கிரியையின் மூன்று கட்டங்கள்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 1

எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய நியாயப்பிரமாணத்தின் காலம்; கிருபையின் காலம் (இது மீட்பின் காலமும் ஆகும்); மற்றும் கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று காலங்களிலும் எனது கிரியை ஒவ்வொரு காலத்தின் தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கத்தில் வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தக் கிரியை மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சாத்தானுக்கு எதிராக நான் செய்யும் யுத்தத்தில் சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. என் கிரியையின் நோக்கம் சாத்தானை மடங்கடிப்பதும், என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துவதும், சாத்தானின் தந்திரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் முழு மனித இனத்தையும் இரட்சிப்பதுமே ஆகும். இது என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிக்காட்டுவதும், சாத்தானின் தாங்கமுடியாத வெறுப்பை வெளிப்படுத்துவதும் ஆகும். அதற்கும் மேலாக, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள பாகுபாட்டைக் கண்டறிய அனுமதிப்பதும், எல்லாவற்றிற்கும் நானே அதிபதி என்பதை அறிந்துகொள்ளச் செய்வதும், சாத்தான் மனிதகுலத்தின் எதிரி, மனிதகுலத்தை சீரழித்தவன், தீயவன் என்பதையும் தெளிவாகக் காண்பிப்பதும், மேலும் நன்மை மற்றும் தீமையை, சத்தியம் மற்றும் பொய்யை, பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தை, மற்றும் எது மகத்துவமானது, எது இழிவானது என இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர்கள் உறுதியாகச் சொல்ல அனுமதிப்பதுமே ஆகும். இவ்வாறு, நான் மனிதகுலத்தைச் சீர்கெடுக்கவில்லை, சிருஷ்டிகராகிய என்னால் மட்டுமே மனிதகுலத்தை இரட்சிக்க முடியும், மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கக்கூடிய காரியங்களை வழங்க முடியும், நான் எல்லாவற்றிற்கும் அதிபதி என்பதையும், நான் சிருஷ்டித்தவைகளில் ஒருவன்தான் சாத்தான் என்பதையும், பின்னர் எனக்கு எதிராகத் திரும்பினான் என்பதையும் அறியாமையில் உள்ள மனிதகுலம் அறிந்து எனக்கு சாட்சி கொடுக்க முடியும். எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று காலகட்டங்களாகப் பிரிந்துள்ளது. மேலும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை எனக்கு சாட்சி கொடுக்கவும், என் சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், நானே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளவும் செய்யும் பலனை அடைவதற்கும் இவ்வாறு கிரியை செய்கிறேன். இவ்வாறு, எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் தொடக்க காலத்தின்போது, நான் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தேன். இதனைக் கொண்டு தான் யேகோவா ஜனங்களை வழிநடத்தினார். இரண்டாம் கட்டத்தில் யூதேயா கிராமங்களில் கிருபையின் காலத்தின் கிரியையை நான் செய்தேன். கிருபையின் காலத்தின் அனைத்து கிரியைகளையும் இயேசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; அவர் மாம்சத்தில் அவதரித்தார், சிலுவையில் அறையப்பட்டார், மேலும் அவர் கிருபையின் காலத்தையும் தொடங்கினார். மீட்பின் கிரியையை நிறைவு செய்வதற்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்கும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே அவர் “பிரதான அதிபதி,” “பாவநிவாரணபலி” மற்றும் “மீட்பர்” என்று அழைக்கப்பட்டார். இதன் விளைவாக, இயேசுவின் கிரியையும், யேகோவாவின் கிரியையும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருப்பினும் உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. யேகோவா நியாயப்பிரமாண காலத்தைத் தொடங்கினார். பூமியில் தேவனுடைய கிரியைக்கான அடிப்படையை, அதாவது தோற்றுவிக்கும் இடத்தை நிறுவி நியாயப்பிரமாணங்களையும், கற்பனைகளையும் வழங்கினார். இவை அவர் மேற்கொண்ட இரண்டு கிரியைகளாகும், மேலும் இவை நியாயப்பிரமாண காலத்தைக் குறிக்கின்றன. கிருபையின் காலத்தில் இயேசு செய்த கிரியை, நியாயப்பிரமாணங்களை வழங்குவதல்ல, அவற்றை நிறைவேற்றுவதேயாகும். இதன் மூலம் கிருபையின் காலத்தை அறிமுகப்படுத்துவதும், இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாண காலத்தை நிறைவு செய்வதும் ஆகும். அவர் கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்காக வந்த வழிகாட்டியாக இருந்தார், ஆனாலும் அவருடைய கிரியையின் முக்கிய பகுதி மீட்பில் இருந்தது. ஆகவே அவருடைய கிரியையும் இரு மடங்காக இருந்தது: ஒரு புதிய காலத்தைத் தொடங்குவதும், தாம் சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மீட்பின் பணியை முடிப்பதும் அந்த இரு மடங்கான கிரியை ஆகும். அதன் பிறகு அவர் புறப்பட்டார். இவ்வாறு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமானது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 2

தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்ற தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 3

சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு தேவன் எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்; அவர் சாத்தானைத் தோற்கடிக்க மட்டுமே விரும்புகிறார். அவருடைய எல்லா கிரியைகளும்—அது சிட்சையாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பாக இருந்தாலும்—அது சாத்தானை நோக்கியது; அது மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டு மேற்கொள்ளப்படுகிறது, அது சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, அது ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது: சாத்தானுக்கு எதிராக இறுதிவரை யுத்தம் செய்வது! சாத்தானை வென்றெடுக்கும் வரை தேவன் ஒருபோதும் ஓய மாட்டார்! அவர் சாத்தானைத் தோற்கடித்தவுடன் மட்டுமே ஓய்வார். ஏனென்றால், தேவன் செய்த எல்லாக் கிரியைகளும் சாத்தானை நோக்கியவையாகும், மேலும் சாத்தானால் சீர்கெட்டவர்கள் அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதாலும், சாத்தானுக்கு எதிராகப் போராடாமல், அவனுடன் முறித்துக் கொள்ளாமல், சாத்தான் இந்த மக்கள் மீது உள்ள அவனது பிடியைத் தளர்த்த மாட்டான், மேலும் அவர்களை ஆதாயப்படுத்த முடியாது. அவர்களை ஆதாயப்படுத்தாவிட்டால், சாத்தான் தோற்கடிக்கப்படவில்லை, அவன் முறியடிக்கப்படவில்லை என்பதை அது நிரூபிக்கும். எனவே, தேவனின் 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தில், முதல் கட்டத்தில் அவர் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தார், இரண்டாவது கட்டத்தில் அவர் கிருபையின் காலக் கிரியையைச் செய்தார், அதாவது சிலுவையில் அறையப்படும் கிரியை மற்றும் மூன்றாம் கட்டத்தில் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையை அவர் செய்கிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் சாத்தான் மனிதகுலத்தை எந்த அளவுக்கு சீர்கேடாக்கியிருக்கிறானோ அந்த அளவுக்கு அவனை நோக்கியிருக்கும், இது எல்லாமே சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே, மற்றும் ஒவ்வொரு கட்டமும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனதாகும். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் சாராம்சமானது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான யுத்தமாகும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் கிரியையும் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையாகும், அது சாத்தானுடன் யுத்தம் செய்யும் கிரியை. தேவன் 6,000 ஆண்டுகளாக யுத்தம் செய்தார், இப்படியாக இறுதியில் மனிதனை புதிய உலகத்திற்குக் கொண்டு வர அவர் 6,000 ஆண்டுகளாகக் கிரியை செய்துள்ளார். சாத்தான் தோற்கடிக்கப்படும்போது, மனிதன் முற்றிலும் விடுவிக்கப்படுவான். இது இன்று தேவனின் கிரியையின் வழிகாட்டுதல் அல்லவா? துல்லியமாக இதுதான் இன்றைய கிரியையின் வழிகாட்டுதலாகும்: மனிதனின் முழுமையான விடுதலை மேலும் மனிதனை விடுவிப்பது, இதனால் அவன் எந்த விதிகளுக்கும் உட்படாமல் இருக்க அல்லது எந்த கட்டுகளாலும் அல்லது கட்டுப்பாடுகளாலும் மட்டுப்படுத்தப்படாமல் இருக்க முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்பவும் செய்யப்படுகின்றன, அதாவது நீங்கள் நிறைவேற்றக் கூடியது எதுவோ அது உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் மீது எதையும் திணிப்பதற்கான “வாத்தைக் கூண்டுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவது” அல்ல; மாறாக, இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கட்ட கிரியையும் மனிதனின் உண்மையான தேவைகளுக்கும் வேண்டப்படுவனவற்றுக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது; ஒவ்வொரு கட்ட கிரியையும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது. உண்மையில், ஆரம்பத்தில் சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிப்புகளுக்கும் இடையில் எந்தத் தடைகளும் இல்லை. இந்தத் தடைகள் அனைத்தும் சாத்தானால் ஏற்பட்டவை. மனிதனைச் சாத்தான் எவ்வாறு தொந்தரவு செய்தான், சீர்கேடாக்கினான் என்பதன் காரணமாக அவனால் எதையும் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. மனிதன் பாதிக்கப்பட்டவன், அவன் ஏமாற்றப்பட்ட ஒருவன். சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், சிருஷ்டிக்கப்பட்டவர்கள் சிருஷ்டிகரைப் பார்ப்பார்கள், சிருஷ்டிகர் சிருஷ்டித்தவர்களைப் பார்க்கவும் தனிப்பட்ட முறையில் அவர்களை வழிநடத்தவும் முடியும். பூமியில் மனிதன் கொள்ள வேண்டிய ஜீவிதம் இது மட்டுமேயாகும். எனவே, தேவனின் கிரியை முதன்மையாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 4

தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தைச் சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அவசியம் செய்ய வேண்டும். மனிதன் அவரைக் காணும் படிக்கு, மனிதன் சந்தோஷப்படுவதற்காக தேவன் வந்தார் என்று மட்டுமே மனிதன் நம்பினால், அத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. மனிதன் விளங்கிக் கொள்வது மிகவும் மேலோட்டமானது! இந்தக் கிரியையைத் தானே நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவன் இந்தக் கிரியையைப் பரிபூரணமாகவும் முழுமையாகவும் செய்ய முடியும். தேவன் சார்பாக மனிதனால் அதைச் செய்ய இயலாது. தேவனின் அடையாளமோ அல்லது அவருடைய சாராம்சமோ அவனுக்கு இல்லாததால், அவனால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, மனிதன் இந்தக் கிரியையைச் செய்தாலும், அதற்கு எந்த விளைவும் இருக்காது. மீட்புக்காகவும், எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்கும், மனிதன் தூய்மைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவன் ஆவதற்கும், அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்படுவதற்கும் தேவன் முதன்முதலில் மாம்சமாக ஆனார். மேலும் மனிதர்களிடையே ஜெயங்கொள்ளும் கிரியையும் தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், தேவன் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேசினால், ஒரு தீர்க்கதரிசி அல்லது அத்தகைய திறமை பெற்ற ஒருவர் அவருடைய இடத்தைப் பிடிக்க முடியும்; தீர்க்கதரிசனம் பற்றி மட்டுமே பேசப்பட்டால், மனிதன் தேவனுக்குப் பதிலீடாக இருக்க முடியும். மனிதன் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்யும் கிரியையைச் செய்ய முயன்றால், மேலும் மனிதனின் ஜீவித காரியத்தைச் செய்ய முயன்றால், அவனால் அந்தக் கிரியையைச் செய்ய இயலாது. இது தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்: இந்தக் கிரியையைச் செய்யத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும். வார்த்தையின் காலத்தில், தீர்க்கதரிசனம் மட்டுமே பேசப்பட்டால், ஏசாயா அல்லது எலியா தீர்க்கதரிசி இந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் அதைத் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கட்டத்தில் செய்யப்படும் கிரியைகள் வெறுமனே தீர்க்கதரிசனத்தைப் பேசுவதல்ல, மேலும் மனிதனை ஜெயங்கொள்ளவும் சாத்தானைத் தோற்கடிக்கவும் வார்த்தைகளின் கிரியை பயன்படுத்தப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது, தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவா தம்முடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார், அதன் பிறகு அவர் சில வார்த்தைகளைப் பேசினார், தீர்க்கதரிசிகள் மூலம் சில கிரியைகளைச் செய்தார். இது ஏனென்றால், மனிதன் யேகோவாவை அவரது கிரியையில் பதிலீடு செய்ய முடியும், மேலும் தீர்க்கதரிசிகள் விஷயங்களை முன்னறிவிக்கவும், அவர் சார்பாகச் சில கனவுகளை விளக்கவும் முடியும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிரியை மனிதனின் மனநிலையை நேரடியாக மாற்றும் கிரியை அல்ல, அது மனிதனின் பாவத்துடன் தொடர்பில்லாதது, மேலும் மனிதன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, யேகோவா மாம்சமாகி, தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக அவர் மோசேயுடனும் மற்றவர்களுடனும் நேரடியாகப் பேசினார், அவர்களை அவர் சார்பாகப் பேசவும் கிரியை செய்யவும் அனுமதித்தார், மேலும் அவர்கள் நேரடியாக மனிதர்களிடையே கிரியை செய்யும்படி செய்தார். தேவனுடைய முதல் கட்டக் கிரியை மனிதனின் தலைமையாக இருந்தது. இது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, ஆனால் இந்த யுத்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. சாத்தானுக்கு எதிரான அதிகாரப்பூர்வ யுத்தம் தேவன் முதலில் மாம்ச உருவம் எடுத்தபோது தொடங்கியது, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேவன் மாம்ச உருவம் எடுத்துச் சிலுவையில் அறையப்பட்டதுதான் இந்த யுத்தத்தின் முதல் சண்டை. மனித உருவம் எடுத்த தேவன் சிலுவையில் அறையப்பட்டது சாத்தானைத் தோற்கடித்தது, அதுதான் யுத்தத்தின் முதல் வெற்றிகரமான கட்டமாகும். மனித உருவம் எடுத்த தேவன் மனிதனின் ஜீவிதத்தில் நேரடியாகக் கிரியை செய்யத் தொடங்கியபோது, அதுதான் மனிதனை மீட்டெடுக்கும் கிரியையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும், மேலும் இது மனிதனின் பழைய மனநிலையை மாற்றும் கிரியை என்பதால், இது சாத்தானுடன் போரிடுவதற்கான கிரியை ஆகும். ஆரம்பத்தில் யேகோவா செய்த கிரியையின் கட்டமானது பூமியில் மனிதனின் ஜீவிதத்தின் தலைமைத்துவம் மட்டுமேயாகும். இது தேவனின் கிரியையின் தொடக்கமாக இருந்தது, அது இன்னும் எந்தவொரு யுத்தத்திலும் அல்லது எந்தவொரு பெரிய கிரியையிலும் ஈடுபடவில்லை என்றாலும், அது வரவிருக்கும் யுத்தத்தின் கிரியைக்கு அடித்தளத்தை அமைத்தது. பின்னர், கிருபையின் காலத்தின் இரண்டாம் கட்டக் கிரியை மனிதனின் பழைய மனநிலையை மாற்றுவதை உள்ளடக்கியது, அதாவது மனிதனின் ஜீவிதத்தை தேவன் தாமே வார்த்தெடுத்தார். இதனை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியிருந்தது: இதற்கு தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அவர் மாம்சமாக மாறாமல் இருந்திருந்தால், இந்தக் கிரியையின் கட்டத்தில் வேறு யாரும் அவருக்குப் பதிலீடு செய்திருக்க முடியாது, ஏனென்றால் அது சாத்தானுக்கு எதிராக நேரடியாகப் போரிடும் கிரியையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதன் இந்த வேலையை தேவனின் சார்பாக செய்திருந்தால், மனிதன் சாத்தானுக்கு முன் நின்றபோது, சாத்தான் கீழ்ப்படிந்திருக்க மாட்டான், அவனைத் தோற்கடிப்பது சாத்தியம் இல்லாது போகும். அதைத் தோற்கடிக்க வந்தது மனித உருவம் எடுத்த தேவனாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் மனித உருவம் எடுத்த தேவன் சாராம்சத்தில் இன்னும் தேவன்தான், அவர் இன்னும் மனிதனின் ஜீவிதம்தான், அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; என்ன நடந்தாலும், அவருடைய அடையாளமும் சாராம்சமும் மாறாது. எனவே, அவர் மாம்ச உருவத்தை எடுத்துக்கொண்டார் மற்றும் சாத்தானின் பரிபூரணமான கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் கிரியையைச் செய்தார். கடைசிக் காலத்தின் கிரியையின் போது, மனிதனை இந்தக் கிரியையைச் செய்து, வார்த்தைகளை நேரடியாகப் பேசும்படி செய்திருந்தால், அவனால் அவற்றைப் பேசமுடிந்திருக்காது, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்க்கதரிசனத்தால் மனிதனை ஜெயங்கொள்ள முடியாமல் இருந்திருக்கும். மாம்ச உருவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவன் சாத்தானைத் தோற்கடித்து அதன் முற்றிலுமான அடிபணிதலை ஏற்படுத்தினார். அவர் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்து, மனிதனைப் பரிபூரணமாக ஜெயங்கொண்டு, மனிதனை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் போது, இந்தக் கட்டக் கிரியை முடிவடைந்து ஜெயம் கிடைக்கும். தேவனின் நிர்வாகத்தில், மனிதன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. குறிப்பாக, காலத்தை வழிநடத்துவதற்கு மற்றும் புதிய கிரியையைத் தொடங்குவதற்குத் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் கிரியைகள் செய்யப்பட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. மனிதனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பதும், தீர்க்கதரிசனத்தை வழங்குவதும் மனிதனால் செய்யப்படலாம், ஆனால் அது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய கிரியை என்றால், அது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் கிரியை என்றால், பின்பு இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது. முதல் கட்டக் கிரியையின் போது, சாத்தானுடன் போர் இல்லாதபோது, தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்தி யேகோவா தனிப்பட்ட முறையில் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். பின்னர், இரண்டாம் கட்ட கிரியையானது சாத்தானுடனான யுத்தம், மற்றும் தேவன் தாமே தனிப்பட்ட முறையில் மாம்சமாகி, இந்தக் கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வந்தார். சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எதுவும் மனித உருவம் எடுத்த தேவனையும் உள்ளடக்கியது, அதாவது இந்த யுத்தத்தை மனிதனால் தொடங்க முடியாது. மனிதன் யுத்தம் செய்தால், அவன் சாத்தானைத் தோற்கடிக்க சக்தியில்லாதவன். அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை அவனுக்கு எப்படி இருக்க முடியும்? மனிதன் இவற்றுக்கு இடையில் இருக்கிறான்: நீ சாத்தானை நோக்கிச் சாய்ந்தால், நீ சாத்தானுக்குச் சொந்தம், ஆனால் நீ தேவனைத் திருப்திப்படுத்தினால், நீ தேவனுக்குச் சொந்தமானவன். இந்த யுத்தத்தின் கிரியையில் மனிதன் முயற்சித்து தேவனுக்கு மாற்றீடு ஆகலாமா, அவனால் முடியுமா? அவன் அவ்வாறு செய்திருந்தால், அவன் வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்க மாட்டானா? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாள உலகுக்குள் நுழைந்திருப்பான் அல்லவா? ஆகவே, மனிதன் தேவனை அவரது கிரியையில் மாற்றீடு செய்ய முடியாது, அதாவது மனிதனுக்கு தேவனின் சாராம்சம் இல்லை, அதாவது நீ சாத்தானுடன் போரிட்டால் அதை உன்னால் தோற்கடிக்க இயலாது. மனிதனால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்; அவன் சிலரை ஜெயிக்க முடியும், ஆனால் தேவன் தாமே செய்யும் கிரியையில் அவன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. மனிதன் எப்படிச் சாத்தானுடன் யுத்தம் செய்ய முடியும்? நீ தொடங்குவதற்கு முன்பே சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். தேவன் தாமே சாத்தானுடன் போரிடுகிறார், இந்த அடிப்படையில் மனிதன் தேவனைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிறான், அதனால் மனிதன் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும். மனிதன் தனது சொந்த ஞானத்தினாலும் திறன்களாலும் அடையக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு; அவனால் மனிதர்களை முழுமையாக்குவதற்கும், அவர்களை வழிநடத்துவதற்கும், மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் இயலாது. மனிதனின் புத்திசாலித்தனமும் ஞானமும் சாத்தானின் திட்டங்களை முறியடிக்காது, ஆகவே மனிதன் அதை எவ்வாறு எதிர்த்து யுத்தம் செய்ய முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 5

மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்களுக்குள்ளும் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆனால் நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்ட கிரியைகளும் அடங்கும். உலகை சிருஷ்டிக்கும் கிரியை என்பது முழு மனுக்குலத்தையும் உருவாக்கும் கிரியையாக இருந்தது. இது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையாக இருக்கவில்லை, இதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது, மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை, ஆகையால் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தது. மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது சாத்தானால் மனுஷன் சீர்கெடுக்கப்பட்டபோதுதான் துவங்கியது, ஆகையால் மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்டபோது தான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் துவங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் விளைவாகவே மனுஷனை தேவன் நிர்வகிப்பது துவங்கியது, இது உலகை சிருஷ்டிக்கும் கிரியையிலிருந்து எழும்பவில்லை. மனுக்குலம் ஒரு சீர்கெட்ட மனநிலையைப் பெற்ற பிறகுதான் நிர்வாகக் கிரியையானது செயல்பாட்டுக்கு வந்தது. ஆகையால், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில் நான்கு கட்டங்கள் அல்லது நான்கு யுகங்களுக்குப் பதிலாக மூன்று பகுதிகளே அடங்கும். மனுக்குலத்தை தேவன் நிர்வகிப்பதைக் குறிப்பிட இதுவே சரியான வழியாகும். இறுதிக் காலம் முடிவுக்கு வரும்போது, மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். நிர்வாகக் கிரியையின் முடிவு என்றால் சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும், அப்போது முதல் மனுக்குலத்திற்கான இந்தக் கட்டம் முடிந்துவிட்டது என்றும் அர்த்தமாகும். சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை இல்லாமல், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது இருக்காது, அல்லது மூன்று கட்ட கிரியைகளும் இருக்காது. மனுக்குலத்தின் சீர்கேடே இதற்கான சரியான காரணமாகவும் இருந்தது. மனுக்குலத்திற்கு இரட்சிப்பு அவசரமாக தேவைப்பட்டதால், யேகோவா உலகை சிருஷ்டிப்பதை முடித்துவிட்டு, நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையை ஆரம்பித்தார். அப்போதுதான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது துவங்கியது, அதாவது அப்போதுதான் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை துவங்கியது. “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்றால் பூமியில் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தின் (இன்னும் சீர்கெட்டுப்போகவிருந்த மனுக்குலம்) ஜீவிதத்தை வழிநடத்துதல் என்று அர்த்தமில்லை. மாறாக, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனுக்குலத்தின் இரட்சிப்பு என்று அர்த்தமாகும், அதாவது இந்த சீர்கெட்ட மனுக்குலத்தை மாற்றுவது என்று அர்த்தமாகும். இதுதான் “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்பதன் அர்த்தமாகும். மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையில் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆகையால் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில், உலகை சிருஷ்டிக்கும் கிரியையும் அடங்காது, மாறாக உலகின் சிருஷ்டிப்பிலிருந்து தனித்திருக்கும் மூன்று கட்ட கிரியைகள் மட்டுமே அடங்கும். மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையைப் புரிந்து கொள்ள, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். இரட்சிக்கப்படுவதற்கு அனைவரும் இதைத்தான் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவனுடைய சிருஷ்டிகளாகிய நீங்கள் மனுஷனானவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும், மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணத்தையும், அத்துடன் மனுஷனுடைய இரட்சிப்பின் செயல்முறையையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய தயவைப் பெறுவதற்கான முயற்சியில் உபதேசத்தின்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்து, தேவன் மனுக்குலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் அல்லது மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணம் ஆகியவை பற்றிய எந்த அறிவும் இல்லையென்றால், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இதில்தான் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையைப் பற்றி பரந்த அளவில் அறியாதிருக்கும்போது, கடைப்பிடிக்கக்கூடிய அந்த சத்தியங்களை மட்டும் புரிந்துகொள்வதோடு நீ திருப்தி அடைந்துவிடக்கூடாது. அப்படி திருப்தியடைந்தால், நீ மிகவும் இறுமாப்புள்ளவனாக இருக்கிறாய். மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை, முழு உலகத்திற்கும் சுவிசேஷம் வருதல், சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை கிரியையின் மூன்று கட்டங்களாகும், இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும். உனது ஜீவிதம் தொடர்பான எளிய சத்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இந்த மாபெரும் இரகசியங்கள் மற்றும் தரிசனங்களைக் குறித்து நீ எதையும் அறியவில்லை என்றால், உன் ஜீவிதமானது பார்க்கப்படுவதற்குத் தவிர வேறொன்றுக்கும் உதவாத ஒரு குறைபாடுள்ள தயாரிப்புக்கு ஒப்பாக இல்லையா?

மனுஷன் நடைமுறையில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவனுடைய கிரியையையும், மனுஷன் என்ன அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் இரண்டாம் நிலையாக பார்ப்பானேயானால், இது அவனுக்கு சிறிதளவும் ஞானமில்லாததாகவும் முட்டாள்தனமானதாகவும் இருக்காதா? நீ தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நீ தெரிந்துகொண்டே ஆக வேண்டும்; நீ கடைப்பிடிக்க வேண்டியவற்றை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை எவ்வாறு பின்தொடர்வது என்பதை அறிந்த ஒருவனாக இருப்பாய். நீ சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான நாள் வரும்போது, தேவன் ஒரு மகத்துவமான மற்றும் நீதியுள்ள தேவன் என்றும், அவர் உன்னதமான தேவன் என்றும், எந்தவொரு மாபெரும் மனிதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒரு தேவன் என்றும், அவர் எல்லோருக்கும் மேலான தேவன் என்றும் மட்டுமே உன்னால் சொல்ல முடிந்து…, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சாராம்சத்தைக் கொண்ட வார்த்தைகளைப் பேசுவதற்கு முற்றிலுமாக தகுதியற்றவனாக இருக்கும்போது உன்னால் இந்த பொருத்தமற்ற மற்றும் மேலோட்டமான வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிந்து, தேவனை அல்லது தேவனுடைய கிரியையைப் பற்றி சொல்ல உன்னிடம் எதுவுமில்லை என்றால், மேலும், உன்னால் சத்தியத்தை விளக்கிக்கூறவோ அல்லது மனுஷனிடம் குறைபாடுள்ளதாக காணப்படுவதை வழங்கவோ முடியவில்லை என்றால், உன்னைப் போன்ற ஒருவனால் தன் கடமையை சிறப்பாகச் செய்ய முடியாது. தேவனுக்கு சாட்சி பகருவதும், ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும் எளிதான காரியம் அல்ல. முதலில் நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியத்தாலும், தரிசனங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய கிரியையின் பல்வேறு அம்சங்கள் கொண்ட தரிசனங்கள் மற்றும் சத்தியத்தைப் பற்றி நீ தெளிவாக அறிந்திருக்கும்போது, மேலும் உன் இருதயத்தில் நீ தேவனுடைய கிரியையை அறிந்துகொள்கிறாய். மேலும், நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது மனுஷனுடைய சுத்திகரிப்பாக இருந்தாலும் சரி தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், உனது அஸ்திபாரமாக மாபெரும் தரிசனத்தைக் கொண்டிருப்பதையும், கடைப்பிடிப்பதற்கான சரியான சத்தியத்தையும் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், உன்னால் தேவனை இறுதிவரை பின்பற்ற முடியும். தேவன் என்ன கிரியை செய்தாலும், அவருடைய கிரியையின் நோக்கம் மாறாது, அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது, மனுஷன் மீதான அவருடைய சித்தம் மாறாது என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அவருடைய கிரியையின் கொள்கைகள் மாறாது, மனுஷனை இரட்சிக்கும் அவருடைய நோக்கமும் மாறாது. அது மனுஷனுடைய முடிவை அல்லது மனுஷன் சென்றடையும் இடத்தை வெளிப்படுத்தும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது இறுதிக் கட்டத்தின் கிரியை அல்லது தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது மனுஷன் மீது கிரியை செய்யும் காலமாக இருந்தால், அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது. அவருடைய கிரியையின் மையநோக்கம் எப்போதும் மனுக்குலத்தின் இரட்சிப்பாகவே இருக்கும்; இதுதான் தேவன் மீதான உனது விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளின் நோக்கம் முழு மனுக்குலத்தின் இரட்சிப்பாக இருக்கிறது, அதாவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிப்பதாகும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குறிக்கோளையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றபோதிலும், ஒவ்வொன்றும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது, ஒவ்வொன்றும் மனுக்குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப செய்யப்படும் வெவ்வேறு இரட்சிப்பின் கிரியையாக இருக்கிறது. இந்த மூன்று கட்ட கிரியைகளின் நோக்கத்தை நீ அறிந்துகொண்டதும், ஒவ்வொரு கட்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீ அறிந்துகொள்வாய், மேலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வாய். உன்னால் இந்த நிலையை அடைய முடிந்தால், இந்த மாபெரும் தரிசனங்கள் எல்லாம் தேவன் மீதான உன் விசுவாசத்தின் அஸ்திபாரமாக மாறும். நீ நடைமுறைக்கான எளிய வழிகளை அல்லது ஆழ்ந்த சத்தியங்களைத் தேடுவது மட்டுமின்றி, நடைமுறையுடன் தரிசனங்களை இணைக்க வேண்டும், இதன்மூலம் கடைப்பிடிக்கக்கூடிய சத்தியங்கள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு ஆகிய இரண்டும் காணப்படும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை முழுமையாகப் பின்பற்றும் ஒருவனாக இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 6

மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையத்தில் உள்ளன, அவற்றில் தேவனுடைய மனநிலையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைப் பற்றி அறியாதவர்களால் தேவன் தமது மனநிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை உணர முடிவதில்லை, தேவனுடைய கிரியையின் ஞானத்தையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் மனுக்குலத்தை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றியும், முழு மனுக்குலத்திற்கான அவருடைய சித்தத்தைப் பற்றியும் அறியாதிருக்கிறார்கள். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் முழு வெளிப்பாடாகும். மூன்று கட்ட கிரியைகளையும் அறியாதவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பல்வேறு வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்ட கிரியையில் எஞ்சியிருக்கும் உபதேசத்தை மட்டுமே உறுதியாக பிடித்துக்கொண்டிருப்பவர்கள் தேவனை உபதேசத்திற்குள் அடக்குபவர்களாக இருக்கிறார்கள், தேவன் மீதான அவர்களுடைய நம்பிக்கை தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. இதுபோன்றவர்கள் ஒருபோதும் தேவனுடைய இரட்சிப்பைப் பெற மாட்டார்கள். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளால் மட்டுமே தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் மற்றும் முழு மனுக்குலத்தையும் இரட்சிப்பதற்கான தேவனுடைய நோக்கத்தையும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் முழு செயல்முறையையும் முழுமையாக வெளிப்படுத்த முடியும். இதுவே அவர் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஆதாயப்படுத்தினார் என்பதற்குச் சான்றாகும்; இதுவே தேவன் வெற்றிசிறந்ததற்கான சான்றாகும், மேலும் இதுவே தேவனுடைய முழு மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில் ஒரு கட்டத்தை மட்டுமே புரிந்துகொள்பவர்கள் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை மட்டுமே அறிவர். மனுஷனுடைய கருத்துக்களில், இந்த ஒரு கட்ட கிரியை உபதேசமாக மாறுவது எளிதானது. மேலும், மனுஷன் தேவனைப் பற்றி நிலையான விதிமுறைகளை உருவாக்கி, தேவனுடைய மனநிலையின் இந்த ஒரு பகுதியை தேவனுடைய முழு மனநிலையின் பிரதிநிதித்துவமாகப் பயன்படுத்துவான் என்பது சாத்தியமாகிறது. மேலும், மனுஷனுடைய கற்பனையின் பெரும்பகுதி கலக்கப்படுகிறது, அதாவது தேவன் ஒரு காலத்தில் இப்படி இருந்ததால், அவர் எல்லா காலத்திலேயும் இப்படியே இருப்பார், ஒருபோதும் மாற மாட்டார் என்று நம்பி, தேவனுடைய மனநிலை, இருக்கும் நிலை மற்றும் ஞானம், அத்துடன் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் ஆகியவற்றை குறுகிய வரம்பிற்குள் மனுஷன் மட்டுப்படுத்துகிறான். மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொண்டவர்களாலும் புரிந்துகொண்டவர்களாலும் மட்டுமே தேவனை முழுமையாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ள முடியும். குறைந்தபட்சம், அவர்கள் தேவனை இஸ்ரவேலரின் அல்லது யூதர்களின் தேவன் என்று வரையறுக்க மாட்டார்கள், மனுஷருக்காக எப்போதும் சிலுவையில் அறையப்படும் ஒரு தேவனாக அவரைப் பார்க்க மாட்டார்கள். தேவனுடைய ஒரு கட்ட கிரியையின் மூலமாக மட்டுமே ஒருவர் தேவனை அறிந்துகொண்டால், அவரது அறிவு மிகச் சிறியதாக இருக்கிறது, இது சமுத்திரத்திலுள்ள ஒரு துளியின் அளவை விட பெரியது அல்ல. இல்லையென்றால், பல பழைய மதக் காவலாளிகள் ஏன் தேவனைச் சிலுவையில் உயிருடன் அறைந்தார்கள்? இது மனுஷன் தேவனை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அடைத்து வைத்திருப்பதனால்தான் அல்லவா? பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும் உபதேசத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் தேவனை எதிர்க்கவில்லையா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கவில்லையா? இதுபோன்றவர்களின் அனுபவங்கள் மேலோட்டமானவை என்றாலும், அவர்கள் இயல்பாகவே அகந்தையுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாவும் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியமாகக் கருதுகின்றனர், பரிசுத்த ஆவியானவரின் ஒழுக்கங்களைப் புறக்கணிக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை “உறுதிப்படுத்த” தங்கள் பழைய அற்பமான வாக்குவாதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு செயலைச் செய்கின்றனர், மேலும் தங்கள் சொந்தக் கல்வி மற்றும் புலமையை முழுமையாக நம்புகின்றனர், மேலும் அவர்களால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லவா, புதிய யுகத்தால் அவர்கள் புறம்பாக்கப்படமாட்டார்களா? தேவனுக்கு முன்பாக வந்து அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அறியாதவர்களாகவும், விவரமறியாத பாதகர்களாகவும் இல்லையா, அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் என்பதைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள் அல்லவா? வேதாகமத்தைக் குறித்த மிகக் குறைவான அறிவைக் கொண்டு, அவர்கள் உலகின் “கல்வியாளர்களை” வரம்பு மீறி நடக்கச் செய்ய முயற்சி செய்கிறார்கள்; ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு மேலோட்டமான உபதேசத்தைக் கொண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறார்கள், மேலும் அது தங்களின் சொந்த சிந்தனை முறையைச் சுற்றியே சுழல முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறுகிய பார்வையுடைவர்களாக இருப்பதனால், 6,000 ஆண்டுகால தேவனுடைய கிரியையை ஒரே பார்வையில் பார்க்க முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கென்று குறிப்பிடத் தகுந்த எந்த அறிவும் கிடையாது! உண்மையில், தேவனைப் பற்றிய அறிவை ஜனங்கள் எந்த அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மெதுவாக அவருடைய கிரியையை நியாயந்தீர்க்கிறார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய இன்றைய கிரியையைப் பற்றிய அறிவைக் குறித்து சிறிதளவு பேசுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நியாயத்தீர்ப்புகளில் கண்முடித்தனமாக இருப்பதில்லை. ஜனங்கள் தேவனை எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாகவும், அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர், அந்த அளவுக்கு அவர்கள் தேவன் இருப்பதை தேவையில்லாமல் பறைசாற்றுகின்றனர், ஆனாலும் அவர்கள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், உண்மையான ஆதாரங்கள் எதையும் கொடுப்பதில்லை. இதுபோன்றவர்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பவர்கள் அற்பமானவர்களே! பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இல்லாதவர்கள், தங்கள் வாயால் அலம்புகிறார்கள், விரைவாக நியாந்தீர்க்கிறார்கள், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சரித்தன்மையை மறுக்க தங்கள் மனப்பாங்கிற்கு அளவுக்குமீறிய சுதந்திரம் கொடுக்கிறார்கள் மற்றும் அதை அவமதிக்கிறவர்களாகவும் தூஷிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள், இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியம் செய்யவில்லையா? மேலும், அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாவும், இயல்பாகவே பெருமை கொண்டவர்களாகவும், கட்டுப்பாடில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா? இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாள் வந்தாலும், தேவன் அவர்களைச் சகித்துக்கொள்ள மாட்டார். தேவனுக்காகக் கிரியை செய்பவர்களை அவர்கள் குறைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்கிறார்கள். இதுபோன்ற முரட்டாட்டம் பண்ணுகிறவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்த யுகத்திலோ அல்லது வரவிருக்கும் யுகத்திலோ, அவர்கள் என்றென்றும் நரகத்தில் அழிந்து போவார்கள்! இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதாகப் பாசாங்கு செய்கின்றனர். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தேவனுடைய நிர்வாக ஆணைகளுக்கு இடறலுண்டாக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே கட்டுப்பாடில்லாத, ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படியாத இறுமாப்புள்ளவர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடக்கவில்லையா? எப்போதும் புதியவரும், ஒருபோதும் முதுமையடையாதவருமான தேவனை அவர்கள் நாளுக்கு நாள் எதிர்க்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 7

மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு கிரியையின் பதிவாகும்; அவை மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் பதிவாகும், அவை கற்பனையானவை அல்ல. நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய முழு மனநிலையைப் பற்றிய அறிவைக் கண்டடைய விரும்பினால், தேவனால் செய்யப்படும் மூன்று கட்ட கிரியைகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்தக் கட்டத்தையும் தவிர்க்கக்கூடாது. இதுவே தேவனை அறிய முற்படுபவர்களால் அடையப்பட வேண்டிய குறைந்தபட்ச காரியங்களாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவை மனுஷனால் பொய்யாக புனைய முடியாது. இது மனுஷனால் கற்பனை செய்யக்கூடிய ஒன்றல்ல, ஒரு தனி நபருக்கு வழங்கப்படும் பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு தயவின் விளைவும் அல்ல. மாறாக, இது தேவனுடைய கிரியையை மனுஷன் அனுபவித்த பிறகு வரும் ஒரு அறிவாகும். மேலும், இது தேவனுடைய கிரியையைப் பற்றிய உண்மைகளை அனுபவித்த பிறகு மட்டுமே வரும் தேவனைப் பற்றிய அறிவாகும். இத்தகையதொரு அறிவை உடனே பெற முடியாது, மேலும் இது கற்பிக்கக்கூடிய ஒன்றும் அல்ல. இது முற்றிலும் தனிப்பட்ட அனுபவத்துடன் தொடர்புடையதாகும். மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பானது இந்த மூன்று கட்ட கிரியைகளின் மையத்தில் தான் உள்ளது, ஆனாலும் இரட்சிப்பின் கிரியைக்குள் பல கிரியை செய்யும் முறைகளும், தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தும் பல வழிமுறைகளும் அடங்கும். இதுதான் மனுஷன் அடையாளம் காண்பதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது, மேலும் இதுதான் மனுஷன் புரிந்துகொள்வதற்கு கடினமானதாக இருக்கிறது. யுகங்களைப் பிரித்தல், தேவனுடைய கிரியையில் காணப்படும் மாற்றங்கள், கிரியை நடக்கும் இடத்தின் மாற்றங்கள், இந்த கிரியையைப் பெறுபவரின் மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற பல என இவை அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் முறையிலுள்ள வேறுபாடு, அத்துடன் தேவனுடைய மனநிலை, சாயல், நாமம், அடையாளம் ஆகியவற்றின் மாற்றங்கள் அல்லது பிற மாற்றங்கள் என அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளின் பகுதியாகும். ஒரு கட்ட கிரியையால் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இது யுகங்களைப் பிரிப்பதையோ, அல்லது தேவனுடைய கிரியையின் மாற்றங்களையோ மற்றும் பிற அம்சங்களையோ உள்ளடக்குவதில்லை. இது தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய முழு கிரியையாகும். இரட்சிப்பின் கிரியையில் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய மனநிலையையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டும்; இந்த உண்மையில்லாமல், தேவனைப் பற்றிய உங்கள் அறிவு வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை, அது வெற்றுப் பேச்சே தவிர வேறு எதுவுமில்லை. இதுபோன்ற அறிவால் மனுஷனை நம்ப வைக்கவோ ஜெயங்கொள்ளவோ முடியாது; இது யதார்த்தத்துடன் முரண்படுகிறது, இது உண்மை அல்ல. இது ஏராளமானதாகவும், காதுக்கு இனிமையானதாகவும் இருக்கலாம், ஆனால் இது தேவனுடைய உள்ளார்ந்த மனநிலையுடன் முரண்பட்டால், தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். அவர் உனது அறிவைப் பாராட்டமாட்டார் என்பது மட்டுமின்றி, அவரை தேவதூஷணம் செய்த பாவியாக இருப்பதற்காக அவர் உன்னைப் பழிவாங்குவார். தேவனை அறிந்துகொள்வதற்கான வார்த்தைகள் இலகுவாக பேசப்படுவதில்லை. நீ சரளமாக பேசுகிறவனாகவும் வாக்கு வல்லமையுள்ளவனாகவும் இருந்தாலும் மற்றும் கருப்பை வெள்ளையாக இருப்பதாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் இருப்பதாகவும் வாதாடக்கூடிய அளவிற்கு உனது வார்த்தைகள் மிகவும் சாதுரியமாக இருந்தாலும், தேவனுடைய அறிவைப் பற்றி பேசுதல் என்று வரும்போது, நீ இன்னும் அறிவில்லாதவனாகவே இருக்கிறாய். தேவன் என்பவர் நீ கண்மூடித்தனமாக நியாயந்தீர்க்கக்கூடிய ஒருவரோ அல்லது சாதாரணமாகப் புகழக்கூடிய ஒருவரோ அல்லது ஆர்வமற்று சிறுமைப்படுத்தப்படக்கூடிய ஒருவரோ அல்ல. நீ எல்லோரையும் புகழ்கிறாய், ஆனாலும் தேவனுடைய உன்னதமான கிருபையை விவரிக்க சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நீ போராடுகிறாய், இதைத்தான் தோல்வியுற்றவர் ஒவ்வொரும் உணர வேண்டும். தேவனை விவரிக்கும் திறன் கொண்ட மொழிப் புலமையாளர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் விவரிக்கும் துல்லியம் தேவனுக்குரியவர்கள் பேசும் சத்தியத்தில் நூறில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது, தேவனுக்குரியவர்கள் குறைவான சொற்களை மட்டுமே கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில் வளமான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இவ்வாறு, தேவனைப் பற்றிய அறிவு துல்லியத்திலும் உண்மைத்தன்மையிலும் தான் இருக்கிறது, வார்த்தைகளை சாதுரியமாக பயன்படுத்துவதிலோ வளமான சொற்களைக் கொண்டிருப்பதிலோ இல்லை என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால், மனுஷனுடைய அறிவும் தேவனுடைய அறிவும் முற்றிலும் வேறுபட்டவையாகும். தேவனை அறிந்துகொள்ளும் பாடமானது மனுக்குலத்தின் எந்த இயற்கை அறிவியலையும் விட உயர்ந்ததாகும். இது தேவனை அறிந்துகொள்ள முயற்சிக்கிறவர்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானவர்களால் மட்டுமே அடையக்கூடிய ஒரு பாடமாகும், இதை திறமையுள்ள எந்தவொரு நபராலும் அடைந்துவிட முடியாது. ஆகையால், நீங்கள் தேவனை அறிந்துகொள்வதையும், சத்தியத்தைப் பின்தொடர்வதையும் வெறும் குழந்தையால் அடையக்கூடிய விஷயங்களாகப் பார்க்கக்கூடாது. நீ உன் குடும்ப வாழ்க்கை, அல்லது உன் தொழில், அல்லது உன் திருமணத்தில் முற்றிலும் வெற்றிபெற்றவனாக இருக்கலாம், ஆனால் சத்தியம் மற்றும் தேவனுடைய வார்த்தை என்று வரும்போது, உன்னையே காண்பிக்க உன்னிடம் எதுவுமில்லை மற்றும் நீ எதையும் அடையவுமில்லை. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது உனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், தேவனை அறிந்துகொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இதுதான் உங்கள் சிரமமாக இருக்கிறது, இதுதான் முழு மனுக்குலமும் எதிர்கொள்ளும் சிரமமாக இருக்கிறது. தேவனை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றவர்களில், தரத்தைப் பூர்த்தி செய்பவர்கள் யாருமில்லை. தேவனை அறிந்துகொள்வது என்றால் என்ன, அல்லது தேவனை அறிந்துகொள்வது ஏன் அவசியம், அல்லது தேவனை அறிந்துகொள்ள ஒருவர் எந்த அளவை அடைய வேண்டும் என்று மனுஷனுக்குத் தெரியாது. இதுதான் மனுக்குலத்திற்கு மிகவும் குழப்பமானதாக இருக்கிறது, இது மனுக்குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இக்கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை, இக்கேள்விக்கு பதிலளிக்கவும் யாரும் தயாராக இல்லை. ஏனென்றால், இன்றுவரை மனுக்குலத்திலுள்ள யாரும் இக்கிரியையைப் பற்றிய ஆய்வில் எந்த வெற்றியும் பெற்றதில்லை. ஒருவேளை, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய புதிர் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்படும்போது, தேவனை அறிந்த திறமையானவர்களைக் கொண்ட ஒரு கூட்டம் அடுத்தடுத்து தோன்றும். நிச்சயமாகவே, அதுதான் விஷயம் என்று நம்புகிறேன். மேலும், நான் இக்கிரியையைச் செய்வதற்கான செயல்முறையில் இருக்கிறேன் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற திறமையான நபர்கள் தோன்றுவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் இந்த மூன்று கட்ட கிரியைகளின் உண்மைக்கு சாட்சி கொடுப்பவர்களாக மாறுவார்கள். நிச்சயமாகவே, இந்த மூன்று கட்ட கிரியைகளுக்கு அவர்கள்தான் முதலில் சாட்சி பகருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால், தேவனுடைய கிரியை முடிவடையும் நாளில் இதுபோன்ற திறமையானவர்கள் வெளிப்படாவிட்டால் அல்லது மாம்சமாகிய தேவனால் பரிபூரணமாக்கப்படுவதைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்ட இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தால், அதைவிட வேதனையும் வருத்தமும் மிக்கது எதுவுமில்லை. ஆனாலும், இது மிகவும் மோசமான சூழ்நிலைதான். எது எப்படி இருந்தாலும், உண்மையிலேயே பின்தொடர்பவர்களால்தான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆதிகாலம் முதற்கொண்டு, இதுபோன்ற கிரியைகள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இதுபோன்ற கிரியை மனித வளர்ச்சி வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. தேவனை அறிந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக உன்னால் உண்மையிலேயே மாற முடிந்தால், இது சகல சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மேலான கெளரவமாக இருக்காதா? மனுக்குலத்தின் மத்தியில் எந்த சிருஷ்டியாகிலும் தேவனால் அதிகமாக பாராட்டப்படுவானா? இதுபோன்ற கிரியையை அடைவது எளிதானதல்ல, ஆனால் இறுதியில் இன்னும் வெகுமதிகளை அறுவடை செய்யும். அவர்களுடைய பாலினம் அல்லது நாடு என எதுவாக இருந்தாலும், தேவனைப் பற்றிய அறிவை அடையக்கூடிய அனைவரும் இறுதியில் தேவனுடைய மிகப் பெரிய கனத்தைப் பெறுவார்கள், மேலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். இதுதான் இன்றைய கிரியையாகும். இது எதிர்காலத்தின் கிரியையும் ஆகும். இது 6,000 ஆண்டுகால கிரியைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடைசி மற்றும் மிக உயர்ந்த கிரியையாகும், மேலும் இது ஒவ்வொரு வகை மனுஷரையும் வெளிப்படுத்தும் ஒரு கிரியை முறையாகும். தேவன் மனுஷனை அறிந்துகொள்ளச் செய்யும் கிரியையின் மூலம், மனுஷனுடைய வெவ்வேறு தராதரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: தேவனை அறிந்தவர்களே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியுள்ளவர்கள், அதேநேரத்தில் தேவனை அறியாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியற்றவர்கள். தேவனை அறிந்தவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள், தேவனை அறியாதவர்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று அழைக்க முடியாது. தேவனுக்கு நெருக்கமானவர்களால் தேவனுடைய எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியும், ஆனால் அவருக்கு நெருக்கமில்லாதவர்கள் அவருடைய எந்த கிரியைக்கும் தகுதியானவர்கள் அல்ல. இது உபத்திரவங்கள், சுத்திகரிப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் இறுதியில் தேவனைப் பற்றிய அறிவை மனுஷனை அடைய அனுமதிப்பதற்காகவே உள்ளன, இதன்மூலம் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிவான். இதுதான் இறுதியில் அடையப்படும் பலனாகும். மூன்று கட்ட கிரியைகளில் எதுவும் மறைக்கப்படவில்லை, இது தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு நன்மையானதாக இருக்கிறது மற்றும் தேவனைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற மனுஷனுக்கு உதவுகிறது. இக்கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு நன்மை பயக்கின்றவையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 8

தேவனுடைய கிரியைதான் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனமாகும், ஏனென்றால் தேவனுடைய கிரியையை மனுஷனால் அடைய முடியாது, மனுஷன் இதைக் கொண்டிருக்கவும் இல்லை. மூன்று கட்ட கிரியைகள் தேவனுடைய முழு நிர்வாகமாகும், மேலும் மனுஷனால் அறிந்துகொள்ளப்பட வேண்டிய மாபெரும் தரிசனம் எதுவுமில்லை. இந்த வல்லமையான தரிசனத்தை மனுஷன் அறிந்திருக்கவில்லை என்றால், தேவனை அறிந்துகொள்வது எளிதானதல்ல. தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல. மேலும், மனுஷன் நடக்கும் பாதை பெருமளவில் கடினமானதாகிவிடும். தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இந்த தரிசனங்கள்தான் மனுஷனை இந்நாள் வரையிலும் பாதுகாத்து, மனுஷனுக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அளித்துள்ளன. எதிர்காலத்தில், உங்கள் அறிவு ஆழமாக வேண்டும், மேலும் அவருடைய முழு சித்தத்தையும், அவருடைய ஞானமான கிரியையின் சாராம்சத்தையும் நீங்கள் மூன்று கட்ட கிரியைகளுக்குள் அறிந்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் உண்மையான வளர்ச்சியாகும். கிரியையின் இறுதிக் கட்டம் தனியாக நிற்காது, ஆனால் இது முந்தைய இரண்டு கட்டங்களுடன் சேர்ந்து உருவான முழுமையின் ஒரு பகுதியாக இருக்கிறது, அதாவது மூன்று கட்ட கிரியைகளில் ஒன்றை மட்டுமே செய்வதன் மூலம் இரட்சிப்பின் முழு கிரியையையும் முடிக்க முடியாது என்று சொல்லலாம். இறுதிக் கட்ட கிரியையினால் மனுஷனை முழுமையாக இரட்சிக்க முடிந்தாலும், இந்த ஒற்றைக் கட்டத்தை மட்டுமே செய்ய வேண்டியது அவசியம் என்றோ, முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் மனுஷனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிக்க தேவையில்லை என்றோ அர்த்தமல்ல. மூன்று கட்டங்களின் எந்த ஒரு கட்டமும் முழு மனுக்குலத்தாலும் அறியப்பட வேண்டிய ஒரே தரிசனம் என்று கருத முடியாது, ஏனென்றால் இரட்சிப்பின் முழு கிரியையும் மூன்று கட்ட கிரியைகளையும் குறிக்கிறது, அவற்றில் ஒரு கட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. இரட்சிப்பின் கிரியை நிறைவேற்றப்படாத வரை, தேவனுடைய நிர்வாகத்தால் ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாது. தேவனுடைய இயல்பு, அவருடைய மனநிலை மற்றும் அவருடைய ஞானம் ஆகியவை இரட்சிப்பின் கிரியை முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்றன. இவை மனுஷனுக்கு ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் படிப்படியாக இரட்சிப்பின் கிரியையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரட்சிப்பின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், அவருடைய இயல்பின் ஒரு பகுதியையும் வெளிப்படுத்துகிறது. எந்தக் கட்ட கிரியையும் தேவனுடைய இயல்பை நேரடியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு, மூன்று கட்ட கிரியைகள் முடிந்த பிறகு மட்டுமே இரட்சிப்பின் கிரியை முழுமையாக முடிக்க முடியும், ஆகையால் தேவனுடைய முழுமையைப் பற்றிய மனுஷனுடைய அறிவை தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு கட்ட கிரியையிலிருந்து மனுஷன் பெறுவது அவருடைய கிரியையின் ஒரு பகுதியில் வெளிப்படுத்தப்படும் தேவனுடைய மனநிலையாகும். இக்கட்டங்களுக்கு முன்னும் பின்னும் வெளிப்படுத்தப்படும் மனநிலையையும் இயல்பையும் இது குறிக்க முடியாது. ஏனென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையை ஒரு காலகட்டத்தில் அல்லது ஒரு இடத்தில் உடனடியாக முடிக்க முடியாது, ஆனால் வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனுஷனுடைய வளர்ச்சி நிலைக்கு ஏற்ப படிப்படியாக ஆழமாகிறது. இதுதான் இக்கட்டங்களில் செய்யப்படும் கிரியையாகும், இது ஒரு கட்டத்தில் மட்டும் முடிக்கப்படுவதில்லை. ஆகையால், தேவனுடைய முழு ஞானமும் ஒரு தனி கட்டத்தில் மட்டுமல்லாமல் மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய முழு இயல்பும் மற்றும் முழு ஞானமும் இந்த மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய இயல்பு உள்ளது மற்றும் ஒவ்வொரு கட்டமும் அவருடைய கிரியையின் ஞானத்தின் ஒரு பதிவாக இருக்கிறது. இந்த மூன்று கட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய முழு மனநிலையையும் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். மேலும், தேவனை வணங்கும் போது ஜனங்களுக்கு இந்த அறிவு இல்லையென்றால், அவர்கள் புத்தரை வணங்குபவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தையக் கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 9

மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தையக் கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் அழிக்கப்படாத முந்தைய கட்டத்தின் அஸ்திபாரத்திலிருந்து தொடர்கிறது. இவ்வாறு, எப்போதும் புதியதாகவும், ஒருபோதும் பழையதாகாத அவருடைய கிரியையில், தேவன் இதற்கு முன்பு ஒருபோதும் மனுஷனுக்கு வெளிப்படுத்தாத தனது மனநிலையின் அம்சங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதனுக்கு எப்போதும் தனது புதிய கிரியையையும் அவருடைய புதிய இருப்பையும் வெளிப்படுத்துகிறார். பழைய மதக் காவலர் இதை எதிர்ப்பதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாலும், அதை வெளிப்படையாக எதிர்த்தாலும், தேவன் தான் செய்ய விரும்பும் புதிய கிரியையை எப்போதும் செய்கிறார். அவரது கிரியை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, இதன் விளைவாக அது எப்போதும் மனுஷனுடைய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஆகையால், அவருடைய கிரியையின் காலத்தையும் பெறுநர்களையும் போலவே, அவருடைய மனநிலையும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும், அவர் இதற்கு முன் எப்போதும் செய்திராத கிரியையையே செய்கிறார், இதற்கு முன் செய்த கிரியைக்கு முரண்பாடாகவும் வேறுபாடாகவும் இருப்பதாக மனுஷனுக்குத் தோன்றும் கிரியையையும் செய்கிறார். மனுஷனால் ஒரு வகையான கிரியையை அல்லது ஒரு நடைமுறைப் பாதையை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், தங்களுக்கு முரண்பாடான அல்லது தங்களை விட உயர்வான கிரியை அல்லது நடைமுறை வழிகளை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாகும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் புதிய கிரியையைச் செய்கிறார், அதனால்தான் தேவனுடைய புதிய கிரியையை எதிர்க்கும் மத வல்லுநர்கள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகிறது. தேவன் எவ்வாறு எப்போதுமே புதியவராக இருக்கிறார், ஒருபோதும் பழையவராக இருப்பதில்லை என்பது பற்றி மனுஷனுக்கு எந்த அறிவும் இல்லை என்பதனாலும், தேவனுடைய கிரியையின் கொள்கைகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும் மற்றும் தேவன் மனுஷனை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும், இந்த ஜனங்கள் வல்லுநர்களாகிவிட்டனர். ஆகையால், இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் கிரியையா, அது தேவனுடைய கிரியையா என்பதை மனுஷனால் முழுவதுமாகச் சொல்ல முடியவில்லை. பலர் முன்பு வந்த வார்த்தைகளுடன் தொடர்புடைய ஒன்றின் மனப்பாங்கைப் பற்றிக்கொண்டு, அதை ஏற்றுக்கொள்கிறார்கள். முந்தைய கிரியையுடன் வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள் மற்றும் புறக்கணிக்கின்றார்கள். இன்று, நீங்கள் அனைவரும் இதுபோன்ற கொள்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கவில்லையா? மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் உங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மேலும் முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் தாங்கள் அறிந்துகொள்ள அவசியமில்லாத ஒரு பாரமாகவே இருப்பதாக நம்புகிறவர்களும் இருக்கின்றார்கள். இக்கட்டங்கள் ஜனங்களுக்கு அறிவிக்கப்படக்கூடாது என்றும், முடிந்த அளவு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனால் மூன்று கட்ட கிரியைகளின் முந்தைய இரண்டு கட்டங்களால் ஜனங்கள் குழப்பமாக உணர மாட்டார்கள் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். முந்தைய இரண்டு கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வது மிகவும் அதிகமானது என்றும், தேவனை அறிந்துகொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள், நீங்களும் அப்படித்தான் நினைக்கின்றீர்கள். இன்று, இவ்விதமாகச் செயல்படுவது சரியானது என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்கள், ஆனால் எனது கிரியையின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரும் நாள் வரும்: முக்கியத்துவமில்லாத எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் மூன்று கட்ட கிரியைகளை உங்களுக்கு அறிவிப்பதனால், அவை உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும். இந்த மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையமாக இருப்பதால், அவை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரின் மையமாக வேண்டும். ஒரு நாள், நீங்கள் அனைவரும் இந்தக் கிரியையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை அறியாததினாலும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த உங்கள் முரட்டாட்டமான நடத்தையினாலும், நீங்கள் தேவனுடைய கிரியையை எதிர்க்கிறீர்கள் அல்லது இன்றைய கிரியையை அளவிட உங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையைக் கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் மூலதனம் ஆகும். உன்னுடைய ஒழுக்கம் எவ்வளவு அதிகமாக சீர்கெட்டிருக்கிறதோ, உன்னுடைய குணாதிசயங்கள் எவ்வளவு அதிகமாக அருவருப்பாக இருக்கிறதோ, உன்னுடைய மனிதத்தன்மை எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களைக் கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள். உனது கருத்துக்கள் சரிசெய்யப்படாவிட்டால், அவை எப்போதும் தேவனுக்கு எதிராகவே இருக்கும். நீ ஒருபோதும் தேவனுடன் இணக்கமாக இருக்கமாட்டாய், எப்போதும் அவரிடமிருந்து விலகியே இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 10

மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகள் வெவ்வேறு யுகங்களிலும் இடங்களிலும் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிரியையும் வேறுபட்டதாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரே தேவனால் செய்யப்படும் கிரியையாகும். எல்லா தரிசனங்களிலும், இதுவே மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. மனுஷனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தால், அவனால் உறுதியாக நிற்க முடியும். இன்று, பல்வேறு மதங்கள் மற்றும் மதப்பிரிவுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அறிவதில்லை, மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் பரிசுத்த ஆவியானவருடையதல்லாத கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடிவதில்லை, இதனால், அவர்கள் கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் போலவே, இந்தக் கட்ட கிரியையும் யேகோவா தேவனால் செய்யப்படுகிறதா என்று சொல்ல முடிவதில்லை. ஜனங்கள் தேவனைப் பின்பற்றினாலும், பெரும்பாலானவர்களால் இது சரியான வழிதானா என்று இன்னும் சொல்ல முடிவதில்லை. தேவனால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படுகிற வழி இதுதானா, தேவன் மாம்சமாகியிருப்பது உண்மைதானா என்று மனுஷன் கவலைப்படுகிறான், மேலும் இதுபோன்ற விஷயங்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய எந்த துப்பும் இன்னமும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. தேவனைப் பின்பற்றுபவர்களால் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகையால், பேசப்படும் செய்திகள் இந்த ஜனங்கள் மத்தியில் ஒரு பகுதியளவு தாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளன, மேலும் அவற்றால் முழுவதும் பயனுள்ளதாக இருக்க முடியாது, ஆதலால் இதுபோன்றவர்களின் ஜீவிய பிரவேசத்தை இது பாதிக்கிறது. மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும். மனுஷனுடைய தரிசனங்கள் தெளிவற்றவையாக இருப்பதனாலும், மனுஷன் யேகோவாவை தேவனாகவும், இயேசுவை கர்த்தராகவும் மட்டுமே அறிந்திருப்பதாலும், இன்றைய மாம்சமாகிய தேவனைப் பற்றி இரு மனதுடன் காணப்படுவதாலும், பலர் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள், இன்றைய கிரியையை பற்றிய கருத்துக்களால் குழம்பியிருக்கின்றார்கள், பெரும்பாலானவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் காணப்படுவதோடு, இன்றைய கிரியையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றி மனுஷனிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், கடைசி இரண்டு கட்ட கிரியைகளின் யதார்த்தத்தை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் அவற்றைப் பார்த்ததும் இல்லை. ஏனென்றால், இந்தக் கட்ட கிரியைகளை மனுஷன் விரும்புவது போலக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவன் எதைக் கொண்டு வந்தாலும், இதுபோன்ற கற்பனைகளை நிரூபிக்க எந்த உண்மைகளும் இல்லை, அவற்றைச் சரிசெய்ய யாருமில்லை. மனுஷன் தனது மனப்போக்கிற்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கிறான், எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு, அவனது கற்பனையைச் சுதந்திரமாக அலையவிடுகிறான். ஏனென்றால், அவனுடைய கற்பனைகளைச் சரிபார்க்க எந்த உண்மைகளும் இல்லை, ஆகையால் மனுஷனுடைய கற்பனைகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை “உண்மை” ஆகின்றன. இவ்வாறு மனுஷன் தன் மனதில் கற்பனை செய்துள்ள தேவனை நம்புகிறான், யதார்த்த தேவனையோ தேடுவதில்லை. ஒரு நபருக்கு ஒரு வகையான நம்பிக்கை இருந்தால், நூறு பேரிடம் நூறு வகையான நம்பிக்கைகள் இருக்கும். மனுஷன் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தைக் காணாததாலும், அவன் அதைக் காதுகளால் மட்டுமே கேட்டு, அதைக் கண்களால் காணாததால், அவன் இதுபோன்ற நம்பிக்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். மனுஷன் புராணங்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் உண்மைகளைப் பற்றிய அறிவை அரிதாகவே கேள்விப்பட்டிருக்கின்றான். இவ்வாறு, ஒரு வருடமாக மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களின் மூலமாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள். இது தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசித்தவர்களுக்கும் பொருந்தும். உண்மைகளைப் பார்க்க முடியாதவர்களால் ஒருபோதும் தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்ட ஒரு விசுவாசத்திலிருந்து தப்பிக்க முடியாது. மனுஷன் தனது பழைய கருத்துக்களின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புதிய பிரதேசத்திற்குள் பிரவேசித்துவிட்டதாக நம்புகிறான். தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியாதவர்களின் அறிவு என்பது கருத்துக்களும் வதந்திகளுமே தவிர வேறு எதுவுமில்லை என்று மனுஷனுக்குத் தெரியாதா? மனுஷன் தனது கருத்துக்கள் சரியானவையாகவும் பிழையில்லாமலும் இருப்பதாக நினைக்கிறான், மேலும் இந்தக் கருத்துக்கள் தேவனிடமிருந்து வந்தவை என்றும் நினைக்கிறான். இன்று, மனுஷன் தேவனுடைய கிரியையைக் காணும்போது, பல வருடங்களாகக் கட்டி வைத்திருந்த கருத்துக்களை விட்டுவிடுகிறான். கடந்த காலத்தின் கற்பனைகளும் கருத்துக்களும் இந்தக் கட்டத்தின் கிரியைக்கு ஒரு தடையாக மாறியுள்ளன. மேலும், இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிடுவதும், இதுபோன்ற கருத்துக்களை மறுப்பதும் மனுஷனுக்கு கடினமாகிவிட்டது. இன்றுவரை தேவனைப் பின்தொடர்ந்தவர்களில் பலரின் இந்தப் படிப்படியான கிரியையைப் பற்றிய கருத்துக்கள் இன்னும் படுமோசமாகிவிட்டன. இவர்கள் மாம்சமாகிய தேவன் மீது படிப்படியாக ஒரு பிடிவாதமான பகைமையை உருவாக்கியுள்ளனர். இந்த வெறுப்பின் மூலக்காரணமானது மனுஷனுடைய கருத்துக்களிலும் கற்பனைகளிலும்தான் உள்ளது. மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் இன்றைய கிரியைக்கு எதிரியாகிவிட்டன, இக்கிரியை மனுஷனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உண்மைகள் மனுஷனை அவனுடைய கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்க அனுமதிக்காததினாலும் மற்றும் அவற்றை மனுஷனால் எளிதில் மறுக்க முடியாததினாலுமே இது நடந்துள்ளது. மேலும், மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் உண்மைகள் இருப்பதை ஆதரிக்கவில்லை. மேலும், மனுஷன் உண்மைகளின் சரித்தன்மையையும் உண்மைத்தன்மையையும் குறித்துச் சிந்திக்காததனால், பிடிவாதமாகத் தனது கருத்துக்களை அவிழ்த்துவிட்டு, தனது சொந்த கற்பனையைப் பயன்படுத்துகிறான். இது மனுஷனுடைய கருத்துகளின் தவறு என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இது தேவனுடைய கிரியையின் தவறு என்று கூற முடியாது. மனுஷன் தான் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் தேவனுடைய எந்தக் கட்ட கிரியையும் அல்லது அதில் எந்த சிறு பகுதியையும் அவன் தன்னிச்சையாக மறுக்காமல் போகலாம்; தேவனுடைய கிரியைக் குறித்த உண்மை மனுஷனால் மீறக்கூடாததாக இருக்கிறது. நீ உனது கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்கலாம், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய நல்ல கதைகளைத் தொகுக்கலாம், ஆனால் யேகோவா மற்றும் இயேசுவின் ஒவ்வொரு கட்ட கிரியையின் உண்மையையும் நீ மறுக்காமல் இருக்கலாம். இது ஒரு கொள்கையாகும், மேலும் இது ஒரு நிர்வாக ஆணையாகும். மேலும், இந்தப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்ட கிரியையானது மனுஷனுடைய கருத்துக்களுடன் பொருந்தாது என்றும், முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான காரியம் அல்ல என்றும் மனுஷன் நம்புகிறான். அவனுடைய கற்பனையில், முந்தைய இரண்டு கட்டங்களின் கிரியையும் நிச்சயமாகவே இன்றைய கிரியைக்கு சமமானதல்ல என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும், அவருடைய கிரியை எப்போதும் நடைமுறையானது என்றும் மற்றும் யுகத்தைப் பொருட்படுத்தாமல், அவருடைய கிரியையின் உண்மையை எதிர்க்கும் ஒரு பெரிய ஜனக்கூட்டம் எப்போதும் இருக்கும் என்றும் நீ எப்போதாவது கருதியிருக்கிறாயா? இந்தக் கட்ட கிரியையை இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த காலங்களிலும் தேவனை எதிர்த்திருப்பார்கள், ஏனென்றால் இதுபோன்றவர்கள் எப்போதுமே தேவனுடைய எதிரிகளாகத்தான் இருப்பார்கள். தேவனுடைய கிரியைப் பற்றிய உண்மையை அறிந்தவர்கள், மூன்று கட்ட கிரியைகளையும் ஒரே தேவனுடைய கிரியையாகவே பார்ப்பார்கள் மற்றும் தங்களுடைய கருத்துக்களை விட்டுவிடுவார்கள். இவர்கள்தான் தேவனை அறிந்தவர்கள், இதுபோன்றவர்கள்தான் தேவனை உண்மையாகவே பின்பற்றுபவர்கள். தேவனுடைய முழு நிர்வாகமும் அதன் முடிவை நெருங்கும் போது, தேவன் எல்லாவற்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். மனுஷன் சிருஷ்டிகரின் கைகளால் சிருஷ்டிக்கப்பட்டான், இறுதியில் அவர் மனுஷனை தமது ஆளுகையின் கீழ் முழுமையாகத் திருப்பிக் கொண்டுவர வேண்டும்; இதுவே மூன்று கட்ட கிரியைகளின் முடிவாகும். கடைசிக்கால கிரியையின் கட்டமும், இஸ்ரவேல் மற்றும் யூதேயாவிலுள்ள முந்தைய இரண்டு கட்டங்களும் முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள தேவனுடைய நிர்வாகத் திட்டமாகும். இதை ஒருவராலும் மறுக்க முடியாது, இது தேவனுடைய கிரியையைக் குறித்த உண்மையாகும். இந்தக் கிரியையை ஜனங்கள் அதிகம் அனுபவித்திருக்கவில்லை அல்லது கண்டிருக்கவில்லை என்றாலும், உண்மைகள் இன்னும் உண்மைகளாகவே இருக்கின்றன, இது எந்த மனிதனும் மறுக்க முடியாததாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் தேவனை நம்புகிறவர்கள் எல்லோரும் மூன்று கட்ட கிரியைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நீ ஒரு கட்ட கிரியையை மட்டுமே அறிந்திருந்து, மற்ற இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் கடந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய முழுமையான சத்தியத்தை உன்னால் பேச முடியாது மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ தேவனை அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை, ஆகையால் தேவனுக்குச் சாட்சி பகருவதற்கு நீ பொருத்தமானவனாக இல்லை. இக்காரியங்களைப் பற்றிய உனது தற்போதைய அறிவு ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இறுதியில் அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும். ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய முழு கிரியையையும் கண்டு அவருடைய ஆளுகையின் கீழ் அடிபணிவார்கள். இக்கிரியையின் முடிவில், எல்லா மதங்களும் ஒன்றாகிவிடும், எல்லாச் சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் திரும்புவார்கள், எல்லாச் சிருஷ்டிகளும் ஒரே மெய்தேவனை வணங்குவார்கள். தீய மதங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும், மீண்டும் ஒருபோதும் தோன்றாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 11

மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய இந்த தொடர்ச்சியான குறிப்பு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? யுகங்கள் கடந்து செல்வது, சமுதாய வளர்ச்சி மற்றும் இயற்கையின் மாறிவரும் முகம் அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் மாற்றங்களைப் பின்பற்றுகின்றன. மனுக்குலமானது தேவனுடைய கிரியையுடன் காலப்போக்கில் மாறுகிறது, அது தானாகவே உருவாவதில்லை. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளும் சகல சிருஷ்டிகளையும், ஒவ்வொரு மதத்தையும், மதப்பிரிவையும் சேர்ந்த அனைவரையும் ஒரே தேவனுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்காக குறிப்பிடப்படுகின்றன. நீ எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறுதியில் நீங்கள் எல்லோரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் அடிபணிவீர்கள். தேவனால் மட்டுமே இந்தக் கிரியையைச் செய்ய முடியும்; இதை எந்த மதத் தலைவராலும் செய்ய முடியாது. உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் மாற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவரால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்குக் கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது. யேகோவா தாமே மனுக்குலத்தை சிருஷ்டித்து ஒவ்வொன்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தினார். கடைசிக்காலம் வரும்போது, அவர் தமது சொந்தக் கிரியையை தாமே செய்வார், சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். இக்கிரியையை தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆதி முதல் இன்று வரை செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் எல்லாமே தேவனாலேயே செய்யப்பட்டன, அவை ஒரே தேவனாலேயே செய்யப்பட்டன. மூன்று கட்ட கிரியைகளின் உண்மை என்பது முழு மனுக்குலத்திற்கான தேவனுடைய தலைமைத்துவத்தைப் பற்றிய உண்மையாகும், இது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளின் முடிவில், சகலமும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும். ஏனென்றால், முழு பிரபஞ்சத்திலும் இந்த ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார், வேறு எந்த மதங்களும் இல்லை. உலகைச் சிருஷ்டிக்க முடியாதவரால் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது, அதேநேரத்தில் உலகைச் சிருஷ்டித்தவர் நிச்சயமாக அதை முடிவுக்குக் கொண்டுவர வல்லவராய் இருப்பார். ஆகையால், ஒருவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல், மனுஷனை அவனுடைய மனதை வளர்த்துக் கொள்ள உதவ மட்டுமே முடிந்தால், அவர் நிச்சயமாக தேவனாக இருக்க மாட்டார், நிச்சயமாக மனுக்குலத்தின் கர்த்தராக இருக்க மாட்டார். அவரால் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்ய முடியாது. இதுபோன்ற கிரியையைச் செய்யக்கூடியவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார், இக்கிரியையைச் செய்ய முடியாத எல்லோருமே நிச்சயமாக எதிரிகளாக இருக்கின்றனரே தவிர, அவர்கள் தேவன் அல்ல. தீய மதங்கள் அனைத்தும் தேவனுடன் இணக்கமாக இல்லை. மேலும், அவை தேவனுடன் இணக்கமாக இல்லை என்பதனால், அவை தேவனுடைய எதிரிகளாக இருக்கின்றன. கிரியைகள் அனைத்தும் இந்த ஒரு மெய்தேவனாலேயே செய்யப்படுகின்றன, மேலும் முழு பிரபஞ்சமும் இந்த ஒரே தேவனாலேயே கட்டளையிடப்படுகிறது. அவருடைய கிரியை இஸ்ரவேலில் அல்லது சீனாவில் செய்யப்பட்டாலும், கிரியை ஆவியானவரால் அல்லது மாம்சத்தினால் செய்யப்பட்டாலும், எல்லாமே தேவனாலேயே செய்யப்படுகிறது, வேறு ஒருவராலும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரே முழு மனுக்குலத்தின் தேவனாக இருக்கிறார், அதனால் அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும், தடையின்றியும் கிரியை செய்கிறார். இதுவே எல்லா தரிசனங்களிலும் மிகவும் பெரியதாகும். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்யவும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்பினால், நீ தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும், சிருஷ்டிகளுக்கான தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அவருடைய நிர்வாகத் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர் செய்யும் கிரியையின் முக்கியத்துவம் அனைத்தையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தேவனுடைய தகுதியான சிருஷ்டிகள் அல்ல! தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ எங்கிருந்து வந்தாய் என்று உனக்குப் புரியவில்லை என்றால், மனுக்குலத்தின் வரலாற்றையும், தேவன் செய்த கிரியைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும், இன்று வரை மனுக்குலம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் முழு மனுக்குலத்திற்கும் கட்டளையிடுகிறவர் யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றால், உன்னால் உன் கடமையைச் செய்ய இயலாது. தேவன் இன்று வரை மனுக்குலத்தை வழிநடத்தியுள்ளார். பூமியில் மனுஷனை சிருஷ்டித்தது முதல் அவர் மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை. பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் கிரியை செய்வதை நிறுத்துவதில்லை, மனுக்குலத்தை வழிநடத்துவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை, மனுக்குலத்தை ஒருபோதும் விட்டுவிட்டதில்லை. ஆனால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை மனுஷன் உணரவுமில்லை, அவன் தேவனை அறியவுமில்லை. தேவனுடைய சகல சிருஷ்டிகளுக்கும் இதைவிட இழிவானது ஏதேனும் உண்டா? தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷனை வழிநடத்துகிறார், ஆனால் மனுஷன் தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்வதில்லை. நீ தேவனுடைய ஒரு சிருஷ்டி, ஆனாலும் உனது சொந்த வரலாற்றை நீ புரிந்துகொள்ளவில்லை, உனது பயணத்தில் உன்னை வழிநடத்தியவர் யார் என்று தெரியவில்லை, தேவன் செய்த கிரியையை நீ அறியாமல் இருக்கிறாய், அதனால் உன்னால் தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. நீ இன்னும் இப்போது இதையெல்லாம் பற்றி அறிந்துகொள்ளவில்லை என்றால், நீ ஒருபோதும் சாட்சி பகருவதற்குத் தகுதியானவனாக இருக்க மாட்டாய். இன்று, சிருஷ்டிகர் தனிப்பட்ட முறையில் சகல ஜனங்களையும் மீண்டும் ஒரு முறை வழிநடத்துகிறார் மற்றும் சகல ஜனங்களையும் அவருடைய ஞானம், சர்வவல்லமை, இரட்சிப்பு மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காணச் செய்கிறார். ஆனாலும் நீ இன்னும் உணரவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை, ஆகையால் நீ இரட்சிப்பைப் பெறாத ஒருவன் அல்லவா? சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில்லை, அதேநேரத்தில் தேவனுக்குச் சொந்தமானவர்களால் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடிகிறது. நான் பேசும் வார்த்தைகளை உணர்ந்து புரிந்துகொள்பவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள், தேவனுக்கு சாட்சி கொடுப்பார்கள். நான் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரும் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது, மேலும் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாலும், தேவனுடைய கிரியையை உணராதவர்களாலும் தேவனுடைய அறிவை அடைய இயலாது, இதுபோன்றவர்கள் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது. நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க விரும்பினால், நீ தேவனை அறிந்திருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவானது தேவனுடைய கிரியையின் மூலமே பெறப்படுகிறது. மொத்தத்தில், நீ தேவனை அறிந்துகொள்ள விரும்பினால், நீ தேவனுடைய கிரியையை அறிந்திருக்க வேண்டும்: தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். மூன்று கட்ட கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவனுக்கு சாட்சி பகருகிறவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும், தேவனை அறிந்தவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும் உருவாக்கப்படும். இவர்கள் அனைவரும் தேவனை அறிந்துகொள்வார்கள், இவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலும். இவர்கள் மனிதத்தன்மையையும் அறிவையும் கொண்டிருப்பார்கள், தேவனுடைய மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியையாகும், இவர்கள்தான் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் பலன்களாவார்கள் மற்றும் சாத்தானின் இறுதித் தோல்விக்கு மிகவும் வல்லமையான சாட்சிகளாவார்கள். தேவனுக்குச் சாட்சி பகரக்கூடியவர்களாலேயே தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் மற்றும் இறுதியில் மீதியான ஜனக்கூட்டமாக இருப்பார்கள், இவர்களே தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தேவனுக்குச் சாட்சி பகருவார்கள். நீங்கள் எல்லோருமே அந்த ஜனக்கூட்டத்தின் அங்கத்தினராகலாம் அல்லது பாதிப் பேர் மட்டுமே அங்கத்தினராகலாம் அல்லது ஒரு சிலரே அங்கத்தினராகலாம், இது உங்கள் விருப்பத்தையும் உங்கள் நாட்டத்தையும் பொறுத்ததாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 12

ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டத்தாலும் தனியாக மூன்று யுகங்களின் கிரியைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் ஒட்டுமொத்தத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்தக் கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும். ஆகையால், தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மட்டுமே கிரியையைச் செய்திருந்தால், மனுஷன், “ஆலயத்தில் இருக்கும் தேவனே தேவன், மேலும், தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் ஆசாரிய உடைகளை அணிந்து ஆலயத்தினுள் நுழைய வேண்டும்,” என்ற வரையறைக்குள் தேவனைக் கட்டுப்படுத்தியிருந்திருப்பான். கிருபையின் யுகத்தில் கிரியைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிருக்காமலும், நியாயப்பிரமாணத்தின் யுகம் இன்றுவரை தொடர்ந்திருந்தால், தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதையும் மனுஷன் அறிந்திருக்க மாட்டான். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் கிரியை செய்யப்பட்டிருக்காவிட்டால், அதற்குப் பதிலாகக் கிருபையின் யுகத்தில் மட்டுமே கிரியை செய்யப்பட்டிருந்தால், தேவனால் மனுஷனை மீட்டு மனுஷனின் பாவங்களையும் மன்னிக்க முடியும் என எல்லா மனுஷரும் அறிந்திருப்பர். அவரே பரிசுத்தமானவர், பாவமறியாதவர் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருப்பான், மேலும் மனுஷனுக்காகவே அவர் தம்மைப் பலியாகக் கொடுத்து சிலுவையில் அறைந்துகொள்ள முடியும் என்பதையும் மனுஷன் அறிந்திருப்பான். மனுஷனுக்கு இந்த விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் வேறு எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு யுகமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில், கிருபையின் யுகத்தில், மற்றும் தற்போதைய கட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய மனநிலையின் அம்சங்களைப் பொறுத்தவரை: மூன்று கட்டங்களும் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அவற்றால் தேவனின் மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். மூன்று கட்டங்களையும் மனுஷன் அறிந்தால் மட்டுமே அவனால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. கிரியையின் இந்த மூன்று கட்டங்களையும் அறிந்த பிறகு மட்டுமே உன்னால் தேவனின் மனநிலையை முழுமையாகக் காண முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவன் தமது கிரியையை நிறைவு செய்தார் என்பது அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மட்டுமே என்பதை நிரூபிக்கவில்லை, மேலும் அவர் மீட்பின் கிரியையை நிறைவுசெய்தார் என்பதற்குத் தேவன் மனுஷகுலத்தை என்றென்றும் மீட்பார் என்று அர்த்தமல்ல. இவை அனைத்தும் மனுஷனால் உருவாக்கப்பட்ட முடிவுகள். கிருபையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டதால், தேவன் சிலுவையைச் சேர்ந்தவர் என்றும் சிலுவை மட்டுமே தேவனின் இரட்சிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உன்னால் சொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தேவனை வரையறுப்பதாகும். தற்போதைய கட்டத்தில், தேவன் முக்கியமாக வார்த்தையின் கிரியையை மட்டுமே செய்கிறார், ஆனால் தேவன் ஒருபோதும் மனுஷனிடம் இரக்கம் காட்டவில்லை என்றும் அவர் கொண்டு வந்ததெல்லாம் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் மட்டும்தான் என்றும் உன்னால் சொல்ல முடியாது. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும். ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முடிந்தபிறகுதான், தேவனின் மனநிலையை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்வான், ஏனென்றால் அவருடைய நிர்வகித்தல் அப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 13

ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முழுமைக்கும் செய்யப்பட்ட கிரியைகள் அனைத்தும் இப்போது முடிவடைய இருக்கின்றன. இந்தக் கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்டு மனுஷகுலத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, தேவனின் மனநிலை, அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் எதைக் கொண்டிருக்கிறார் என்பதை மனுஷகுலம் அறிந்து கொள்ளும். இந்தக் கட்டத்தின் கிரியைகள் முழுமையாக முடிந்ததும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், முன்னர் புரிந்து கொள்ளப்படாத அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும், மேலும் மனுஷ இனம் அவர்களின் எதிர்காலப் பாதை மற்றும் அவர்கள் சென்றுசேரும் இடம் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும். இதுவே தற்போதைய கட்டத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைகள் ஆகும். இன்று மனுஷன் நடந்து செல்லும் பாதைதான் சிலுவையின் பாதை மற்றும் துன்பத்தின் பாதை என்றாலும், இன்று மனுஷன் செய்யும் பயிற்சி, இன்று அவன் புசித்துக் குடிக்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் கிருபையின் யுகத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழ் மனுஷனிடம் வந்துவிழுந்ததில் இருந்து பெரியளவில் மாறுபட்டவையாகும். இன்றைய நாளில் மனுஷனிடம் கேட்கப்படுவது கடந்த காலத்தைப் போலல்லாதது, மேலும் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனிடம் கேட்டதைப் போலல்லாதது ஆகும். இஸ்ரவேலில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனுஷனிடம் நியாயப்பிரமாணத்தின் கீழ் என்ன கேட்கப்பட்டது? மனுஷன் ஓய்வு நாளையும், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. யாரும் ஓய்வுநாளில் வேலை செய்யவோ, யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மீறவோ கூடாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஓய்வுநாளில், மனுஷன் வழக்கம் போல் வேலை செய்கிறான், கூடுகிறான், ஜெபிக்கிறான், அவனுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில் இருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் உபவாசம் இருக்கவும், அப்பத்தை பிட்கவும், திராட்சைரசம் பருகவும், முக்காடிடவும், அவர்களுக்காக மற்றவர்கள் அவர்களது கால்களைக் கழுவவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்போது, இந்த விதிகள் ஒழிக்கப்பட்டுள்ளன, ஆனால் மனுஷனிடமிருந்து அதைவிட அதிகமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன, ஏனென்றால் தேவனின் கிரியை இன்னும் ஆழமாக வளர்ந்து, மனுஷனின் பிரவேசம் உயர்ந்த இடத்தை அடைகிறது. கடந்த காலத்தில், இயேசு மனுஷன் மீது கை வைத்து ஜெபம் செய்தார், ஆனால் இப்போது எல்லாம் சொல்லப்பட்டுவிட்டதால், கைகளை வைப்பதால் என்ன பயன்? வார்த்தைகளால் மட்டுமே முடிவுகளை அடைய முடியும். கடந்த காலங்களில் அவர் மனுஷன் மீது கை வைத்தபோது, அது மனுஷனை ஆசீர்வதிப்பதற்கும், அவனுடைய நோய்களைக் குணப்படுத்துவதற்கும் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் இப்படித்தான் கிரியை செய்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கும் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, உங்களுக்குச் சொல்லப்பட்டதைப் போலவே அவற்றை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளே அவருடைய சித்தம்; அவர் செய்ய விரும்பும் கிரியைகள் அவை. அவருடைய வார்த்தைகளின் மூலம், அவருடைய சித்தத்தையும், அவர் உன்னை அடையச் சொல்லும் விஷயங்களையும் நீ புரிந்துகொள்வாய், மேலும் கைகளை வைப்பதற்கான எந்த தேவையும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை நீ நேரடியாகக் கடைப்பிடிக்கலாம். சிலர், “உமது கைகளை என்மீது வையும்! உம்முடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கும், உம்முள் நான் பங்கெடுப்பதற்கும் உமது கைகளை என்மேல் வையும்,” என்று கூறுவர். இவை அனைத்தும் கடந்த காலத்திலிருந்து வந்த காலாவதியான நடைமுறைகள், இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனெனில் யுகம் மாறிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் சீரற்றதாகவோ அல்லது விதிகளை அமைப்பதற்கு இணங்கவோ இல்லாமல் யுகத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். யுகம் மாறிவிட்டது, மேலும் ஒரு புதிய யுகம் அதனுடன் புதிய கிரியையைக் கொண்டுவருகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் இதுதான் உண்மை, எனவே அவருடைய கிரியை ஒருபோதும் மீண்டும் நிகழ்த்தப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில், இயேசு, நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது, மனுஷனுக்காக ஜெபிக்க தமது கைகளை அவன்மீது வைப்பது, மனுஷனை ஆசீர்வதிப்பது போன்ற குறிப்பிட்ட அளவு கிரியைகளைச் செய்தார். இருப்பினும், இன்றைய நாளில் மீண்டும் அவ்வாறு செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் அவ்வாறாகக் கிரியை செய்தார், ஏனென்றால் அது கிருபையின் யுகம், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபை இருந்தது. அவனிடம் இருந்து எந்தவொரு காசும் கேட்கப்படவில்லை, அவனுக்கு விசுவாசம் இருந்தால், அவன் கிருபையைப் பெறுவான். அனைவரும் மிகவும் கிருபையுடன் நடத்தப்பட்டனர். இப்போது யுகம் மாறிவிட்டதாலும், தேவனின் கிரியை மேலும் முன்னேறியுள்ளதாலும்; சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமே மனுஷனின் கலகத்தனமும் மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தமான விஷயங்களும் அகற்றப்படும். அந்தக் கட்டம் மீட்பின் கட்டமாக இருப்பதால், மனுஷன் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்கும், கிருபையின் மூலம் அவன் செய்த பாவங்களை மன்னிப்பதற்கும், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபையை காண்பிப்பதற்கும், அவ்வாறாகச் செயல்படுவதற்கும் தேவன் விரும்பினார். இந்தத் தற்போதைய கட்டம், மனுஷனுக்குள் உள்ள அநீதியை சிட்சை, நியாயத்தீர்ப்பு, வார்த்தைகளால் அடித்தல், அத்துடன் ஒழுக்கம் மற்றும் வார்த்தைகளின் வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் அம்பலப்படுத்துவதாகும், இதனால் மனுஷகுலம் பின்னர் இரட்சிக்கப்படலாம். இது மீட்பை விட ஆழமான கிரியை ஆகும். கிருபையின் யுகத்தில் இருந்த கிருபை மனுஷனின் இன்பத்திற்குப் போதுமானதாக இருந்தது; இப்போது மனுஷன் இந்தக் கிருபையை ஏற்கனவே அனுபவித்திருப்பதால், இனி அவன் அதை அனுபவிக்க மாட்டான். இந்தக் கிரியை இப்போது அதன் நேரத்தைக் கடந்துவிட்டது, இனியும் செய்யப்படாது. இப்போது வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனுஷன் இரட்சிக்கப்பட இருக்கிறான். மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவனது மனநிலை மாறுகிறது. இவையெல்லாம் நான் பேசிய வார்த்தைகளால்தான் இல்லையா? ஒவ்வொரு கட்ட கிரியையும் மனுஷ இனம் முழுமைக்குமான முன்னேற்றத்திற்கும் யுகத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது. இந்தக் கிரியை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை, எதிர்காலத்தில் மனுஷகுலத்திற்கு ஒரு நல்ல போய்சேரும் இடம் இருக்கக்கூடும், இறுதியில் மனுஷகுலம் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படலாம் என்பதற்காக இவை அனைத்தும் இறுதி இரட்சிப்பின் பொருட்டு செய்யப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 14

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மனுஷனின் சாட்சியமும் தேவைப்படுகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுக்கும் சாத்தானுக்கும் மத்தியிலான ஒரு யுத்தமாக இருக்கின்றது, சாத்தான் இந்த யுத்தத்தின் இலக்காக இருக்கிறான், அதேவேளையில் மனுஷன் இந்தக் கிரியையினால் பரிபூரணப்படுத்தப்படும் ஒருவனாக இருக்கிறான். தேவனின் கிரியை பலன் கொடுக்குமா அல்லது கொடுக்காதா என்பது தேவனுக்கு மனுஷன் அளிக்கும் சாட்சியத்தைச் சார்ந்துள்ளது. தேவன் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இந்தச் சாட்சியைக் கேட்கிறார்; இது சாத்தானுக்கு முன்பாகச் செய்யப்பட்ட சாட்சியமாகும், மற்றும் இது அவருடைய கிரியையின் விளைவுகளுக்கும் சான்றாகும். தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. இவ்விதமாக, மனுஷன் “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்ற உண்மையைப் பற்றிக்கொள்கிற வரையில், தேவனுடைய நிர்வாகக் கிரியை, படிப்படியாகத் தனது உச்சத்தை அடைகின்றது, இந்த வழியில் மனுஷன் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் போன்றே, அவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகின்றன. மனுஷன் தேவனுடன் உண்மையிலேயே எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கக் கூடுமோ, அவ்வளவு அதிகமாக தேவன் மகிமை அடைகிறார். மனிதனின் ஒத்துழைப்பு என்பது அவன் கொடுக்க வேண்டிய சாட்சியாக உள்ளது, மற்றும் அவன் கொடுக்கிற சாட்சியம் மனிதனின் நடைமுறையாக உள்ளது. ஆகையால், தேவனுடைய கிரியை சரியான விளைவை ஏற்படுத்துமா இல்லையா, மற்றும் உண்மையான சாட்சியம் இருக்க முடியுமா இல்லையா என்பது பிரிக்க இயலாத வகையில் மனுஷனின் ஒத்துழைப்பு மற்றும் மனுஷனின் சாட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரியை முடிக்கப்படுகின்றபோது, அதாவது, தேவனுடைய நிர்வகித்தல் அனைத்தும் அதன் முடிவை எட்டுகின்றபோது, மனுஷன் உயர்ந்த சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவான், மேலும் தேவனுடைய கிரியை முடிவடையும்போது, மனுஷனின் நடைமுறையும் பிரவேசமும் அவற்றின் உச்சத்தை அடையும். கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்த மூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வருகிறபோது, தேவனுடைய கிரியை அதன் முடிவை எட்டியிருக்கும், மேலும் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களை அடைவதற்குத் தேவனுடனான மனுஷனுடைய ஒத்துழைப்பு இனி இருக்காது, மற்றும் மனிதகுலம் முழுவதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள், மற்றும் அப்போதில் இருந்து, தேவனுக்கு எதிரான கலகமோ எதிர்ப்போ இருக்காது. மனுஷனிடம் தேவன் எந்தக்கோரிக்கைகளையும் வைக்க மாட்டார், மற்றும் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் இன்னும் அதிகமாக இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும், இது மனுஷனும் தேவனும் ஒன்றாக இருக்கும் ஒரு வாழ்வாகும், தேவனுடைய நிர்வகித்தல் முடிந்த பின்பு மற்றும் மனுஷன் சாத்தானின் பிடியிலிருந்து தேவனால் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு வரும் வாழ்வாகும். தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்ற முடியாதவர்கள் இத்தகைய வாழ்க்கையை அடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இருளில் தாழ்த்திக் கொண்டிருப்பார்கள், அங்கே அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருப்பார்கள்; அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவரைப் பின்பற்றாதவர்கள், அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவருடைய எல்லாக் கிரியைக்கும் கீழ்ப்படியாதவர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 15

முழு நிர்வாகக் கிரியைகளிலும், மனுஷனைச் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிப்பதே மிகவும் முக்கியமான கிரியையாகும். சீர்கெட்ட மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்வதே முக்கியமான கிரியையாகும். இதனால் ஜெயங்கொள்ளப்பட்ட மனுஷனுடைய இருதயத்தில் தேவனுடைய உண்மையான பயபக்தியானது மீட்டெடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சாதாரண வாழ்க்கையை அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் சாதாரண வாழ்க்கையை அடைய அவனுக்கு உதவுகிறது. இந்தக் கிரியை முக்கியமானதாகும், இது நிர்வாகக் கிரியையின் மையப் பகுதியாகும். இரட்சிப்பின் மூன்று கட்டங்களில், நியாயப்பிரமாண காலத்தின் முதல் கட்டமானது நிர்வாகக் கிரியைகளின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இது இரட்சிப்பின் கிரியையின் சிறிய தோற்றத்தை மாத்திரமே கொண்டிருந்தது. மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் ஆரம்பமாக இருக்கவில்லை. முதல் கட்டக் கிரியை ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், மனுஷன் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை மாத்திரமே அறிந்திருந்தான், மனுஷனிடம் அதிக சத்தியமில்லை, நியாயப்பிரமாண காலத்தின் கிரியைகள் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களோடு தொடர்புடையவையாகவும் இல்லை, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை எவ்வாறு இரட்சிப்பது என்ற கிரியையைப் பற்றி அக்கறை கொண்டதாகவும் இல்லை. இவ்வாறு தேவனுடைய ஆவியானவர் மனுஷனுடைய சீர்கேடான மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத மிகவும் எளிதான இந்தக் கட்டக் கிரியையை செய்து முடித்தார். இந்தக் கட்டக் கிரியையானது நிர்வாகத்தின் மையத்துடன் சற்றுத் தொடர்புடையதாக இருந்தது. மேலும் இது மனுஷனுடைய இரட்சிப்பின் அதிகாரப்பூர்வக் கிரியையுடன் பெரிய தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தேவன் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆவியானவரால் செய்யப்படும் கிரியையானது மறைமுகமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. மேலும் இது மனுஷனை மிகவும் பயமுறுத்துவதாகவும், அவனால் அணுக முடியாததாகவும் இருக்கிறது. இரட்சிப்பின் கிரியையை நேரடியாகச் செய்வதற்கு ஆவியானவர் பொருத்தமானவர் அல்ல, மனுஷனுக்கு நேரடியாக ஜீவனை அளிப்பதற்கும் பொருத்தமானவர் அல்ல. மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது என்னவென்றால் ஆவியின் கிரியையை மனுஷனுக்கு நெருக்கமான ஒரு அணுகுமுறையாக மாற்றுவதேயாகும். அதாவது, மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்றால் தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு ஒரு சாதாரண, இயல்பான மனுஷனாக மாறுவதேயாகும். தேவன் தமது கிரியையில் ஆவியானவரின் இடத்தைப் பிடிக்க மனுஷனாக அவதரிக்க வேண்டியதிருக்கிறது. மேலும் மனுஷனைப் பொறுத்தவரை, தேவன் கிரியை செய்வதற்கு இதைவிடப் பொருத்தமான வழி இல்லை. இந்த மூன்று கட்டக் கிரியைகளில், இரண்டு கட்டங்கள் மாம்சம் மூலமாகச் செய்யப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு கட்டங்களும் நிர்வாகக் கிரியையின் முக்கியக் கட்டங்களாக இருக்கின்றன. இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒன்றுக்கொன்று இணக்கமுள்ளவையாகும். இவை ஒன்றுக்கொன்று பரிபூரணமாக இணங்கி இருக்கின்றன. தேவன் மனுஷனாக அவதரித்ததின் முதல் கட்டம் இரண்டாம் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. மேலும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒரு முழுமையை உருவாக்குகின்றன எனவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இல்லை என்றும் கூறலாம். தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் அவருடைய மாம்சமான அடையாளத்தில் தேவனால் செய்யப்படுகின்றன, ஏனென்றால் அவை முழு நிர்வாகக் கிரியைக்கும் மிகவும் முக்கியமானவையாகும். தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளின் கிரியை இல்லாமல், முழு நிர்வாகக் கிரியைகளும் நிறுத்தப்படும், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்கும் என்று ஏறக்குறைய சொல்லலாம். இந்தக் கிரியை முக்கியமானதா இல்லையா என்பது மனுக்குலத்தின் தேவைகள், மனுக்குலத்தின் சீர்கேட்டின் யதார்த்தம் மற்றும் சாத்தானின் கீழ்ப்படியாமையின் கடுமைத்தன்மை மற்றும் கிரியையின் இடையூறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். கிரியையைச் செய்யக்கூடிய சரியானவர், கிரியை செய்பவர் செய்யும் கிரியையின் தன்மை மற்றும் கிரியையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறார். இந்த கிரியையின் முக்கியத்துவம் என்று வரும்போது, தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியை அல்லது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியை அல்லது மனுஷனால் செய்யப்படும் கிரியை ஆகியவற்றில் எந்தக் கிரியை முறையைப் பின்பற்றுவது என்பதன் அடிப்படையில், முதலில் அகற்றப்படுவது மனுஷனால் செய்யப்படும் கிரியையாகும். மேலும் கிரியையின் தன்மை மற்றும் மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராக ஆவியானவரின் கிரியையின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மாம்சத்தால் செய்யப்படும் கிரியை மனுஷனுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும், அதிக நன்மைகளை வழங்கும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கிரியையை ஆவியானவர் செய்ய வேண்டுமா அல்லது மாம்சம் செய்ய வேண்டுமா என்று தேவன் தீர்மானித்த நேரத்தில் இதுவே தேவனுடைய சிந்தையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டக் கிரியைக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு அடிப்படையும் உள்ளது. இவை ஆதாரமற்ற கற்பனைகளுமல்ல, இவை தன்னிச்சையாகச் செய்யப்படுபவையும் அல்ல. அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ஞானம் உள்ளது. இதுவே தேவனுடைய எல்லாக் கிரியைகளுக்கும் பின்னால் உள்ள சத்தியமாகும். குறிப்பாக, மாம்சமான தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷர் நடுவே கிரியை செய்வதனால், இதுபோன்ற ஒரு மகத்தான கிரியையில் தேவனுடைய திட்டம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆகையால், தேவனுடைய ஞானமும், அவருடைய தன்மையின் முழுமையும் அவருடைய கிரியையில் உள்ள ஒவ்வொரு செயலிலும், சிந்தனையிலும், யோசனையிலும் பிரதிபலிக்கின்றன. இது தேவனுடைய மிகவும் உறுதியான மற்றும் முறையான இருப்பாகும். இந்த நுட்பமான சிந்தனைகளும் கருத்துக்களும் மனுஷனுக்குக் கற்பனை செய்து பார்ப்பதற்கும், நம்புவதற்கும் கடினமானதாகும், மேலும், அறிந்துகொள்வதற்கும் மனுஷனுக்கு கடினமானதாகும். மனுஷனால் செய்யப்படும் கிரியையானது பொதுவான கொள்கையின்படி செய்யப்படுகிறது, இது மனுஷனுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தேவனுடைய செயல்கள் பெரியவையாகவும், தேவனுடைய கிரியை ஒரு பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், அவற்றின் பின்னால் மனுஷனால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல நுணுக்கமான மற்றும் துல்லியமான திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளன. அவருடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் கொள்கையின்படி செய்யப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷ பாஷையால் பேச முடியாத பல காரியங்களும் உள்ளன. இவை மனுஷனால் பார்க்க முடியாத காரியங்களாகும். இது ஆவியானவரின் கிரியையாகவோ அல்லது மாம்சமான தேவனுடைய கிரியையாகவோ இருந்தாலும், ஒவ்வொன்றும் அவருடைய கிரியையின் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவர் ஆதாரமின்றி கிரியை செய்வதில்லை, அவர் அற்பமான கிரியையைச் செய்வதில்லை. ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அவருடைய இலக்குகளும் உடன் இருக்கின்றன. அவர் கிரியை செய்வதற்காக மனுஷனாக மாறும்போது (அதாவது, அவர் தமது வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும்போது), அதில் அவருடைய நோக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் வேறு எதற்காகத் தமது அடையாளத்தை உடனடியாக மாற்றுவார்? அவர் வேறு எதற்காகத் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் நபராக உடனடியாக மாறி, பாடுகளை அனுபவிக்க வேண்டும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 16

இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாகச் செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாகக் கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம். கிருபையின் கால கிரியையின் அடித்தளத்தின் மீது இந்தக் கட்டத்தின் கிரியை செய்யப்படுகிறது. இந்த இரு கட்டங்களின் கிரியை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாக இருந்தால், பின்னர் ஏன் இந்தக் கட்டத்தில் சிலுவைமரணம் திரும்பவும் நடைபெறவில்லை? நான் ஏன் மனிதனின் பாவத்தைச் சுமக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் நேரடியாக வந்திருக்கிறேன்? மனிதனை நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமான என் கிரியை சிலுவை மரணத்தைப் பின்பற்றவில்லை என்றால், இப்போதைய என் வருகை பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படவில்லை என்றால், பின்னர் மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் எனக்குத் தகுதி இல்லாமல் போயிருக்கும். நான் இயேசுவோடு முற்றிலும் ஒன்றாக இருப்பதால் மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்ட கிரியையின் மேல் கட்டமைக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த வகையான கிரியை மட்டுமே மனிதனைப் படிப்படியாக இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும். இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. அவர்களுடைய மாம்சங்கள் இரத்தத்தையோ அல்லது எந்த வகையான உடலியல் உறவுகளையோ பகிரவில்லை, அவர்கள் இருவேறு கால கட்டத்தில் தேவனின் அவதார மாம்சங்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் தேவனுடைய மனுவுருவான மாம்சங்களாக இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும், அவர்கள் ஒரே இரத்தவழியைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் ஒரே பொது மொழியைக் கொண்டவர்களும் அல்ல (ஒருவர் யூதர்களின் மொழியைப் பேசிய ஓர் ஆண் மற்றும் இன்னொருவர் சீன மொழியை மட்டுமே பேசும் ஒரு பெண்) எனினும் அவர்கள் தேவனின் அவதார மாம்சங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காரணங்களால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் பொருட்டு அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்திலும் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், ஒரே சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கும் போதிலும், அவர்களுடைய மாம்சத்தின் புறப்பகுதியில் முழுமையான எந்த ஓர் ஒற்றுமையும் இல்லை. அவர்கள் ஒரே மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்களுடைய மாம்சத்தின் புறத் தோற்றத்தையும் அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளையும் பொறுத்த வரையில் அவர்கள் ஒன்றுபோல் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய கிரியை அல்லது அவர்களைப் பற்றி மனிதன் கொண்டிருக்கும் அறிவின் மேல் இந்த விஷயங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இறுதி ஆய்வில், அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், மேலும் ஒருவரும் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் இரத்த சம்பந்தமான உறவுடையவர்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய முழு இருப்பும் அவர்களுடைய ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ளது, அது அவர்களுக்கு வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு கிரியைக்கும், அவர்களுடைய மாம்சங்கள் வெவ்வேறு இரத்தவழிகளைக் கொண்டவையாகும். யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா? மனிதர்களுக்காக நியாயப்பிரமாணங்களைப் பிரகடனப்படுத்தவும், அவனுக்குக் கட்டளைகளை விதிக்கவும் அவர் வல்லவராய் இருந்தார், மேலும் ஆதி இஸ்ரவேலர்களை பூமியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வழிகாட்டவும் அவரால் முடிந்தது, மேலும் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்ட அவர்களை வழிநடத்தவும், அனைத்து இஸ்ரவேலர்களையும் அவரது ஆளுகையின் கீழ் வைக்கவும் அவரால் முடிந்தது. அவருடைய அதிகாரத்தின் நிமித்தமாக அவர் பூமியில் இஸ்ரவேல் மக்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். இஸ்ரவேலர்கள் அவரை எதிர்த்துக் கலகம் செய்யத் துணியவில்லை; அனைவரும் யேகோவாவை வணங்கி அவரது கட்டளைகளைப் பின்பற்றினர். அவரது அதிகாரத்தாலும் அவரது சர்வ வல்லமையாலும் செய்யப்பட்ட கிரியை இவ்வாறாக இருந்தது. பின்னர், கிருபையின் காலத்தில், பாவத்தில் வீழ்ந்த முழு மனுக்குலத்தையும் (இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல) இரட்சிக்க கிருபையின் காலத்தில் இயேசு வந்தார். அவர் இரக்கத்தையும் அன்பின் கருணையையும் மனிதனிடம் காட்டினார். கிருபையின் காலத்தில் மனிதன் கண்ட இயேசு அன்பின் கருணையால் நிரம்பி இருந்தார் மற்றும் எப்போதும் அவர் மனிதனை நேசித்தார், ஏனெனில் பாவத்தில் இருந்து மனுக்குலத்தை மீட்க அவர் வந்தார். அவர் தமது சிலுவை மரணம் வரை மனிதனை அவர்களது பாவத்தில் இருந்து மன்னிக்க முடிந்தது மற்றும் மனுக்குலத்தைப் பாவத்தில் இருந்து முற்றிலுமாக இரட்சித்தார். இக்கால கட்டத்தில் தேவன் மனிதனின் முன்னர் இரக்கம் மற்றும் அன்பின் கருணையோடு தோன்றினார்; அதாவது, அவர் மனிதனுக்காக ஒரு பாவநிவாரண பலியானார் மேலும் மனிதன் எப்போதும் மன்னிக்கப்படத் தக்கதாய் அவர் மனிதனின் பாவத்துக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் இரக்கம் உள்ளவர், பரிவுள்ளவர், பொறுமையுள்ளவர் மற்றும் அன்பானவர். மேலும், கிருபையின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய யாவரும் எல்லாவற்றிலும் பொறுமையாகவும் அன்பாகவும் இருக்க முயன்றனர். அவர்கள் துன்பத்திலும் நீடித்த பொறுமையோடு இருந்தனர், மேலும் அடிக்கப்பட்டபோதும், சபிக்கப்பட்டபோதும் அல்லது கல்லெறியப்பட்டபோதும் அவர்கள் ஒரு போதும் எதிர்த்துப் போராடவில்லை. ஆனால் கடைசிக் கட்டத்தில் அது அப்படி இருக்க முடியாது. இயேசுவும் யேகோவாவும் ஆவியில் ஒன்றாக இருந்த போதிலும், அவர்களது கிரியை முற்றிலும் ஒன்று போல் இருக்கவில்லை. யேகோவாவின் கிரியை காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை, ஆனால் காலத்தை வழிநடத்தியது, பூமியில் மனுக்குலத்தின் வாழ்க்கையை வழிநடத்தியது, மேலும் புறஜாதியார் தேசத்தில் ஆழமாக சீர்குலைந்திருப்போரை ஜெயங்கொள்ளுவதும் மற்றும் சீனாவில் இருக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை மட்டுமல்லாமல் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களையும் அனைத்து மனுக்குலத்தையும் வழிநடத்துவதே இன்றைய கிரியை. இந்தக் கிரியை சீனாவில் மட்டுமே செய்யப்படுவதாக உனக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது ஏற்கெனவே வெளிநாடுகளிலும் பரவத்தொடங்கி விட்டது. சீனாவுக்கு வெளியில் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் மெய்யான வழியை நாடுகிறார்கள்? இது ஏனெனில் ஆவியானவர் ஏற்கெனவே கிரியைசெய்ய தொடங்கிவிட்டார், மேலும் இன்று பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சம் எங்கும் உள்ள மக்களை நோக்கிப் பேசப்படுகின்றன. இதனுடன், கிரியையில் பாதி ஏற்கெனவே நடந்துகொண்டு இருக்கிறது. உலக சிருஷ்டிப்பில் இருந்து இன்று வரை, தேவ ஆவியானவர் இந்த மாபெரும் கிரியையை இயக்கத்தில் வைத்துள்ளார், மேலும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தேசங்களின் மத்தியில் அவர் வெவ்வேறு கிரியைகளைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு காலத்தின் மக்களும் அவரது வெவ்வேறு மனநிலைகளைக் காண்கின்றனர், அது அவர் செய்யும் வெவ்வேறு கிரியை மூலம் இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவர் தேவன், இரக்கம் மற்றும் அன்பின் கருணையால் நிறைந்திருப்பவர்; அவர் மனிதனுக்கான பாவநிவாரண பலி மற்றும் மனிதனின் மேய்ப்பன்; ஆனால் அவரே மனிதனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் சாபம். மனிதனை பூமியின் மேல் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ அவரால் வழிநடத்த முடியும், மேலும் சீர்குலைந்த மனிதனை பாவத்தில் இருந்து அவரால் இரட்சிக்கவும் முடியும். இன்று, அவரை அறியாத மனித குலத்தை அவரால் ஜெயங்கொள்ள முடியும், மேலும் அனைவரும் அவருக்குக் கீழடங்கும் வகையில் அவரால் அவர்களைத் தமது ஆளுகையின் கீழ் விழுந்து பணியுமாறும் செய்ய முடியும். தாம் இரக்கமும் அன்பும் கொண்ட ஒரு தேவன் மட்டுமல்ல, ஞானம் மற்றும் அதிசயங்களின் ஒரு தேவன் மட்டுமல்ல, பரிசுத்தமான ஒரு தேவன் மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேல், மனிதனை நியாயந்தீர்க்கும் ஒரு தேவன் என்று அவர்களுக்குக் காட்ட முடிவில், பிரபஞ்சம் முழுவதும் அசுத்தமானவைகளையும் மக்களுக்கிடையில் அநீதியானவர்களையும் சுட்டெரிப்பார். மனுக்குலத்தின் மத்தியில் தீயவர்களுக்கு, அவர் சுட்டெரிப்பு, நியாயத்தீர்ப்பு, மற்றும் தண்டனையாக இருக்கிறார்; பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களுக்கு, அவர் உபத்திரவம், சுத்திகரிப்பு, மற்றும் சோதனைகள் மட்டுமல்லாமல் ஆறுதல், பராமரிப்பு, வார்த்தைகளின் வழங்கல், கையாளல் மற்றும் சீரமைப்பு. புறம்பாக்கப்பட்டவர்களுக்கு அவர் தண்டனையும் பழிவாங்கலும் ஆவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 17

இன்றைய நாளிலும் தனது ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியைகளைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தேவன், தம்முடைய பல கிரியைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார், இதன் முதன்மை நோக்கம் சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலம் முழுமைக்குமான இரட்சிப்பைக் கொண்டுவருவதாகும். பரலோகத்தில் உள்ள அனைத்தையும், பூமியிலுள்ள சகலத்தையும், சமுத்திரங்களுக்குள் உள்ள அனைத்தையும், மற்றும் பூமியில் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கடைசிப் பொருளையும் அவருடைய சர்வவல்லமையைக் காணவும், அவருடைய எல்லா கிரியைகளுக்கும் சாட்சியாகவும் இருக்க அனுமதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சாத்தானை அவர் தோற்கடித்ததன் மூலம் அவர் செய்த எல்லாக் கிரியைகளையும் மனுஷருக்கு வெளிப்படுத்தவும், அவர்கள் அவரைப் புகழ்ந்து பேசவும், மற்றும் சாத்தானைத் தோற்கடித்ததில் அவருடைய ஞானத்தை உயர்த்தவும் இந்த வாய்ப்பைக் கைக்கொள்கிறார். பூமியிலும், பரலோகத்திலும், சமுத்திரங்களிலும் உள்ள சகலமும் தேவனை மகிமைப்படுத்துகின்றன, அவருடைய சர்வவல்லமையைப் புகழ்கின்றன, அவருடைய ஒவ்வொரு கிரியையையும் புகழ்கின்றன, அவருடைய பரிசுத்த நாமத்தைக் கூக்குரலிடுகின்றன. அவர் சாத்தானைத் தோற்கடித்ததற்கு இதுவே சான்று; அவர் சாத்தானை வென்றதற்கு இதுவே சான்று. மிக முக்கியமாக, அவர் மனுஷகுலத்தை இரட்சித்ததற்கும் இதுவே சான்று. தேவனின் சிருஷ்டிப்புக்கள் சகலமும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றன, அவருடைய எதிரியைத் தோற்கடித்து வெற்றிகரமாகத் திரும்பியதற்காக அவரைப் புகழ்கின்றன, மேலும் அவரை வெற்றிகரமான ராஜா என்றும் புகழ்கின்றன. அவருடைய நோக்கம் சாத்தானை தோற்கடிப்பது மட்டுமாக இருக்கவில்லை, அதனால்தான் அவருடைய கிரியை ஆறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதகுலத்தை இரட்சிக்க அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்துகிறார்; அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்தி அவருடைய எல்லாக் கிரியைகளையும் அவருடைய எல்லா மகிமையையும் வெளிப்படுத்துகிறார். அவர் மகிமையைப் பெறுவார், தேவதூதர்கள் அனைவரும் அவருடைய எல்லா மகிமையையும் காண்பார்கள். பரலோகத்திலுள்ள தூதர்களும், பூமியிலுள்ள மனுஷரும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் சிருஷ்டிகரின் மகிமையைக் காண்பார்கள். அவர் செய்யும் கிரியை இது. வானத்திலும் பூமியிலும் அவர் சிருஷ்டித்தவை அனைத்தும் அவருடைய மகிமைக்கு சாட்சியாக இருக்கும், மேலும் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்தபின் அவர் வெற்றிகரமாகத் திரும்பி வருவார், மேலும் மனிதகுலம் அவரைப் புகழ்ந்துப் பேச அனுமதிப்பார், இதனால் அவருடைய கிரியையில் இரட்டை வெற்றியைப் பெறுவார். இறுதியில், மனிதகுலம் முழுவதும் அவரால் ஜெயங்கொள்ளப்படும், அவரை எதிர்த்து நிற்கும் அல்லது கலகம் செய்யும் எவரையும் அவர் அழிப்பார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுக்குச் சொந்தமான அனைவரையும் அவர் அழிப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 18

இஸ்ரவேலர்களுக்காக யேகோவா நடத்திய கிரியை தேவனின் தோற்றத்துக்கான பூமிக்குரிய இடத்தை மனிதகுலத்தின் மத்தியில் உருவாக்கியது. இதுவே அவர் இருக்கும் பரிசுத்தத் தலமாகவும் இருந்தது. அவர் தமது கிரியைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்காக மட்டுமே வரையறுத்துக்கொண்டார். முதலில், அவர் இஸ்ரவேலுக்கு வெளியில் கிரியை நடத்தவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தமது கிரியையின் செயற்பரப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமானது என அவர் கண்ட மக்களைத் தெரிந்தெடுத்தார். இஸ்ரவேல்தான் தேவன் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கிய இடம். மேலும் அந்த இடத்தின் தூசியில் இருந்து யெகோவா மனிதனை உண்டாக்கினார். இந்த இடமே உலகில் அவருடைய கிரியைகளுக்கான அடித்தளம் ஆயிற்று. நோவாவின் சந்ததிகள் மட்டுமல்லாமல் ஆதாமின் சந்ததிகளுமான இஸ்ரவேலர்களே, உலகில் யெகோவாவின் கிரியைக்கான மானிட அஸ்திபாரமாக இருந்தனர்.

இந்தக் கால கட்டத்தில், இஸ்ரவேலில் யெகோவா நடத்திய கிரியையின் முக்கியத்துவம், நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் முழு உலகத்திலும் அவருடைய கிரியையைத் தொடங்குவதற்கானதாகவே இருந்தன. அவை, இஸ்ரவேலை மையமாகக் கொண்டு, படிப்படியாக புறஜாதியார் தேசங்களுக்குள் பரவின. ஒரு மாதிரியை உருவாக்க பிரபஞ்சம் முழுவதிலும் அவர் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கிரியை செய்கிறார். அதற்காக உலகங்கள் எங்கும் உள்ள மக்கள் தமது சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை அதை விரிவாக்குகிறார். ஆதி இஸ்ரவேலர்கள் நோவாவின் சந்ததியார் ஆவர். இந்த மக்கள் யெகோவாவின் ஜீவசுவாசத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் போதுமான அளவுக்குப் பேணுவதைப் புரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் யெகோவோ எப்படிப்பட்ட தேவனாய் இருக்கிறார் என்றோ, அல்லது மனிதனுக்கான அவருடைய சித்தத்தையோ, அதைவிட மேலாக எல்லாவற்றையும் உருவாக்கிய கர்த்தரை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. கீழ்ப்படிய வேண்டிய[அ] நியமங்கள் மற்றும் பிரமாணங்கள் இருக்கின்றனவா என்பது பற்றிய, சிருஷ்டிகருக்கு சிருஷ்டிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய கடமைகள் போன்றவற்றைப் பற்றிய விஷயங்கள் எதையும் ஆதாமின் சந்ததியார் அறிந்திருக்கவில்லை. கணவன் வியர்வை சிந்தி உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் மற்றும் மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் மேலும் யேகோவா படைத்த மனித குலத்தை நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பவையே அவர்கள் அறிந்தவை எல்லாம். வேறு வகையாகக் கூறுவது என்றால், யேகோவா ஜீவசுவாசத்தையும் அவரது ஜீவனையும் மட்டுமே பெற்றிருந்த இத்தகைய மக்கள், தேவனின் பிரமாணத்தை எவ்வாறு பின்பற்றுவது அல்லது எல்லாவற்றையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தரை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மிகக் குறைவாகவே புரிந்துகொண்டார்கள். ஆகவே, அவர்களின் இருதயத்தில் நேர்மையற்றவையும் வஞ்சகமும் ஒன்றும் இல்லை என்றாலும், பொறாமையும் பூசல்களும் அவர்களிடையே அரிதாகவே எழுந்தபோதிலும், சிருஷ்டி அனைத்துக்கும் கர்த்தரான யேகோவாவைப் பற்றிய அறிவோ அல்லது புரிதலோ அவர்களுக்கு இல்லை. மனிதனின் இந்த மூதாதையர்கள் யேகோவாவின் பொருட்களை உண்பதற்கும், யேகோவாவின் பொருட்களை அனுபவித்து மகிழ்வதற்கும் மட்டுமே அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யேகோவாவை வணங்க அறிந்திருக்கவில்லை; தாங்கள் முழங்கால் மடக்கி தொழுதுகொள்ள வேண்டியவர் யேகோவா மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியாது. ஆக அவர்களை அவருடைய சிருஷ்டிகள் என்று எவ்வாறு அழைக்கமுடியும்? இது இவ்வாறு இருந்தால், “யேகோவாவே எல்லா சிருஷ்டிகளுக்கும் கர்த்தரானவர்” மற்றும் “அவரை வெளிப்படுத்தவும், அவரை மகிமைப்படுத்தவும் மேலும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் மனிதனைப் படைத்தார்” என்ற வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டவைகள் என்று ஆகிவிடும் அல்லவா? யேகோவாவின் மேல் பக்தி அற்ற மக்கள் அவருடைய மகிமைக்கு எவ்வாறு சாட்சியாக விளங்க முடியும்? எவ்வாறு அவர்கள் அவருடைய மகிமையின் வெளிப்பாடாக மாறமுடியும்? “நான் மனிதனை என்னுடைய சாயலில் சிருஷ்டித்தேன்” என்ற யேகோவாவின் வார்த்தைகள் பொல்லாங்கனான சாத்தானின் கைகளில் ஒரு ஆயுதமாக மாறிவிடக் கூடுமல்லவா? யேகோவாவின் மனித சிருஷ்டிப்பை கீழ்மைப்படுத்தும் ஓர் அடையாளமாக இந்த வார்த்தைகள் மாற்றிவிடும் அல்லவா? கிரியையின் இந்தக் கட்டத்தை நிறைவுசெய்வதற்காக, மனித குலத்தைச் சிருஷ்டித்த பின், ஆதாமில் இருந்து நோவா வரை யேகோவா அவர்களுக்கு அறிவுறுத்தவோ அல்லது வழிகாட்டவோவில்லை. மாறாக, உலகத்தை வெள்ளம் அழிக்கும் வரை, நோவாவின் மற்றும் ஆதாமின் சந்ததியாரான இஸ்ரவேலரை அவர் முறையாக வழிநடத்தத் தொடங்கவில்லை. இஸ்ரவேல் தேசம் எங்கும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது அவரது கிரியையும் வார்த்தைகளும் இஸ்ரவேலில் அவர்களுக்கு வழிகாட்டுதலை அளித்தன. இதன் மூலம், யேகோவா, தம்மிடம் இருந்து ஜீவனைப் பெற்று தூசியில் இருந்து சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக எழுவதற்காக மனிதனுக்குள் ஜீவசுவாசத்தை ஊத வல்லவர் என்பது மட்டுமல்லாமல், அவரால் மனித குலத்தை அழித்தொழிக்கவும், மனிதகுலத்தைச் சபிக்கவும், மற்றும் தமது கோலால் மனிதகுலத்தை ஆளுகை செய்யவும் முடியும் என்பதை மனிதகுலத்திற்குக் காட்டுகிறார். ஆக, மனிதனின் வாழ்க்கையை உலகில் வழிநடத்தவும், இரவும் பகலும் நாட்களின் நேரங்களின் படி மனிதகுலத்தின் மத்தியில் பேசவும் கிரியை செய்யவும் யேகோவாவால் முடியும் என்பதையும் அவர்கள் கண்டார்கள். அவரால் எடுக்கப்பட்ட தூசியில் இருந்து மனிதன் வந்தான் என்றும் மனிதன் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்றும் அவரது சிருஷ்டிகள் அறிந்துகொள்ளவே அவர் கிரியை செய்தார். இது மட்டுமல்லாமல், ஏனைய மக்களும் தேசங்களும் (உண்மையில் இவர்களும் இஸ்ரவேலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இஸ்ரவேலில் இருந்து பிரிந்து சென்றவர்கள், இருப்பினும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரே) இஸ்ரவேலில் இருந்து யேகோவாவின் சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்டு அதன்மூலம் பிரபஞ்சத்தில் உள்ள சிருஷ்டிக்கப்பட்ட யாவரும் யேகோவாவை வணங்கி அவரை உயர்ந்தவர் என்று போற்றுவதற்காகவே அவர் முதன்முதலில் இஸ்ரவேலில் கிரியைகளை நடப்பித்தார். யேகோவா தம் கிரியையை இஸ்ரவேலில் தொடங்காமல், மாறாக, மனிதகுலத்தைப் படைத்து, உலகில் அவர்கள் ஒரு கவலையற்ற வாழ்க்கையை வாழ அனுமதித்திருந்தால், அந்த நிலையில், மனிதனின் உடல் இயல்பின் காரணமாக (இயல்பு என்றால் மனிதன் அவனால் பார்க்க முடியாத விஷயங்களை ஒருபோதும் அறியமுடியாத நிலை, அதாவது யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அதைவிட அவர் அப்படி ஏன் செய்தார் என்பதையும் அவனால் அறிய முடியாது), யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அல்லது அவரே எல்லா சிருஷ்டிப்புக்கும் கர்த்தர் என்பதையும் அவன் ஒருபோதும் அறிய மாட்டான். யேகோவா மனிதனைப் படைத்து உலகில் வைத்து, மனிதகுலத்தின் மத்தியில் இருந்து ஒரு கால கட்டத்திற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்காமல் தமது கரங்களில் இருந்த தூசியை அப்படியே தட்டிவிட்டு சென்றிருந்தால், மனிதகுலம் ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப் போயிருக்கும்; அவரது சிருஷ்டிப்பான வானமும் பூமியும் எண்ணற்ற பொருட்களும், மனிதகுலம் யாவும், ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப்போனதோடு சாத்தானால் மிதித்து நசுக்கப்பட்டுப் போயிருக்கும். இவ்விதம், “உலகத்தில், அதாவது, தமது சிருஷ்டிப்பின் மத்தியில், நிற்க ஒரு பரிசுத்தமான இடம் வேண்டும்” என்ற யேகோவாவின் விருப்பம் சிதைந்து போயிருக்கும். ஆகவே, மனிதகுலத்தைச் சிருஷ்டித்தப் பின்னர், அவர்களின் நடுவில் இருந்து வாழ்க்கையில் அவர்களை வழிகாட்டவும், அவர்களின் நடுவில் இருந்து அவர்களோடு பேசவும் அவரால் முடிந்தது—இவை எல்லாம் அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் அவருடைய திட்டங்களை அடைவதற்குமாகவே. அவர் இஸ்ரவேலில் செய்த கிரியையானது எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு முன்னர் அவர் வகுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே. ஆகவே அவர் முதலில் இஸ்ரவேலர்களின் மத்தியில் செய்த கிரியையும், எல்லாவற்றையும் அவர் சிருஷ்டித்ததும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. ஆனால் அவை அவரது நிர்வாகம், அவரது கிரியை, மற்றும் அவரது மகிமைக்காகவும் மனிதகுலத்தை அவர் படைத்ததின் அர்த்தத்தை ஆழப்படுத்துவதுமாகிய இரண்டிற்குமாகும். நோவாவிற்குப் பின்னர் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகத்தில் மனிதகுலத்தின் வாழ்வை வழிநடத்தினார். இக்காலத்தில் அவர் மனிதகுலத்திற்கு, சிருஷ்டிகர்த்தராகிய யேகோவாவை எவ்வாறு வணங்குவது, எவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவது, மேலும் எவ்வாறு தொடர்ந்து வாழ்வது, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, யேகோவாவுக்கு எவ்வாறு ஒரு சாட்சியாக செயலாற்றுவது, அவருக்குக் கீழ்ப்படிவது மற்றும் அவரை வணங்குவது மட்டுமல்லாமல் தாவீதும் அவனது ஆசாரியர்களும் செய்தது போல அவரை இசையோடு துதிப்பதற்கும்கூட அவர் கற்பித்தார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “கீழ்ப்படிய வேண்டிய” என்ற சொற்றொடர் இல்லை.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 19

யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் வரை, ஏறக்குறைய மனிதகுலம் அனைத்தும் சீர்கேட்டுக்குள் விழுந்து, அவர்கள் ஒழுக்கமின்மை மற்றும் உலக அசுத்தங்களின் ஆழத்தை அடைந்திருந்தார்கள். அதனால் அவர்கள் இருதயங்களில் யேகோவா முற்றிலுமாக இல்லை, மேலும் அவரது வழிகளில் அவர்கள் நடக்கவில்லை. யேகோவா ஆற்றப்போகும் கிரியையை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை; காரணகாரிய அறிவு அவர்களுக்குக் குறைவுபட்டது, அறிவும்கூட குறைவாகவே இருந்தது, மேலும், சுவாசிக்கும் இயந்திரங்கள் போல, அவர்கள் மனிதன், தேவன், உலகம், வாழ்க்கை மற்றும் அது போன்றவற்றைப் பற்றி அறியாமை கொண்டவர்களாக இருந்தார்கள். உலகில், சர்ப்பத்தைப் போல பல தீய கவர்ச்சிகளில் மூழ்கி இருந்தார்கள். யேகோவாவுக்கு எதிரான பல விஷயங்களைக் கூறினார்கள். ஆனால் அவர்கள் அறியாமையில் மூழ்கி இருந்ததால், யேகோவா அவர்களைச் சிட்சிக்கவோ தண்டித்துத் திருத்தவோவில்லை. வெள்ளத்துக்குப் பின்னர்தான், நோவாவின் 601 வது வயதில், யேகோவா முறையாக நோவாவுக்கு முன் தோன்றி அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் வழிகாட்டி, நோவாவுடனும் அவனது சந்ததியாருடனும் வெள்ளத்துக்குத் தப்பிப்பிழைத்த பறவைகளையும், மிருகங்களையும், மொத்தம் 2,500 ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாணத்தின் காலத்தின் முடிவு வரை வழிநடத்தினார். அவர் இஸ்ரவேலில் மொத்தம் 2,000 ஆண்டுகள் கிரியை நடத்தினார், அதாவது முறையாகக் கிரியை செய்தார். மேலும் அதே நேரத்தில் இஸ்ரவேலிலும் அதற்கு வெளியிலும் 500 ஆண்டுகளாகக் கிரியை செய்தார். மொத்தம் இவை 2,500 ஆண்டுகள் ஆகும். இந்தக் காலகட்டத்தில், யேகோவாவைச் சேவிக்க, அவர்கள் ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்றும், ஆசாரியருக்கு உரிய உடைகளைத் தரிக்க வேண்டும் என்றும், அதிகாலையில் வெறுங்காலுடன் ஆலயத்துக்குள் நடக்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்களின் காலணிகள் ஆலயத்தைக் கெடுக்கும் மேலும் ஆலயத்தின் உச்சியில் இருந்து கீழே அக்கினி அனுப்பப்பட்டு அது அவர்களை எரித்துக் கொன்றுவிடும் என்றும் அவர் இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றி யேகோவாவின் திட்டங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். ஆலயத்தில் அவர்கள் யேகோவாவினிடத்தில் ஜெபித்தனர், மற்றும் யேகோவாவின் வெளிப்பாட்டைப் பெற்றபின், அதாவது யேகோவா பேசிய பின்னர், அவர்கள் திரளான மக்களை வழிநடத்தி, அவர்கள் தங்கள் தேவனான யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்ட வேண்டும் என்று போதித்தனர். அவர்கள் ஓர் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டவேண்டும் என்றும் மேலும் யேகோவாவினால் குறிக்கப்பட்ட காலத்தில், அதாவது பஸ்காவின் போது, தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தங்கள் இருதயங்களில் யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்டுவதற்காகவும், அவர்கள் இளங்கன்றுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் யேகோவாவைச் சேவிப்பதற்கு பலியாகப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் யேகோவா அவர்களிடம் கூறினார். இந்தப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவது யேகோவாவிடம் அவர்கள் வைத்த விசுவாசத்திற்கான அளவுகோல் ஆயிற்று. அவரது சிருஷ்டிப்பின் ஏழாம் நாளை யேகோவா அவர்களுக்கான ஓய்வுநாளாகப் பரிசுத்தப்படுத்தினார். ஓய்வுநாளுக்கு அடுத்த நாளை, அவர் முதல் நாள் ஆக்கி, அதை யேகோவாவை ஆராதிக்கவும், அவருக்குப் பலிகளைச் செலுத்தவும், அவரைப் போற்றிப் பாடுவதற்குமான ஒரு நாள் ஆக்கினார். இந்த நாளில், யேகோவா ஆசாரியர்கள் யாவரையும் ஒன்றாக அழைத்து, மக்கள் புசிப்பதற்காக பலிபீடத்தில் பலிகளைப் பங்கிடுமாறும் அதனால் யேகோவாவின் பலிபீடத்தில் மக்கள் பலிகளை அனுபவித்து மகிழுமாறும் செய்தார். அவரோடு ஒரு பங்கை பகிர்ந்து கொண்டதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும் (இது யேகோவா இஸ்ரவேலர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை) யேகோவா கூறினார். இதனால்தான், இன்றுவரை, இஸ்ரவேலர்கள் யேகோவா தங்கள் தேவன் மட்டுமே என்றும், புறஜாதியாரின் தேவன் இல்லை என்றும் இன்னும் கூறிவருகின்றனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 20

நியாயப்பிரமாணத்தின் காலத்தில், மோசேயை எகிப்தில் இருந்து பின்தொடர்ந்துவந்த இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலமாக யேகோவா பல கட்டளைகளை அளித்தார். யேகோவாவால் இஸ்ரவேலர்களுக்கு இந்தக் கட்டளைகள் அளிக்கப்பட்டன, மற்றும் இதில் எகிப்தியர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை; இவை இஸ்ரவேலர்களைக் கட்டுப்படுத்துவதற்கானவை, மேலும் அவர் இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தி தமது நோக்கப்படி அவர்கள் நடப்பதற்கு வலியுறுத்தினார். அவர்கள் ஓய்வுநாளை ஆசரித்தாலும், அவர்கள் தங்கள் பெற்றோரை மதித்தாலும், அவர்கள் விக்கிரகங்களை வணங்கினாலும், இது போன்றவைகளில் எல்லாம், அவர்கள் பாவிகளா அல்லது நீதிமான்களா என்பதை நியாயம்தீர்க்கும் கொள்கைகள் இவைகளாகவே இருந்தன. அவர்கள் மத்தியில், யேகோவாவின் அக்கினியால் பட்சிக்கப்பட்ட சிலர் இருந்தனர், சிலர் கல்லெறியப்பட்டுக் கொலையுண்டனர், மேலும் சிலர் யேகோவாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர் மற்றும் இது அவர்கள் இந்தக் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார்களா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுநாளை ஆசரிக்காதவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஓய்வுநாளை ஆசரிக்காத ஆசாரியர்கள் யேகோவாவின் அக்கினியால் அழிக்கப்பட்டனர். தங்கள் பெற்றோர்களை மதிக்காதவர்கள் கூட கல்லெறிந்து கொல்லப்பட்டனர். இவை எல்லாம் யேகோவாவால் கட்டளையிடப்பட்டவை. யேகோவா தமது கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களை எதற்காக ஏற்படுத்தினார் என்றால், அவர் மக்களை அவர்களது வாழ்க்கையில் வழிநடத்திச் செல்லும் போது, அவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்யாமல் அவருக்குச் செவிகொடுத்து, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே. அவர் தமது எதிர்கால கிரியைகளுக்கு அடித்தளம் அமைக்கச் சிறந்தது எனப் புதிதாகப் பிறந்த மனித குலத்தை இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஆகவே யேகோவா செய்த கிரியைகளின் அடிப்படையில் இந்தக் காலம் நியாயப்பிரமாணத்தின் காலம் என்று அழைக்கப்பட்டது. யேகோவா பல வார்த்தைகளைக் கூறி, பெரும் கிரியைகளை நடத்தியபோதிலும், அவர் அறியாமையில் கிடந்த இந்த மக்களுக்கு மனிதர்களாக இருப்பது எவ்வாறு, எவ்வாறு வாழ்வது, எவ்வாறு யேகோவாவின் வழியில் நடப்பது என்றெல்லாம் போதித்து அவர்களை நேர்மறையாக வழிநடத்த மட்டுமே செய்தார். பெரும்பாலும், அவர் ஆற்றிய கிரியைகள் மக்களைத் தமது வழிகளைப் பின்பற்றி தம் நியமங்களைக் கடைபிடிக்க வைப்பதற்காகவே. உலக அசுத்தங்களுக்கு ஆழமாக ஆட்படாதவர்கள் மத்தியில் இந்தக் கிரியைகள் நடப்பிக்கப்பட்டன; அவர்களது மனநிலையை அல்லது வாழ்க்கை முன்னேற்றத்தை மாற்றியமைக்கும் அளவுக்கு அது விரிவானதாக இல்லை. நியாயப்பிரமாணங்களைப் பயன்படுத்தி மக்களைத் தடுத்து கட்டுப்படுத்துவதிலேயே அவர் அக்கறை கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு யேகோவா ஆலயத்தில் இருக்கும் ஒரு தேவன் மட்டுமே, வானத்தில் இருக்கும் ஒரு தேவன். அவர் ஒரு மேக ஸ்தம்பம், ஓர் அக்கினி ஸ்தம்பம். இன்று அவரது பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள்—என்று மக்கள் அறிந்துள்ளவற்றை, அவற்றை விதிகள் என்றுகூட ஒருவர் கூறலாம்—கீழ்ப்படிவது ஒன்றுதான் யேகோவா அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தது எல்லாம். ஏனெனில் யேகோவா அவர்களை உருமாற்ற எண்ணவில்லை, ஆனால் மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிக பொருட்களை அவர்களுக்கு அளித்ததும் தம்முடைய வாயாலேயே அவர்களுக்கு அறிவுறுத்தியதுமே அவர் செய்தவை. ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள் தங்களிடம் வைத்திருக்க வேண்டிய ஒன்றும் அவர்களிடம் இல்லை. ஆகவே, மக்கள் உலகில் தங்கள் வாழ்க்கைக்காக வைத்திருக்க வேண்டியவற்றை யேகோவா அவர்களுக்கு அளித்தார். இவ்வாறு தங்கள் முன்னோர்களான ஆதாமும் ஏவாளும் வைத்திருந்ததைவிட அதிகமாக மக்கள் வைத்திருக்குமாறு யேகோவா அளித்தார். ஏனெனில் யேகோவா ஆரம்பத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்ததைவிட அவர் இவர்களுக்கு அளித்தது மிதமிஞ்சியதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரவேலில் யேகோவா ஆற்றிய கிரியை மனிதகுலத்தை வழிநடத்துவதற்கும் மனிதகுலம் தனது சிருஷ்டிகரை அறிந்துகொள்ளுவதற்காகவும் மட்டுமே. அவர் அவர்களை அடக்கியாளவில்லை அல்லது அவர்களை உருமாற்றம் செய்யவில்லை, ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட மட்டுமே செய்தார். இதுவே நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவாவின் கிரியைகளின் தொகுப்பாகும். இதுவே பின்னணி, உண்மைக் கதை, இஸ்ரவேல் தேசம் முழுவதிலும் அவர் ஆற்றிய கிரியையின் சாராம்சம், மற்றும் அவரது ஆறாயிரம் ஆண்டு கிரியையின் ஆரம்பம்—மனிதகுலத்தை யேகோவாவின் கரங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க. இதில் இருந்து அவரது ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டத்தின் இன்னும் அதிகமான கிரியைகள் பிறந்தன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 21

ஆதியில், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் போது மனுஷனை வழிநடத்துவது ஒரு குழந்தையின் ஜீவிதத்தை வழிநடத்துவதைப் போல இருந்தது. ஆதிகால மனுஷகுலம் யேகோவாவிலிருந்து புதிதாகப் பிறந்தது; அவர்கள் தான் இஸ்ரவேலர். தேவனை எவ்வாறு வணங்குவது என்பது பற்றியோ அல்லது பூமியில் எப்படி ஜீவிப்பது என்பது பற்றியோ அவர்களுக்கு எந்தப் புரிதலும் இருக்கவில்லை. அதாவது, யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார், ஆனால் யேகோவாவை எவ்வாறு வணங்குவது அல்லது பூமியில் யேகோவாவின் விதிககளை எப்படிப் பின்பற்றுவது என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறன்களை அவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. யேகோவாவின் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல், இதை யாரும் நேரடியாக அறிய முடியாது, ஏனென்றால் ஆதியில் மனுஷன் அத்தகைய திறன்களைக் கொண்டிருக்கவில்லை. யேகோவாதான் தேவன் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் அவரை எவ்வாறு வணங்குவது, எந்த விதமான நடத்தை அவரை வணங்குவதாக அழைக்கப்படும், ஒருவன் எந்த விதமான மனதுடன் அவரை வணங்க வேண்டும், அல்லது அவரை வணங்க அவருக்கு என்ன காணிக்கை வழங்க வேண்டும், என இவை அனைத்திற்கும் மனுஷனுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. யேகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிலும் அனுபவிக்கக்கூடியதை எப்படி அனுபவிப்பது என்பது மட்டும் மனுஷனுக்கு தெரியும், ஆனால் பூமியில் எந்த வகையான ஜீவிதம் தேவனின் சிருஷ்டிப்புக்கு தகுதியானது என்பது பற்றி மனுஷனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அறிவுறுத்த யாருமில்லாமல், அவர்களை தனிப்பட்ட முறையில் வழிநடத்த யாருமில்லாமல், இந்த மனுஷரால் ஒருபோதும் மனுஷகுலத்திற்கு ஏற்ற ஜீவிதத்தை சரியாக வழிநடத்தியிருக்க முடிந்திருக்காது, மாறாக சாத்தானால் மறைமுகமாக சிறைபிடிக்கப்பட்டிருப்பர். யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது, மனுஷகுலத்தின் முன்னோர்களான ஏவாளையும் ஆதாமையும் அவர் சிருஷ்டித்தார், ஆனால் அவர் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த புத்தியையோ அல்லது ஞானத்தையோ வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பூமியில் வாழ்ந்துவந்தாலும், அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. எனவே, மனுஷகுலத்தை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை பாதி மட்டுமே முடிந்தது, முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை. அவர் களிமண்ணிலிருந்து மனுஷனின் உருவமாதிரியை மட்டுமே உருவாக்கி, அதற்கு அவரது சுவாசத்தைக் கொடுத்திருந்தார், ஆனால் மனுஷனுக்கு அவரை வணங்குவதற்குப் போதுமான சித்தத்தை அவர் வழங்கியிருக்கவில்லை. ஆதியில், மனுஷனுக்கு அவரை வணங்குவதற்கோ அல்லது அவருக்குப் பயப்படுவதற்கோ மனதில்லை. மனுஷன் அவரது வார்த்தைகளைக் கேட்க மட்டுமே அறிந்திருந்தான், ஆனால் பூமியிலுள்ள ஜீவிதத்திற்கான அடிப்படை அறிவையும் மனுஷ ஜீவிதத்தின் இயல்பான விதிகளையும் அறியாதவனாக இருந்தான். ஆகவே, யேகோவா ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து ஏழு நாட்களின் திட்டத்தை முடித்திருந்தாலும், மனுஷனுக்கான சிருஷ்டிப்பை அவர் எந்த வகையிலும் முடித்திருக்கவில்லை, ஏனென்றால் மனுஷன் ஒரு உமி மட்டுமே, மேலும் மனுஷனாக இருப்பதன் யதார்த்தம் அவனிடம் இருக்கவில்லை. மனுஷகுலத்தை படைத்தவர் யேகோவாதான் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் யேகோவாவின் வார்த்தைகளையோ விதிகளையோ எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதில் அவனுக்கு எந்தவிதமான அறிவும் இல்லை. ஆகவே, மனுஷகுலம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகும், யேகோவாவின் கிரியை முடிவடையவில்லை. மனுஷகுலத்தை தனக்கு முன்பாக வரும்படி செய்ய அவர் இன்னும் அதை முழுமையாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதனால் அவர்களால் பூமியில் ஒன்றாக ஜீவித்திருக்கவும் அவரை வணங்கவும் முடியும், மேலும் அவரது வழிகாட்டுதலுடன் பூமியில் சாதாரண மனுஷ ஜீவிதத்திற்காக சரியான பாதையிலும் அவர்களால் பிரவேசிக்க முடியும். இவ்வாறாக மட்டுமே யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகள் முழுமையாக நிறைவடைந்தன; அதாவது, இவ்வாறாக மட்டுமே உலகை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது. எனவே, மனுஷகுலத்தை அவர் சிருஷ்டித்ததால், அவர் பூமியிலுள்ள மனுஷகுலத்தின் ஜீவிதத்தை பல ஆயிரம் ஆண்டுகளாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதன்மூலம் மனுஷகுலம் அவருடைய கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு, பூமியில் ஒரு சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குபெற முடிந்தது. அப்போதுதான் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 22

இயேசு செய்த கிரியை அந்தக் காலத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதுமாக இருந்தது. ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம், கிருபை மற்றும் தயை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம், மற்றும் அன்பான தயை ஆகியவற்றை அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்தக் காலம் முழுவதும் நிறைந்திருந்தன. மனிதன் ஏற்கனவே சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறான். ஆகவே கிருபையின் காலத்தில், எல்லா மனிதர்களையும் மீட்கும் கிரியைக்கு, மிகுதியான கிருபையும், எல்லையற்ற சகிப்புத்தன்மையும், பொறுமையும் தேவைப்பட்டது. அதற்கும் மேலாக, ஒரு பலனைப் பெற, மனிதகுலத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்குப் போதுமான பலி ஒன்று தேவைப்பட்டது. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கண்டது மனிதகுலத்தின் பாவங்களுக்கான எனது பாவநிவாரணபலியான இயேசுவை மட்டுமே. அவர்கள் அறிந்ததெல்லாம், தேவன் இரக்கமுள்ளவராகவும், சகிப்புத்தன்மையுள்ளவராகவும் இருக்க முடியும் என்பதாகும். மேலும் அவர்கள் பார்த்ததெல்லாம் இயேசுவின் இரக்கத்தையும், தயையையும் மட்டுமேயாகும். இவை அனைத்திற்கும் காரணம் அவர்கள் கிருபையின் காலத்தில் பிறந்தார்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பு, இயேசு தங்களுக்கு அளித்த பல வகையான கிருபையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்தது. இவ்வாறு, அவர்கள் கிருபையை அனுபவிப்பதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற முடிந்தது. மேலும் இயேசுவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அனுபவிப்பதன் மூலமும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற முடிந்தது. இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையினால் மட்டுமே அவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றனர், மேலும் இயேசு அளித்த மிகுதியான கிருபையினை அனுபவித்தனர். இயேசு சொன்னது போல்: நீதிமான்களையல்ல, பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறத்தக்கதாக அனுமதிக்கும்படி, அவர்களை மீட்பதற்கே வந்திருக்கிறேன். இயேசு மாம்சமானபோது, அவர் மனிதனின் குற்றங்களுக்கு சகிப்பின்மையையும், நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் கொண்டு வந்திருந்தால், மனிதன் ஒருபோதும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான், என்றென்றும் பாவியாகவே இருந்திருப்பான். இது அவ்வாறு இருந்திருந்தால், ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் நியாயப்பிரமாண காலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும், மேலும் நியாயப்பிரமாணத்தின் காலம் இன்னும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். மனிதனின் பாவங்கள் மிகுதியானதாக மற்றும் மிகவும் மோசமானதாக வளர்ந்திருக்கும். மேலும் மனிதகுலத்தின் சிருஷ்டிப்பு வீணானதாக இருந்திருக்கும். மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு யேகோவாவுக்கு ஊழியம் மட்டுமே செய்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பாவங்கள் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் பாவங்களைவிட அதிகமாக இருந்திருக்கும். இயேசு எவ்வளவு அதிகமாக மனிதகுலத்தை நேசித்து, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களிடம் போதுமான இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவந்தாரோ, அவ்வளவு அதிகமாக மனிதர்களும், இயேசு ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தி மீட்டுக்கொண்ட வழித்தவறிய ஆட்டுக்குட்டிகள் என்று அழைக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார்கள். இந்தக் கிரியையில் சாத்தானால் தலையிட முடியவில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஓர் அன்பான தாய் குழந்தையைத் தன் மார்பில் சாய்த்துக்கொள்வது போல நடத்தினார். அவர்களைக் குறித்து கோபத்தையோ வெறுப்பையோ அவர் வளர்த்துக்கொள்ளவில்லை, ஆனால் ஆறுதல் நிறைந்தவராக இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களிடம் கோபப்படவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களின் முட்டாள்தனத்திற்கும் அறியாமைக்கும், “மற்றவர்களை ஏழெழுபதுதரமட்டும் மன்னியுங்கள்” என்று சொல்லும் அளவிற்குக் கண்டுகொள்ளாதவராக இருந்தார். இவ்வாறு மற்றவர்களின் இருதயங்கள் அவருடைய இருதயத்தால் மாற்றப்பட்டன. இவ்வாறு ஜனங்கள் அவருடைய சகிப்புத்தன்மையின் மூலம் தங்கள் பாவங்களுக்குப் பாவ மன்னிப்பைப் பெற்றார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 23

இயேசு தம்முடைய மனுவுருவாதலில் முற்றிலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதிருந்தபோதிலும், அவர் எப்போதும் தம்முடைய சீஷர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்குத் தேவையானதை வழங்கினார், உதவினார், மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தார். அவர் எவ்வளவு கிரியையைச் செய்தாலும், எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், அவர் ஒருபோதும் ஜனங்களிடம் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, மாறாக எப்போதும் பொறுமையுள்ளவராகவும், அவர்களின் பாவங்களை சகிப்பவராகவும் இருந்தார். எனவே கிருபையின் காலத்தின் ஜனங்கள் அவரை “பிரியமான இரட்சகராகிய இயேசு” என்று அன்பாக அழைத்தனர். அக்கால ஜனங்களுக்கு—அதாவது எல்லா ஜனங்களுக்கும்—இயேசு என்னவாக இருந்தார் மற்றும் என்ன கொண்டிருந்தார் என்றால், இரக்கமும் கிருபையுமாகும். அவர் ஒருபோதும் ஜனங்களின் மீறுதல்களை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களை அவர் நடத்திய விதம் அவர்களின் மீறுதல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது வேறுபட்ட காலம் என்பதால், அவர்கள் நிறைவாகப் புசிக்கத்தக்கதாக, அவ்வப்போது ஜனங்களுக்கு மிகுதியான ஆகாரத்தை அவர் வழங்கினார். தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையோடு நடத்தினார், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். ஜனங்கள் அவரை விசுவாசிப்பதற்கும், அவர் செய்த அனைத்தும் மிகுந்த அக்கறையுடனும், உண்மையுடனும் செய்யப்பட்டிருப்பதை ஜனங்கள் காணும் பொருட்டும், அவருடைய கரங்களில் மரித்தவர்கள் கூட உயிர்த்தெழ முடியும் என்பதையும் வெளிக்காட்ட, அழுகிய சடலத்தையும் உயிர்த்தெழும்பச் செய்தார். இவ்வாறு அவர் மௌனமாக சகித்துக்கொண்டு, அவர்களிடையே மீட்பின் கிரியையைச் செய்தார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, அவர் மனிதகுலத்தின் பாவங்களைத் தம்மீது எடுத்துக்கொண்டு மனிதகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மாறியிருந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் சிலுவைக்கான வழியைத் திறந்திருந்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையின் பொருட்டு தம்மையே தியாகம் செய்து, தம்முடைய இரக்கம், கிருபை மற்றும் பரிசுத்தம் என அனைத்தையும் மனிதகுலத்திற்கு வழங்கினார். அவர் மனிதகுலத்திடம் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ளவராகவும், ஒருபோதும் பழிவாங்காதவராகவும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பவராகவும், மனந்திரும்பும்படி அவர்களை அறிவுறுத்தியவராகவும், பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவராகவும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிலுவையின் பொருட்டு தங்களைத் தியாகம் செய்யக் கற்றுக் கொடுத்தவராகவும் இருந்தார். அவர் சகோதர சகோதரிகளிடம் கொண்டிருந்த அன்பு மரியாள் மீதான அன்பையும் மிஞ்சியது. அவருடைய மீட்பிற்காக, வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதும், பிசாசுகளைத் துரத்தியதும் அவர் செய்த கிரியையின் கொள்கைகளாக இருந்தன. அவர் எங்கு சென்றிருந்தாலும், தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையுடன் நடத்தினார். அவர், ஏழைகளை ஐஸ்வரியவான்களாகவும், முடவர்களை நடக்கவும், குருடர்களைப் பார்க்கவும், மேலும் செவிடர்களைக் கேட்கவும் செய்தார். தாழ்த்தப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும், பாவிகளையும்கூட தன்னுடன் ஒரே மேஜையில் அமர அவர் அழைத்தார். அவர்களை ஒருபோதும் விலக்கிக் கொள்ளாமல், எப்போதும் பொறுமையாக இருந்தார். ஒரு மேய்ப்பனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப்போனால், அவன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுப் போய்க் காணாமற்போனதைத் தேடுவான். அவன் அதைக் கண்டுபிடித்தால், அதைக்குறித்து அதிகமாய் சந்தோஷப்படுவான் என்றும் கூறினார். ஒரு தாய் ஆடு தனது ஆட்டுக்குட்டிகளை நேசிப்பதைப் போல அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை நேசித்தார். அவர்கள் மூடர்களாகவும், அறிவற்றவர்களாகவும், அவருடைய பார்வையில் பாவிகளாகவும் இருந்தபோதிலும், சமுதாயத்தில் கீழானவர்களாக இருந்தபோதிலும், இந்தப் பாவிகளை, அதாவது மற்றவர்களால் இகழப்பட்ட மனிதர்களை அவருடைய கண்மணிபோல கருதினார். அவர்களுக்கு அவர் தயவாக இருந்ததால், பலிபீடத்தின் மீது ஓர் ஆட்டுக்குட்டி பலியிடப்படுவது போல, அவர்களுக்காக அவர் தம் உயிரைக் கொடுத்தார். அவர்களுடைய ஊழியக்காரனைப் போல அவர் அவர்களுக்கிடையே சென்று, தம்மைப் பயன்படுத்தவும், தம்மைக் கொல்லவும் அனுமதித்தார். நிபந்தனையின்றி அவர்களுக்குத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் பிரியமான இரட்சகராகிய இயேசுவாக இருந்தார். ஆனால் ஓர் உயர்ந்த பீடத்திலிருந்து ஜனங்களுக்கு அறிவுரை வழங்கிய பரிசேயர்களுக்கு, அவர் இரக்கத்தையும் கிருபையையும் காட்டவில்லை, மாறாக வெறுப்பையும் மனக்கசப்பையும் காட்டினார். அவர் பரிசேயர்களிடையே தமது கிரியையை அதிகமாக நடப்பிக்கவில்லை, அவ்வப்போது அவர்களுக்குப் போதித்துக் கண்டித்தார். அவர்களின் மத்தியில் அவர் மீட்பின் கிரியையையும் செய்யவில்லை, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யவில்லை. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவருடைய இரக்கத்தையும், கிருபையையும் அளித்தார். இந்தப் பாவிகளுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, கடைசி வரை சகித்துக்கொண்டார். மேலும், எல்லா மனிதர்களையும் முழுமையாக மீட்டுக்கொள்ளும் வரை ஒவ்வொரு அவமானத்தையும் அனுபவித்தார். இது அவரது கிரியைகளின் மொத்த விவரமாகும்.

இயேசுவின் மீட்பு இல்லாவிட்டால், மனிதகுலம் என்றென்றும் பாவத்தில் வாழ்ந்து, பாவத்தின் சந்ததியாக, பிசாசுகளின் சந்ததியாக மாறியிருக்கும். இவ்வாறு தொடர்ந்தால், உலகம் முழுவதும் சாத்தான் வசிக்கும் இடமாக, அவனின் வசிப்பிடமாக மாறியிருக்கும். எவ்வாறாயினும், மீட்பின் கிரியைக்காக மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும் கிருபையையும் காட்ட வேண்டும். அத்தகைய வழிமுறைகளால் மட்டுமே மனிதகுலம் மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இறுதியாக, மனிதகுலம் தேவனால் முற்றிலுமாகவும் முழுமையாகவும் ஆதாயப்படுத்தப்படுவதற்கான உரிமையைப் பெற முடியும். இந்தக் கிரியையின் கட்டம் இல்லாதிருந்தால், ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் முன்னேறியிருந்திருக்க முடியாது. இயேசு சிலுவையில் அறையப்படாமல், நோயாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் மட்டுமே செய்திருந்தால், ஜனங்களால் தங்கள் பாவங்களிலிருந்து முழுமையான மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. இயேசு பூமியில் தமது கிரியையைச் செய்யச் செலவழித்த மூன்றரை ஆண்டுகளில், அவர் மீட்பின் கிரியையில் பாதியை மட்டுமே முடித்தார்; பின்னர், சிலுவையில் அறையப்பட்டு, பாவ மாம்சத்தின் தோற்றமாக மாறுவதன் மூலம், பிசாசிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அவர் சிலுவையில் அறையப்படுவதைச் செய்து முடித்து, மனிதகுலத்தின் தலைவிதியை மேற்கொண்டார். அவர் சாத்தானின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னரே, அவர் மனிதகுலத்தை மீட்டுக்கொண்டார். முப்பத்தி மூன்றரை ஆண்டுகளாக அவர் பூமியில் துன்பப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டார், அவதூறாகப் பேசப்பட்டார், கைவிடப்பட்டார், அவர் தலை சாய்க்க இடமில்லை, ஓய்வெடுக்க இடமில்லை, பின்னர் அவர் உயிரோடு சிலுவையில் அறையப்பட்டார். ஒரு பரிசுத்தமான பாவமறியா உடல் சிலுவையில் அறையப்பட்டது. அங்குள்ள ஒவ்வொரு விதமான துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைக் கேலி செய்து வாரினால் அடித்தார்கள், சேவகர்கள் அவருடைய முகத்தில் துப்பினர். ஆயினும் அவர் மவுனமாக இருந்தார், இறுதிவரை சகித்துக்கொண்டார், நிபந்தனையின்றி மரணம் வரைக்கும் தம்மை ஒப்புக்கொடுத்தார். அதன்பிறகு அவர் மனிதகுலம் முழுவதையும் மீட்டுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் இளைப்பாற அனுமதிக்கப்பட்டார். இயேசு செய்த கிரியை கிருபையின் காலத்தை மட்டுமே குறிக்கிறது. இது நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் குறிக்கவில்லை, கடைசி நாட்களின் கிரியைக்கு மாற்றாகவும் இல்லை. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கடந்து வந்த இரண்டாவது காலத்தில், அதாவது மீட்பின் காலத்தில் இயேசுவினுடைய கிரியையின் சாராம்சம் இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 24

யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காகத் தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழைய கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயப்பிரமாணத்தின் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். ஒவ்வொரு முறையும் தேவன், கிரியையின் புதிய கட்டத்தைத் தொடங்கும்போது, எப்போதும் ஒரு புதிய ஆரம்பம் இருக்க வேண்டும், மேலும் அது எப்போதும் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும். தேவனின் மனநிலையிலும், அவர் கிரியை செய்யும் முறையிலும், அவருடைய கிரியை செய்யப்படும் இடத்திலும் மற்றும் அவரது நாமத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படியானால், புதிய யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்வது மனுஷனுக்கு கடினம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தேவன் மனுஷனால் எவ்வாறு எதிர்க்கப்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது கிரியையைச் செய்கிறார், எப்போதும் மனுஷகுலம் முழுவதையும் முன்னோக்கிக் கொண்டுசெல்கிறார். இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 25

கிருபையின் யுகத்திலேயே ஜனங்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் தங்களது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுபட மாட்டார்கள், ஒருபுறம் தேவனின் ஆழ்ந்த மனநிலையை மட்டும் தெரிந்துகொள்வார்கள். ஜனங்கள் எப்பொழுதும் ஏராளமான கிருபையின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், ஆனால் தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ அனுமதிக்கும் ஜீவவழி இல்லை என்றால், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்திலான விசுவாசத்தில் உண்மையாக எதையும் பெறமாட்டார்கள். இந்த வகையான விசுவாசம் உண்மையில் பரிதாபகரமானது. நீ இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், ராஜ்யத்தின் யுகத்தில் மனுஷனாக அவதரித்த தேவனின் ஒவ்வொரு படியையும் நீ அனுபவித்து முடிக்கும்போது, பல ஆண்டுகளாக நீ கொண்டிருந்த ஆசைகள் இறுதியாக உணரப்பட்டுள்ளன என்பதை நீ உணருவாய். இப்போதுதான் நீ உண்மையிலேயே தேவனை நேருக்கு நேர் பார்த்திருக்கிறாய் என்று நீ உணருவாய்; இப்போதுதான் நீ அவருடைய முகத்தைப் பார்த்திருக்கிறாய், அவருடைய தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய், அவருடைய கிரியையின் ஞானத்தைப் பாராட்டியிருக்கிறாய், அவர் எவ்வளவு உண்மையானவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாய். கடந்த காலங்களில் ஜனங்கள் பார்த்திராத அல்லது வைத்திருக்காத பல விஷயங்களை நீ பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணருவாய். இந்த நேரத்தில், தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது என்றால் என்ன, தேவனின் சித்தத்திற்கு இணங்குவது என்றால் என்ன என்பதை நீ தெளிவாக அறிந்து கொள்வாய். நிச்சயமாக, நீ கடந்த காலக் கருத்துக்களுடன் ஒட்டிக்கொண்டு, தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தின் உண்மையை நிராகரிக்கிறாய் அல்லது மறுக்கிறாய் என்றால், நீ வெறுங்கையுடன்தான் இருப்பாய், எதையும் பெறமாட்டாய், இறுதியில் தேவனை எதிர்த்ததற்காக நீ குற்றவாளி என்று அறிவிக்கப்படுவாய். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது” (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்குத் தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார். மனுஷகுமாரனின் ஆழ்ந்த மனநிலையைப் பாராட்டிய அனைவருமே மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மிகப் பெரியவர், மனுஷ மொழியைப் பயன்படுத்தி அவரை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷன், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் அனுபவித்தவுடன், விளக்குகளின் மத்தியில் மனுஷகுமாரனைப் பற்றிப் பேசிய யோவானின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவன் அறிந்து கொள்வான்: “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.” அந்த நேரத்தில், இவ்வளவு சொல்லியிருக்கும் இந்த சாதாரண மாம்சமானது தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் என்பதை நீ சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துக்கொள்வாய். மேலும், உண்மையிலேயே நீ எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்து, நீயே உன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவாய். இந்த ஆசீர்வாதத்தை ஏற்க நீ தயாராக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 26

வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளிலிருந்து எவ்வாறு அவன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான். இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவு தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும்தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்த பின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமான கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணபலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்டத்தின் கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் நிர்வகித்தல் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 27

கடைசிக் காலத்தின் கிரியையில், வார்த்தையானது அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் வெளிப்பாட்டை விட வலிமையானது, மேலும் வார்த்தையின் அதிகாரம் அடையாளங்களையும் அதிசயங்களையும் விட அதிகமாக உள்ளது. வார்த்தையானது மனுஷனின் இருதயத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட அனைத்து சீர்கெட்ட மனநிலைகளையும் அம்பலப்படுத்துகிறது. நீயாகவே அவற்றைக் கண்டுணர உனக்கு வழி இல்லை. வார்த்தையின் மூலம் அவை உனக்கு முன் வெறுமனே வைக்கப்படும் போது, நீ இயல்பாகவே அவற்றைக் கண்டுபிடிப்பாய்; உன்னால் அவற்றை மறுக்க முடியாது, மேலும் நீ முற்றிலும் சமாதானம் அடைந்திருப்பாய். இது வார்த்தையின் அதிகாரம் அல்லவா? இன்றைய வார்த்தையின் கிரியையால் அடையப்பட்ட முடிவு இது. ஆகையால், நோயைக் குணப்படுத்துவதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் மனுஷனை அவனது பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்க முடியாது, மேலும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் அவனை முழுமையாக பரிபூரணப்படுத்த முடியாது. நோயைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளை விரட்டுவதற்குமான அதிகாரம் மனுஷனுக்கு கிருபையை மட்டுமே தருகிறது, ஆனால் மனுஷனின் மாம்சம் இன்னும் சாத்தானுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது, மேலும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்திகரிக்கப்படாதவை இன்னும் பாவத்திற்கும் அசுத்தத்திற்கும் உரியதாகவே இருக்கின்றன. வார்த்தையின் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே அவனால் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக்கப்பட முடியும். பிசாசுகள் மனுஷனிடமிருந்து விரட்டப்பட்டு, அவன் மீட்கப்பட்டபோது, இதன் பொருள் அவன் சாத்தானின் பிடிகளிலிருந்து விலக்கப்பட்டு தேவனிடம் திரும்பினான் என்பதாகும். இருப்பினும், தேவனால் சுத்திகரிக்கப்படாமல் அல்லது மாற்றப்படாமல் இருந்தால் அவன் சீர்கெட்ட மனுஷனாகவே இருப்பான். மனுஷனுக்குள் இன்னும் அசுத்தம், எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மை ஆகியவை இருக்கின்றன; மனுஷன் தேவனுடைய மீட்பின் மூலமாக மட்டுமே அவரிடம் திரும்பியிருக்கிறான், ஆனால் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் இருப்பதில்லை, அவரை எதிர்க்கவும் துரோகம் செய்யவும் வல்லவனாகவே இருக்கிறான். மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நியாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாகச் செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும். மனுஷன் கடந்த காலத்தில் இவ்வாறு கூச்சலிட்டான், ஏனென்றால் அவனுடைய இயல்பான சீர்கெட்ட மனநிலை பற்றி அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. இவை மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தங்கள். இவ்வளவு நீண்ட நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பு காலம் முழுவதும், மனுஷன் பதற்றமான சூழலில் வாழ்ந்தான். இந்த வார்த்தையின் மூலம் இவை அனைத்தும் அடையப்படவில்லையா? ஊழியம் செய்பவர்களுக்கான சோதனைக்கு முன்னர் நீ மிகவும் உரத்த குரலில் அழவில்லையா? “ராஜ்யத்தில் நுழையுங்கள்! இந்த நாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் நுழைவார்கள்! அனைவரும் தேவனில் பங்கெடுப்பார்கள்!” ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, நீ கூக்குரலிடவில்லை. ஆதியில், “தேவனே! நீர் என்னை எங்கு வைத்தாலும், உம்மால் வழிநடத்தப்படுவதற்கு நான் கீழ்ப்படிவேன்,” என்று அனைவரும் கூக்குரலிட்டார்கள். “யார் எமக்கான பவுலாக இருக்க விரும்புவது?” என்ற தேவனின் வார்த்தைகளைப் படித்தவுடன், ஜனங்கள், “நான் தயாராக இருக்கிறேன்!” என்றனர். பின்னர் அவர்கள், “யோபுவின் விசுவாசத்தை யார் ஏற்றுக்கொள்வது?” என்ற வார்த்தைகளைக் கண்டார்கள். அதற்கு அவர்கள், “நான் யோபுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். தேவனே, தயவுசெய்து என்னைச் சோதனை செய்யும்!” என்றனர். ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, அவர்கள் ஒரே நேரத்தில் சரிந்துவிட்டார்கள், மீண்டும் எழுந்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் இருதயத்தில் உள்ள அசுத்தங்கள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இது வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? ஆகவே, நீங்கள் இன்று அனுபவித்திருப்பது வார்த்தையின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் தான், இயேசுவின் அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் மூலம் அடைந்ததை விட இது பெரிதாக இருக்கிறது. நீ பார்க்கும் தேவனின் மகிமையும், நீ காணும் தேவனின் அதிகாரமும் சிலுவையில் அறையப்படுவதன் மூலமாக மட்டுமே இல்லாமல், நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகவும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமாகவும் காணப்படுகின்றன, ஆனால் அதைவிடவும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மூலம்தான் காணப்படுகின்றன. தேவனின் அதிகாரமும் வல்லமையும், அடையாளங்களின் கிரியை, நோயைக் குணப்படுத்துதல் மற்றும் பிசாசுகளை விரட்டுதல் போன்றவற்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை என்பதை இது உனக்குக் காட்டுகிறது, ஆனால் தேவனுடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பானது தேவனின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த மற்றும் அவரது சர்வவல்லமையை வெளிப்படுத்த சிறந்ததாக இருப்பதை உனக்குக் காட்டுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 28

ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறம்பாக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், புறம்பாக்கப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பதற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார். ராஜ்யத்தின் யுகம் முழுவதும், தேவன் தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், தன்னுடைய கிரியையின் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் அதிசயங்களைச் செய்வதில்லை அல்லது அற்புதங்களைச் செய்வதில்லை, ஆனால் வார்த்தைகளின் மூலமாகவே அவருடைய கிரியையைச் செய்கிறார். இந்த வார்த்தைகளால், மனுஷன் ஊட்டமளிக்கப்படுகிறான், வழங்கப்படுகிறான், மற்றும் அறிவையும் உண்மையான அனுபவத்தையும் பெறுகிறான். வார்த்தையின் யுகத்தில், மனுஷன் விதிவிலக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளான். அவன் எந்தவிதமான உடல் வலியையும் அனுபவிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகளின் ஏராளமான வழங்கலை அனுபவிக்கிறான்; கண்மூடித்தனமாகத் தேடவோ அல்லது கண்மூடித்தனமாகப் பயணிக்கவோ தேவையில்லாமல், அவன் தேவன் தோன்றுவதைக் காண்கிறான், அவர் தனது சொந்த வாயால் பேசுவதைக் கேட்கிறான், அவர் வழங்குவதைப் பெறுகிறான், அவர் தனிப்பட்ட முறையில் அவருடைய கிரியையைச் செய்வதை கவனிக்கிறான். இவை கடந்த யுகங்களின் ஜனங்களால் அனுபவிக்க முடியாத விஷயங்கள், இவை ஒருபோதும் பெற முடியாத ஆசீர்வாதங்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 29

சாத்தானால் மிகவும் ஆழமாகச் சீர்கெட்டுப்போன மனுஷகுலம், தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாமல், தேவனை வணங்குவதை நிறுத்திவிட்டனர். ஆதியில், ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டபோது, யேகோவாவின் மகிமையும் சாட்சியமும் எப்போதும் இருந்தன. ஆனால் சீர்கெட்டுப்போன பின், மனுஷன் மகிமையையும் சாட்சியத்தையும் இழந்தான், ஏனென்றால் எல்லோரும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், மேலும் அவரை வணங்குவதைக் கூட முற்றிலும் நிறுத்திவிட்டார்கள். இன்றைய ஜெயங்கொள்ளுதல் கிரியையானது எல்லா சாட்சியங்களையும் எல்லா மகிமையையும் மீட்டெடுப்பதற்கும், மற்றும் எல்லா மனுஷரையும் தேவனை வணங்க வைப்பதற்குமாகும், இதனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களிடையே சாட்சியம் இருக்கும்; இந்தக் கட்டத்தில் செய்ய வேண்டிய கிரியை இதுவே. மனுஷகுலம் எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட வேண்டும்? மனுஷனை முழுமையாக நம்ப வைக்க இந்தக் கட்டத்தின் வார்த்தைகளின் கிரியையைப் பயன்படுத்துவதன் மூலமும்; வெளிப்படுத்துதல், நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற சாபம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை முற்றிலும் இணங்க வைப்பதன் மூலமும்; மனுஷனின் கலகத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமும், அவனது எதிர்ப்பை நியாயந்தீர்ப்பதன் மூலமும் அவன் மனுஷகுலத்தின் அநீதியையும் அசுத்தத்தையும் அறிந்து கொள்ளக்கூடும், இதன்மூலம் இவற்றை தேவனின் நீதியான மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தைகளின் மூலம்தான் மனுஷன் ஜெயங்கொள்ளப்படுகிறான், முழுமையாக சமாதானமடைகிறான். வார்த்தைகள்தான் மனுஷகுலத்தை இறுதியாக ஜெயங்கொள்வதற்கான வழிமுறையாகும், மேலும் தேவனின் ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளின் பலமான தாக்குதலையும் மற்றும் நியாயத்தீர்ப்பையும் ஏற்க வேண்டும். இன்றைய நாளில் பேசப்படும் செயல்முறையானது துல்லியமாக ஜெயங்கொள்ளுதலின் செயல்முறையாகும். ஜனங்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்? இந்த வார்த்தைகளை எவ்வாறு புசிக்கவும் பருகவும் வேண்டும் என்பதை அறிந்து, அவற்றைப் பற்றிய புரிதலை அடைவதன் மூலம் ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஜனங்கள் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தவரை, இது அவர்களால் செய்யக்கூடிய ஒன்றல்ல. உன்னால் செய்யக்கூடியதெல்லாம், இந்த வார்த்தைகளை புசித்துப் பருகுவதன் மூலம், உன் சீர்கேடு மற்றும் அசுத்தம், உன் கலகத்தன்மை, உன் அநீதி ஆகியவற்றை அறிந்து, தேவனுக்கு முன்பாக விழுவதே ஆகும். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட பிறகு, உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடியும், மேலும் உங்களுக்குத் தரிசனங்கள் இருந்து, இந்த வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தும், எந்தவொரு தேர்வையும் நீங்களே செய்யாவிட்டால், நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள்—இது இந்த வார்த்தைகளின் விளைவாக இருக்கும். மனுஷகுலம் ஏன் சாட்சியத்தை இழந்தனர்? ஏனென்றால், தேவன் மீது யாருக்கும் விசுவாசம் இல்லை, ஏனென்றால் ஜனங்களின் மனதில் தேவனுக்கு இடமில்லை. மனுஷகுலத்தை ஜெயங்கொள்வது என்பது மனுஷகுலத்தின் விசுவாசத்தை மீட்டெடுப்பதாகும். ஜனங்கள் எப்போதுமே இம்மைக்குரிய உலகில் கண்மூடித்தனமாக ஓட விரும்புகிறார்கள், அவர்கள் பல நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக அதிகம் விரும்புகிறார்கள், மற்றும் பல ஆடம்பரமான கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மாம்சத்தைப் பற்றியே சிந்திக்கிறார்கள், மாம்சத்திற்காகத் திட்டமிடுகிறார்கள், தேவனை விசுவாசிப்பதற்கான வழியைத் தேடுவதில் அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்பட்டுள்ளன, அவர்கள் தேவன் மீதுள்ள பயபக்தியை இழந்துவிட்டார்கள், அவர்கள் சாத்தான் மீது அளவுக்கு மீறிப் பற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். இவ்வாறு, மனுஷன் சாட்சியை இழந்துவிட்டான், அதாவது தேவனின் மகிமையை இழந்துவிட்டான். மனுஷகுலத்தை ஜெயங்கொள்வதன் நோக்கம் தேவன் மீதான மனுஷனின் பயபக்தியின் மகிமையை மீட்டெடுப்பதாகும். இதை இவ்வாறும் சொல்லலாம்: ஜீவிதத்தைப் பின்தொடராதவர்கள் பலர் உள்ளனர்; ஜீவிதத்தைப் பின்தொடரும் சிலர் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே. ஜனங்கள் தங்கள் எதிர்காலத்தில் ஆர்வமாக உள்ளனர், அதனால் ஜீவிதத்தில் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. சிலர் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அவருடைய முதுகுக்குப் பின்னால் அவரை நியாயந்தீர்க்கிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த ஜனங்கள் இப்போது புறக்கணிக்கப்படுகிறார்கள்; இப்போதைக்கு, இந்த கலகக் குமாரர்களுக்கு எதுவும் செய்யப்படப் போவதில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீ இருளில் வாழ்வாய், அழுவாய், பற்களைக் கடித்துக்கொள்வாய். நீ வெளிச்சத்தில் ஜீவித்திருக்கும்போது அதன் விலைமதிப்பற்ற தன்மையை நீ உணர்வதில்லை, ஆனால் நீ இருள் சூழ்ந்த இரவில் ஜீவித்திருக்கும் போது அந்த விலைமதிப்பற்ற தன்மையை நீ உணருவாய், அப்போது நீ வருந்துவாய். நீ இப்போது நன்றாக இருப்பதாய் உணர்கிறாய், ஆனால் நீ வருந்தும் நாள் வரும். அந்த நாள் வரும்போது, இருள் இறங்கி வெளிச்சம் எங்கேயும் இல்லாதபோது, மிகவும் தாமதமாக வருத்தப்படுவாய். இன்றைய கிரியையை நீ இன்னும் புரிந்து கொள்ளாததால் தான், இப்போது உனக்கு இருக்கும் இந்த நேரத்தை நீ மதிக்கத் தவறுகிறாய். முழு பிரபஞ்சத்தின் கிரியையும் தொடங்கியவுடன், இன்று நான் சொல்லும் அனைத்தும் நிறைவேறியதும், பலர் தலையைப் பிடித்து, வேதனையால் கண்ணீர் சிந்தி அழுவார்கள். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருளில் விழுந்துவிட்டிருப்பார்கள் அல்லவா? உண்மையிலேயே ஜீவிதத்தைப் பின்தொடர்ந்து பரிபூரணமாக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்தப்படலாம், அதே நேரத்தில் பயன்படுத்த தகுதியற்ற கலகக் குமாரர்கள் அனைவரும் இருளில் விழுவார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை இழந்துவிடுவார்கள், எதையும் புரிந்துகொள்ளவும் இயலாது போய்விடும். இவ்வாறு அவர்கள் தண்டனையில் மூழ்கடிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். கிரியையின் இந்தக் கட்டத்தில் நீ நன்கு தயாராக இருந்தால், உன் ஜீவிதத்தில் நீ வளர்ந்திருந்தால், நீ பயன்படுத்த தகுதியுடையவனாக இருப்பாய். நீ தயாராகாமல் இருந்தால், அடுத்தக் கட்டக் கிரியைக்கு நீ வரவழைக்கப்பட்டாலும், நீ பயன்படுத்துவற்குத் தகுதியற்றவனாக இருப்பாய்—இந்தக் கட்டத்தில் நீ தயாராக இருக்க விரும்பினாலும் உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்காது. தேவன் புறப்பட்டுச் சென்றிருப்பார்; இப்போது உனக்கு முன் இருக்கும் வாய்ப்பைக் கண்டுபிடிக்க உன்னால் எங்கு செல்லமுடியும்? தேவனால் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் பயிற்சியைப் பெற உன்னால் எங்கு செல்ல முடியும்? அதற்குள், தேவன் தனிப்பட்ட முறையில் பேசவோ அல்லது குரல் கொடுக்கவோ மாட்டார்; உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் இன்று பேசப்படும் விஷயங்களைப் படிப்பது மட்டுமே ஆகும்—அப்படியானால் புரிதல் எவ்வாறு எளிதாக வரும்? இன்றைய ஜீவிதத்தை விட எதிர்காலத்தில் இருக்கும் ஜீவிதம் எவ்வாறு சிறப்பாக இருக்கும்? அந்தச் சமயத்தில், நீ அழுதுகொண்டே பற்களைக் கடித்துக்கொண்டு ஒரு நடைபிணமாய்த் துயரப்பட மாட்டாயா? உனக்கு இப்போது ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றன, ஆனால் அவற்றை எவ்வாறு அனுபவிப்பது என்று உனக்கு தெரியவில்லை; நீ ஆசீர்வாதத்துடன் ஜீவிக்கிறாய், ஆனாலும் நீ அதை அறியாமல் இருக்கிறாய். நீ கஷ்டப்படத்தான் போகிறாய் என்பதை இது நிரூபிக்கிறது! இன்று, சிலர் எதிர்க்கிறார்கள், சிலர் கலகம் செய்கிறார்கள், சிலர் இதையும் அதையும் செய்கிறார்கள், நான் அதை வெறுமனே புறக்கணிக்கிறேன், ஆனால் நீ என்ன செய்யவிருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைத்திட வேண்டாம். உன் சாராம்சம் எனக்குப் புரியாததா? எனக்கு எதிராக ஏன் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கிறாய்? உன் சொந்த நலனுக்காக ஜீவிதத்தையும் ஆசீர்வாதங்களையும் பின்தொடர நீ தேவனை விசுவாசிப்பதில்லையா? நீ விசுவாசிப்பது உன் சொந்த நோக்கத்திற்காக இல்லையா? தற்போதைய தருணத்தில், நான் ஜெயங்கொள்ளும் கிரியையைப் பேசுவதன் மூலம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன், இந்த ஜெயங்கொள்ளும் கிரியை முடிவுக்கு வந்ததும், உனது முடிவு தெளிவாகத் தெரியும். அதை நான் உனக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 30

இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் கடைசிக் காலத்தின் பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பான நியாயத்தீர்ப்பு என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? நீ இதைக் காணவில்லையா? ஜெயங்கொள்ளும் கிரியை ஏன் இறுதிக் கட்டமாக இருக்கிறது? இது ஒவ்வொரு வகையான மனுஷரும் எந்த வகையான முடிவை சந்திப்பார்கள் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக இல்லையா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது, அவர்களின் உண்மையான வண்ணங்களைக் காட்டவும், பின்னர் அவர்களின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தவும் அனைவரையும் அனுமதிப்பதாக இல்லையா? இது மனுஷகுலத்தை ஜெயங்கொள்கிறது என்று சொல்வதை விட, ஒவ்வொரு வகையினருக்கும் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பதை இது காட்டுகிறது என்று சொல்வது நல்லது. இது ஜனங்களின் பாவங்களை நியாயந்தீர்ப்பது மற்றும் பல்வேறு வகையானவர்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றைப் பற்றியதாகும், இதன் மூலம் அவர்கள் தீயவர்களா அல்லது நீதியுள்ளவர்களா என்பதைத் தீர்மானிப்பதாகும். ஜெயங்கொள்ளும் கிரியைக்குப் பிறகு, நன்மைக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் தீமையைத் தண்டிக்கும் கிரியை வருகிறது. முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள்—அதாவது முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டவர்கள்—தேவனின் கிரியையை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்புவதற்கான அடுத்தக் கட்டத்தில் வைக்கப்படுவார்கள்; ஜெயங்கொள்ளப்படாதவர்கள் இருளில் வைக்கப்படுவார்கள், பேரழிவைச் சந்திப்பார்கள். இவ்வாறு மனுஷன் வகையின்படி வகைப்படுத்தப்படுவான், தீயவர்கள் தீமையுடன் குழுவாக இருப்பார்கள், அவர்கள் மீது மீண்டும் சூரியனின் வெளிச்சம் படாது, நீதிமான்கள் நன்மையுடன் குழுவாக இருப்பார்கள், வெளிச்சத்தைப் பெற்று வெளிச்சத்திலேயே என்றென்றும் ஜீவித்திருப்பார்கள். சகலத்திற்கும் முடிவு நெருங்கிவிட்டது; மனுஷனின் முடிவு அவனது கண்களுக்கு தெளிவாகக் காட்டப்படுகிறது, மேலும் சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். அப்படியானால், ஒவ்வொருவரும் வகைப்படுத்தப்படுவதன் வேதனையிலிருந்து ஜனங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? சகல விஷயங்களுக்கும் முடிவு நெருங்கும் போது மனுஷனின் ஒவ்வொரு வகையினரின் வெவ்வேறு முடிவுகள் வெளிப்படும், மேலும் இது முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது செய்யப்படுகிறது (ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியைகளும் உட்பட. தற்போதைய கிரியையில் இருந்து தொடங்குகிறது). சகல மனுஷரின் முடிவையும் வெளிப்படுத்துவது நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக, சிட்சையின் போதும், கடைசிக் காலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையின் போதும் செய்யப்படுகிறது. ஜனங்களை வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவது என்பது ஜனங்களை அவர்களின் உண்மையான வகைகளுக்குத் திருப்பி அனுப்புவது இல்லை, ஏனென்றால் சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டபோது, ஒரே மாதிரியான மனுஷர்கள் மட்டுமே இருந்தார்கள், அவர்களிடையே ஆண் மற்றும் பெண் என்ற ஒரே பிரிவு தான் இருந்தது. பல வகையான ஜனங்கள் இருக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகால சீர்கேட்டுக்குப் பிறகுதான், பல்வேறு வகை மனுஷர்கள் உருவாகியிருக்கிறார்கள், சிலர் இழிந்த பிசாசுகளின் ஆதிக்கத்தின் கீழும், சிலர் தீய பிசாசுகளின் ஆதிக்கத்தின் கீழும், சிலர் சர்வவல்லவருடைய ராஜ்யத்தின் கீழ் ஜீவித முறையைத் தொடர்பவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். இவ்வாறாக மட்டுமே இனங்கள் படிப்படியாக ஜனங்களிடையே உருவாகின்றன, இதனால் மட்டுமே மனுஷனின் பெரிய குடும்பத்திற்குள் ஜனங்கள் இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் அனைவரும் வெவ்வேறு “பிதாக்களை” கொண்டிருக்கிறார்கள்; எல்லோரும் முற்றிலும் சர்வவல்லவரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார்கள் என்பதாக இருப்பதில்லை, ஏனென்றால் மனுஷன் மிகவும் கலகக்காரன். நீதியான நியாயத்தீர்ப்பு ஒவ்வொரு வகையான மனுஷனின் உண்மையான சுயத்தையும் வெளிப்படுத்துகிறது, எதையும் மறைப்பதில்லை. எல்லோரும் தங்கள் உண்மையான முகத்தை வெளிச்சத்தில் காட்டுகிறார்கள். இந்தக் கட்டத்தில், மனுஷன் இனியும் அவன் முன்பிருந்ததைப் போலில்லை, அவனுடைய மூதாதையரின் பூர்வ சாயல் நீண்ட காலத்திற்கு முன்பே மறைந்துவிட்டது, ஏனென்றால் ஆதாம் மற்றும் ஏவாளின் எண்ணற்ற சந்ததியினர் நீண்ட காலமாகச் சாத்தானால் கைப்பற்றப்பட்டிருக்கிறார்கள், மீண்டும் ஒருபோதும் பரலோகச் சூரியனை அறிய மாட்டார்கள், ஏனென்றால் ஜனங்கள் எல்லா விதமான சாத்தானின் விஷத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். இதனால், ஜனங்களுக்கு பொருத்தமான போய்சேரும் இடங்கள் இருக்கின்றன. மேலும், அவர்களின் மாறுபட்ட விஷங்களின் அடிப்படையில் தான் அவை வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன, அதாவது அவர்கள் இன்று எந்த அளவிற்கு ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனர். மனுஷனின் முடிவு என்பது உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல. ஏனென்றால், ஆதியில், ஒரே ஒரு இனம் மட்டுமே இருந்தது, அவர்கள் கூட்டாக “மனுஷகுலம்” என்று அழைக்கப்பட்டனர், மனுஷன் முதலில் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, ஜனங்கள் அனைவரும் இருள் சூழப்படாமல் தேவனின் வெளிச்சத்தில் ஜீவித்திருந்தார்கள். ஆனால் மனுஷன் சாத்தானால் சீர்கெட்ட பிறகே, எல்லா வகையான மற்றும் அனைத்து வகையான ஜனங்களும் பூமியெங்கும் பரவியிருக்கிறார்கள்—குடும்பத்திலிருந்து வந்த அனைத்து வகையான ஜனங்களும் கூட்டாக “மனுஷகுலம்” என்று பெயரிடப்பட்ட ஆண்களும் பெண்களும் ஆனவர்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் மூதாதையர்களால் அவர்களின் பழமையான மூதாதையர்களிடமிருந்து விலகிச் செல்ல வழிவகுத்தனர்—இந்த மனுஷகுலத்தில் ஆண், பெண் ஆகியோர் அடங்குவர் (அதாவது ஆதியிலே ஆதாமும் ஏவாளும் அவர்களின் பழமையான மூதாதையர்கள் ஆவர்). அந்த நேரத்தில், பூமியில் வாழ்ந்தவர்களில் இஸ்ரவேலர் மட்டுமே யேகோவாவால் வழிநடத்தப்பட்டனர். முழு இஸ்ரவேலிலிருந்தும் (பூர்வ குடும்ப குலத்திலிருந்து என்று அர்த்தம்) தோன்றிய பல்வேறு வகையான ஜனங்கள் பின்னர் யேகோவாவின் வழிகாட்டலை இழந்தனர். இந்த ஆரம்பகால ஜனங்கள், மனுஷ உலகின் விஷயங்களை முழுமையாக அறியாதவர்கள், பின்னர் தங்கள் மூதாதையர்களுடன் சேர்ந்து அவர்கள் கூறிய பிரதேசங்களில் ஜீவித்திருக்கச் சென்றனர், அது இன்றுவரை தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் யேகோவாவிடமிருந்து எவ்வாறு விலகிச் சென்றார்கள் என்பதையும், எல்லா விதமான இழிவான பிசாசுகள் மற்றும் பொல்லாத ஆவிகளால் அவர்கள் இன்றுவரை எவ்வாறு சீர்கெட்டுப்போயிருக்கின்றனர் என்பதையும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இப்போது வரை ஆழமாக சீர்கெட்டு விஷத்தை பருகியவர்கள்—மீட்கப்படவே முடியாதவர்கள்—தங்கள் மூதாதையர்களுடன் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களைச் சீர்கெட்டுப்போகவைத்த இழிவான பிசாசுகள்தான் அந்த மூதாதையர்கள். இறுதியில் இரட்சிக்கப்படக்கூடியவர்கள் மனுஷகுலத்தின் பொருத்தமான இடத்திற்குப் போய்ச் சேருவார்கள், அதாவது இரட்சிக்கப்பட்ட மற்றும் ஜெயங்கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முடிவுக்கு போய்ச் சேருவார்கள். இரட்சிக்கப்படக்கூடிய அனைவரையும் இரட்சிக்க சகலமும் செய்யப்படும்—ஆனால் உணர்ச்சியற்ற மற்றும் குணப்படுத்த முடியாதவர்களுக்கு, அவர்களின் ஒரே தேர்வு அவர்களின் மூதாதையர்களைப் பின்தொடர்ந்து ஆக்கினைத்தீர்ப்பு என்னும் பாதாளக் குழிக்குள் செல்வதாகும். உனது முடிவு ஆதியிலேயே முன்குறிக்கப்பட்டது, இப்போதுதான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் நினைக்க வேண்டாம். நீ அவ்வாறு நினைத்தால், மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் போது, தனியாக சாத்தானுடைய இனம் உருவாக்கப்படவில்லை என்பதை நீ மறந்துவிட்டாயா? ஆதாம் மற்றும் ஏவாளால் ஆன ஒரே ஒரு மனுஷகுலம் மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டது (அதாவது ஆணும் பெண்ணும் மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டனர்) என்பதை நீ மறந்துவிட்டாயா? ஆரம்பத்தில் நீ சாத்தானின் சந்ததியாக இருந்திருந்தால், யேகோவா மனுஷனை சிருஷ்டித்தபோது, அவர் ஒரு சாத்தானின் குழுவைத் தமது சிருஷ்டிப்பில் சேர்த்தார் என்று அர்த்தமாகாதா? அவர் அப்படி ஏதாவது செய்திருக்க முடியுமா? அவர் தமது சாட்சியத்திற்காக மனுஷனை சிருஷ்டித்தார்; அவர் தமது மகிமைக்காக மனுஷனை சிருஷ்டித்தார். அவரை வேண்டுமென்றே எதிர்ப்பதற்காக அவர் ஏன் சாத்தானின் வம்சாவளியை வேண்டுமென்றே சிருஷ்டித்திருக்க வேண்டும்? யேகோவா எப்படி அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியும்? அவர் அவ்வாறு செய்திருந்தால், அவர் ஒரு நீதியுள்ள தேவன் என்று யார் கூறுவார்கள்? உங்களில் சிலர் இறுதியில் சாத்தானுடன் செல்வீர்கள் என்று நான் இப்போது கூறும்போது, அது நீ ஆதியில் இருந்தே சாத்தானுடன் இருந்தாய் என்று அர்த்தமல்ல; மாறாக, தேவன் உன்னை இரட்சிக்க முயற்சித்திருந்தாலும், நீ அந்த இரட்சிப்பைப் பெறத் தவறும் வகையில் நீ மிகவும் தாழ்ந்து போய்விட்டாய் என்று அர்த்தம். உன்னைச் சாத்தானுடன் வகைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குக் காரணம் நீ இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவனாகிவிட்டாய் என்பதுதான், மாறாக, தேவன் உனக்கு அநீதியானவர் என்பதாலும், உன் விதியை வேண்டுமென்றே சாத்தானின் உருவகமாக நிர்ணயித்ததாலும், பின்னர் உன்னைச் சாத்தானுடன் வகைப்படுத்தி, வேண்டுமென்றே உன்னை துயரப்படவைக்க விரும்புகிறார் என்பதால் அல்ல. அது ஜெயங்கொள்ளுதல் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் அல்ல. நீ அவ்வாறாக விசுவாசித்தால், உன் புரிதல் மிகவும் ஒருதலைப்பட்சமானதாகும்! ஜெயங்கொள்ளுதலின் இறுதிக் கட்டம் ஜனங்களை இரட்சிப்பதற்கும், அவர்களின் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கும் செய்யப்படுவதாகும். இது நியாயத்தீர்ப்பின் மூலம் ஜனங்களின் சீர்கேட்டை வெளிப்படுத்துவதும், இதன் மூலம் அவர்கள் மனந்திரும்புவதற்கும், எழுந்து வருவதற்கும், ஜீவனையும் மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையையும் பின்தொடர வேண்டும் என்பதுமாகும். இது உணர்ச்சியற்ற மற்றும் மனச்சோர்வடைந்த ஜனங்களின் இருதயங்களை எழுப்புவதும், நியாயத்தீர்ப்பின் மூலம், அவர்களின் உள்ளார்ந்த கலகத்தைக் காட்டுவதற்கும் ஆகும். இருப்பினும், ஜனங்கள் இன்னும் மனந்திரும்ப முடியாவிட்டாலும், மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பின்தொடர முடியாவிட்டாலும், இந்தச் சீர்கேடுகளைத் தூக்கிப் போட முடியாவிட்டாலும், அவர்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்தான். அவர்கள் சாத்தானால் விழுங்கப்படுவார்கள். தேவனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியத்துவம் இதுதான்: ஜனங்களை இரட்சிப்பதும், அவர்களின் முடிவுகளைக் காண்பிப்பதும்தான். நல்ல முடிவுகள், மோசமான முடிவுகள்—இவை அனைத்தும் ஜெயங்கொள்ளும் கிரியையால் வெளிப்படுகின்றன. ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்களா அல்லது சபிக்கப்படுவார்களா என்பது அனைத்தும் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது வெளிப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 31

சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு, அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்? மேலும், உங்கள் கீழ்ப்படியாமை எவ்வளவு காலம் தொடர முடியும்? உங்கள் கடைசிக் காலம் வந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா? தேவனை வணங்கி, அவர் தோன்றுவதற்கு ஏங்குகிறவர்கள் தேவனின் நீதி தோன்றும் நாளை எப்படி காணாமல் இருக்க முடியும்? நன்மைக்கான இறுதி வெகுமதியை அவர்கள் எவ்வாறு பெற முடியாதுபோகும்? நீ நன்மை செய்பவனா, அல்லது தீமை செய்பவனா? நீ நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் கீழ்ப்படிகிறவனா, அல்லது நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் சபிக்கப்படுபவனா? நீ வெளிச்சத்தில் நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக ஜீவிக்கிறவனா, அல்லது இருளுக்கு மத்தியில் பாதாளத்தில் வசிக்கிறவனா? உன் முடிவு வெகுமதிகளில் ஒன்றா, அல்லது தண்டனைகளில் ஒன்றா என்பதை மிகத் தெளிவாக அறிந்தவன் நீ மட்டுமே அல்லவா? தேவன் நீதியுள்ளவர் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவனும், மிக ஆழமாகப் புரிந்துகொள்பவனும் நீ மட்டுமே அல்லவா? ஆகவே உன் நடத்தையும் இருதயமும் எப்படிப்பட்டவை? இன்று நான் உன்னை ஜெயங்கொள்ளும்போது, உனது நடத்தை நல்லதா அல்லது தீயதா என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீ எனக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கிறாய்? நீ என்னை எவ்வளவு ஆழமாக வணங்குகிறாய்? நீ என்னிடம் எப்படி நடந்துகொள்கிறாய் என்பது உனக்கு தெளிவாகத் தெரியாதா? நீ இறுதியில் சந்திக்கும் முடிவை மற்றவரை விட நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்! மெய்யாகவே, நான் உனக்குச் சொல்கிறேன்: நான் மனுஷகுலத்தை மட்டுமே சிருஷ்டித்தேன், நான் உன்னை சிருஷ்டித்தேன், ஆனால் நான் உங்களை சாத்தானிடம் ஒப்படைக்கவில்லை; நான் வேண்டுமென்றே உங்களை என்னை எதிர்த்துக் கலகம் செய்யவோ அல்லது என்னை எதிர்க்கவோ செய்யவில்லை, அதன்மூலம் என்னால் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இந்த பேரழிவுகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் உங்கள் இருதயங்கள் மிகவும் கடினமாகவும், உங்கள் நடத்தை மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் தான் அல்லவா? ஆகவே, நீங்கள் சந்திக்கும் முடிவு உங்களால் தீர்மானிக்கப்பட்டது தான் இல்லையா? உங்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை மற்றவர்களை விட உங்களுக்கு, உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா? நான் ஜனங்களை ஜெயங்கொள்வதற்கான காரணம், அவர்களை வெளிப்படுத்துவதும், உனக்கு இரட்சிப்பைக் கொடுப்பதும்தான். இது உன்னை தீமை செய்யச் செய்வதல்ல, அல்லது வேண்டுமென்றே உன்னை அழிவின் நரகத்தில் நடக்க வைப்பதும் அல்ல. நேரம் வரும்போது, உன் பெரும் துன்பங்கள், உன் அழுகை மற்றும் பற்களைக் கடிப்பது—இவை அனைத்தும் உன் பாவங்களால் ஏற்பட்டதாக இருக்காதா? ஆகவே, உனது சொந்த நன்மை அல்லது உனது சொந்த தீமைதான் உனது சிறந்த நியாயத்தீர்ப்பு அல்லவா? உன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 32

கடைசி நாட்களின் போது, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்காக முக்கியமாக வந்திருக்கிறார். அவர் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்தும், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், மற்றும் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசுகிறார்; அவர் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார், ஒரு காலத்திற்கு ஒரு வழியைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனின் கருத்துக்களை மாற்றவும், கற்பனை தேவர்களின் உருவத்தை மனிதனின் இதயத்திலிருந்து அகற்றவும் அவர் பேசும் முறையைப் பயன்படுத்துகிறார். இதுதான் தேவனால் செய்யப்படுகிற முக்கியமான கிரியையாகும். பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும், மனிதனுக்கு உலகப்பிரகரமான பொருட்களின் ஆசீர்வாதங்களை வழங்கவும் தேவன் வந்திருக்கிறார் என்று மனிதன் நம்புவதால், இதுபோன்றவற்றை அகற்றுவதற்காக தேவன் இந்தக் கட்ட கிரியையை—அதாவது மனிதனின் கருத்துக்களிலிருந்து இந்தக் காரியங்களை நீக்குவதற்காகச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்—இதன்மூலம் தேவனுடைய யதார்த்தத்தையும் மற்றும் இயல்பான தன்மையையும் மனிதன் அறிந்துகொள்ளலாம், இயேசுவின் உருவம் அவனுடைய இருதயத்திலிருந்து அகற்றப்பட்டு, தேவனுடைய புதிய உருவத்தால் மாற்றப்படலாம். மனிதனுக்குள் தேவனுடைய உருவம் பழையதாக மாறியதும், அது ஒரு விக்கிரகமாக மாறுகிறது. இயேசு வந்து அந்தக் கட்ட கிரியையைச் செய்தபோது, அவர் தேவனை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், சில வார்த்தைகளைப் பேசினார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் தேவனுடைய ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எல்லாமுமாக இருக்கிற தேவனுடைய எல்லாவற்றையும் அவரால் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, மாறாக தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்வதில் அவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏனென்றால், தேவன் மிகவும் பெரியவர், அதிசயமானவர், அவர் புரிந்துகொள்ளப்பட முடியாதவர், ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் தம்முடைய கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறார். இந்த யுகத்தில் தேவன் செய்த கிரியை முக்கியமாக மனிதனின் வாழ்க்கைக்கான வார்த்தைகளை வழங்குவதாகும், மனிதனின் சுபாவம், சாராம்சம் மற்றும் அவனுடைய சீர்கெட்ட மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துதல், மேலும் மத கருத்துக்கள், பழமையான சிந்தனை, காலாவதியான சிந்தனை மற்றும் மனிதனின் அறிவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை நீக்குதல் ஆகும்; தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதன் மூலம் மனிதனின் அறிவும் கலாச்சாரமும் சுத்திகரிக்கப்பட வேண்டும். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்குத் தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை மாறாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதனை வெளிப்படுத்தவும், மனிதனை நியாயந்தீர்க்கவும், மனிதனை சிட்சிக்கவும், மனிதனை பரிபூரணமாக்கவும் அவர் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், இதனால் தேவனுடைய வார்த்தைகளில், மனிதன் தேவனுடைய ஞானத்தையும் அழகையும் காண்கிறான், மேலும் தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறான், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் மனிதன் தேவனின் செயல்களைக் காண்கிறான். நியாயப்பிரமாண யுகத்தின் போது, யேகோவா மோசேயை எகிப்திலிருந்து தனது வார்த்தைகளால் அழைத்துச் சென்றார், இஸ்ரவேலர்களிடம் சில வார்த்தைகளைப் பேசினார்; அந்த காலத்தில், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதி தெளிவுபடுத்தப்பட்டது, ஆனால் மனிதனின் திறமை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அவனுடைய அறிவை முழுமையாக்க எதுவும் செய்ய முடியாததினாலும், தேவன் தொடர்ந்து பேசினார் மற்றும் கிரியையைச் செய்தார். கிருபையின் யுகத்தில், மனிதன் தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியை மீண்டும் ஒரு முறைப் பார்த்தான். இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், சிலுவையில் அறையப்படவும் முடிந்தது, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு மனிதனுக்கு முன்பாக மாம்சத்தில் தோன்றினார். மனிதனுக்கு தேவனைப் பற்றி இதைவிட வேறு எதுவும் தெரியாது. தேவனால் மனிதனுக்கு எந்த அளவுக்குக் காண்பிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு மனிதனுக்குத் தெரியும், தேவன் மனிதனுக்கு ஒன்றும் காண்பிக்கவில்லை என்றால், அந்த அளவே தேவனைப் பற்றிய மனிதனின் வரம்பிடுதல் இருந்திருக்கும். இவ்வாறு, தேவன் தொடர்ந்து செயல்படுகிறார், இதனால் தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு ஆழமடையக்கூடும், இதனால் மனிதன் படிப்படியாகத் தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்ளலாம். கடைசி நாட்களில், தேவன் மனிதனைப் பரிபூரணமாக்க தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். உன் சீர்கெட்ட மனநிலையானது தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் உன் மதக் கருத்துக்கள் தேவனுடைய யதார்த்தத்தால் மாற்றப்படுகின்றன. கடைசி நாட்களில் மாம்சத்தில் அவதரித்த தேவன் “வார்த்தை மாம்சமாகிறது, வார்த்தை மாம்சத்தில் வருகிறது, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்கிறதான வார்த்தைகளை நிறைவேற்றவே முக்கியமாக வந்துள்ளார், இதைக் குறித்து உங்களுக்கு முழுமையான அறிவு இல்லையென்றால், பிறகு உங்களால் உறுதியாக நிற்கமுடியாமல் போகும். கடைசி நாட்களில், தேவன் முதன்மையாக ஒரு கட்ட வேலையை நிறைவேற்ற விரும்புகிறார், அதில் வார்த்தை மாம்சத்தில் தோன்றும், இது தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, உங்கள் அறிவு தெளிவாக இருக்க வேண்டும்; தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன்னை வரையறுக்க தேவன் அனுமதிக்கவில்லை. கடைசி நாட்களின் போது தேவன் இந்த கிரியையைச் செய்யவில்லை என்றால், அவரை பற்றிய மனிதனின் அறிவு மேலும் அதிகரித்துச் செல்ல முடியாது. தேவனால் சிலுவையில் அறையப்பட முடியும், சோதோமை அழிக்க முடியும் என்பதையும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பேதுருவுக்குத் தரிசனமாக முடியும் என்பதையும் மட்டுமே நீ அறியமுடியும். ஆனால் தேவனுடைய வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும், மனிதனை ஜெயங்கொள்ள முடியும் என்று நீ ஒருபோதும் சொல்ல மாட்டாய். தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே நீ அத்தகைய அறிவைப் பற்றிப் பேச முடியும், மேலும் நீங்கள் அனுபவிக்கும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு முழுமையாக அவரைப் பற்றிய உங்கள் அறிவு மாறும். அப்போதுதான் நீ உன் சொந்தக் கருத்துக்களுக்குள் தேவனை வரையறுப்பதை நிறுத்துவாய். மனிதன் தேவனுடைய கிரியையை அனுபவிப்பதன் மூலம் அறிந்துகொள்கிறான்; தேவனை அறிய வேறு சரியான வழி இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 33

கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த தலைமுறைகளில் தேவன் செய்த கிரியைகளையும் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெறுகிறான்; வார்த்தையின் மூலம், கடந்த தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படாத மறைபொருட்களையும், கடந்த கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் கிரியைகளையும், அவர்கள் கிரியை செய்த கொள்கைகளையும் மனுஷன் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் தேவனின் மனநிலையையும், மனுஷனின் கலகத்தன்மையையும் எதிர்ப்பையும் புரிந்துகொள்கிறான், மேலும் அவன் தனது சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறான். கிரியையின் இந்தக் கட்டங்கள் மற்றும் பேசப்படும் எல்லா வார்த்தைகளின் மூலமும், மனுஷன் ஆவியானவரின் கிரியையையும், மாம்சமாகிய தேவன் செய்யும் கிரியையையும், அதற்கும் மேலாக, அவனுடைய முழு மனநிலையையும் அறிந்துகொள்கிறான். ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய உனது அறிவும் வார்த்தையின் மூலம் பெறப்பட்டதுதான். உன் முந்தைய கருத்துகளின் அறிவும், அவற்றை ஒதுக்கி வைப்பதில் நீ பெற்ற வெற்றியும் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? முந்தைய கட்டத்தில், இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், ஆனால் இந்தக் கட்டத்தில் எந்த அடையாளங்களும் அதிசயங்களும் இல்லை. தேவன் ஏன் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பதைப் பற்றிய உனது புரிதல் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? எனவே, இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகள் கடந்த தலைமுறைகளின் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்த கிரியைகளை மிஞ்சியதாக இருக்கின்றன. தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்களால் கூட இந்த முடிவை அடைய முடிந்திருக்காது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களை மட்டுமே பேசினார்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தான் அவர்கள் பேசினார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவன் செய்ய விரும்பிய கிரியையைப் பற்றி பேசவில்லை. மனுஷரின் ஜீவிதங்களில் அவர்களை வழிநடத்தவோ, மனுஷகுலத்திற்கு சத்தியங்களை வழங்கவோ, அல்லது அவர்களுக்கு மறைபொருட்களை வெளிப்படுத்தவோ, ஜீவிதத்தை வழங்கவோ பேசவில்லை. இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளில், தீர்க்கதரிசனமும் சத்தியமும் இருக்கின்றன, ஆனால் முக்கியமாக இந்த வார்த்தைகள் மனுஷனுக்கு ஜீவனை வழங்க உதவுகின்றன. தற்போதுள்ள வார்த்தைகள் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களைப் போலல்லாதவை. இது மனுஷனின் ஜீவித மனநிலையை மாற்றுவதற்கான மனுஷனின் ஜீவிதத்திற்கான கிரியையின் ஒரு கட்டமாகும், தீர்க்கதரிசனம் பேசுவதற்காக அல்ல. முதல் கட்டம் யேகோவாவின் கிரியையாக இருந்தது: பூமியில் தேவனை வணங்க மனுஷனுக்கான ஒரு பாதையை உருவாக்குவதே அவருடைய கிரியையாக இருந்தது. பூமியில் கிரியை செய்யத் தொடங்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு தொடக்க கிரியையாக அது இருந்தது. அந்த நேரத்தில், யேகோவா இஸ்ரவேலருக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவும், பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவும், ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் ஜீவித்திருக்கவும் போதித்தார். ஏனென்றால், அந்தக் கால ஜனங்களுக்கு மனுஷன் எவற்றால் உருவானவன் என்று புரியவில்லை, பூமியில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. மனுஷகுலத்தை அவர்களது ஜீவிதங்களை வழிநடத்துவதற்கு வழிகாட்டுவதே கிரியையின் முதல் கட்டத்தில் தேவனுக்கு அவசியமாக இருந்தது. யேகோவா அவர்களிடம் பேசியதெல்லாம் முன்பு மனுஷகுலத்திற்குத் தெரிந்திருக்கவில்லை அல்லது அவர்கள் வசம் இருந்ததில்லை. அந்த நேரத்தில், தேவன் தீர்க்கதரிசனங்களைப் பேச பல தீர்க்கதரிசிகளை எழுப்பினார், அவர்கள் அனைவரும் யேகோவாவின் வழிகாட்டுதலின் கீழ் அவ்வாறு செய்தனர். இது தேவனுடைய கிரியையில் ஒரு சிறிய விஷயமாக மட்டுமே இருந்தது. முதல் கட்டத்தில், தேவன் மாம்சமாகவில்லை, எனவே அவர் எல்லா கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் அறிவுறுத்தினார். இயேசு தம்முடைய காலத்தில் கிரியை செய்தபோது, இன்றைய நாளில் பேசுவது போல் அவர் அப்போது பேசவில்லை. கடைசிக் காலத்தினுடைய வார்த்தையின் கிரியையின் இந்தக் கட்டம் இதற்கு முன்பிருந்த யுகங்களிலும் தலைமுறைகளிலும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஏசாயா, தானியேல் மற்றும் யோவான் ஆகியோர் பல தீர்க்கதரிசனங்களைப் பேசியிருந்தாலும், அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் இப்போது பேசப்படும் வார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. அவர்கள் பேசியது தீர்க்கதரிசனங்கள் மட்டுமே, ஆனால் இப்போது பேசப்படும் வார்த்தைகள் அப்படியாக இல்லை. நான் இப்போது பேசும் அனைத்தையும் தீர்க்கதரிசனங்களாக மாற்றினால், உங்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியுமா? நான் பேசியது நான் சென்றபின் நடக்கும் விஷயங்களைப் பற்றியது என்று வைத்துக் கொண்டால், உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? வார்த்தையின் கிரியை இயேசுவின் காலத்திலோ அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ ஒருபோதும் செய்யப்படவில்லை. ஒருவேளை சிலர், “யேகோவா தம்முடைய கிரியையின் போதும் வார்த்தைகளை பேசவில்லையா? இயேசு நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது மற்றும் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ததைத் தவிர, அவர் கிரியை செய்துகொண்டிருந்த நேரத்திலும் வார்த்தைகளைப் பேசவில்லையா?” என்று கூறுவர். பேசப்படும் வார்த்தைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. யேகோவா சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் என்ன? ஜீவிதத்தில் ஆவிக்குரிய விஷயங்களைத் தொடாத பூமியில் மனுஷர் அவர்களது ஜீவிதங்களை ஜீவித்திருக்க மட்டுமே அவர் வழிநடத்தினார். யேகோவா பேசியபோது, எல்லா இடங்களைச் சேர்ந்த ஜனங்களுக்கும் அறிவுறுத்தவே அவர் பேசினார் என்று ஏன் கூறப்படுகிறது? “அறிவுறுத்தல்” என்ற சொல்லுக்கு வெளிப்படையாகச் சொல்வதும் நேரடியாகக் கட்டளையிடுவதும் என்று அர்த்தம் ஆகும். அவர் மனுஷனுக்கு ஜீவிதத்தை வழங்கவில்லை; மாறாக, அவர் வெறுமனே மனுஷனைக் கையால் எடுத்து, அதிக உவமைகளை பயன்படுத்தாமல், தம்மை எவ்வாறு வணங்குவது என்று மனுஷனுக்குப் போதித்தார். இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியை மனுஷனைக் கையாள்வது அல்லது அவனை ஒழுங்குபடுத்துவது அல்லது அவனுக்கு ஆக்கினை நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் வழங்குவதற்காக செய்யப்பட்டதல்ல, அது அவனுக்கு வழிகாட்டவே செய்யப்பட்டதாகும். வனாந்தரத்தில் மன்னாவைப் பொறுக்கும்படி தம் ஜனங்களிடம் சொல்லும்படி யேகோவா மோசேக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு காலையிலும் சூரிய உதயத்திற்கு முன்பு, அந்த நாளுக்குத் தேவையான அளவிற்கு அவர்கள் மன்னாவைப் பொறுக்குவார்கள். மன்னாவை மறுநாள் வரை வைத்திருக்க முடியாது, ஏனெனில் அது பூசணம் பிடித்துவிடும். அவர் ஜனங்களுக்கு சொற்பொழிவு ஆற்றவில்லை அல்லது அவர்களின் சுபாவங்களையும் அம்பலப்படுத்தவில்லை, மேலும் அவர்களுடைய கருத்துகளையும் எண்ணங்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அவர் ஜனங்களை மாற்றவில்லை, மாறாக அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்த அவர்களுக்கு வழிகாட்டினார். அக்கால ஜனங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், எதையும் புரிந்து கொள்ளாதவர்களாகவும் ஆனால் சில அடிப்படை இயந்திரத்தனமான இயக்கங்களை மட்டுமே புரிந்துகொள்பவர்களாகவும் இருந்தனர், ஆகவே, யேகோவா பெருந்திரளான ஜனங்களுக்கு வழிகாட்டும் நியாயப்பிரமாணங்களை மட்டுமே கட்டளையிட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 34

வெவ்வேறு காலங்களுக்கு ஏற்றபடி தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுகிறார், அவருடைய கிரியையைச் செய்கிறார், வெவ்வேறு காலங்களில் அவர் வெவ்வேறு வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, அல்லது அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை, அல்லது கடந்த கால விஷயங்களுக்காக ஏக்கம் கொள்வதில்லை. அவரே தேவன், அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் இல்லை, அவர் ஒவ்வொரு நாளும் புதிய வார்த்தைகளைப் பேசுகிறார். நீ இன்று பின்பற்ற வேண்டியதைப் பின்பற்ற வேண்டும். இதுவே மனிதனின் பொறுப்பும் கடமையும் ஆகும். இன்றைய தினத்தில் நடைமுறையானது தேவனின் வெளிச்சம் மற்றும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு இருப்பது முக்கியமானதாகும். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுபவர் இல்லை, மேலும் அவருடைய ஞானத்தையும் சர்வவல்லமையையும் தெளிவுபடுத்துவதற்காகப் பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அவரால் பேச முடிகிறது. அவர் ஆவியினுடைய அல்லது மனிதனினுடைய, அல்லது மூன்றாவது நபரினுடைய கண்ணோட்டத்தில் பேசுகிறாரா என்பது முக்கியமல்ல—தேவன் எப்போதுமே தேவன் தான், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து அவர் பேசுவதால் நீ அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. வெவ்வேறு கண்ணோட்டங்களில் தேவன் பேசுவதன் விளைவாக சில நபர்களிடையே கருத்துக்கள் உருவாகியுள்ளன. அத்தகையோருக்கு தேவனைப் பற்றிய அறிவும் இல்லை, அவருடைய கிரியையைப் பற்றிய அறிவும் இல்லை. தேவன் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பேசியிருந்தால், தேவனைப் பற்றிய விதிகளை மனிதன் வகுத்திருக்க மாட்டானா? அப்படிச் செயல்படுவதற்கு மனிதனை தேவன் அனுமதிக்க முடியுமா? எந்தக் கண்ணோட்டத்தில் தேவன் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவ்வாறு செய்ய அவருக்கு நோக்கங்கள் உள்ளன. தேவன் எப்போதும் ஆவியானவரின் கண்ணோட்டத்திலேயே பேசுவதாக இருந்தால், உன்னால் அவருடன் ஐக்கியப்பட முடியுமா? இவ்வாறு, சில நேரங்களில் தமது வார்த்தைகளை உனக்குக் கொடுக்கவும், உன்னை யதார்த்தத்திற்குள் வழிநடத்தவும் அவர் மூன்றாவது நபரைப் போல் பேசுகிறார். தேவன் செய்யும் அனைத்துமே பொருத்தமானதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவை அனைத்தும் தேவனால் செய்யப்படுகின்றன, இதை நீ சந்தேகிக்கக்கூடாது. அவர் தேவன், ஆகவே அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசினாலும் அவர் எப்போதும் தேவனாகவே இருப்பார். இது ஒரு மாற்ற முடியாத சத்தியம். இருப்பினும் அவர் கிரியை செய்கிறார், அவர் இன்னும் தேவன் தான், அவருடைய சாராம்சம் மாறாது! பேதுரு தேவனை மிகவும் நேசித்தான், தேவனின் சொந்த இருதயத்திற்குப் பிரியமான ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் தேவன் அவனைக் கர்த்தராகவோ அல்லது கிறிஸ்துவாகவோ சாட்சி அளிக்கவில்லை, ஏனென்றால் ஒரு மனிதனின் சாராம்சம் என்னவோ அதுதான், அது ஒருபோதும் மாற முடியாது. தேவன் தமது கிரியையில் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, ஆனால் அவருடைய கிரியையை பயனுள்ளதாக்கவும், அவரைக் குறித்த மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதற்கும் வெவ்வேறு முறைகளைப் பிரயோகிக்கிறார். அவர் செய்யும் கிரியையின் முறைகள் ஒவ்வொன்றும் மனிதன் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது, மேலும் மனிதனை பரிபூரணமாக்குவதற்காகவே உள்ளது. அவர் கிரியை செய்வதற்காக எந்த முறையைப் பிரயோகித்தாலும், ஒவ்வொன்றும் மனிதனைக் கட்டியெழுப்பவும், மனிதனைப் பரிபூரணப்படுத்தவுமே செய்யப்படுகிறது. அவர் கிரியை செய்யும் முறைகளில் ஒன்றானது மிக நீண்ட காலமாக நீடித்திருந்தாலும், இது தேவன் மீதுள்ள மனிதனின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். இதனால், உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இவை அனைத்தும் தேவனின் கிரியையின் படிநிலைகள், நீங்கள் அவற்றிற்கு கீழ்ப்படியத் தான் வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 35

முக்கியமாக தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு பூமிக்கு வந்துள்ளார். நீ ஐக்கியப்படுவது தேவனுடைய வார்த்தையுடனே, நீ பார்ப்பது தேவனுடைய வார்த்தையே, நீ கேட்பது தேவனுடைய வார்த்தையே, நீ கடைப்பிடிப்பது தேவனுடைய வார்த்தையே, நீ அனுபவிப்பது தேவனுடைய வார்த்தையே, தேவனுடைய இந்த மனுவுருவானவர் மனிதனை பரிபூரணமாக்க இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார். அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டுவதில்லை, குறிப்பாகக் கடந்த காலத்தில் இயேசு செய்த கிரியையைச் செய்வதில்லை. அவர்கள் தேவனாயிருந்தாலும், மற்றும் இருவரும் மாம்சமாக இருந்தாலும், அவர்களுடைய ஊழியங்கள் ஒன்றல்ல. இயேசு வந்தபோது, அவரும் தேவனின் கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார் மற்றும் சில வார்த்தைகளையும் பேசினார். ஆனால் அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை என்ன? சிலுவையில் அறையப்பட்டதே அவர் முக்கியமாக சாதித்த கிரியை ஆகும். சிலுவையில் அறையப்படும் கிரியையை நிறைவேற்றவும், எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்கும் அவர் பாவமுள்ள மாம்சத்தின் சாயலானார், மேலும் முழு மனுக்குலத்தின் பாவங்களுக்காகவும் அவர் பாவநிவாரணபலியானார். அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை இதுதான். இறுதியில், பின்னர் வந்தவர்களை வழிநடத்த சிலுவையின் பாதையை அவர் கொடுத்தார். முதன்மையாக, இயேசு வந்தபோது மீட்பின் கிரியையை முடிக்க வேண்டும். அவர் எல்லா மனிதர்களையும் மீட்டு, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை மனிதனிடம் கொண்டு வந்தார், மேலும், அவர் பரலோகராஜ்யத்திற்கான பாதையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, பின்னர் வந்த அனைவரும், “நாம் சிலுவையின் பாதையில் நடக்க வேண்டும், சிலுவைக்காக நம்மை தியாகம் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். நிச்சயமாக, ஆரம்பத்தில், இயேசுவும் வேறு சில கிரியைகளைச் செய்தார், மனிதனை மனந்திரும்பச் செய்யவும், தனது பாவங்களை அறிக்கையிடச் செய்யவும் சில வார்த்தைகளைப் பேசினார். ஆனால் சிலுவையில் அறையப்படுவதே இன்னும் அவருடைய ஊழியமாக இருந்தது, அவர் தம் வழியை பிரசங்கிக்க செலவிட்ட மூன்றரை வருடங்களும், பின்னர் வந்த சிலுவையில் அறையப்படுவதற்கான முன்னேற்பாடாக இருந்தன. இயேசு பல முறை ஜெபித்ததும் சிலுவையில் அறையப்படுவதற்காகவே. அவர் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையும், அவர் பூமியில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை ஆண்டுகளும் முதன்மையாக சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்து முடிப்பதற்காகவே. இந்த கிரியையை மேற்கொள்ள அவை அவருக்கு பலம் கொடுப்பதாக இருந்தன, இதன் விளைவாக சிலுவையில் அறையப்படுவதை தேவன் அவரிடம் ஒப்படைத்தார். இன்று மனுவுருவான தேவன் எந்தக் கிரியையை நிறைவேற்றுவார்? முதன்மையாக “மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின்” கிரியையை நிறைவு செய்வதற்காகவும், வார்த்தையைப் பயன்படுத்தி மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், வார்த்தையால் நடத்தப்படுவதையும் வார்த்தையால் செம்மைப்படுத்துவதையும் மனிதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும், இன்று, தேவன் மாம்சமானார். அவருடைய வார்த்தைகளில் அவர் உன்னை ஆகாரத்தைப் பெறவும் ஜீவனைப் பெறவும் செய்கிறார். அவருடைய வார்த்தைகளில் நீ அவருடைய கிரியைகளையும் செயல்களையும் காணலாம். உன்னை சிட்சிக்கவும் சுத்திகரிக்கவும் தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இதனால், நீ கஷ்டங்களை அனுபவித்தால், அதுவும் தேவனுடைய வார்த்தையினாலேயே ஆகும். இன்று, தேவன் உண்மைகளால் அல்ல, வார்த்தைகளால் கிரியை செய்கிறார். அவருடைய வார்த்தை உன் மீது வந்த பின்னரே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்து உன்னை வலியை அனுபவிக்கவோ அல்லது இனிமையாக உணரவோ செய்ய முடியும். தேவனுடைய வார்த்தை மட்டுமே உன்னை யதார்த்தத்திற்குள் கொண்டு வர முடியும், மேலும் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே உன்னை பரிபூரணமாக்க முடியும். எனவே, குறைந்தபட்சம் நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும், கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை என்பது முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதே ஆகும். அவர் செய்யும் எல்லா கிரியைகளும் வார்த்தையின் மூலமே செய்யப்படுகின்றன. உன்னைச் சிட்சிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் தேவனை எதிர்க்கும் நேரங்களும் உண்டு. தேவன் உனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதில்லை, உன் சரீரம் சிட்சிக்கப்படுவதில்லை, நீ கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. ஆனால் அவருடைய வார்த்தை உன் மீது வந்து, உன்னைச் சுத்திகரித்தவுடன், அதை உன்னால் தாங்க முடியாது. அது அப்படியல்லவா? ஊழியம் செய்பவர்களின் காலத்தில், மனிதனை பாதாளக்குழிக்குள் தள்ளும்படி தேவன் சொன்னார். மனிதன் உண்மையில் பாதாளக்குழிக்கு வந்தானா? மனிதனைச் சுத்திகரிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, மனிதன் பாதாளக்குழிக்குள் நுழைந்தான். ஆகவே, கடைசி நாட்களில், தேவன் மாம்சமாகும் போது, எல்லாவற்றையும் நிறைவேற்றவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தவும் அவர் முக்கியமாக வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்னவாக இருக்கிறார் என்று பார்க்க முடியும். அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும். மனுவுருவான தேவன் பூமிக்கு வரும்போது, அவர் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர வேறு எந்தக் கிரியையும் செய்வதில்லை. இதனால் உண்மைகள் தேவையில்லை. வார்த்தைகளே போதுமானதாகும். இது ஏனென்றால், அவர், மனிதன் தம்முடைய வல்லமையையும் மேலாதிக்கத்தையும் அவருடைய வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதனை அவர் தம்மை எப்படி தாழ்மையுடன் மறைக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதன் தன் வார்த்தைகளை முழுவதுமாக அறிந்துகொள்ள அனுமதிக்கவும், முக்கியமாக இந்தக் கிரியையைச் செய்ய வந்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்தும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. அவருடைய ஞானமும் அதிசயமும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. நீ இதில், தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பல முறைகளில் பேசுவதைக் காண முடியும். இந்தக் காலப்பகுதியில் தேவனின் பெரும்பாலான கிரியைகள் மனிதனை வழிநடத்துதல், வெளிப்படுத்துதல் மற்றும் கையாள்வது ஆகும். அவர் ஒரு நபரை எளிதில் சபிப்பதில்லை, அவர் அவ்வாறு செய்யும்போது கூட, அவர் வார்த்தையின் மூலம்தான் அவர்களைச் சபிக்கிறார். ஆகவே, தேவன் மாம்சமாகிய இந்தக் காலத்தில், தேவன் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், பேய்களை மீண்டும் துரத்துவதையும் பார்க்க முயற்சிக்காதீர்கள், தொடர்ந்து அடையாளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை! அந்த அறிகுறிகளால் மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியாது! தெளிவாகப் பேசுவோமானால், இன்று, மாம்சத்தின் உண்மையான தேவன் தாமே செயல்படுவதில்லை. அவர் பேச மட்டுமே செய்கிறார். இதுவே சத்தியம்! அவர் உன்னைப் பரிபூரணமாக்குவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் உன்னை போஷிப்பதற்கும் உனக்குத் தண்ணீர் பாய்ச்சவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் கிரியை செய்யவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் அவருடைய யதார்த்தத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த அவர் உண்மைகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் இந்த கிரியையின் முறையை நீ உணரக்கூடியவனாக இருந்தால், எதிர்மறையாக இருப்பது கடினம். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீ நேர்மறையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அதாவது, தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அல்லது உண்மைகளின் வருகை இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனை அவருடைய வார்த்தைகளிலிருந்து வாழ்க்கையைப் பெற வைக்கிறார், இது எல்லா அறிகுறிகளிலும் மிகப்பெரியது. இன்னும் அதிகமாக, இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான சிறந்த சான்று இதுவாகும், மேலும் இது அறிகுறிகளை விட பெரிய அறிகுறியாகும். இந்த வார்த்தைகளால் மட்டுமே மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 36

ராஜ்யத்தின் காலம் தொடங்கியவுடன், தேவன் தம்முடைய வார்த்தைகளை வெளியிடத் தொடங்கினார். எதிர்காலத்தில், படிப்படியாக இந்த வார்த்தைகள் நிறைவேற்றப்படும், அந்த நேரத்தில் மனிதனுடைய வாழ்க்கை முதிர்ச்சியடையும். தேவன் இந்த வார்த்தையை மனிதனின் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்தப் பயன்படுத்துவது மிகவும் உண்மையானது, மேலும் மிகவும் அவசியமானது, மேலும் மனிதனின் விசுவாசத்தைப் பரிபூரணப்படுத்துவதற்கான தனது கிரியையை அவர் செய்வதற்கு வார்த்தையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் இன்று வார்த்தையின் காலம், மற்றும் மனிதனின் விசுவாசம், தீர்மானம் மற்றும் ஒத்துழைப்பு அதற்குத் தேவை. மனுவுருவான தேவனின் கடைசி நாட்களின் கிரியை மனிதனுக்கு ஊழியம் செய்வதற்கும் வழங்குவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும். மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசிய பின்னர்தான் அவை நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பேசும் காலத்தில், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை, ஏனென்றால் அவர் மாம்சத்தின் கட்டத்தில் இருக்கும் போது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்பட முடியாது. தேவன் மாம்சமானவரே, ஆவியானவர் அல்ல என்பதை மனிதன் காணும்படி இது நிகழ்கிறது. இதனால் மனிதன் தேவனின் யதார்த்தத்தை தன் கண்களால் பார்க்க முடியும். அவருடைய கிரியை முடிந்த நாளில், பூமியில் அவரால் பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டுவிட்டபோது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இப்போது தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்கான காலம் அல்ல, ஏனென்றால் அவர் இன்னும் தம்முடைய வார்த்தைகளைப் பேசி முடித்திருக்கவில்லை. ஆகவே, தேவன் தம்முடைய வார்த்தைகளை இன்னும் பூமியில் பேசுகிறார் என்பதை நீ காணும்போது, அவருடைய வார்த்தைகளின் நிறைவேறுதலுக்காகக் காத்திருக்க வேண்டாம். தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்தும்போது, பூமியில் அவருடைய கிரியை முடிக்கப்பட்டிருக்கும் போதுதான் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பூமியில் பேசும் வார்த்தைகளில், ஒரு பக்கத்தில் வாழ்க்கையின் ஏற்பாடும், மற்றொரு பக்கத்தில், வரவிருக்கும் காரியங்களின் தீர்க்கதரிசனமும், செய்யப்படவிருக்கும் காரியங்கள் மற்றும் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்கள், ஆகிய தீர்க்கதரிசனமும் உள்ளது. இயேசுவின் வார்த்தைகளிலும் தீர்க்கதரிசனம் இருந்தது. ஒரு பக்கத்தில், அவர் ஜீவனை வழங்கினார், மற்றொரு பக்கத்தில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்று, ஒரே நேரத்தில் வார்த்தைகளையும் உண்மைகளையும் நிறைவேற்றுவதற்கான பேச்சு எதுவும் இல்லை, ஏனென்றால் மனிதன் தன் கண்களால் காணக்கூடியவற்றுக்கும் தேவனால் செய்யப்படுவனவற்றிற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தேவனின் கிரியை முடிக்கப்பட்டதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படும், வார்த்தைகளுக்குப் பிறகு உண்மைகள் வரும் என்று மட்டுமே கூற முடியும். கடைசி நாட்களில், மனுவுருவான தேவன் பூமியில் வார்த்தையின் ஊழியத்தைச் செய்கிறார், மேலும் வார்த்தையின் ஊழியத்தைச் செய்வதில், அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், மற்ற காரியங்களில் அக்கறை காட்டுவதில்லை. தேவனின் கிரியை மாறியதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இன்று, உன்னை பரிபூரணப்படுத்துவதற்கு முதலில் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர் முழு பிரபஞ்சத்திலும் மகிமை பெறும்போது, அவருடைய கிரியை முழுமையடையும். பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டிருக்கும், எல்லா வார்த்தைகளும் உண்மைகளாக மாறியிருக்கும். மனுக்குலம் அவரை அறிந்துகொள்ளும்படி, இதன்மூலம் மனுக்குலம் அவர் என்றால் என்ன என்பதைக் காணவும், அவருடைய ஞானத்தையும், அவருடைய வார்த்தையிலிருக்கும் அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் காணவும், தேவன் கடைசி நாட்களில் இந்த வார்த்தையின் ஊழியத்தைச் செய்ய பூமிக்கு வந்திருக்கிறார். ராஜ்யத்தின் காலத்தின் போது, தேவன் முக்கியமாக முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதிர்காலத்தில், அவருடைய வார்த்தை ஒவ்வொரு மதம், துறை, தேசம் மற்றும் சபைப் பிரிவினரின் மீதும் வரும். தேவன் இந்த வார்த்தையை ஜெயங்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தி, அவருடைய வார்த்தை அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டுள்ளது என்பதை எல்லா மனிதர்களையும் காணச் செய்கிறார். எனவே இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே எதிர்கொள்கிறீர்கள்.

இந்தக் காலத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் நியாயப்பிரமாண காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன, ஆகவே, அவை கிருபையின் காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன. கிருபையின் காலத்தில், தேவன் வார்த்தையின் கிரியையைச் செய்யவில்லை, ஆனால் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக சிலுவையில் அறையப்படுவதை மட்டுமே விவரித்தார். இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும், அவர் சிலுவையில் பட்ட துன்பத்தையும், தேவனுக்காக மனிதன் எவ்வாறு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும் மட்டுமே வேதாகமம் விவரிக்கிறது. அந்தக் காலத்தில், தேவனால் செய்யப்பட்ட அனைத்துக் கிரியைகளும் சிலுவையில் அறையப்படுவதையே மையமாகக் கொண்டிருந்தன. ராஜ்யத்தின் காலத்தின் போது, மனுவுருவான தேவன் தன்னை விசுவாசிக்கிற அனைவரையும் ஜெயங்கொள்ள வார்த்தைகளைப் பேசுகிறார். இது “மாம்சத்தில் தோன்றும் வார்த்தை”. இந்தக் கிரியையைச் செய்ய தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார், அதாவது, மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றிட அவர் வந்துள்ளார். அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், உண்மைகளின் வருகை அரிதானதாக உள்ளது. இது மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் சாராம்சமாகும், மேலும் மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசும்போது, இது மாம்சத்தில் உள்ள வார்த்தையின் தோற்றம், மற்றும் மாம்சத்திற்குள் வரும் வார்த்தையாக இருக்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகியது.” இது (மாம்சத்தில் வார்த்தையின் தோற்றத்தின் கிரியை) தேவன் கடைசி நாட்களில் நிறைவேற்றும் கிரியை, இது அவருடைய முழு நிர்வாகத் திட்டத்தின் இறுதி அத்தியாயமாகும், எனவே தேவன் பூமிக்கு வந்து அவருடைய வார்த்தைகளை மாம்சத்தில் வெளிப்படுத்த வேண்டும். அது இன்று செய்யப்படுகிறது, அது எதிர்காலத்தில் செய்யப்படும், தேவனால் நிறைவேற்றப்படும், மனிதனின் இறுதி இலக்கு, இரட்சிக்கப்படுவார்கள், அழிக்கப்படுவார்கள் மற்றும் இதுபோன்ற இறுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்தக் கிரியைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, மேலும் அவை மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும். முன்னர் வெளியிடப்பட்ட நிர்வாக ஆணைகள் மற்றும் அமைப்புச்சட்டம், அழிக்கப்பட இருப்பவர்கள், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்கள்—இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் கடைசி நாட்களில் மனுவுருவான தேவனால் பிரதானமாக நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள், முன்குறிக்கப்பட்டாதவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவருடைய ஜனங்களும் குமாரர்களும் எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள், இஸ்ரேலுக்கு என்ன நடக்கும், எகிப்துக்கு என்ன நடக்கும், எதிர்காலத்தில், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும். தேவனின் கிரியையின் வேகம் துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்யப்பட வேண்டும், கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் செய்ய வேண்டியவை, செய்யப்பட வேண்டிய அவருடைய ஊழியம், இந்த வார்த்தையை மனிதனுக்கு வெளிப்படுத்துவதற்கான வழிமுறையாக தேவன் பயன்படுத்துகிறார் மற்றும் இந்த வார்த்தைகள் அனைத்தும் மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 37

முழு பிரபஞ்சத்திலும் தேவன் தமது கிரியையைச் செய்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவன் காட்டும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்து யாராலும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியாது. எல்லாக் காலத்திலும் மனிதனைப் பரிபூரணமாக்க தேவன் எப்போதும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு நீங்கள் உங்கள் கவனத்தை அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் அர்ப்பணிக்கக்கூடாது, ஆனால் தேவனால் பரிபூரணமாக்கப்பட முயற்சிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தில், தேவன் சில வார்த்தைகளைப் பேசினார், கிருபையின் காலத்தில், இயேசுவும் அநேக வார்த்தைகளைப் பேசினார். இயேசு அநேக வார்த்தைகளைச் சொல்லியிருந்தபின், பிற்கால அப்போஸ்தலர்களும் சீஷர்களும் இயேசுவால் வழங்கப்பட்ட கட்டளைகளின்படி நடந்து கொள்ள ஜனங்களை வழிநடத்தினார்கள், இயேசு பேசிய வார்த்தைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப அனுபவித்தார்கள். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்க தேவன் இந்த வார்த்தையை முக்கியமாகப் பயன்படுத்துகிறார். அவர் மனிதனை ஒடுக்க, அல்லது மனிதனை சமாதானப்படுத்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பயன்படுத்துவதில்லை. இது தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்த முடியாது. தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் மட்டுமே காட்டியிருந்தால், தேவனின் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்துவது சாத்தியமில்லை, இதனால் மனிதனை பரிபூரணமாக்குவது சாத்தியமில்லை. தேவன் மனிதனை அடையாளங்களாலும், அற்புதங்களாலும் பரிபூரணமாக்குவதில்லை, ஆனால் இந்த வார்த்தையை மனிதனை நீர்ப் பாய்ச்சி மேய்த்திடப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு மனிதனின் முழுமையான கீழ்ப்படிதலும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவும் அடையப்படுகிறது. அவர் செய்யும் கிரியையின் மற்றும் அவர் பேசும் வார்த்தைகளின் நோக்கம் இதுதான். மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கு அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும் முறையை தேவன் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனைப் பரிபூரணமாக்க கிரியையின் பலவிதமான முறைகளைப் பயன்படுத்துகிறார். இது சுத்திகரித்தல், கையாளுதல், கிளைநறுக்குதல் அல்லது வார்த்தைகளை வழங்குதல் என எதுவாக இருந்தாலும், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கும், தேவனின் கிரியை, ஞானம் மற்றும் அற்புதத்தன்மையைப் பற்றி மனிதனுக்கு அதிக அறிவைத் தருவதற்கும் தேவன் பல்வேறு கண்ணோட்டங்களில் பேசுகிறார். கடைசி நாட்களில் தேவன் காலத்தை முடிக்கும் நேரத்தில் மனிதன் முழுமையாக்கப்படுகையில், அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்க்க அவன் தகுதி பெறுவான். நீ தேவனை அறிந்துகொண்டு, அவர் என்ன செய்தாலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தால், நீ அடையாளங்களையும் அற்புதங்களையும் காணும்போது அவரைப் பற்றி உனக்கு இனி எந்தக் கருத்துக்களும் இருக்காது. இந்த நேரத்தில், நீ சீர்கேடு நிறைந்தவனும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய இயலாதவனுமாய் இருக்கும் இந்த நிலையில் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண நீ தகுதியுடையவன் என்று நினைக்கிறாயா? காலம் மாறும்போதும், மேலும், காலம் முடிவடையும் போதும், தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும் போது, அது தேவன் மனிதனைத் தண்டிப்பது ஆகும். தேவனின் கிரியை சாதாரணமாக மேற்கொள்ளப்படும்போது, அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுவதில்லை. அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பது அவருக்கு மிகவும் எளிது, ஆனால் அது தேவனின் கிரியையின் கொள்கை அல்ல, அது மனிதனை நிர்வகிப்பதன் தேவனுடைய நோக்கமும் அல்ல. மனிதன் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டிருந்தால், தேவனின் ஆவிக்குரிய சரீரம் மனிதனுக்குத் தோன்றினால், எல்லா மக்களும் தேவனை நம்பமாட்டார்களா? ஜெயங்கொண்டவர்களில் ஒரு குழுவினர் கிழக்கிலிருந்து ஆதாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் ஜெயங்கொண்டவர்கள் பெரும் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருந்து வந்தவர்கள் என்றும் நான் முன்பு கூறியுள்ளேன். இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, மற்றும் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, மற்றும் அனைத்து வகையான சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கும் பின்னர் மட்டுமே இந்த ஜனங்கள் உண்மையிலேயே கீழ்ப்படிந்ததால் ஜெயங்கொண்டவர்கள் என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த ஜனங்களின் விசுவாசம் தெளிவற்றதும் சுருக்கமானதும் அல்ல, ஆனால் உண்மையானது. அவர்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும், எந்த அற்புதங்களையும் பார்த்ததில்லை. அவர்கள் சுருக்கமான எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் அல்லது ஆழமான நுண்ணறிவுகளைப் பற்றி பேசுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் யதார்த்தத்தையும், தேவனின் வார்த்தைகளையும், தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையான அறிவையும் கொண்டுள்ளனர். அத்தகைய குழு தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்துவதில் அதிக திறன் கொண்டதல்லவா? கடைசி நாட்களில் தேவனின் கிரியையே உண்மையான கிரியையாகும். இயேசுவின் காலத்தில், அவர் மனிதனைப் பரிபூரணமாக்க வரவில்லை, ஆனால் மனிதனை மீட்பதற்காக வந்தார், ஆகவே, ஜனங்கள் தம்மைப் பின்பற்றும்படி சில அற்புதங்களை அவர் காட்டினார். அவர் முக்கியமாக சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்து முடிக்க வந்தார், அடையாளங்களைக் காண்பிப்பது அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இல்லை. இத்தகைய அடையாளங்களும் அற்புதங்களும் அவருடைய கிரியையைச் சிறப்பாகச் செய்வதற்காக செய்யப்பட்ட கிரியையாகும், அவை கூடுதல் கிரியை ஆகும், மற்றும் எல்லா காலத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தின் போது, தேவன் சில அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டினார். ஆனால் இன்று தேவன் செய்யும் கிரியை உண்மையான கிரியை, அவர் நிச்சயமாக இப்போது அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்ட மாட்டார். அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டினால், அவருடைய உண்மையான கிரியை சீர்குலைந்து போகும், அவரால் மேலும் எந்தக் கிரியையும் செய்ய முடியாது. மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கு தேவன் வார்த்தையைச் சொல்லியிருந்தார், ஆனால் அடையாளங்களையும் அற்புதங்களையும் கூடக் காட்டினார் என்றால், மனிதன் உண்மையிலேயே அவரை விசுவாசிக்கிறானா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? இவ்வாறு, அத்தகைய செயல்களைத் தேவன் செய்வதில்லை. மனிதனுக்குள் மதம் அதிகமாக இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் அனைத்து மதக் கருத்துகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் வெளியேற்றவும், தேவனின் யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்தவும் தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார். அவர் சுருக்கமாகவும், கற்பனையாகவும் இருக்கும் ஒரு தேவனின் உருவத்தை அகற்ற வந்திருக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், அது இல்லாத ஒரு தேவனின் உருவம் ஆகும். எனவே, இப்போது உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அறிவு இருப்பது மட்டுமே விலைமதிப்பற்றது! சத்தியம் எல்லாவற்றிற்கும் மாற்றாகிறது. இன்று நீ எவ்வளவு சத்தியத்தைக் கொண்டிருக்கிறாய்? அவை அனைத்தும் தேவனின் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் காண்பிக்கின்றனவா? பொல்லாத ஆவிகளும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டலாம். அவைகள் அனைத்தும் தேவனா? தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தில், மனிதன் தேடுவது சத்தியத்தையே, அடையாளங்களையும் அற்புதங்களையும் விட, அவன் பின்பற்றுவது ஜீவனையே. இதுவே தேவனை விசுவாசிக்கிற அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 38

அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவமில்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார், ஜனங்களுக்குப் புரியாத பலவற்றை அதிகம் கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அவர் புறப்பட்டுச் சென்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தேயு இயேசுவுக்கு ஒரு வம்ச அட்டவணையை உருவாக்கினார், மற்றவர்களும் மனுஷனின் சித்தத்திற்கு ஏற்ற பல கிரியைகளைச் செய்தனர். இயேசு மனுஷனைப் பரிபூரணமாக்கவும், அவனை ஆதாயப்படுத்தவும் வரவில்லை, ஆனால் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வந்தார், அவை: பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருவதும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிப்பதும் ஆகும். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன், அவருடைய கிரியை முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போதைய கட்டத்தில்—ஜெயங்கொள்வதற்கான கிரியையில்—அதிக வார்த்தைகள் பேசப்பட வேண்டும், அதிகக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் பல செயல்முறைகளும் இருக்க வேண்டும். ஆக இயேசு மற்றும் யேகோவாவின் கிரியையின் மறைபொருட்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், இதன்மூலம் எல்லா ஜனங்களும் தங்கள் விசுவாசத்தில் புரிதலும் தெளிவும் பெறுவர். ஏனென்றால் இது கடைசிக் காலத்தின் கிரியை, கடைசிக் காலம் என்பது தேவனுடைய கிரியையின் முடிவு, கிரியை முடிவடையும் நேரம். கிரியையின் இந்தக் கட்டம் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் மீட்பையும் உனக்குத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் முழு கிரியையையும் நீ புரிந்துகொள்வதற்கும், இதன் அனைத்து முக்கியத்துவத்தையும் சாராம்சத்தையும் புரிந்துகொள்ளவும் உனக்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி, இயேசு செய்த அனைத்துக் கிரியைகளின் நோக்கத்தையும் அவர் பேசிய வார்த்தைகளையும் நீ புரிந்து கொள்ளவும், மேலும் வேதாகமத்தின் மீதுள்ள உன் குருட்டு விசுவாசத்தையும் வணக்கத்தையும் புரிந்து கொள்ளவும் இந்தக் கிரியை உதவுகிறது. இவை அனைத்தையும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள இது உனக்கு உதவும். இயேசு செய்த கிரியையையும், தேவனின் இன்றைய கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ புரிந்துகொள்வாய் மற்றும் காண்பாய். இயேசு செய்த கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கான கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதைய கட்டமானது நிறைவு செய்வதற்கும், சுத்திகரிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானதுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இறுதிக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான மற்றும் மூடத்தனமான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும். உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியை எல்லா இடங்களைக் காட்டிலும் பிரகாசமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டது, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்யான தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமாக இருப்பவர்களையும், மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள்தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இதனால் மற்ற தேசங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது; மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இந்தத் தேசங்களின் ஜனங்கள் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரை எதிர்ப்பதாகவே இருக்கக் கூடும். யூதர்களும் எதற்காக தேவனை எதிர்த்தார்கள், எதற்காக அவரை மீறினார்கள்? பரிசேயர்களும் ஏன் அவரை எதிர்த்தார்கள்? யூதாஸ் ஏன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? அந்த நேரத்தில், சீஷர்களில் பலருக்கு இயேசுவை தெரியாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த பின்பும் ஜனங்கள் ஏன் அவரை நம்பவில்லை? மனுஷனின் கீழ்ப்படியாமை அனைத்தும் ஒன்றுபோல் இல்லையா? சீன ஜனங்கள் எடுத்துக்காட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஜெயங்கொள்ளப்படும்போது, மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் மாறுகிறார்கள், மேலும் மற்றவர்களுக்கான சான்றாதாரங்களாக இருப்பார்கள். எனது ஆளுகைத் திட்டத்திற்கு நீங்கள் ஒரு துணைப்பொருள் என்று நான் ஏன் எப்போதும் கூறிவந்தேன்? சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்தச் சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் எளிதாக இருக்கும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாகக் கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 39

கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்த கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டு கிரியைகளைத் தொடங்கினார். ஆகவே, இன்றும் யேகோவாவின் வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பவர்கள், எல்லாவற்றையும் இன்னும் நியாயப்பிரமாண யுகத்தின் கிரியைக்கு ஏற்ப செய்பவர்கள்—நீ விதிகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லையா? நீ கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்ளவில்லையா? கடைசிக் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இயேசு வரும்போது, அவர் இன்னும் இயேசு என்றுதான் அழைக்கப்படுவாரா? மேசியா ஒருவர் வருவார் என்று யேகோவா இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார், ஆனால் அவர் வந்தபோது, அவர் மேசியா என்று அழைக்கப்படவில்லை, இயேசு என்று அழைக்கப்பட்டார். தாம் மீண்டும் வருவேன் என்றும், தாம் புறப்பட்டுச் சென்றபடியே வருவேன் என்றும் இயேசு கூறினார். இவை இயேசுவின் வார்த்தைகள், ஆனால் இயேசு புறப்பட்டுச் சென்ற விதத்தை நீ பார்த்தாயா? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார், ஆனால் அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது தான் தனிப்பட்ட முறையில் மனுஷரிடையே திரும்பி வருவாரா? அப்படி வந்தால், அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படமாட்டாரா? இயேசு மீண்டும் வரும்போது, யுகம் ஏற்கனவே மாறியிருக்கும், எனவே அவரை இன்னும் இயேசு என்று அழைக்க முடியுமா? இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை அறிய முடியுமா? ஒரு புதிய யுகத்தில் அவர் ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்பட மாட்டாரா? ஒருவரின் உருவமும், ஒரு குறிப்பிட்ட நாமமும் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிருபையின் யுகத்தின் முடிவில், இறுதி யுகம் வந்திருக்கிறது, இயேசு ஏற்கனவே வந்துவிட்டார். எப்படி அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படுவார்? எப்படி அவரால் மனுஷரிடையே இயேசுவின் உருவத்தை இன்னும் அணிந்திருக்க முடியும்? இயேசுவின் உருவம் ஒரு நசரேயனின் உருவம் தான் என்பதை நீ மறந்துவிட்டாயா? மனுஷகுலத்தின் மீட்பர் இயேசு மட்டுமே என்பதை நீ மறந்துவிட்டாயா? கடைசிக் காலத்தில் அவரால் எவ்வாறு ஜெயங்கொள்ளுதல் கிரியை மேற்கொண்டு மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும்? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார்—இதுதான் உண்மை—ஆனால் எப்படி அவர் மனுஷரிடையே ஒரு வெண்மையான மேகத்தின் மீது திரும்பி வர முடியும், அவர் எப்படி இயேசு என்றே இப்போதும் அழைக்கப்படுவார்? அவர் உண்மையில் ஒரு மேகத்தின் மீது வந்திறங்கினால், மனுஷன் எவ்வாறு அவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பான்? உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டனரா? அப்படியானால், இயேசு மட்டுமே தேவனாக இருக்க மாட்டாரா? அவ்வாறான நிலையில், தேவனின் உருவம் ஒரு யூதனின் தோற்றமாக இருக்கும், மேலும் அது எப்போதும் அதே மாதிரிதான் இருக்கும். தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தைகளின் மெய்யான அர்த்தம் உனக்குத் தெரியுமா? அவர் உன்னுடைய இந்தக் குழுவிற்குச் சொல்லியிருப்பாரா? அவர் புறப்பட்டுச் சென்ற மாதிரியே, அதாவது மேகத்தின் மீது சென்றவாறு, திரும்பி வருவார் என்று உனக்குத் தெரியும், ஆனால் தேவன் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்று உனக்கு மிசச் சரியாகத் தெரியுமா? உன்னால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தால், இயேசு பேசிய வார்த்தைகள் மட்டும் எதற்காக விளக்கப்பட வேண்டும்? அவர் சொன்னார்: கடைசிக் காலத்தில் மனுஷகுமாரன் வரும்போது, அதை அவரே அறியமாட்டார், தேவதூதர்கள் அறிய மாட்டார்கள், பரலோகத்திலுள்ள தூதர்கள் அறிய மாட்டார்கள், சகலவித மனுஷரும் அறிய மாட்டார்கள். பிதா மட்டுமே அறிவார், அதாவது ஆவியானவர் மட்டுமே அறிவார். மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உன்னால் கண்டுகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியுமா? நீ உன் கண்களால் கண்டுகொண்டு அறிந்துகொள்ளும் அளவிற்கு வல்லவனாக இருந்தால், இந்த வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டதாக ஆகிவிடாதா? அந்த நேரத்தில் இயேசு என்ன சொன்னார்? “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். … நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” அந்த நாள் வரும்போது, மனுஷகுமாரனே அதை அறியமாட்டார். மனுஷகுமாரன் என்பது ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷரான மாம்சமாகிய தேவனைக் குறிக்கிறது. மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு கூறினார். அவர் வரும்போது, அவருக்கே அது தெரியாது, ஆனால் அவரால் எப்படி உனக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க முடியும்? அவருடைய வருகையை உன்னால் பார்க்க முடியுமா? அது நகைச்சுவையல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 40

ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவதுதான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, “தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,” என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் “தேவன் மாறாதவர்” என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா? தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட. தேவன் கடைசிக் காலத்தில் கிரியையின் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறார். அவர் தம்முடைய மனநிலையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவார், அது இயேசுவின் காலத்தின் இரக்கமும் அன்பும் கொண்டதாக இருக்காது. அவர் கையில் புதிய கிரியை இருப்பதால், இந்தப் புதிய கிரியை ஒரு புதிய மனநிலையுடன் இருக்கும். ஆகவே, இந்தக் கிரியையை ஆவியானவர் செய்திருந்தால்—தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், அதற்குப் பதிலாக ஆவியானவர் நேரடியாக இடி மூலம் பேசியிருந்தால், அதனால் மனுஷனுக்கு அவருடன் தொடர்பு கொள்ள வழி இல்லை என்றால், மனுஷனால் அவருடைய மனநிலையை அறிய முடியுமா? அந்தக் கிரியையை ஆவியானவர் மட்டுமே செய்திருந்தால், தேவனின் மனநிலையை அறிந்து கொள்ள மனுஷனுக்கு வழி இருந்திருக்காது. அவர் மாம்சத்தில் வரும்போது, வார்த்தை மாம்சத்தில் தோன்றும்போது, மற்றும் மாம்சத்தின் மூலம் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்தும்போதுதான், ஜனங்கள் தங்கள் கண்களால் தேவனின் மனநிலையைப் பார்க்க முடியும். தேவன் உண்மையாக, மெய்யாக மனுஷரிடையே வாழ்கிறார். அவர் தொட்டுணரத்தக்கவர்; மனுஷனால் உண்மையில் அவரது மனநிலையுடன் இணைந்து செயல்பட முடியும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறாரோ அதனுடனும் இணைந்து செயல்பட முடியும்; இவ்வாறாக மட்டுமே மனுஷன் அவரை மெய்யாக அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், “தேவன் ஆண்களின் தேவன், தேவன் பெண்களின் தேவன்,” என்ற கிரியையையும் தேவன் நிறைவுசெய்துவிட்டார், மேலும் அவர் செய்த கிரியை முழுவதையும் மாம்சத்தில் நிறைவேற்றினார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 41

தேவனின் ஆளுகை முழுவதிலும் அவரது பணி முற்றிலும் தெளிவாக இருக்கிறது: கிருபையின் யுகம் என்பது கிருபையின் யுகம் தான், கடைசிக் காலம் என்பது கடைசிக் காலம்தான். ஒவ்வொரு யுகத்திற்கும் வித்தியாசமான வேறுபாடுகள் இருக்கின்றன, ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அந்த யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியையைச் செய்கிறார். கடைசிக் காலத்தின் கிரியையைச் செயல்படுத்த, யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு, கடுங்கோபம் மற்றும் அழிவு ஆகியவை இருக்க வேண்டும். கடைசிக் காலம் இறுதியான யுகத்தைக் குறிக்கின்றது. இறுதி யுகத்தின் போது, தேவன் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாரா? யுகத்தை முடித்துவைக்க, தேவன் தம்முடன் ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக மட்டுமே அவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மனுஷன் தொடர்ந்து உயிர்பிழைப்பதும், ஜீவித்திருப்பதும், அவன் ஒரு சிறந்த வழியில் நிலைத்திருப்பதுமே இயேசுவின் நோக்கமாக இருந்தது. அவர் மனுஷனை பாவத்திலிருந்து இரட்சித்தார், இதனால் அவர் தமது வம்சாவளி சீரழிவதைத் தடுத்து, இனியும் பாதாளத்திலும் நரகத்திலும் ஜீவிக்க விடாமல் செய்தார். மேலும் மனுஷனை பாதாளத்திலும் நரகத்திலும் இருந்து இரட்சிப்பதன் மூலம், இயேசு அவனை ஜீவித்திருக்க அனுமதித்தார். இப்போது, கடைசிக் காலம் வந்துவிட்டது. தேவன் மனுஷனை நிர்மூலமாக்கி, மனுஷகுலத்தை முற்றிலுமாக அழித்துப்போடுவார், அதாவது அவர் மனுஷகுலத்தின் கலகத்தை மாற்றிப்போடுவார். இந்த காரணத்திற்காக, கடந்த காலத்தின் இரக்கமுள்ள மற்றும் அன்பான மனநிலையோடு, தேவன் யுகத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்லது அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு யுகத்திலும் தேவனுடைய மனநிலையின் சிறப்பு பிரதிநிதித்துவம் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு யுகத்திலும் தேவனால் செயல்படுத்தப்பட வேண்டியக் கிரியைகள் இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அவராகவே செயல்படுத்தியக் கிரியைகளில் அவருடைய மெய்மையான மனநிலையின் வெளிப்பாடு இருக்கிறது, மேலும் அவருடைய நாமம் மற்றும் அவர் செய்யும் கிரியைகள் ஆகியவையும் யுகத்துக்கு ஏற்ப மாறுகின்றன—அவை அனைத்தும் புதியவையாக இருக்கின்றன. நியாயப்பிரமாண யுகத்தின் போது, மனுஷகுலத்தை வழிநடத்தும் கிரியை யேகோவா என்ற நாமத்தில் செயல்படுத்தப்பட்டது, மேலும் பூமியில் முதல் கட்டக் கிரியையும் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டத்தில், ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டியெழுப்புவதும், விதிகளைப் பயன்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்டுவதும் மற்றும் அவர்கள் மத்தியில் கிரியை செய்வதுமே கிரியைகளாக இருந்தன. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர் பூமியில் தனது கிரியைக்கு ஒரு அஸ்திபாரத்தைத் தொடங்கினார். இந்த அஸ்திபாரத்திலிருந்து, அவர் இஸ்ரவேலுக்கு அப்பால் தனது கிரியையை விரிவுபடுத்தினார். அதாவது, இஸ்ரவேலில் இருந்து தொடங்கி, அவர் தனது கிரியையை வெளிப்புறமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் பிற்காலத் தலைமுறையினர் யேகோவாவே தேவன் என்பதையும், வானங்களையும் பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்தவர் யேகோவா தான் என்பதையும், மேலும் சகல ஜீவஜந்துக்களை சிருஷ்டித்ததும் யேகோவாதான் என்பதையும் படிப்படியாக அறிந்து கொண்டனர். அவர் தம்முடைய கிரியையை இஸ்ரவேல் ஜனங்கள் மூலமாக அவர்களுக்கு அப்பால் பரப்பினார். பூமியில் யேகோவாவினுடைய கிரியையின் முதல் பரிசுத்தமான இடமாக இஸ்ரவேல் தேசம்தான் இருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு தான் தேவன் முதன் முதலில் பூமியில் கிரியை செய்யச் சென்றார். அதுவே நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையாக இருந்தது. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்த பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது. ஆகையால், நியாயப்பிரமாண யுகத்தின் போது தேவனின் நாமம் யேகோவா என்பதாக இருந்தது, கிருபையின் யுகத்தில் இயேசுவின் நாமமே தேவனைக் குறித்தது. கடைசிக் காலத்தில், அவருடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன், அதாவது சர்வவல்லவர் என்பதாக இருக்கிறது, அவர் மனுஷனை வழிநடத்தவும், மனுஷனை ஜெயங்கொள்ளவும், மனுஷனை ஆதாயப்படுத்தவும் தனது வல்லமையைப் பயன்படுத்துகிறார், இறுதியில், யுகத்தை முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவனின் மனநிலை தெளிவாகத் தெரிகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 42

“தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா? தேவனால் தமது மனநிலையை மாற்ற முடியாது என்பதால் தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்றும், வேறு எந்த நாமமும் அவருக்கு இல்லை என்றும் மனுஷன் கூறினால், அந்த வார்த்தைகள் உண்மையில் தூஷணமாகும்! தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமுள்ள இயேசு என்ற நாமத்தால் மட்டுமே தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று நீ நம்புகிறாயா? தேவன் பல நாமங்களால் அழைக்கப்படலாம், ஆனால் இந்தப் பல நாமங்களில், தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை, தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை. எனவே, தேவனுக்குப் பல நாமங்கள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பல நாமங்களால் தேவனின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் தேவனின் மனநிலை வளம் மிக்கது, அது அவரை அறிந்து கொள்ளும் மனுஷனின் திறனை மீறுகிறது. மனுஷனுக்கு, மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்தி, தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அடக்க மனுஷகுலத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம்தான் இருக்கிறது: மகத்துவமானவர், கனத்திற்குரியவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர், உயர்ந்தவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், ஞானமுள்ளவர், மற்றும் பல எனப் பல வார்த்தைகள் இருக்கின்றன! இந்த வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தால் தேவனின் மனநிலையைப் பற்றி மனுஷன் கண்ட சிறிய விஷயங்களை விவரிக்க இயலாது. காலப்போக்கில், பலர் தங்கள் இருதயங்களில் இருக்கும் உற்சாகத்தை விவரிக்க முடியும் என்று நினைத்த வார்த்தைகளை இதில் சேர்த்தனர்: தேவன் மிகவும் மகத்துவமானவர்! தேவன் மிகவும் பரிசுத்தமானவர்! தேவன் மிகவும் அழகானவர்! இன்று, இது போன்ற மனுஷ சொற்கள் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனாலும் மனுஷனால் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஒரு நாமம் அல்ல, பல நாமங்கள் இருக்கின்றன. ஏனென்றால் தேவன் வளம்மிக்கவர், மேலும் மனுஷனின் மொழி மிகவும் வறிய நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது நாமத்துக்கு தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை, எனவே அவருடைய நாமத்தை நிரந்தரமாக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? தேவன் மகத்துவம் மிக்கவர், மிகவும் பரிசுத்தமானவர், ஆனாலும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் அவருடைய நாமத்தை மாற்ற நீ அவரை அனுமதிக்க மாட்டாயா? ஆகையால், தேவன் தனது சொந்தக் கிரியையை தனிப்பட்ட முறையில் செய்யும் ஒவ்வொரு யுகத்திலும், அவர் செய்ய விரும்பும் கிரியையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கும் வகையில், யுகத்துக்கு ஏற்ற ஒரு நாமத்தைப் பயன்படுத்துகிறார். தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குறிப்பிட்ட நாமத்தை, அந்த யுகத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவன் தனது சொந்த மனநிலையை வெளிப்படுத்த மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார். அப்படியிருந்தும், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்ற மற்றும் தேவனை தனிப்பட்ட முறையில் பார்த்த அநேகரும் இந்த ஒரு குறிப்பிட்ட நாமத்தால் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது என்று நினைக்கிறார்கள்—ஐயோ, இதனால் உதவ முடியாது—எனவே மனுஷன் இனியும் எந்த நாமத்தாலும் தேவனைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் வெறுமனே அவரை “தேவன்” என்று அழைக்கிறான். இது மனுஷனின் இருதயம் அன்பால் நிறைந்திருப்பது போலவும், ஆனால் முரண்பாடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கிறது, ஏனென்றால் தேவனை எவ்வாறு விளக்குவது என்று மனுஷன் அறிந்திருக்கவில்லை. தேவன் வளம்மிக்கவராக இருப்பதால் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை விவரிக்க எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையை சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய எந்த ஒரு நாமமும் இல்லை, மேலும் தேவன் வைத்திருக்கும் மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் விவரிக்கக்கூடிய ஒரு நாமமும் இல்லை. யாராவது என்னிடம், “நீ எந்த நாமத்தைப் பயன்படுத்துகிறாய்?” என்று கேட்டால், நான் அவர்களிடம், “தேவன் தேவனே!” என்று கூறுவேன். இது தேவனுக்கு சிறந்த நாமம் அல்லவா? இது தேவனின் மனநிலையைச் சிறப்பாக உள்ளடக்கியிருக்கும் ஒரு நாமம் அல்லவா? இது அவ்வாறு இருப்பதால், தேவனின் நாமத்தைத் தேடுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? ஒரு நாமத்தின் பொருட்டு, உணவு மற்றும் நித்திரை இல்லாமல் உங்கள் மூளையை எதற்காகக் கசக்க வேண்டும்? தேவன், யேகோவா, இயேசு அல்லது மேசியா என்று அழைக்கப்படாத ஒரு நாள் வரும்—அவர் வெறுமனே சிருஷ்டிகராக இருப்பார். அந்த நேரத்தில், அவர் பூமியில் சூட்டிக்கொண்ட எல்லா நாமங்களும் முடிவுக்கு வரும், ஏனென்றால் பூமியில் அவர் செய்த கிரியைகள் முடிவுக்கு வரும், அதன் பிறகு அவருடைய நாமங்கள் இனி இருக்காது. சகலமும் சிருஷ்டிகரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்போது, அவருக்கு மிகவும் பொருத்தமான ஆனால் முழுமையற்ற நாமத்திற்கான தேவை என்ன? நீ இப்போதும் தேவனின் நாமத்தைத் தேடுகிறாயா? தேவன் யேகோவா என்று மட்டுமே அழைக்கப்படுகிறார் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனுக்கு எதிராக தூஷணம் செய்த பாவத்தை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தேவனுக்கு நாமம் என்பதே இல்லை என்பதை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒன்று, இரண்டு, அல்லது பல நாமங்களை மட்டுமே சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவருக்குக் கிரியைகள் இருந்தன, மனுஷகுலத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவர் எந்த நாமத்தால் அழைக்கப்பட்டாலும்—அதை அவர் சுதந்திரமாகத் தேர்வு செய்யவில்லையா? அதைத் தீர்மானிக்க அவருக்கு அவரது சிருஷ்டிப்புக்களில் ஒருவனான உன் உதவி தேவையா? தேவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் நாமமானது, மனுஷனின் மொழியுடன், மனுஷனால் புரிந்துகொள்ள முடியும் விஷயங்களுடன் உடன்படுவதாக இருக்கிறது, ஆனால் இந்த நாமம் மனுஷனால் பொதுமைப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல. பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார், அவர் தேவன் என்று அழைக்கப்படுகிறார், அவர் மிகுந்த வல்லமையுள்ள தேவன், அவர் மிகவும் புத்திசாலி, மிக உயர்ந்தவர், அதிசயமானவர், மறைபொருள் மிக்கவர், மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்று மட்டுமே உன்னால் சொல்ல முடியும், அதற்கு மேல் உன்னால் எதுவும் சொல்ல முடியாது; சிறிதளவு மட்டுமே உன்னால் அறிய முடிந்திருக்கிறது. இது அவ்வாறு இருப்பதால், இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கடைசிக் காலம் வரும்போது, தேவனே அவருடைய கிரியைகளைச் செய்கிறார் என்றாலும், அவருடைய நாமம் மாற வேண்டும், ஏனென்றால் அது வேறு யுகம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 43

இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, அது பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் படி இருந்தது; அவர் பரிசுத்த ஆவியானவர் விரும்பியபடியே செய்தார், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் படியோ அல்லது யேகோவாவின் கிரியையின் படியோ செய்யவில்லை. இயேசு செய்ய வந்த கிரியையானது யேகோவாவின் விதிகளையோ அல்லது யேகோவாவின் கட்டளைகளையோ பின்பற்றுவதில்லை என்றாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றுதான். இயேசு செய்த கிரியை இயேசுவின் நாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அது கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; யேகோவா செய்த கிரியையைப் பொறுத்தவரை, அது யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் அது நியாயப்பிரமாண யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அவர்களின் கிரியைகள் இரண்டு வெவ்வேறு யுகங்களில் செயல்படுத்தப்பட்ட ஒரே ஆவியானவரின் கிரியைகள் ஆகும். இயேசு செய்த கிரியை கிருபையின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், யேகோவா செய்த கிரியை பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா இஸ்ரவேல், எகிப்து ஜனங்களுக்கும், மற்றும் இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட எல்லா தேசங்களுக்கும் மட்டுமே வழிகாட்டினார். புதிய ஏற்பாட்டினுடைய கிருபையின் யுகத்தில் இயேசுவின் கிரியைகள் இயேசு என்ற நாமத்தில் தேவனின் கிரியைகளாக இருந்தன, ஏனென்றால் அந்த யுகத்தை வழிநடத்தியவர் இயேசு. இயேசுவின் கிரியை யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டது என்றும் நீ சொன்னால், அவர் எந்தப் புதிய கிரியையையும் தொடங்கவில்லை என்றும், அவர் செய்ததெல்லாம் யேகோவாவின் வார்த்தைகளின்படி மட்டுமே என்றும், யேகோவாவின் கிரியை மற்றும் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களின்படி மட்டுமே என்றும் நீ சொன்னால், இயேசு மாம்சமாகியிருக்க மாட்டார். அவர் தம்முடைய கிரியையை இந்த வழியில் நடத்தியிருந்தால், அவர் ஒரு அப்போஸ்தலராகவோ அல்லது நியாயப்பிரமாண யுகத்தின் ஊழியராகவோ இருந்திருப்பார். நீ சொல்வது போல் இருந்தால், இயேசுவினால் ஒரு யுகத்தைத் தொடங்கியிருக்க முடியாது, வேறு எந்தக் கிரியைகளையும் செய்திருக்க முடியாது. அதேபோல், பரிசுத்த ஆவியானவர் முதன்மையாக யேகோவாவின் மூலமாக அவருடைய கிரியையைச் செய்ய வேண்டும், மேலும் யேகோவாவின் மூலமாக அல்லாமல் பரிசுத்த ஆவியானவர் வேறு யார் மூலமாகவும் எந்தப் புதிய கிரியையையும் அவரால் செய்திருக்க முடியாது. இயேசுவின் கிரியையை மனுஷன் இவ்வாறு புரிந்துகொள்வது தவறு. இயேசு செய்த கிரியையானது யேகோவாவின் வார்த்தைகளுக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களுக்கும் ஏற்ப செய்யப்பட்டது என்று மனுஷன் நம்பினால், இயேசு, மாம்சமாகிய தேவனா, அல்லது அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவரா? இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்த்தால், கிருபையின் யுகமே இருந்திருக்காது, இயேசு மாம்சமாகிய தேவனாக இருந்திருக்க மாட்டார், ஏனென்றால் அவர் செய்த கிரியையால் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடிந்திருக்காது, ஆனால் பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடிந்திருக்கும். இயேசு புதிய கிரியையைச் செயல்படுத்த, ஒரு புதிய யுகத்தைத் தொடங்க, இஸ்ரவேலில் முன்பு செய்த கிரியையை முறித்துக் கொள்ள, அவருடைய கிரியையை இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியைக்கு ஏற்ப இல்லாமல், அல்லது அவரது பழைய விதிகளுக்கு ஏற்ப இல்லாமல், அல்லது எந்தவொரு விதிமுறைகளுக்கும் இணங்காமல், மாறாக அவர் செய்ய வேண்டியப் புதிய கிரியையைச் செய்தால் மட்டுமே ஒரு புதிய யுகம் இருக்கும். தேவனே யுகத்தைத் தொடங்க வருகிறார், மேலும் தேவனே யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். யுகத்தைத் தொடங்குவதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனுஷனால் இயலாது. இயேசு வந்தபின் அவர் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை என்றால், அவர் வெறுமனே ஒரு மனுஷன் மட்டுமே, அவரால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதற்கு இதுவே சான்றாக இருந்திருக்கும். இயேசு வந்து யேகோவாவின் கிரியையை முடித்ததாலும், யேகோவாவின் கிரியையைத் தொடர்ந்ததாலும், மேலும், அவருடைய சொந்தக் கிரியையை, ஒரு புதிய கிரியையைச் செய்ததாலும், இது ஒரு புதிய யுகம் என நிரூபிக்கப்படுகிறது, மேலும் இயேசுதான் தேவன் என்பதையும் நிரூபிக்கிறது. அவர்கள் கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்தார்கள். ஒரு கட்டம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஆலயத்திற்கு வெளியே நடத்தப்பட்டது. ஒரு கட்டம் விதிகளின்படி மனுஷனின் ஜீவிதத்தை வழிநடத்துவதும், மற்றொன்று பாவநிவாரணபலியை வழங்குவதுமாக இருந்தன. கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாக இருந்தன; இது புதிய யுகத்தை பழையதிலிருந்து பிரிக்கிறது, மேலும் அவை இரண்டும் வெவ்வேறு யுகங்கள் என்று சொல்வது முற்றிலும் சரியானதாக இருக்கிறது. அவர்களது கிரியைகளின் இருப்பிடம் வேறுபட்டதாக இருந்தன, அவர்களது கிரியைகளின் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருந்தன, மற்றும் அவர்களது கிரியைகளின் நோக்கமும் வேறுபட்டதாக இருந்தன. எனவே, அவற்றை இரண்டு யுகங்களாகப் பிரிக்கலாம்: புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள், அதாவது புதிய மற்றும் பழைய யுகங்கள். இயேசு வந்தபோது அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, இது யேகோவாவின் யுகம் முடிந்துவிட்டது என்பதை நிரூபித்தது. ஆலயத்தில் யேகோவாவின் கிரியை முடிந்துவிட்டதால் அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அதைச் செய்வது, செய்த கிரியையை மீண்டும் செய்வதாக ஆகிவிடும். ஆலயத்தை விட்டு வெளியேறி, ஒரு புதிய கிரியையைத் தொடங்கி, ஆலயத்திற்கு வெளியே ஒரு புதிய பாதையைத் தொடங்கியதன் மூலம் மட்டுமே, தேவனின் கிரியையை அதன் உச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடிந்தது. அவர் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திற்கு வெளியே சென்றிருக்காவிட்டால், தேவனின் கிரியை ஆலயத்தின் அஸ்திவாரங்களில் தேக்கமடைந்து, புதிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் போயிருக்கும். ஆகவே, இயேசு வந்தபோது, அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, ஆலயத்தில் அவருடைய கிரியைகளைச் செய்யவில்லை. அவர் ஆலயத்திற்கு வெளியே தனது கிரியைகளைச் செய்தார், சீஷர்களை வழிநடத்தி, அவருடைய கிரியைகளைச் சுதந்திரமாகச் செய்தார். தேவன் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திலிருந்து புறப்படுவது, தேவன் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அவரது கிரியை ஆலயத்திற்கு வெளியே நடத்தப்படவிருந்தது, அது செயல்படுத்தப்படும் விதத்தில் கட்டுப்படுத்தப்படாத புதிய கிரியையாக இருந்திருக்க வேண்டும். இயேசு வந்திறங்கியவுடனேயே, பழைய ஏற்பாட்டினுடைய யுகத்தில் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் இரண்டு வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், அதே ஆவியானவர்தான் கிரியையின் இரு கட்டங்களையும் நிறைவேற்றியது, மேலும், செயல்படுத்தப்பட்ட கிரியை தொடர்ச்சியானதாக இருந்தது. நாமமும் கிரியையின் உள்ளடக்கமும் வேறுபட்டதாக இருந்ததால், யுகமும் வேறுபட்டதாக இருந்தது. யேகோவா வந்தபோது, அது யேகோவாவின் யுகம்; இயேசு வந்தபோது, அது இயேசுவின் யுகம். எனவே, ஒவ்வொரு வருகையிலும், தேவன் ஒரு நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அவர் ஒரு புதிய பாதையைத் தொடங்குகிறார்; ஒவ்வொரு புதிய பாதையிலும், அவர் ஒரு புதிய நாமத்தைச் சூட்டிக்கொள்கிறார், இது தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பதையும், அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதையும் காட்டுகிறது. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 44

“யேகோவா” என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். “இயேசு” என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்குப் பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்குச் சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. “யேகோவா” என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் தேவன் என்று அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. “இயேசு” என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 45

இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால், நான் இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே படைத்தேன், இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே மீட்டுக்கொண்டேன் என்பதையும் புறஜாதியினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் இது நிரூபிக்கும். “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் நான்” என்ற என் வார்த்தைகளுக்கு முரணாக இது இருக்காதா? நான் யூதேயாவை விட்டு புறஜாதியினரிடையே என் கிரியையைச் செய்கிறேன். ஏனென்றால் நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தேவன். கடைசி நாட்களில் நான் புறஜாதியினரிடையே தோன்றுகிறேன். ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய யேகோவா மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேலாக, புறஜாதியினரிடையே நான் தேர்ந்தெடுத்த அனைவரையும் சிருஷ்டித்தவன். நான் இஸ்ரவேல், எகிப்து, லெபனான் ஆகியவற்றை மட்டுமல்ல, இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து புறஜாதி தேசங்களையும் படைத்தேன். இதன் காரணமாக, நான் எல்லா உயிரினங்களுக்கும் கர்த்தராக இருக்கிறேன். நான் என் கிரியையின் தொடக்கப் புள்ளியாக இஸ்ரவேலைப் பயன்படுத்தினேன். யூதேயா மற்றும் கலிலேயாவை எனது மீட்பின் கிரியையின் கோட்டைகளாகப் பயன்படுத்தினேன். இப்போது நான் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறேன். அதில் இருந்து முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் இஸ்ரவேலில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்தேன் (இந்த இரண்டு கட்ட கிரியைகளும் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகும்). மேலும், இரண்டு கட்ட கிரியைகளை (கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம்) இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட நிலங்கள் முழுவதிலும் செய்து வருகிறேன். புறஜாதி தேசங்களிடையே, நான் ஜெயம் பெறும் கிரியையைச் செய்து, யுகத்தை முடிப்பேன். மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்தத் தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்குத் தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நாட்களின் தேவன் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகாமல் இருக்கிறது. என்னுடைய கிரியை மனிதனுடைய கருத்துக்களின்படி நடத்தப்பட்டால், அது எப்போது முடிவடையும்? மனிதகுலம் எப்போது ஓய்வெடுக்கும்? ஏழாம் நாளான ஓய்வு நாளில் நான் எப்படி நுழைய முடியும்? நான் என் திட்டத்தின்படி கிரியை செய்கிறேன், என் நோக்கத்தின்படி கிரியை செய்கிறேன்—மனிதனுடைய நோக்கங்களின்படி கிரியை செய்வதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

முந்தைய: முன்னுரை

அடுத்த: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக