முன்னுரை

ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனை புறக்கணித்தல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், அகற்றப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போதுதான் நீ இந்த பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஓரிரு நாட்கள் இருந்தப் பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகிவிட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையை செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள பிரதானமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், அருந்திக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்வேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? சர்வ வல்லவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளை மதிக்கிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றை புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு குழந்தை பிறந்திருப்பது போலவே, எல்லா மனிதர்களும் என் வருகையை கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தம் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் இதுவாகும். ஒவ்வொரு தேசமும் என்னை வணங்கட்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்யட்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் வைத்துக்கொள்ளட்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படியட்டும்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவன், ஆயிரம் வருட அரசாட்சியிலும் கூட ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருமுறை சொன்னார். எதிர்காலத்தில், நல்ல கானான் தேசத்திலுள்ள மனிதனுடைய ஜீவிதத்தை, தேவனுடைய வார்த்தைகள் நேரடியாக வழிநடத்தும். மோசே வனாந்தரத்தில் இருந்தபோது, தேவன் அவனிடம் நேரடியாக அறிவுறுத்தினார், பேசினார். தேவன் ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிப்பதற்கு ஆகாரம், தண்ணீர் மற்றும் மன்னாவை பரலோகத்திலிருந்து அனுப்பினார், இன்றும் அவ்வாறு: ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிக்கவும் குடிக்கவும் வேண்டியவற்றை தேவன் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார். ஜனங்களை சிட்சிப்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் சாபங்களை அனுப்பியுள்ளார். எனவே, அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது. இன்று, ஜனங்கள் உண்மைகளின் நிகழ்வைத் தேடுகிறார்கள், அவர்கள் அடையாளங்களையும் அதிசயங்களையும் நாடுகிறார்கள் மற்றும் இதுபோன்றவர்கள் அனைவரும் தூக்கி எறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது ஏனென்றால், தேவனுடைய கிரியையானது அதிகமாக நடைமுறைக்கு மாறி வருகிறது. தேவன் பரலோகத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. தேவன் ஆகாரத்தையும் ரசத்தையும் வானத்திலிருந்து அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், தேவன் உண்மையில் இருக்கிறார், ஜனங்கள் கற்பனை செய்யும் ஆயிரம் வருட அரசாட்சி எழும்பும் காட்சிகளும் தேவனுடைய தனிப்பட்ட வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இது உண்மையாகும் மற்றும் இது தான் தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது என்று அழைக்கப்படுகிறது. தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது மாம்சத்தைக் குறிக்கிறது. மாம்சமாக இல்லாதவை பூமியில் இல்லை. இதனால் மூன்றாம் பரலோகத்திற்குச் செல்வதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் வீணாக கவனம் செலுத்துகிறார்கள். ஒரு நாள், முழு உலகமும் தேவனிடம் திரும்பும் போது, உலகம் முழுவதுமான அவருடைய கிரியையின் மையம் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றும். மற்ற இடங்களில், சிலர் தொலைபேசியைப் பயன்படுத்துவார்கள், சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் படகில் கடல் கடந்து செல்வார்கள் மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் பெற ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் வணங்குவார்கள், மற்றும் ஆவலுடன் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தேவனிடம் நெருங்கி வருவார்கள், தேவனை நோக்கி கூடிவருவார்கள். அனைவரும் தேவனை வணங்குவார்கள். இவை அனைத்தும் தேவனுடைய செயல்களாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியில் தன்னை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் உண்மையான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை வணங்கினார்கள் ஏனென்றால், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் உண்மையான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர். ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள். தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் மகிமைப்படுத்தப்படும் காலமாக அது இருக்கும்: உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனங்களும் இந்த குறிப்பிட்டு சொல்ல முடியாத “மனிதனை” வணங்குவார்கள். அது தேவனுடைய மகிமையின் நாளாக இருக்காதா? ஒரு நாள், பழைய மேய்ப்பர்கள் ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து தண்ணீரைத் தேடி தந்திகளை அனுப்புவார்கள். அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனாலும் தாங்கள் இகழ்ந்த அந்த நபரை வணங்க அவர்கள் வருவார்கள். அவர்கள் தங்கள் வாயால் அவரை ஒப்புக்கொள்வார்கள், மனதால் அவரை நம்புவார்கள்—இது ஒரு அடையாளமும் ஆச்சரியமும் அல்லவா? முழு ராஜ்யமும் சந்தோஷப்படும் நாள் தேவனுடைய மகிமையின் நாளாக இருக்கும். உங்களிடம் வந்து தேவனுடைய நற்செய்தியைப் பெறுபவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார். அவ்வாறு செய்யும் நாடுகளும் ஜனங்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். எதிர்காலத்தின் பாதை இவ்வாறு இருக்கும்: தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளைப் பெறுபவர்களுக்கு பூமியில் நடக்க ஒரு பாதை இருக்கும் மற்றும்அவர்கள் வணிகர்களாக அல்லது விஞ்ஞானிகளாக, அல்லது கல்வியாளர்களாக அல்லது தொழிலதிபர்களாக இருப்பார்கள், தேவனுடைய வார்த்தைகளைப் பெறாதவர்களுக்கு ஒரு அடி கூட எடுத்து வைப்பது கடினமானதாக இருக்கும் மற்றும் அவர்கள் உண்மையான வழியை நாட கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், “சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது.” உண்மைகள் பின்வருமாறு உள்ளது: தேவன் முழு பிரபஞ்சத்திற்கும் கட்டளையிட மற்றும் மனிதகுலத்தை ஆள, ஜெயம்கொள்ள இந்த வழியைப் (அதாவது அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் குறிக்கிறது) பயன்படுத்துவார். தேவன் செயல்படும் வழிமுறைகளில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக ஜனங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். தெளிவாக சொல்வதானால், தேவன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவது வார்த்தைகளின் மூலம் தான். நீ விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவர் சொல்வதை நீ செய்ய வேண்டும். இது ஒரு புறநிலையான உண்மையாகும். எல்லோராலும் கீழ்ப்படியப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இது தவிர்க்கமுடியாததும், எல்லோருக்கும் தெரிந்ததும் ஆகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய வார்த்தைகள் எண்ணற்ற வீடுகளில் பரவுகின்றன. அனைவரும் அவற்றை அறிந்திருப்பார்கள் மற்றும்அப்போது தான் அவருடைய கிரியை உலகம் முழுவதும் பரவும். அதாவது, தேவனுடைய கிரியை முழு உலகத்திலும் பரவ வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகள் பரப்பப்பட வேண்டும். தேவனுடைய மகிமையின் நாளில், தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் வல்லமையையும் அதிகாரத்தையும் காண்பிக்கும். ஆதிகாலம் முதல் இன்று வரை சொல்லப்பட்ட அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும், அது நடக்கும். இவ்வாறு, பூமியில் தேவனுக்கு மகிமை இருக்கும்—அதாவது, அவருடைய வார்த்தைகள் பூமியில் ஆட்சி செய்யும். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் துன்மார்க்கர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் அனைவரும் அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையடைவார்கள். அவர் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்த மாட்டார். அவருடைய வார்த்தைகளால் அனைத்தும் நிறைவேறும். அவருடைய வார்த்தைகள் உண்மைகளைத் தரும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளை கொண்டாடுவார்கள். அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண், பெண், வயதானவர்கள் அல்லது இளைஞர்கள் என யாராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மாம்சத்தில் வெளிப்படும், பூமியிலுள்ள ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது. இதுவே வார்த்தை மாம்சமாக மாறுவதன் பொருள் ஆகும். “வார்த்தை மாம்சமாக மாறுகிறது” என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார். அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல அல்ல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும். ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய அவதாரத்தின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. இதுதான் “வார்த்தை மாம்சமாக மாறும்” மற்றும் “மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்” என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தை பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாக பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் தேவனில் அவதரித்தன. மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விலக்கு இல்லை. அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த வார்த்தைகளிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு விழிப்புணர்வு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து வார்த்தைகளைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மாம்ச அவதாரத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மத மேய்ப்பர்கள் கூட இந்த வார்த்தைகளை பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றை தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மாம்ச ரூபத்தினால் அல்ல. ஆனால், தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் மாம்சமாக மாறுவார். இந்த வார்த்தை மாம்சமாக மாறும். இது மாம்சத்திலுள்ள வார்த்தையின் தோற்றம் மட்டுமே. ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிக கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்கு பயப்படுவார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால் அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார். ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியிலுள்ள வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும். உண்மையில், நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆயிர வருட அரசாட்சியின் வருகையானது பூமியில் தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். பரலோகத்திலிருந்து வந்த புதிய எருசலேமானது, மனிதர்களிடையே ஜீவிக்கவும், மனிதனுடைய ஒவ்வொரு செயலுடனும், அவனது உள்ளார்ந்த எண்ணங்களுடன் ஜீவிக்கவும் வந்த தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். இது தேவன் நிறைவேற்றும் ஒரு உண்மை ஆகும். இதுவே ஆயிர வருட அரசாட்சியின் அழகு ஆகும். இது தேவன் வகுத்த திட்டம் ஆகும்: அவருடைய வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் தோன்றும். அவை அவருடைய செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதோடு, பூமியில் அவர் செய்த எல்லா கிரியைகளையும் நிறைவு செய்யும். அதன் பிறகு மனிதகுலத்தின் இந்த நிலை முடிவுக்கு வரும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடுத்த: I. கிரியையின் மூன்று கட்டங்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய...

தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

ஒருவர் தேவனை நம்பும்போது, எப்படி, சரியாக, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்? தேவனுக்கு ஊழியம் செய்பவர்களால் என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட...

இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த...

தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக