ மிகவும் பழமைவாதியாகவும், மிகவும் பிடிவாதமானவனாகவும், பகுத்தறிவுக்கு இடமளிக்காதவனாகவும் இருக்கிறாய்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 256

தேவன் தாமே சத்தியத்தை உடையவராக இருக்கிறார், மேலும் அவரே சத்தியத்தின் ஆதாரமாக இருக்கிறார். ஒவ்வொரு நேர்மறையான விஷயமும் ஒவ்வொரு சத்தியமும் தேவனிடமிருந்தே வருகிறது. அவர் எல்லா விஷயங்கள் மற்றும் எல்லா நிகழ்வுகளின் சரியான மற்றும் தவறான தன்மை குறித்து நியாயத்தீர்ப்பு வழங்க முடியும்; நடந்து முடிந்த விஷயங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் மற்றும் மனுஷனுக்கு இன்னும் தெரியாத எதிர்கால விஷயங்கள் குறித்தும் அவர் நியாயத்தீர்ப்பு வழங்க முடியும். எல்லா விஷயங்களின் சரியான மற்றும் தவறான தன்மை குறித்து நியாயத்தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரே நீதிபபரர் அவர் மட்டுமே; இதன் அர்த்தமானது, அனைத்து விஷயங்களின் சரியான மற்றும் தவறான தன்மை அவரால் மட்டுமே நியாயந்தீர்க்கப்பட முடியும் என்பதேயாகும். எல்லா விஷயங்களுக்கான விதிமுறைகளும் அவருக்குத் தெரியும். இது சத்தியத்தின் உருவகம், அதாவது, அவர் தாமே சத்தியத்தின் சாராம்சத்தை உடையவராய் இருக்கிறார். மனுஷன் சத்தியத்தைப் புரிந்துகொண்டு பரிபூரணத்தை அடைந்தால், அப்போது அவனுக்கு சத்தியத்தின் உருவகத்துடன் ஏதாவது தொடர்பு இருந்திருக்குமா? மனுஷன் பரிபூரணமாக்கப்பட்டிருக்கும்போது, தேவன் இப்போது செய்கிற மற்றும் அவர் விரும்புகிற எல்லாவற்றினுடைய துல்லியமான தீர்ப்பை அவன் உடையவனாய் இருக்கிறான், மேலும் அவனுக்கு நடைமுறைப்படுத்த ஒரு துல்லியமான வழி இருக்கிறது; மனுஷன் தேவனுடைய சித்தத்தையும் புரிந்துகொண்டு எது சரி மற்றும் எது தவறு என்பதையும் அறிவான். இருப்பினும் மனுஷனால் அடைய முடியாத சில விஷயங்கள் உள்ளன; தேவன் அவனிடம் சொன்ன பின்புதான் அந்த விஷயத்தை அவனால் அறிய முடியும்—இதுவரையிலும்மறைக்கப்பட்டிருக்கும் விஷயங்களை, தேவன் இதுவரை அவனிடம் சொல்லாத விஷயங்களை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது மற்றும் மனிதனால் கணிப்புகளைச் செய்ய முடியாது. மேலும், மனுஷன் தேவனிடமிருந்து சத்தியத்தை அடைந்திருந்தாலும், சத்திய யதார்த்தத்தை உடையவனாய் இருந்தாலும், அநேக சத்தியங்களின் சாரத்தை அறிந்திருந்தாலும், எது சரி மற்றும் எது தவறு என்பதைச் சொல்லும் திறனை உடையவனாய் இருந்தாலும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் திறனை அவன் பெற்றிருக்க மாட்டான். அதுதான் வித்தியாசம். சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் சத்தியத்தின் மூலத்திலிருந்து மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும். அவை மனுஷனிடமிருந்து சத்தியத்தைப் பெற முடியுமா? மனுஷன் சத்தியமா? மனுஷன் சத்தியத்தை வழங்க முடியுமா? அவனால் முடியாது, அதுதான் வித்தியாசம். உன்னால் சத்தியத்தை பெற மட்டுமே முடியும், அதை வழங்க முடியாது—நீ சத்தியத்தின் உருவகம் என்று அழைக்கப்பட முடியுமா? சத்தியத்தின் உருவகத்தினுடைய மிகச்சரியான சாராம்சம் என்ன? இஅது சத்தியத்தை வழங்கும் ஆதாரமும், எல்லா விஷயங்களின் மீதான ஆளுகை மற்றும் இறையாண்மையின் ஆதாரமும், மேலும் இது எல்லா விஷயங்கள் மற்றும் எல்லா நிகழ்வுகளையும் மதிப்பிடும் தரங்கள் மற்றும் விதிமுறைகளுமாய் இருக்கிறது. இதுவே சத்தியத்தின் உருவகமாகும்.

வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் எட்டு (பகுதி மூன்று)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 257

சத்தியத்தைக் குறித்த தமது வெளிப்பாட்டில், தேவன் தமது மனநிலையையும் சாரத்தையும் வெளிப்படுத்துகிறார்; சத்தியத்தைக் குறித்த அவரது வெளிப்பாடு மனுக்குலம் அங்கீகரிக்கும் பல்வேறு நேர்மறையான விஷயங்கள் மற்றும் அறிக்கைகளைப் பற்றிய மனுக்குலத்தின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளே; தேவனுடைய வார்த்தைகள் சத்தியமாயிருக்கின்றன. அவை மனுக்குலம் வாழ வேண்டிய அடித்தளமும் சட்டமும் ஆகும், மேலும் மனுக்குலத்திலிருந்து தோன்றிய கோட்பாடுகள் என்று அழைக்கப்படுபவை தேவனால் கண்டிக்கப்படுகின்றன. அவை அவருடைய ஒப்புதலைப் பெறவில்லை, மேலும் அவை அவருடைய பேச்சுகளின் மூல ஆதாரமாகவோ அல்லது அடிப்படையாகவோ இல்லை. தேவன் தனது வார்த்தைகள் மூலம் தன் மனநிலையையும் தன் சாரத்தையும் வெளிப்படுத்துகிறார். அவர் தேவனுடைய சாரத்தைக் கொண்டிருப்பதாலும், மேலும் அவர் அனைத்து நேர்மறையான விஷயங்களின் மெய்த்தன்மையாக இருப்பதாலும் தேவனுடைய வெளிப்பாட்டால் கொண்டுவரப்பட்ட அனைத்து வார்த்தைகளும் சத்தியமாய் இருக்கின்றன. இந்த சீர்கெட்ட மனுக்குலம் தேவனுடைய வார்த்தைககளை எப்படி நிலைநிறுத்தினாலும் அல்லது விளக்கினாலும், அல்லது அது அவ்வார்த்தைகளை எப்படிப் பார்த்தாலும் அல்லது புரிந்துகொண்டாலும் தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்ற உண்மை ஒருபோதும் மாறுவதில்லை, தேவனுடைய வார்த்தைகள் எத்தனை பேசப்பட்டிருந்தாலும், இந்த சீர்கேடு நிறைந்த, பாவமுள்ள மனுக்குலம் எந்த அளவிற்கு அவற்றைக் கண்டனம் செய்து, அவற்றை நிராகரித்தாலும், மாற்ற முடியாத ஒரு உண்மை உள்ளது: இந்த சூழ்நிலைகளில் கூட, மனுக்குலம் மதிக்கும் கலாச்சாரம் மற்றும் மரபுகள் என்று சொல்லப்படுகிற நேர்மறையான விஷயங்களாக மாற முடியாது, மேலும் சத்தியமாக மாற முடியாது. இது மாற்றியமைக்கப்பட முடியாதது. மனுக்குலத்தின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் வாழும் வழியானது மாற்றங்கள் அல்லது காலப் போக்கின் காரணமாக சத்தியமாகிவிடாது, மேலும் தேவனுடைய வார்த்தைகளும் மனுக்குலத்தின் கண்டனம் அல்லது மறதி காரணமாக மனுஷனின் வார்த்தைகளாக மாறி விடாது. இந்த சாரம் ஒரு போதும் மாறாது; சத்தியம் எப்போதும் சத்தியமே. இதில் என்ன உண்மை இருக்கிறது? மனுக்குலத்தால் சுருக்கமாகக் கூறப்பட்ட அனைத்து வாக்கியங்களும் சாத்தானில் தோன்றியவை—அவை மனுஷீகக் கற்பனைகள் மற்றும் கருத்துக்களாய் இருக்கின்றன, மனுஷனின் உணர்ச்சிவசப்படுதலிருந்து கூட எழுபவைகளாகும், மேலும் நேர்மறையான விஷயங்களுடன் அவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மறுபுறம், தேவனுடைய வார்த்தைகளானது, தேவனுடைய சாரம் மற்றும் அந்தஸ்தின் வெளிப்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காக அவர் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்? ஏன் அவை சத்தியம் என்று நான் சொல்கிறேன்? காரணம் என்னவென்றால், தேவன் அனைத்து சட்டங்கள், கொள்கைகள், வேர்கள், சாராம்சங்கள், யதார்த்தங்கள் மற்றும் எல்லா விஷயங்களின் மர்மங்கள் ஆகிய அனைத்தையும் ஆளுகிறார், மேலும் அவை அவருடைய கரத்தின் பிடியில் இருக்கின்றன, மேலும் அவற்றின் தோற்றம் மற்றும் அவற்றின் வேர்கள் உண்மையிலேயே என்னவென்று தேவனுக்கு மட்டுமே தெரியும். எனவே, தேவனுடைய வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களின் வரையறைகள் மட்டுமே மிகவும் துல்லியமானவையாகும், மேலும் தேவனுடைய வார்த்தைகளுக்குள் மனுக்குலத்திற்கான கோரிக்கைகளே மனுக்குலத்திற்கான ஒரே தரநிலையாக இருக்கிறது—இதுவே மனுக்குலம் வாழ வேண்டிய ஒரே பிரமாணமாகும்.

வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி ஒன்று)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 258

இந்த உலகில் நீ அழுதுகொண்டே பிறந்த கணம் முதல் நீ உனது கடமையை நிறைவேற்றத் தொடங்குகிறாய். தேவனுடைய திட்டத்திற்காகவும், அவருடைய முன்குறித்தலுக்காகவும், உனது கடைமையைச் செய்கிறாய் மற்றும் உன்னுடைய ஜீவிதப் பயணத்தை நீ தொடங்குகின்றாய். உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், ஒருவராலும் பரலோகத்தின் திட்டங்களிலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. ஒருவராலும் தங்கள் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளுகிறவராகிய தேவன் மட்டுமே இத்தகைய கிரியையைச் செய்ய வல்லவராயிருக்கிறார். மனிதன் தோன்றிய நாள் முதல், தேவன் எப்பொழுதும் இவ்வாறு கிரியை செய்து, பிரபஞ்சத்தை நிர்வகித்து, எல்லாவற்றிற்குமான மாற்ற விதிகளையும் அவற்றின் இயக்கத்தின் பாதையையும் கட்டளையிட்டு வருகிறார். எல்லாவற்றையும் போலவே, மனிதன் அமைதியாகவும் அறியாமலும் தேவனிடமிருந்து வரும் மதுரத்தாலும், மழையாலும் மற்றும் பனித்துளியாலும் போஷிக்கப்படுகிறான்; எல்லாவற்றையும் போலவே தேவனுடைய கரத்திலுள்ள திட்டத்தின்படி அவனை அறியாமலேயே ஜீவிக்கிறான். மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்.

இரவு அமைதியாக நெருங்கும்போது, மனிதன் அதை அறியாதிருக்கிறான், ஏனெனில், இரவு எப்படி நெருங்குகிறது, எங்கிருந்து வருகிறது என்பதை மனிதனுடைய இருதயத்தால் அறிந்துகொள்ள முடியாது. இரவு அமைதியாக மறையும்போது, மனிதன் பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறான். ஆனால் வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்பதையும், அது இரவின் இருளை எவ்வாறு விரட்டியது என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். பகல் மற்றும் இரவின் இந்த தொடர்ச்சியான மாற்றங்கள் மனிதனை ஒரு காலக் கட்டத்திலிருந்து இன்னொரு காலக் கட்டத்திற்கு, ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து அடுத்த வரலாற்றுச் சூழலுக்கு அழைத்துச் செல்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவனுடைய கிரியை மற்றும் ஒவ்வொரு காலத்துக்குமான அவருடைய திட்டம் மேற்கொள்ளப்படுவதை இந்த மாற்றங்கள் உறுதி செய்கின்றன. இந்தக் காலகட்டங்களில் மனிதன் தேவனோடு சேர்ந்து நடந்து வந்திருக்கிறான், ஆனாலும் தேவன் எல்லா பொருட்களின் மற்றும் உயிரினங்களின் தலைவிதியை ஆளுகிறார் என்பதையும், எல்லாவற்றையும் தேவன் எவ்வாறு திட்டமிடுகிறார், வழிநடத்துகிறார் என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். இது மனிதனை ஆதிகாலம் முதல் இன்று வரை தவிர்த்திருக்கிறது. ஏனெனில், தேவனுடைய செயல்கள் மறைக்கப்பட்டிருப்பதாலோ அல்லது அவருடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததாலோ அல்ல, மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனிடமிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், தேவனைப் பின்தொடர்ந்தபோதும் சாத்தானுக்கு ஊழியம் செய்வதிலேயே மனிதன் இருக்கின்றான்—அதை இன்னும் அறியாமல் இருக்கின்றான். தேவனுடைய அடிச்சுவடுகளையும் தோற்றத்தையும் ஒருவரும் தீவிரமாக நாடுவதில்லை; மேலும், தேவனுடைய பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கவும் ஒருவரும் தயாராக இல்லை. மாறாக, இந்த உலகத்திற்கும் துன்மார்க்கமான மனிதகுலம் பின்பற்றும் வாழ்க்கை விதிகளுக்கும் ஏற்ப, பொல்லாங்கனான சாத்தானின் சீர்கேட்டைச் சார்ந்திருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில், மனிதனுடைய இருதயமும் ஆவியும் சாத்தானுக்கு காணிக்கையாகவும் உணவுப்பொருளாகவும் மாறிவிட்டன. மேலும், மனித இருதயமும் ஆவியும் சாத்தான் வசிக்கக்கூடிய இடமாகவும் அதன் பொருத்தமான விளையாட்டு மைதானமாகவும் மாறிவிட்டன. இவ்வாறாக, மனிதன் அறியாமலேயே மனிதனாக இருப்பதற்கான நியமங்களையும் மனித இருப்புக்கான மதிப்பு மற்றும் அதன் பொருளைப் பற்றிய தனது புரிதலையும் இழக்கிறான். படிப்படியாக, மனிதனுடைய இருதயத்திலிருந்து தேவனுடைய பிராமணங்களும், தேவனுக்கும் மனிதனுக்குமான உடன்படிக்கையும் மங்கிவிடுகிறது மற்றும் அவன் தேவனைத் தேடுவதையும் தேவனிடம் கவனம் செலுத்துவதையும் நிறுத்துகிறான். காலப்போக்கில், தேவன் ஏன் தன்னை சிருஷ்டித்தார் என்று மனிதன் புரிந்துகொள்வதே இல்லை, தேவனுடைய வாயின் வார்த்தைகளையும் தேவனிடமிருந்து வரும் எதையும் மனிதன் புரிந்துகொள்வதில்லை. அதன் பின், தேவனுடைய விதிகளையும் ஆணைகளையும் மனிதன் எதிர்க்கத் தொடங்குகிறான். அதனால் அவனுடைய இருதயமும் ஆவியும் அழிந்து போகின்றன. தேவன் தாம் முதலில் சிருஷ்டித்த மனிதனை இழக்கிறார். மனிதன் தான் ஆதியில் கொண்டிருந்த வேரை இழக்கிறான். இதுவே மனித இனத்தின் துக்கமாயிருக்கிறது. உண்மையில், ஆதிகாலம் முதல் இப்போது வரை, தேவன் மனிதகுலத்திற்கு ஒரு சோக நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். அதில் கதாநாயகனும் மனிதனே பாதிக்கப்பட்டவனும் மனிதனே. எனினும், இந்த சோக நாடகத்தின் இயக்குனர் யார் என்று ஒருவராலும் கூற இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 259

தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார். மனித ஜீவிதத்தின் தோற்றம் மற்றும் தொடர்ச்சியை ஆளும் இரகசியங்களை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இவை அனைத்தையும் புரிந்துகொண்ட ஒரே ஒருவரான தேவன், தம்மிடமிருந்து எல்லாவற்றையும் பெற்ற பின்னரும் நன்றியற்று காணப்படும் மனிதன் அவருக்குக் கொடுக்கும் காயங்களையும் அடிகளையும் மௌனமாக சகித்துக்கொள்கிறார். ஜீவிதம் தரும் அனைத்தையும் மனிதன் நிச்சயமாகவே அனுபவிக்கிறான். அதைப் போலவே, இது தேவன் மனிதனால் காட்டிக் கொடுக்கப்படுகிறார், மனிதனால் மறக்கப்படுகிறார் மற்றும் மனிதனால் பலவந்தம் பண்ணப்படுகிறார் என்பதன் விளைவாகும். தேவனுடைய திட்டம் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததா? தேவனுடைய கரத்திலிருந்து வந்த சிருஷ்டியான மனிதன் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவனா? தேவனுடைய திட்டம் நிச்சயமாகவே முக்கியத்துவம் வாய்ந்தது தான்; எனினும், அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜீவன் அவருடைய திட்டத்துக்காகவே உள்ளது. எனவே, மனித இனத்தின் மீதான வெறுப்பால் தேவன் தமது திட்டத்தை வீணடிக்க முடியாது. அவருடைய திட்டத்திற்காகவும் தாம் கொடுத்த சுவாசத்திற்காகவும் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார். இது மனிதனுடைய மாம்சத்திற்காக அல்ல, அவனுடைய ஜீவனுக்காகவே ஆகும். மனிதனுடைய மாம்சத்தையல்ல, தாம் சுவாசமாக ஊதிய ஜீவனை திரும்பப் பெறுவதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார். இது அவருடைய திட்டமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 260

இந்த உலகத்திற்கு வருகின்ற அனைவரும் வாழ்க்கையையும் மரணத்தையும் கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியைக் கடந்து சென்றிருக்கிறார்கள். உயிரோடிருப்பவர்கள் விரைவில் மரித்துபோவார்கள். மரித்தவர்கள் விரைவில் உயிர்த்தெழுவார்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவன் ஏற்பாடு செய்துள்ள வாழ்க்கைமுறை ஆகும். எனினும், இந்தப் போக்கையும் இந்த சுழற்சியையும் மனிதன் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதே தேவன் விரும்பும் சத்தியமாகும். தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவன் வரம்பற்றது, பொருள், நேரம், இடம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட முடியாதது. தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவனின் இரகசியமும், ஜீவனானது அவரிடமிருந்து வந்தது என்பதற்கான சான்றும் இதுவே. ஜீவனானது தேவனிடமிருந்து வந்தது என்பதைப் பலர் விசுவாசிக்கவில்லை என்றாலும், அவர் இருப்பதை அவர்கள் நம்பினாலும் அல்லது மறுத்தாலும், தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் மனிதன் தவிர்க்க இயலாமல் அனுபவிக்கிறான். ஒரு நாள் திடீரென்று மனம்மாறி, உலகில் உள்ள அனைத்தையும் மீட்டெடுக்கவும், தேவன் தாம் கொடுத்த ஜீவனைத் திரும்பப் பெறவும் விரும்பினால், ஒன்றும் மீந்திராது. தேவன் தம்முடைய ஜீவனைக்கொண்டு உயிருள்ள ஜீவன்களுக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் அனைத்தையும் வழங்குகிறார். தம் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அனைத்தையும் நன்கு ஒழுங்குபடுத்துகிறார். இது யாராலும் சிந்தித்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத உண்மையாகும். இந்தப் புரிந்துகொள்ள முடியாத உண்மைகள் தேவனுடைய ஜீவ வல்லமையின் வெளிப்பாடாகவும் சான்றாகவும் இருக்கின்றன. இப்போது உனக்கு ஒரு இரகசியத்தை நான் சொல்கிறேன்: தேவனுடைய ஜீவனின் மகத்துவத்தையும் அவரது ஜீவனின் வல்லமையையும் எந்த சிருஷ்டிக்கும் புரிந்துகொள்ள முடியாததாகும். கடந்த காலத்தைப் போலவே இது இப்போது உள்ளது, வரவிருக்கும் காலத்திலும் அப்படியே இருக்கும். நான் சொல்லும் இரண்டாவது இரகசியம் இதுதான்: சிருஷ்க்கப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் வடிவமும் உருவமும் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அவர்களுடைய ஜீவனின் ஆதாரமானது தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது. எப்படிப்பட்ட ஜீவனாக நீ இருந்தாலும் தேவன் நிர்ணயித்த ஜீவிதப் பாதைக்கு எதிராக உன்னால் திரும்ப முடியாது. எப்படியாயினும், மனிதன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய பராமரிப்பும், பாதுகாப்பும், ஏற்பாடும் இல்லாமல், மனிதன் எவ்வளவு விடாமுயற்சியுடன் செயல்பட்டாலும் கடினமாகப் போராடினாலும் அவன் பெற வேண்டிய அனைத்தையும் பெற முடியாது. தேவனிடமிருந்து ஜீவன் வழங்கப்படாமல், வாழ்க்கையினை வாழ்வதில் உள்ள மதிப்பையும் அர்த்தத்தையும் மனிதன் இழக்கிறான். தனது ஜீவனின் மதிப்பை அற்பமாக வீணடிக்கும் மனிதனை, இவ்வளவு கவலையற்றவனாக இருக்க தேவனால் எப்படி அனுமதிக்க முடியும்? நான் முன்பு கூறியது போல: தேவன் உன்னுடைய ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. தேவன் கொடுத்த அனைத்தையும் மனிதன் மதிக்கத் தவறினால், முன்பு தாம் கொடுத்ததை தேவன் திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், அவர் கொடுத்த அனைத்திற்குமான விலையை மனிதனை இரண்டு மடங்காக திரும்பச் செலுத்த வைப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 261

இந்த உலகத்திலுள்ள அனைத்துமே சர்வவல்லவருடைய எண்ணங்களினாலும், அவருடைய கண்களுக்குக் கீழும் சடுதியில் மாறுகின்றன. மனிதகுலம் கேட்டிராத காரியங்கள் திடீரென்று வருகின்றன, தொன்றுதொட்டு மனுக்குலம் வைத்திருந்த காரியங்கள் அவர்களை அறியாமலேயே அவர்கள் கைவசமிருந்து நழுவிப்போகவும் செய்கின்றன. சர்வவல்லவருடைய உறைவிடத்தை யாருமே கண்டுபிடிக்க முடியாது. அதேபோல சர்வவல்லவருடைய உயர்வையும் அவருடைய ஜீவ ஆற்றலின் மேன்மையையும் காண முடியாது. மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாதவைகளை அவர் புரிநந்துகொள்கிறார் என்பதிலே அவர் உயர்ந்தவராய் இருக்கின்றார். மனிதகுலத்தினால் கைவிடப்பட்டவராய் அவர் இருந்தும் மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார் என்பதிலே அவர் பெரியவராய் இருக்கின்றார். அவருக்கு ஜீவன், மரணம் என்பவைகளின் பொருள் தெரியும். அதைவிட மேலாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலம் ஜீவிப்பதற்கான சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். மனித வாழ்க்கையின் அஸ்திபாரம் அவரே, அதுமட்டுமல்ல மனுக்குலத்தை மறுபடியும் உயிர்த்தெழச் செய்யும் இரட்சகரும் அவரே. தம்முடைய கிரியைக்காகவும், தம்முடைய திட்டத்திற்காகவும் அவர் களிப்பான இருதயங்களைத் துயரத்தினால் பாரப்படுத்தவும், துயரப்பட்டிருக்கும் இருதயங்களை மகிழ்ச்சியினால் உயர்த்தவும் செய்கின்றார்.

சர்வவல்லவர் வழங்கிய ஜீவனைவிட்டு விலகிய மனுக்குலம் ஜீவனின் நோக்கத்தைக் குறித்து அறியாமல், மரணத்தைக்குறித்து அஞ்சுகிறது. அவர்கள் உதவியோ, ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றார்கள். ஆனாலும் தங்கள் கண்களை மூடத் தயங்குகிறார்கள். மேலும் தங்கள் சொந்த ஆத்துமாக்களைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், நடைபிணங்களாய், இந்த உலகத்தில் இழிவான வாழ்க்கையை வாழ, தங்களையே வருத்திக்கொள்கின்றனர். நோக்கமில்லாமல் வாழ்கின்ற மற்றவர்களைப் போலவே நீயும், நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றாய். ஆதிமுதல் இருக்கும் பரிசுத்தர் மட்டுமே தங்கள் துன்பங்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும், அவருடைய வருகைக்காக அதிக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் ஜனங்களை இரட்சிக்க முடியும். உணர்வில்லாமல் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை இதுவரை காணப்படவில்லை. ஆனாலும் ஜனங்கள் அதற்காக அவ்வளவாய் ஏங்குகின்றனர். பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்ததினால், உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார். நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய, உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர, உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார். நீ தளர்வடைந்திருக்கும்போது, இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது, நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம். கண்காணிப்பாளரான சர்வவல்லமையுள்ள தேவன் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார். அவர் உன் பக்கத்திலேயே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், நீ அவரிடம் திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார். உன் நினைவு திரும்பும் நாளுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரிடமிருந்து உருவானவன் என்று நீ உணர்ந்திட, அறியாத நேரத்தில் நீ திசை தவறிப் போனாய் என்றும், அறியாத நேரத்தில் நீ உன் உணர்வை இழந்தாய் என்றும், அறியாத நேரத்தில் உன் தகப்பனைக் கண்டடைந்தாய் என்றும் நீ அறிந்திட, சர்வவல்லவர் உனக்காக, நீ அவரிடம் திரும்பும் நாளுக்காக வெகுகாலமாய்க் காத்துக்கொண்டிருக்கின்றார். உருக்கமான ஏக்கத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார், உன்னுடைய பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் விலைமதிக்க முடியாதது. மனிதனின் இருதயத்திற்காகவும் ஆவிக்காகவுமே அவை இருக்கின்றன. ஒருவேளை அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் முடிவில்லாமல் இருக்கலாம், ஒருவேளை அவை ஒரு முடிவில் இருக்கலாம். ஆனால், உன் இருதயமும், ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சர்வவல்லவரின் பெருமூச்சு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 262

நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய, பக்தியுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக நமது மனதையும் சரீரத்தையும் ஒப்புக்கொடுப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். நமது மனதும் சரீரமும் தேவனுடைய கட்டளைக்காகவும், மனுக்குலத்தின் நீதியான காரணத்திற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்றால், தேவனுடைய கட்டளைக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நமது ஆத்துமாக்கள் தகுதியற்றவையாகவும், சகலத்தையும் நமக்குத் தந்தருளிய தேவனுக்கு மிகவும் தகுதியற்றவையாகவும் உணரும்.

தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே. தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார். தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார். மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன. மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும் தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன. நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனானால், எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன என்பதை நிச்சயமாக நம்புவாய். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியை தேவன் மாத்திரமே அறிவார். இந்த மனுக்குலத்தின் போக்கை தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார். மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால், ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால், மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும், மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்.

நோவா பேழையைக் கட்டிய காலத்தைத் திரும்பிப் பாருங்கள். மனுக்குலம் மிகவும் சீர்கெட்டுப்போயிருந்தது, மக்கள் தேவனுடைய ஆசீர்வாதத்திலிருந்து விலகிப் போயிருந்தார்கள், தேவனால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுடைய ஒளி இல்லாமல் இருளில் வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் இயற்கையால் கட்டுப்படுத்தப்படாதவர்களாகிப் போனார்கள் மற்றும் அருவருப்பான ஒழுக்கக்கேட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களால் இனி தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெறவே இயலாது; இவர்கள் தேவனைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதனாலும், தேவன் அவர்களுக்குத் தந்தருளிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்பதனாலும், தேவனுடைய போதனைகளை மறந்துவிட்டார்கள் என்பதனாலும், இவர்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்கவோ அல்லது தேவனுடைய குரலைக் கேட்கவோ தகுதியில்லாதவர்களாகிவிட்டார்கள். அவர்களுடைய இருதயம் தேவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. அவர்கள் அவ்வாறு விலகிப் போனதனால், அவர்கள் சகல பகுத்தறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டு ஒழுக்கக்கேடானவர்களாகி, மிகவும் தீயவர்களாகிப் போனார்கள். பின்னர் அவர்கள் மரணத்திற்கு நெருக்கமாக நடந்துவந்து, தேவனுடைய உக்கிரக் கோபத்திற்குள்ளும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளும் விழுந்துபோனார்கள். நோவா மாத்திரமே தேவனைத் தொழுதுகொண்டு, தீமையை விட்டு விலகினான். அதனால்தான் அவனால் தேவனுடைய குரலையும், அவருடைய வழிகாட்டுதல்களையும் கேட்க முடிந்தது. தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டுதல்களின்படி அவன் பேழையைக் கட்டினான். சகல விதமான ஜீவராசிகளும் பேழைக்குள் ஒன்றுகூடின. இவ்விதமாக, சகலமும் ஆயத்தமானதும், தேவன் தனது அழிவை உலகத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டார். நோவா யேகோவா தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகியதனால், நோவாவும் அவனுடைய குடும்பத்திலுள்ள மற்ற ஏழு பேரும் மாத்திரமே அழிவிலிருந்து தப்பினார்கள்.

இப்போது தற்காலத்தைப் பாருங்கள். தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகிய நோவா போன்ற நீதிமான்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும் இந்த மனுக்குலத்தின் மீது தேவன் இன்னும் கிருபையாக இருக்கிறார். இந்தக் கடைசிக் காலத்திலும் அவர்களை இன்னும் மன்னித்தருளுகிறார். தேவன் தோன்றியருள வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களை தேவன் தேடுகிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கத் திராணியுள்ளவர்களையும், அவருடைய கட்டளையை மறவாதவர்களையும், தங்களுடைய இருதயங்களையும் சரீரங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பவர்களையும் அவர் தேடுகிறார். அவருக்கு முன்பாகக் குழந்தைகளைப் போலக் கீழ்ப்படிகிறவர்களையும், அவருக்கு விரோதமாக இல்லாதவர்களையும் அவர் தேடுகிறார். எந்தவொரு அதிகாரத்திற்கோ அல்லது வல்லமைக்கோ கட்டுப்படாமல் உன்னைத் தேவனுக்கு அர்ப்பணித்தால், தேவன் உன்னை ஆதரவாகப் பார்த்து, அவருடைய ஆசீர்வாதங்களை உன் மீது பொழிந்தருளுவார். நீ உயர் பதவியில் இருந்தும், மேன்மைதாங்கிய நற்பெயர் பெற்றிருந்தும், அளப்பரிய அறிவைப் பெற்றிருந்தும், ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தும் மற்றும் பலரால் ஆதரிக்கப்படுகிறவனாக இருந்தும், இந்தக் காரியங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக வந்து அவருடைய அழைப்பையும் அவருடைய கட்டளையையும் ஏற்றுக்கொள்வதையும், தேவன் உன்னிடம் செய்யச் சொல்வதைச் செய்வதையும் தடுக்கவில்லை என்றால், நீ செய்வது எல்லாம் பூமியில் மிகவும் அர்த்தமுள்ள காரியமாகவும், மனுக்குலத்தின் மிகவும் நீதியான செயலாகவும் இருக்கும். நீ அந்தஸ்துக்காகவும், உன் சொந்த இலக்குகளுக்காகவும் தேவனுடைய அழைப்பை ஏற்க மறுத்தால், நீ செய்யும் அனைத்தும் தேவனால் சபிக்கப்படும் மற்றும் வெறுக்கப்படும். ஒருவேளை நீ ஒரு அதிபராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு போதகராக அல்லது ஒரு மூப்பராக இருந்து, உன் அலுவலகம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், உன் செயல்களில் உன் அறிவையும் திறமையையும் சார்ந்திருந்தால், நீ எப்பொழுதும் தோல்வியாகவே இருப்பாய் மற்றும் எப்பொழுதும் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து காணப்படுவாய். ஏனென்றால், நீ செய்யும் எதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை, உன் செயலை நீதியான ஒன்றாகக் கருதுவதில்லை அல்லது நீ மனுக்குலத்தின் நலனுக்காகச் செயல்படுகிறாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மனுஷனைத் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து நீக்க, மனுக்குலத்தின் அறிவையும் பெலத்தையும் பயன்படுத்தவே நீ எல்லாவற்றையும் செய்கிறாய் என்றும், அது தேவனுடைய ஆசீர்வாதங்களை மறுக்கவே செய்யப்படுகிறது என்றும் அவர் சொல்வார். நீ மனுக்குலத்தை இருளை நோக்கியும், மரணத்தை நோக்கியும், மனுஷன் தேவனையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் இழந்து கட்டுப்படாமல் வாழ்வதற்கான ஆரம்பத்தை நோக்கியும் வழிநடத்துகிறாய் என்று அவர் சொல்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 263

மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல், மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன. மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்குப் போதுமான இடமோ, தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை. தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது. மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும், நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள், மனிதப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார் என்ற உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்விதமாக, தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப் புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும், தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையைக் குறித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள். மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும் அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை. புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். … தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். இவ்விதமாக, மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும் குறைவாகவே சந்தோஷமாகக் காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர். மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல், ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும், அதில் பிரயோஜனமில்லை. யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால், மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது. எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது. அறிவியல், அறிவு, சுதந்திரம், ஜனநாயகம், ஓய்வு, சௌகரியம் ஆகியவை மனுஷனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மாத்திரமே கொண்டுவருகின்றன. இந்தக் காரியங்கள் மூலமாகவும் கூட, மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, சமுதாயத்தின் அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான். இந்த காரியங்களால் ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் தடுக்க இயலாது. ஏனென்றால், மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான், மேலும் மனுஷனின் அறிவில்லாத தியாகங்களும் ஆராய்ச்சிகளும் மனுஷனின் எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது முன்னால் உள்ள பாதையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிகத் துயரத்திற்கு மாத்திரமே வழிவகுக்கும் மற்றும் மனுஷனை ஒரு நிலையான பயத்தில் மாத்திரமே வைத்திருக்கும். மனுஷன் அறிவியலையும் அறிவையும் பார்த்துக்கூட பயப்படுகிறான், மேலும் வெறுமை உணர்வினால் இன்னும் அதிகமாகப் பயப்படுவான். இந்த உலகில், நீ ஒரு சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலும் அல்லது மனித உரிமைகள் இல்லாத ஒரு நாட்டில் வாழ்ந்தாலும், நீ மனுக்குலத்தின் தலைவிதியிலிருந்து முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது. நீ ஆள்பவனாக இருந்தாலும் அல்லது ஆளப்படுபவனாக இருந்தாலும், மனுக்குலத்தின் தலைவிதி, மர்மங்கள் மற்றும் போய்ச்சேருமிடம் ஆகியவற்றை ஆராய்வதற்கான பிரயாசத்திலிருந்து உன்னால் முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது, மேலும் வெறுமை என்னும் குழப்பமான உணர்விலிருந்து உன்னால் தப்பித்துக்கொள்ள இயலாது. மனுக்குலம் முழுவதிற்கும் பொதுவான இதுபோன்ற நிகழ்வுகள் சமூகவியலாளர்களால் சமூக தோற்றப்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஒரு பெரிய மனுஷனும் முன்வர இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான். தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது. அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு நியாயமான சமூகம் மனுக்குலத்திற்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய இரட்சிப்பும், அவர்களுக்கு அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே, தேவைகள், ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் மனுஷனின் ஆவிக்குரிய வெறுமை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இயலும். ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பையும் கவனிப்பையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், இதுபோன்ற ஒரு நாடோ அல்லது தேசமோ வீழ்ச்சியையும், இருளையும் நோக்கிச்செல்லும் சாலையில் காலடி எடுத்து வைக்கும், மேலும் தேவனால் நிர்மூலமாக்கப்படும்.

ஒருவேளை உன் நாடு தற்போது செழிப்படைகிறது, ஆனால் உன் ஜனங்களை தேவனிடமிருந்து விலகிச் செல்ல நீ அனுமதித்தால், அது தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெருமளவில் இழந்து காணப்படும். உன் நாட்டின் நாகரிகம் பெருமளவில் நசுக்கப்படும். விரைவிலேயே ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக எழுந்து பரலோகத்தைச் சபிப்பார்கள். ஆகவே, மனுஷனுக்குத் தெரியாமலே, ஒரு நாட்டின் தலைவிதி அழிக்கப்படும். தேவனால் சபிக்கப்பட்ட அந்த நாடுகளைச் சரிக்கட்ட வல்லமை பொருந்திய நாடுகளை தேவன் எழுப்புவார். மேலும் பூமியின் மீதிருந்து அந்த நாடுகளை ஒன்றுமில்லாமல் துடைத்துப் போடுவார். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் ஆட்சியாளர்கள் தேவனைத் தொழுதுகொள்கிறார்களா, அவர்கள் தங்கள் ஜனங்களை தேவனோடு நெருங்கியிருக்கவும், அவரைத் தொழுதுகொள்ளவும் வழிநடத்துகிறார்களா என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆனாலும், இந்தக் கடைசி காலத்தில், தேவனை உண்மையாகவே தேடி தொழுதுகொள்கிறவர்கள் குறைவானவர்களாக இருப்பதால், கிறிஸ்தவம் அரச மதமாக இருக்கும் நாடுகளுக்கு தேவன் சிறப்புச் சலுகையைத் தந்தருளுகிறார். உலகின் மிகவும் நீதியான ஐக்கியத்தை உருவாக்க அவர் அந்த நாடுகளை ஒன்றிணைக்கிறார், அதே நேரத்தில் நாத்திக நாடுகளும் மெய்யான தேவனைத் தொழுதுகொள்ளாதவர்களும் நீதியுள்ள ஐக்கியத்தின் எதிரிகளாக மாறுகிறார்கள். இவ்விதமாக, தேவன் தம்முடைய கிரியையை நடப்பிக்க மனுஷர்கள் மத்தியில் வாசம் செய்வது மட்டுமின்றி, நீதியான அதிகாரத்தைக் கடைபிடிக்கக்கூடிய நாடுகளை ஆதாயப்படுத்துகிறார், அதே நேரத்தில் அவரை எதிர்க்கும் நாடுகள் மீது தண்டனைகளையும் தடைகளையும் விதிக்க அனுமதிக்கிறார். இவ்வாறு இருப்பினும், இன்னும் யாரும் தேவனைத் தொழுதுகொள்ள முன்வருவதில்லை, ஏனென்றால் மனுஷன் தேவனிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டான், மனுஷன் தேவனை நீண்ட காலமாகவே மறந்துவிட்டான். நீதியைக் கடைப்பிடிக்கும், அநீதியை எதிர்க்கும் நாடுகள் மாத்திரமே பூமியில் எஞ்சியிருக்கும். ஆனால் எந்தவொரு நாட்டின் ஆட்சியாளர்களும் தேவன் தங்கள் ஜனங்களை ஆளுகை செய்து வழிநடத்த அனுமதிக்க மாட்டார்கள், எந்தவொரு அரசியல் கட்சியும் தேவனைத் தொழுதுகொள்வதற்காக தங்கள் ஜனங்களை ஒன்று திரட்டாது என்பதனால், இது தேவனுடைய விருப்பங்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. எல்லா நாடு, தேசம், ஆளும் கட்சி ஆகியவற்றின் இருதயத்திலும், ஏன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் கூட தேவன் தனது நீதியான இடத்தை இழந்துவிட்டார். இந்த உலகில் நீதியான அதிகாரங்கள் இருந்தாலும், மனிதனுடைய இருதயத்தில் தேவனுக்கு இடமளிக்காத ஆட்சி எளிதில் அழியக்கூடியதாக இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல், அரசியல் களம் சீர்குலைந்து போகும் மற்றும் அதனால் ஒரு அடிக்கு நிலைத்து நிற்க முடியாது. மனுக்குலத்தைப் பொறுத்தவரை, தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் இருப்பது சூரியன் இல்லாமல் இருப்பது போன்றதாகும். ஆட்சியாளர்கள் தங்கள் ஜனங்களுக்காக எவ்வளவு பங்களிப்பு செய்தாலும், மனுக்குலம் எத்தனை நீதியான மாநாடுகளை ஒன்றாக நடத்தினாலும், இது எதுவுமே போக்கையோ திருப்பாது அல்லது மனுக்குலத்தின் தலைவிதியையோ மாற்றாது. ஜனங்கள் உண்டும் உடுத்தும், ஒன்றாக நிம்மதியாக வாழும் ஒரு நாடே நல்ல நாடு என்றும், நல்ல தலைமை கொண்ட நாடு என்றும் மனுஷன் நினைக்கிறான். ஆனால் தேவன் அவ்வாறு நினைக்கவில்லை. தேவனைத் தொழுதுகொள்ளாத ஒரு நாட்டை தாமே நிர்மூலமாக்கும் நாடு என்று அவர் நினைக்கிறார். மனுஷன் சிந்திக்கும் விதமும் தேவன் சிந்திக்கும் விதமும் பெரிதும் மாறுபட்டது. ஆகவே, ஒரு நாட்டின் தலைவர் தேவனைத் தொழுதுகொள்ளவில்லை என்றால், அந்த நாட்டின் தலைவிதி அழிவுகரமான ஒன்றாக இருக்கும், அந்த நாட்டிற்கு எந்தப் போக்கிடமும் இருக்காது.

தேவன் மனுஷனுடைய அரசியலில் பங்கெடுப்பதில்லை, ஆனாலும் ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியானது தேவனால் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவன் இந்த உலகத்தையும் அண்டசராசரம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறார். மனுஷனின் தலைவிதியும் தேவனுடைய திட்டமும் நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன. எந்த மனுஷனும், நாடும், தேசமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. மனுஷன் தனது தலைவிதியை அறிந்துகொள்ளப் பிரயாசப்பட்டால், அவன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும். தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களையும் தொழுதுகொள்கிறவர்களையும் செழிப்படையச் செய்வார், அதே நேரத்தில் அவரை எதிர்ப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்கள் மீது வீழ்ச்சியையும் அழிவையும் கொண்டுவருவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 264

பிரபஞ்சம் மற்றும் ஆகாயவிரிவு ஆகியவற்றின் பரந்த வீதியில், எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன, வாழ்க்கைச் சுழற்சிக் கோட்பாட்டைப் பின்பற்றுகின்றன, மற்றும் ஒரு நிலையான விதியையும் கடைப்பிடிக்கின்றன. மரிப்பவர்கள் ஜீவனுள்ளோரின் கதைகளை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர், மேலும் ஜீவிக்கிறவர்கள் மரித்தவர்களின் அதே துயரமான வரலாற்றை மீண்டும் செய்கிறார்கள். எனவே, மனிதகுலத்தால் உதவ முடியாது, ஆனால் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள முடியும்: நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் ஏன் மரிக்க வேண்டும்? இந்த உலகத்திற்கு யார் கட்டளையிடுகிறார்கள்? இந்த மனிதகுலத்தை உருவாக்கியவர் யார்? மனிதகுலம் உண்மையில் இயற்கை அன்னையால் சிருஷ்டிக்கப்பட்டதா? மனிதகுலம் உண்மையில் தனது சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறதா? … இந்த கேள்விகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கேள்விகளில் மனிதன் எவ்வளவு அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறானோ, அவ்வளவாக அவனுடைய தாகம் அறிவியலுக்காக வளர்ந்துள்ளது. விஞ்ஞானம் சிறிதளவு மனநிறைவையும், மாம்சத்தின் தற்காலிக இன்பத்தையும் அளிக்கிறது, ஆனால் விஞ்ஞானமானது மனிதனை தனிமைப்படுத்தப்படல், தனித்திருத்தல், மற்றும் மறைத்து-வைத்திருக்கும் பயங்கரம் மற்றும் ஆத்துமாவின் ஆழத்திலிருக்கும் உதவியற்றத்தன்மை ஆகியவற்றிலிருந்து மனிதனை விடுவிப்பதற்கு போதுமானதாக இல்லை. மனிதகுலம் வெறுமனே தனது இதயத்தை மயக்குவதற்காக தனது புறக் கண்ணால் பார்க்கக்கூடிய மற்றும் மனதால் புரிந்துகொள்ளக்கூடிய அறிவியல் அறிவைப் பயன்படுத்துகிறது. ஆயினும் இரகசியங்களை ஆராய்வதிலிருந்து மனிதகுலத்தைத் தடுக்க இதுபோன்ற அறிவியல் அறிவு போதாது. பிரபஞ்சத்திற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் ராஜா யாரென்று மனிதகுலத்திற்கு வெறுமனே தெரியாது, மனிதகுலத்தின் ஆரம்பமும் எதிர்காலமும் தெரியாது. இந்த கோட்பாட்டின் மத்தியில் தவிர்க்க முடியாத வகையில் மனிதகுலம் வெறுமனே வாழ்கிறது. ஒருவரும் தப்பிக்க முடியாது, ஒருவரும் அதை மாற்ற முடியாது, ஏனென்றால் எல்லாவற்றிலும் வானத்திலும் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை ராஜரீகமுள்ள ஒருவர் இருக்கிறார். அவர் ஒருபோதும் மனிதனால் காணக்கூடாதவர், மனிதகுலம் ஒருபோதும் அறிந்திராதவர், மனிதர்கள் ஒருபோதும் அவர் இருப்பதை நம்பினதில்லை—ஆனாலும் அவர் தான் மனிதகுலத்தின் மூதாதையர்களுக்கு சுவாசத்தை ஊதி மனிதகுலத்திற்கு ஜீவனைக் கொடுத்தவர். அவர்தான் மனிதகுலத்திற்கு வழங்கி போஷித்து, அவனை ஜீவனோடு இருக்க அனுமதிக்கிறார்; மற்றும் இன்றுவரை மனிதகுலத்தை வழிநடத்தியவரும் அவரே. மேலும், அவரை, அவர் ஒருவரை மட்டுமே மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக சார்ந்திருக்கிறது. அவர் எல்லாவற்றிலும் ராஜரீகம் கொண்டுள்ளார் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நிர்வகிக்கிறார். அவர் நான்கு பருவகாலங்களுக்கும் கட்டளையிடுகிறார், அவர்தான் காற்று, உறைபனி, பனி மற்றும் மழையை அழைக்கிறார். அவர் மனிதகுலத்திற்கு சூரிய ஒளியைக் கொண்டு வருகிறார், இரவுக்கு வழிகாட்டுகிறார். அவரே வானங்களையும் பூமியையும் அமைத்து, மனிதனுக்கு மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் அவற்றுக்குள் உள்ள அனைத்து உயிரினங்களையும் வழங்கினார். அவருடைய செயல்கள் எங்கும் நிறைந்தவை, அவருடைய வல்லமை எங்கும் வியாபித்திருக்கிறது, அவருடைய ஞானம் எங்கும் வியாபித்திருக்கிறது, மற்றும் அவருடைய அதிகாரம் எங்கும் வியாபித்திருக்கிறது. இந்த கோட்பாடுகள் மற்றும் விதிகள் அனைத்தும் அவருடைய செயல்களின் உருவகமாகும், மேலும் ஒவ்வொன்றும் அவருடைய ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய ராஜரீகத்திலிருந்து யார் தங்களை விலக்கிக் கொள்ள முடியும்? அவருடைய வடிவமைப்புகளிலிருந்து யார் தங்களை வெளியேற்றிக்கொள்ள முடியும்? எல்லாமே அவருடைய பார்வைக்கு கீழாக உள்ளன, மேலும், எல்லாமே அவருடைய ராஜரீகத்தின் கீழ் வாழ்கின்றன. அவருடைய செயல்களும் அவருடைய வல்லமையும் மனிதகுலத்தை வேறு வழியில்லாமல் விட்டுவிடுகின்றன, அதாவது அவர் உண்மையிலேயே இருக்கிறார் என்பதையும் எல்லாவற்றிலும் ராஜரீகம் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவரைத் தவிர வேறு ஒருவராலும் இப்பிரபஞ்சத்திற்கு கட்டளையிட முடியாது, இந்த மனிதகுலத்திற்கு முடிவில்லாமல் பராமரித்து வழங்கவும் முடியாது. நீ தேவனுடைய செயல்களை அங்கீகரிக்க முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ தேவன் இருப்பதை நம்புகிறாயா என்பதைப் பொருட்படுத்தாமல், உன்னுடைய தலைவிதி தேவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமில்லை, மேலும் தேவன் எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலும் ராஜரீகம் கொண்டிருப்பார் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. மனிதனால் அங்கீகரிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் அவர் ஜீவிப்பதும் மற்றும் அதிகாரமும் கணிக்கப்படவில்லை. மனிதனின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் யாவும் அவர் ஒருவருக்கு மட்டுமே தெரியும், மனிதகுலத்தின் தலைவிதியை அவரால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த உண்மையை நீ ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதகுலம் இதையெல்லாம் தனது கண்களால் சாட்சியாகக் காண்பதற்கு வெகுநாட்களாக இருக்காது, இதுதான் தேவன் விரைவில் தாங்கும்படிக்கு விரைவில் கொண்டுவருவார் என்ற உண்மையாகும். மனிதகுலம் தேவனுடைய பார்வையின்கீழ் ஜீவித்து மரிக்கிறது. மனிதன் தேவனுடைய நிர்வகித்தலுக்காக வாழ்கிறான், கடைசியாக கண்களை மூடும்போது, இந்த நிர்வகித்தலுக்காகவே அவை மூடப்படுகின்றன. மனிதன் மீண்டும் மீண்டுமாக வருகிறான், திரும்பிப் போகிறான், வநது வந்து போகிறான். விதிவிலக்கு எதுவுமின்றி, இது தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவரது வடிவமைப்பின் ஒரு பகுதியாகும். தேவனுடைய நிர்வகித்தல் ஒருபோதும் நின்றுவிடவில்லை; அது நிரந்தரமாக முன்னேறி வருகிறது. அவர் தாம் இருப்பதை மனிதகுலத்திற்குத் தெரியப்படுத்துவார், அவருடைய ராஜரீகத்தை அவர்கள் நம்புவார்கள், அவருடைய செயல்களைக் காண்பார்கள், அவருடைய ராஜ்யத்திற்குத் திரும்புவார்கள். இதுதான் அவருடைய திட்டம், மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் நிர்வகித்து வரும் கிரியை இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

முந்தைய: தேவனுடைய கிரியையை அறிதல் II

அடுத்த: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக