தேவனுடைய கிரியையை அறிதல் (2)

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 188

தேவனை விசுவாசிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இறுதி நாட்களில் தேவனுடைய கிரியையையும் இன்று அவர் உங்களில் நடப்பிக்கிற அவரது திட்டத்தின் செயலையும் பெற்றுக்கொண்டதன் மூலம் நீங்கள் அடைந்த பெரிதான உயர்வையும் இரட்சிப்பையும் நீங்கள் உண்மையில் எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள் என்பதைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் தேவன் செய்கின்ற அவரது ஊழியத்தின் தனித்த கவனமாக இந்த ஜனக்கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் தனது இதயத்தின் இரத்தம் முழுவதையும் உங்களுக்காகப் பலியாகச் செலுத்தியுள்ளார், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஆவியானவர் செய்த எல்லாக் கிரியையையும் மீட்டு உங்களிடம் கொடுத்துள்ளார். அதனாலேயே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று நான் சொல்லுகின்றேன். மேலும் அவர் தனது மகிமையை அவர் தேர்ந்தெடுத்த ஜனமான இஸ்ரவேல் மக்களிடமிருந்து எடுத்து உங்களிடம் கொடுத்துள்ளார். அவர் தனது திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக இந்த ஜனக்கூட்டத்தின் மூலமாகவே வெளிப்படுத்துவார். எனவே தேவனின் சுதந்தரத்தைப் பெறப்போகின்றவர்கள் நீங்களே, அது மாத்திரமல்ல தேவனின் மகிமைக்கான வாரிசுகளும் நீங்களே. உங்களுக்கு ஒருவேளை “அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது”. என்ற வசனம் நினைவுக்கு வரலாம். நீங்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவருமே அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று உங்களுக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தை குறித்து ஆழமான ஒரு தெளிவு உள்ளது. இந்த வார்த்தைகள் தேவனால் இறுதி நாட்களில் நிறைவேற்றப்படும், குறிப்பாக கிறிஸ்துவுக்காக அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் அது இருக்கும் தேசத்தில் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டவர்களிடம் அது நிறைவேறும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் இந்த வார்த்தைகள் இந்த ஜனக்கூட்டமாகிய உங்களிடத்தில் நிறைவேறுகின்றது. ஏனென்றால் அது தேவனை எதிர்க்கின்ற ஒரு தேசத்திலேயே அலைந்து திரிகின்றது. தேவனின் அனைத்து கிரியைகளும் மிகப்பெரிய இடையூறுகளைச் சந்திக்கின்ற காரணத்தால் அவரின் வார்த்தைகளை நிறைவேற்ற அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தப்படியே மக்கள் தேவ வார்த்தையின் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றார்கள், இதுவும் பாடுகள் அனுபவிப்பதன் ஒரு பங்காகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தனது கிரியையை நடப்பிப்பது தேவனுக்கு மிகக் கடினமாகும், ஆனால் இந்தக் கடினத்தினூடாகவே தனது ஒரு கட்ட கிரியையைத் தேவன் செய்கின்றார், அது அவரது ஞானத்தையும் அதிசயமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மக்கள் கூட்டத்தை முழுமையாக்குவதுமாகும். மக்களின் பாடுகளினூடாகவும், அவர்களின் திறமையினூடாகவும் அனைத்து சாத்தானுக்கேதுவான மனநிலைக்கு ஊடாகவுமே தேவன் தனது தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆதாயப்படுத்துதல் பணியைச் செய்கிறார். இதன் மூலம் அவர் மகிமையடைந்து அவரது செயல்களுக்கு சாட்சி பகர்கின்ற ஜனங்களை அவர் ஆதாயப்படுத்திக்கொள்வார். தேவன் இந்த மக்கள் கூட்டத்திற்கு செய்த அனைத்து தியாகங்களின் முழுமையான முக்கியத்துவம் என்னவெனில் தேவன் தனது ஆதாயப்படுத்தல் கிரியையை அவரை எதிர்க்கின்றவர்களினூடாகாவே செய்கின்றார், அதனூடாகவே தேவனின் மகத்தான வல்லமை வெளிப்படும். இதை வேறுவிதமாய் சொன்னால், தூய்மை இல்லாத தேசத்தில் வாழ்கின்ற மக்கள் மாத்திரமே தேவனின் கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ள பாத்திரராய் இருக்கின்றார்கள், மேலும் இது மாத்திரமே தேவனின் மகத்தான வல்லமையை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடியது. அதனாலேயே இது தூய்மையற்ற தேசத்திலிருந்து வந்தது என்று கூறுகின்றேன், இவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கின்ற மக்களிடமிருந்தே தேவனின் மகிமை பெறப்படுகின்றது. இதுவே தேவனின் சித்தம். இயேசுவும் இவ்வாறான ஒரு கட்டத்திலேயே கிரியை செய்தார்: அவரை துன்புறுத்திய பரிசேயர் முன்னாலேயே அவர் மகிமைப்படுத்தப்பட முடியும். பரிசேயரின் துன்புறுத்தலோ யூதாசின் காட்டிக்கொடுத்தலோ இல்லாமல் போய் இருந்தால், இயேசு ஏளனத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகியிருக்கமாட்டார், அதைவிட அவர் மிக நிச்சயமாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார், அதனாலே அவர் மகிமையடைந்திருக்கமாட்டார். எங்கே தேவன் ஒவ்வொரு காலத்திலும் கிரியை செய்கின்றாரோ, அவர் எங்கே தனது கிரியையை மாம்சத்தில் செய்கின்றாரோ, அங்கேயே அவர் தனது மகிமையையும் அவர் ஆதாயப்படுத்த எண்ணுகின்றவர்களையும் பெறுகின்றார். தேவனின் கிரியைக்கான திட்டமும் அதற்கான அவரின் வழிமுறையும் இதுவே.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 189

பல்லாயிர வருட தேவனுடைய திட்டத்தில், இரு பகுதி கிரியைகள் மாம்சத்தில் செய்யப்படுகின்றன: முதலாவது கிரியை சிலுவையில் அறையப்படுதல், அதற்காக அவர் மகிமைப்படுகிறார், அடுத்தது கடைசி நாட்களின் ஆதாயப்படுத்துதல் மற்றும் பரிபூரணப்படுத்துதல் கிரியையாகும், அதற்காகவும் அவர் மகிமைப்படுகிறார். இதுவே தேவனின் திட்டம். எனவே உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனின் கிரியையையோ அவரது கட்டளையையோ எளிதான விஷயமாகக் கருத வேண்டாம். அதைப்பார்க்கிலும் நீங்கள் எல்லோரும் தேவனால் விசேஷமாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிரகாரம் அவரது மகத்தான கிருபைக்கான சுதந்திரவாளியாக உள்ளீர்கள். அவரது மகிமையின் இரு பகுதிகளில் ஒன்று உங்களில் வெளிப்படுகின்றது, தேவனுடைய கிருபையின் ஒரு பங்கு முழுமையும் உங்களுக்கு உங்கள் சுதந்திரமாகும் பொருட்டு வழங்கப்பட்டது. தேவன் உங்களை உயர்த்துகின்ற இந்தத் திட்டத்தை அவர் பல காலத்திற்கு முன்பே முன்குறித்ததொன்றாகும். அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தேவன் செய்த கிரியைகளின் மகத்துவத்தைப் பார்த்தால், அந்தச் செயல்கள் வேறு எங்கேயும் செய்யப்பட்டிருந்தால் அது எப்பொழுதோ மிகுந்த கனி கொடுத்து மக்களால் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மேலுமாக இயேசுவின் கிரியை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றபடியால் இந்தக் கிரியையானது மேற்கில் இருக்கின்ற தேவனை விசுவசிக்கின்ற குருமாருக்கு ஏற்றுக்கொள்ள மிக மிக இலகுவாக இருக்கும். இதனாலேயே தேவனால் மகிமையடைதல் கிரியையின் இந்தக்கட்டத்தை வேறெங்கும் அடைய முடியாதுள்ளது. மக்களின் முழு ஆதரவைப்பெற்று தேசங்களால் அங்கீகரிக்கப்படும் போது, அது நிலைத்து நிற்காது. இந்த நிலத்தில் இந்தக் கட்ட கிரியை நடைபெற வேண்டியதற்கான மாபெரும் முக்கியத்துவம் இதுவே. உங்களில் ஒருவராகிலும் நியாயப்பிரமாணத்தால் இரட்சிப்பைப் பெறப்போவதில்லை, மாறாக நீங்கள் நியாயப்பிரமாணத்தால் தண்டிக்கப்படுகிறீர்கள். இன்னும் கடினமான காரியம் என்னவென்றால் ஜனங்கள் உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்: அது உங்கள் உறவினரோ, பெற்றோரோ, உங்கள் நண்பர்களோ உங்களுடன் வேலையாட்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நீங்கள் தேவனால் "கைவிடப்படும்" போது உங்களால் பூமியில் தொடர்ந்து வாழ இயலாது, இருப்பினும் மக்களால் தேவனைவிட்டு விலகி இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது, இதுவே தேவன் மக்களை ஆதாயாப்படுத்துவதன் முக்கியத்துவமும் தேவனின் மகிமையுமாகும். நீங்கள் இன்று சுதந்தரித்த காரியங்கள் யுகம் முழுவதும் வாழ்ந்த அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், ஏன் மோசே மற்றும் பேதுருவை பார்க்கிலும் மகத்தானது. ஆசீர்வாதங்களை உங்களால் ஓரிரு நாட்களில் பெற முடியாது, அதைப் பெரிய தியாகத்தின் ஊடாக சம்பாதிக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொன்னால், சுத்திகரிக்கப்பட்ட அன்பையும், ஆழமான விசுவாசத்தையும், தேவன் நாம் அடைய வேண்டுமென்று வேண்டுகின்ற பல சத்தியங்களையும், நீதிக்காக பயமின்றி போராடுகின்ற மனதையும், தேவன் மீது இடைவிடாத மற்றும் ஆழமான அன்பையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உறுதி இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், உங்கள் குறைகள் நிறைவாக்கப்பட வேண்டும். எந்த குறைகூறுதலும் இல்லாமல் தேவனின் எல்லா வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் மரண பரியந்தம் வரைக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அடைய வேண்டியது இதுவே, இதுவே தேவனின் கிரியையின் இறுதி நோக்கம். இதையே தேவன் இந்த மக்கள் கூட்டத்திடம் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களுக்கு கொடுக்கின்றபடியால், அவர் நிச்சயம் உங்களிடம் எதிர்பார்ப்பதோடு உங்களுக்குக் கொடுத்ததன் பிரகாரம் அவர் கேட்பார். எனவே தேவன் செய்கின்ற அனைத்து கிரியைகளுக்கும் காரணமுண்டு, இது ஏன் தேவன் மீண்டும் மீண்டும் கடுமையான சாவல் மிக்க கிரியைகளைச் செய்கின்றார் என்பதைக் காண்பிக்கின்றது. இந்த காரணத்தினாலேயே நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நிரம்பியிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், தேவனுடைய எல்லாக் கிரியைகளும் நீங்கள் அவரின் சுதந்தரிப்பைப் பெற்றுக்கொள்ள பாத்திராராய் இருக்கும்பொருட்டு உங்கள் நிமித்தமே செய்யப்படுகின்றது. இந்தக் காரியம் குறிப்பாகத் தேவனின் சுய மகிமைக்காக செய்யப்படுவதில்லை, ஆனால் இது உங்களின் இரட்சிப்பிற்காகவும் இந்தத் தூய்மையற்ற தேசத்தில் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பூரணப்படுத்தவும் செய்யப்படுகின்றது. நீங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைக் குறித்து எந்தவொரு விழிப்புணர்வற்ற ஜனங்களுக்குச் சொல்லுகின்ற ஒரு புத்திமதி என்னவென்றால் தேவனைச் சோதிக்கவோ அவரை இனியும் எதிர்க்கவோ வேண்டாம். எந்த மனிதனுமே அனுபவிக்காத பாடுகளை தேவன் அனுபவித்துள்ளார், அத்தோடு மனிதனுக்குப் பதில் அவர் பெரிதான அவமானத்தையும் அனுபவித்துவிட்டார். உங்களால் வேறு எதை விட முடியவில்லை? தேவனின் சித்தத்தைவிட முக்கியமான காரியம் எதுவாக இருக்கும்? தேவனின் அன்பை பார்க்கிலும் எது உயர்ந்ததாக இருக்கும்? தேவன் தனது கிரியையை இந்த அசுத்தமான தேசத்தில் செய்வது ஏற்கனவே கடினமான ஒன்றாக இருக்கும் போது; மனிதன் தெரிந்துகொண்டே வேண்டுமென்று நெறிதவறி நடக்கும் போது, தேவனின் பணியில் தாமதம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், இது யாருக்கும் நல்லதல்ல, இது யாருக்கும் நன்மை பயக்காது. தேவன் நேரத்தின் வரையறைக்குள் இருப்பவரல்ல; அவரது செயலும் அவரது மகிமையுமே முதலிடம் பெறுகின்றது. எனவே அவர் தனது செயலுக்காக, அது எவ்வளவு காலம் எடுத்தாலும், அதற்கான எந்தக் கிரயத்தையும் அவர் செலுத்துவார். தேவனின் குணாதிசயம் இதுவே. அவர் தனது பணி முடியும் வரைக்கும் அவர் ஓய்வதில்லை. அவர் தனது மகிமையின் இரண்டாம் பகுதியை பெற்ற பின்னரே அவரது பணி முடிவிற்கு வரும். இந்த முழு பிரபஞ்சத்திலேயும் தேவன் தனது மகிமைடைதலின் இரண்டாம் பகுதியை முடிக்காவிட்டால், அவரது நாள் ஒரு போதும் வராது, அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களிடமிருந்து அவரது கரம் ஒரு நாளும் விலகாது, அவரது மகிமை ஒரு போதும் இஸ்ரவேல் மேல் இறங்கி வராது, அத்துடன் அவரது திட்டம் ஒரு காலமும் நிறைவேறாது. நீங்கள் தேவனின் சித்தத்தை காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும், அத்தோடு தேவனின் கிரியையானது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்தது போல எளிமையான காரியமல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற கிரியை கறைபட்டவர்களை, உச்ச நிலையில் உணர்வற்றவர்களை உருமாற்றம் செய்வதாகும், அதாவது தேவனால் படைக்கப்பட்ட ஆனால் சாத்தானால் அசுத்தமக்கப்பட்டவர்களை தூய்மையாக்குதலாகும். இந்த கிரியை ஆதாம் அல்லது ஏவாளை சிருஷ்டிப்பது அல்ல, இன்னும் கூறினால் இது வெளிச்சத்தின் அல்லது அனைத்து செடிகொடிகள் மற்றும் விலங்குகளை சிருஷ்டிப்பதற்கும் சற்றும் குறைந்ததல்ல. சாத்தானால் அழுக்காக்கப்பட்ட விஷயங்களை தேவன் சுத்தப்படுத்தி அவற்றைப் புதிதாக்குகின்றார்; அவை அவருக்கு சொந்தமாகின்றது, அவை அவரின் மகிமையாய் மாறுகின்றது. இது மனிதன் கற்பனை செய்வதைப் போன்ற ஒரு காரியமல்ல, இது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டிப்பது போன்றோ, சாத்தானை அடியில்லாக் குழிக்குள் தள்ளுவதைப் போன்றோ எளிமையான காரியமல்ல. மாறாக இது மனிதனை மாற்றுகின்ற ஒரு செயல், எதிர்மறையான காரியங்களையும் அவனுக்கு சொந்தமில்லாத காரியங்களையும் நேர்மறையாகவும் அவருக்குச் சொந்தமாகவும் மாற்றுவதாகும். தேவனின் கிரியையின் இந்தக் கட்டத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை இதுவே. நீங்கள் இதைப் புரிந்துகொண்டு காரியங்களை எளிமையாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவனின் கிரியையானது மற்ற சாதாராண வேலைகளை போன்றதல்ல. அதன் விந்தையும் ஞானமும் மனிதனின் சிந்தைக்கு எட்டாதவை. தேவன் எல்லா காரியங்களையும் கிரியையின் இந்த கட்டத்தில் படைக்கவில்லை, அதேபோலே அவர் அவற்றை அழிப்பதுமில்லை. மாறாக அவர் படைத்த சாத்தானால் களங்கப்படுத்தப்பட்ட காரியங்களை உருமாற்றி தூய்மையாக்குகின்றார். இவ்விதமாக தேவன் ஒரு பெரிய கிரியையைச் செய்வதற்குப் புறப்படுகின்றார், இதுவே தேவனின் கிரியையின் முக்கிய அம்சமாகும். நீங்கள் இந்த வார்த்தைகளினூடாக காண்கின்ற தேவனின் கிரியை அவ்வளவு எளிமையாகவா உள்ளது?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 190

தேவனின் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனிதக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாக சீர்கெட்டுவிட்ட மனிதகுலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவை ஆகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனிதகுலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீத தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாகத் தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்கு கிருபையைக் கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணப்பலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாகத் தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனை தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்றத் தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக் கிரியையும் முடிந்துவிடும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 191

தேவன் சீன நிலப்பரப்பில் மாம்சமாகியிருக்கிறார், அல்லது ஹாங்காங் மற்றும் தைவானில் இருந்து வந்த தோழர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், “உட்பகுதியில்” மாம்சமாகியிருக்கிறார். தேவன் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தபோது, பரலோகத்திலோ அல்லது பூமியிலோ யாரும் இதை அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் தேவன் யாருக்கும் தெரியாமல் மறைவாக வருவதன் உண்மையான அர்த்தம் இதுதான். அவர் நீண்ட காலமாக மாம்சத்தில் கிரியை செய்து ஜீவித்து வருகிறார், ஆனால் இன்னும் யாரும் அதை அறிந்திருக்கவில்லை. இன்றைய நாள் வரையும் கூட யாரும் அதை அங்கீகரிப்பதில்லை. ஒருவேளை இது ஒரு நித்திய புதிராகவே இருக்கக் கூடும். இந்த நேரத்தில் தேவன் மாம்சத்தில் வருவது எந்தவொரு மனுஷனுக்கும் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆவியானவருடைய கிரியையின் தாக்கம் எவ்வளவு பெரியதாக மற்றும் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தேவன் எப்போதும் உணர்ச்சியற்றவராகவே இருக்கிறார், ஒருபோதும் எதையும் விட்டுவிடுவதில்லை. அவருடைய கிரியையின் இந்த கட்டம் பரலோக ராஜ்யத்தில் நடைபெறுவதைப் போன்றது என்று நீங்கள் சொல்லலாம். பார்க்க கண்கள் உள்ள அனைவருக்கும் இது தெளிவாகத் தெரிந்தாலும், யாரும் அதை அங்கீகரிப்பதில்லை. தேவன் தமது கிரியையின் இந்த கட்டத்தை முடிக்கும்போது, எல்லா மனுஷரும் தங்கள் வழக்கமான மனப்பான்மையிடம்[1] இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களின் நீண்ட சொப்பனத்திலிருந்து எழுந்திருக்கிறார்கள். “இந்த நேரத்தில் மாம்சத்திற்குள் வருவது புலிக் குகையில் விழுவது போன்றது,” என்று தேவன் ஒரு முறை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், தேவனுடைய கிரியையின் இந்த சுற்றில் தேவன் மாம்சத்தில் வருகிறார், அதுமட்டுமல்லாமல் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் பிறந்திருப்பதால், அவர் தற்போது பூமிக்கு வருவதன் மூலம் முன்பை விடவும் அதிகமான தீவிர ஆபத்தை அவர் எதிர்கொள்கிறார். அவர் கத்திகள், துப்பாக்கிகள், குண்டாந்தடிகள் மற்றும் தடிகளை எதிர்கொள்கிறார்; அவர் சோதனையை எதிர்கொள்கிறார்; கொலை செய்யும் நோக்கத்தால் நிரப்பப்பட்ட முகங்களை அணிந்த கூட்டங்களை அவர் எதிர்கொள்கிறார். அவர் எந்த நேரத்திலும் கொல்லப்படும் ஆபத்தில் இருக்கிறார். தேவன் தம்முடன் கடுங்கோபத்தைக் கொண்டுவந்தார். இருப்பினும், அவர் பரிபூரணத்திற்கான கிரியையைச் செய்வதற்காக வந்தார், அதாவது அவர் தமது கிரியையின் இரண்டாம் பாகத்தைச் செய்வதற்காகவே வந்தார், அதுவே மீட்பிற்கான கிரியைக்குப் பின்னர் தொடர்கிறது. தம்முடைய கிரியையின் இந்த கட்டத்தின் பொருட்டு, தேவன் மிகுந்த சிந்தனையையும் அக்கறையையும் அர்ப்பணித்திருக்கிறார், மேலும் சோதனையின் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கும், தாழ்மையுடன் தம்மை மறைத்துக்கொள்வதற்கும், ஒருபோதும் தமது அடையாளத்தை பகட்டாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் தமது மனதில் நினைக்கக் கூடிய ஒவ்வொரு வழியையும் பயன்படுத்துகிறார். மனுஷனை சிலுவையிலிருந்து மீட்கும் விஷயத்தில், இயேசு மீட்பின் கிரியையை மட்டுமே செய்து கொண்டிருந்தார்; அவர் பரிபூரணப்படுத்தும் கிரியையைச் செய்யவில்லை. இவ்வாறு தேவனின் கிரியைகளில் பாதி மட்டுமே செய்யப்பட்டு வந்தது, மேலும் மீட்பிற்கான கிரியையை முடிப்பது அவருடைய முழு திட்டத்தின் பாதியாகத்தான் இருந்தது. புதிய யுகம் ஆரம்பிக்கவிருந்து, பழைய யுகம் நிறைவடையவிருந்த தருணத்தில், பிதாவாகிய தேவன் தம்முடைய கிரியையின் இரண்டாம் பாகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். கடைசிக் காலத்தில் இந்த மாம்சமாவதானது கடந்த காலத்தில் தெளிவான தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கவில்லை, இதன் காரணமாகவே தற்போது தேவன் மாம்சமாகும் விஷயத்தைச் சுற்றியுள்ள இரகசியத்தை அதிகரிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து வந்தார். பொழுது விடியும்போது, மனுஷகுலத்தின் பெருந்திரளான ஜனங்களுக்குத் தெரியாமல், தேவன் பூமிக்கு வந்து, மாம்சத்தில் தமது ஜீவிதத்தைத் தொடங்கினார். இந்த தருணம் வருவதை ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருப்பார்கள்; கவனமாக விழித்திருந்த பலரும் அவருக்காகக் காத்திருந்திருக்கலாம், ஒருவேளை பலர் பரலோகத்தில் இருக்கும் தேவனிடம் மௌனமாக ஜெபித்திருந்திருக்கலாம். ஆயினும்கூட, இந்த அநேக ஜனங்களிடையே ஒருவர் கூட தேவன் ஏற்கனவே பூமிக்கு வந்துவிட்டார் என்பதை அறிந்திருக்கவில்லை. தம்முடைய கிரியையை இன்னும் சீராகச் செய்வதற்கும், அதன்மூலம் சிறந்த பலன்களை அடைவதற்கும், இன்னும் அதிகமான சோதனைகளைத் தடுப்பதற்கும் தேவன் இவ்வாறாக கிரியை செய்தார். மனுஷனின் வசந்தகால நித்திரை முடிவடையும்போது, தேவனின் கிரியை முடிந்து நீண்ட காலமாகியிருக்கும், பூமியில் சுற்றித் திரிந்த மற்றும் சிலகாலம் தங்கியிருந்த அவரது ஜீவிதத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து, அவர் புறப்பட்டுச் சென்றிடுவார். தேவனின் கிரியைக்கு அவர் அவராகவே செயல்படவும் பேசவும் தேவைப்படுவதாலும், மனுஷன் தலையிட வழி இல்லாததாலும், பூமிக்கு வந்து அவராகவே அவரது கிரியையைச் செய்ய தேவன் மிகுந்த துன்பங்களைத் தாங்கியிருக்கிறார். தேவனின் கிரியையை மனுஷனால் செய்ய முடியாது. இந்த காரணத்திற்காக, தேவனின் கிரியை நடக்கும் இடத்தில் வசிக்கும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்திற்கு வந்து, தமது சிந்தனையையும் அக்கறையையும் செலவழித்து, இந்த வறிய ஜனங்களை, சாணக் குவியலில் மூழ்கியிருக்கும் இந்த ஜனங்களை மீட்க, கிருபையின் யுகத்தில் இருந்ததை விட பல ஆயிரம் மடங்கு பெரிய ஆபத்துக்களை தேவன் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார். தேவனின் இருப்பைப் பற்றி யாருக்கும் தெரியாவிட்டாலும், தேவன் கவலைப்படவில்லை, ஏனென்றால் இது அவருடைய கிரியைக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது. எல்லோரும் கொடூரமானவர்களாகவும், பொல்லாதவர்களாகவும் இருப்பதால், தேவனின் இருப்பை அவர்கள் எவ்வாறு பொறுத்துக்கொள்வார்கள்? அதனால்தான் தேவன் எப்போதும் பூமிக்கு வருவது மௌனமாகவே இருக்கிறது. மனுஷன் மிக மோசமான கொடுமையினுள் மூழ்கியிருந்தாலும், தேவன் அதை எதையும் மனதில் கொள்ளுவதில்லை, ஆனால் பரலோகத்தில் இருக்கும் பிதா தம்மிடம் ஒப்படைத்த பெரிய கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே செய்கிறார். உங்களில் யார் தேவனின் சௌந்தரியத்தை அங்கீகரிப்பவர்? பிதாவாகிய தேவனுடைய குமாரனைக் காட்டிலும் அதிக அக்கறை காட்டுவது யார்? பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை யார் புரிந்துகொள்ள முடியும்? பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் பெரும்பாலும் கலக்கத்திலேயே இருக்கிறார், பூமியிலுள்ள அவருடைய குமாரன் வருத்தத்தினால் தமது இருதயத்தை வருத்தி, பிதாவாகிய தேவனின் சித்தத்திற்காக தொடர்ந்து ஜெபிக்கிறார், பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி அறிந்தவர்கள் யாராவது உண்டா? நேசகுமாரன் பிதாவாகிய தேவனை இழந்து தவிக்கும் இருதயத்தை பற்றி அறிந்த எவரேனும் இருக்கிறாரா? பரலோகத்தில் ஒருவரும், பூமியில் ஒருவருமாகப் பிரிந்திருக்கும் இருவரும் தூரத்திலிருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆவியில் ஒருவரையொருவர் பின்பற்றுகிறார்கள். ஓ மனுஷகுலமே! தேவனின் இருதயத்தை நீங்கள் எப்போதுதான் கருத்தில் கொள்வீர்கள்? தேவனின் நோக்கத்தை நீங்கள் எப்போதுதான் புரிந்துகொள்வீர்கள்? பிதாவும் குமாரனும் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். பிறகு எதற்காக ஒருவர் மேலே பரலோகத்திலும் மற்றொருவர் கீழே பூமியிலும் என்று பிரிந்து இருக்க வேண்டும்? குமாரன் தமது பிதாவை நேசிப்பதைப் போல பிதா தமது குமாரனை நேசிக்கிறார். பிறகு எதற்காக, பிதா தமது குமாரனுக்காக இத்தகைய ஆழமான மற்றும் வேதனையான ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும்? அவர்கள் நீண்ட காலமாகப் பிரிந்திருக்கப் போவதில்லை, ஆனாலும், பிதா எத்தனை பகலிரவுகள் வேதனையான ஏக்கத்துடன் பேராவலோடு காத்திருக்கிறார், அவர் தமது அன்பான குமாரனின் விரைவான வருகைக்காக எவ்வளவு காலம் ஏக்கத்தில் இருக்கிறார் என யாருக்கு தெரியும்? அவர் கவனிக்கிறார், அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார், அவர் காத்திருக்கிறார்; அவருடைய நேசகுமாரனின் விரைவான வருகைக்காக அவர் எதையும் செய்வதில்லை. பூமியின் எல்லைகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார் குமாரன்: அவர்கள் எப்போது மீண்டும் ஒன்றிணைவார்கள்? அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நித்தியமாக ஒன்றாக இருப்பார்கள் என்றாலும், ஆயிரக்கணக்கான பகலிரவுகள் ஒருவர் மேலே பரலோகத்திலும், மற்றொருவர் கீழே பூமியிலும் இருப்பதால் அவரால் எவ்வாறு பிரிவை தாங்கிக்கொள்ள முடியும்? பூமியில் கழியும் பல தசாப்தங்கள் பரலோகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போல உணரப்படும். பிதாவாகிய தேவன் எப்படி கவலைப்படாமல் இருப்பார்? தேவன் பூமிக்கு வரும்போது, மனுஷனைப் போலவே மனுஷ உலகின் எண்ணற்ற விசித்திரங்களையும் அவர் அனுபவிக்கிறார். தேவன் குற்றமற்றவர், ஆகவே மனுஷனைப் போலவே அவரும் எதற்காக துன்பங்களை சகித்துக்கொள்ள வேண்டும்? பிதாவாகிய தேவன் தமது குமாரனுக்காக இவ்வளவு மன வேதனையடைவதில் ஆச்சரியமில்லை; தேவனின் இருதயத்தை யார் புரிந்து கொள்ள முடியும்? தேவன் மனுஷனுக்கு அதிகமான ஆதாயங்களை கொடுக்கிறார்; தேவனின் இருதயத்திற்கு மனுஷனால் எவ்வாறு போதுமான அளவு திருப்பிச் செலுத்த முடியும்? ஆனாலும் மனுஷன் தேவனுக்கு மிகக் குறைவாகக் கொடுக்கிறான்; அவ்வாறாக இருப்பின் தேவன் எப்படி கவலைப்படாமல் இருப்பார்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிரியையும் பிரவேசித்தலும் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடிக்குறிப்பு:

1. “தங்கள் வழக்கமான மனப்பான்மையிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது” என்பது தேவனைப் பற்றி அறிந்தவுடன், தேவனைப் பற்றிய ஜனங்களின் கருத்துகளும் பார்வைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் குறிக்கிறது.

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 192

தேவனுடய மனநிலையின் அவசரத்தை மனுஷரில் எவரும் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் மனுஷரின் திறமை மிகவும் தாழ்ந்ததாகவும், அவர்களின் மன ஓட்டம் மிகவும் மந்தமாகவும் இருக்கிறது, எனவே அவர்கள் அனைவரும் தேவன் என்ன செய்கிறார் என்பதைக் கவனிப்பதோ அல்லது அதன்மீது மனம் செலுத்துவதோ இல்லை. இந்த காரணத்திற்காக, மனுஷனின் மிருகத்தனமான சுபாவம் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்பதைப்போல மனுஷனைப் பற்றி தேவன் தொடர்ந்து மோசமான மனநிலையையே கொண்டிருக்கிறார். இதிலிருந்து தேவன் பூமிக்கு வரும் விஷயமானது மிகப் பெரிய சோதனையுடன் இணைந்திருப்பதை இன்னும் நீங்கள் தெளிவாகக் காணலாம். ஆனால் ஜனங்கள் குழுவொன்றை பரிபூரணமாக்குவதற்காக, முழு மகிமையால் நிறைந்திருக்கும் தேவன், மனுஷனிடம் எதையும் மறைக்காமல் தமது ஒவ்வொரு நோக்கத்தையும் சொன்னார். இந்த ஜனக்குழுவை பரிபூரணமாக்க அவர் உறுதியாகத் தீர்மானித்திருக்கிறார், ஆகவே, என்ன கஷ்டங்கள் அல்லது சோதனைகள் வந்தாலும், அவர் விலகிப் பார்த்து அனைத்தையும் புறக்கணிக்கிறார். அவர் தமது சொந்த கிரியையை மட்டுமே அமைதியாகச் செய்கிறார், ஒரு நாள் தேவன் தம்முடைய மகிமையைக் கைப்பற்றியவுடன், மனுஷன் அவரை அறிந்துகொள்வான் என்று அவர் உறுதியாக விசுவாசிக்கிறார், மனுஷன் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டவுடன், அவன் தேவனின் இருதயத்தை முழுமையாகப் புரிந்துகொள்வான் என்று அவர் விசுவாசிக்கிறார். தற்சமயம் தேவனைச் சோதிக்கும், அல்லது தேவனை தவறாகப் புரிந்துகொள்ளும், அல்லது தேவனைக் குறை கூறும் நபர்கள் இருக்கலாம்; தேவன் இவற்றில் எதையும் மனதில் வைத்துக்கொள்வதில்லை. தேவன் மகிமைக்குள் இறங்கும்போது, தேவன் செய்யும் அனைத்தும் மனுஷகுலத்தின் மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள், மேலும் தேவன் செய்கிற அனைத்தும் மனுஷகுலம் சிறப்பாக ஜீவித்திருப்பதற்காகத்தான் என்பதை அவர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள். தேவன் தம்முடன் சோதனையைக் கொண்டுவருகிறார், மேலும் மகத்துவத்தையும் கோபத்தையும் கொண்டுவருகிறார். தேவன் மனுஷனை விட்டு புறப்பட்டுச் செல்லும் நேரத்தில், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே தம்முடைய மகிமையைக் கைப்பற்றியிருப்பார், மேலும் அவர் மகிமையுடனும், திரும்பிச் செல்லும் மகிழ்ச்சியுடனும் நிறைவாகப் புறப்பட்டுச் செல்கிறார். பூமியில் கிரியை செய்யும் தேவன், ஜனங்கள் அவரை எப்படி நிராகரித்தாலும் அவற்றை மனதில் வைத்துக் கொள்வதில்லை. அவர் தமது கிரியையை மட்டுமே செய்கிறார். தேவனின் உலக சிருஷ்டிப்பானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் செல்கிறது. அவர் அளவிட முடியாத கிரியையைச் செய்ய பூமிக்கு வந்திருக்கிறார், மேலும் மனுஷ உலகின் நிராகரிப்பு மற்றும் அவதூறுகளை அவர் முழுமையாக அனுபவித்திருக்கிறார். தேவனின் வருகையை யாரும் வரவேற்பதில்லை; அவர் கடுமையான முகத்துடன் வரவேற்கப்படுகிறார். இந்த பல்லாயிரம் ஆண்டுகளின் கடினமான பயணத்தின் போது, மனுஷனின் நடத்தை நீண்ட காலமாக தேவனை விரைவாகக் காயப்படுத்தி வந்திருக்கிறது. அவர் இனியும் ஜனங்களின் கலகத்தில் கவனம் செலுத்துவதில்லை, அதற்குப் பதிலாக மனுஷனை மாற்றுவதற்கும் சுத்திகரிப்பதற்கும் மற்றொரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். மாம்சமானதிலிருந்து தேவன் சந்தித்த அவதூறு, பொல்லாங்கு, துன்புறுத்தல், உபத்திரவம், சிலுவையில் அறையப்படுதல், மனுஷனால் புறக்கணிக்கப்படுதல் மற்றும் பல: தேவன் இவற்றைப் போதுமான அளவு சுவைத்திருக்கிறார். மேலும் மனுஷ உலகின் கஷ்டங்களைப் பொறுத்தவரை, மாம்சமாகிய தேவன் இவை அனைத்தையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார். பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் நீண்ட காலமாக இத்தகைய காட்சிகளைத் தாங்கமுடியாததாகக் கண்டறிந்து, தலையைத் தூக்கி கண்களை மூடிக்கொண்டு, தமது நேசகுமாரன் திரும்பிவரக் காத்திருக்கிறார். அவர் விரும்புவது என்னவென்றால், மனுஷகுலம் செவிசாய்த்து கீழ்ப்படிவார்கள் என்றும், அவருடைய மாம்சத்திற்கு முன்பாக மிகுந்த அவமானத்தை உணர்ந்து, அவருக்கு எதிராகக் கலகம் செய்வதை அவர்களால் நிறுத்த முடியும் என்றும் விசுவாசிக்கிறார். அவர் விரும்புவது என்னவென்றால், தேவனின் இருப்பை மனுஷகுலத்தால் விசுவாசிக்க முடியும் என்பது தான். அவர் நீண்ட காலமாக மனுஷனிடம் அதிக கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திவிட்டார், ஏனென்றால் தேவன் மிக அதிக விலைகிரயம் கொடுத்திருக்கிறார், ஆனாலும் மனுஷன் எளிதில் ஓய்வெடுக்கிறான்[1], மேலும் தேவனின் கிரியையை மனதில் கொள்ளுவதும் இல்லை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிரியையும் பிரவேசித்தலும் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடிக்குறிப்பு:

1. “எளிதாக ஓய்வெடுப்பது” என்பது ஜனங்கள் தேவனின் கிரியையைப் பற்றித் தெரியாதவர்கள், அதை முக்கியமானதாக கருதுவதில்லை என்பதாகும்.

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 198

இன்று, சீனாவில் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களில் அவர்களின் கலகத்தனமான மனநிலையை வெளிப்படுத்தவும், அவர்களின் அனைத்து அசிங்கங்களையும் வெளிப்படுத்தவும் நான் கிரியை செய்கிறேன், மேலும் நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்வதற்கான சூழலை இது வழங்குகிறது. பின்னர், முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையின் அடுத்த கட்டத்தை நான் மேற்கொள்ளும்போது, முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைவரின் அநீதியையும் நியாயந்தீர்ப்பதற்கு நான் உங்களது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் நீங்கள் தான் மனுஷரிடையே இருக்கும் கலகக்காரர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். முன்னேறிச்செல்ல முடியாதவர்கள் வெறுமனே ஜடப்பொருட்களாகவும், ஊழியம் செய்யும் பொருள்களாகவும் மாறுவர், அதேசமயம் முன்னேறக்கூடியவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். முன்னேறிச்செல்ல முடியாதவர்கள் ஜடப்பொருட்களாக மட்டுமே செயல்படுவார்கள் என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனென்றால், எனது தற்போதைய வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் உங்கள் பின்னணியைக் குறிவைக்கின்றன, மேலும் நீங்கள் மனுஷகுலம் அனைத்திலும் கலகக்காரர்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மாதிரிகளாகவும் மாறிவிட்டீர்கள். பின்னர், உங்களை ஜெயங்கொண்ட வார்த்தைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள ஜனங்களை ஜெயங்கொள்ள அவற்றைப் பயன்படுத்துவேன், ஆனால் நீ அவற்றைப் பெற்றிருக்க மாட்டாய். அது உன்னை ஒரு ஜடப்பொருளாக்காதா? மனுஷகுலம் முழுவதின் சீர்கெட்ட மனநிலை, மனுஷனின் கலகத்தனமான செயல்கள், மனுஷனின் அசிங்கமான உருவங்கள் மற்றும் முகங்கள்—இவை அனைத்தும் இன்று உங்களை ஜெயங்கொள்ள பயன்படுத்தும் வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேசத்தின் ஜனங்களையும் ஒவ்வொரு பிரிவின் ஜனங்களையும் ஜெயங்கொள்ள நான் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் நீங்கள் தான் ஆதிவகையை சேர்ந்த முன்னோடிகளாக இருக்கிறீர்கள். இருப்பினும், நான் உங்களை வேண்டுமென்றே கைவிடவில்லை; நீ உன் முயற்சியில் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டால், நீ குணப்படுத்த முடியாதவன் என நிரூபிக்கப்பட்டால், நீ வெறுமனே ஒரு ஊழியப் பொருளாகவும் ஜடப்பொருளாகவும் இருக்க மாட்டாயா? சாத்தானின் திட்டங்களின் அடிப்படையில் எனது ஞானம் பயன்படுத்தப்படுகிறது என்று நான் ஒரு முறை சொன்னேன். நான் ஏன் அப்படிச் சொன்னேன்? நான் இப்போது சொல்லும் மற்றும் செய்யும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை அதுவல்லவா? உன்னால் முன்னேற முடியாவிட்டால், நீ பரிபூரணமாக்கப்படாவிட்டால், அதற்கு பதிலாக தண்டிக்கப்பட்டால், நீ ஒரு ஜடப்பொருளாக மாட்டாயா? உனது காலத்தில் நீ நன்கு துயரப்பட்டிருப்பாய், ஆனால் நீ இன்னும் எதுவும் புரிந்து கொள்ளவில்லை; ஜீவிதத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நீ அறிந்திருக்கவில்லை. நீ சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், நீ சிறிதும் மாறவில்லை, உனக்குள் ஆழமாக நீ ஜீவிதத்தைப் பெற்றிருக்கவில்லை. உன் கிரியையைச் சோதிக்க நேரம் வரும்போது, நீ நெருப்பு போன்ற கடுமையான சோதனையை மற்றும் இன்னும் பெரிய உபத்திரவத்தை அனுபவிப்பாய். இந்த நெருப்பு உன்னை சாம்பலாக மாற்றும். ஜீவிதத்தை கொண்டிருக்காத ஒருவனாக, தனக்குள் சிறிதளவு தூய தங்கம் கூட இல்லாத ஒருவனாக, பழைய சீர்கெட்ட மனநிலையுடன் சிக்கிக்கொண்ட ஒருவனாக, ஒரு ஜடப்பொருளாக இருப்பதில் நல்ல வேலையைக் கூட செய்ய முடியாத ஒருவனாக இருக்கும் உன்னை எப்படி அகற்றாமல் இருக்கமுடியும்? ஒரு பைசாவிற்குக்கூட மதிப்பில்லாத, ஜீவனைக் கொண்டிருக்காத ஒருவனால் ஜெயங்கொள்ளுதல் கிரியைக்கு என்ன பிரயோஜனம்? அந்த நேரம் வரும்போது, நோவா மற்றும் சோதோமின் நாட்களை விட உனது நாட்கள் கடினமாக இருக்கும்! உனது பிரார்த்தனைகள் உனக்கு எந்த நன்மையும் செய்யாது. இரட்சிப்பின் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், பின்னர் திரும்பி வந்து புதிதாக உன்னால் எப்படி மனந்திரும்ப முடியும்? இரட்சிப்பின் அனைத்து கிரியைகளும் முடிந்ததும், அதற்கு மேல் எதுவும் இருக்காது; தீயவர்களைத் தண்டிக்கும் கிரியையின் ஆரம்பம் மட்டுமே இருக்கும். நீ எதிர்க்கிறாய், நீ கலகம் செய்கிறாய், நீ தீயவை என்று அறிந்த காரியங்களைச் செய்கிறாய். நீ கடுமையான தண்டனையின் இலக்கு இல்லையா? இதை இன்று உனக்காக உச்சரிக்கிறேன். நீ அதைக் கேட்க வேண்டாம் என்று முடிவுசெய்தால், பின்னர் உனக்கு பேரழிவு நேரும்போது, அப்போது நீ வருத்தப்பட ஆரம்பித்து விசுவாசிக்கத் தொடங்கினால் அது தாமதமானதாக இருக்காதா? இன்று நீ மனந்திரும்ப உனக்கு ஒரு வாய்ப்பை நான் தருகிறேன், ஆனால் நீ அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நீ எவ்வளவு நேரம் காத்திருக்க விரும்புகிறாய்? ஆக்கினைத்தீர்பிற்கான நாள் வரையிலா? உனது கடந்த கால மீறல்களை நான் இன்று நினைவில் கொள்வதில்லை; நான் உன்னை மீண்டும் மீண்டும் மன்னிக்கிறேன், உனது எதிர்மறையான பக்கத்திலிருந்து விலகி, உனது நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறேன், ஏனென்றால் எனது தற்போதைய வார்த்தைகளும் கிரியைகளும் உன்னை இரட்சிப்பதற்காகவே உள்ளன, மேலும் எனக்கு உன்மீது எந்தவித தீயநோக்கமும் இல்லை. ஆனாலும் நீ பிரவேசிக்க மறுக்கிறாய்; கெட்டதில் இருந்து உன்னால் நல்லதைச் சொல்ல முடியாது, மேலும் உனக்கு தயையை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. அத்தகையவர்கள் வெறுமனே தண்டனை மற்றும் நீதியான தண்டனையின் வருகைக்காக காத்திருக்கவில்லையா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 199

மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவரது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் தங்கள் விசுவாசத்தின் நிமித்தமாகவே என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? ஜனங்கள் தங்கள் விசுவாசத்தினால் நிறைய பெற்றிருக்கிறார்கள், அது எப்போதும் ஒரு ஆசீர்வாதம் அல்ல. தாவீது உணர்ந்த மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அவர்கள் பெறாமலிருக்கலாம், அல்லது மோசே செய்ததைப் போல யேகோவாவால் தண்ணீர் வழங்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, யோபுவின் விசுவாசத்தினால் அவன் யேகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டான், ஆனால் அவனும் பேரழிவைச் சந்தித்தான். நீ ஆசீர்வதிக்கப்பட்டாலும் அல்லது பேரழிவை அனுபவித்தாலும், இரண்டும் ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள் தான். விசுவாசம் இல்லாமல், இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையை உன்னால் பெற முடியாது, மேலும் இன்று உன் கண்களுக்கு முன்பாக காண்பிக்கப்படும் யேகோவாவின் கிரியைகளை உன்னால் காண இயலாது. உன்னால் பார்க்கவும் இயலாது, பெறவும் இயலாது. இந்த துன்பங்கள், இந்தப் பேரழிவுகள் மற்றும் அனைத்து நியாயத்தீர்ப்புகள்—இவை உனக்கு ஏற்படவில்லை என்றால், உன்னால் இன்று யேகோவாவின் கிரியைகளைக் காண முடியுமா? இன்று, விசுவாசமே உன்னை ஜெயங்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் அது ஜெயங்கொள்ளப்படுவது யேகோவாவின் ஒவ்வொரு கிரியையையும் விசுவாசிக்க அனுமதிக்கிறது. விசுவாசத்தினால்தான் நீ இத்தகைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் பெறுகிறாய். இந்த ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், நீ ஜெயங்கொள்ளப்பட்டு பரிபூரணமடைகிறாய். இன்று நீ பெறும் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உனது விசுவாசம் வீணாகிவிடும், ஏனென்றால் நீ தேவனை அறிய மாட்டாய்; நீ அவரை எவ்வளவு விசுவாசித்தாலும், உன் விசுவாசம் நிலைத்திருக்கும், ஆனால் அது உண்மையில் வெற்று வெளிப்பாடாகத் தான் இருக்கும். இந்த ஜெயங்கொள்வதன் கிரியையை நீ பெற்ற பின்னரே, உன்னை முழுமையாக கீழ்ப்படியச் செய்யும் கிரியையை, உன் விசுவாசம் உண்மையாகவும், நம்பகமானதாகவும் மாறும், மேலும் உனது இருதயம் தேவனை நோக்கித் திரும்பும். “விசுவாசம்” என்ற இந்த வார்த்தையின் காரணமாக நீ மிகுந்த நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் அனுபவித்தாலும், நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சத்தியமான, மிகவும் உண்மையான, மிகவும் அருமையான விஷயத்தைப் பெறுகிறாய். ஏனென்றால், நியாயத்தீர்ப்பின் போக்கில் மட்டுமே தேவனின் சிருஷ்டிப்புகள் இறுதியாக போய்சேரும் இடத்தை நீ காண்கிறாய்; இந்த நியாயத்தீர்ப்பில்தான் சிருஷ்டிகர் நேசிக்கப்பட வேண்டும் என்பதை நீ காண்கிறாய்; இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ தேவனின் கரத்தைக் காண்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தை முழுமையாக புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பெற்று, “மனுஷன்” என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் மட்டுமே நீ சர்வவல்லவரின் நேர்மையான மனநிலையையும் அவருடைய அழகான, மகிமையான முகத்தையும் காண்கிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ மனுஷனின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொண்டு, மனுஷகுலத்தின் “அழியாத வரலாற்றை” புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷகுலத்தின் மூதாதையர்களையும் மனுஷகுலத்தின் சீர்கேட்டின் தோற்றத்தையும் புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெறுகிறாய், அத்துடன் முடிவில்லாத சிட்சை, ஒழுக்கம் மற்றும் சிருஷ்டிகரிடமிருந்து அவர் சிருஷ்டித்த மனுஷகுலத்திற்கு கடிந்துகொள்ளுதல் வார்த்தைகளைப் பெறுகிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ ஆசீர்வாதங்களைப் பெறுகிறாய், அதே போல் மனுஷனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் பெறுகிறாய்… இது உனது சிறிய விசுவாசத்தின் காரணமாகத்தான் அல்லவா? இவற்றைப் பெற்ற பிறகு உனது விசுவாசம் வளரவில்லையா? நீ மிகப்பெரிய அளவிற்குப் பெறவில்லையா? நீ தேவனின் வார்த்தையைக் கேட்டிருக்கிறாய், தேவனின் ஞானத்தையும் கண்டிருக்கிறாய் என்பது மட்டுமல்லாமல், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நீ தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது இந்த வகையான நியாயத்தீர்ப்பையோ அனுபவித்திருக்க மாட்டாய் என்றுகூட நீ கூறலாம். ஆனால் விசுவாசம் இல்லாமல், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது சர்வவல்லவரிடமிருந்து இந்த வகையான கவனிப்பையோ பெற முடியாது என்பது மட்டுமல்லாமல், சிருஷ்டிகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நீ என்றென்றும் இழக்க நேரிடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ மனுஷகுலத்தின் தோற்றத்தை ஒருபோதும் அறிய மாட்டாய், மனுஷ ஜீவிதத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டாய். உன் சரீரம் மரித்துப்போய், உனது ஆத்துமா புறப்பட்டாலும், சிருஷ்டிகரின் எல்லா கிரியைகளையும் நீ புரிந்து கொள்ள மாட்டாய், மேலும் சிருஷ்டிகர் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபின் பூமியில் இவ்வளவு பெரிய கிரியைகளைச் செய்தார் என்பதையும் நீ அறிய மாட்டாய். அவர் சிருஷ்டித்த இந்த மனுஷகுலத்தின் உறுப்பினராக, நீ அறியாமலே இவ்வாறாக இருளில் விழுந்து, நித்திய தண்டனையை அனுபவிக்க விரும்புகிறாயா? இன்றைய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ உன்னை விலக்கிக் கொண்டால், நீ எதைத்தான் சந்திப்பாய்? தற்போதைய நியாயத்தீர்ப்பிலிருந்து நீ விலகியவுடன், இந்த கடினமான ஜீவிதத்திலிருந்து உன்னால் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாயா? நீ “இந்த இடத்தை” விட்டு வெளியேறினால், நீ சந்திப்பது வலிமிகுந்த துயரம் அல்லது பிசாசால் செய்யப்பட்ட கொடூரமான துஷ்பிரயோகம் என்பது உண்மையாகிவிடாதா? உன்னால் தீர்க்கமுடியாத பகல் மற்றும் இரவுகளை சந்திக்க முடியுமா? இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்ததால், எதிர்கால சித்திரவதைகளை நீ என்றென்றும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறாயா? உனது பாதையின் குறுக்கே என்ன வரும்? அது உண்மையிலேயே நீ நம்பும் ஷாங்க்ரி—லாவாக இருக்குமோ? நீ இப்போது செய்வது போல யதார்த்தத்திலிருந்து தப்பிச்செல்வதன் மூலம் எதிர்கால நித்திய ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? இன்றைய நாளுக்குப் பிறகு, இந்த வகையான வாய்ப்பையும் இந்த வகையான ஆசீர்வாதத்தையும் மீண்டும் உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? உனக்குப் பேரழிவு நேரும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? மனுஷகுலம் மொத்தமும் ஓய்வெடுக்கச் செல்லும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? உனது தற்போதைய மகிழ்ச்சியான ஜீவிதமும், உனது இணக்கமான சிறிய குடும்பமும்—அவை உனது எதிர்காலத்தில் போய்ச்சேரும் நித்திய இடத்திற்கு மாற்றாக இருக்க முடியுமா? நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருந்தால், உனது விசுவாசத்தின் காரணமாக நீ பெருமளவில் பெற்றால், அப்போது அவற்றையெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனான நீ பெற வேண்டும், மேலும் அவற்றை நீ ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஜெயத்தை விட உனது விசுவாசத்திற்கும் ஜீவிதத்திற்கும் வேறு எதுவும் பயனளிக்காது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 200

இன்று, நீ எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு தங்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நீ ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டாய் என்று நீ கூறலாம், ஆனால் உன்னால் மரணத்திற்குக் கீழ்ப்படிய முடியுமா? ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் உன்னால் இறுதிவரை பின்பற்ற முடியும், மேலும் சூழலைப் பொருட்படுத்தாமல் நீ தேவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது. இறுதியில், நீங்கள் சாட்சியத்தின் இரண்டு அம்சங்களை அடைய வேண்டும்: யோபுவின் சாட்சியம்—மரணத்திற்குக் கீழ்ப்படிதல்; பேதுருவின் சாட்சியம்—தேவனின் மிக உயர்ந்த அன்பு. ஒரு வகையில், நீங்கள் யோபுவைப் போல இருக்க வேண்டும்: அவன் எல்லாப் பொருள்களையும் இழந்து, மாம்சத்தின் வேதனையில் மூழ்கியிருந்தான், ஆனாலும் அவன் யேகோவாவின் நாமத்தைக் கைவிடவில்லை. இதுவே யோபுவின் சாட்சியம். பேதுருவால் தேவனை மரணம் வரை நேசிக்க முடிந்தது. அவன் சிலுவையில் அறையப்பட்டு அவனது மரணத்தை எதிர்கொண்டபோதும் அவன் தேவனை நேசித்தான்; அவன் தனது சொந்த வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கவில்லை அல்லது அழகான நம்பிக்கைகள் அல்லது ஆடம்பரமான எண்ணங்களைப் பின்தொடரவில்லை, மேலும் அவன் தேவனை நேசிக்கவும் தேவனின் எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும் தான் முயன்றான். நீ சாட்சியமளித்ததாகக் கருதப்படுவதற்கு முன்பு, நீ ஜெயங்கொள்ளப்பட்ட பின் பூரணப்படுத்தப்பட்ட ஒருவனாக மாறுவதற்கு முன்பு நீ அடைய வேண்டிய தரநிலை இதுதான். இன்று, ஜனங்கள் தங்கள் சொந்த சாராம்சத்தையும் அந்தஸ்தையும் உண்மையிலேயே அறிந்திருந்தால், அவர்கள் இன்னும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் தேடுவார்களா? நீ தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவன் என்னை பரிபூரணமாக்குகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், நான் தேவனைப் பின்பற்ற வேண்டும்; அவர் இப்போது செய்கிற அனைத்தும் நல்லது தான், அவை என் பொருட்டு செய்யப்படுகிறது, இதன் மூலம் நம்முடைய மனநிலை மாறி, சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும், அசுத்தமான தேசத்தில் பிறந்திருந்தாலும் நம்மை அசுத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ளவும், அசுத்தத்தையும் சாத்தானின் ஆதிக்கத்தையும் அசைத்துப் பார்க்கவும், அதை விட்டுவிடவும் வழிவகுக்கிறது. நிச்சயமாக, இதுதான் உன்னிடம் தேவைப்படுகிறது, ஆனால் தேவனைப் பொறுத்தவரை இது ஜெயங்கொள்ளுதல் மட்டுமேயாகும், இதனால் ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்ற உறுதியை கொண்டிருப்பார்கள், தேவனின் திட்டங்கள் அனைத்திற்கும் அவர்களால் அடிபணியவும் முடியும். இவ்வாறாக, காரியங்கள் நிறைவேற்றப்படும். இன்று, பெரும்பாலான ஜனங்கள் ஏற்கனவே ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டனர், ஆனால் அவர்களுக்குள் கலகத்தன்மையும் கீழ்ப்படியாமையும் இன்னும் இருக்கிறது. ஜனங்களின் உண்மையான சரீரவளர்ச்சி இன்னும் மிகச் சிறியதாகவே இருக்கிறது, நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தால் மட்டுமே அவர்கள் முழு வீரியம் பெற முடியும்; நம்பிக்கைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாததால், அவர்கள் எதிர்மறையாகி, தேவனை விட்டு விலகுவது பற்றி கூட சிந்திக்கின்றனர். மேலும், சாதாரண மனுஷகுலத்தை ஜீவிக்க முற்படுவதற்கு ஜனங்களுக்கு பெரிய விருப்பம் இருப்பதில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, நான் ஜெயங்கொள்ளுதல் பற்றி இன்னும் பேச வேண்டும். உண்மையில், ஜெயங்கொள்ளப்படும் அதே நேரத்தில் பரிபூரணப்படுத்துதலும் ஏற்படுகிறது: நீ ஜெயங்கொள்ளப்படுவதால், பரிபூரணப்படுவதன் முதல் விளைவுகளும் அடையப்படுகின்றன. ஜெயங்கொள்ளப்படுவதற்கும் பரிபூரணமாகுவதற்கும் இடையேயான வித்தியாசமானது, ஜனங்களில் ஏற்படும் மாற்றத்தின் அளவிற்கு ஏற்ப இருக்கும். ஜெயங்கொள்ளப்படுவது பரிபூரணமாக்கப்படுவதற்கான முதல் படியாகும், ஆனால் இது அவர்கள் முழுமையாக பரிபூரணமாக்கப்பட்டனர் என்று அர்த்தமாகாது, அல்லது அவர்கள் தேவனால் முழுமையாகப் பெறப்பட்டனர் என்பதையும் நிரூபிக்கவில்லை. ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஆனால் இதுபோன்ற மாற்றங்கள் தேவனால் முழுமையாகப் பெறப்பட்ட ஜனங்களிடம் மிகக் குறைவாகதான் ஏற்படுகின்றன. இன்று செய்யப்படுவது ஜனங்களை பரிபூரணமாக்குவதற்கான ஆரம்ப கிரியை—அவர்களை ஜெயங்கொள்வது—நீ ஜெயங்கொள்ளப்பட முடியாவிட்டால், நீ பரிபூரணனாவதற்கும் தேவனால் முழுமையாகப் பெறுவதற்கும் எந்த வழியும் இருக்காது. நீ ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் சில சொற்களைப் பெறுவாய், ஆனால் அவற்றால் உனது இருதயத்தை முழுமையாக மாற்ற இயலாது. இவ்வாறு, நீக்கப்படுபவர்களில் நீயும் ஒருவனாக இருப்பாய்; இது மேஜையில் ஒரு ஆடம்பரமான விருந்து இருப்பதைக் கண்டும், அதைப் புசிக்க முடியாமல் போவதிலிருந்து வேறுபட்டதாக இருக்காது. அது உனக்கு ஒரு சோகமான சூழ்நிலை அல்லவா? எனவே நீ மாற்றங்களைத் தேட வேண்டும்: அது ஜெயங்கொள்ளப்படுவதோ அல்லது பரிபூரணமாக்கப்படுவதோ, இரண்டும் உன்னில் மாற்றங்கள் உள்ளதா, மற்றும் நீ கீழ்ப்படிந்திருக்கிறாயா இல்லையா என்பதோடு தொடர்புடையது, மேலும் இதனால் மட்டுமே உன்னால் தேவனிடமிருந்து பெற முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். “ஜெயங்கொள்ளப்படுதல்” மற்றும் “பரிபூரணமாக்கப்படுதல்” ஆகியவை மாற்றம் மற்றும் கீழ்ப்படிதலின் அளவை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், அதேபோல் தேவனிடத்திலான உனது அன்பு எவ்வளவு தூய்மையானது என்பதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள். இன்றைய நாளுக்கான தேவை என்னவென்றால், நீ முழுமையாக பூரணப்படுத்தப்படலாம், ஆனால் ஆரம்பத்தில் நீ ஜெயங்கொள்ளப்பட வேண்டும்—தேவனின் ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றி உனக்குப் போதுமான அறிவு இருக்க வேண்டும், பின்பற்ற வேண்டிய விசுவாசம் இருக்க வேண்டும், மேலும் மாற்றத்தை நாடும் ஒருவனாகவும், தேவன் பற்றிய அறிவை நாடுகிற ஒருவனாகவும் நீ இருக்க வேண்டும். அப்போதுதான் பரிபூரணமாக விரும்பும் ஒருவனாக நீ இருப்பாய். பரிபூரணனாக மாற்றப்படும் போக்கில் நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள் என்பதையும், ஜெயங்கொள்ளப்படும் போக்கில் நீங்கள் பரிபூரணனாவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, நீ பரிபூரணமாக்கப்பட முற்படலாம் அல்லது உனது வெளிப்புற மனுஷத்தன்மையில் மாற்றங்களையும், உனது திறனில் முன்னேற்றங்களையும் நீ தேடலாம், ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவன் இன்று செய்யும் எல்லாவற்றிற்கும் அர்த்தம் உள்ளது என்றும், நன்மை பயக்கும் என்றும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்: அசுத்தமான தேசத்தில் பிறந்த உனக்கு அசுத்தத்திலிருந்து தப்பித்து அதை அசைத்துப் பார்க்க இது உதவுகிறது, இது சாத்தானின் ஆதிக்கத்தை வெல்லவும், சாத்தானின் இருண்ட ஆதிக்கத்தை விட்டு வெளியேறவும் உனக்கு உதவுகிறது. இவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த அசுத்தமான நிலத்தில் நீ பாதுகாக்கப்படுகிறாய். இறுதியில், உன்னிடம் என்ன சாட்சியம் கேட்கப்படும்? நீ அசுத்தமான தேசத்தில் பிறந்திருக்கிறாய், ஆனாலும் பரிசுத்தமானவனாக ஆக முடிகிறது, நீ மீண்டும் ஒருபோதும் அசுத்தத்தால் பாதிக்கப்படமாட்டாய், சாத்தானின் ராஜ்யத்தின் கீழ் ஜீவித்து, ஆனால் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து உன்னை நீயே திசைதிருப்ப முடிகிறது, சாத்தானால் ஆட்கொள்ளப்பட அல்லது துன்புறுத்தப்படாமல், சர்வவல்லவரின் கைகளில் உன்னால் ஜீவித்திருக்க முடிகிறது. இதுவே சாட்சியமும், சாத்தானுடனான யுத்தத்தில் ஜெயங்கொண்டதற்கான சான்றும் ஆகும். உன்னால் சாத்தானைக் கைவிட முடிகிறது, நீ ஜீவிப்பனவற்றில் சாத்தானிய மனநிலையை இனி வெளிப்படுத்த மாட்டாய், மாறாக, மனுஷனை தேவன் சிருஷ்டித்த போது மனுஷன் அடைய வேண்டும் என்று அவர் எண்ணியதை மனுஷன் ஜீவிக்க வேண்டும்: சாதாரண மனுஷத்தன்மை, இயல்பான உணர்வு, சாதாரண நுண்ணறிவு, தேவனை நேசிப்பதற்கான சாதாரண தீர்மானம், தேவனுக்கு விசுவாசம் ஆகியவை. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் அளிக்க வேண்டிய சாட்சியம் இதுதான். நீ சொல்கிறாய், “நாங்கள் அசுத்தமான தேசத்தில் பிறந்திருக்கிறோம், ஆனால் தேவனின் பாதுகாப்பு காரணமாகவும், அவருடைய தலைமை காரணமாகவும், அவர் நம்மை ஜெயங்கொண்டதாலும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து எங்களை விடுவித்துக்கொண்டோம். இன்று எங்களால் கீழ்ப்படிய முடியும் என்பது தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டதன் விளைவு தான், அது நாங்கள் நல்லவர்கள் என்பதால் அல்ல, அல்லது இயற்கையாகவே தேவனை நேசித்ததாலும் அல்ல. தேவன் எங்களைத் தேர்ந்தெடுத்து, எங்களை முன்கணித்ததால்தான், இன்று நாங்கள் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறோம், அவருக்கு சாட்சியம் அளிக்க முடிகிறது, அவருக்கு ஊழியம் செய்ய முடிகிறது; ஆகவே, அவர் எங்களைத் தேர்ந்தெடுத்து எங்களைப் பாதுகாத்ததால்தான், நாங்கள் சாத்தானின் ராஜ்யத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம், மேலும் அசுத்தத்தை விட்டுவிட்டு, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் சுத்திகரிக்கப்பட்டோம்,” என்று.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 201

கடைசிக் காலத்தின் கிரியை எல்லா விதிகளையும் மீறுகிறது, மேலும் நீ சபிக்கப்படுகிறாயா அல்லது தண்டிக்கப்படுகிறாயா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ எமது கிரியைக்கு உதவி செய்யும் வரை மற்றும் இன்றைய ஜெயங்கொள்ளும் கிரியைக்கு பயனளிக்கும் வரை, நீ மோவாபின் வழித்தோன்றல் அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியாக இருந்தாலும், கிரியையின் இந்தக் கட்டத்தில் உன்னால் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கடமையைச் செய்ய முடியும் மற்றும் உன்னால் செய்யக்கூடியதைச் செய்ய முடியும். அதன் பின்னர் உரிய விளைவு அடையப்படும். நீ சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி, நீ மோவாபின் சந்ததியும் கூட; மொத்தத்தில், மாம்சமும் இரத்தமும் உள்ள அனைவருமே தேவனின் சிருஷ்டிப்புகள் தான், அவர்கள் சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். நீ தேவன் சிருஷ்டித்த ஒரு ஜீவன், உனக்கு வேறு வழியேயில்லை, இது உன் கடமையும் கூட. நிச்சயமாக, இன்று சிருஷ்டிகரின் கிரியை முழு பிரபஞ்சத்திலும் இயக்கப்பட்டிருக்கிறது. நீ யாரிடமிருந்து வந்தவன் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக நீ தேவனின் சிருஷ்டிப்புகளில் ஒருவனாக இருக்கிறாய், நீங்கள்—மோவாபின் வழித்தோன்றல்கள்—தேவனின் சிருஷ்டிப்புகளின் ஒரு பகுதியாவீர்கள், ஒரே வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் தாழ்ந்தவர்கள். இன்று, தேவனின் கிரியை சகல ஜீவன்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டு முழு பிரபஞ்சத்தையும் இலக்காகக் கொண்டிருப்பதால், சிருஷ்டிகருக்கு தமது கிரியையைச் செய்வதற்காக எந்தவொரு ஜனங்களையும், விஷயங்களையும் அல்லது பொருட்களையும் தேர்ந்தெடுக்க சுதந்திர உரிமை இருக்கிறது. நீ யாரிடமிருந்து வந்தவன் என்பதை அவர் கவனிப்பதில்லை; நீ அவருடைய சிருஷ்டிப்புகளில் ஒருவனாக இருக்கும் வரையில், நீ அவருடைய கிரியைக்கு பலனளிகும் வரை—ஜெயங்கொள்ளுதல் மற்றும் சாட்சிக்கான கிரியை—அவர் எந்த கிரியையும் தயக்கமின்றி உன்னிடத்தில் செய்வார். இது ஜனங்களின் பாரம்பரிய கருத்துக்களை சிதைக்கிறது, அதாவது தேவன் ஒருபோதும் புறஜாதியினரிடையே கிரியை செய்ய மாட்டார், குறிப்பாக சபிக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் இடையே செய்ய மாட்டார்; சபிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களிடமிருந்து வரும் அனைத்து எதிர்கால தலைமுறையினரும் என்றென்றும் சபிக்கப்பட்டிருப்பார்கள், ஒருபோதும் இரட்சிப்பு பெற வாய்ப்பில்லை; தேவன் ஒருபோதும் புறஜாதியாரான தேசத்தில் இறங்கி கிரியை செய்யமாட்டார், ஒருபோதும் அசுத்தமான தேசத்தில் காலடி வைக்க மாட்டார், ஏனென்றால் அவர் பரிசுத்தமானவர். இந்த கருத்துக்கள் அனைத்தும் கடைசிக் காலத்திற்கான தேவனின் கிரியையால் சிதைந்துவிட்டன. தேவன் எல்லா தேவன்களுக்கும் தேவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அவர் வானங்களிலும் பூமியிலும் எல்லாவற்றிலும் ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார், மேலும் அவர் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல. எனவே, சீனாவில் இந்த கிரியை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது, அது எல்லா தேசங்களுக்கும் பரவாதா? எதிர்காலத்திற்கான பெரிய சாட்சியம் சீனாவுடன் மட்டும் நின்றுவிடாது; தேவன் உங்களை ஜெயங்கொண்டால் மட்டுமே பிசாசுகள் சமாதானமாகுமா? அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதையோ அல்லது தேவனின் பெரிய வல்லமையையோ புரிந்து கொள்வதில்லை, மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் இந்த கிரியையின் இறுதி விளைவுகளைப் பார்க்கும்போதுதான் அனைத்து ஜீவன்களும் ஜெயங்கொள்ளப்படுவர். மோவாபின் சந்ததியினரை விட வேறு யாரும் பின்தங்கிய அல்லது சீர்கேடு நிறைந்தவர்கள் அல்ல. இந்த ஜனங்களை ஜெயங்கொள்ள முடிந்தால் மட்டுமே—இவர்கள் தான் மிகவும் சீர்கேடு நிறைந்தவர்கள், தேவனை ஒப்புக் கொள்ளாதவர்கள் அல்லது தேவன் ஒருவர் இருப்பதாக விசுவாசிக்காதவர்கள், தேவனை வாயில் ஒப்புக்கொண்டு, அவரைப் புகழ்ந்து, அவரை நேசிக்க முடியாதவர்கள்—இது ஜெயங்கொள்ளுதலின் சாட்சியாக இருக்கும். நீங்கள் பேதுரு அல்ல என்றாலும், நீங்கள் பேதுருவின் ஜீவிதத்தை ஜீவிக்கிறீர்கள், உங்களால் பேதுருவின் மற்றும் யோபுவின் சாட்சியங்களை வைத்திருக்க முடியும்; இதுவே மிகப்பெரிய சாட்சியம். இறுதியில் நீ இவ்வாறு கூறுவாய்: “நாங்கள் இஸ்ரவேலர் அல்ல, ஆனால் மோவாபின் கைவிடப்பட்ட சந்ததியினர், நாங்கள் பேதுரு அல்ல, அவனது திறமை எங்களுக்கு இல்லை, யோபுவின் திறமையும் இல்லை, மேலும் தேவனுக்காக பவுல் துன்பப்பட தீர்மானித்தது மற்றும் அவன் தன்னையே தேவனுக்கு ஒப்புக்கொடுக்க தீர்மானித்தது ஆகியவற்றுடன் எங்களை ஒப்பிட முடியாது. நாங்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கிறோம், இதனால், தேவனின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க நாங்கள் தகுதியற்றவர்கள். இன்றும் தேவன் எங்களை உயர்த்தியிருக்கிறார்; எனவே நாங்கள் தேவனை திருப்திப்படுத்த வேண்டும், எங்களிடம் போதுமான திறமை அல்லது தகுதிகள் இல்லாவிட்டாலும், தேவனை திருப்திப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்—எங்களுக்கு இந்த தீர்மானம் உள்ளது. நாங்கள் மோவாபின் சந்ததியினர், நாங்கள் சபிக்கப்பட்டோம். இது தேவனால் கட்டளையிடப்பட்டது, அதை எங்களால் மாற்ற இயலாது, ஆனால் எங்கள் ஜீவிதமும் அறிவும் மாறக்கூடும், தேவனை திருப்திப்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று. நீ இந்த தீர்மானத்தைக் கொண்டிருக்கும்போது, நீ ஜெயங்கொள்ளப்பட்டதாக சாட்சி கொடுத்திருப்பதை இது நிரூபிக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 202

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம் என்னவென்றால் மனுஷனின் மாம்சம் இனி கலகம் செய்யக்கூடாது என்பதாகும்; அதாவது, மனுஷனின் மனம் தேவனைப் பற்றிய புதிய அறிவைப் பெற வேண்டும், மனுஷனின் இருதயம் தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும், மற்றும் மனுஷன் தேவனுக்காக வாழ வாஞ்சிக்க வேண்டும். ஜனங்கள் தங்கள் மனோபாவம் அல்லது மாம்சம் மாறும்போது தாங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதாக எண்ணுவதில்லை; மனுஷனின் சிந்தனை, மனுஷனின் உணர்வு மற்றும் மனுஷனின் அறிவு மாறும்போது, அதாவது, உனது முழு மனப்பாங்கும் மாறும்போது—இதெல்லாம் நீ தேவனால் ஜெயங்கொள்ளப்படும்போது ஏற்படும். நீங்கள் கீழ்ப்படிய தீர்மானித்ததும், ஒரு புதிய மனநிலையைப் பின்பற்றத் துவங்கியதும், தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் நீங்கள் இனி உங்கள் சொந்தக் கருத்துக்களையோ நோக்கங்களையோ கொண்டு வராதபோது, உங்கள் மூளை இயல்பாக சிந்திக்கும்போது—அதாவது, நீங்கள் முழு இருதயத்தோடு தேவனுக்காக உங்களைப் பயன்படுத்தும்போது—நீங்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்ட நபராக இருக்கிறீர்கள். மதத்தில், அநேகர் தங்கள் ஜீவிதங்கள் முழுவதும் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்: அவர்கள் தங்கள் சரீரங்களை அடக்கி, தங்கள் சிலுவையைச் சுமக்கிறார்கள், மேலும் அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போதும் அவர்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள், சகித்துக்கொள்கிறார்கள்! சிலர் தங்கள் மரித்துப்போன காலை நேரத்தில் இன்னும் உபவாசம் இருக்கிறார்கள். அவர்கள் ஜீவித்திருக்கும் வரை அவர்கள் நல்ல உணவைப் புசிக்காமலிருந்து, ஆடைகளை அணியவும் மறுத்து, துன்பப்படுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களால் சரீரத்தை அடக்கி, மாம்சத்தைக் கைவிட முடிகிறது. துன்பங்களைத் தாங்குவதற்கான அவர்களின் மனநிலை பாராட்டத்தக்கது. ஆனால் அவர்களின் சிந்தனை, அவர்களின் கருத்துக்கள், அவர்களின் மனப்பான்மை மற்றும் நிச்சயமாக அவர்களின் பழைய சுபாவம் ஆகியவை சிறிதளவும் கையாளப்படவில்லை. அவர்கள் தங்களைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களது மனதில் கொண்டுள்ள தேவனின் உருவமானது பாரம்பரியமானதாக, சிறியதாக மற்றும் தெளிவற்றதாக இருக்கிறது. தேவனுக்காகத் துன்பப்படுவதற்கான அவர்களின் தீர்மானம் அவர்களின் வைராக்கியத்திலிருந்தும், அவர்களின் நேர்மறையான இயல்புகளிலிருந்தும் வருகிறது. அவர்கள் தேவனை விசுவாசித்தாலும், அவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவோ, அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவோ இல்லை. அவர்கள் வெறுமனே கிரியை செய்து, தேவனுக்காகக் கண்மூடித்தனமாக துன்பப்படுகிறார்கள். அவர்கள் விவேகத்துடன் செயல்படுவதில் எந்த மதிப்பும் இல்லை, அவர்களின் ஊழியம் உண்மையில் தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை, மேலும் தேவனின் அறிவை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் ஊழியம் செய்யும் தேவன் அவருடைய அசல் உருவத்தில் இருக்கும் உண்மையான தேவன் அல்ல, ஆனால் புராணக்கதைகளில் வரும் தேவனாக, அவர்களின் சொந்தக் கற்பனையின் விளைவாக, அவர்கள் மட்டுமே கேள்விப்பட்ட, அல்லது எழுத்துக்களில் காணப்படும் தேவனாக இருக்கிறார். பின்னர் அவர்கள் தங்கள் வளமான கற்பனைகளையும் பக்தியையும் தேவனுக்காகக் கஷ்டப்படுவதற்கும், தேவன் செய்ய விரும்பும் தேவனின் கிரியையை மேற்கொள்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஊழியம் மிகவும் துல்லியமற்றதாக இருக்கிறது, அதாவது நடைமுறையில் அவர்களில் எவரும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ப உண்மையிலேயே ஊழியம் செய்ய முடிவதில்லை. அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கஷ்டப்பட்டாலும், ஊழியம் பற்றிய அவர்களின் உண்மையான கண்ணோட்டமும், தேவன் என்று அவர்கள் மனதில் கொண்டுள்ள உருவமும் மாறாமல் இருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, சுத்திகரிப்பு மற்றும் பரிபூரணத்தை அனுபவிக்கவில்லை, மேலும் சத்தியத்தைப் பயன்படுத்தி யாரும் அவர்களை வழிநடத்தவும் இல்லை. இரட்சகராகிய இயேசுவை அவர்கள் விசுவாசித்தாலும், அவர்களில் யாரும் இரட்சகரைப் பார்த்ததில்லை. புராணக்கதை மற்றும் செவிவழியாக மட்டுமே அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு குருட்டு மனுஷன் தனது சொந்த தந்தைக்கு ஊழியம் செய்வது போல, கண்களை மூடிக்கொண்டு தோராயமாக ஊழியம் செய்வதைப் போல இது இருக்கிறது. அத்தகைய ஊழியத்தால் இறுதியில் எதை அடைய முடியும்? அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? ஆதி முதல் அந்தம் வரை, அவர்களின் ஊழியம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது; அவர்கள் மனுஷனால் உருவாக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பெறுகிறார்கள், மேலும் அவர்களின் ஊழியமானது அவர்களின் இயல்பான தன்மை மற்றும் அவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. இது என்ன வெகுமதியைக் கொடுக்க முடியும்? இயேசுவைக் கண்ட பேதுருவுக்கு கூட, தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்று தெரியவில்லை; அவன் தனது வயதான காலத்தில் மட்டுமே இதை அறிந்துகொண்டான். இது சிறிதளவு கூட கையாளப்படுவதை அல்லது கத்தரிக்கப்படுவதை அனுபவிக்காத, மற்றும் தங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத அந்தக் குருடர்களைப் பற்றி இது என்ன கூறுகிறது? உங்களில் பலர் இன்று செய்யும் ஊழியம் இந்த குருடர்களின் ஊழியத்தை போன்றிருக்கிறது அல்லவா? நியாயத்தீர்ப்பைப் பெறாதவர்கள், கத்தரித்தல் மற்றும் கையாளுதலை பெறாதவர்கள், மாறாதவர்கள்—அவர்கள் அனைவரும் அரைகுறையாக ஜெயங்கொள்ளப்படவில்லையா? அத்தகையவர்களால் என்ன பயன்? உனது சிந்தனை, உனது ஜீவித அறிவு, மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஆகியவை புதிய மாற்றங்களைக் காட்டவில்லை என்றால், நீ உண்மையிலேயே எதையும் பெறவில்லை என்றால், நீ உனது ஊழியத்தில் குறிப்பிடத்தக்க எதையும் அடைய மாட்டாய்! தேவனின் கிரியை பற்றிய ஒரு பார்வை மற்றும் புதிய அறிவு இல்லாமல், உன்னால் ஜெயங்கொள்ளப்பட முடியாது. தேவனை பின்பற்றுவதற்கான உனது வழி பின்னர் துன்பப்படுபவர்களைப் போலவும் உபவாசம் இருப்பவர்களை போலவும் இருக்கும்: மதிப்பற்றதாக இருக்கும்! துல்லியமாக இது ஏனென்றால், அவர்கள் செய்வதில் சிறிதளவு சாட்சியங்கள் தான் இருக்கின்றன, அதனாலேயே அவர்களின் ஊழியம் பயனற்றது என்று நான் சொல்கிறேன்! அவர்கள் தங்கள் ஜீவிதத்தைத் துயரத்திலும், சிறையில் அமர்ந்துகொண்டும் செலவிடுகிறார்கள்; அவர்கள் எப்போதும் சகிப்புத்தன்மையுள்ளவர்கள், அன்பானவர்கள், அவர்கள் எப்போதுமே சிலுவையைச் சுமக்கிறார்கள், அவர்கள் ஏளனம் செய்யப்படுகிறார்கள், உலகத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள், அவர்கள் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள், அவர்கள் கடைசிவரை கீழ்ப்படிந்தாலும், அவர்கள் இன்னும் ஜெயங்கொள்ளப்படவில்லை, மேலும் அவர்களால் ஜெயங்கொள்ளப்படுவதற்கான எந்தச் சாட்சியமும் அளிக்க முடியாது. அவர்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்களுக்கு தேவனைத் தெரியாது. அவர்களின் பழைய சிந்தனை, பழைய கருத்துக்கள், மத நடைமுறைகள், மனுஷனால் உருவாக்கப்பட்ட அறிவு மற்றும் மனுஷ கருத்துக்கள் எதுவும் கையாளப்படவில்லை. அவர்களுக்குள் புதிய அறிவிற்கான சிறிதளவு குறிப்பு கூட இல்லை. தேவனைப் பற்றிய அவர்களின் சிறிதளவு அறிவில் கூட உண்மையோ அல்லது துல்லியமோ இருப்பதில்லை. அவர்கள் தேவனின் சித்தத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதுதான் தேவனுக்கு ஊழியம் செய்வதா? கடந்த காலங்களில் தேவனைப் பற்றிய உனது அறிவு எதுவாக இருந்திருந்தாலும், அது இன்றும் அப்படியே இருந்தால், தேவன் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நீ தேவன் பற்றிய உனது அறிவை உன் சொந்தக் கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் புரிந்துகொண்டிருந்தால், அதாவது நீ தேவன் பற்றிய புது, உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனின் உண்மையான உருவத்தையும் மனநிலையையும் நீ அறியத் தவறினால், தேவனை பற்றிய உனது அறிவு நிலப்பிரபுத்துவ, மூடநம்பிக்கை சிந்தனையால் வழிநடத்தப்பட்டு, இன்னும் மனுஷனின் கற்பனை மற்றும் கருத்துக்கள் மூலம் பிறந்தால், நீ இன்னும் ஜெயங்கொள்ளப்படவில்லை என்று அர்த்தமாகும். இந்த வார்த்தைகள் அனைத்தையும் நான் இன்று உன்னிடம் சொல்கிறேன், இதன்மூலம் நீ அறிந்து கொள்ளலாம், இதன்மூலம் இந்த அறிவு உன்னை புதிய, சரியான அறிவுக்கு இட்டுச் செல்லும்; நீ புதிய அறிவைப் பெறும்படிக்கும், பழைய கருத்துக்களையும், உன்னில் இருக்கும் பழைய அறிவையும் ஒழிப்பதற்காகவும் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நீ உண்மையிலேயே என் வார்த்தைகளைப் புசித்துப் பருகினால், உனது அறிவு கணிசமாக மாறும். கீழ்ப்படியும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை நீ புசித்துப் பருகும்வரை, உனது கண்ணோட்டம் தலைகீழாக மாறுபடும். நீ மீண்டும் மீண்டும் சிட்சைகளை ஏற்றுக்கொள்ளும்வரை, உனது பழைய மனப்பான்மை படிப்படியாக மாறுபடும். உனது பழைய மனப்பான்மை புதியவற்றுடன் முழுமையாக மாற்றப்படும் வரை, உனது நடைமுறையும் அதற்கேற்ப மாறுபடும். இவ்வாறாக, உனது ஊழியம் பெருகிய முறையில் இலக்கை நோக்கிச் செல்லும், மேலும் தேவனின் சித்தத்தையும் உனது ஊழியத்தால் நிறைவேற்ற முடியும். உன்னால் உனது ஜீவிதத்தையும், மனுஷ ஜீவிதம் பற்றிய உனது அறிவையும், தேவனை பற்றிய உனது பலவகை கருத்துக்களையும் மாற்ற முடிந்தால், உனது இயல்பான தன்மை படிப்படியாக குறையும். தேவன் ஜனங்களை ஜெயங்கொள்வதன் விளைவு இதுதான், இதற்குக் குறைவானது எதுவுமில்லை. இதுவே ஜனங்களிடையே ஏற்படும் மாற்றம். தேவன் மீதான உனது விசுவாசத்தில், உனக்குத் தெரிந்ததெல்லாம் உனது உடலைத் தாழ்த்தி, சகித்துக்கொள்வதும், துன்பப்படுவதும் மட்டும் தான், அது சரியா அல்லது தவறா என்று உனக்குத் தெரியாது, மேலும் அது யாருடைய பொருட்டு செய்யப்படுகிறது என்பதும் உனக்குத் தெரியாது, பிறகு எப்படி அத்தகைய பயிற்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 203

பரிபூரணமடைவது என்றால் என்ன? ஜெயங்கொள்ளப்படுவது என்றால் என்ன? ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட என்ன அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்? அவர்கள் பரிபூரணமாக்கப்பட என்ன அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்? ஜெயங்கொள்வது மற்றும் பரிபூரணப்படுத்துவது ஆகிய இரண்டும் மனுஷனை பரிபூரணமாக்கும் நோக்கத்திற்காகவே செய்யப்படுகின்றன, இதன்மூலம் அவன் தனது உண்மையான தோற்றத்திற்கு மீட்கப்படுவான், மேலும் அவனது சீர்கெட்ட சாத்தானிய மனநிலை மற்றும் சாத்தானின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவான். இந்த ஜெயங்கொள்ளுதலானது கிரியை செய்யும் மனுஷனின் செயல்பாட்டின் துவக்கத்தில் வருகிறது; உண்மையில், இதுவே கிரியையின் முதல் படியாகும். பரிபூரணமாக்குவது இரண்டாவது படி, அது நிறைவுசெய்யும் கிரியையாகும். ஒவ்வொரு மனுஷனும் ஜெயங்கொள்ளும் செயல்முறைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தேவனை அறிந்து கொள்ள வழி இருக்காது, ஒரு தேவன் இருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அதாவது தேவனை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சாத்தியமாக இருக்காது. ஒருவன் தேவனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட சாத்தியமில்லை, ஏனென்றால் இந்த நிறைவுக்கான அளவுகோல்களை அவர்கள் பூர்த்தி செய்வதில்லை. நீ தேவனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உன்னால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? உன்னால் அவரை எவ்வாறு பின்தொடர முடியும்? உன்னால் அவருக்கு சாட்சிக் கொடுக்க முடியாது, மேலும் அவரை திருப்திப்படுத்துவதற்கான விசுவாசம் உனக்கு இருக்காது. எனவே, பரிபூரணனாக விரும்பும் எவருக்கும், முதல் படியாக அவன் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது முதல் நிபந்தனை. ஆனால் ஜெயங்கொள்ளுதல் மற்றும் பரிபூரணமாக்குதல் என்பது ஜனங்களை கிரியை செய்வதற்கும் அவர்களை மாற்றுவதற்கும் ஆகும், மேலும் ஒவ்வொன்றும் மனுஷனை நிர்வகிக்கும் கிரியையின் ஒரு பகுதியும் ஆகும். ஒருவனை பரிபூரணப்படுத்த இரண்டு படிகளும் தேவை, ஒன்றைக்கூட புறக்கணிக்க முடியாது. “ஜெயங்கொள்ளப்படுவது” என்பது கேட்பதற்கு அருமையாக இல்லை என்பது உண்மைதான், ஆனால் உண்மையில், ஒருவனை ஜெயங்கொள்ளும் செயல்முறை அவனை மாற்றும் செயல்முறையாகும். நீ ஜெயங்கொள்ளப்பட்டவுடன், உனது சீர்கெட்ட மனநிலை முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் நீ அதை அறிந்திருப்பாய். ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம், நீ உனது தாழ்மையான மனுஷத்தன்மையையும், அதேபோல் உனது சொந்த கீழ்ப்படியாமையையும் அறிந்திருப்பாய். ஜெயங்கொள்ளப்படும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உன்னால் இந்த விஷயங்களை நிராகரிக்கவோ மாற்றவோ முடியாது என்றாலும், நீ அவற்றை அறிந்துகொள்வாய், இது உனது பரிபூரணத்திற்கு அடித்தளமாக அமையும். ஆகவே, ஜனங்களை மாற்றுவதற்கும், அவர்களின் சீர்கெட்டுப்போன சாத்தானிய மனநிலையிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும், அதன்மூலம் அவர்கள் தங்களை முழுமையாக தேவனுக்குக் கொடுக்கும்படி செய்வதற்கும், ஜெயங்கொள்ளுதலும் பரிபூரணமாக்குவதும் செய்யப்படுகிறது. ஜெயங்கொள்ளப்படுவது என்பது ஜனங்களின் மனநிலையை மாற்றுவதற்கான முதல் படியாகும், அதேபோல் ஜனங்கள் தங்களை முழுமையாக தேவனுக்குக் கொடுப்பதற்கான முதல் படியுமாகும், மேலும் இது பரிபூரணப்படுத்தப்படுவதற்கு அடுத்த படியாக இருக்கிறது. ஜெயங்கொள்ளப்பட்ட ஒருவனின் ஜீவ மனநிலையானது பரிபூரணமாக்கப்பட்ட ஒருவனின் மனநிலையை விட மிகக் குறைவாகவே மாறுகிறது. ஜெயங்கொள்ளப்படுவதும், பரிபூரணமடைவதும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, ஏனென்றால் அவை வெவ்வேறு கட்ட கிரியைகள், மற்றும் அவை ஜனங்களை வெவ்வேறு தரங்களில் வைக்கின்றன; ஜெயங்கொள்வது ஜனங்களை குறைந்த தரத்தில் வைத்திருக்கிறது, அதே நேரத்தில் பரிபூரணப்படுத்துவது அவர்களை உயர்தரத்தில் வைத்திருக்கிறது. பரிபூரணமானவர்கள் நீதியான ஜனங்களாகவும், பரிசுத்தமாக்கப்பட்ட மற்றும் தூய்மையாக்கப்பட்ட ஜனங்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் தான் மனுஷகுலத்தை ஆளும் கிரியையின் பலன்கள் அல்லது இறுதி பலாபலன்கள் ஆவர். அவர்கள் பரிபூரணமான மனுஷர் இல்லை என்றாலும், அவர்கள் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முற்படுகிறார்கள். இதற்கிடையில், ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் தேவன் இருக்கிறார் என்பதை வார்த்தையில் மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள்; தேவன் மாம்சமானார் என்பதையும், வார்த்தை மாம்சத்தில் தோன்றியது என்பதையும், நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை செய்ய தேவன் பூமிக்கு வந்திருக்கிறார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, அவரது அடித்தல் சுத்திகரித்தல் ஆகிய சகலமும் மனுஷனுக்கு நன்மை பயக்கும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் தான் ஓரளவு மனுஷ ஒற்றுமையைக் கொண்டிருக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் ஜீவதத்திற்கான சில நுண்ணறிவுகளைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு மந்தமாகவே இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தற்போதுதான் மனுஷகுலத்தை ஆட்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஜெயங்கொள்வதன் விளைவுகள் அத்தகையவை. ஜனங்கள் பரிபூரணத்திற்கான பாதையில் கால் வைக்கும்போது, அவர்களின் பழைய மனநிலையை மாற்றுவது சாத்தியமாகிறது. மேலும், அவர்களின் ஜீவிதங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, மேலும் அவர்கள் படிப்படியாக சத்தியத்திற்குள் இன்னும் ஆழமாக நுழைகின்றனர். அவர்களால் உலகத்தையும், சத்தியத்தைத் தொடராத அனைவரையும் வெறுக்க முடிகிறது. அவர்கள் குறிப்பாக தங்களையே வெறுக்கிறார்கள், ஆனால் அதை விட, அவர்கள் தங்களையே தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தின்படி ஜீவிக்கத் தயாராக இருக்கிறார்கள், மேலும் சத்தியத்தைத் தொடர்வதை அவர்கள் தங்கள் இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மூளைகளால் உருவாக்கப்பட்ட எண்ணங்களுக்குள் ஜீவித்திருக்க விரும்பவில்லை, மேலும் மனுஷனின் சுயநீதி, அகந்தை மற்றும் சுய எண்ணம் ஆகியவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்கள் உரிமையுடனான வலுவான உணர்வோடு பேசுகிறார்கள், விவேகத்தோடும் ஞானத்தோடும் விஷயங்களைக் கையாளுகிறார்கள், தேவனுக்கு விசுவாசமாகவும் கீழ்ப்படியும்படியும் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை அனுபவித்தால், அவர்கள் செயலற்றவர்களாகவோ பலவீனமானவர்களாகவோ மாறுவது மட்டுமல்லாமல், தேவனிடமிருந்து பெற்ற இந்த சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் அவர்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், அது அவர்களைப் பாதுகாக்கிறது. அவர்கள் சமாதானம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்வதில்லை, மற்றும் பசியைப் போக்க ரொட்டியையும் தேடுவதில்லை. அவர்கள் விரைவான மாம்ச இன்பங்களையும் பின்பற்றுவதில்லை. பரிபூரணப்படுத்தப்பட்டவர்களுக்கு இதுதான் நிகழ்கிறது. ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளும்போது அதில் எது வெளிப்படுகிறது என்பதற்கு வரம்புகள் உள்ளன. மாம்சத்தில் தோன்றும் வார்த்தை என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? மாம்சமாகுதல் என்றால் என்ன? மாம்சமாகிய தேவன் என்ன செய்தார்? அவருடைய கிரியையின் குறிக்கோள் மற்றும் முக்கியத்துவம் என்ன? அவருடைய கிரியையை இவ்வளவு தூரம் அனுபவித்தபின், மாம்சத்தில் அவருடைய கிரியைகளை அனுபவித்த பின், நீ எதைப் பெற்றாய்? இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிந்து கொண்ட பின்னரே நீ ஜெயங்கொள்ளப்படுவாய். ஒரு தேவன் இருப்பதாக நீ ஒப்புக்கொள்கிறாய் என்று நீ வெறுமனே சொல்லிவிட்டு, ஆனால் நீ கைவிட வேண்டியதை கைவிடாமல், நீ கைவிட வேண்டிய மாம்ச இன்பங்களை விட்டுவிடத் தவறி, அதற்குப் பதிலாக நீ எப்போதும் இருப்பதைப் போல மாம்ச சுகங்களை விரும்புவதைத் தொடர்ந்து, மேலும் சகோதர சகோதரிகளுக்கு எதிரான எந்தவொரு தப்பெண்ணத்தையும் உன்னால் விட்டுவிட முடியாமல், பல எளிய நடைமுறைகளைச் செய்வதில் எந்த விலைக்கிரயமும் செலுத்தவில்லை என்றால், இது நீ இன்னும் ஜெயங்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்கிறது. அவ்வாறான நிலையில், நீ புரிந்து கொள்ளும் அளவுக்கு நிறைய இருந்தாலும், அவை அனைத்தும் பயனற்றதாகவே இருக்கும். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் சில ஆரம்ப மாற்றங்களையும் ஆரம்ப பிரவேசத்தையும் அடைந்தவர்கள் ஆவர். தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை அனுபவிப்பது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய ஆரம்ப அறிவையும், சத்தியத்தைப் பற்றிய ஆரம்ப புரிதலையும் தருகிறது. ஆழ்ந்த, விரிவான சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் உன்னால் முழுமையாக நுழைய இயலாது, ஆனால் உனது உண்மையான ஜீவிதத்தில் உனது மாம்ச இன்பங்கள் அல்லது உனது தனிப்பட்ட அந்தஸ்து போன்ற பல அடிப்படை சத்தியங்களை உன்னால் நடைமுறைப்படுத்த முடியும். இவை அனைத்தும் ஜெயங்கொள்ளும் செயல்பாட்டின் போது ஜனங்கள் அடைந்த விளைவு தான். ஜெயங்கொள்ளப்பட்டவர்களிடமும் மனநிலை மாற்றங்களை காணலாம்; உதாரணமாக, அவர்கள் ஆடை அணிந்து தங்களை முன்வைக்கும் விதம், அவர்கள் எப்படி ஜீவிக்கிறார்கள்—இவை அனைத்தும் மாறக்கூடும். தேவனிடம் விசுவாசம்கொள்வது குறித்த அவர்களின் முன்கணித்தலும் மாறுகிறது, அவர்கள் பின்தொடரும் குறிக்கோள்களைப் பற்றி அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு உயர்ந்த ஆசைகளும் உள்ளன. ஜெயங்கொள்ளும் கிரியையின் போது, அவர்களின் ஜீவித மாற்றத்துடன் தொடர்புடைய மாற்றங்களும் நிகழ்கின்றன. மாற்றங்கள் இருக்கின்றன, ஆனால் அவை மேலோட்டமானவை, பூர்வாங்கமானவை, மற்றும் பரிபூரணமடைந்தவர்களைப் பின்தொடர்வதற்கான மனநிலை மற்றும் குறிக்கோள்களில் ஏற்படும் மாற்றங்களை விட மிகக் குறைவானவை. ஜெயங்கொள்ளப்படும் போக்கில், ஒரு நபரின் மனநிலை மாறவே மாறாது, அவர்கள் எந்த சத்தியத்தையும் பெறுவதில்லை, அதனால் இந்த நபர் முற்றிலும் பயனற்ற குப்பை தான்! ஜெயங்கொள்ளப்படாத ஜனங்களை பரிபூரணமாக்க முடியாது! ஒருவர் ஜெயங்கொள்ளப்பட மட்டுமே முற்பட்டால், ஜெயங்கொள்ளும் போது சில மாறுபட்ட மாற்றங்களை அவர்களின் மனநிலைகள் வெளிப்படுத்தினாலும், அவர்கள் முழுமையாக பரிபூரணமாக முடியாது. அவர்கள் பெற்ற ஆரம்ப சத்தியங்களையும் அவர்கள் இழப்பார்கள். ஜெயங்கொள்ளப்பட்டவர்களுக்கும் பரிபூரணமாக்கப்பட்டவர்களுக்கும் இடையே இருக்கும் மனநிலை மாற்றங்களின் அளவு மிகப் பெரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஜெயங்கொள்ளப்படுவது மாற்றத்தின் முதல் படியாகும்; அதுவே அடித்தளமாகும். இந்த ஆரம்ப மாற்றத்தின் பற்றாக்குறை ஒருவன் உண்மையில் தேவனை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சான்றாகும், ஏனெனில் இந்த அறிவு நியாயத்தீர்ப்பிலிருந்து வருகிறது, மேலும் இதுபோன்ற நியாயத்தீர்ப்பு ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கிய பகுதியாக இருக்கிறது. எனவே, பரிபூரணமாக்கப்பட்ட அனைவரும் முதலில் ஜெயங்கொள்ளப்பட வேண்டும்; இல்லையென்றால், அவர்கள் பரிபூரணமடைய வழியே இல்லை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 204

என் வார்த்தைகள், அதிகாரம், மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை எல்லா நாடுகள் மற்றும் தேசங்களில் உள்ள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் எனது ஆரம்பக் கிரியை பிரபஞ்சம் முழுவதிலும் தகுந்தவாறும் பரிபூரணமாகவும் செய்யப்படுவதற்காக என் கிரியை சீராக முன்னேற்றம் அடையும் பொருட்டு இன்று, நான் உங்களது சொந்த உயிர்வாழ்விற்காக உங்களுக்கு புத்திமதி கூறுகிறேன். உங்களுக்கு மத்தியில் நான் செய்யும் கிரியைதான் பிரபஞ்சம் முழுவதிலும் என் கிரியைக்கான ஆரம்பம். ஏற்கெனவே இப்போது கடைசி நாட்களின் காலமாக இருக்கும் போதிலும், “கடைசி நாட்கள்” என்பது ஒரு காலத்தின் பெயர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; நியாயப்பிரமாணத்தின் காலம் மற்றும் கிருபையின் காலம் போன்று, அது ஒரு காலத்தைக் குறிக்கிறது, மேலும், இறுதி சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் என்பதற்கு மாறாக, அது ஒரு முழுமையான காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் கடைசி நாட்கள் கிருபையின் காலத்தையும் நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் போல் அல்லாமல் முற்றிலும் மாறானவைகளாக இருக்கின்றன. கடைசி நாட்களின் கிரியை இஸ்ரவேலில் அல்ல, புறஜாதியார் மத்தியில் செய்யப்படுகிறது; அது பிரபஞ்சம் முழுவதுமான என் மகிமை பிரபஞ்சத்தையும் ஆகாயவிரிவையும் நிறைக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்குப் புறம்பாக இருக்கும் அனைத்து தேசங்கள் மற்றும் கோத்திரங்கள் மேல் நான் ராஜ்யபாரம் செய்வதற்கு முன்னான என் ஜெயங்கொள்ளுதல் ஆகும். நான் மேலான மகிமையைப் பெறுவதற்காகவும், பூமியின் மேலுள்ள எல்லா சிருஷ்டிகளும் என் மகிமையை ஒவ்வொரு தேசத்துக்கும், என்றென்றும் தலைமுறை தலைமுறையாகவும் கொண்டுசெல்லுவதற்காகவும், நான் பூமியில் பெற்ற சகல மகிமையையும் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா சிருஷ்டிகளும் காணத்தக்கதாகவும் அது அவ்வாறாக உள்ளது. கடைசி நாட்களில் செய்யப்படும் கிரியை ஜெயங்கொள்ளுதலின் கிரியை ஆகும். அது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக்கான வழிகாட்டி அல்ல, ஆனால் பூமியில் மனுக்குலத்தின் அழிவில்லாத, ஆயிரமாண்டு கால துன்ப வாழ்க்கையின் முடிவாகும். அதன் விளைவாக, கடைசி நாட்களின் கிரியையானது, இஸ்ரவேலில் நடந்த பல ஆயிரம் ஆண்டுகளின் கிரியையைப் போன்றோ, அல்லது யூதேயாவில் வெறும் பல ஆண்டுகள் நடைபெற்று தேவனின் இரண்டாவது மனுஷஅவதரிப்பு வரை இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கிரியையைப் போன்றோ இருக்க முடியாது. கடைசி நாட்களின் மக்கள் மாம்சத்தில் மீட்பரின் மறு தோற்றத்தைத்தான் காண்கின்றனர், மேலும் அவர்கள் தேவனின் தனிப்பட்ட கிரியை மற்றும் வார்த்தைகளைப் பெறுகின்றனர். கடைசி நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன் இருப்பது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருக்காது, அவை இயேசு யூதேயாவில் நடத்திய கிருபையின் காலக் கிரியையைப் போன்று குறுகியவை. இது ஏன் என்றால், கடைசி நாட்கள் என்பது ஒரு முழு யுகத்தின் முடிவாகும். அவை தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் முழுமையும் முடிவுமாகும் மற்றும் அவை மனுக்குலத்தின் துன்ப வாழ்க்கைப் பயணத்தை முடித்துவைக்கின்றன. அவை ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் ஒரு புதிய காலத்துக்குள் கொண்டு செல்லவில்லை அல்லது மனுக்குலத்தின் வாழ்க்கை தொடரவும் அனுமதிக்கவில்லை; அது என் நிர்வாகத் திட்டத்துக்கு அல்லது மனிதனின் வாழ்வுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்காது. மனுக்குலம் இவ்வாறு சென்றுகொண்டிருந்தால், இன்று இல்லாவிட்டலும் ஒருநாள் அவர்கள் பிசாசினால் முழுவதுமாக விழுங்கப்படுவர், மேலும் எனக்குச் சொந்தமான அந்த ஆத்துமாக்கள் இறுதியில் அதன் கரங்களால் பாழாக்கப்படும். என் கிரியைகள் ஆறாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, மற்றும் முழு மனுக்குலத்தின் மீது தீயவனின் கட்டுப்பாடும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மிகாமல் நீடிக்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஆகவே, இப்போது நேரம் வந்திருக்கிறது. இனி மேலும் நான் தொடரவும் தாமதிக்கவும் மாட்டேன்: கடைசி காலங்களின் போது நான் சாத்தானை அழிப்பேன், நான் என் மகிமை யாவையும் திரும்பவும் பெறுவேன், எனக்கு உரிமையான அனைத்து ஆத்துமாக்களையும் மீட்டெடுப்பதன் மூலம் அந்தத் துயருற்ற ஆத்துமாக்கள் கடல்போன்ற துன்பத்தில் இருந்து விடுதலை பெறும், மேலும் இவ்வாறு பூமியின் மேல் எனது எல்லா கிரியைகளும் நிறைவடையும். இந்த நாள் முதற்கொண்டு, நான் பூமியில் ஒரு போதும் மாம்சமாக மாட்டேன், மற்றும் எனது அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவியும் பூமியில் கிரியை செய்யாது. நான் ஒன்றே ஒன்றைத்தான் பூமியில் செய்வேன்: நான் மனுக்குலத்தை மீண்டும் பூமியில் மீண்டும் சிருஷ்டிப்பேன், அந்த மனுக்குலம் பரிசுத்தமானதாக இருக்கும் மற்றும் அதுவே பூமியில் என் உண்மையுள்ள நகரமாகவும் இருக்கும். ஆனால் நான் முழு பூமியையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அல்லது முழு மனுக்குலத்தையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அறிந்துகொள்ளவும். என்னை நேசிக்கும் மற்றும் என்னால் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்ட மூன்றாம் பங்கை—மீந்திருக்கும் மூன்றாம் பங்கை நான் வைப்பேன், மேலும் இந்த மூன்றாம் பங்கை நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரவேலர்களைப் போல பூமியில் பலன்தந்து பெருகச்செய்வேன், எண்ணற்ற ஆடுகள் மற்றும் மிருகஜீவன்கள் மற்றும் பூமியின் அனைத்து வளங்களாலும் போஷிப்பேன். இந்த மனுக்குலம் எப்போதும் என்னுடன் இருக்கும், ஆனால் இன்றைய மனுக்குலம் போல் வெறுக்கத்தகும்படி அசுத்தமானதாக இருக்காது, ஆனால் என்னால் ஆதாயப்படுத்தப்பட்ட அனைவரின் சபையாக இருக்கும். இத்தகைய மனுக்குலம் சாத்தானால் சேதமும், தொந்தரவும் அடைவதில்லை அல்லது முற்றுகையிடப்படுவதும் இல்லை, மேலும் நான் சாத்தானை மேற்கொண்ட பின் பூமியில் இருக்கும் ஒரே மனுக்குலமாக இருக்கும். இன்று என்னால் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலம் இதுவே மற்றும் அது என் வாக்குத்தத்தை அடைந்துகொண்டது. ஆகவே, கடைசி நாட்களில் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலமே தப்பித்துக்கொள்ளும் மற்றும் அது என் நித்திய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும். அதுவே சாத்தானை நான் மேற்கொண்டதற்கான ஒரே சான்றாதாரம், மேலும் அதுவே சாத்தானோடான என் யுத்தத்தின் அழிவாகும். யுத்தத்தின் இந்த அழிவை சாத்தானின் அதிகார எல்லையில் இருந்து என்னால் இரட்சிக்கப்பட்டது, மற்றும் என் ஆறாயிர ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் ஒரே பலனும் கனியும் ஆகும். அவர்கள் பிரபஞ்சம் எங்கும் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் இருந்தும், ஒவ்வொரு இடத்திலும் நாட்டிலும் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் வெவ்வேறு இனத்தினர், வெவ்வேறு மொழிகளும், பழக்கவழக்கங்களும், தோல் நிறமும் கொண்டவர்கள், மற்றும் அவர்கள் உலகின் ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் மேலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து இருப்பவர்கள். முடிவில், ஒரு முழுமையான மனுக்குலத்தை உருவாக்க ஒன்றாக வருவார்கள், அது சாத்தானின் படைகள் சென்றடையமுடியாத ஒரு மனிதர்களின் கூட்டமாகும். மனுக்குலத்தின் மத்தியில் என்னால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்படாதவர்கள் கடலின் ஆழத்துக்குள் அமைதியாக அமிழ்ந்து நித்தியமாக என் பட்சிக்கும் அக்கினியால் எரிக்கப்படுவார்கள். ஆட்டுக்குட்டியின் மாம்சம் புசித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தைத்தைப் பானம்செய்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் கதவு நிலைகளை அடையாளப்படுத்திய இஸ்ரவேலர்களை மட்டுமே விட்டுவிட்டு, எகிப்தின் தலைச்சாண் பிள்ளைகளையும் மிருகஜீவன்களையும் நான் அழித்தது போல் இந்த பழைய, மிகவும் அசுத்தமான மனுக்குலத்தை அழித்தொழிப்பேன். என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட மக்களும் என் குடும்பமுமானவர்களும்தானே ஆட்டுக்குட்டியாகிய என் மாம்சத்தைப் புசித்து, ஆட்டுக்குட்டியாகிய என் இரத்தத்தைப் பானம்செய்பவர்கள் மற்றும் என்னால் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் என்னைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அல்லவா? இத்தகைய மக்கள் எப்போதும் என் மகிமையோடு இணைந்திருக்கவில்லையா? ஆட்டுக்குட்டியாகிய மாம்சம் இல்லாமல் இருப்பவர்கள் அமைதியாகக் கடலின் ஆழத்துக்குள் ஏற்கெனவே அமிழ்ந்துவிடவில்லையா? இன்று நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள், மேலும் இன்று என்னுடைய வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் யேகோவா பேசிய வார்த்தைகள் போல் இருக்கின்றன. இருப்பினும் உங்கள் இருதயங்களின் ஆழத்தில் இருக்கும் கடினம் என் கோபாக்கினையை ஒன்றுதிரட்டி, உங்கள் மாம்சத்தின் மேல் அதிக வேதனையையையும், உங்கள் பாவங்களின் மேல் அதிக நியாயத்தீர்ப்புகளையும் உங்கள் அநீதியின் மேல் கூடுதல் கோபாக்கினையையும் கொண்டு வருகிறது. இன்று நீங்கள் என்னை இந்த விதத்தில் நடத்தும்போது என் கோபாக்கினை நாளில் யார் தப்ப முடியும்? என் தண்டனையின் கண்களில் இருந்து யாருடைய அநீதியால் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் கரங்களில் இருந்து யாருடைய பாவங்கள் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் நியாயத்தீர்ப்பில் இருந்து யாருடைய முரட்டாட்டம் தப்பிக்க முடியும்? நான், யேகோவா, புறஜாதியார் குடும்பத்தின் சந்ததியாரான உங்களிடம் இவ்வாறு பேசுகிறேன், மேலும் நான் உங்களிடம் பேசும் இந்த வார்த்தைகள் நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும் கூறப்பட்ட வார்த்தைகளை மிஞ்சுகிறது, ஆனாலும் நீங்கள் எகிப்தின் அனைத்து மக்களையும் விட கடினமானவர்களாக இருக்கிறீர்கள். நான் நிதானமாக என் கிரியையை செய்யும்போது என்னுடைய கோபாக்கினையை நீங்கள் குவித்து வைக்கவில்லையா? சர்வவல்லவரான என் நாளின் போது உங்களால் எவ்வாறு தீங்கின்றித் தப்பித்துக்கொள்ள முடியும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 205

நீங்கள் உங்களுடைய அனைத்தையும் எனது கிரியைக்கு அர்ப்பணிக்க வேண்டும். எனக்கு நன்மை பயக்கும் கிரியையை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ளாத எல்லாவற்றையும் உங்களுக்கு விளக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன், இதனால் நீங்கள் குறைவுபடும் அனைத்தையும் என்னிடமிருந்து உங்களால் பெற முடியும். உங்கள் குறைபாடுகள் எண்ண முடியாத அளவுக்கு இருந்தாலும், உங்களுக்கு எனது இறுதி இரக்கத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து நன்மையடையவும், உங்களில் இல்லாத மகிமையை அடையவும் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத மகிமையைப் அடையவும், நான் உங்களிடம் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்ய நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் பல ஆண்டுகளாக கிரியைப் புரிந்தேன், இன்றுவரை எந்த மனிதனும் என்னை அறிந்திருக்கவில்லை. நான் வேறு யாரிடமும் சொல்லாத இரகசியங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

மனிதர்கள் நடுவில், அவர்களால் காண இயலாத ஆவியானவராகவும், அவர்களோடு ஒருபோதும் ஒன்றிணைய முடியாத ஆவியானவராகவும் நான் இருந்தேன். பூமியில் எனது மூன்று கட்ட கிரியைகள் (உலகத்தை சிருஷ்டித்தல், மீட்டெடுத்தல் மற்றும் அழித்தல்) காரணமாக, அவர்கள் நடுவில் எனது கிரியையைச் செய்ய நான் வெவ்வேறு நேரங்களில் (பகிரங்கமாக இல்லாமல்) அவர்கள் மத்தியில் தோன்றுகிறேன். நான் மனிதர்கள் நடுவில் முதன்முதலில் மீட்பு யுகத்தின் போது வந்தேன். நிச்சயமாக, நான் ஒரு யூத குடும்பத்தில் இருந்துதான் வந்தேன்; எனவே, தேவன் பூமிக்கு வந்ததை முதலில் கண்டது யூதர்கள்தான். நான் இந்த கிரியையை மனிதனில் செய்ததற்கான காரணம் என்னவென்றால், எனது மீட்பின் கிரியையில் என் மனுஉரு மாம்சத்தைப் பாவத்திற்குக் காணிக்கையாக உபயோகிக்க விரும்பினேன். இவ்வாறு, என்னை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான். நான் மாம்சத்தில் கிரியை புரிந்தது அதுவே முதல் முறை ஆகும். ஆட்கொண்டு பரிபூரணப்படுத்துவதே ராஜ்யத்தின் யுகத்தில் என் கிரியையாகும், ஆகவே நான் மீண்டும் எனது மேய்த்தல் கிரியையை மாம்சத்தில் செய்கிறேன். மாம்சத்தில் கிரியையைப் புரிவது இது எனது இரண்டாவது முறையாகும். கிரியையின் இறுதி இரண்டு கட்டங்களில், ஜனங்கள் செய்ய வேண்டியவற்றோடு இனி கண்ணுக்குப் புலப்படாத, தொட்டுணர முடியாத ஆவியானவர் இருக்கிறார், ஆனால் ஆவியானவர் மாம்சமாக உணரப்படுகிறார். இவ்வாறு, மனிதனின் பார்வையில், தேவனின் தோற்றம் மற்றும் உணர்வு எதுவுமில்லாமல், நான் மீண்டும் ஒரு மனிதனாக மாறுகிறேன். மேலும், ஜனங்கள் காண்கிற தேவன் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார், இது அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் தருகிறது. மீண்டும் மீண்டும், எனது அசாதாரண கிரியை அநேக ஆண்டுகளாக கொண்டிருந்த பழைய நம்பிக்கைகளைச் சிதறடித்துவிட்டது. ஜனங்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்! தேவன் வெறுமனே பரிசுத்த ஆவியாக மட்டும் இல்லை, அவர் ஆவியாகவும், ஏழு மடங்கு வலுவூட்டப்பட்ட ஆவியாகவும் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய ஆவியாகவும் இருக்கிறார், ஆனாலும் அவர் ஒரு மனிதராகவும் இருக்கிறார்—அவர் ஒரு சாதாரண மனிதராகவும், விதிவிலக்காக பொதுவான மனிதராகவும் இருக்கிறார். அவர் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார். அவர்கள் இருவரும் மனிதர்களுக்குப் பிறந்தவர்கள் என்பதில் அவர்கள் ஒத்திருக்கிறார்கள், ஒருவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், மற்றொருவர் ஆவியிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு மனிதனுக்குப் பிறந்தவர் என்பதில் அவர்கள் வேறுப்படுகிறார்கள். தேவனின் மனுஉரு மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்வதில் ஒத்திருக்கின்றார்கள், மேலும் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார் என்பதில் இருவரும் வேறுப்படுகின்றார்கள். இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்த மீட்பர், மற்றொருவர் கோபமும் நியாயமும் நிறைந்த நீதியின் தேவன். ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார். ஒருவர் ஆதியென்றால், மற்றொருவர் அந்தம். ஒருவர் பாவமில்லாத மாம்சமாக இருக்கும்போது, மற்றொருவர் மீட்பை நிறைவு செய்து, கிரியையைத் தொடர்கின்ற, ஒருபோதும் பாவம் செய்யாத மாம்சமாக இருக்கிறார். இருவரும் ஒரே ஆவியால் ஆனவர்கள், ஆனால் அவர்கள் வெவ்வேறு மாம்சங்களில் வாசம்பண்ணுகிறார்கள், மற்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தார்கள், மேலும் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அனைத்து கிரியைகளும் பரஸ்பர நிறைவை உண்டாக்கி, ஒருபோதும் முரண்படுவதில்லை, மற்றும் அவை ஒரே சுவாசத்தில் பேசப்படலாம். இருவருமே ஜனங்கள்தான், ஆனால் ஒருவர் ஆண் குழந்தையாகவும், மற்றொருவர் பெண் குழந்தைகவும் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகளாக, ஜனங்கள் கண்டது ஆவியானவரை மட்டுமல்ல, மற்றும் ஒரு மனிதரை மட்டுமல்ல, ஒரு ஆணைதான் கண்டார்கள், ஆனால் மனித கருத்துக்களுடன் ஒத்துப் போகாத அநேக காரியங்களையும் கண்டார்கள்; எனவே, மனிதர்கள் ஒருபோதும் என்னை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர்கள் பாதி விசுவாசத்தையும் பாதி சந்தேகத்தையும் வைத்திருக்கிறார்கள்—நான் இருப்பதைப் போல, இதுவரை நானும் ஒரு மாயையான சொப்பனமாக இருக்கிறேன்—அதனால்தான், இன்றுவரை, தேவன் என்றால் யாரென்று ஜனங்களுக்குத் தெரியவில்லை. ஒரு எளிய வாக்கியத்தில் உன்னால் என்னை உண்மையில் தொகுக்க முடியுமா? “இயேசு வேறு யாருமல்ல தேவன்தான், தேவன் வேறு யாருமல்ல இயேசுதான்” என்று நீ உண்மையிலேயே சொல்லத் துணிகிறாயா? “தேவன் வேறு யாருமல்ல ஆவியானவர்தான், ஆவியானவர் வேறு யாருமல்ல தேவன்தான்” என்று சொல்வதற்கு நீ மிகவும் தைரியமாக இருக்கிறாயா? “தேவன் மாம்சத்தில் உடை தரித்த ஒரு மனிதர்” என்று நீ இனிமையாக சொல்கிறாயா? “இயேசுவின் உருவம் தேவனின் பெரிய உருவமாக இருக்கிறது” என்று உறுதியாகக் கூற உனக்குத் தைரியம் இருக்கிறதா? தேவனின் மனநிலையையும் உருவத்தையும் முழுமையாக விளக்க உன்னுடைய வாக்குவல்லமையை உபயோகிக்க இயலுமா? “தேவன் தனது சொந்த உருவத்திற்குப் பிறகு ஆண்களை மட்டுமே சிருஷ்டித்தார், பெண்களை அல்ல” என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ இதைச் சொன்னால், நான் தேர்ந்தெடுத்தவர்கள் நடுவில் எந்த ஸ்தீரியும் இருக்க மாட்டாள், ஸ்தீரிகள் மனிதகுலத்தின் ஒரு இனமாக மிக குறைந்த அளவிலேயே இருப்பார்கள். தேவன் என்றால் யார் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் ஒரு மனிதரா? தேவன் ஒரு ஆவியா? தேவன் உண்மையில் ஒரு ஆணா? நான் செய்ய வேண்டிய கிரியையை இயேசுவால் மட்டுமே முடிக்க முடியுமா? எனது சாராம்சத்தைத் தொகுக்க நீ மேலே உள்ள ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவுச் செய்தால், நீ மிகவும் அறிவில்லாத விசுவாசமுள்ள விசுவாசியாய் இருக்கிறாய். நான் ஒரு முறை மனுஉரு மாம்சமாக கிரியைப் புரிந்தால், ஒரு முறை மட்டுமே, நீ என்னை வரையறுக்கிறாயா? ஒரே பார்வையில் நீ என்னை முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா? உன்னுடைய வாழ்நாளில் நீ வெளிப்படுத்தியவற்றின் அடிப்படையில் என்னை முழுமையாகத் தொகுக்க முடியுமா? எனது இரு மனுஉருவங்களிலும் நான் இதே போன்ற கிரியையைச் செய்திருந்தால், நீ என்னை எப்படி உணருவாய்? என்னை என்றென்றும் சிலுவையில் அறைய விட்டு விடுவாயா? நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 206

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒன்று இஸ்ரவேலில் செய்யப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்யப்பட்டது. பொதுவாகச் சொன்னால், இந்த கிரியையின் எந்தக் கட்டமும் இஸ்ரவேலுக்கு வெளியே செய்யப்படவில்லை, ஒவ்வொன்றும் முதலில் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மீதே செய்யப்பட்டது. இதன் பலனாக, யேகோவா தேவன் இஸ்ரவேலருக்கு மட்டுமே தேவன் என்று இஸ்ரவேலர் நம்புகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கான கிரியையைச் செய்த யூதேயாவில் அவர் கிரியைப் புரிந்ததால், யூதர்கள் அவரை யூத ஜனங்களின் மீட்பராகக் கருதுகிறார்கள். அவர் முற்றிலும் யூதர்களின் ராஜாவே இருக்கிறார், வேறு எந்த ஜனங்களுக்காகவும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்; அவர் ஆங்கிலேயர்களை மீட்கும் கர்த்தராகவும் இல்லை, அமெரிக்கர்களை மீட்கும் கர்த்தராகவும் இல்லை, ஆனால் இஸ்ரவேலரை மீட்கும் கர்த்தராக இருக்கிறார்; அதுவும் அவர் இஸ்ரவேலில் மீட்டெடுத்த யூதர்களுக்கு கர்த்தராக இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். உண்மையில், தேவன் எல்லாவற்றிற்கும் எஜமானர். அவரே சகல சிருஷ்டிகளின் தேவன். அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு மட்டுமோ, யூதர்களுக்கு மட்டுமோ தேவனாக இல்லை; அவர் சகல சிருஷ்டியின் தேவனாக இருக்கிறார். முந்தைய இரண்டு கட்டங்களில் அவருடைய கிரியை இஸ்ரவேலில் நடந்தது, இது ஜனங்களிடையே சில கருத்துக்களை உருவாக்கியது. யேகோவா இஸ்ரவேலில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், இயேசு தாமே யூதேயாவில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், மேலும், அவர் கிரியைக்காக மாம்சமனார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்—எதுவாக இருந்தாலும், இந்த கிரியை இஸ்ரவேலுக்கு அப்பால் செல்லவில்லை. தேவன் எகிப்தியர்களிடமோ அல்லது இந்தியர்களிடமோ கிரியையை நடப்பிக்கவில்லை; அவர் இஸ்ரவேலரிடத்தில் மட்டுமே கிரியை செய்தார். இவ்வாறு ஜனங்கள் பல்வேறு கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், மேலும் தேவனின் கிரியையை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் சித்தரிக்கிறார்கள். தேவன் கிரியை செய்யும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடமும், இஸ்ரவேலிலும் அவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இஸ்ரவேலரைத் தவிர, தேவன் வேறு யாரிடத்திலும் கிரியை செய்வதில்லை, அவருடைய கிரியைக்கு இதைவிட பெரிய வாய்ப்பும் இல்லை என்கின்றனர். தேவன் மனுஷரூபமானதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள், அவரை இஸ்ரவேலின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல அனுமதிப்பதில்லை. இவை அனைத்தும் மனித கருத்துக்கள் இல்லையா? தேவன் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், சகல சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார், அதனால் அவர் தனது கிரியையை இஸ்ரவேலுக்கு மட்டும் என்று எப்படி கட்டுப்படுத்த முடியும்? அப்படியானால், சகல சிருஷ்டிகளையும் அவர் சிருஷ்டித்ததன் நோக்கம் என்ன? அவர் உலகம் முழுவதையும் சிருஷ்டித்தார், இஸ்ரவேலில் மட்டுமல்ல, அவர் தனது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தை பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவில் ஜீவிக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதரும் ஆதாமின் சந்ததியினராய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவராலும் சிருஷ்டிப்பின் எல்லையிலிருந்து தப்ப முடியாது, அவர்களில் ஒருவர் கூட “ஆதாமின் சந்ததியினர்” என்ற அடையாளத்திலிருந்து தங்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் அனைவரும் தேவனின் சிருஷ்டிகள், அவர்கள் அனைவரும் ஆதாமின் சந்ததியினர், அவர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளின் சீர்கெட்ட சந்ததியினரும் கூட ஆவர். தேவனின் சிருஷ்டியாக இருப்பது இஸ்ரவேலர் மட்டுமல்ல, சகல ஜனங்களும்தான்; இதில் சிலர் சபிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிலர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரவேலரைப் பற்றி ஏற்றுக்கொள்ளக் கூடிய பல காரியங்கள் உள்ளன; தொடக்கத்தில் தேவன் அவர்கள் மீது கிரியைப் புரிந்தார், ஏனென்றால் அவர்கள் குறைவாக சீர்கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒப்பிட்டால் சீனர்கள் நிலைநிற்க மாட்டார்கள்; அவர்கள் மிகவும் கீழ்தரமானவர்கள். ஆகவே, தேவன் ஆரம்பத்தில் இஸ்ரவேல் ஜனங்களிடையே கிரியை நடத்தினார், அவருடைய இரண்டாம் கட்டக் கிரியை யூதேயாவில் மட்டுமே செய்யப்பட்டது—இது மனிதர்களிடையே நிறைய கருத்துக்களுக்கும் விதிகளுக்கும் வழிவகுத்தது. உண்மையில், தேவன் மனித கருத்துக்களின்படி செயல்பட்டால், அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், இதனால் அவர் தனது கிரியையை புறஜாதியின தேசங்களுக்கு இடையே விரிவுபடுத்த இயலாது, அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், மேலும் சகல சிருஷ்டிகளின் தேவனாக இருக்க மாட்டார். யேகோவாவின் பெயர் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் பிரசித்திப்படுத்தப்படும், அது புறஜாதியின தேசங்களுக்கும் பரப்பப்படும் என்று தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டன. இந்த தீர்க்கதரிசனம் ஏன் உரைக்கப்பட்டது? தேவன் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருந்ததால், அவர் இஸ்ரவேலில் மட்டுமே கிரியைப் புரிவார். மேலும், அவர் இந்த கிரியையைப் பரப்புவதில்லை மற்றும் அத்தகைய தீர்க்கதரிசனத்தை அவர் உரைக்கமாட்டார். அவர் இந்த தீர்க்கதரிசனத்தை உரைத்தது முதற்கொண்டே, அவர் நிச்சயமாக தனது கிரியையை புறஜாதியினர் நடுவிலும், ஒவ்வொரு தேசத்துக்கு நடுவிலும் மற்றும் அனைத்து தேசங்களிலிலும் பரப்புவார். அவர் இதைச் சொன்னது முதல், அவர் அதைச் செய்ய வேண்டும்; இதுவே அவருடைய திட்டம், ஏனென்றால் அவர் வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த கர்த்தராக இருக்கிறார், மேலும் அவரே சகல சிருஷ்டிகளுக்கும் தேவன். அவர் இஸ்ரவேலர்கள் நடுவிலோ அல்லது யூதேயா முழுவதிலுமோ செய்கிற கிரியையைப் பொருட்படுத்தாமல், அவர் கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், மற்றும் சகல மனிதகுலத்தின் கிரியையாகவும் இருக்கிறது. அவரது கிரியை இன்று சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில்—ஒரு புறஜாதியின தேசத்தில்—சகல மனித குலத்தின் கிரியையாக இன்னும் இருக்கிறது. பூமியில் அவரது கிரியைக்கு இஸ்ரவேல் அடித்தளமாக இருக்கக்கூடும்; அதேபோல், புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் சீனாவும் அவருடைய கிரியைக்கான அடித்தளமாக இருக்க முடியும். “புறஜாதி தேசங்களுக்கு நடுவில் யேகோவாவின் நாமம் பிரசித்திப்படுத்தப்படும்” என்ற தீர்க்கதரிசனத்தை அவர் இப்போது நிறைவேற்றவில்லையா? இந்த கிரியைதான் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் அவரது கிரியையின் முதல்படியாகும், அவரது கிரியையை சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் செய்கிறார். தேவன் அவதரித்து, இந்த தேசத்திலும், இந்த சபிக்கப்பட்ட குறிப்பாக மனித கருத்துக்களுடன் முரண்பட்டிருக்கிற ஜனங்களுக்கு நடுவிலும் கிரியை செய்ய வேண்டும்; இவர்கள் அனைவரையும் விட கீழ்த்தரமான ஜனங்கள், இவர்கள் பாத்திரவான்கள் அல்ல, ஆரம்பத்தில் இவர்கள் யேகோவாவால் கைவிடப்பட்டார்கள். ஜனங்கள் மற்றவர்களால் கைவிடப்படக் கூடும், ஆனால் அவர்கள் தேவனால் கைவிடப்பட்டால், அந்தஸ்தில்லாதவர்களாகவும், பாக்கியமற்றவர்களாகவும் யாரும் இருக்கமாட்டார்கள். தேவனின் ஒரு சிருஷ்டியைப் பொறுத்தவரை, சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பது அல்லது ஜனங்களால் கைவிடப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது—ஆனால் ஒரு உயிரினம் சிருஷ்டிகரால் கைவிடப்படுவது என்பது அவர்களுக்கு இதைவிட குறைந்த அந்தஸ்து இருக்க முடியாது என்பதாகும். மோவாபின் சந்ததியினர் சபிக்கப்பட்டார்கள், அவர்கள் இந்த பின்தங்கிய தேசத்தில் பிறந்தார்கள்; எந்த சந்தேகமுமின்றி, இருளின் ஆதிக்கத்தின் கீழுள்ள சகல ஜனங்களிலும், மோவாபின் சந்ததியினர் தாழ்நிலையில் இருக்கிறார்கள். இந்த ஜனங்கள் முன்பே தாழ்நிலையில் இருப்பதால், அவர்கள் மீது செய்யப்படும் கிரியை மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கு சிறந்தவையாகும், மேலும் தேவனின் ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் முழுவதற்கும் இது மிகவும் பயனளிக்கிறது. இந்த ஜனங்களுக்கு நடுவில் இத்தகைய கிரியையைச் செய்வது மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கான சிறந்த வழியாகும், இதன் மூலம் தேவன் ஒரு யுகத்தைத் தொடங்குகிறார்; இதன் மூலம் அவர் அனைத்து மனித கருத்துக்களையும் உடைத்தெறிகிறார்; இதன் மூலம் அவர் கிருபை யுகத்தின் முழு கிரியையையும் முடிவுக்கு கொண்டு வருகிறார். அவரது முதல் கிரியை இஸ்ரவேலின் எல்லைக்குள், யூதேயாவில் செய்யப்பட்டது; புதிய யுகத்தைத் தொடங்க புறஜாதியினத்தாருக்கு நடுவில் அவர் எந்த கிரியையும் செய்யவில்லை. கிரியையின் இறுதிக் கட்டம் புறஜாதியினத்தாருக்கு நடுவில் மட்டுமல்லாமல், சபிக்கப்பட்டவர்களிடையேயும் கூட அதிகமாக செய்யப்படுகிறது. இந்த ஒரு காரணம் சாத்தானை அவமானப்படுத்த மிகவும் தகுதியான சான்றாகும், ஆகவே, பிரபஞ்சத்தில் உள்ள சகல சிருஷ்டிகளின் தேவனாகவும், எல்லாவற்றிற்கும் கர்த்தராகவும், ஜீவனுள்ள அனைத்துக்கும் தொழுதுகொள்வதற்குரிய பொருளாகவும் தேவன் ஆகுகிறார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சகல சிருஷ்டிகளின் கர்த்தரே தேவன்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 207

இன்று, தேவன் எந்த புது கிரியையைத் தொடங்கினார் என இன்னும் புரியாதவர்கள் இருக்கிறார்கள். புறஜாதி தேசங்களுக்கு நடுவில், தேவன் ஒரு புது தொடக்கத்தை ஆரம்பித்துள்ளார். அவர் ஒரு புது யுகத்தைத் தொடங்கியுள்ளார், மேலும் அவர் புது கிரியையைத் தொடங்கியுள்ளார்—மோவாபின் சந்ததியினர் மீது அவர் இந்த கிரியையைச் செய்கிறார். இது அவருடைய புத்தம்புது கிரியை அல்லவா? வரலாறு முழுவதும் இந்த கிரியையை யாரும் இதற்கு முன்பு உணர்ந்ததில்லை. யாரும் அதைக் கேள்விப்பட்டதுமில்லை, அதை யாரும் பாராட்டியதுமில்லை. இந்த கட்டக் கிரியை மூலம் தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனைப் புரிந்துகொள்ள முடியாத தன்மை, தேவனின் மகத்துவம் மற்றும் தேவனின் பரிசுத்தத்தன்மை அனைத்தும் இறுதி நாட்களின் கிரியையில் வெளிப்படுகின்றன. இது மனித கருத்துக்களை உடைத்தெறியும் புது கிரியை அல்லவா? இங்கு இவ்வாறு நினைப்பவர்கள் இருக்கிறார்கள்: “தேவன் மோவாபைச் சபித்து, மோவாபின் சந்ததியினரைக் கைவிடுவார் என்று சொன்னதால், இப்போது அவரால் அவர்களை எப்படி இரட்சிக்க முடியும்?” தேவனால் சபிக்கப்பட்டு இஸ்ரவேலிலிருந்து விரட்டப்பட்ட புறஜாதியினர் இவர்கள்; இஸ்ரவேலர் இவர்களை “புறஜாதி நாய்கள்” என்று அழைத்தனர். அனைவருடைய பார்வையிலும், அவர்கள் புறஜாதி நாய்கள் மட்டுமல்ல, அதைவிட மோசமான அழிவின் புத்திரர்களும் ஆவர்; அதாவது, அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அல்ல. அவர்கள் இஸ்ரவேலின் எல்லைக்குள் பிறந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல, மேலும் புறஜாதி தேசங்களுக்கு துரத்தப்பட்டனர். அவர்கள் அனைத்து ஜனங்களிலும் தாழ்ந்தவர்கள். துல்லியமாக அவர்கள் மனிதகுலத்தின் நடுவில் தாழ்ந்தவர்களாக இருப்பதால், அவர்களிடையே ஒரு புது யுகத்தைத் தொடங்குவதற்கான தனது கிரியையை தேவன் செய்கிறார், ஏனென்றால் அவர்கள் சீர்கெட்ட மனிதகுலத்தின் பிரதிநிதிகள் ஆவர். தேவனின் கிரியைத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மற்றும் இலக்கை நோக்கியதாகவும் இருக்கிறது; இன்று இந்த ஜனங்களில் அவர் செய்யும் கிரியை சிருஷ்டியின் மீது செய்யப்படும் கிரியையாக உள்ளது. நோவா அவருடைய சந்ததியினரைப் போலவே தேவனின் சிருஷ்டியாக இருந்தார். இந்த உலகில் மாம்சமும் இரத்தமும் கொண்ட எவரும் தேவனின் சிருஷ்டியாக இருக்கிறார்கள். தேவனின் கிரியை சகல சிருஷ்டிப்புகளிலும் செய்யப்பட்டிருக்கிறது; இது யாராவது சிருஷ்டிக்கப்பட்ட பிறகு அவர்கள் சபிக்கப்படுகிறார்களா என்பதைச் சார்ந்தது அல்ல. அவரது இரட்சிப்பின் கிரியை சகல சிருஷ்டிப்புகளிலும் செய்யப்பட்டிருக்கிறது, சபிக்கப்படாத தெரிந்துகொள்ளப்பட்ட அந்த ஜனங்களிடத்தில் அல்ல. தேவன் தம்முடைய கிரியையை அவருடைய சிருஷ்டிப்புகளின் நடுவில் நிறைவேற்ற விரும்புவதால், உறுதியாக அவர் அதை வெற்றிகரமாக நிறைவு செய்வார், மேலும் அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும் ஜனங்களின் நடுவில் அவர் கிரியைச் செய்வார். எனவே, அவர் ஜனங்களுக்கு நடுவில் கிரியைச் செய்யும்போது அனைத்து மரபுகளையும் உடைத்தெறிகிறார்; அவரைப் பொறுத்தவரை, “சபிக்கப்பட்ட,” “தண்டிக்கப்பட்ட” மற்றும் “ஆசீர்வதிக்கப்பட்ட” ஆகிய வார்த்தைகள் அர்த்தமற்றவை! இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் போலவே யூத ஜனங்களும் நல்லவர்கள்; அவர்கள் நல்ல திறமை மற்றும் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில், அவர்கள் நடுவில் யேகோவா தம்முடைய கிரியையைத் தொடங்கினார், மேலும் அவருடைய ஆரம்பகால கிரியையைச் செய்தார்—ஆனால் இன்று அவர்களை ஜெயிப்பதற்கான கிரியையைச் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். அவர்களும் சிருஷ்டிப்பின் ஒரு அங்கமாக இருக்கலாம், மேலும் அவர்களைப் பற்றிய நேர்மறையான பல காரியங்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் நடுவில் இந்த கட்டக் கிரியையைச் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும்; தேவனால் ஜனங்களை ஆட்கொள்ள முடியாது, அனைத்து சிருஷ்டிகளையும் அவர் நம்ப வைக்க முடியாது, இது துல்லியமாக ஒரு சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தின் ஜனங்களுக்கு தனது கிரியையை மாற்றுவதற்கான அம்சமாகும். அவர் ஒரு யுகத்தைத் தொடங்குவதும், எல்லா விதிகளையும், அனைத்து மனிதக் கருத்துக்களையும் அவர் உடைத்தெறிவதும் மற்றும் கிருபையின் யுகம் முழுவதும் அவருடைய கிரியையின் முடிவும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அவருடைய தற்போதைய கிரியைகள் இஸ்ரவேலரின் நடுவில் செய்யப்பட்டால், அவருடைய ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் இறுதியை நெருங்கும் நேரத்தில், ஒவ்வொருவரும் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே தேவன் என்றும், இஸ்ரவேலர் மட்டுமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும், இஸ்ரவேலர் மட்டுமே தேவனின் ஆசீர்வாதத்தையும் வாக்குதத்தத்தையும் பெற தகுதியானவர்கள் என்றும் நம்புவார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் என்னும் புறஜாதி தேசத்தில் கடைசி நாட்களில் தேவனின் மனுஷ அவதரிப்பானது அனைத்து சிருஷ்டிப்புகளின் தேவனாக தேவனின் கிரியையை நிறைவேற்றுகிறது; அவர் தனது இரட்சிப்பின் பணியை முழுவதுமாக முடிக்கிறார், மேலும் அவர் தனது கிரியையின் மையப் பகுதியை சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் முடிக்கிறார். இந்த மூன்று நிலைகளின் முக்கிய கரு மனிதனின் இரட்சிப்பாகும்—அதாவது, சகல சிருஷ்டிப்பையும் சிருஷ்கரை தொழுதுகொள்ளச் செய்வதாகும். இவ்வாறு, கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் சிறப்பான அர்த்தம் உள்ளது; தேவன் அர்த்தமில்லாத அல்லது பெறுமதியில்லாத எதையும் செய்வதில்லை. ஒருபுறம், கிரியையின் இந்த கட்டம் ஒரு புது யுகத்தை ஆரம்பித்து, முந்தைய இரண்டு யுகங்களையும் முடிக்கின்றது; மறுபுறம், இது அனைத்து மனித கருத்துக்களையும், மனித நம்பிக்கை மற்றும் அறிவின் பழைய வழிகளையும் உடைத்தெறிகிறது. முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகள் பல்வேறு மனித கருத்துக்களின்படி செய்யப்பட்டன; எவ்வாறாயினும், இந்த கட்டம் மனித கருத்துக்களை முற்றிலுமாக நீக்குகிறது, இதன் மூலம் மனிதகுலத்தை முற்றிலுமாக ஜெயிக்கின்றது. மோவாபின் சந்ததியினரை ஆட்கொள்வதன் மூலமும், மோவாபின் சந்ததியினர் நடுவில் செய்யப்பட்ட கிரியையின் மூலமும், தேவன் பிரபஞ்சம் முழுவதும் உள்ள சகல ஜனங்களையும் ஆட்கொள்வார். இதுவே இந்த கட்டத்தில் அவரது கிரியையின் ஆழமான முக்கியத்துவமாக இருக்கிறது, மேலும் இது இந்த கட்டத்தில் அவரது கிரியையின் அதிக விலையேறப்பெற்ற அம்சமாகும். உனது சொந்த நிலையானது தாழ்வாகவும், நீ பாக்கியமற்றவனாக இருப்பதை இப்போது நீ அறிந்திருந்தாலும், நீ மிகவும் மகிழ்ச்சியானவற்றை அடைந்ததாக நீ இன்னும் உணருவாய்: நீ ஒரு பெரிய ஆசீர்வாதத்தை சுதந்தரித்திருக்கிறாய், ஒரு பெரிய வாக்குத்தத்தைப் பெற்றிருக்கிறாய், மேலும் தேவனின் இந்த மகத்தான கிரியையை முடிக்க உன்னால் உதவ முடியும். தேவனின் உண்மையான முகத்தோற்றத்தை நீ கண்டுள்ளாய், தேவனின் உள்ளார்ந்த மனநிலையை நீங்கள் அறிவீர்கள், தேவனின் சித்தத்தை நீங்கள் செய்கிறீர்கள். தேவனுடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் செய்யப்பட்டன. கடைசி நாட்களின்போது அவருடைய கிரியையின் இந்த கட்டம் இஸ்ரவேலர் நடுவில் செய்யப்பட்டிருந்தால், இஸ்ரவேலர் மட்டுமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்று சகல சிருஷ்டிகளும் நம்புவதோடு மட்டுமல்லாமல், தேவனின் முழு இரட்சிப்பின் திட்டமும் அவர் விரும்பிய பலனை அடையத் தவறி விடும். அவருடைய கிரியையின் இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் செய்யப்பட்ட காலகட்டத்தில், புறஜாதி தேசங்களுக்கு நடுவில் ஒரு புது கிரியையோ அல்லது ஒரு புது சகாப்தத்தைத் தொடங்குவதற்கான எந்தவொரு கிரியையோ செய்யப்படவில்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியையான இன்றைய கிரியையின் நிலை முதலில் புறஜாதி தேசங்களுக்கு நடுவில் செய்யப்படடது, மேலும் இது ஆரம்பத்தில் மோவாபின் சந்ததியினரிடையே செய்யப்பட்டது, இதுவே முழு யுகத்தையும் தொடங்குகிறது. மனித கருத்துக்களில் உள்ள எந்த அறிவையும் தேவன் உடைத்தெறிந்து, அது எதனையும் இருக்க அனுமதிக்கவில்லை. அவருடைய ஜெயத்தின் கிரியையில், பழைய, முந்தைய மனித அறிவின் வழிகளைக் கொண்டு, மனித கருத்துக்களை அவர் உடைத்தெறிந்து விட்டார். தேவனிடம் எந்த விதிகளும் இல்லை என்றும், தேவனைப் பற்றிய பழைய காரியங்கள் எதுவுமில்லை என்றும், அவர் கிரியை முற்றிலும் விடுவிக்கப்பட்டு, முற்றிலும் சுதந்திரமாக்கப்பட்டு இருக்கிறது என்றும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவர் நீதியானவர் என்றும் அவர் ஜனங்களை காணச் செய்கிறார். சிருஷ்டிகள் மத்தியில் அவர் செய்யும் எந்த கிரியைக்கும் உன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அவர் செய்யும் அனைத்து கிரியைக்கும் அர்த்தம் உண்டு, அது அவருடைய சொந்த விருப்பத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது, ஆனால் மனித தேர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் ஏற்ப அல்ல. அவருடைய கிரியைக்கு ஏதாவது நன்மையாக இருந்தால், அவர் அதைச் செய்கிறார்; அவருடைய கிரியைக்கு ஏதாவது நன்மையாக இல்லாவிடில், அது எவ்வளவு நல்லது என்றாலும் அவர் அதனைச் செய்யமாட்டார்! அவர் தனது கிரியையின் அர்த்தம் மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப அவரது கிரியைப் பெறுபவர்களையும் இருப்பிடத்தையும் தேர்வு செய்து கிரியைப் புரிகிறார். அவர் கிரியைச் செய்யும் போது கடந்த கால விதிகளை கடைபிடிப்பதும் இல்லை, பழைய சூத்திரங்களைப் பின்பற்றுவதும் இல்லை. அதற்குப் பதிலாக, கிரியையின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அவர் தனது கிரியையைத் திட்டமிடுகிறார். இறுதியில், அவர் ஒரு உண்மையான பலனையும், எதிர்பார்த்த இலக்கையும் அடைவார். இந்த காரியங்களை நீ இன்று புரிந்துகொள்ளாவிட்டால், இந்த கிரியை உனக்குள் எந்த பலனையும் தராது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சகல சிருஷ்டிகளின் கர்த்தரே தேவன்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 213

சத்தியத்தைப் பற்றி மனிதகுலம் மிகக்குறைவாகவே புரிந்துகொண்டிருப்பதால், மனிதன் சத்தியத்தைக் கொண்டிருக்கும்படியாக மனிதகுலத்தை சுத்திகரிப்பதே ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கிய இலக்காகும்! இத்தகைய மக்களிடம் ஜெயங்கொள்ளும் கிரியையை நடத்துவது ஆழ்ந்த முக்கியத்துவம் கொண்டது. நீங்கள் யாவரும் இருளின் பிடியில் விழுந்து ஆழமான தீங்குக்குள்ளாயிருக்கிறீர்கள். அப்படியானால், இந்தக் கிரியையின் இலக்கானது, மானிட இயல்பை நீங்கள் அறிந்துகொண்டு அதன் மூலம் சத்தியத்தின்படி வாழ உதவுவதே. பரிபூரணப்படுவது என்பது எல்லா படைக்கப்பட்ட சிருஷ்டிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கிரியையின் இந்த கட்டத்தில் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவது மட்டுமே அடங்கியிருந்தால், பின் அது பிரிட்டன், அல்லது அமெரிக்கா, அல்லது இஸ்ரவேலில் செய்யப்படலாம்; அது எந்த நாட்டிலும் ஜனங்களிடம் செய்யப்படலாம். ஆனால் ஜெயங்கொள்ளும் கிரியை தேர்ந்தெடுத்து செய்யப்படுவதாகும். ஜெயங்கொள்ளும் கிரியையின் முதல் படி குறுகிய காலம் கொண்டது; மேலும், சாத்தானை சிறுமைப்படுத்துவதற்கும் முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளுவதற்கும் அது பயன்படுத்தப்படும். இதுவே ஜெயங்கொள்ளுதலின் ஆரம்ப வேலை. தேவனை நம்புகிற எந்த சிருஷ்டியையும் பரிபரிபூரணப்படுத்தலாம் என்று ஒருவர் கூறலாம், ஏனெனில் பரிபூரணப்படுவது என்பது நீண்ட கால மாற்றத்துக்குப் பின் அடையக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஜெயங்கொள்வது என்பது வேறு. வெகு தூரத்தில் பின்தங்கி இருக்கும் ஒருவரும், மிக ஆழ்ந்த இருளில் வாழ்பவருமே ஜெயங்கொள்வதற்கான வகைமாதிரியும் முன்மாதிரியும் ஆகும்; அவர்கள் மிகவும் சீர்கெட்டவர்களாகவும், தேவனை அங்கீகரிக்க முற்றிலும் மனமற்றவர்களாகவும், மற்றும் தேவனுக்கு அறவே கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கவேண்டும். ஜெயங்கொண்டதற்கு சாட்சியாக நிறுத்தப்படக்கூடிய சரியான நபர் இவரே. ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கிய இலக்கு சாத்தானைத் தோற்கடிப்பதே, அதே வேளையில் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதன் முக்கிய இலக்கு ஜனங்களை ஜெயங்கொள்வதே. ஜெயங்கொண்ட பின்னர் ஜனங்கள் சாட்சியைக் கொண்டிருப்பதை சாத்தியமாக்கவே, ஜெயங்கொள்ளும் கிரியை இங்கே, உங்களைப் போன்ற ஜனங்களிடம் மேற்கொள்ளப்படுகிறது. ஜெயங்கொண்ட பின்னர் ஜனங்கள் சாட்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த ஜெயங்கொண்ட ஜனங்கள் சாத்தானை சிறுமைப்படுத்தும் இலக்கை அடையப் பயன்படுத்தப்படுவார்கள். ஆகவே, ஜெயங்கொள்ளுதலின் முக்கிய முறை என்ன? சிட்சித்தல், நியாயந்தீர்த்தல், சாபமிடுதல் மற்றும் வெளிப்படுத்துதல்—ஜனங்களை ஜெயங்கொள்ள ஒரு நீதியான மனநிலையை பயன்படுத்துதல். இதனால் தேவனின் நீதியான மனநிலையின் காரணமாக அவர்கள் முழுமையான நம்பிக்கையை அடைவார்கள். ஜனங்களை ஜெயங்கொண்டு அவர்களுக்கு முழு நம்பிக்கையை உருவாக்க வார்த்தையின் உண்மையையும் அதிகாரத்தையும் பயன்படுத்துதல்—ஜெயங்கொள்ளுதல் என்பதற்கு அர்த்தமாகும். ஜெயங்கொண்ட பின்னர் பரிபூரணப்பட்டவர்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருப்பது மட்டுமன்றி நியாயத்தீர்ப்பு கிரியையின் அறிவைப் பெறவும், தங்கள் மனநிலையை மாற்றவும், தேவனை அறிந்துகொள்ளவும் முடிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அன்பான தேவனின் பாதையை அனுபவித்து சத்தியத்தால் நிரம்பப்பெறுகிறார்கள். அவர்கள் தேவ கிரியையை அனுபவிப்பது எவ்வாறு என்று கற்றுக்கொள்ளுகிறார்கள், தேவனுக்காகத் துன்பப்படவும் தங்கள் சொந்த சித்தங்களைக் கொண்டவர்களாக இருக்கவும் அவர்களால் முடிகிறது. தேவ வார்த்தையை அனுபவித்ததின் காரணமாக சத்தியத்தைப் பற்றிய உண்மையான புரிதல் கொண்டவர்களே பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் ஆகும். ஜெயங்கொண்ட பின்னர் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள், ஆனால் அவர்கள் பெற்ற நியாயத்தீர்ப்பின் விளைவே அவர்களின் கீழ்ப்படிதல். பல சத்தியங்களின் உண்மை அர்த்தத்தை பற்றிய புரிதல் முழுமையாக அவர்களுக்கு இல்லை. அவர்கள் வாய்வார்த்தையாக சத்தியத்தை அங்கீகரிக்கின்றனர், ஆனால் அவர்கள் சத்தியத்துக்குள் பிரவேசிக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள், ஆனால் அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கவில்லை. பரிபூரணப்படுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்படும் கிரியையில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றுடன் கடிந்துகொள்ளுதலும் நியாயத்தீர்ப்புகளும் அடங்கும். சத்தியத்துக்குள் பிரவேசிப்பதை மதிக்கும் ஒரு நபரே பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர். பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவருக்கும் ஜெயங்கொள்ளப்பட வேண்டியவருக்கும் நடுவில் உள்ள வித்தியாசம் அவர்கள் சத்தியத்துக்குள் பிரவேசிக்கிறார்களா என்பதில்தான் உள்ளது. சத்தியத்தைப் புரிந்துகொண்டு, சத்தியத்துக்குள் நுழைந்து, மேலும் சத்தியத்தின்படி வாழ்பவர்களே பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள்; சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல், சத்தியத்துக்குள் நுழையாமல், அதாவது, சத்தியத்தின்படி வாழாதவர்களே பரிபூரணப்படுத்தப்பட முடியாத ஜனங்கள். அத்தகைய ஜனங்களால் இப்போது முழுமையாகக் கீழப்படிய முடிந்தால், பின் அவர்கள் ஜெயங்கொண்டவர்கள் ஆகும். ஜெயங்கொண்டவர்கள் சத்தியத்தை நாடாமல் இருந்தால்—பின்பற்றியும் அவர்கள் சத்தியத்தின்படி வாழாமல் இருந்தால், சத்தியத்தைப் பார்த்தும் கேட்டும் ஆனால் சத்தியத்தின்படி வாழ்வதை மதியாமல் இருந்தால், பின்னர் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய ஜனங்கள் பரிபூரணத்தின் பாதையில் தேவனின் தேவைகளின்படி சத்தியத்தைக் கடைபிடிக்கிறார்கள். இதன் மூலமாக, அவர்கள் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுகிறார்கள். ஜெயங்கொள்ளுதலின் கிரியை நிறைவடையும் முன் முடிவு வரை பின்பற்றுகிற ஒருவரே ஜெயங்கொண்டவர், ஆனால் அவரை பரிபூரணப்படுத்தப்பபட்ட ஒருவர் என்று கூற முடியாது. ஜெயங்கொள்ளுதல் கிரியை முடிவடைந்த பின்னர், சத்தியத்தைப் பின்தொடர முடிகிறவரையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவரையுமே “பரிபூரணப்படுத்தப்பட்டவர்” என்பது குறிக்கிறது. ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது, உபத்திரவ காலத்தில் உறுதியாக நின்று சத்தியத்தின்படி வாழ்கிறவரையே அது குறிக்கிறது. பரிபரிபூரணப்படுத்தப்படுதலில் இருந்து ஜெயங்கொள்ளுதலை எது வேறுபடுத்துகிறது என்றால் கிரியையின் படிகளில் இருக்கும் வித்தியாசமும் ஜனங்கள் புரிந்து கொண்டு சத்தியத்துக்குள் நுழையும் விதத்தில் இருக்கும் வித்தியாசமுமே. பரிபூரணத்தின் பாதைக்குள் அடியெடுத்து வைக்காத யாவரும், அதாவது சத்தியத்தைக் கொண்டிராதவர்கள், முடிவாக இன்னும் நீக்கப்படக்கூடும். சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களும் சத்தியத்தின்படி வாழ்பவர்களையுமே தேவனால் முற்றிலுமாக ஆதாயப்படுத்தப்பட முடியும். அதாவது, பேதுருவின் சாயலின்படி வாழ்கிறவர்களே பரிபூரணமடைந்தவர்கள், அதே வேளையில் பிறர் யாவரும் ஜெயங்கொண்டவர்கள். சாபமிடுதல், சிட்சித்தல், மற்றும் கோபத்தை வெளிப்படுத்துதல் ஆகியவையே ஜெயங்கொண்டவர்களிடம் நடத்தப்படும் கிரியை மேலும் அவர்களுக்கு வருவதெல்லாம் நீதியும் சாபங்களுமே. பீடிகை அல்லது பணிவு இன்றி வெளிப்படுத்துதலே இத்தகைய ஒரு நபரின் மேல் கிரியை நடத்துவது ஆகும்—அவர்களுக்குள் இருக்கும் அசுத்த மனநிலை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் அதைத் தாங்களாகவே அறிந்து முற்றிலுமாக நம்புவது. மனிதன் முற்றிலுமாக கீழ்ப்படிகிறவனாகிவிட்டால், ஜெயங்கொள்ளும் வேலை முடிவடைகிறது. அப்படியும் பெரும்பாலான ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ள நாடாவிட்டாலும், ஜெயங்கொள்ளும் பணி முடிவுற்றிருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 214

தேவன் மனிதனை எப்படி பரிபூரணப்படுத்துகிறார்? தேவனின் மனநிலை என்ன? அவருடைய மனநிலையில் என்ன அடங்கியுள்ளது? இந்தக் காரியங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்த, ஒருவன் அதைத் தேவனின் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதாகவும், ஒருவன் அதைத் தேவனுக்குச் சாட்சி பகர்வதாகவும், ஒருவன் தேவனை உயர்த்துவதாகவும் கூறுகிறான். மனிதன், தேவனை அறியும் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அவனது வாழ்க்கை மனநிலையில் இறுதியாக உருமாற்றமடைவான். மனிதன் எவ்வளவு கையாளப்பட்டுச் சுத்திகரிக்கப்படுவதற்குள் கடந்து செல்கிறானோ, அவன் அவ்வளவு அதிகமாய் ஊக்குவிக்கப்படுகிறான். தேவனின் கிரியையின் படிகள் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு மனிதன் பரிபூரணமாக்கப்படுகிறான். இன்று, மனிதனின் அனுபவத்தில், அவனது கருத்துக்களைத் தேவனின் கிரியையின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாக்குகிறது, மேலும் இவை எல்லாம் மனிதனின் புத்திக்கு அப்பாற்பட்டவை மற்றும் அவனது எதிர்பார்ப்புகளுக்குப் புறம்பானவை. மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் வழங்குகிறார், ஒவ்வொரு காரியத்திலும் இது அவனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உன் பலவீன நேரத்தில் தேவன் தம்முடைய வார்த்தைகளை உச்சரிக்கிறார். இவ்வழியில் மட்டுமே அவர் உன்னுடைய வாழ்க்கையை அளிக்க முடியும். உன் கருத்துக்களைத் திரும்பத் தாக்குவதால், அவர் தேவன் கையாள்வதை நீ ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறார். இவ்வழியில் மட்டுமே உன் சீர்கேடுகளிலிருந்து உன்னை விடுவிக்க முடியும். இன்று, அவதரித்த தேவன் ஒரு விதமாகத் தெய்வீக நிலையிலேயே செயல்படுகிறார், ஆனால் மற்றோர் நிலையில் அவர் சாதாரண மனித அம்சமாகச் செயல்படுகிறார். நீ தேவனின் எந்த கிரியையையும் மறுக்க முடியாமல் போகும்போது, தேவன் சாதாரண மனித அம்ச நிலைக்குள் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் உன்னைச் சமர்ப்பிக்க முடிந்தால், உன்னால் சமர்ப்பிக்க முடியும் போது மற்றும் அவர் எந்த வகையான இயல்பான தன்மையை வெளிப்படுத்தினாலும் புரிந்து கொள்வதற்கு, நீ உண்மையான அனுபவத்தைப் பெற்றபின் தான் உன்னால் அவர் தேவன் என்று உறுதியாக நம்ப முடியும், அதன்பின் தான் நீ கருத்துக்களைப் பிறப்பிப்பதை நிறுத்துவாய், அதன்பின் தான் உன்னால் இறுதிவரை அவரைப் பின்பற்ற முடியும். தேவனின் கிரியைக்கு ஞானம் உண்டு, மேலும் மனிதன் அவருக்கு சாட்சியாக எப்படி நிலையாக நிற்க முடியும் என்பதை அவர் அறிவார். அவர் மனிதனின் முக்கியமான பலவீனம் எங்குள்ளது என்பதை அறிவார், மேலும் அவர் பேசும் வார்த்தைகள் உன் முக்கியமான பலவீனத்தில் உன்னைத் தாக்கும், ஆனால் தம்முடைய கம்பீரமான மற்றும் ஞானமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி, உன்னை தமக்குச் சாட்சியாக நிலைநிற்கச் செய்கிறார். அவை தேவனின் அற்புதமான கிரியைகள். தேவன் செய்யும் கிரியை மனிதனின் புத்திக்கு எட்ட முடியாதது. மாம்சமாயிருக்கும் மனிதன் எப்படிப்பட்ட சீர்கேடுகளைக் கொண்டிருக்கிறான், எது மனிதனின் சாராம்சத்தை உண்டாக்குகிறது, இவை எல்லாம் தேவனின் நியாயத்தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, இது மனிதனைத் தன் அவமானத்திலிருந்து மறைத்துக் கொள்ள இடமில்லாமல் செய்கிறது.

தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியையை, மனிதன் தன்னைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனப்பான்மை குறித்து அவர் தீர்ப்பு செய்யாமல், மனிதனால் அவரது நீதியான மனநிலையை அறிவது சாத்தியமில்லை, அது எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் தேவனை பற்றிய தனது பழைய ஞானத்தைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தன் முழுமையையும் வெளியாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது வெளிப்பாட்டின் மூலம், தேவனைப் பற்றிய ஞானத்தைப் பெறவும், அவனுடைய மனநிலையில் உருமாற்றமடையவும், மற்றும் தேவனுக்கு பெரும் சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சி பகிரவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடரவும் முடியாது. மனிதன் தன்னை சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் தாக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடர்பவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, அவதரித்த தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்துவிட்டார், மனிதன் அவரைப் பற்றிய ஞானத்தையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய செயல்படுகிற மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை வென்றிட அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாகிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகள் மட்டுமே சாத்தானை அவமதிக்க முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாய் கடந்துபோய் தம்மை தெரிந்துகொண்டவர்களை, கையாண்டு நேர்த்தியாக்கி, அவருக்குச் சாட்சி பகிர பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகிர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்கு தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் புகழ்ச்சியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் உருமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதை தேவன் அனுமதிக்க மாட்டார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை அறிந்தவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சி பகர முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 215

வேதாகமத்தில் தேவன் சோதோம் மீது அழிவைக் கொண்டுவந்த காட்சியை நினைவு கூருங்கள். மேலும், லோத்தின் மனைவி எவ்வாறு உப்புத் தூணாக மாறிப்போனாள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். நினிவே ஜனங்கள் இரட்டு உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து தங்கள் பாவங்களிலிருந்து எவ்வாறு மனந்திரும்பினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும், 2,000 வருடங்களுக்கு முன்பு யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த பிறகு என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். யூதர்கள் இஸ்ரவேலில் இருந்து வெளியேற்றப்பட்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிதறி ஓடினார்கள். பலர் கொல்லப்பட்டனர், முழு யூத தேசமும் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அழிவுக்குள்ளானது. அவர்கள் தேவனை சிலுவையில் அறைந்து கொடூரமான பாவத்தைச் செய்தார்கள், தேவனுடைய மனதை துயரப்படுத்தினார்கள். அவர்கள் செய்தவற்றுக்கு விலைக்கிரயம் கொடுத்தனர் மற்றும் அவர்களுடைய செயல்களின் அனைத்துப் பின்விளைவுகளையும் அனுபவித்தனர். அவர்கள் தேவனை நிந்தித்தார்கள், தேவனைப் புறக்கணித்தார்கள், எனவே தேவனால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரே தலைவிதியைப் பெற்றனர். இதுதான் அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டிற்கும் தேசத்திற்கும் கொண்டு வந்த கசப்பான பின்விளைவும் பேரழிவும் ஆகும்.

இன்று, தேவன் தனது கிரியையைச் செய்வதற்காக உலகிற்கு திரும்பியுள்ளார். சர்வாதிகார ஆட்சியாளர்களின் பெரும் கூட்டம் காணப்படும் நாத்திகத்தின் உறுதியான கோட்டையாக திகழும் சீனாவில் அவர் தனது முதல் நிறுத்தத்தை நிறுத்தியுள்ளார். தேவன் தனது ஞானத்தினாலும் வல்லமையினாலும் ஒரு கூட்டமான ஜனங்களை ஆதாயப்படுத்தியுள்ளார். இந்தக் காலகட்டத்தில், அவர் சீனாவின் ஆளும் கட்சியால் ஒவ்வொரு விதத்திலும் வேட்டையாடப்பட்டு, அவர் தலைசாய்க்கவும் தங்கவும் இடமில்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையிலும், தேவன் தான் செய்ய பிரயாசப்படும் கிரியையை இன்னும் தொடர்ந்து செய்கிறார்: அவர் தனது குரலில் சுவிசேஷத்தை அறிவித்துப் பரப்புகிறார். தேவனுடைய சர்வவல்லமையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. தேவனை எதிரியாகக் கருதும் நாடான சீனாவில், தேவன் தனது கிரியையை ஒருபோதும் நிறுத்தியதில்லை. மாறாக, அதிகமான ஜனங்கள் அவருடைய கிரியையையும் வார்த்தையையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் மனுக்குலத்தின் ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கத் தேவன் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். தேவன் அடைய வேண்டுமென்று பிரயாசப்படுகிற வழியில் எந்த நாடோ அல்லது எந்த அதிகாரமோ நிற்க முடியாது என்று நாம் நம்புகிறோம். தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்து, தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, தேவனுடைய திட்டத்திற்கு இடறலுண்டாக்கி, பலவீனப்படுத்துபவர்கள் இறுதியில் தேவனால் தண்டிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியைக்கு எதிராக நிற்பவன் நரகத்திற்கு அனுப்பப்படுவான்; தேவனுடைய கிரியையை எதிர்க்கும் எந்த நாடும் அழிக்கப்படும்; தேவனுடைய கிரியையை எதிர்க்க எழுந்த எந்தத் தேசமும் இந்தப் பூமியில் இல்லாமல் நிர்மூலமாக்கப்படும். தேவனுடைய குரலைக் கேட்கவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்தவும், தேவனை மிகவும் பரிசுத்தமானவராகவும், மிகவும் கனத்திற்குரியவராகவும், மிகவும் உயர்ந்தவராகவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும், ஆபிரகாமின் சந்ததியினர் யோகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும், தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவவும் வேண்டுமாறு சகல தேசங்களையும், சகல நாடுகளையும், ஏன் சகல தொழில் நிறுவனங்களையும் சேர்ந்த ஜனங்களை வலியுறுத்துகிறேன்.

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காக தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 216

தேவனுடைய நிர்வாகக் கிரியையானது உலகத்தை சிருஷ்டித்ததில் ஆரம்பமானது, மனிதன் இந்த கிரியையின் மையத்தில் இருக்கிறான். எல்லாவற்றையும் தேவன் சிருஷ்டித்தது மனிதனுக்காகவே என்று கூறலாம். அவருடைய நிர்வாகக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் மற்றும் வெறும் நிமிடங்கள் அல்லது விநாடிகள் அல்லது கண் சிமிட்டலில் அல்லது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் செய்யப்படாததால், மனிதகுலம் உயர்வாழ்வதற்குத் தேவையான பல விஷயங்களை அவர் சிருஷ்டிக்க வேண்டியிருந்தது, சூரியன், சந்திரன், அனைத்து வகையான உயிரினங்களும், உணவு மற்றும் விருந்தோம்பும் சூழல் என எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். இது தேவனுடைய நிர்வகித்தலின் தொடக்கமாயிருந்தது.

அதன்பிறகு, தேவன் மனிதகுலத்தை சாத்தானிடம் ஒப்படைத்தார், மனிதன் சாத்தானின் அதிகார வரம்பின் கீழ் வாழ்ந்தான், இது படிப்படியாக முதல் காலத்தின் தேவனுடைய கிரியைக்கு வழிவகுத்தது: அதுதான் நியாயப்பிரமாண காலத்தின் கதை…. நியாயப்பிரமாண காலத்தின் போது பல்லாயிர ஆண்டுகளாக, மனிதகுலம் நியாயப்பிரமாண காலத்தின் வழிகாட்டுதலுக்கு பழக்கமாகி, அதையே நிஜமாக கருதியது. படிப்படியாக, மனிதன் தேவனுடைய பராமரிப்பை விட்டுவிட்டான். எனவே, நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுகின்றபோதிலும் அவர்கள் சிலைகளை வணங்கி, தீய செயல்களைச் செய்தார்கள். அவர்கள் யேகோவாவின் பாதுகாப்பின்றி இருந்தனர், தேவாலயத்தில் பலிபீடத்தின் முன்பாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். உண்மையில், தேவனுடைய கிரியை அவர்களை வெகு காலத்திற்கு முன்பே விட்டுவிட்டது, இஸ்ரவேலர் இன்னும் நியாயப்பிரமாணத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும், யேகோவாவின் நாமத்தைப் பேசினாலும், அவர்கள் மட்டுமே யேகோவாவின் ஜனங்கள் என்றும், யேகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் பெருமையுடன் நம்பினார்கள், தேவனுடைய மகிமை அவர்களை அமைதியாக கைவிட்டது…

தேவன் தனது கிரியையைச் செய்யும்போது, அவர் எப்போதும் அமைதியாக ஒரு இடத்தை விட்டு வெளியேறி, அவர் தொடங்கும் புதிய கிரியையை மற்றொரு இடத்தில் மென்மையாகக் கொண்டு செல்லுகிறார். இது உணர்வற்ற ஜனங்களுக்கு நம்பமுடியாததாக தோன்றுகிறது. ஜனங்கள் எப்போதும் பழையதைப் பொக்கிஷமாகக் கருதி, புதிய பரிச்சயமில்லாத விஷயங்களை பகைமையுடன் கருதுகின்றனர் அல்லது அவற்றை ஒரு தொல்லையாகக் கருதுகின்றனர். எனவே, தேவன் என்னவிதமான புதிய கிரியையைச் செய்தாலும், ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாவற்றிற்கும் மனிதன் அதை அறிந்துகொள்வதில் கடைசியாக இருக்கிறான்.

எப்பொழுதும் போலவே, நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, தேவன் தமது இரண்டாம் கட்டத்தின் புதிய கிரியையைத் தொடங்கினார்: மாம்சத்தை அனுமானித்து—பத்து, இருபது ஆண்டுகளாக மனிதனாக அவதரித்தார்—விசுவாசிகளிடையே அவருடைய கிரியைப் பேசினார் மற்றும் செய்தார். ஆயினும், விதிவிலக்கு இல்லாமல், யாரும் அதை அறிந்திருக்கவில்லை, கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுப்பப்பட்ட பின்னர் அவர் தேவன் மாம்சமாக வந்தார் என்பதை ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் மட்டுமே ஒப்புக்கொண்டனர். … தேவனுடைய கிரியையின் இரண்டாம் கட்டம் முடிந்தவுடன்—சிலுவையில் அறையப்பட்ட பிறகு—மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்கான தேவனுடைய கிரியை (அதாவது, மனிதனை சாத்தானின் கைகளிலிருந்து மீட்பது) நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்த தருணத்திலிருந்து, மனிதகுலம் கர்த்தராகிய இயேசுவை இரட்சகராகவும், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. பெயரளவில், மனிதனின் பாவங்கள் அவன் இரட்சிப்பை அடைவதற்கும் தேவனுக்கு முன்பாக வருவதற்கும் ஒரு தடையாக இருக்கவில்லை, மேலும் ஒருபோதும் சாத்தான் மனிதனைக் குற்றம் சாட்டும் திறனில்லாமல் போனான். ஏனென்றால், தேவனே உண்மையான கிரியையைச் செய்திருந்தார், பாவ மாம்சத்தின் தோற்றமும் முன்னனுபவமும் ஆனார், தேவனே பாவநிவாரணபலியாக இருந்தார். இந்த வழியில், மனிதன் சிலுவையிலிருந்து இறங்கி, தேவனுடைய மாம்சத்தின் மூலம், அதாவது பாவ மாம்சத்தின் சாயல் மூலம் மீட்கப்பட்டு இரட்சிக்கப்பட்டான். ஆகவே, சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டபின், மனிதன் தேவனுக்கு முன்பாக தன் இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு படி மேலே வந்தான். நிச்சயமாக, நியாயப்பிரமாண காலத்தின் போது தேவனுடைய நிர்வகித்தலை விட இந்த கட்ட கிரியை ஆழமானது மற்றும் மேம்பட்டதாகும்.

தேவனுடைய நிர்வகித்தல் இதுதான்: மனிதனை சாத்தானிடம் ஒப்படைப்பது—தேவன் என்றால் என்ன, சிருஷ்டிகர் என்றால் என்ன, தேவனை ஆராதிப்பது எப்படி, அல்லது தேவனுக்கு அடிபணிய வேண்டியதன் அவசியம் ஏன் என்று தெரியாத மற்றும் சாத்தானை தன்னை சீர்கெட்டுப் போகச் செய்ய அனுமதித்த ஒரு மனிதகுலம். மனிதன் தேவனை முழுமையாக ஆராதித்து சாத்தானை நிராகரிக்கும் பட்சத்தில் தேவன் மனிதனை சாத்தானின் கைகளிலிருந்து படிப்படியாக மீட்டுக்கொள்கிறார். இது தேவனுடைய நிர்வகித்தலாகும். இது ஒரு புராணக் கதையாகத் தோன்றலாம், மேலும் அது மனக்கலக்கமாகத் தோன்றலாம். இது ஒரு புராணக் கதை என்று மக்கள் உணர்கிறார்கள், ஏனென்றால் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் மனிதனுக்கு எவ்வளவு நேர்ந்தது என்பது குறித்து அவர்களுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை, பிரபஞ்சத்திலும், ஆகாயவிரிவிலும் எத்தனை கதைகள் நிகழ்ந்தன என்பது அவர்களுக்குத் தெரியாது. மேலும், பொருள் உலகத்திற்கு அப்பால் இருக்கும் மிகவும் ஆச்சரியமூட்டும், பயத்தைத் தூண்டும் உலகத்தை அவர்களால் பாராட்ட முடியாது, ஆனால் அவர்களின் மரணக் கண்கள் அவற்றைப் பார்ப்பதைத் தடுக்கின்றன. மனிதனுக்கு தேவனுடைய இரட்சிப்பின் முக்கியத்துவம் அல்லது அவருடைய நிர்வாகக் கிரியையினுடைய முக்கியத்துவம் பற்றி மனிதனுக்கு எந்த புரிதலும் இல்லாததால், அது மனிதனுக்கு புரியவில்லை என்று உணர்கிறது, மேலும் தேவன் இறுதியில் மனிதகுலத்தை எப்படி விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ளவில்லை. ஆதாமும் ஏவாளும் இருந்ததைப் போல சாத்தானால் முற்றிலும் தடையின்றி இருக்க வேண்டுமா? இல்லை! தேவனுடைய நிர்வகித்தலின் நோக்கம் என்னவென்றால், தேவனை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிந்த ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்துவதாகும். இந்த மக்கள் சாத்தானால் சீர்கெட்டுப் போயிருந்தாலும், அவர்கள் இனி சாத்தானை தங்கள் தகப்பனாக பார்க்க மாட்டார்கள்; அவர்கள் சாத்தானின் வெறுக்கத்தக்க முகத்தை அடையாளம் கண்டு அதை நிராகரிக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சிப்பையும் ஏற்றுக்கொள்ள தேவனுக்கு முன்பாக வருகிறார்கள். அசிங்கமானவை என்றால் என்ன, அது பரிசுத்தமானவற்றுடன் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள், மேலும் தேவனுடைய மகத்துவத்தையும் சாத்தானின் தீமையையும் அங்கீகரிக்கிறார்கள். இது போன்ற ஒரு மனிதகுலம் இனி சாத்தானுக்கு வேலை செய்யாது, அல்லது சாத்தானை வணங்குவதில்லை, அல்லது சாத்தானை வணங்காது. ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட்ட ஒரு கூட்ட ஜனங்களாவார்கள். மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் இதுதான். இந்த நேரத்தில் தேவனுடைய நிர்வாகக் கிரியின் போது, சாத்தானின் சீர்கேடு மற்றும் தேவனுடைய இரட்சிப்பு ஆகிய இரண்டுக்கும் மனிதகுலம்தான் இலக்காகும், மேலும் தேவனும் சாத்தானும் சண்டையிடுவதற்கு மனிதன்தான் பொருளாக இருக்கிறான். தேவன் தமது கிரியையைச் செய்வதால், அவர் படிப்படியாக மனிதனை சாத்தானின் கைகளிலிருந்து மீட்டு வருகிறார், எனவே மனிதன் தேவனிடம் நெருங்கி வருகிறான்…

பின்னர் ராஜ்யத்தின் காலம் வந்தது, இது மிகவும் நடைமுறைக்குரிய கிரியையின் கட்டமாகும், ஆனால் இதை மனிதன் ஏற்றுக்கொள்வது கடினம். ஏனென்றால், மனிதன் தேவனிடம் நெருங்கி வருகிறான், தேவனுடைய கோல் மனிதனை நெருங்குகிறது, மேலும் தெளிவாக தேவனுடைய முகம் மனிதனுக்கு வெளிப்படுகிறது. மனிதகுலத்தின் மீட்பைத் தொடர்ந்து, மனிதன் அதிகாரப்பூர்வமாக தேவனுடைய குடும்பத்திற்குத் திரும்புகிறான். இப்போது இன்பத்திற்கான நேரம் என்று மனிதன் நினைத்தான், ஆனாலும் அவன் தேவனால் ஒரு முழுமையான தாக்குதலுக்கு ஆளாகிறான், இது போன்ற விருப்பங்களை யாரும் முன்னறிவித்திருக்க முடியாது: இது மாறிவிட்டால், இது தேவனுடைய மக்கள் “மகிழ்ந்திருக்க” வேண்டிய ஞானஸ்நானம் ஆகும். இத்தகைய சிகிச்சையின் கீழ், மக்கள் தங்களைத் தாங்களே நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, “நான் பல ஆண்டுகளாக காணாமல்போன ஆட்டுக்குட்டி, தேவன் என்னை திரும்ப வாங்குவதற்கு எவ்வளவோ செலவுச் செய்தார், எனவே தேவன் என்னை ஏன் இப்படி நடத்துகிறார்? என்னைப் பார்த்து சிரிப்பதும், என்னை வெளிப்படுத்துவதும் தேவனுடைய வழியா? …” பல வருடங்கள் கடந்தபின், சுத்திகரிப்பு மற்றும் சிட்சிப்பு ஆகியவற்றின் கஷ்டங்களை அனுபவித்த மனிதன் வானிலை—தாக்கத்திற்கு ஆளானான். கடந்த காலங்களில் மனிதன் “மகிமை” மற்றும் “மாட்சிமை” ஆகியவற்றை இழந்திருந்தாலும், அவன் அதை அறியாமல், மனித நடத்தை கொள்கைகளைப் புரிந்துகொண்டு, மனிதகுலத்தைக் இரட்சிப்பதற்கான தேவனுடைய பல ஆண்டுகால பக்தியைப் பாராட்டினான். மனிதன் மெதுவாக தன் காட்டுமிராண்டித்தனத்தை வெறுக்கத் தொடங்குகிறான். அவன் எவ்வளவு கொடூரமானவன், தேவனைப் பற்றிய தவறான புரிதல்கள் மற்றும் அவரிடமிருந்து அவன் செய்த நியாயமற்ற கோரிக்கைகள் அனைத்தையும் அவன் வெறுக்கத் தொடங்குகிறான். கடிகாரத்தைத் திருப்ப முடியாது. கடந்த கால நிகழ்வுகள் மனிதனின் வருந்தத்தக்க நினைவுகளாக மாறுகின்றன, மேலும் தேவனுடைய வார்த்தைகளும் அன்பும் மனிதனின் புதிய வாழ்க்கையில் உந்து சக்தியாகின்றன. மனிதனுடைய காயங்கள் நாளுக்கு நாள் குணமடைகின்றன, அவனது வலிமை திரும்புகிறது, அவன் எழுந்து நின்று சர்வவல்லவரின் முகத்தைப் பார்க்கிறான்… அவர் எப்போதும் என் பக்கத்தில் இருந்தார் என்பதையும், அவருடைய புன்னகையும் அவருடைய அழகான முகமும் இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே அப்படிச் செய்கிறான். அவர் சிருஷ்டித்த மனிதகுலத்தின் மீது அவருடைய இருதயம் இன்னும் அக்கறை கொண்டுள்ளது, ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே அவருடைய கைகள் இன்னும் சூடானவையாவும் சக்திவாய்ந்தவையாககவும் இருக்கின்றன. மனிதன் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்புவது போல இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில் மனிதன் இனி சர்ப்பத்தின் மயக்கும் வார்த்தைகளை செவிகொடுத்துக் கேட்பதில்லை, இனி யேகோவாவின் முகத்திலிருந்து விலகுவதில்லை. மனிதன் தேவனுக்கு முன்பாக மண்டியிட்டு, தேவனுடைய புன்னகை முகத்தைப் பார்த்து, அவரது மிகவும் விலையேறப்பெற்ற பலியை அளிக்கிறான்—ஓ! என் கர்த்தாவே, என் தேவனே!

தேவனுடைய அன்பும் இரக்கமும் அவருடைய நிர்வகித்தலின் ஒவ்வொரு விவரத்தையும் ஊடுருவிச் செல்கின்றன, மேலும் தேவனுடைய நல்ல நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட கிரியையை இன்னும் அயராது செய்கிறார். தேவனுடைய நிர்வகித்தலைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய கிரியையால் மனிதனுக்கு கிடைக்கும் உதவி மற்றும் நன்மைகள் ஒவ்வொருவராலும் பாராட்டப்படலாம். ஒருவேளை, இந்த நாளில், நீ தேவன் வழங்கிய எந்த அன்பையும் வாழ்க்கையையும் உணரவில்லை, ஆனால் நீ தேவனைக் கைவிடாத வரை, சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான உன் உறுதியைக் கைவிடாதவரை, தேவனுடைய புன்னகையை உனக்கு வெளிப்படுத்தும் ஒரு நாள் வரும். தேவனுடைய நிர்வாகக் கிரியையின் நோக்கம் சாத்தானின் ஆதிக்க வரம்பில் உள்ளவர்களை மீட்பதே ஆகும், மற்றபடி சாத்தானால் சீர்கெட்டுப்போய் தேவனை எதிர்க்கும் ஜனங்களை கைவிட்டு விடுவது அல்ல.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 217

அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக் கிரியை முடிக்கப்படுவதற்கு முன்பு நான் இதில் எந்த நிலையை அடைய வேண்டும். இன்றுவரை என்னுடன் இருந்த பிறகும் எனது கிரியை எதைப் பற்றியது என்று ஜனங்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் என்னுடன் இருந்தது வீணாகிவிடவில்லையா? ஜனங்கள் என்னைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எனது சித்தம் தெரிந்திருக்க வேண்டும். நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியைகளை நடப்பித்து வருகிறேன், மற்றும் இதனால் இன்றுவரை நான் தொடர்ந்து எனது கிரியையை இப்படியே மேற்கொண்டு வருகிறேன். எனது கிரியைப் பல செயற்திட்டங்களைக் கொண்டிருந்தாலும், அதன் நோக்கம் என்றும் மாறுவதில்லை; மனிதனுக்கான நியாந்தீர்த்தலும் தண்டனையும் என்னுள் நிறைந்திருந்தாலும், உதாரணமாக, நான் என்ன செய்தாலும் அவனைக் காப்பாற்றுவதற்காகவும், மற்றும் எனது நற்செய்தியை சிறந்த முறையில் பரப்புவதற்காகவும், மனிதன் முழுமையாக்கப்பட்டதும் எனது கிரியையை அனைத்து புறஜாதியார் தேசங்களின் மத்தியிலும் மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் செய்கிறேன். ஆகவே இன்று, அநேக ஜனங்கள் ஆழ்ந்த கலக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், நான் இப்போதும் எனது கிரியையைத் தொடர்கிறேன், நான் மனிதனுக்கு நியாயந்தீர்த்தலையும் தண்டனையையும் வழங்க மேற்கொள்ள வேண்டிய கிரியையைத் தொடர்கிறேன். நான் கூறுவதைக் கேட்டு மனிதன் சோர்ந்து போயிருப்பது உண்மை என்றாலும், எனது கிரியையில் தன்னைப் பற்றிக் கவலைப்பட அவனுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், எனது கிரியையின் நோக்கம் மாறாமல் இருக்கவும், எனது அசல் திட்டம் முறியாமல் இருக்கவும் நான் இன்னும் எனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். மனிதன் எனக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுவது எனது நியாயந்தீர்ப்பின் செயல்பாடாகும், மனிதனை மிகவும் செயல்திறத்துடன் மாற செய்வது எனது தண்டனையின் செயல்பாடாகும். நான் என்ன செய்தாலும் அதனை எனது மேலாண்மையின் பொருட்டே செய்கிறேன் என்றாலும், நான் ஒருபோதும் மனிதனுக்குப் பலனளிக்காத எதையும் செய்ததில்லை, இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள தேசங்களில் நான் காலடி வைத்திருக்கக்கூடும் என்றாலும், இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடுகளையும் இஸ்ரவேலர்களைப் போலவே கீழ்ப்படிபவர்களாக உருவாக்கவும், அவர்களை நிஜமான மனித இனமாக உருவாக்கவும் நான் விரும்புகிறேன். இது எனது மேலாண்மை இது புறஜாதி தேசங்களிடையே நான் செய்து வரும் கிரியையாகும். இப்போதும்கூட, பலருக்கு எனது மேலாண்மை புரிவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, மேலும் அவர்களின் சொந்த எதிர்காலங்களிலும் இலக்குகளிலும் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். நான் என்ன சொன்னாலும், நான் செய்யும் கிரியை குறித்து அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், அதற்குப் பதிலாக நாளைய அவர்களின் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எல்லாமும் இந்த வழியில் நடந்தால், எனது கிரியை எவ்வாறு விரிவடையும்? உலகம் முழுவதும் எனது நற்செய்தி எவ்வாறு பரவ முடியும்? என் கிரியை பரவும்போது, இஸ்ரவேலின் கோத்திரத்தார் ஒவ்வொருவரையும் யெகோவா வீழ்த்தியது போல நான் உங்களைச் சிதறடிப்பேன், மற்றும் வீழ்த்துவேன். இவை அனைத்தும் செய்யப்படும், அப்போதுதான் எனது நற்செய்தி பூமியெங்கும் பரவும், எனவே இது புறஜாதியார் தேசங்களைச் சென்றடையக்கூடும், இதனால் எனது பெயர் பெரியவர்களாலும் குழந்தைகளாலும் ஒரே மாதிரியாகப் மகிமைப்படுத்தப்படக்கூடும், எனது பரிசுத்தப் பெயர் எல்லாக் கோத்திரம் மற்றும் தேசங்களைச் சேர்ந்த மக்களின் வாய்களிலும் ஒரேவிதமாக புகழப்படும். எனவே, இந்த இறுதி சகாப்தத்தில், எனது நாமம் புறஜாதியாரிடையே மகிமைப்படுத்தப்படக்கூடும், இதனால் எனது செயல்கள் புறஜாதியாரால் காணப்படக்கூடும், மேலும் அவர்கள் எனது செயல்களின் காரணமாக என்னை சர்வ வல்லவர் என்று அழைப்பார்கள், எனவே எனது வார்த்தைகள் விரைவில் நடக்கும். நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் சபித்தவர்கள் உட்பட புறஜாதியாரின் எல்லா தேசங்களின் தேவன் நான். நான் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தின் தேவன் என்பதை ஜனங்களைப் பார்க்க வைப்பேன். இது எனது மிகச் சிறந்த கிரியை, கடைசி நாட்களுக்கான எனது கிரியைத் திட்டத்தின் நோக்கம் மற்றும் கடைசி நாட்களில் முடிக்கப்பட வேண்டிய ஒரே கிரியை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 218

கடைசி நாட்களில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் மேலாண்மை செய்து வரும் கிரியை முழுமையாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இப்போதுதான் நான் எனது நிர்வாகத்தின் முழு மர்மத்தையும் மனிதனுக்கு அறிவித்துள்ளேன், மற்றும் மனிதன் எனது கிரியையின் நோக்கத்தை தெரிந்து கொண்டான், மற்றும் மேலும், எனது மர்மங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டான். மனிதன் கவலைப்படும் முடிவு குறித்து அனைத்தையும் நான் அவனுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 5,900 ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்மங்களான எனது மர்மங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே மனிதனுக்காகக் கண்டுபிடித்தேன். யெகோவா யார்? மேசியா யார்? இயேசு யார்? உங்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். எனது கிரியை இந்தப் பெயர்களால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? எனது பரிசுத்தப் பெயர் எவ்வாறு கூறப்பட வேண்டும்? என்னுடைய பெயர்களில் ஏதேனும் ஒன்றால் என்னை அழைத்த எந்த தேசத்திற்கும் எனது பெயர் எவ்வாறு பரப்பப்பட வேண்டும். எனது கிரியை விரிவடைந்து வருகிறது, அதன் பரிபூரணத்தை எந்தவொரு நாட்டிற்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பரப்புவேன். எனது வேலை உங்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இஸ்ரவேலில் தாவீதின் வம்சத்தின் மேய்ப்பர்களை யெகோவா அதம்பண்ணினதைப் போல நான் உங்களை அதம்பண்ணுவேன், இதனால் நீங்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சிதறடிக்கப்படுவீர்கள். கடைசி நாட்களில், நான் எல்லா தேசங்களையும் சுக்குநூறாக இடித்துப் போடுவேன், அவர்களின் மக்களை புதிதாகக் கொடுப்பேன். நான் மீண்டும் திரும்பும்போது, எனது எரியும் அக்கினி ஜுவாலைகளால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் தேசங்கள் ஏற்கனவே வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், யெகோவாவாகிய நான், யூத கோத்திரத்தார் மத்தியில் ஒருமுறை நடந்ததைப் போல, நான் சுட்டெரிக்கும் சூரியனாகப் புதிதாக மனிதகுலத்திற்கு வெளிப்படுவேன், அவர்கள் இதுவரை கண்டிராத பரிசுத்தவானின் சாயலில் என்னை வெளிப்படையாகக் காண்பிப்பேன். அப்போதிருந்து, நான் பூமியில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவேன். அங்கே அவர்கள் நிச்சயமாக என் மகிமையை காண்பார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த அவர்கள் காற்றில் அக்கினிஸ்தம்பத்தையும் நிச்சயம் காண்பார்கள், ஏனென்றால் நான் பரிசுத்த ஸ்தலங்களில் பிரசன்னம் செய்வேன். மனிதன் என் நீதியின் நாளையும், எனது மகிமையான வெளிப்பாட்டையும் காண்பான். நான் பூமியெங்கும் ஆட்சி செய்யும் போதும், எனது பல மகன்களை மகிமைப்படுத்தும்போதும் அது நடக்கும். பூமியில் எங்கும், மனிதர்கள் வணங்குவார்கள், மற்றும் இன்று நான் மேற்கொள்ளும் கிரியையின் பாறை மீது, மனிதகுலத்தின் மத்தியில் எனது ஆசரிப்புக்கூடாரம் உறுதியாக கட்டப்படும். ஆலயத்திலும் மக்கள் எனக்குச் சேவை செய்வார்கள். அழுக்கானவற்றாலும் ஆரோசிகமானவற்றாலும் மூடியிருக்கும் பலிபீடத்தைத் துண்டுகளாக நொறுக்கி புதிதாகக் கட்டுவேன். புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டிகளும் கன்றுகளும் புனித பலிபீடத்தின் மீது குவிக்கப்படும். நான் இன்றைய ஆலயத்தை இடித்து, புதிதாக ஒன்றைக் கட்டுவேன். இப்போது வெறுக்கத்தக்க ஜனங்கள் நிறைந்து, நின்று கொண்டிருக்கும் ஆலயம், இடிந்து விழும், மற்றும் நான் கட்டும் ஆலயம் எனக்கு விசுவாசமுள்ள வேலைக்காரர்களால் நிரப்பப்படும். எனது ஆலயத்தின் மகிமைக்காக அவர்கள் மீண்டும் எழுந்து எனக்குச் சேவை செய்வார்கள். நான் மிகுந்த மகிமையைப் பெறும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள், நான் இடித்து புதிய ஒன்றைக் கட்டும் நாளையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். மேலும், எனது ஆசரிப்புக் கூடாரம் மனிதர்களின் உலகத்திற்கு வரும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். நான் ஆலயத்தை நொறுக்கும்போது, அவர்கள் எனது வம்சாவளியைக் காணுமாறு எனது கூடாரத்தை மனிதர்களின் உலகிற்கு கொண்டு வருவேன். நான் எல்லாத் தேசங்களையும் சுக்குநூறாக்கிய பின், நான் அவர்களை புதிதாக ஒன்றுதிரட்டி, எல்லோரும் எனக்குப் பலியிடுவதற்கும், எனது ஆலயத்தில் எனக்குச் சேவை செய்வதற்கும், புறஜாதியார் தேசங்களில் எனது கிரியைக்கு உண்மையாக அர்ப்பணிப்பதற்கும் அங்கிருந்து எனது ஆலயத்தைக் கட்டி, எனது பலிபீடத்தை ஸ்தாபிப்பேன். அவர்கள் இன்றைய இஸ்ரவேலர்களைப் போல இருப்பார்கள், ஒரு ஆசாரிய அங்கி மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள், அவர்கள் மத்தியில் யெகோவாவாகிய எனது மகிமை இருக்கும் மற்றும் எனது கம்பீரம் அவர்கள்மீது வட்டமிட்டு அவர்களுடன் நிலைத்திருக்கும். புறஜாதியார் நாடுகளிலும் எனது கிரியைகள் அதே வழியில் செயல்படுத்தப்படும். இஸ்ரவேலில் எனது கிரியை இருந்ததைப் போலவே, புறஜாதியார் தேசங்களிலும் எனது கிரியை இருக்கும், ஏனென்றால் நான் இஸ்ரவேலில் என் வேலையை விரிவுபடுத்தி புறஜாதியாரின் தேசங்களுக்குப் பரப்புவேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 219

இப்போது எனது ஆவி மாபெரும் கிரியையைச் செய்கிற நேரம், புறஜாதியார் தேசங்களிடையே நான் எனது வேலையைத் தொடங்கும் நேரம். அதற்கும் மேலாக, எனது கிரியை இன்னும் விரைவாகவும் திறமையாகவும் தொடரக்கூடும் என்பதற்காக என்னால் சிருஷ்டிக்கப்பட்ட அனைவரையும் வகைப்படுத்தும் நேரம் இது. எனவே, நீ எனது கிரியை அனைத்திற்கும் முழுமையாக நான் உங்களியம் கேட்பயதெல்லாம் என்னவென்றால், உன்னை ஒப்புக்கொடு, மேலும், நான் உன்னில் செய்த எல்லா கிரியைகளையும் தெளிவாக உணர்ந்து உறுதிப்படுத்திக் கொள், மற்றும் உனது எல்லா வல்லமையையும் எனது கிரியையில் செலுத்து, இதனால் அது மிகவும் திறமிக்கதாக மாறும். இதைத்தான் நீ புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் சண்டையிடுவதைத் தவிர்ப்பது, திரும்பிச் செல்வதற்கான வழியைத் தேடுவது, அல்லது மாம்ச சுகங்களை நாடுவது எனது கிரியையைத் தாமதப்படுத்தும், மற்றும் உனது அற்புதமான எதிர்காலத்தை தாமதப்படுத்தும். உன்னை பாதுகாப்பதற்குப் பதிலாக, அவ்வாறு செய்வது உனக்கு அழிவை ஏற்படுத்தும். இது உன் முட்டாள்தனமாக இருக்காதா? இன்று நீ பேராசையுடன் அனுபவிப்பது உன் எதிர்காலத்தை அழித்துவிடும் முக்கிய விஷயமாக இருக்கும், அதேசமயம் நீ இன்று அனுபவிக்கும் வேதனையே உன்னைப் பாதுகாக்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது. இச்சைகளுக்கு இரையாகிவிடாமல் இருக்க, உன்னை நீயே விடுவித்துக் கொள்ள மற்றும் அடர்ந்த மூடு பனிக்குள் தவறாக சென்று, சூரியனைக் கண்டுபிடிக்க இயலாமல் போவது போலன்றி நீ இந்த விஷயங்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அடர்ந்த மூடுபனி தெளிவானால், மகாநாளின் நியாயத்தீர்ப்பின் மத்தியில் நீ உன்னைக் காண்பாய். அதற்குள், எனது நாள் மனித இனத்தை நெருங்குகிறது. எனது தீர்ப்பிலிருந்து நீ எவ்வாறு தப்புவாய்? சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தை உன்னால் எவ்வாறு தாங்க முடியும்? நான் எனது நிறைவை மனிதனுக்கு அளிக்கும்போது, அவன் அதை தனது நெஞ்சத்தில் போற்றாமல், அதை யாரும் கவனிக்காத இடத்தில் ஒதுக்கி வைக்கிறான். எனது நாள் மனிதனின் மீது இறங்கும்போது, அவனால் இனி என் மிகுதியைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது நான் அவனிடம் நீண்ட காலத்திற்கு முன்பு பேசிய சத்தியத்தின் கசப்பான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் ஒளியின் பிரகாசத்தை இழந்து, இருளில் விழுந்ததால் அவன் அழுவான். இன்று நீங்கள் பார்ப்பது எனது வாயின் கூர்மையான பட்டயத்தை மட்டுமே. எனது கரத்தில் உள்ள தடியையோ அல்லது நான் மனிதனை எரிக்கும் ஜுவாலையையோ நீங்கள் பார்த்ததில்லை, அதனால்தான் நீங்கள் இன்னும் பெருமிதம் கொள்கிறீர்கள், எனது முன்னிலையில் விரோதமாயும் மட்டுமீறியும் இருக்கிறீர்கள். அதனால்தான், நீங்கள் இன்னும் எனது வீட்டில் என்னுடன் சண்டையிடுகிறீர்கள், நான் எனது வாயால் பேசியதை உங்கள் மனித நாவால் மறுக்கிறீர்கள். மனிதன் எனக்கு அஞ்சமாட்டான், அவன் இன்றும் என்னிடம் தொடர்ந்து பகைமையைக் காட்டுகிறான் என்றாலும், அவன் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறான். உங்கள் வாய்களில் அநியாயக்காரர்களின் நாவும் பற்களும் உள்ளன. உங்கள் சொற்களும் செயல்களும் ஏவாளை பாவத்திற்கு தூண்டிய சர்ப்பத்தைப் போன்றவை. நீங்கள் ஒருவருக்கொருவர் கண்ணுக்கு கண் மற்றும் பல்லுக்குப் பல்லைக் கேட்கிறீர்கள், அந்தஸ்து, புகழ் மற்றும் லாபத்தை நீங்களே கைப்பற்றுவதற்காக என் முன்னிலையில் நீங்கள் போராடுகிறீர்கள், ஆனாலும் நான் உங்கள் சொற்களையும் கிரியைகளையும் இரகசியமாகப் பார்க்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எனது முன்னிலையில் வருவதற்கு முன்பே, உங்கள் இதயங்களின் அடியில் நான் ஒலித்தேன். மனிதன் எப்போதுமே எனது கரத்தின் பிடியில் இருந்து தப்பித்து என்னால் கவனிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறான், ஆனால் நான் ஒருபோதும் அவனுடைய வார்த்தைகளிலிருந்தோ கிரியைகளிலிருந்தோ விலகிச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, அந்த வார்த்தைகளையும் செயல்களையும் எனது கண்களுக்குள் நுழைய நான் வேண்டுமென்றே அனுமதிக்கிறேன், நான் மனிதனின் அநீதியை தண்டிக்கக்கூடும், அவனுடைய இரண்டகம் பண்ணுதலின் மீது தீர்ப்பை வழங்கக்கூடும். ஆகவே, மனிதனின் வார்த்தைகளும் கிரியைகளும் இரகசியமாக எனது தீர்ப்பு இருக்கைக்கு முன் உள்ளன, எனது தீர்ப்பு மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ஏனென்றால் அவன் மிகவும் அதிகமாக இரண்டகம் பண்ணுகிறான். எனது ஆன்மாவின் முன்னிலையில் மனிதனால் சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளையும் மற்றும் செய்யப்பட்ட செயல்களையும் எரித்து சுத்திகரிப்பது எனது வேலை. இந்த வழியில்,[அ] நான் பூமியை விட்டுச் செல்லும்போது, மக்கள் இன்னும் என்னிடம் விசுவாசத்தைக் கடைபிடிப்பார்கள், மற்றும் எனது பரிசுத்த வேலைக்காரர்கள் எனது கிரியையில் செய்வது போலவே எனக்கு சேவை செய்வார்கள், பூமியில் எனது கிரியை முடியும் நாள் வரை எனது கிரியையைத் தொடர அனுமதிப்பார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “இந்த வழியில்” என்ற சொற்றொடர் இல்லை.

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 220

இந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் தேவன் செய்யப்போகும் கிரியை என்னவென்று பார்த்திருக்கிறீர்களா? தேவன், ஆயிரம் வருட அரசாட்சியிலும் கூட ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருமுறை சொன்னார். எதிர்காலத்தில், நல்ல கானான் தேசத்திலுள்ள மனிதனுடைய ஜீவிதத்தை, தேவனுடைய வார்த்தைகள் நேரடியாக வழிநடத்தும். மோசே வனாந்தரத்தில் இருந்தபோது, தேவன் அவனிடம் நேரடியாக அறிவுறுத்தினார், பேசினார். தேவன் ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிப்பதற்கு ஆகாரம், தண்ணீர் மற்றும் மன்னாவை பரலோகத்திலிருந்து அனுப்பினார், இன்றும் அவ்வாறு: ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிக்கவும் குடிக்கவும் வேண்டியவற்றை தேவன் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார். ஜனங்களை சிட்சிப்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் சாபங்களை அனுப்பியுள்ளார். எனவே, அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது. இன்று, ஜனங்கள் உண்மைகளின் நிகழ்வைத் தேடுகிறார்கள், அவர்கள் அடையாளங்களையும் அதிசயங்களையும் நாடுகிறார்கள் மற்றும் இதுபோன்றவர்கள் அனைவரும் தூக்கி எறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது ஏனென்றால், தேவனுடைய கிரியையானது அதிகமாக நடைமுறைக்கு மாறி வருகிறது. தேவன் பரலோகத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. தேவன் ஆகாரத்தையும் ரசத்தையும் வானத்திலிருந்து அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், தேவன் உண்மையில் இருக்கிறார், ஜனங்கள் கற்பனை செய்யும் ஆயிரம் வருட அரசாட்சி எழும்பும் காட்சிகளும் தேவனுடைய தனிப்பட்ட வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இது உண்மையாகும் மற்றும் இது தான் தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது என்று அழைக்கப்படுகிறது. தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது மாம்சத்தைக் குறிக்கிறது. மாம்சமாக இல்லாதவை பூமியில் இல்லை. இதனால் மூன்றாம் பரலோகத்திற்குச் செல்வதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் வீணாக கவனம் செலுத்துகிறார்கள். ஒரு நாள், முழு உலகமும் தேவனிடம் திரும்பும் போது, உலகம் முழுவதுமான அவருடைய கிரியையின் மையம் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றும். மற்ற இடங்களில், சிலர் தொலைபேசியைப் பயன்படுத்துவார்கள், சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் படகில் கடல் கடந்து செல்வார்கள் மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் பெற ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் வணங்குவார்கள், மற்றும் ஆவலுடன் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தேவனிடம் நெருங்கி வருவார்கள், தேவனை நோக்கி கூடிவருவார்கள். அனைவரும் தேவனை வணங்குவார்கள். இவை அனைத்தும் தேவனுடைய செயல்களாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியில் தன்னை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் உண்மையான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை வணங்கினார்கள் ஏனென்றால், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் உண்மையான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர். ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள். தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் மகிமைப்படுத்தப்படும் காலமாக அது இருக்கும்: உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனங்களும் இந்த குறிப்பிட்டு சொல்ல முடியாத “மனிதனை” வணங்குவார்கள். அது தேவனுடைய மகிமையின் நாளாக இருக்காதா? ஒரு நாள், பழைய மேய்ப்பர்கள் ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து தண்ணீரைத் தேடி தந்திகளை அனுப்புவார்கள். அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனாலும் தாங்கள் இகழ்ந்த அந்த நபரை வணங்க அவர்கள் வருவார்கள். அவர்கள் தங்கள் வாயால் அவரை ஒப்புக்கொள்வார்கள், மனதால் அவரை நம்புவார்கள்—இது ஒரு அடையாளமும் ஆச்சரியமும் அல்லவா? முழு ராஜ்யமும் சந்தோஷப்படும் நாள் தேவனுடைய மகிமையின் நாளாக இருக்கும். உங்களிடம் வந்து தேவனுடைய நற்செய்தியைப் பெறுபவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார். அவ்வாறு செய்யும் நாடுகளும் ஜனங்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். எதிர்காலத்தின் பாதை இவ்வாறு இருக்கும்: தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளைப் பெறுபவர்களுக்கு பூமியில் நடக்க ஒரு பாதை இருக்கும் மற்றும்அவர்கள் வணிகர்களாக அல்லது விஞ்ஞானிகளாக, அல்லது கல்வியாளர்களாக அல்லது தொழிலதிபர்களாக இருப்பார்கள், தேவனுடைய வார்த்தைகளைப் பெறாதவர்களுக்கு ஒரு அடி கூட எடுத்து வைப்பது கடினமானதாக இருக்கும் மற்றும் அவர்கள் உண்மையான வழியை நாட கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், “சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது.” உண்மைகள் பின்வருமாறு உள்ளது: தேவன் முழு பிரபஞ்சத்திற்கும் கட்டளையிட மற்றும் மனிதகுலத்தை ஆள, ஜெயம்கொள்ள இந்த வழியைப் (அதாவது அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் குறிக்கிறது) பயன்படுத்துவார். தேவன் செயல்படும் வழிமுறைகளில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக ஜனங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். தெளிவாக சொல்வதானால், தேவன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவது வார்த்தைகளின் மூலம் தான். நீ விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவர் சொல்வதை நீ செய்ய வேண்டும். இது ஒரு புறநிலையான உண்மையாகும். எல்லோராலும் கீழ்ப்படியப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இது தவிர்க்கமுடியாததும், எல்லோருக்கும் தெரிந்ததும் ஆகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 221

தேவனுடைய வார்த்தைகள் எண்ணற்ற வீடுகளில் பரவுகின்றன. அனைவரும் அவற்றை அறிந்திருப்பார்கள் மற்றும்அப்போது தான் அவருடைய கிரியை உலகம் முழுவதும் பரவும். அதாவது, தேவனுடைய கிரியை முழு உலகத்திலும் பரவ வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகள் பரப்பப்பட வேண்டும். தேவனுடைய மகிமையின் நாளில், தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் வல்லமையையும் அதிகாரத்தையும் காண்பிக்கும். ஆதிகாலம் முதல் இன்று வரை சொல்லப்பட்ட அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும், அது நடக்கும். இவ்வாறு, பூமியில் தேவனுக்கு மகிமை இருக்கும்—அதாவது, அவருடைய வார்த்தைகள் பூமியில் ஆட்சி செய்யும். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் துன்மார்க்கர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் அனைவரும் அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையடைவார்கள். அவர் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்த மாட்டார். அவருடைய வார்த்தைகளால் அனைத்தும் நிறைவேறும். அவருடைய வார்த்தைகள் உண்மைகளைத் தரும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளை கொண்டாடுவார்கள். அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண், பெண், வயதானவர்கள் அல்லது இளைஞர்கள் என யாராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மாம்சத்தில் வெளிப்படும், பூமியிலுள்ள ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது. இதுவே வார்த்தை மாம்சமாக மாறுவதன் பொருள் ஆகும். “வார்த்தை மாம்சமாக மாறுகிறது” என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார். அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல அல்ல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும். ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய அவதாரத்தின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. இதுதான் “வார்த்தை மாம்சமாக மாறும்” மற்றும் “மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்” என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தை பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாக பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் தேவனில் அவதரித்தன. மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விலக்கு இல்லை. அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த வார்த்தைகளிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு விழிப்புணர்வு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து வார்த்தைகளைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மாம்ச அவதாரத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மத மேய்ப்பர்கள் கூட இந்த வார்த்தைகளை பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றை தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மாம்ச ரூபத்தினால் அல்ல. ஆனால், தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் மாம்சமாக மாறுவார். இந்த வார்த்தை மாம்சமாக மாறும். இது மாம்சத்திலுள்ள வார்த்தையின் தோற்றம் மட்டுமே. ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிக கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்கு பயப்படுவார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால் அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார். ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியிலுள்ள வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும். உண்மையில், நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆயிர வருட அரசாட்சியின் வருகையானது பூமியில் தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். பரலோகத்திலிருந்து வந்த புதிய எருசலேமானது, மனிதர்களிடையே ஜீவிக்கவும், மனிதனுடைய ஒவ்வொரு செயலுடனும், அவனது உள்ளார்ந்த எண்ணங்களுடன் ஜீவிக்கவும் வந்த தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். இது தேவன் நிறைவேற்றும் ஒரு உண்மை ஆகும். இதுவே ஆயிர வருட அரசாட்சியின் அழகு ஆகும். இது தேவன் வகுத்த திட்டம் ஆகும்: அவருடைய வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் தோன்றும். அவை அவருடைய செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதோடு, பூமியில் அவர் செய்த எல்லா கிரியைகளையும் நிறைவு செய்யும். அதன் பிறகு மனிதகுலத்தின் இந்த நிலை முடிவுக்கு வரும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 224

ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கும் போது—இது ஏழு இடி முழங்கும்போதும் கூட—இந்த ஒலி வானத்தையும் பூமியையும் தூண்டி, பரலோகத்தை உலுக்கி, ஒவ்வொரு மனுஷனின் இருதய துடிப்புகளையும் அதிர்வுற செய்கிறது. நான் அந்த தேசத்தை அழித்து என் ராஜ்யத்தை ஏற்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் ராஜ்யத்திற்கான கீதம் சடங்குடன் எழும்புகிறது. அதைவிட முக்கியமாக, என் ராஜ்யம் பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், நான் என் தேவதூதர்களை உலகத்து தேசங்கள் ஒவ்வொன்றிற்கும் அனுப்பத் தொடங்குகிறேன், இதனால் அவர்கள் என் புத்திரர்களையும், என் ஜனங்களையும் மேய்ப்பார்கள்; இது எனது கிரியையின் அடுத்த கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமாகும். இருப்பினும், நான் தனிப்பட்ட முறையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டிருக்கும் இடத்திற்குச் சென்று, அதனுடன் போட்டியிடுகிறேன். மனுஷர் அனைவருமே என்னை மாம்சத்தில் அறிந்துகொண்டு, என் செயல்களை மாம்சத்தில் காண முடிந்தால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை சாம்பலாக மாறி ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடும். என் ராஜ்யத்தின் ஜனங்களாகிய நீங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெறுப்பதால், உங்கள் செயல்களால் நீங்கள் என் இருதயத்தை திருப்திப்படுத்த வேண்டும், இந்த வழியில் வலுசர்ப்பத்திற்கு அவமானத்தை தரவேண்டும். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வெறுக்கத்தக்கது என்பதை நீங்கள் உண்மையாக உணர்கிறீர்களா? அதுவே ராஜ்யத்தை ஆளும் ராஜாவின் எதிரி என்று நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்களா? நீங்கள் எனக்கு அற்புதமாக சாட்சிக்கொடுக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை தோற்கடிக்க முடியும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்; இந்த படிநிலையை நீங்கள் அடைய வேண்டும் என்பதே என் தேவையாயிருக்கிறது. இதை உங்களால் செய்ய முடியுமா? இதை உங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? மனுஷரால் சரியாக செய்யக் கூடிய விஷயம் தான் என்ன? அதை என்னால் செய்ய முடியும் அல்லவா? யுத்தம் இணையும் இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் இறங்குகிறேன் என்று நான் ஏன் கூறுகிறேன்? நான் விரும்புவது உங்கள் நம்பிக்கையை தான், உங்கள் கிரியைகளை அல்ல. மனுஷர் அனைவரும் என் வார்த்தைகளை நேரடியாக ஏற்றுக்கொள்ள இயலாது, அதற்குப் பதிலாக ஒரு பக்கவாட்டுப் பார்வையை அவற்றிடம் காட்டுங்கள். உங்கள் இலக்குகளை அடைய இது உங்களுக்கு உதவுகிறதா? இந்த வழியில் நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்களா? உண்மையைச் சொல்வதானால், பூமியிலுள்ள மனுஷரில், ஒருவருக்குக் கூட என்னை நேருக்கு நேர் பார்க்கும் திறன் இல்லை, மேலும் ஒருவரால் கூட என் வார்த்தைகளின் தூய்மையான மற்றும் கலப்படமற்ற அர்த்தத்தை பெற முடியாது. ஆகவே, எனது குறிக்கோள்களை அடைவதற்கும், ஜனங்களின் இருதயங்களில் என் உண்மையான பிம்பத்தை நிலைநிறுத்துவதற்கும் பூமியில் முன்னோடியில்லாத ஒரு திட்டத்தை நான் ஏற்படுத்தியுள்ளேன். இந்த வழியில், கருத்துக்கள் ஜனங்கள் மீது அதிகாரம் செலுத்தும் சகாப்தத்தை நான் முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

இன்று, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் நான் இறங்குவது மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறேன், இது முழு பரலோகத்தை நடுங்க வைக்கிறது. எனது நியாயத்தீர்ப்புக்கு உட்படாத ஒரு இடம் ஏதேனும் உள்ளதா? நான் பேரழிவு மழையை பொழியாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? நான் செல்லும் எல்லா இடங்களிலும், எல்லா வகையான “பேரழிவின் விதைகளையும்” சிதறடிக்கிறேன். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான். இன்னும் பல ஜனங்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் என்னைப் பார்க்கவும் அனுமதிக்க நான் விரும்புகிறேன், இந்த வழியில், பல ஆண்டுகளாக பார்க்க முடியாத ஆனால் இப்போது மெய்யாகவே பார்க்க முடிகிற ஒரு தேவனைப் போற்றுவதற்காக வாருங்கள். எந்த காரணத்திற்காக நான் உலகை உருவாக்கினேன்? மனுஷர் சீர்கெட்டபின்பும், நான் ஏன் அவர்களை முற்றிலுமாக அழிக்கவில்லை? எந்த காரணத்திற்காக மனுஷ இனம் முழுவதும் பேரழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறது? மாம்சத்தை அணிவதற்கான என் நோக்கம் என்ன? நான் எனது கிரியையைச் செய்யும்போது, கசப்பு மட்டுமல்ல, இனிப்பு சுவையையும் கூட மனுஷர் கற்றுக்கொள்கிறார்கள். உலகில் உள்ள எல்லா மனுஷரிலும், என் கிருபையினுள் வாழாதவர் யார்? நான் மனுஷருக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை வழங்கவில்லை என்றால், உலகில் யார் ஏராளமாக அனுபவிக்க முடியும்? உங்களை என் ஜனங்களின் இடத்தைப் பிடிக்க அனுமதிப்பது ஒரு ஆசீர்வாதமாக இருக்க முடியுமா? நீங்கள் என் ஜனங்கள் அல்ல, மாறாக கிரியை செய்பவர்கள் மட்டுமே என்று இருந்தால் என் ஆசீர்வாதங்களுக்குள் நீங்கள் இருக்க மாட்டீர்களா? என் வார்த்தைகளின் தோற்றத்தை உங்களில் ஒருவர் கூட புரிந்து கொள்ள முடியாது. மனுஷர்—நான் அவர்களுக்கு வழங்கிய மகுடங்களைப் பொக்கிஷமாகக் கருதுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள், அவர்களில் அநேகர், “சேவை செய்பவர்” என்ற மகுடத்தின் காரணமாக, அவர்களின் இருதயங்களில் மனக்கசப்பை போஷிக்கிறார்கள், மற்றும் அநேகர், “என் ஜனங்கள்,” என்ற மகுடத்தின் காரணமாக அவர்களுடைய இருதயங்களில் எனக்கான அன்பை வளர்த்துக் கொள்கிறார்கள். என்னை முட்டாளாக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; என் கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன! உங்களில் யார் விருப்பத்துடன் பெறுகிறார்கள், உங்களில் யார் முழுமையான கீழ்ப்படிதலைக் கொடுக்கிறார்கள்? ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கவில்லை என்றால், உங்களால் மெய்யாகவே முடிவுக்கு கீழ்படிந்திருக்க முடியுமா? மனுஷரால் என்ன செய்ய முடியும், எந்தளவிற்கு சிந்திக்க வல்லவர்கள் மற்றும் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்—இவை அனைத்தையும் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்மானித்துவிட்டேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 10” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 226

நான் பூமியில் என் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன், என் கிரியையை அதன் முழுப்பரப்பிலுமாக விரிவுபடுத்துகிறேன். என் கிரியையில் உள்ள அனைத்தும் பூமியின் மேல் பிரதிபலிக்கின்றன; பூமியில் உள்ள மனிதகுலம் ஒருபோதும், பரலோகத்தில் என் அசைவுகளைப் புரிந்துகொள்ளவோ, என் ஆவியின் சுற்றுப்பாதைகள் மற்றும் எறி பாதைகளை முழுமையாகச் சிந்திக்கவோ முடியாது. ஆவியின் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆவிக்கு வெளியே இருக்கும் இம்மியளவை மட்டுமே மனிதர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்கிறார்கள். நான் மனிதர்களிடம் செய்யும் கோரிக்கைகள் பரலோகத்தில் உள்ள என் தெளிவற்ற சுயத்திலிருந்தோ அல்லது நான் பூமியில் இருக்கிறேன் என்பதால் சிந்தித்து புரிந்துகொள்ள முடியாத சுயத்திலிருந்தோ வெளிவரவில்லை; பூமியில் மனிதனின் அந்தஸ்துக்கு ஏற்பப் பொருத்தமானகோரிக்கைகளை நான் வைக்கிறேன். நான் ஒருபோதும் யாரையும் சிரமத்திற்கு உள்ளாக்கவில்லை, என் இன்பத்திற்காக “அவனுடைய இரத்தத்தைப் பிழியும்படி” நான் யாரையும் கேட்டதில்லை—எனது கோரிக்கைகள் அத்தகைய நிலைமைகளுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட முடியுமா? பூமியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களில், என் வாயிலுள்ள வார்த்தைகளின் மனப்பாண்மைக்கு அடிபணியாதவர் யார்? எனக்கு முன்னால் வரும் இந்த உயிரினங்களில், என் வார்த்தைகளாலும் என் எரியும் நெருப்பினாலும் முழுமையாக எரிக்கப்படாதது எது? இந்த உயிரினங்களில் எனக்கு முன்பாகப் பெருமிதத்துடனும் சந்தோஷமாகவும் சுற்றிவரத் தைரியம் கொண்டது எது? இந்த உயிரினங்களில் எனக்கு முன் தலைவணங்காதது எது? நான் சிருஷ்டியின் மீது அமைதியைச் சுமத்தும் தேவனா? சிருஷ்டியில் உள்ள எண்ணற்ற விஷயங்களில், என் நோக்கத்தைப் பூர்த்திசெய்பவற்றை நான் தேர்வு செய்கிறேன்; மனிதகுலத்தின் எண்ணற்ற மனிதர்களில், என் இருதயத்தின்மீது அக்கறை கொள்பவர்களை நான் தேர்வு செய்கிறேன். எல்லா நட்சத்திரங்களிலும் சிறந்ததை நான் தேர்வு செய்கிறேன், இதன்மூலம் என் ராஜ்யத்திற்கு ஒரு மங்கலான வெளிச்சத்தைச் சேர்க்கிறேன். நான் பூமியில் நடந்து செல்கிறேன், என் நறுமணத்தை எல்லா இடங்களிலும் விநியோகிக்கிறேன், ஒவ்வொரு இடத்திலும், என் வடிவத்தை விட்டு வைக்கிறேன். ஒவ்வொரு இடமும் என் குரலின் ஒலியால் எதிரொலிக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் நேற்றைய அழகிய காட்சிகளின் நினைவுகள் அகலாது இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களும் கடந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள் …

எல்லா மனிதர்களும் என் முகத்தைக் காண ஏங்குகிறார்கள், ஆனால் நான் நேரில் வந்து பூமியில் இறங்கும்போது, அவர்கள் அனைவரும் என் வருகையை வெறுக்கிறார்கள். மேலும், நான் பரலோகத்தில் இருக்கும் மனிதனின் எதிரி என்பது போலக் கருதி அவர்கள் வெளிச்சத்தின் வருகையைத் தடுக்கிறார்கள். மனிதன் தனது கண்களில் ஒரு பாதுகாப்பு வெளிச்சத்துடன் என்னை வரவேற்கிறான், தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறான், அவனுக்காக நான் வேறு திட்டங்களை வைத்திருக்கலாம் என்று ஆழ்ந்த பயம் கொள்கிறான். மனிதர்கள் என்னை அறிமுகமில்லாத நண்பராகக் கருதுவதால், கண்மூடித்தனமாக அவர்களை கொல்லும் நோக்கத்தை நான் வைத்திருப்பதைப் போல அவர்கள் உணர்கிறார்கள். மனிதனின் பார்வையில், நான் ஒரு கொடிய எதிரி. பேரழிவின் மத்தியில் என் அரவணைப்பை ருசித்தபின், இருந்தபோதிலும் மனிதன் என் அன்பைப் பற்றி அறியாமல் இருக்கிறான், இன்னும் என்னைக் கவனிக்கவும் என்னை மீறுவதற்கும் நோக்கம் கொண்டுள்ளான். அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவனது நிலையைபயன்படுத்திக் கொள்ளாமல், நான் மனிதனை அரவணைத்து, வாயை இனிமையால் நிரப்பினேன், தேவையான உணவை வயிற்றில் இட்டேன். ஆனால், நான் கடுங்கோபத்துடன் வெகுண்டு மலைகளையும் நதிகளையும் உலுக்கும்போது, மனிதனின் கோழைத்தனத்தின் காரணமாக நான் இனிமேல் அவனுக்கு இந்த வெவ்வேறு வகையான உதவிகளை வழங்கமாட்டேன். இந்தத் தருணத்தில், என் ஆவேசம் அதிகரிக்கும், எல்லா உயிரினங்களுக்கும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பை மறுத்து, மனிதனுக்கான எனது எல்லா நம்பிக்கையையும் கைவிட்டு, அவனுக்கு மிகவும் தகுதியான தண்டனையை நிறைவேற்றுவேன். இந்த நேரத்தில், கடலில் அலைகள் கோபத்தில் பொங்கி எழுவது போல, பல்லாயிரக்கணக்கான மலைகள் கீழே விழுந்து நொறுங்குவது போல இடி இடிக்கும் மற்றும் மின்னல் வெட்டும். அவனது கிளர்ச்சி செய்யும் மனப்பான்மை காரணமாக, மனிதன் இடி மற்றும் மின்னலால் வீழ்த்தப்படுகிறான், மற்ற உயிரினங்கள் இடி மற்றும் மின்னலின் சிதறலில் அழிக்கப்படுகின்றன, மேலும் பிரபஞ்சம் முழுவதும் திடீரெனக் குழப்பத்தில் ஆழ்கிறது, மேலும் சிருஷ்டியால் ஆரம்பக்கால ஜீவனை மீட்டெடுக்க முடியவில்லை. மனிதர்களின் எண்ணற்ற ஆதரவாளர்கள் இடியின் கர்ஜனையிலிருந்து தப்ப முடியாது; பளிச்சிடும் மின்னல்களுக்கு நடுவே, மனிதர்கள், கூட்டம் கூட்டமாகத் திரண்டு, விரைவான ஓட்டத்தில் கவிழ்ந்து, மலைகளிலிருந்து கீழே விழும் கடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள். திடீரென்று, “மனிதர்களின்” உலகம் மனிதனின் “இலக்குடன்” ஒன்று சேர்கிறது. கடலின் மேற்பரப்பில் சடலங்கள் மிதக்கின்றன. என் கடுங்கோபத்தின் காரணமாக மனிதர்கள் அனைவரும் என்னிடமிருந்து வெகுதொலைவாக செல்கிறார்கள், ஏனென்றால் மனிதன் என் ஆவியின் சாரத்திற்கு எதிராகப் பாவம் செய்தான், அவனுடைய கிளர்ச்சி என்னைப் புண்படுத்தியது. ஆனால், தண்ணீர் இல்லாத இடங்களில், நான் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளால், சிரிப்புக்கும் பாடலுக்கும் இடையில், மற்ற மனிதர்கள் இன்னும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.

எல்லா மக்களும் அமைதியாக இருக்கும்போது, நான் அவர்களின் கண்களுக்கு முன்பாக வெளிச்சத்தின் மினுமினுப்பை வெளியிடுகிறேன். அதன்பிறகு, மனிதர்கள் மனதில் தெளிவாகவும், கண் பிரகாசமாகவும் இருப்பார்கள், இனி அமைதியாக இருக்க விரும்பமாட்டார்கள்; இதனால், ஆவியானவருடைய உணர்வு உடனடியாக அவர்களின் இதயங்களில் வரவழைக்கப்படுகிறது. இது நடக்கும்போது, எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். நான் பிரகடனம் செய்யும் வார்த்தைகளின் மூலம் உயிர்வாழ மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளதால், அவர்களது சொல்லொண்ணா துயரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வருகிறார்கள். இது ஏனென்றால், மனிதர்கள் அனைவரும் பூமியின் மீது வாழ விரும்புகிறார்கள். ஆயினும் அவர்களில் என் பொருட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் யார்? என் இன்பத்திற்காக அவன் அளிக்கும், அவனிடம் உள்ள அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்தவர் அவர்களில் யார்? அவர்களில் எனது வயப்படுத்தும் வாசனையை எப்போதாவது கண்டுபிடித்தவர் யார்? எல்லா மனிதர்களும் கரடுமுரடான மற்றும் சுத்திகரிக்கப்படாத ஜீவன்கள்: வெளியில், அவர்களது கண்கள் பளபளப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அவற்றின் சாராம்சம் என்னை நேர்மையாக நேசிப்பதல்ல, ஏனென்றால், மனித இருதயத்தின் ஆழமான இடுக்குகளில், என்னுடைய எந்த ஒரு கூறுகளும் இருந்ததில்லை. மனிதனுக்கு இது மிகவும் போதாது: அவனை என்னுடன் ஒப்பிடுவது வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான அளவுக்கு ஒரு பெரிய இடைவெளியைக் காட்டுகிறது. அப்படியிருந்தும், நான் மனிதனின் பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களை தாக்கவில்லை, அல்லது அவனுடைய குறைபாடுகளின் காரணமாக அவனை நான் எள்ளி நகையாடவில்லை. என் கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியை செய்கின்றன, எல்லா நேரங்களிலும், என் கண்கள் மனிதர்கள் அனைவரையும் கண்காணித்து வருகின்றன. ஆயினும்கூட, நான் எந்தவொரு மனித வாழ்க்கையையும் சாதாரணமாக, ஒரு பொம்மைபோல நினைத்து விளையாடுவதற்கு எடுத்துக்கொள்ளவில்லை. மனிதன் எடுத்துக் கொண்ட சிரமங்களை நான் அவதானிக்கிறேன், அவன் செலுத்திய கிரயத்தைப் புரிந்துகொள்கிறேன். அவன் என் முன்பாக நிற்கும்போது, அவன் தயாராக இல்லாதபோது அவனுக்குச் சிட்சையளிக்க திடீரென்று பிடிக்க நான் விரும்பவில்லை, அல்லது விரும்பத் தகாத விஷயங்களை அவனுக்கு வழங்கவும் நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, இவ்வளவு நாட்களும், நான் மனிதனுக்கு மட்டுமே வழங்கினேன், அவனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன். எனவே, மனிதன் என் கிருபையை அனுபவிக்கிறான், அவன் பெறும் அனைத்தும் என் கையிலிருந்து வரும் பொக்கிஷங்கள். நான் பூமியில் இருப்பதால், மனிதன் ஒருபோதும் பசியின் வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை. மாறாக, மனிதன் அனுபவிக்கக்கூடிய பொருட்களை என் கைகளிலிருந்து பெற நான் அனுமதிக்கிறேன், என் ஆசீர்வாதங்களுக்குள் மனிதகுலம் வாழ நான் அனுமதிக்கிறேன். எல்லா மனிதர்களும் என் சிட்சையின் கீழ் வாழவில்லையா? மலைகளின் கீழே ஆழத்தில் வளங்களும், தண்ணீரில் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாகவும் இருப்பதைப் போல, இன்று என் வார்த்தைகளுக்குள் வாழும் மக்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பாராட்டவும் சுவைக்கவும் உணவு இல்லையா? நான் பூமியில் இருக்கிறேன், மனிதகுலம் பூமியில் என் ஆசீர்வாதங்களைப் பெறுகிறது. நான் பூமியை விட்டு வெளியேறும்போது, அந்த நேரத்தில் எனது கிரியையும் நிறைவடையும், மனிதகுலம் அவர்களின் பலவீனத்தின் காரணமாக இனி என் தலையீட்டைப் பெற மாட்டார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 17” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 227

சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நீங்கள் உண்மையிலேயே வெறுக்கிறீர்களா? நீங்கள் மெய்யாகவே, உண்மையிலேயே அதை வெறுக்கிறீர்களா? நான் ஏன் உங்களிடம் பல முறை கேட்கிறேன்? இந்தக் கேள்வியை நான் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்? உங்கள் இருதயங்களில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் உருவம் என்னவாக இருக்கிறது? அது உண்மையாகவே அகற்றப்பட்டுவிட்டதா? நீங்கள் உண்மையிலேயே அதனை உங்கள் தந்தையாகக் கருதவில்லையா? எனது கேள்விகளில் இருக்கும் எனது நோக்கத்தை அனைத்து ஜனங்களும் உணர வேண்டும். இது ஜனங்களின் கோபத்தைத் தூண்டுவதோ, அல்லது மனுஷரிடையே கிளர்ச்சியைத் தூண்டுவதோ, அல்லது அந்த மனுஷன் தனது சொந்த வழியைக் கண்டுபிடிப்பான் என்பதற்காகவோ அல்ல, ஆனால் எல்லா ஜனங்களும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அனுமதிப்பதாகும். ஆனாலும் யாரும் கவலைப்படக்கூடாது. அனைத்தும் என் வார்த்தைகளால் நிறைவேறும்; எந்த மனுஷனும் பங்கேற்க முடியாது, மேலும் நான் செய்யவேண்டிய கிரியையை எந்த மனுஷனாலும் செய்ய முடியாது. எல்லா நிலங்களின் காற்றையும் சுத்தமாகத் துடைத்து, பூமியில் உள்ள பிசாசுகளின் அனைத்து தடயங்களையும் அழிப்பேன். நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் எனது சிட்சிக்கும் கிரியையின் முதல் கட்டத்தை தொடங்குவேன். இவ்வாறு என் சிட்சி முழு பிரபஞ்சத்திற்கும் ஏற்பட்டுள்ளது என்பதையும், நான் எல்லா நிலங்களையும் பார்ப்பதால், சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் மற்றும் அனைத்து வகையான அசுத்த ஆவிகளும் என் தண்டனையிலிருந்து தப்பிக்க பெலனற்றவையாக இருப்பதையும் காணமுடிகிறது. பூமியில் எனது கிரியை முடிந்ததும், அதாவது, நியாயத்தீர்ப்பின் சகாப்தம் முடிவுக்கு வரும்போது, நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முறையாக சிட்சிப்பேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கான எனது நீதிக்குரிய சிட்சையை என் ஜனங்கள் நிச்சயமாகக் காண்பார்கள், நிச்சயமாக என் நீதியின் காரணமாக புகழைத் தூண்டுவார்கள், மேலும் என் நீதியின் காரணமாக என் பரிசுத்த நாமத்தை என்றென்றும் புகழ்வார்கள். ஆகவே, நீங்கள் உங்கள் கடமையை முறையாகச் செய்வீர்கள், மேலும் நிலங்கள் முழுவதற்க்கும், என்றென்றும் எப்போதும் என்னைப் புகழ்வீர்கள்!

நியாயத்தீர்ப்பின் சகாப்தம் உச்சத்தை எட்டும்போது, நான் என் கிரியையை முடிக்க விரைந்து செயல்படமாட்டேன், ஆனால் சிட்சையின் சகாப்தத்தின் அத்தாட்சிகளை அதில் ஒருங்கிணைத்து, அந்த அத்தாட்சிகளை என் ஜனங்கள் அனைவருமே காண அனுமதிப்பேன்; இதில் அதிகமான பலன் கிடைக்கப்பெறும். இந்த அத்தாட்சியே நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை சிட்சிக்கும் வழிமுறையாகும், மேலும் எனது ஜனங்களை அவர்களது கண்களால் பார்க்க வைப்பேன், இதனால் அவர்கள் எனது மனநிலையை அதிகம் அறிந்து கொள்வார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சிட்சிக்கப்படும்போது தான் என் ஜனங்கள் என்னை அனுபவிக்கும் நேரமாக இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஜனங்களை எழுச்சி பெற வைத்து, அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைப்பதே எனது திட்டம், மேலும் இதுவே நான் எனது ஜனங்களை பரிபூரணப்படுத்தும் முறை ஆகும், எனது ஜனங்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 28” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 228

பிரகாசமான சந்திரன் உதிக்கையில், அமைதியான இரவு திடீரென தகர்கிறது. சந்திரன் சிதைந்திருந்தாலும், மனுஷன் நல்ல உற்சாகத்தில் இருந்துகொண்டு, நிலவொளியின் கீழ் அமைதியாக அமர்ந்துகொண்டு, நிலவொளியின் அழகிய காட்சியைப் போற்றுகிறான். மனுஷனால் தன் உணர்ச்சிகளை விவரிக்க முடியாது; அவன் தனது எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட விரும்புவது போலவும், எதிர்காலத்தை எதிர்நோக்க விரும்புவதைப் போலவும், நிகழ்காலத்தை அனுபவிப்பதைப் போலவும் இருக்கிறது. அவனது முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிறது, மேலும் இன்பமான காற்றின் மத்தியில் மிருதுவான வாசனை ஒன்று பரவுகிறது; மென்மையான காற்று வீசத் தொடங்கும் போது, மனுஷன் பணக்கார நறுமணத்தைக் கண்டுபிடிக்கிறான், மேலும் அவன் போதையேற்றப்பட்டவனை போல தன்னை தானே தூண்டிவிட முடியாமல் இருக்கிறான். மனுஷரிடையே நான் தனிப்பட்ட முறையில் வரும் தருணம் இதுதான், மேலும் மனுஷனுக்கு பணக்கார நறுமணத்தின் உயரிய உணர்வு இருக்கிறது, இதனால் எல்லா மனுஷரும் இந்த நறுமணத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். நான் மனுஷனுடன் சமாதானமாக இருக்கிறேன், மனுஷன் என்னுடன் இணக்கமாக வாழ்கிறான், இனியும் அவன் என்னைப் பொறுத்தவரை மாறுபட்டவன் அல்ல, இனியும் மனுஷனின் குறைபாடுகளை நான் கத்தரிக்க மாட்டேன், இனியும் மனுஷனின் முகத்தில் துன்பகரமான பார்வை இருக்கப்போவதில்லை, இனியும் மரணம் மனுஷகுலம் முழுவதையும் அச்சுறுத்துவதில்லை. இன்று, நான் மனுஷனுடன் சேர்ந்து, அவனுடனேயே சிட்சையின் சகாப்தத்தில் முன்னேறுகிறேன். நான் என் கிரியையைச் செய்கிறேன், அதாவது, நான் என் தடியை மனுஷரிடையே அடிகிறேன், அது மனுஷனில் கலகம் பண்ணுகிறவன் மீது விழுகிறது. மனுஷனின் பார்வைக்கு, என் தடிக்கு சிறப்பு சக்திகள் இருப்பதாகத் தெரிகிறது: இது என் எதிரிகளாகிய அனைவர்மீதும் படர்ந்து, அவர்களை எளிதில் விட்டுவிடுவதில்லை; என்னை எதிர்க்கும் அனைவருக்கும், தடி அதன் இயல்பான செயல்பாட்டை செய்கிறது; என் கைகளில் இருப்பவர்கள் அனைவரும் என் நோக்கத்தின்படி தங்கள் கடமையைச் செய்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் என் விருப்பங்களை மீறுவதில்லை அல்லது அவற்றின் பொருளை மாற்றுவதில்லை. இதன் விளைவாக, நீர் கர்ஜிக்கும், மலைகள் கவிழும், பெரிய ஆறுகள் சிதறும், மனுஷன் எப்போதும் மாற்றத்திற்கு வழங்கப்படுவான், சூரியன் மங்கலாக வளரும், சந்திரன் இருட்டாகும், மனுஷன் இனி நிம்மதியாக வாழ முடியாது, நிலத்தில் இனி அமைதி இருக்காது, பரலோகங்கள் இனி ஒருபோதும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்காது, அவற்றின் சகிப்புத்தன்மை இனியும் நீடிக்காது. எல்லா விஷயங்களும் புதுப்பிக்கப்பட்டு அவற்றின் அசல் தோற்றத்தை மீட்டெடுக்கும். பூமியிலுள்ள எல்லா வீடுகளும் அழிந்துபோகும், பூமியிலுள்ள எல்லா தேசங்களும் சிதறுண்டு போகும்; கணவனும் மனைவியும் ஒன்றிணையும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, தாயும் மகனும் இனியும் சந்திக்கப்போவதில்லை, மீண்டும் ஒருபோதும் தந்தையும் மகளும் ஒன்றுசேரப் போவதில்லை. பூமியில் இருப்பவை அனைத்தும் என்னால் அடித்து நொறுக்கப்படும். ஜனங்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை நான் அவர்களுக்கு வழங்குவதில்லை, ஏனென்றால் நான் உணர்ச்சிகளற்றவனாக இருக்கிறேன், மேலும் ஜனங்களின் உணர்ச்சிகளை மிகவும் வெறுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். ஜனங்களிடையேயான உணர்ச்சிகளின் காரணமாகவே நான் ஒரு பக்கமாக தள்ளப்பட்டேன், இதனால் நான் அவர்களின் பார்வையில் “வேறொருவர்” ஆகிவிட்டேன்; ஜனங்களிடையேயான உணர்ச்சிகளின் காரணமாகவே நான் மறக்கடிக்கப்பட்டேன்; மனுஷனுடைய உணர்ச்சிகளின் காரணமாகவே அவன் அவனது “மனசாட்சியை” கைப்பற்றும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறான்; மனுஷனின் உணர்ச்சிகளால் தான் அவன் எப்போதும் என் சிட்சையினால் சோர்வடைகிறான்; மனுஷனின் உணர்ச்சிகளின் காரணமாகவே அவன் என்னை நியாயமற்றவர் என்றும், அநியாயக்காரர் என்றும் அழைக்கிறான், மேலும் நான் விஷயங்களைக் கையாளும்போது மனுஷனின் உணர்வுகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகிறான். பூமியில் எனக்கு உறவினர்களும் இருக்கிறார்களா? எனது முழு நிர்வாகத் திட்டத்துக்காக, என்னைப் போல, இரவு பகல் பார்க்காமல், உணவு அல்லது தூக்கம் பற்றி சிந்திக்காமல் யார் கிரியை செய்கிறார்கள்? மனுஷனை தேவனுடன் எவ்வாறு ஒப்பிட முடியும்? மனுஷன் தேவனுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும்? சிருஷ்டிக்கும் தேவன், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனைப் போலவே எப்படி இருக்க முடியும்? பூமியில் மனுஷனுடன் இணைந்து எப்படி என்னால் வாழவும் செயல்படவும் முடியும்? என் இருதயத்தில் இருக்கும் அக்கறையை யாரால் உணர முடிகிறது? இது மனுஷனின் ஜெபமா? நான் ஒரு முறை மனுஷனுடன் சேர்ந்து அவனுடன் ஒன்றாக நடக்க ஒப்புக்கொண்டேன்—ஆம், இன்றுவரை மனுஷன் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்ந்துவருகிறான், ஆனால் மனுஷன் என் பராமரிப்பிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளக்கூடிய ஒரு நாள் எப்போதாவது வருமா? மனுஷன் ஒருபோதும் என் இருதயத்தின் மீது அக்கறை காட்டவில்லை என்றாலும், வெளிச்சம் இல்லாத தேசத்தில் யாரால் தொடர்ந்து வாழ முடியும்? என் ஆசீர்வாதங்களால் மட்டுமே மனுஷன் இன்று வரை வாழ்ந்துவருகிறான்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 28” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 230

தேவனின் எல்லா வார்த்தைகளும் அவருடைய மனநிலையின் ஒரு பகுதியைக் கொண்டிருக்கின்றன. தேவனின் மனநிலையை வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, அதுவே அவரிடம் எவ்வளவு வளமை உள்ளது என்பதைக் காட்ட போதுமானது. ஜனங்களால் பார்க்கக்கூடியதாகவும் தொடக்கூடியதாகவும் இருப்பது ஒரு குறிப்பிட்ட வரம்பு மட்டுமே, ஜனங்களின் திறனும் அதுவே. தேவனின் வார்த்தைகள் தெளிவாக இருந்தாலும், அவற்றை ஜனங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்: “ஒரு மின்னலின் பிரகாசத்தில், ஒவ்வொரு மிருகமும் அதன் உண்மையான வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே, என் வெளிச்சத்தால் ஒளிரூட்டப்பட்ட மனுஷன், முன்பு அவனிடமிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான். ஓ, சீர்கெட்ட பழைய உலகமே! கடைசியில், நீ அசுத்தமான தண்ணீரில் கவிழ்ந்து, நீரினுள் மூழ்கி, சேற்றோடு சேற்றாக கரைந்துவிட்டாய்!” தேவனின் எல்லா வார்த்தைகளும் அவருடைய இருப்பைக் கொண்டிருக்கின்றன, எல்லா ஜனங்களும் இந்த வார்த்தைகளை அறிந்திருந்தாலும், அவற்றின் அர்த்தத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. தேவனின் பார்வையில், அவரை எதிர்ப்பவர்கள் அனைவரும் அவருடைய எதிரிகளே, அதாவது அவர்கள் அசுத்த ஆவிகளைச் சேர்ந்த மிருகங்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து, சபையின் உண்மையான நிலையை ஒருவர் கைக்கொள்ள முடியும். எல்லா மனுஷர்களும் தேவனின் வார்த்தைகளால் ஒளிரூட்டப்படுகின்றனர். மேலும் இந்த வெளிச்சத்தில், அவர்கள் மற்றவர்களை விரிவுரை செய்வதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அல்லது நேரடியாக வெளியேற்றப்படுவதற்கோ ஆட்படாமல், மற்ற மனுஷ காரியங்களைச் செய்வதற்கு ஆட்படாமல், மற்றவர்கள் காரியங்களைச் சுட்டிக்காட்டாமல் தங்களை ஆராய்கிறார்கள். “நுண்ணிய கண்ணோட்டத்தில்”, இருந்து காண்கையில் அவர்களுக்குள் உண்மையில் எவ்வளவு வியாதி இருக்கிறது என்பதை அவர்கள் மிகத் தெளிவாகக் காண்கிறார்கள். தேவனின் வார்த்தைகளில், ஒவ்வொரு வகையான ஆவியும் வகைப்படுத்தப்பட்டு அதன் அசல் வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. தேவதூதர்களின் ஆவிகள் மேலும் வெளிச்சமாகவும் ஒளியூட்டலிலும் வளர்கின்றன, எனவே தேவனின் வார்த்தைகள்: “மனுஷன், முன்பு அவனிடமிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான்.” இந்த வார்த்தைகள் தேவன் அடைந்த இறுதி முடிவை அடிப்படையாகக் கொண்டவை. இப்போதைக்கு, இந்த முடிவை இன்னும் முழுமையாக அடைய முடியவில்லை—இது ஒரு முன்னனுபவம் மட்டுமே, இதன் மூலம் தேவனின் சித்தத்தைக் காணமுடியும். தேவனின் வார்த்தைகளுக்குள் ஏராளமான ஜனங்கள் நொறுங்கிவிடுவார்கள் என்பதையும், எல்லா ஜனங்களின் பரிசுத்தமாக்கலின் படிப்படியான செயல்பாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையும் காண்பிக்க இந்த வார்த்தைகள் போதுமானவை. இங்கே, “அது சேற்றோடு சேற்றாக கரைந்துவிட்டது” என்பது, தேவன் உலகத்தை நெருப்பால் அழிக்கிறார் என்பதுடன் முரண்படவில்லை, மேலும் “மின்னல்” என்பது தேவனின் கோபத்தைக் குறிக்கிறது. தேவன் தனது பெரும் கோபத்தைத் தணிக்க அனுமதிக்கும்போது, உலகம் முழுவதும், எரிமலை வெடிப்பு போன்ற அனைத்து வகையான பேரழிவுகளையும் அனுபவிக்கும். வானத்தில் உயரமாக நின்றுகொண்டு காண்கையில், பூமியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பேரழிவு மனுஷர்கள் அனைவரையும் நெருங்கி வருவதைக் காணலாம். உயரத்திலிருந்து கீழே பார்க்கையில், பூமி அதிர்ச்சிக்கு முந்தைய காட்சிகளைப் போன்ற பல்வேறு காட்சிகளை பூமி முன்வைக்கிறது. திரவ நெருப்பு நிற்காமல் விரைகிறது, எரிமலைக் குழம்பு சுதந்திரமாக பாய்கிறது, மலைகள் இடம்மாறுகின்றன மற்றும் குளிர்ந்த ஒளி எல்லாவற்றிலும் மின்னுகிறது. பூமி முழுவதும் நெருப்பில் மூழ்கியுள்ளது. தேவன் தனது கோபத்தைக் கட்டவிழ்த்துவிடும் காட்சி இது, மேலும் இது அவருடைய தீர்ப்பின் நேரமாகும். மாம்சத்தாலும் இரத்தத்தாலும் ஆனவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது. இவ்வாறு, முழு பூமியையும் அழிக்க நாடுகளுக்கிடையேயான போர்களும், ஜனங்களுக்கு இடையிலான மோதல்களும் தேவையில்லை; அதற்கு பதிலாக, தேவனின் தண்டனை தொட்டிலுக்குள் உலகம் “உணர்வுபூர்வமாக தன்னைத்தானே அனுபவிக்கும்”. யாராலும் தப்பிக்க முடியாது; ஒவ்வொவரும் இந்த சோதனையை ஒவ்வொருவராக கடந்து செல்ல வேண்டும், நிச்சயமாக. அதன் பிறகு, முழு பிரபஞ்சமும் மீண்டும் புனித கதிரொளியில் பிரகாசிக்கும், மேலும் மனுஷர்கள் அனைவரும் மீண்டும் ஒரு புதிய ஜீவிதத்தை தொடங்குவார்கள். தேவன் பிரபஞ்சத்திற்கு மேலே ஓய்வெடுப்பார், மேலும் ஒவ்வொரு நாளும் மனுஷர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். பரலோகம் தனிமையாக இருக்காது, ஆனால் பூமி படைக்கப்பட்டதில் இருந்து அது பெறாத உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும், மேலும் தேவன் ஒரு புதிய ஜீவிதத்தைத் தொடங்கும்போது “ஆறாவது நாள்” வரும். தேவன் மற்றும் மனுஷர்கள் என இருசாரரும் ஓய்விற்குள் நுழைவார்கள், பிரபஞ்சம் இனி கொந்தளிப்பாகவோ அல்லது அசுத்தமாகவோ இருக்காது, ஆனால் புதுப்பிக்கப்படும். இதனால்தான் தேவன் சொன்னார்: “பூமி இனி மரண அசைவில்லாமலும் அமைதியாகவும் இருப்பதில்லை, வானம் இனி பாழடைந்ததாகவும் சோகமாகவும் இருப்பதில்லை.” பரலோக ராஜ்யத்தில், ஒருபோதும் அநீதியோ அல்லது மனுஷ உணர்ச்சிகளோ, அல்லது மனுஷர்களின் எந்தவொரு சீர்கெட்ட மனநிலையோ இருந்ததில்லை, ஏனென்றால் சாத்தானின் இடையூறு அங்கு இருப்பதில்லை. “ஜனங்கள்” அனைவராலும் தேவனின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் பரலோக வாழ்க்கை என்பது மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது. பரலோகத்தில் உள்ள அனைவருக்கும் ஞானமும் தேவனின் கௌரவமும் உண்டு.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மறைபொருட்களைப் பற்றிய விளக்கங்கள் என்பதன் “அத்தியாயம் 18” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: தேவனுடைய கிரியையை அறிதல் (1)

அடுத்த: VI. தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்

நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாயா? நீ இயேசுவோடு வாழ விரும்புகிறாயா? இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறாயா? அப்படியானால்,...

மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை...

பிற்சேர்க்கை 1 தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே...

கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக