ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?

உன்னுடைய சீர்கெட்ட மனநிலையைத் தள்ளிவிட்டு, சாதாரண மனித வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே நீ பரிபூரணப்படுவாய். உன்னால் தீர்க்கதரிசனம் உரைக்கவும், எந்த மறைபொருளையும் பேசவும் முடியாமற்போனாலும், நீ ஒரு மனித வாழ்வை வாழவும் மற்றும் ஒரு மனிதனின் சாயலை வெளிப்படுத்தவும் முடியும். தேவன் மனிதனைப் படைத்தார், ஆனால் பின்னர் மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான், அப்படியாக மக்கள் “மரித்தவர்களாக” மாறிப்போனார்கள். ஆகவே, நீ மாற்றமடைந்த பிறகு, இனி ஒருபோதும் இப்படி “மரித்தவர்களைப்” போல இருக்க மாட்டீர். தேவனுடைய வார்த்தைகள்தான் மக்களின் ஆவிகளைப் புத்துயிர் பெறச்செய்து அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்கின்றன, மேலும் மக்களின் ஆவிகள் மறுபடியும் பிறக்கும்போது, அவர்கள் ஜீவனிற்குள் வருகின்றனர். நான் “மரித்தவர்களைப்” பற்றி பேசும்போது, ஆவி இல்லாத மரித்தச் சடலங்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அவர்களுக்குள் ஆவிகள் இறந்துவிட்டன. ஜீவனின் புத்துயிர் மக்களின் ஆவிகளில் வரும்போது, மக்கள் ஜீவனிற்குள் வருவார்கள். முன்பு பேசப்பட்ட பரிசுத்தவான்கள், சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழிருந்து, பின்னர் சாத்தானைத் தோற்கடித்து, ஜீவனிற்குள் வந்தவர்களைக் குறிக்கிறது. சீன தேசத்திலுள்ள தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்களையும் தந்திரங்களையும் சகித்திருக்கிறார்கள், அது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கி, மேலும் வாழ்வதற்குத் தைரியம் கூட இல்லாமல் போகச்செய்தது. இவ்விதமாக, அவர்களுடைய ஆவிகளின் விழிப்புணர்வானது அவர்களின் சாராம்சத்திலிருந்து தொடங்க வேண்டும்: கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் சாராம்சத்திலிருந்து, அவர்களுடைய ஆவிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அவை ஒரு நாள் ஜீவனிற்குள் வரும்போது, தடைகள் ஒன்றும் இருக்காது, அனைத்தும் சுமூகமாக நடக்கும். தற்போது, இது அடைய முடியாததாகவே உள்ளது. மரணத்தைக் கொண்டுவரும் விதங்களில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர்; அவர்கள் மரண உணர்வினால் சூழப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் அநேக காரியங்களில் குறைபாடுள்ளவர்களாக காணப்படுகின்றனர். சில மக்களுடைய வார்த்தைகள் மரணத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றன, அவர்களின் செயல்களும் மரணத்தைச் சுமக்கின்றன, மேலும் அவர்கள் வாழும் வாழ்க்கை கொண்டுவருகிற ஒவ்வொரு காரியமும் மரணத்தைக் கொண்டுள்ளன. இன்று, மக்கள் பகிரங்கமாக தேவனைக் குறித்த சாட்சி அளிக்கிறார்களானால், அவர்கள் இந்த விஷயத்தில் தோல்வியையே தழுவுவார்கள், ஏனென்றால் அவர்கள் இன்னும் முழுமையாக ஜீவனிற்க்குள் வரவில்லை, இப்படிப்பட்ட எண்ணற்ற மரித்தவர்கள் உங்களிடையே இருக்கிறார்கள். தமது கிரியையானது புறஜாதியினரிடையே விரைவாகப் பரவும்படிக்கு தேவன் ஏன் இன்று சில அடையாளங்களையும் அதிசயங்களையும் நடப்பிப்பதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். மரித்தவர்கள் தேவனுக்கு சாட்சியம் அளிக்க முடியாது; அது ஜீவனோடுள்ளவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று, ஆனாலும் இன்று பெரும்பாலான மக்கள் “மரித்த மனிதர்களே”; அநேகர் வெற்றியைப் பெற முடியாமல் மரணத்தின் பிடியில், சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழாக வாழ்கிறார்கள். இது இப்படியிருக்க, அவர்கள் தேவனுக்கு எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? அவர்கள் நற்செய்திப் பணியை எப்படிப் பரப்ப முடியும்?

இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்கள் அனைவரும் சாத்தானால் பீடிக்கப்பட்டவர்களும் மரணத்தின் மத்தியிலே வாழ்பவர்களும் ஆவார்கள். தேவனால் இரட்சிக்கப்படாமலும், அவராலே நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாமலும் இருக்கிற மக்கள் மரணத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்களால் ஜீவனுள்ளவர்களாக மாற முடியாது. இந்த “மரித்த மனிதர்களால்” தேவனுக்கு சாட்சியம் அளிக்க முடியாது, மேலும் அவர்கள் தேவனாலே பயன்படுத்தப்படவும் முடியாது, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதும் கடினமான காரியமாயிருக்கும். தேவன் மரித்தவர்களுடைய சாட்சியத்தை அல்ல, ஜீவனுள்ளவர்களுடைய சாட்சியத்தையே விரும்புகிறார், மேலும் மரித்தவர்களையல்ல ஜீவனுள்ளவர்களையே அவருக்காக ஊழியம் செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொள்கிறார். “மரித்தவர்கள்” தேவனை எதிர்க்கிறவர்களும் கலகக்காரர்களுமாவார்கள்; அவர்கள் ஆவியில் உணர்வற்றவர்களும் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்களுமாவார்கள்; அவர்கள் சத்தியத்தைத் தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவராதவர்களாகவும், தேவனுக்குச் சிறிதேனும் விசுவாசமாக இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் சாத்தானுடைய அதிகார ஆதிக்கத்தின் கீழாக வாழ்ந்து அவனுக்கேற்றபடி செயல்படுவார்கள். மரித்தவர்கள் சத்தியத்திற்கு எதிராக நிற்பதன் மூலமும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதன் மூலமும், இழிவானவர்களாகவும், அற்பமானவர்களாகவும், துர்க்குணமுள்ளவர்களாகவும், மிருகத்தனமானவர்களாகவும், வஞ்சகமானவர்களாகவும், மற்றும் நயவஞ்சகமானவர்களாகவும் வெளிப்படுவார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடித்தாலும், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ முடியாது; அவர்கள் உயிருடன் இருந்தாலும், அவர்கள் வெறுமனே நடக்கிற, சுவாசிக்கிற சடலங்களே. மரித்தவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறார்கள், அவருக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருப்பது என்பதும் மிகக் குறைவே. அவர்கள் அவரை ஏமாற்றவும், அவருக்கு எதிராக தேவதூஷணம் சொல்லவும், அவரைக் காட்டிக் கொடுக்கவும் மட்டுமே முடியும், மேலும் அவர்கள் வாழும் வாழ்க்கை கொண்டு வரும் அனைத்தும் சாத்தானின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. மக்கள் ஜீவனுள்ளவர்களாக மாறவும், தேவனுக்குச் சாட்சியம் அளிக்கவும், தேவனால் அங்கீகரிக்கப்படவும் விரும்பினால், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும், மேலும் தேவனுடைய சுத்திகரிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அவரால் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவன் எதிர்பார்க்கிற அனைத்து சத்தியங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று உண்மையில் ஜீவனுள்ளவர்களாக மாறுவார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனாலே இரட்சிக்கப்பட்டவர்கள்; அவர்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் தேவனுக்காகத் தங்கள் உயிரைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடன் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்போதுதான் சாத்தானை வெட்கப்படுத்த முடியும்; ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய நற்செய்திப் பணியைப் பரப்ப முடியும், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே மெய்யான மனிதர்கள். முதன்முதலில் தேவனால் உருவாக்கப்பட்ட மனிதன் ஜீவனுடன் இருந்தான், ஆனால் சாத்தானின் சூழ்ச்சி மற்றும் சீர்கேட்டின் நிமித்தம் மனிதன் மரணத்தின் மத்தியிலும் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழும் வாழ்கிறான், ஆகவே, இவ்விதமாக, மக்கள் ஆவி இல்லாத மரித்தவர்களாய் மாறிப்போனார்கள், அவர்கள் தேவனை எதிர்க்கும் எதிரிகளாகிவிட்டார்கள், அவர்கள் சாத்தானின் கருவிகளாக மாறி, அவனுடைய சிறைக் கைதிகளாகிவிட்டார்கள். தேவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவனுள்ள மக்களும் மரித்த மனிதர்களாகிப்போனார்கள், ஆகவே தேவன் தம்முடைய சாட்சியத்தை இழந்துவிட்டார், மேலும் அவர் படைத்த மற்றும் அவருடைய சுவாசம் உள்ள ஒரே இனமாகிய மனிதகுலத்தையும் இழந்துபோனார். தேவன் தம்முடைய சாட்சியைத் திரும்பப் பெற்று, தம்முடைய கையால் சிருஷ்டிக்கப்பட்டு ஆனால் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மீட்க வேண்டுமென்றால், அவர் அவர்களை உயிரோடு எழுப்பவேண்டும், அப்படியாக அவர்கள் ஜீவனுள்ள மனிதர்களாக மாற வேண்டும், மேலும் அவர்கள் அவரது ஒளியில் வாழும்படிக்கு அவர்களைச் சீர்படுத்த வேண்டும். மரித்தவர்கள் ஆவி இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் அதீத நிலையில் உணர்ச்சியற்றவர்களும் தேவனை எதிர்க்கிறவர்களுமாய் இருக்கிறார்கள். தேவனை அறியாதவர்களில் அவர்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற சிறிய எண்ணம் கூட இந்த மக்களுக்கு இல்லை; அவர்கள் அவருக்கு எதிராகக் கலகம் மட்டுமே செய்து, அவரை எதிர்க்கிறார்கள், மேலும் அவர்களிடம் அவருக்கான விசுவாசம் சிறிதளவும் இல்லை. ஜீவனுள்ளவர்களோ தங்கள் ஆவியில் மறுபடியும் பிறந்தவர்கள், தேவனுக்குக் கீழ்ப்படியத் தெரிந்தவர்கள், மற்றும் தேவனுக்கு விசுவாசமுள்ளவர்கள். அவர்களிடம் சத்தியமும் சாட்சியும் உள்ளது, இந்த மக்கள் மட்டுமே தேவனுடைய வீட்டில் அவரைப் பிரியப்படுத்துகிறார்கள். ஜீவனுக்குள் வரக்கூடியவர்களை தேவன் இரட்சிக்கிறார், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைக் காணக்கூடியவர்களாயும், தேவனுக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்களாகவும், மற்றும் தேவனைத் தேடத் தயாராகவும் இருக்கிறார்கள். தேவனுடைய மனித அவதாரத்தையும் அவருடைய தோற்றத்தையும் விசுவாசிப்பவர்களை அவர் இரட்சிக்கிறார். சிலர் புதுவாழ்வுக்குள் வரலாம், சிலரால் வர முடியாமல் இருக்கலாம்; இது அவர்களின் சுபாவத்தை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். அநேகர் தேவனுடைய வார்த்தைகளை நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்களால் அவற்றை இன்னும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை. அத்தகையவர்கள் எந்தவொரு சத்தியத்தையும் கைக்கொண்டு வாழ முடியாதவர்களாகவும், மேலும் தேவனுடைய கிரியையில் வேண்டுமென்றே தலையிடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காக எந்த கிரியையையும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள், அவர்களால் எதையும் தேவனுக்காக அர்ப்பணிக்க முடியாது, மேலும் அவர்கள் திருச்சபையின் பணத்தை ரகசியமாகச் செலவழித்து தேவனுடைய வீட்டிலே இலவசமாக சாப்பிடுகிறார்கள். இந்த மக்கள் மரித்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள். தேவன் தம்முடைய கிரியையை இலக்காகக் கொண்டுள்ள அனைவரையும் இரட்சிக்கிறார், ஆனால் அவருடைய இரட்சிப்பைப் பெற முடியாத ஒரு பகுதியினரும் இருக்கிறார்கள்; ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அவருடைய இரட்சிப்பைப் பெற முடியும். ஏனென்றால், பெரும்பாலான மக்கள் மிகவும் ஆழமாகச் சீர்கெட்டு மரித்தவர்களாகிவிட்டார்கள், அவர்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்கள் சாத்தானால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் சுபாவத்தில் மிகுந்த தீங்கினால் நிறைந்திருக்கிறார்கள். அந்தச் சிறு எண்ணிக்கையிலான மக்களும் கூட தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆதியிலிருந்தே தேவனுக்கு முற்றிலும் விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல, அல்லது ஆதியிலிருந்தே தேவன்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் தேவனுடைய கிரியையின் வெற்றியின் நிமித்தம் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் மாறியிருக்கிறார்கள், தேவனுடைய உன்னதமான அன்பின் நிமித்தமாக அவர்கள் தேவனைப் பார்க்கிறார்கள், தேவனுடைய நீதியான மனநிலையின் காரணமாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவர்கள் தேவனுடைய கிரியையின் காரணமாக தேவனைப் பற்றிய அறிவைப் பெறுகிறார்கள், அவருடைய கிரியை நடைமுறைக்குரியதும் மற்றும் இயல்பானதுமாகும். தேவனுடைய இந்தக் கிரியை இல்லாமல், இந்த மக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் இன்னும் சாத்தானுக்குரியவர்களாகவே இருப்பார்கள், அவர்கள் இன்னும் மரணத்திற்குரியவர்களாகவே இருப்பார்கள், அவர்கள் இன்னும் மரித்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மக்கள் இன்று தேவனுடைய இரட்சிப்பைப் பெற முடியும் என்பது அவர்கள் தேவனோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.

ஜீவனுள்ளவர்கள் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறபடியால், அவர்கள் தேவனாலே ஆதாயப்படுத்தப்பட்டு, அவருடைய வாக்குத்தத்தங்களின் மத்தியில் வாழ்வார்கள், மேலும் மரித்தவர்கள் தேவனுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பின் காரணமாக, அவர்கள் தேவனால் வெறுக்கப்பட்டு, நிராகரிக்கப்படுவார்கள், மற்றும் அவருடைய தண்டனை மற்றும் சாபங்களுக்கு மத்தியில் வாழ்வார்கள். இதுதான் தேவனுடைய நீதியான மனநிலை, இது எந்த மனிதனாலும் மாற்ற முடியாததாகும். தங்களுடைய சொந்த தேடலின் காரணமாக, மக்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்று வெளிச்சத்தில் வாழ்கிறார்கள்; மக்களுடைய தந்திரமான திட்டங்கள் காரணமாக, அவர்கள் தேவனால் சபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாகிறார்கள்; மக்கள் செய்த தீமையின் காரணமாக, அவர்கள் தேவனால் தண்டிக்கப்படுகிறார்கள், மேலும் மக்களுடைய ஏக்கம் மற்றும் விசுவாசம் நிமித்தமாக, அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தேவன் நீதியுள்ளவர்: அவர் ஜீவனுள்ளவர்களை ஆசீர்வதிக்கிறார், மேலும் மரித்தவர்களை எப்போதும் மரணத்தின் மத்தியில் இருக்கத்தக்கதாகவும், ஒருபோதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழக்கூடாதபடிக்கும், அவர்களைச் சபிக்கிறார். தேவன் என்றென்றுமாய் அவரோடு இருக்கத்தக்கதாக, ஜீவனுள்ளவர்களைத் தம்முடைய ராஜ்யத்திற்கும் அவருடைய ஆசீர்வாதங்களுக்கும் அழைத்துச் செல்வார். ஆனால் மரித்தவர்களைப் பொறுத்தவரை, அவர் அவர்களை அடித்து நித்திய மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் அவருடைய நாசத்தின் பொருளாய் இருப்பார்கள், அவர்கள் எப்போதும் சாத்தானுக்குச் சொந்தமானவர்களே. தேவன் ஒருவரையும் அநியாயமாக நடத்துவதில்லை. உண்மையிலேயே தேவனைத் தேடுகிறவர்கள் அனைவரும் தேவனுடைய வீட்டில் இருப்பார்கள், அதேவேளையில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவருடன் இணங்கி நடக்காதவர்களும் மெய்யாகவே அவருடைய தண்டனையின் மத்தியில் வாழ்வார்கள். ஒருவேளை மாம்சத்தில் தேவனுடைய கிரியை பற்றி நீ உறுதியற்றவனாக இருக்கலாம்—ஆனால் ஒரு நாள், தேவனுடைய மாம்சமானது மனிதனின் முடிவை நேரடியாக ஏற்பாடு செய்யாமற்ப்போகும்; அதற்குப் பதிலாக, அவருடைய ஆவி மனிதன் போய்ச்சேருமிடத்தை ஏற்பாடு செய்யும், அந்த நேரத்தில் தேவனுடைய மாம்சமும் அவருடைய ஆவியும் ஒன்றாயிருக்கின்றன என்றும், அவருடைய மாம்சத்தால் தவறு செய்ய முடியாது என்றும், அவருடைய ஆவி இன்னும் முற்றிலும் மாசற்றது என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள். இறுதியில், ஒருவர் அதிகமாகவோ அல்லது ஒருவர் குறைவாகவோ அல்ல ஜீவனிற்குள் வரும் அனைவரையும் அவர் தம்முடைய ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்வார். ஜீவனிற்குள் வராத மரித்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சாத்தானின் குகையில் தள்ளப்படுவார்கள்.

முந்தைய: சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

அடுத்த: மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக