தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்
மனுஷன் மத்தியில் தேவனுடைய கிரியை என்பது மனுஷனிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது, ஏனென்றால் மனிதனே இந்தக் கிரியையின் இலக்காக இருக்கின்றான், மற்றும் மனுஷன் மாத்திரமே தேவனுக்குச் சாட்சியத்தைக் கொண்டிருக்கக்கூடிய வகையில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே சிருஷ்டியாக இருக்கின்றான். மனுஷனின் வாழ்க்கை மற்றும் அவனது செயல்பாடுகள் அனைத்தும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட இயலாதவையாக இருக்கின்றன, மற்றும் இவை அனைத்தும் தேவனுடைய கரங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மற்றும் எந்த நபரும் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்றும்கூட கூறலாம். எவரொருவரும் இதை மறுக்க முடியாது, ஏனெனில் இது ஒரு உண்மையாக இருக்கின்றது. தேவன் செய்கின்ற யாவும் மனுக்குலத்தின் பிரயோஜனத்திற்கானதாகவே இருக்கின்றது, மற்றும் அது சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகின்றது. மனுஷனுக்குத் தேவையான அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றது, தேவனே மனுஷனுடைய வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கின்றார். இவ்வாறாக, மனுஷன் தேவனிடத்திலிருந்து பிரியக்கூடாதவனாக இருக்கிறான். மேலும் தேவன் மனுஷனிலிருந்து பிரிந்து செல்வதற்கான எந்த நோக்கத்தையும் ஒருபோதும் கொண்டிருந்தது இல்லை. தேவன் செய்கின்ற கிரியை சகல மனுக்குலத்தின் நிமித்தமானதாக இருக்கின்றது, மற்றும் அவருடைய எண்ணங்கள் எப்பொழுதும் இரக்கமுள்ளவையாகவே இருக்கின்றன. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய சிந்தனைகள் (அதாவது, தேவனுடைய சித்தம்) என்ற இரண்டுமே மனுஷனால் அறியப்பட வேண்டிய “தரிசனங்களாக” இருக்கின்றன. இப்படிப்பட்ட தரிசனங்கள் தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றன, மற்றும் மனிதனால் செய்யப்பட்டிருக்க முடியாத கிரியையாக இருக்கின்றன. அதேவேளையில், தேவன் தம்முடைய கிரியையின்போது, மனுஷன் செய்யும்படி அவனிடத்தில் அவர் கேட்டுக்கொள்கின்ற விஷயங்கள் மனுஷனின் “நடைமுறை” என்று அழைக்கப்படுகின்றன. தரிசனங்கள் என்பவை தேவனுடைய கிரியையாக இருக்கின்றன, அல்லது அவை மனுக்குலத்திற்கான அவரது சித்தமாக இருக்கின்றன அல்லது அவருடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. தரிசனங்கள் நிர்வகித்தலின் ஒருபகுதி என்றும் கூறப்படலாம், ஏனெனில் இந்த நிர்வகித்தல் தேவனின் கிரியையாக இருக்கின்றது, மற்றும் இது மனுஷனை நோக்கிச் செலுத்தப்படுகின்றது, இது மனுஷன் மத்தியில் தேவன் செய்கின்ற கிரியை என்று அர்த்தப்படுகின்றது. இந்தக் கிரியையானது தேவனுக்கு சாட்சியமாகவும் மற்றும் மனுஷன் தேவனை இதன்மூலம் அறியவரும் பாதையாகவும் இருக்கின்றது, மற்றும் இது மனுஷனுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தேவனின் கிரியை பற்றிய அறிவுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மக்கள் தேவன் மீதான நம்பிக்கை பற்றிய கோட்பாடுகளுக்கே கவனம் செலுத்துகின்றார்கள், அல்லது அற்பமான முக்கியமில்லாத விவரங்களைக் கவனிக்கிறார்கள், பின்பு அவர்கள் தேவனை அறியாதிருப்பார்கள், மேலும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவுக்கு மிகவும் உதவக்கூடிய தேவனுடைய கிரியையே தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தரிசனங்கள் தேவனுடைய கிரியையாக, தேவனுடைய சித்தமாக மற்றும் தேவனுடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன; இவை அனைத்தும் மனுஷனுக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. நடைமுறை என்பது மனுஷனால் செய்யப்பட வேண்டியதைக் குறிக்கிறது, அதாவது தேவனைப் பின்பற்றும் சிருஷ்டிகளால் செய்யப்பட வேண்டியவை, மற்றும் இது மனுஷனின் கடமையாகவும் இருக்கின்றது. மனுஷன் என்ன செய்யவேண்டியவனாக இருக்கிறான் என்பது தொடக்கத்திலிருந்தே மனுஷனால் புரிந்துகொள்ளப்படுகிற ஒன்றாக இருக்கவில்லை, ஆனால் தேவன் தமது கிரியையின்போது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றவைகளாக இருக்கின்றது. தேவன் கிரியை செய்கையில், கேட்டுக்கொள்கின்ற யாவும் படிப்படியாக மிகவும் ஆழமாகவும் உயர்ந்ததாகவும் ஆகின்றன. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தின்போது, மனுஷன் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தது, மற்றும் கிருபையின் யுகத்தின்போது, மனுஷன் சிலுவையைச் சுமக்க வேண்டியதாயிருந்தது. ராஜ்யத்தின் யுகம் மாறுபட்டதாக இருக்கின்றது: மனிதன் செய்யும்படிக் கேட்டுக்கொள்ளப்படுபவைகள் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றில் இருந்தவைகளைவிட உயர்வானவைகளாய் இருக்கின்றன. தரிசனங்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது, மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை இன்னும் உயருகின்றன, மற்றும் மிகவும் தெளிவாகவும் இன்னும் அதிகம் உண்மையாகவும் ஆகின்றன. அதேபோல், தரிசனங்களும் அதிகம் உண்மையாகின்றன. இத்தனை அதிக உண்மையான தரிசனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மனுஷனுக்கு உகந்தவைகளாக இருப்பது மட்டுமின்றி, இன்னும் அதிகமாக, தேவனைப்பற்றிய அவனது அறிவுக்கும் உகந்தவையாக இருக்கின்றன.
முந்தைய யுகங்களுடன் ஒப்பிடும்போது, ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது தேவனுடைய கிரியை மிகவும் நடைமுறைக்கு உரியதாக இருக்கின்றது, மனுஷனின் சாராம்சம் மற்றும் அவனது மனநிலையின் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது, மேலும் தேவனைப் பின்பற்றும் அனைவரும் அவருக்கு அதிகமாய்ச் சாட்சியம் தரக்கூடியவர்கள் ஆக்குகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதென்றால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது, தேவன் செயல்படுகையில், கடந்தகாலங்களில் வேறு எந்தக் காலத்தைக் காட்டிலும் அதிகமாக தேவன் தம்மைக் காண்பிக்கின்றார், அதாவது மனுஷனால் அறியப்பட வேண்டிய தரிசனங்கள், முந்தைய எந்த யுகத்தைக் காட்டிலும் உயர்வானவைகளாக இருக்கின்றன. மனுஷர்களிடையே தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருப்பதால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது மனுஷனால் அறியப்பட்ட தரிசனங்கள் எல்லா நிர்வாகக் கிரியையிலும் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியை முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது, மற்றும் மனுஷனால் அறியப்படவேண்டிய தரிசனங்கள், மற்ற எல்லாத் தரிசனங்களையும்விட மிகவும் உயர்ந்தவைகள் ஆகிவிட்டன, மற்றும் இதன்விளைவாக மனுஷனின் நடைமுறையும் முந்தைய யுகங்கள் எதிலும் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது, ஏனெனில் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களுடன் படிப்படியாக மாறுகிறது, மற்றும் தரிசனங்களின் பரிபூரணத்துவமானது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவற்றின் பரிபூரணத்துவத்தையும் குறிக்கிறது. தேவனின் நிர்வகித்தல் அனைத்தும் ஒரு நிறுத்தத்திற்கு வந்த உடனே, மனுஷனின் நடைமுறையும் ஒழியும், தேவனுடைய கிரியை இல்லாத நிலையில், மனுஷன் தேர்ந்துகொள்ள, கடந்த காலக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பதைத் தவிர வேறெதுவும் கொண்டிருக்க மாட்டான், இல்லையேல் திரும்புவதற்கு வெறுமனே எந்த இடமும் அவனுக்கிராது. புதியதரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் புதிய நடைமுறை எதுவும் இருக்காது; முழுமையான தரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் பரிபூரணமான நடைமுறை இருக்காது; உயர்வான தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் உயர்வான நடைமுறை இருக்காது. தேவனுடைய அடிச்சுவடுகளுடன் கூடவே மனுஷனின் நடைமுறை மாறுகிறது, மற்றும், அதுபோலவே, தேவனுடைய கிரியையுடன் கூடவே மனுஷனின் அறிவும் அனுபவமும் மாறுகின்றன. மனுஷன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், அவன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இன்னமும் இருக்கிறான், தேவன் கிரியை செய்வதை ஒரு கணம் மாத்திரம் நிறுத்தினால், மனுஷன் உடனடியாக அவருடைய கோபத்தினால் மரித்துப்போவான். மனுஷனிடம் பெருமைபாராட்ட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்று மனுஷனின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவனது அனுபவங்கள் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான்—ஏனெனில் மனுஷனின் நடைமுறையும், தேவன் மீதான நம்பிக்கையில் அவன் தேட வேண்டியவையும், தரிசனங்களில் இருந்து பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு நிகழ்விலும், மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனங்கள் உள்ளன, மற்றும், இவற்றைப் பின்பற்றி, பொருத்தமான கோரிக்கைகள் மனுஷனால் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தரிசனங்களை அடித்தளமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மனுஷன் நடைமுறையில் வெறுமனே திறனற்றவனாக இருப்பான், அத்துடன் மனுஷன் உறுதியாக தேவனைப் பின்பற்ற இயலாத நிலையில் இருப்பான். மனுஷன் தேவனை அறியாது அல்லது தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாது இருந்தால், மனுஷன் செய்கிற எல்லாம் வீணானதாக இருக்கும், மற்றும் அவை தேவனால் அங்கீகரிக்கப்பட இயலாதவையாக இருக்கும். மனுஷனின் கொடைகள் எவ்வளவு ஏராளமாயிருந்தாலும், அவன் இன்னும் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான். மனுஷனின் செயல்கள் எவ்வளவு நல்லவைகளாக இருப்பினும் அல்லது மனுஷன் எத்தனையோ செயல்களைச் செய்தாலும், இன்னமும் அவர்களால் தேவனுடைய கிரியைக்கு மாற்றாக எதுவும் செய்துவிட முடியாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களிலிருந்து பிரிக்கப்பட இயலாது. புதிய தரிசனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் புதிய நடைமுறையைக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் நடைமுறையானது சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் கோட்பாடுகளில் நிலைத்திருந்து, மரித்துப்போன நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; அவர்கள் புதிய தரிசனங்கள் எவற்றையும் கொண்டிருப்பதில்லை, இதன் விளைவாக, அவர்கள் புதிய யுகத்திலிருந்து எதையும் நடைமுறைப்படுத்துவது இல்லை. அவர்கள் தரிசனங்களை இழந்திருக்கிறார்கள், அவ்வாறு செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் இழந்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் சத்தியத்தை இழந்திருக்கிறார்கள். சத்தியம் இல்லாதவர்கள் அபத்தத்தின் வம்சாவளியினராய் இருக்கின்றனர், அவர்கள் சாத்தானின் உருவமாகவே இருக்கின்றனர். ஒருவர் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கிரியையின் தரிசனங்கள் இன்றி இருக்க முடியாது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருந்து விலகி இருக்க முடியாது; ஒருவர் தரிசனங்களை இழந்தவுடன், ஒருவர் உடனடியாக பாதாளத்தில் இறங்குகிறார் மற்றும் இருளின் மத்தியில் வாழ்கிறார். தரிசனம் இல்லாதவர்கள் மதியீனமாக தேவனைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதில்லை, மாறாகத் தேவனுடைய நாமத்தை ஓர் அடையாள அட்டை போலத் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மாம்சமாக அவதரித்த தேவனை அறியாதவர்கள், தேவனுடைய நிர்வகித்தல் முழுமையிலும் கிரியையின் மூன்று கட்டங்களை அறியாதவர்கள்—இவர்கள் தரிசனங்களை அறிவதில்லை, எனவே சத்தியம் இல்லாமல் இருக்கின்றார்கள். மேலும், சத்தியத்தைக் கொண்டிராதவர்கள் எல்லாப் பொல்லாங்கும் செய்பவர்கள் அல்லவா? சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பவர்கள், தேவனைப் பற்றிய அறிவை நாட மனவிருப்பம் கொண்டவர்கள், மற்றும் தேவனுடன் உண்மையிலேயே ஒத்துழைப்பவர்கள், தரிசனங்களை ஓர் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஜனங்களாக இருக்கின்றனர். இவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகின்றார்கள், ஏனென்றால் இவர்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறார்கள், மற்றும் இந்த ஒத்துழைப்புதான் மனிதனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நடைமுறைப்படுத்தும் பலபாதைகளைத் தரிசனங்கள் கொண்டுள்ளன. மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டிய நடைமுறைக் கோரிக்கைகளும் தரிசனங்களுக்குள் இருக்கின்றன, அதேபோன்று மனுஷனால் அறிந்திருக்கப்பட வேண்டிய தேவனின் கிரியையும் இதில் இருக்கின்றது. கடந்தகாலத்தில், சிறப்புக் கூட்டங்கள் அல்லது பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களின்போது, நடைமுறைப்பாதையினுடைய ஓர் அம்சம் மட்டுமே பேசப்பட்டது. இப்படிப்பட்ட நடைமுறை கிருபையின் காலத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் அது தேவனுடைய அறிவுடன் அரிதாகவே எந்தத் தொடர்பையும் கொண்டிருந்தது, ஏனெனில் கிருபையின் காலத்தினுடைய தரிசனம், இயேசு சிலுவையில் அறையப்பட்டதின் தரிசனமாக மட்டும் இருந்தது, மற்றும் வேறு எந்தப் பெரிய தரிசனங்களும் இருந்ததில்லை. சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மனிதகுலத்தை அவர் மீட்பதற்கான ஊழியத்தைக்காட்டிலும் அதிகமான எதையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டியதில்லை, மற்றும், கிருபையின் யுகத்தின்போது மனிதன் தெரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தத் தரிசனங்களும் இருந்ததில்லை. இதனால், மனுஷன் தேவனைப் பற்றிக் குறைவான அறிவு மட்டுமே கொண்டிருந்தான், இயேசுவின் அன்பு மற்றும் பரிவிரக்கம் ஆகியவை பற்றிய அறிவைத்தவிர, நடைமுறைப்படுத்துவதற்கு எளிய மற்றும் இரக்கம் உண்டுபண்ணுகிற ஒரு சில விஷயங்கள் மாத்திரமே இருந்தன, அவை இன்றைய விஷயங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. கடந்த காலங்களில், மனுஷனின் சபை கூடுகை எந்தவிதத்தில் நடைபெற்றிருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையின் நடைமுறை அறிவைப்பற்றிப் பேச இயலாதவனாக இருந்தான், மனுஷன் பிரவேசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடைமுறைப் பாதை எதுவாக இருந்தது என்பதை எவரொருவராலும் தெளிவாகக் கூற இயலாததாகவே இருந்தது. மனுஷன் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின் அடித்தளத்திற்குச் சில எளிய விவரங்களை மட்டுமே பேசினான்; அவனது நடைமுறையின் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஏனென்றால் அதே யுகத்தில் தேவன் எந்தப் புதிய கிரியையும் செய்யவில்லை, மற்றும் மனுஷன் செய்யும்படிக்கு அவனிடத்தில் அவர் கேட்டுக்கொண்டவை சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை, அல்லது சிலுவையைச் சுமத்தல் என்பவையாக மாத்திரம் இருந்தன. இத்தகைய நடைமுறைகளைத் தவிர, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைவிட உயர்ந்த தரிசனங்கள் எதுவும் இல்லை. கடந்த காலத்தில், மற்ற தரிசனங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஏனென்றால் தேவன் ஒருபெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை, மேலும் அவர் மனுஷனிடத்தில் குறைவான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். இதனால், மனுஷன் என்ன செய்தாலும், அவன் இந்த எல்லைகளை மீற இயலாதிருந்தான், இவை மனுஷனால் நடைமுறைப் படுத்தப்படக்கூடிய ஒருசில எளிய மற்றும் ஆழமற்ற விஷயங்களின் எல்லைகளாகவே இருந்தன. இன்று நான் மற்ற தரிசனங்களைப்பற்றிப் பேசுகின்றேன், ஏனென்றால் இன்று, அதிகமான கிரியைகள் செய்யப்பட்டுள்ளன, இவை நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமான கிரியையாக இருக்கின்றன. மனுஷன் செய்ய வேண்டியவைகளும் கடந்துபோன யுகங்களைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமானவையாக இருக்கின்றன. மனுஷன் இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிய இயலாமல் இருக்கின்றான் என்றால், அது முக்கியத்துவம் எதையும் கொண்டிராது; மனுஷன் தன் வாழ்நாள் முழுவதுமானப் பிரயாசத்தை இதற்கு அர்ப்பணிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிவதில் மனுஷன் சிரமம் கொண்டிருப்பான் என்று கூறப்பட முடியும். ஜெயங்கொள்ளுதலின் கிரியையில், நடைமுறைப் பாதையைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். மனுஷன் செய்ய வேண்டியவை எதையும் செய்யாமல், தரிசனங்கள் பற்றி வெறுமனே பேசுதலும்கூட மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். நடைமுறைப் பாதை தவிர வேறு எதைப்பற்றியும் பேசப்பட்டிருந்ததில்லை என்றால், மனுஷனின் குணத்தில் உள்ள பலவீனத்தைத் தாக்குவது, அல்லது மனுஷனின் கருத்துக்களை அகற்றுவது சாத்தியமற்றதாக இருக்கும், மற்றும் அதுபோன்றே மனுஷனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலும் சாத்தியமற்றதாக இருக்கும். தரிசனங்கள் மனுஷனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன, இருப்பினும் தரிசனங்கள் நீங்கலாக நடைமுறைப் பாதை இருந்ததில்லை என்றால், பின்பு மனிதன் பின்பற்ற வழி எதையும் கொண்டிருக்கமாட்டான், அவன் பிரவேசிப்பதற்கான வழிகள் எதையும் கொண்டிருக்கமாட்டான். இது தொடக்கத்தில் இருந்து முடிவுவரை தேவனுடைய கிரியையின் கொள்கையாக இருந்துள்ளது: நடைமுறைப் படுத்தக்கூடியது தரிசனங்களில் இருக்கின்றது, மற்றும் நடைமுறைக்குக் கூடுதலானவைகளும் தரிசனங்களில் இருக்கின்றன. மனுஷனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அளவு, மற்றும் அவனது மனநிலை ஆகிய இரண்டுமே தரிசனங்களில் மாற்றங்களுடன் இணைகின்றன. மனுஷன் தனது சொந்த முயற்சிகளை மட்டுமே நம்பியிருந்தால், எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சாதித்தல் அவனுக்குச் சாத்தியமற்றதாயிருக்கும். தரிசனங்கள் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய நிர்வகித்தல் பற்றிப் பேசுகின்றன. நடைமுறை என்பது மனுஷனுடைய நடைமுறைப் பாதையையும், மனுஷனின் வாழ்வதற்கான வழியையும் குறிக்கிறது; தேவனுடைய நிர்வகித்தல் அனைத்திலும், தரிசனங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு என்பது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவாக இருக்கின்றது. தரிசனங்கள் நீக்கப்பட்டிருந்தால், அல்லது அவை நடைமுறைப் பேச்சு இன்றி பேசப்பட்டிருந்தன என்றால், அல்லது தரிசனங்கள் மட்டுமே இருந்தன மற்றும் மனிதனின் நடைமுறை அழிக்கப்பட்டிருந்தது என்றால், பின்பு இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய நிர்வகித்தலாகக் கருதமுடியாது, தேவனுடைய கிரியையானது மனுக்குலத்தினிமித்தமாகச் செய்யப்பட்டு இருக்கின்றது என்று கூறவும் முடியாது; இதனால், மனுஷனுடைய கடமை நீக்கப்பட்டிருக்கும் என்பது மாத்திரம் அல்ல, இது தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மறுதலித்தலாகவும் இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, தேவனுடைய கிரியையின் ஈடுபாடு இல்லாமல், மனிதன் வெறுமனே நடைமுறைப்படுத்தும்படி மாத்திரம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தால், மற்றும் இதற்கும் அதிகமாக, மனிதன் தேவனுடைய கிரியையை அறியும்படிக் கேட்டுக்கொள்ளப்படாதிருந்தால், பின்பு அப்படிப்பட்ட கிரியையானது தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருந்திருக்காது. மனுஷன் தேவனை அறிந்திராமல், மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமையில் இருந்து, மற்றும் தனது நடைமுறையைத் துல்லியமற்ற மற்றும் புலப்படாத வகையில் கண்மூடித்தனமாக செயல்படுத்தியிருந்தால், பின்பு அவன் ஒருபோதும் முற்றிலும் தகுதியான சிருஷ்டியாக மாட்டான். எனவே, இந்த இரண்டு விஷயங்களுமே இன்றியமையாதவையாக உள்ளன. தேவனுடைய கிரியை மட்டுமே இருந்திருந்தால், அதாவது, தரிசனங்கள் மட்டுமே இருந்திருந்து, மனிதனின் ஒத்துழைப்பும் நடைமுறையும் இல்லாதிருந்தால், இதுபோன்ற விஷயங்கள் தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்க முடியாது. மனிதனின் நடைமுறை மற்றும் பிரவேசம் மட்டுமே இருந்திருந்தால், பின்பு மனிதன் எவ்வளவு உயர்வான பாதையில் பிரவேசித்தாலும், இதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். மனிதனின் பிரவேசம் படிப்படியாகக் கிரியை மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றின் சுவட்டில் மாற வேண்டும்; அது ஒரு கணப்பொழுதில் திடீரென்று மாறமுடியாது. மனிதனுடைய நடைமுறைக் கொள்கைகள் சுயாதீனமானவைகளாக மற்றும் கட்டுப்பாடற்றவைகளாக இருப்பதில்லை, ஆனால் அவை குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கொள்கைகள் கிரியையின் தரிசனங்களுக்கு இணங்க மாறுகின்றன. எனவே, தேவனுடைய நிர்வகித்தலானது இறுதியில் தேவனுடைய கிரியையாகவும் மனுஷனின் நடைமுறையாகவும் இறங்கி வருகிறது.
நிர்வாகக் கிரியையானது மனிதகுலத்தின் நிமித்தமாக மட்டுமே வந்தது, அதாவது மனிதகுலத்தின் இருப்பின் நிமித்தமாக மட்டுமே அது எழுந்தது. மனிதகுலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆதியில் வானங்களும் பூமியும் மற்றும் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டபோதோ நிர்வகித்தல் இருந்ததில்லை. தேவனுடைய சகல கிரியையிலும், மனுஷனுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு நடைமுறையும் இருந்ததில்லை என்றால், அதாவது, மோசம்போன மனுக்குலத்திற்குப் பொருத்தமான தேவைகளைத் தேவன் ஏற்படுத்தாதிருந்தால் (தேவனால் செய்யப்பட்ட கிரியையில், மனுஷனின் நடைமுறைக்குப் பொருத்தமான பாதை இருந்ததில்லை என்றால்), பின்பு இந்தக் கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியை முழுமையும், மோசம் போன மனுஷர்களிடம் அவர்களின் நடைமுறையை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிக் கூறிவதில் மாத்திரம் ஈடுபட்டிருந்தால், மற்றும் தேவன் தமது சொந்தக் கிரியையை மேற்கொள்ளாது இருந்தால், மற்றும் தமது சர்வவல்லமை அல்லது ஞானத்தைக் காட்சிப்படுத்தாதிருந்தால், பின்பு தேவன் மனுஷனிடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுபவை எவ்வளவு உயர்ந்தவையாக இருப்பினும், மனுஷன் மத்தியில் தேவன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், மனுஷன் தேவனுடைய மனநிலை பற்றி எதையும் அறியமாட்டான்; விஷயம் இப்படியிருந்தால், பின்பு இவ்வகையான கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்படக் குறைவான தகுதியுடையதாகவே இருக்கும். எளிமையாகச் சொன்னால், தேவனுடைய நிர்வாகக் கிரியையானது தேவனால் செய்யப்பட்ட கிரியையாக இருக்கின்றது, மற்றும் எல்லாக் கிரியையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்களினால் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட கிரியையை நிர்வகித்தல் என்று சுருக்கமாகக் கூறலாம். வேறுவார்த்தைகளில் சொல்லுவதென்றால், மனிதர்களிடையே தேவனுடைய கிரியை, அதேபோல் அவரைப் பின்தொடரும் அனைவரும் அவருடன் ஒத்துழைத்தல் ஆகியவை ஒட்டுமொத்தமாக நிர்வகித்தல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு, தேவனுடைய கிரியை தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது, மற்றும் மனிதனின் ஒத்துழைப்பு நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு உயர்வாக உள்ளதோ (அதாவது, தரிசனங்கள் எவ்வளவு உயர்வாக உள்ளதோ), அவ்வளவுக்குத் தேவனுடைய மனநிலை மனுஷனுக்குத் தெளிவாக்கப்படுகிறது, அது மனுஷனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாய் முரண்படுகிறதோ, அவ்வளவுக்கு மனுஷனின் நடைமுறையும் ஒத்துழைப்பும் உயர்வாகிறது. மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை எவ்வளவு உயர்வாகிறதோ, அவ்வளவாய்த் தேவனுடைய கிரியை மனுஷனின் கருத்துக்களில் இருந்து முரண்படுகின்றது, இதன் விளைவாக மனுஷனின் சோதனைகள், மற்றும் அவன் பூர்த்தி செய்யவேண்டிய தரங்களும் உயர்வாகின்றன. இந்தக் கிரியையின் முடிவில், எல்லாத் தரிசனங்களும் முழுமை அடைந்திருக்கும், மற்றும் மனுஷன் நடைமுறைப்படுத்த வேண்டியவை பரிபூரணத்தின் உச்சத்தை அடைந்திருக்கும். இது ஒவ்வொருவரும் அவரவருடைய வகையின்படியே வகைப்படுத்தப்படும் நேரமாகவும் இது இருக்கும், ஏனெனில் மனிதன் தெரிந்துகொள்ளவேண்டியது மனிதனுக்குக் காண்பிக்கப்படும். எனவே, தரிசனங்கள் அவற்றின் உச்சத்தை அடையும்போது, அதற்கேற்ற வகையில் கிரியையானது அதன் முடிவை நெருங்கும், மற்றும் மனுஷனின் நடைமுறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கும். மனுஷனின் நடைமுறையானது தேவனுடைய கிரியையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மற்றும் மனுஷனின் நடைமுறை மற்றும் ஒத்துழைப்பினால் மட்டுமே தேவனின் நிர்வகித்தல் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் என்பவன் தேவனுடைய கிரியையின் காட்சிப்பொருளாய் இருக்கிறான், மற்றும் தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியையின் இலக்காக இருக்கிறான், மற்றும் தேவனுடைய அனைத்து நிர்வகித்தலின் பலனாகவும் இருக்கின்றான். மனுஷனின் ஒத்துழைப்பின்றி தேவன் தனியாகக் கிரியை செய்தால், அவருடைய முழுக்கிரியையின் தெளிவான பலனாகச் செயல்பட ஒன்றும் இருக்க முடியாது, பின்னர் தேவனுடைய நிர்வகித்தலுக்குச் சிறிதளவு முக்கியத்துவமும் இருக்காது. தேவனின் கிரியையைத் தவிர, தேவன் தமது கிரியையை வெளிப்படுத்தவும், அதன் சர்வவல்லமையையும் ஞானத்தையும் நிரூபிக்கவும் பொருத்தமான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே தேவன் தமது நிர்வகித்தலின் நோக்கத்தை அடையமுடியும், மற்றும் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்க இந்தக் கிரியை அனைத்தையும் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும். ஆகையால், மனுஷன் தேவனுடைய நிர்வகித்தலின் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறான், மற்றும் மனுஷனால் மட்டுமே தேவனின் நிர்வகித்தலைக் கனிகொடுக்கிறதாக மாற்றவும், அதன் இறுதிநோக்கத்தை அடையவும் முடியும்; மனுஷனைத் தவிர, வேறு எந்த சிருஷ்டியாலும் அத்தகைய கிரியையை மேற்கொள்ள முடியாது. மனுஷன் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய உண்மையான இலக்காக வேண்டுமென்றால், மோசம்போன மனிதகுலத்தின் கீழ்ப்படியாமை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இது மனுஷனுக்கு வேறுபட்ட காலங்களுக்குப் பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட வேண்டியதிருக்கின்றது, மற்றும் தேவன் அதற்கு ஒத்திசைவான கிரியையை மனுஷர் மத்தியில் செயல்படுத்த வேண்டும். இந்த வழியில் மட்டுமே இறுதியில் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய பலனாக உள்ள ஒரு குழுவினரான ஜனங்கள் ஆதாயப்படுத்தப்பட முடியும். மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியையானது, வெறுமனே தேவனுடைய கிரியையின் மூலமாக மட்டுமே தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்க முடியாது; இதை அடைய, அவருடைய கிரியைக்குப் பொருத்தமான உயிருள்ள மனுஷர்களும் அப்படிப்பட்ட சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். தேவன் இந்த மக்கள் மீது முதலில் கிரியை செய்வார், பின்பு இவர்கள் மூலம் அவரது கிரியை வெளிப்படுத்தப்படும், மற்றும் இவ்வாறு அவரது சித்தம் பற்றிய சாட்சியம் சிருஷ்டிகளின் மத்தியில் கொடுக்கப்படும், மற்றும் இதில், தேவன் தம்முடைய கிரியையின் இலக்கை அடைய வேண்டியதிருக்கும். சாத்தானைத் தோற்கடிக்கத் தேவன் தாம் மட்டும் தனியாகக் கிரியை செய்கிறதில்லை, ஏனென்றால் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும் அவர் தாமே தமக்கு நேரடியான சாட்சியம் கொடுக்க முடியாது. அவர் அவ்வாறு செய்வதாயிருந்தால், மனுஷனை முற்றிலுமாக இணங்கச் செய்வது சாத்தியமற்றதாகும், எனவே அவனைத் தோற்கடிக்க மனிதன் மீது தேவன் கிரியை செய்யவேண்டும், அப்போது மட்டுமே அவர் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியில் சாட்சியத்தைப் பெற முடியும். மனுஷனின் ஒத்துழைப்பு இல்லாமல், தேவன் மாத்திரமே கிரியை செய்திருந்தால் அல்லது மனுஷன் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், மனுஷன் ஒருக்காலும் தேவனின் மனநிலையை அறிந்துகொள்ள இயலாதவனாக இருந்திருப்பான், மற்றும் அவன் தேவனுடைய சித்தத்தை என்றென்றைக்கும் அறியாதவனாக இருந்திருப்பான்; பின்பு தேவனுடைய கிரியையானது தேவனுடைய நிர்வாகக் கிரியை என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளாமல், மனுஷன் தான் மட்டுமே கடும்முயற்சி செய்வதும், மற்றும் தேடுவதும், மற்றும் கடினமாக உழைப்பதுமாக இருந்தான் என்றால், குறும்புகளைச் செய்கிறவனாயிருப்பான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல், மனுஷன் செய்கிறது என்னவோ, அது சாத்தானுடைய கிரியையாக இருக்கிறது, அவன் கலகக்காரனாகவும், பொல்லாங்கு செய்கிறவனாகவும் இருக்கிறான்; மோசம்போன மனிதகுலத்தினால் செய்யப்படும் எல்லாவற்றிலும் சாத்தான் காட்சிப்படுத்தப்படுகிறான், மற்றும் தேவனுடன் இணக்கமாகும் எதுவும் அங்கு இருப்பதில்லை, மற்றும் மனுஷன் செய்கிற யாவும் சாத்தானின் வெளிக்காட்டுதலாக இருக்கின்றது. பேசப்பட்ட எல்லாவற்றிலும், தரிசனங்களையும் மற்றும் நடைமுறையையும் தவிர எதுவும் இல்லை. தரிசனங்களின் அடிப்படையில், நடைமுறையையும் கீழ்ப்படிதலின் பாதையையும் மனுஷன் கண்டறிகின்றான், இதனால் அவன் தன் கருத்துக்களை ஒதுக்கிவைக்கலாம், மற்றும் கடந்தகாலங்களில் அவன் கொண்டிராத அந்த விஷயங்களை ஆதாயப்படுத்தலாம். மனுஷன் தேவனுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று தேவன் கேட்கின்றார், அதாவது மனுஷன் தேவனுடைய கோரிக்கைகளுக்கு முழுமையாக அடிபணியவேண்டும் என்று தேவன் கோருகின்றார், மற்றும் தேவன் செய்த கிரியையை மனுஷன் பார்க்கும்படியாகவும், தேவனுடைய சர்வவல்லமையை அனுபவிக்கும்படியாகவும், மற்றும் தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்ளும் படியாகவும் கேட்டுக்கொள்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், இவை தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றது. மனுஷனுடனான தேவனின் ஒன்றிணைவு என்பது நிர்வகித்தலாக இருக்கின்றது, மற்றும் இது மிகப்பெரிய நிர்வகித்தலாக இருக்கின்றது.
தரிசனங்களை உள்ளடக்கியது முக்கியமாக தேவன் தாமே செய்கின்ற கிரியையைக் குறிக்கின்றது, மற்றும் நடைமுறை தொடர்பானது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் தேவனுடன் இதற்கு எவ்விதத்தொடர்பும் இல்லை. தேவனுடைய கிரியை தேவனாலேயே முடிக்கப்படுகின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை மனிதனாலேயே அடையப்படுகிறது. தேவனால் செய்யப்பட வேண்டியது மனுஷனால் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை, மனுஷனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது தேவனுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அவருடைய சொந்த ஊழியமாகும், மற்றும் அது மனுஷனுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை. இந்தக் கிரியை மனுஷனால் செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியையை மனுஷன் செய்ய இயாலாதவனாக இருப்பான். மனுஷன் நடைமுறைப்படுத்தத் தேவையானது எதுவோ, அது மனுஷனால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டும், அது அவனுடைய ஜீவனின் தியாகமாக இருந்தாலும், அல்லது சாட்சியாக நிற்க அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்தாலும்—இவை அனைத்தும் மனுஷனால் வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்பட வேண்டும். தேவன் செய்ய வேண்டியதாக உள்ள கிரியை எல்லாவற்றையும் தேவன் தாமே செய்து முடிக்கின்றார், மனுஷன் செய்ய வேண்டியது எதுவோ அது மனுஷனுக்குக் காட்டப்படுகின்றது, மற்றும் எஞ்சியுள்ள கிரியை மனுஷன் செய்வதற்கு விடப்படுகிறது. தேவன் கூடுதல் கிரியை செய்கிறதில்லை. அவர் தம்முடைய ஊழியத்திற்குள் இருக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், மற்றும் மனுஷனுக்கு வழியை மாத்திரம் காட்டுகின்றார், மற்றும் வழியைத் திறக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், வழியை ஆயத்தப்படுத்தும் கிரியையைச் செய்வதில்லை; இது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும், மற்றும் இவை அனைத்தும் மனுஷனின் கடமையாகும், இது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் இதில் தேவன் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. மனுஷனைப் போலவே, தேவனும் சத்தியத்தில் துன்பத்தை அனுபவித்து மற்றும் சுத்திகரிப்படைய வேண்டும் என்று மனிதன் கோரினால், பின்பு மனுஷன் கீழ்ப்படியாதவனாக இருக்கிறான். தேவனுடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதேயாகும், மற்றும் தேவனின் வழிகாட்டுதல்கள் எல்லாவற்றிற்கும், எந்த எதிர்ப்பும் இன்றிக் கீழ்ப்படிவதே மனுஷனின் கடமையாக இருக்கிறது. தேவன் எவற்றில் எவ்விதம் கிரியை செய்கின்றார் அல்லது ஜீவிக்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் அடைவதற்கு கடமைப்பட்டிருக்கிறவற்றை அவன் அடைந்தே தீர வேண்டும். தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க முடியும், அதாவது இது தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க தகுதி வாய்ந்தவராய் இருக்கின்றார். மனுஷன் தன்னை முழுமையாகக் கீழ்ப்படுத்தி மற்றும் நடைமுறைப் படுத்துதலைத் தவிர வேறு எந்த விருப்பத்தையும் கொண்டிருக்கக் கூடாது மற்றும் வேறு எதுவும் செய்யக் கூடாது; இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய உணர்வாக இருக்கிறது. தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியை முடிந்தவுடன், மனுஷன் அதைப் படிப்படியாக அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். முடிவில், தேவனுடைய நிர்வகித்தல் எல்லாம் நிறைவடைந்து இருக்கும்போது, மனுஷன் செய்யும்படிக்கு தேவன் கேட்டுக்கொண்டவற்றை அவன் இன்னமும் செய்திருக்கவில்லை என்றால், மனுஷன் தண்டிக்கப்பட வேண்டும். தேவனுடைய கோரிக்கைகளை மனுஷன் நிறைவேற்றாதிருக்கிறான் என்றால், இது மனுஷனின் கீழ்ப்படியாமையினால் ஆனதாக இருக்கிறது; இது தேவன் தமது கிரியையில் எல்லா வகையிலும் முழுமையானவராக இருந்திருக்கவில்லை என்று அர்த்தப்படுகிறதில்லை. தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் அனைவரும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மற்றும் தங்களது விசுவாசத்தைக் கொடுக்க முடியாதவர்கள் மற்றும் தங்களது கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இன்று, நீங்கள் அடைய வேண்டியவை கூடுதலான கோரிக்கைகள் அல்ல, ஆனால் மனுஷனின் கடமையாகவும் மற்றும் அனைத்து மக்களாலும் செய்ய வேண்டியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவோ அல்லது அதை நன்றாகச் செய்யவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள் என்றால், பின்பு நீங்கள் உங்கள் மீது தொல்லையைக் கொண்டுவரவில்லையா? நீங்கள் மரணத்தோடு ஊடாடுவதில்லையா? எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் பெறுவோம் என்று நீங்கள் இன்னமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தேவனுடைய கிரியை மனிதகுலத்தின் நிமித்தமாகச் செய்யப்படுகின்றது, மற்றும் மனுஷனின் ஒத்துழைப்பு தேவனின் நிர்வகித்தலின் நிமித்தமாக வழங்கப்படுகிறது. தேவன் தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தபின், மனுஷன் தனது நடைமுறையில் விருப்பத்துடன் இருக்க வேண்டும், மற்றும் தேவனுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவனுடைய கிரியையில், மனுஷன் எந்த முயற்சியையும் இடையூறாக விட்டுவைக்கக் கூடாது, அவன் தனது விசுவாசத்தை அளிக்க வேண்டும், மற்றும் எண்ணற்ற கருத்துக்களில் ஈடுபடாமல், அல்லது செயலற்று அமராமல் மற்றும் மரணத்திற்குக் காத்திராமல் இருக்க வேண்டும். தேவன் தம்மையே மனுஷனுக்காகத் தியாகம் பண்ணக் கூடும், எனவே மனுஷன் தன் விசுவாசத்தை தேவனுக்கு ஏன் வழங்கக் கூடாது? மனுஷனை நோக்கி தேவன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டிருக்கின்றார், எனவே மனுஷன் ஏன் ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கக் கூடாது? தேவன் மனிதகுலத்திற்காகக் கிரியை செய்கின்றார், எனவே தேவனின் நிர்வகித்தலினிமித்தம் மனிதன் தனது கடமையில் சிலவற்றை ஏன் செய்யக் கூடாது? தேவனுடைய கிரியை இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது, இருப்பினும் இன்னமும் நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் செயல்படுவதில்லை, நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் நகருவதில்லை. இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவின் இலக்குகளாக இருப்பதில்லையா? தேவன் ஏற்கெனவே தமக்குரிய எல்லாவற்றையும் மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளார், ஆகவே, இன்று, மனிதன் தன் கடமையை ஆர்வத்துடன் செய்ய இயலாதவனாக இருப்பது ஏன்? தேவனைப் பொறுத்த மட்டில், அவருடைய கிரியையே அவருடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது, அவருடைய நிர்வாகக் கிரியை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், பூர்த்தி செய்வதும் அவனுடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது. இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் சாராம்சத்தின் மையப்பகுதியை எட்டியுள்ளன, மற்றும் தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்த வழியின் உண்மை அல்லது தவறான தன்மையை ஜனங்களில் பலர் இன்னமும் புரிந்து கொள்ளுகிறதில்லை; அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் மற்றும் காணுகிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்வது இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் கிரியையையும் ஆராய்கிறார்கள், அவர் என்ன சாப்பிடுகின்றார், எதை அணிகின்றார் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மற்றும் அவர்களின் கருத்துக்கள் இன்னும் அதிகத் துன்பம் தருபவையாகின்றன. அப்படிப்பட்ட ஜனங்கள் ஒன்றுமில்லாததைப் பற்றி அமளி செய்து கொண்டிருப்பதில்லையா? அப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நாடுபவர்களாக இருக்கக் கூடுவது எப்படி? மேலும் அவர்களால் எப்படி தேவனுக்கு அடிபணிய நோக்கம் கொண்டிருக்க முடியும்? அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் கடமையையும் தங்கள் மனதின் பின்புறத்தில் வைத்து, அதற்குப் பதிலாகத் தேவன் எங்கிருக்கின்றார் என்பதின் மீது கவனம் செலுத்துகின்றார்கள். அவர்கள் அட்டூழியக்காரராய் இருக்கிறார்கள்! மனுஷன் தான் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் புரிந்து கொண்டு, அவன் நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தால், பின்பு தேவன் நிச்சயமாக மனுஷன்மீது அவருடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளியிருப்பார், ஏனென்றால் மனுஷனின் கடமையையும், மனுஷனால் செய்யப்பட வேண்டியவற்றையும் தான் தேவன் மனுஷனிடம் கேட்கிறார். மனுஷன் புரிந்துகொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள இயலாமலும், நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாமலும் இருந்தால், மனுஷன் தண்டிக்கப்படுவான். தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் தேவனிடத்தில் பகைமை உடையவர்களாக இருக்கிறார்கள், புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட ஜனங்கள் வெளிப்படையாக எதிர்க்கும் எதையும் செய்யாவிட்டாலும் கூட, அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவானதாக இருக்கிறது. தேவனால் கோரும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவராத எல்லோருமே, பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் சிறப்புக் கவனம் செலுத்தினாலும், வேண்டுமென்றே எதிர்க்கிறவர்களாக மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் தேவனுக்கு அடிபணியாதவர்கள் கலகக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தேவனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுடன் ஒத்துழைக்காதவர்களாக இருக்கிறார்கள், தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
தேவனுடைய கிரியை ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, மற்றும் அவருடைய நிர்வகித்தல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறவர்கள் எல்லோரும் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளைத் தேவன் தம்முடைய சொந்த தராதரங்களின்படியும், மற்றும் மனுஷன் சாதிக்கக்கூடிய திறனுக்கேற்றபடியும் ஏற்படுத்துகின்றார். அவருடைய நிர்வகித்தலைப் பற்றிப் பேசும்போது, அவர் மனுஷனுக்கான வழியையும் சுட்டிக்காட்டுகின்றார், மற்றும் மனுஷனின் பிழைப்புக்கான பாதையை வழங்குகின்றார். தேவனுடைய நிர்வகித்தல் மற்றும் மனுஷனின் நடைமுறை இரண்டும் ஒரே கட்ட கிரியையாக இருக்கின்றன, மற்றும் அவை ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தேவனுடைய நிர்வகித்தல் பற்றிய பேச்சு மனுஷனுடைய மனநிலையின் மாற்றங்களுடன் தொடர்புகொண்டுள்ளது, மற்றும் மனுஷனால் செய்யப்படவேண்டியவை பற்றிய மற்றும் மனுஷனுடைய மனநிலையின் மாற்றம் பற்றிய அந்தப் பேச்சு, தேவனுடைய கிரியையுடன் தொடர்புகொண்டுள்ளது; இந்த இரண்டையும் பிரிப்பதற்கான நேரம் எதுவும் இருப்பதில்லை. மனுஷனின் நடைமுறையானது படிப்படியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால், மனுஷனிடத்தில் தேவன் கேட்டுக்கொள்ளும் கோரிக்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன, மற்றும் தேவனின் கிரியையானது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனுஷனின் நடைமுறையானது கோட்பாட்டில் அகப்பட்டிருந்தால், அவன் தேவனுடைய கிரியை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை பறிக்கப்பட்டவனாக இருக்கிறான் என்பதை இது நிரூபிக்கிறது; மனுஷனின் நடைமுறை ஒருபோதும் மாறாது அல்லது ஆழமாகச் செல்லாது என்றால், மனுஷனின் நடைமுறையானது மனுஷனின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்படுகிறது, மற்றும் அது சத்தியத்தின் நடைமுறையல்ல என்பதை நிரூபிக்கிறது; மனிதன் மிதித்துச் செல்வதற்குப் பாதை எதையும் கொண்டிருப்பதில்லை என்றால், அவன் ஏற்கெனவே சாத்தானின் கைகளில் விழுந்து, சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறான், இது அவன் பொல்லாத ஆவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறான் என்று அர்த்தப்படுகிறது. மனுஷனின் நடைமுறை ஆழமாகச் செல்லவில்லை என்றால், தேவனுடைய கிரியை மேம்படாது, மற்றும் தேவனுடைய கிரியையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், மனுஷனின் பிரவேசித்தல் ஒரு நிறுத்தத்திற்கு வரும்; இது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. தேவனுடைய எல்லாக் கிரியையினூடாகவும், மனுஷன் எப்போதுமே யேகோவாவின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க வேண்டியிருந்தால், பின்பு தேவனுடைய கிரியை முன்னேற முடியாது, முழுயுகத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருதலுக்கான சாத்தியக்கூறு மிகக் குறைவானதாகவே இருக்கும். மனிதன் எப்பொழுதும் சிலுவையைப் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் மனத்தாழ்மையையும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தால், தேவனின் கிரியை தொடர்ந்து முன்னேறுவது சாத்தியமற்றதாக இருக்கும். நியாயப்பிரமாணத்தில் மாத்திரம் நிலைத்திருக்கும் ஜனங்கள் மத்தியிலோ, அல்லது சிலுவையை மாத்திரம் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் தாழ்மையையும் கடைப்பிடிக்கிறவர்கள் மத்தியிலோ, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தலானது எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட இயலாது. அதற்குப் பதிலாக, தேவனுடைய நிர்வாகக் கிரியை முழுவதும் கடைசிநாட்களில் உள்ளவர்கள், தேவனை அறிகிறவர்கள், சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்டவர்கள், மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டவர்கள் மத்தியில் முடிக்கப்பட்டு இருக்கிறது. இது தேவனுடைய கிரியையின் தவிர்க்க முடியாத வழிமுறையாக இருக்கிறது. மத தேவாலயங்களில் இருப்பவர்களின் நடைமுறை காலாவதியானது என்று கூறப்பட்டிருக்கிறது ஏன்? ஏனென்றால், அவர்கள் கடைப்பிடிப்பது இன்றைய நாட்களின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. கிருபையின் காலத்தில், அவர்கள் கடைப்பிடித்தது சரியானதாக இருந்தது, ஆனால் அந்தக் காலம் கடந்து சென்றுள்ளது, மற்றும் அவர்கள் கடைப்பிடித்தது படிப்படியாகக் காலாவதியாகியுள்ளது. இது புதிய கிரியையினால் மற்றும் புதிய வெளிச்சத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் தொடக்ககால அஸ்திபாரத்தின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பலபடிகள் ஆழமாக முன்னேறியிருக்கின்றது. இருப்பினும், அந்த மக்கள் இன்னும் தேவனுடைய கிரியையின் ஆரம்பக் கட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள், மற்றும் பழைய நடைமுறைகள் மற்றும் பழைய வெளிச்சத்துடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளிலேயே தேவனுடைய கிரியை பெரிதும் மாறக்கூடும், எனவே 2,000 ஆண்டுகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்காதா? மனிதனுக்குப் புதிய வெளிச்சமோ நடைமுறையோ இல்லையென்றால், அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடர்ந்து கடைபிடிக்கவில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறது. இது மனுஷனின் தோல்வியாக இருக்கிறது; தேவனுடைய புதிய கிரியை இருப்பது மறுதலிக்கப்படமுடியாதது, ஏனென்றால், முன்பு பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தவர்கள் இன்று, காலாவதியான நடைமுறைகளில் இன்னமும் நிலைத்து இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதுமே முன்னோக்கி நகர்கின்றது, பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறவர்கள் எல்லோரும் கூட படிப்படியாக ஆழமாக முன்னேறவும் மற்றும் மாற்றம் அடையவும் வேண்டும். அவர்கள் ஒரே கட்டத்தில் நின்று விடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள் மட்டுமே அவருடைய தொடக்ககாலக் கிரியையிலேயே தங்கியிருப்பார்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கீழ்ப்படியாமையோடு இருக்கிறவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். மனுஷனின் நடைமுறையானது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையுடன் இணக்கமாக இல்லாதிருந்தால், பின்பு மனுஷனின் நடைமுறை நிச்சயமாக இன்றையநாட்களின் கிரியையில் இருந்து துண்டிக்கப்படுகிறது, மற்றும் அது இன்றைய நாட்களின் கிரியைக்கு நிச்சயமாகவே முரண்பாடானதாக இருக்கிறது. காலத்திற்குப் பொருந்தாத இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் திறனற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறுதியாகத் தேவனுக்குச் சாட்சியாக நிற்கும் ஜனங்களாக முடிவதில்லை. மேலும், முழு நிர்வாகக் கிரியையும், இப்படிப்பட்டதொரு ஜனக்கூட்டத்தின் மத்தியில் முடிக்கப்பட இயலாது. ஏனெனில் ஒருகாலத்தில் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைப் பற்றியிருந்தவர்களும், மற்றும் ஒருகாலத்தில் சிலுவைக்காகப் பாடுகளை அனுபவித்தவர்களும், கடைசிநாட்களில் நடக்கும் கிரியையின் கட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் செய்ததெல்லாம் வீணானதும் மற்றும் பயனற்றதுமாகிவிடும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய மிகத்தெளிவான வெளிப்பாடு இப்போது ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது, அது கடந்தகாலத்தைப் பற்றிக் கொண்டிருப்பதில்லை. இன்றைய கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் இன்றைய நடைமுறையிலிருந்து பிரிந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்ப்பவர்களாக மற்றும் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய தற்போதைய கிரியையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தின் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இவர்கள் அறிவதில்லை என்பது மறுக்கப்பட இயலாது. மனுஷனின் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள், நடைமுறையில் கடந்தகாலத்திற்கும் இன்றைய நாட்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், முந்தைய காலத்தில் இந்த நடைமுறை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது, இன்று அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கான இந்த எல்லாப் பேச்சும் இருப்பது ஏன்? மனுஷனின் நடைமுறையில் இப்படிப்பட்ட பிரிவினைகள் எப்போதும் பேசப்படுகின்றன, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டுள்ளது, இவ்விதமாகவே மனுஷனின் நடைமுறை நிலையாக மாறவேண்டியதிருக்கின்றது. மனுஷன் ஒரு கட்டத்திலேயே சிக்கிக்கொண்டால், தேவனின் புதிய கிரியை மற்றும் புதிய வெளிச்சத்தைக் கடைப்பிடிக்க அவனால் இயலாது என்பதை இது நிரூபிக்கிறது; தேவனின் ஆளுகைத் திட்டம் மாறியிருக்கவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருப்பவர்கள் எப்போதுமே தாங்கள் சரியானவர்களாய் இருக்கிறதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களுக்குள் தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே நின்றுவிட்டது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களிடமிருந்து இல்லாதே போயிருக்கிறது. தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே அவர் தமது புதிய கிரியையை முடிக்க நோக்கங் கொண்டுள்ள வேறொரு ஜனக்கூட்டத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. ஏனென்றால், மதத்தில் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் கடந்தகாலத்தின் பழைய கிரியையை மட்டுமே பற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு தேவன் இந்த ஜனங்களைக் கைவிட்டுவிட்டார், மற்றும் இந்தப் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஜனங்கள்மீது அவருடைய புதிய கிரியையைச் செய்கின்றார். இவர்கள்தான் அவருடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த வழியில் மட்டுமே அவருடைய நிர்வகித்தல் நிறைவேற்றப்பட முடியும். தேவனுடைய நிர்வகித்தல் எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை எப்போதும் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது. தேவன் எப்பொழுதும் கிரியை செய்து கொண்டிருக்கின்றார், மற்றும் மனுஷன் எப்போதுமே தேவை உள்ள நிலையில் இருக்கிறான், இப்படியாக இருவருமே தங்கள் உச்சத்தை அடைகின்றார்கள், மற்றும் தேவனும் மனிதனும் முழுமையான ஒருங்கிணைப்பை அடைகின்றார்கள். இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான வெளிப்பாடாக இருக்கின்றது, மற்றும் இது தேவனுடைய முழு நிர்வகித்தலின் இறுதிவிளைவாக இருக்கின்றது.
தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் தொடர்பாக மனுஷனிடம் வைக்கப்படும் கோரிக்கைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் சிட்சை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழ், பரிசுத்த ஆவியானவரின் எந்தக் கிரியையும் இல்லாமல் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கிறார்கள். இந்தப் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் ஒத்துழைக்க இயலாதவர்களாக, மற்றும் இந்த நேரத்தில் தேவனால் கோரப்படும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், பின்பு அவர்கள் சிட்சிக்கப் படுவார்கள், மற்றும் மோசமான நிலையில் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் வாழ்வார்கள், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெறுவார்கள். சத்தியத்தைக் கைக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒளியூட்டப்படுகிறார்கள், மற்றும் சத்தியத்தைக் கைக்கொள்ள விரும்பாதவர்கள் பரிசுத்த ஆவியினால் சிட்சிக்கப் படுகிறார்கள், மற்றும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் கூட நடைபெறலாம். அவர்கள் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருக்கிறார்கள் என்றால், தேவனுடைய நாமத்திற்காக அவருடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் தேவன் பொறுப்பு எடுத்துக்கொள்வார். அவருடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்க விருப்பமாய் இருப்பவர்கள் யாவரும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்; அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் அவருடைய தண்டனையைப் பெறுவார்கள். புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களே பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் புதிய கிரியையை ஏற்றுக்கொண்டதால், அவர்கள் தேவனுடன் சரியான முறையில் ஒத்துழைக்க வேண்டும், தங்கள் கடமையைச் செய்யாத கலகக்காரர்களாகச் செயல்படக்கூடாது. இது மனிதனிடத்தில் தேவன் வைக்கும் ஒரே கோரிக்கையாக இருக்கின்றது. புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு அவ்வாறு இல்லை: அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே உள்ளனர், பரிசுத்த ஆவியின் சிட்சை மற்றும் கடிந்துகொள்ளுதல் ஆகியவை அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதில்லை. நாள் முழுவதும், இந்த மக்கள் மாம்சத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் மனதிற்குள் வாழ்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சுய மூளையின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டின் படியானதாக உள்ளது. இது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையினால் கேட்கப்பட்டதாக இருப்பதில்லை, இது தேவனுடனான ஒத்துழைப்பாகவும் இருப்பதில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழந்தவர்களாக இருக்கிறார்கள், மேலும், தேவனுடைய ஆசீர்வாதங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இல்லாதவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வார்த்தைகளும் கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய கடந்தகால கோரிக்கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன; அவை சத்தியம் என்பதாக இருப்பதில்லை, அவை கோட்பாடாகவே உள்ளன. இந்த ஜனங்கள் ஒன்றாகக் கூடுவது மதத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நிரூபிக்க இத்தகைய கோட்பாடும் ஒழுங்குமுறையும் போதுமானவைகளாக இருக்கின்றன; இவை தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருப்பதில்லை, அல்லது தேவனுடைய கிரியையின் இலக்குகளாக இருப்பதில்லை. இவர்கள் அனைவரின் மத்தியிலான கூடுகையானது மதத்தின் மாபெரும் கூடுகை என்று மட்டுமே அழைக்கப்பட முடியும், மற்றும் அது சபை என்று அழைக்கப்பட முடியாது. இது மாற்ற முடியாத உண்மையாக உள்ளது. இவர்களிடம் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியை இல்லை; இவர்கள் செய்வது மதத்தின் தொடர்பை நினைவூட்டுவதாகக் காணப்படுகிறது, இவர்கள் வாழ்வது எதுவோ, அது மதத்தினால் நிரம்பியதாகத் தெரிகிறது; இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் கிரியையைக் கொண்டிருக்கவில்லை, பரிசுத்த ஆவியின் சிட்சை அல்லது ஒளியூட்டப்படுதலைப் பெறுவதற்கு இவர்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை. இந்த மக்கள் அனைவரும் உயிரற்ற சடலங்களாக உள்ளனர், மற்றும் ஆவிக்குரிய தன்மையற்ற புழுக்களாக இருக்கிறார்கள். மனுஷனின் கலகம் மற்றும் எதிர்ப்பைப் பற்றி இவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, மனுஷனின் எல்லாப் பொல்லாங்கு செய்தல் பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, தேவனுடைய கிரியை பற்றிய யாவற்றையும் மற்றும் தேவனுடைய தற்போதய சித்தத்தையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அறியாமையுள்ள, கீழ்மட்ட ஜனங்களாய் இருக்கிறார்கள், மற்றும் இவர்கள் விசுவாசிகள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்ற நுரை போன்று பயனற்றவர்களாய் இருக்கிறார்கள்! இவர்கள் செய்யும் எதுவும் தேவனுடைய நிர்வகித்தலின் எவ்விதமான தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை, இது தேவனுடைய திட்டங்களையும் பாதிக்க முடியாது. இவர்களின் சொற்களும் செயல்களும் மிகவும் அருவருப்பானவையாக, மிகவும் பரிதாபகரமானவையாக, மற்றும் குறிப்பிடத் தகுதியற்றவையாக உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்களால் செய்யப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் காரணமாக, இவர்கள் என்ன செய்தாலும், இவர்கள் பரிசுத்த ஆவியின் சிட்சையின்றி இருக்கிறார்கள், மேலும், பரிசுத்த ஆவியானவரின் ஒளியூட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் மாம்சத்தின்படி நடந்துகொண்டு, தேவனுடைய அடையாளப் பலகையின் கீழ் தங்களைப் பிரியப்படுத்துபவை எவைகளோ அவைகளையே செய்கிறதால் இவர்கள் பொல்லாங்கு செய்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவன் கிரியை செய்கையில், இவர்கள் வேண்டுமென்றே அவரிடம் பகைமை உணர்வுடன் இருக்கிறார்கள், மற்றும் அவருக்கு நேர் எதிர்த்திசையில் ஓடுகிறார்கள். தேவனுடன் ஒத்துழைக்க மனுஷனின் தோல்வியானது தன்னிலேயே மிகவும் கலகத்தனமாக இருக்கிறது, எனவே வேண்டுமென்றே தேவனுக்கு எதிராக ஓடுகிற மக்கள் குறிப்பாக அவர்களுக்கான நியாயமான தண்டனையைப் பெறாதிருப்பார்களா? இந்த ஜனங்களின் பொல்லாங்கான செய்கை பற்றி குறிப்பிடுகையில், சிலர் இவர்களைச் சபிக்க ஆர்வமாக உள்ளனர், அதேசமயம் தேவன் இவர்களைப் புறக்கணிக்கின்றார். மனிதனைப் பொறுத்தவரை, இவர்களின் செயல்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றியவையாகத் தோன்றுகின்றன, ஆனால் உண்மையில், தேவனைப் பொறுத்தவரை, இவர்கள் அவருடைய நாமத்துடனோ அல்லது அவருக்கான சாட்சியத்துடனோ எந்தவிதமான தொடர்பும் கொண்டிருப்பதில்லை. இந்த ஜனங்கள் என்ன செய்தாலும், அது தேவனுடன் தொடர்பற்றதாக உள்ளது: இது அவருடைய நாமத்திற்கும் அவருடைய தற்போதைய கிரியைக்கும் தொடர்பற்றதாக உள்ளது. இந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள், மற்றும் சாத்தானை வெளிப்படுத்துகிறார்கள்; இவர்கள் கோபாக்கினையின் நாளுக்காக வைக்கப்பட்டிருக்கும் பொல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இன்று, இவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், அத்துடன் இவர்கள் தேவனுடைய நிர்வகித்தலைத் தடுக்காதிருந்து மற்றும் தேவனுடைய புதிய கிரியையுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றால், இத்தகைய ஜனங்கள் அதனுடன் தொடர்புடைய பழிவாங்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், ஏனென்றால் கோபாக்கினையின் நாள் இன்னும் வரவேண்டியதாக இருக்கிறது. தேவன் ஏற்கெனவே இவர்களைச் சரிகட்டியிருக்க வேண்டும் என்று ஜனங்கள் அதிகமாகவே நம்புகிறார்கள், மற்றும் அந்தப் பொல்லாங்கு செய்பவர்கள் முடிந்தவரை விரைவில் தங்கள் செய்கைகளுக்குத் தக்க தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேவனுடைய நிர்வாகக் கிரியை இன்னும் முடிவுக்கு வரவில்லை, மற்றும் கோபாக்கினையின் நாள் இனிமேல் வந்தடைய வேண்டியிருக்கிறது என்பதால், அநீதியுள்ளவர்கள் இன்னும் தங்கள் அநீதியான கிரியைகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். சிலர், “மதத்தில் இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் அல்லது கிரியை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய நாமத்தின்மீது அவமானத்தைக் கொண்டு வருகிறார்கள்; எனவே, அவர்களின் அடக்கப்படாத நடத்தையை இன்னும் பொறுத்துக்கொள்வதற்கு மாறாக தேவன் அவர்களை ஏன் அழிக்கவில்லை?” என்று கூறுகிறார்கள். சாத்தானின் வெளிப்பாடு மற்றும் மாம்சத்தை வெளிப்படுத்தும் இந்த ஜனங்கள், அறியாமையுள்ளவர்களாக, கீழ்த்தரமான ஜனங்களாக இருக்கிறார்கள்; இவர்கள் அபத்தமான ஜனங்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் மத்தியில் தேவன் தம்முடைய கிரியையை எவ்வாறு செய்கின்றார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்னர் அவர்கள் தேவனுடைய கோபத்தின் வருகையைக் காணமாட்டார்கள், மற்றும் அவர்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அந்தப் பொல்லாதவர்கள் அனைவரும் தங்கள் செய்கைக்கு ஏற்ற தண்டனையைப் பெறுவார்கள், கோபாக்கினையின் நாளில் இவர்களில் ஒருவர் கூட தப்பிக்க முடியாது. இப்போது மனிதனின் தண்டனைக்கான நேரம் அல்ல, ஆனால் தேவனின் ஆளுகையை சீர்குலைக்கும் நபர்கள் இல்லாத பட்சத்தில், இது ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கான நேரமாக இருக்கின்றது, அந்த விஷயத்தில் அவர்கள் செய்யும் செயல்களின் தீவிரத்தின் அடிப்படையில் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மனிதகுலத்தைத் தேவன் நிர்வகிக்கின்றபோது, பரிசுத்த ஆவியனவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் அனைவரும் தேவனுடன் ஓர் உறவைக் கொண்டுள்ளனர். பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுபவர்கள், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறார்கள், மற்றும் அவர்கள் கடைப்பிடிப்பது தேவனுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொண்டு தேவனுடன் ஒத்துழைப்பவர்கள் மட்டுமே தேவனுடன் உறவுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனின் கிரியை அதை ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் எல்லா மக்களையும் அது இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தேவனால் செய்யப்படும் கிரியையானது எப்போதுமே ஒரு குறிக்கோளைக் கொண்டிருக்கும், அது விருதாவாக செய்யப்படுவதில்லை. சாத்தானுடன் இசைவிணக்கம் கொண்டுள்ளவர்கள் தேவனுக்குச் சாட்சியம் கொடுக்கத் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் தேவனுடன் ஒத்துழைக்கப் பொருத்தமாயிருப்பதில்லை.
பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மனுஷனின் சாட்சியமும் தேவைப்படுகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுக்கும் சாத்தானுக்கும் மத்தியிலான ஒரு யுத்தமாக இருக்கின்றது, சாத்தான் இந்த யுத்தத்தின் இலக்காக இருக்கிறான், அதேவேளையில் மனுஷன் இந்தக் கிரியையினால் பரிபூரணப்படுத்தப்படும் ஒருவனாக இருக்கிறான். தேவனின் கிரியை பலன் கொடுக்குமா அல்லது கொடுக்காதா என்பது தேவனுக்கு மனுஷன் அளிக்கும் சாட்சியத்தைச் சார்ந்துள்ளது. தேவன் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இந்தச் சாட்சியைக் கேட்கிறார்; இது சாத்தானுக்கு முன்பாகச் செய்யப்பட்ட சாட்சியமாகும், மற்றும் இது அவருடைய கிரியையின் விளைவுகளுக்கும் சான்றாகும். தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. இவ்விதமாக, மனுஷன் “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்ற உண்மையைப் பற்றிக்கொள்கிற வரையில், தேவனுடைய நிர்வாகக் கிரியை, படிப்படியாகத் தனது உச்சத்தை அடைகின்றது, இந்த வழியில் மனுஷன் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் போன்றே, அவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகின்றன. மனுஷன் தேவனுடன் உண்மையிலேயே எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கக் கூடுமோ, அவ்வளவு அதிகமாக தேவன் மகிமை அடைகிறார். மனிதனின் ஒத்துழைப்பு என்பது அவன் கொடுக்க வேண்டிய சாட்சியாக உள்ளது, மற்றும் அவன் கொடுக்கிற சாட்சியம் மனிதனின் நடைமுறையாக உள்ளது. ஆகையால், தேவனுடைய கிரியை சரியான விளைவை ஏற்படுத்துமா இல்லையா, மற்றும் உண்மையான சாட்சியம் இருக்க முடியுமா இல்லையா என்பது பிரிக்க இயலாத வகையில் மனுஷனின் ஒத்துழைப்பு மற்றும் மனுஷனின் சாட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரியை முடிக்கப்படுகின்றபோது, அதாவது, தேவனுடைய நிர்வகித்தல் அனைத்தும் அதன் முடிவை எட்டுகின்றபோது, மனுஷன் உயர்ந்த சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவான், மேலும் தேவனுடைய கிரியை முடிவடையும்போது, மனுஷனின் நடைமுறையும் பிரவேசமும் அவற்றின் உச்சத்தை அடையும். கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்த மூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வருகிறபோது, தேவனுடைய கிரியை அதன் முடிவை எட்டியிருக்கும், மேலும் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களை அடைவதற்குத் தேவனுடனான மனுஷனுடைய ஒத்துழைப்பு இனி இருக்காது, மற்றும் மனிதகுலம் முழுவதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள், மற்றும் அப்போதில் இருந்து, தேவனுக்கு எதிரான கலகமோ எதிர்ப்போ இருக்காது. மனுஷனிடம் தேவன் எந்தக்கோரிக்கைகளையும் வைக்க மாட்டார், மற்றும் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் இன்னும் அதிகமாக இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும், இது மனுஷனும் தேவனும் ஒன்றாக இருக்கும் ஒரு வாழ்வாகும், தேவனுடைய நிர்வகித்தல் முடிந்த பின்பு மற்றும் மனுஷன் சாத்தானின் பிடியிலிருந்து தேவனால் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு வரும் வாழ்வாகும். தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்ற முடியாதவர்கள் இத்தகைய வாழ்க்கையை அடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இருளில் தாழ்த்திக் கொண்டிருப்பார்கள், அங்கே அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருப்பார்கள்; அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவரைப் பின்பற்றாதவர்கள், அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவருடைய எல்லாக் கிரியைக்கும் கீழ்ப்படியாதவர்கள். மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவேண்டும்; அவன் “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற” வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிமைத்தன இயல்புடன் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் நீக்கிப்போடப் பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவன் புதிய கிரியையைத் தொடங்குவார், ஒவ்வொரு காலகட்டத்திலும், மனுஷர்களிடையே ஒரு புதிய தொடக்கம் இருக்கும். அந்தந்த யுகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சத்தியங்களான “யேகோவாவே தேவனாக இருக்கின்றார்” மற்றும் “இயேசுவே கிறிஸ்துவாக இருக்கின்றார்” என்ற சத்தியங்களில் மாத்திரம் மனுஷன் நிலைத்திருந்தால், மனுஷன் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடரமாட்டான், மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்திக் கொள்ள இயலாதவனாகவே இருப்பான். தேவன் எவ்விதமாகக் கிரியை செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் சற்றும் சந்தேகம் இன்றிப் பின்தொடர்கிறான், மற்றும் அவன் நெருக்கமாகப் பின்தொடர்கிறான். இந்த வழியில், பரிசுத்த ஆவியானவரால் மனுஷனை எவ்வாறு புறம்பாக்கிப்போட முடியும்? தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று மனுஷன் உறுதியாக நம்புகிறவரை, மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் எந்தவிதமான ஐயப்பாடுகளுமின்றி ஒத்துழைக்கும் வரை, தேவனுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறவரை, அவன் தண்டிக்கப்படக் கூடுவது எப்படி? தேவனுடைய கிரியை ஒருபோதும் ஒழிந்து போவதில்லை, அவருடைய அடிச்சுவடுகள் ஒருபோதும் நின்றுபோயிருக்கவில்லை, அவருடைய நிர்வாகக் கிரியையை முடிப்பதற்கு முன்பு, அவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றார், மற்றும் அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆனால் மனிதன் வேறுபட்டவனாக இருக்கிறான்: பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய சிறு அளவை ஆதாயப்படுத்தியுள்ள நிலையில், அது ஒருபோதும் மாறாது என்பது போன்று அதை அவன் நடத்துகிறான்; கொஞ்சம் அறிவை பெற்றுக்கொண்ட நிலையில் அவன், தேவனுடைய புதிய கிரியையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முன்வருவதில்லை; தேவனின் ஒரு சிறிய கிரியையைக் கண்டாலும், அவன் உடனடியாகத் தேவனைக் குறிப்பிட்ட ஒரு மரச்சிற்பமாகப் பரிந்துரைக்கிறான், மற்றும் தனக்கு முன்பாகக் காணும் இந்த வடிவத்திலேயே தேவன் எப்போதும் இருப்பார் என்று நம்புகிறான், இது கடந்த காலங்களில் இதைப் போன்றதாக இருந்தது, மற்றும் எதிர்காலத்திலும் எப்போதும் இவ்வாறே இருக்கும்; மனுஷன் மேலோட்டமான அறிவைப் பெற்றிருந்தாலும், அவன் தன்னையே மறக்கும் அளவுக்கு மிகுந்த கர்வம் கொண்டு, ஒரு மனநிலையையும் மற்றும் இருப்பையும் கொண்டிராத ஒரு தேவனைப் பொறுப்பற்ற வகையில் பறைசாற்றத் தொடங்குகிறான்; மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய ஒரு கட்டத்தைப்பற்றி நிச்சயப்படுத்திக் கொண்ட நிலையில், தேவனுடைய புதிய கிரியையைப் பறைசாற்றுபவர் எவ்வகைப்பட்ட நபராக இருந்தாலும், மனுஷன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்களாக உள்ளனர்; இவர்கள் மிகவும் பழமைவாதிகளாக உள்ளனர், மற்றும் புதிய விஷயங்களை ஏற்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நம்புகிறார்கள், ஆனால் தேவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். இஸ்ரவேலர் “யேகோவாவை மட்டுமே நம்பி, இயேசுவை நம்பாமல்” தவறானவர்களாய் இருந்தார்கள் என்று மனுஷன் நம்புகிறான், ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் “யேகோவாவை மட்டுமே நம்புகிறார்கள், இயேசுவை நிராகரிக்கிறார்கள்” மற்றும் “மேசியா திரும்பி வருவதற்கு ஏங்குகிறார்கள், ஆனால் இயேசு என்று அழைக்கப்படும் மேசியாவை எதிர்க்கவும் செய்கிறார்கள்” என்ற ஒரு பாத்திரத்தில் வெளிப்படையாகச் செயல்படுகிறார்கள். ஆகவே, பரிசுத்த ஆவியின் கிரியையின் ஒரு கட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் ஜனங்கள் சாத்தானின் களத்தில் வாழ்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை, மற்றும் அவர்கள் இன்னும் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறவில்லை. இது மனிதனின் கலகத்தன்மையின் விளைவாக இருக்கிறது அல்லவா? இன்றைய புதிய கிரியையைக் கடைப்பிடிக்காத உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் அதிர்ஷ்டம் பெறுவோம், தங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் தேவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயினும், தேவன் அவர்களை மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துச் செல்வார் என்பது ஏன் என்று அவர்களால் உறுதியாகச் சொல்லமுடியாது, அல்லது அவர்களை அழைத்துச் செல்ல இயேசு ஒரு வெண்மையான மேகத்தின்மீது ஏறி வருவார் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை, அவர்கள் கற்பனை செய்யும் நாளில் வெண்மையான மேகத்தின்மீது இயேசு உண்மையிலேயே வருவாரா என்பதை அவர்கள் கூறமுடியாது. அவர்கள் அனைவரும் பெருங்கவலைப் படுகிறார்கள், மற்றும் குழப்பத்தில் இருக்கிறார்கள்; ஒவ்வொரு சபைப் பிரிவையும் சேர்ந்த பலதரப்பட்ட சிறு ஜனக்கூட்டத்திலுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் எடுத்துக்கொள்வாரா என்று அவர்களுக்குத் தெரியாது. தற்போதைய யுகத்தில், இப்போது தேவன் செய்யும் கிரியை, தேவனுடைய சித்தம்—இந்த விஷயங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை, மற்றும் அவர்கள் தங்கள் விரல்களின் மீது நாட்களை இறங்கு வரிசையில் எண்ணுதல் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே இறுதியான ஆசீர்வாதத்தைப் பெறமுடியும், அதேசமயம் அதைக் கடைசிவரை பின்பற்ற முடியாமலே இன்னும் அனைத்தையும் பெற்றதாக நம்புகிற அந்த “புத்திசாலி ஜனங்கள்” தேவன் தோன்றுவதைக் காண இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பூமியில் புத்திசாலித்தனமான நபராயிருக்கிறதாக நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் தேவனுடைய கிரியையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறைத்து விடுகிறார்கள், மேலும் தேவன் அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று முழுமையான உறுதியுடன் நம்புவதாகத் தெரிகிறது, அவர்களே “தேவனிடம் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள், தேவனைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள்.” தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் “மிகுந்தவிசுவாசம்” கொண்டிருந்தாலும், அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் இன்னும் வெறுக்கத் தக்கவையாகவே உள்ளன, ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கிறார்கள், மேலும் வஞ்சகத்தையும் பொல்லாங்கையும் செய்கிறார்கள். கடைசிவரை பின்பற்றாதவர்கள், பரிசுத்த ஆவியின் கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் பழைய கிரியையை மட்டுமே பிடித்திருப்பவர்கள், தேவனுக்கு விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறியது மட்டுமல்லாமல், இதற்கு மாறாக, தேவனை எதிர்ப்பவர்கள் ஆகியுள்ளனர், புதிய யுகத்தால் நிராகரிக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப்படுபவர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களைவிட அதிகம் பரிதாபகரமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? பழைய நியாயப்பிரமாணத்தை நிராகரித்து புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாவரும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுகூடப் பலர் நம்புகிறார்கள். “மனசாட்சியை” பற்றி மட்டுமே பேசுகிற, மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியையை அறியாத இந்த ஜனங்கள், இறுதியில் தங்கள் சுய மனசாட்சியால் தங்கள் வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். தேவனுடைய கிரியை கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை, அது அவருடைய சொந்தக் கிரியையாக இருந்தாலும், தேவன் இன்னமும் அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறது இல்லை. மறுக்கப்படவேண்டியது மறுக்கப்படுகிறது, புறம்பாக்கப்படவேண்டியது புறம்பாக்கப்படுகிறது. ஆயினும், தேவனுடைய நிர்வகித்தலின் ஒரு சிறிய பகுதியை உறுதியாய்ப் பற்றிக் கொள்வதன் மூலம் மனுஷன் தன்னைத்தானே தேவனிடத்தில் பகைமையுள்ள இடத்தில் வைக்கிறான். இது மனிதனின் அபத்தமாயிருக்கிறது அல்லவா? இது மனிதனின் அறியாமையாயிருக்கிறது அல்லவா? ஜனங்கள் எவ்வளவு அதிகமாய் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல், மற்றும் இறுதி ஆசீர்வாதத்தைப் பெறமுடியாமல் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பயத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற மாட்டோமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள், அடிமைத்தனமாகப் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிற அந்த ஜனங்கள் அனைவரும் நியாயப்பிரமாணத்தின்மீது மிகுந்த விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாய் நியாயப்பிரமாணத்தை நோக்கித் தங்கள் விசுவாசத்தைக் காட்சிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்க்கிற கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இராஜ்யத்தின் காலமே இப்போதுள்ளது, நியாயப்பிரமாணத்தின் காலமல்ல, மற்றும் இன்றைய நாளின் கிரியை மற்றும் கடந்த காலத்தின் கிரியை ஆகியவை ஒரே மூச்சில் குறிப்பிடப்பட முடியாது, அல்லது கடந்த காலத்தின் கிரியை இன்றைய நாளின் கிரியையுடன் ஒப்பிடப்பட முடியாது. தேவனுடைய கிரியை மாறியுள்ளது, மனிதனின் நடைமுறையும் மாறியுள்ளது; இது நியாயப்பிரமாணத்தைப் பற்றிக்கொள்வதாகவோ அல்லது சிலுவையைச் சுமப்பதாகவோ இருப்பதில்லை, ஆகவே நியாயப்பிரமாணம் மற்றும் சிலுவை மீதான ஜனங்களின் விசுவாசம் தேவனின் அங்கீகாரத்தைப் பெறாது.
ராஜ்யத்தின் காலத்தில் மனிதன் முற்றிலும் முழுமையாக்கப்படுவான். ஜெயங்கொள்ளுதல் கிரியைக்குப்பின்பு, மனுஷன் சுத்திகரிப்பு மற்றும் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்படுவான். இந்த உபத்திரவத்தின்போது சாட்சியங்களை வென்று நிற்கக் கூடியவர்கள்தான் இறுதியில் முழுமையடைவார்கள்; அவர்களே ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த உபத்திரவத்தின்போது, மனுஷன் இந்தச் சுத்திகரிப்பை ஏற்கவேண்டும், மேலும் இந்தச் சுத்திகரிப்பு தேவனுடைய கிரியையின் கடைசி நிகழ்வாக உள்ளது. தேவனுடைய நிர்வாகக் கிரியைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்னர் மனுஷன் சுத்திகரிக்கப்படுவதற்கான கடைசிநேரமாக இது உள்ளது, மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இந்த இறுதிச் சோதனையை ஏற்கவேண்டும், மேலும் அவர்கள் இந்தக் கடைசிச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உபத்திரவத்தால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் தேவனுடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் உண்மையிலேயே ஜெயங்கொள்ளப்பட்டவர்களும், தேவனை உண்மையாக நாடுபவர்களும் இறுதியில் உறுதியாக நிற்பவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் மனிதத்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் தேவனை உண்மையாய் அன்புகூருகிறார்கள். தேவன் என்ன செய்தாலும், ஜெயங்கொண்ட இவர்கள் தரிசனங்களை இழக்கமாட்டார்கள், மற்றும் அவர்களின் சாட்சியத்தில் தவறாமல் சத்தியத்தை இன்னும் கடைப்பிடிப்பார்கள். இவர்கள்தான் பெரும் உபத்திரவத்திலிருந்து இறுதியாக வெளியே வருவார்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களால் இன்னமும் இன்றைய நாட்களை சார்ந்திருக்க முடியும் என்றாலும், கடைசி உபத்திரவத்திற்கு எவரொருவரும் தப்பிக்க இயலாது, மற்றும் எவரொருவரும் இறுதிச் சோதனைக்குத் தப்பிக்க இயலாது. ஜெயிப்பவர்களுக்கு, இத்தகைய உபத்திரவம் மிகப்பெரியதொரு சுத்திகரிப்பாக உள்ளது; ஆனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களுக்கு, இதுமுற்றிலுமாக புறம்பாக்கப்படும் கிரியையாக இருக்கிறது. தேவனை இருதயத்தில் வைத்திருப்பவர்கள் எப்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர்களின் பற்றுறுதி மாறாமல் இருக்கும்; ஆனால், இருதயத்தில் தேவனைக் கொண்டிராதவர்களுக்கு, தேவனுடைய கிரியை அவர்களின் மாம்சத்திற்குச் சாதகமாக இல்லாதிருந்தால், அவர்கள் தேவனைப்பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள், மற்றும் தேவனை விட்டு விலகிக்கூடப் போகிறார்கள். முடிவு பரியந்தம் உறுதியாய் நிலை நிற்காதவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுக்காகத் தங்களைச் செலவுபண்ணுவதற்கும் மற்றும் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதற்கும் விருப்பம் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவனுடைய கிரியை ஒரு முடிவுக்கு வருகின்றபோது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஜனங்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மற்றும் இவர்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மனிதப்பண்பு இல்லாத அவர்கள் உண்மையிலேயே தேவனை அன்புகூர முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழல் பாதுகாப்பாக மற்றும் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்போது அல்லது லாபம் ஈட்டப்படும்போது, அவர்கள் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது இறுதியாக மறுக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கலகம் செய்கிறார்கள். ஒரே ஓர் இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், “கனிவான” நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள். இந்தப் பேய்களை, கண்சிமிட்டாமல் கொல்லும் இந்தப் பேய்களை வெளியேற்றாவிட்டால், அவை மறைந்திருக்கும் ஆபத்தாக மாறாதா? ஜெயங்கொள்ளும் கிரியை முடிந்ததைத் தொடர்ந்து மனுஷனை இரட்சிக்கும் கிரியை அடையப்படவில்லை. ஜெயங்கொள்ளுதலுக்கான கிரியை முடிவுக்கு வந்தாலும், மனுஷனைச் சுத்திகரிக்கும் கிரியை முடிவுக்கு வரவில்லை; இப்படிப்பட்ட கிரியையானது, மனுஷன் முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட்டதும், தேவனுக்கு உண்மையாக அடிபணிந்தவர்கள் முழுமையாக்கப்பட்டதும், தங்கள் இருதயத்தில் தேவனற்று இருப்பவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டதும், மற்றும் தேவனற்றவர்களாக இருக்கிற அந்த வெளிவேடக்காரர்களின் இருதயம் சுத்திகரிக்கப்பட்டதும் முடிவடையும். அவருடைய கிரியையின் இறுதிக்கட்டத்தில் தேவனைத் திருப்திப்படுத்தாதவர்கள் முற்றிலுமாக புறம்பாக்கப்படுவார்கள், மற்றும் புறம்பாக்கப்படுபவர்கள் பிசாசினுடையவர்களாக உள்ளனர். அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது என்பதால், அவர்கள் தேவனுக்கு எதிரான கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த ஜனங்கள் இன்று தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் முடிவு பரியந்தம் நிலைநிற்பார்கள் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. “முடிவு பரியந்தம் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற வார்த்தைகளில், “பின்பற்றுதல்” என்ற வார்த்தை உபத்திரவத்தின் மத்தியில் உறுதியாக நிலைநிற்குதல் என்று அர்த்தம் கொண்டுள்ளது. இன்றைய நாட்களில், தேவனைப் பின்பற்றுதல் எளிதானதாக உள்ளது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் தேவனுடைய கிரியை முடிவடைய இருக்கும்போது, “பின்பற்றுதல்” என்பதன் உண்மையான அர்த்தத்தை நீ அறிவாய். வெற்றிபெற்ற பின்னரும் நீ இன்னும் தேவனைப் பின்பற்றக் கூடியவனாக இருக்கிறாய் என்பதால், பரிபூரணமாக்கப் படுபவர்களில் நீயும் ஒருவன் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள், உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள் இறுதியில் உறுதியாய் நிலைநிற்கக் கூடாதவர்களாக இருப்பார்கள் மற்றும் இறுதிவரை தேவனைப் பின்பற்ற இயலாதவர்களாக இருப்பார்கள். தேவனை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் கிரியையின் சோதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள், அதேசமயம் தேவனை உண்மையாகப் பின்பற்றாதவர்கள் தேவனின் எந்தவொரு சோதனையையும் தாங்கி நிற்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ புறம்பே தள்ளப்படுவார்கள், அதே நேரத்தில் ஜெயங்கொண்டவர்கள் ராஜ்யத்திற்குள் நிலைத்திருப்பார்கள். மனிதன் உண்மையிலேயே தேவனை நாடுகிறானா இல்லையா என்பது அவனது கிரியையின் சோதனையால், அதாவது தேவனின் சோதனைகளால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் மனிதன் தானே மேற்கொள்ளும் முடிவோடு இது எந்தத் தொடர்பும் கொண்டிருப்பது இல்லை. தேவன் எந்தவொரு நபரையும் ஒரு காரணமில்லாமல் நிராகரிக்கிறதில்லை; அவர் செய்கிற அனைத்தும் மனிதனை முற்றிலும் இணங்கப் பண்ணக்கூடும். மனிதனுக்குக் கண்ணால் காணமுடியாத எந்த விஷயத்தையும், அல்லது மனிதனை நம்பியிணங்கவைக்க முடியாத எந்தக் கிரியையையும் அவர் செய்கிறதில்லை. மனிதனின் நம்பிக்கை உண்மையா இல்லையா என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்றும் இது மனிதனால் தீர்மானிக்கப்பட முடியாது. “கோதுமையைக் களைகளாக மாற்ற முடியாது, மற்றும் களைகளைக் கோதுமையாக மாற்றமுடியாது” என்பது சந்தேகமற்றதாக உள்ளது. தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் அனைவரும் நிறைவாக ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள், தேவன் தம்மை உண்மையாக நேசிக்கும் எவரையும் தவறாக நடத்த மாட்டார். அவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயங்கொள்ளுகிறவர்கள் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களாகவோ அல்லது பின்பற்றுபவர்களாகவோ கிரியை செய்வார்கள், மற்றும் உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களின் சரீரமாவார்கள். பிரபஞ்சம் முழுவதும் சுவிசேஷத்தின் கிரியை முடிவுக்கு வருகிறபோது ஆசாரியர்களின் சரீரம் உருவாகும். அந்த நேரம் வருகிறபோது, மனுஷனால் செய்யப்பட வேண்டியது எதுவோ அதைத் தேவனுடைய ராஜ்யத்திற்குள் அவன் செய்யவேண்டியது மற்றும் ராஜ்யத்திற்குள் அவன் தேவனோடு சேர்ந்து வாழ்வதும் அவனது கடமையாகும். ஆசாரியர்களின் சரீரத்தில் பிரதான ஆசாரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் இருப்பார்கள், மீதமுள்ளவர்கள் தேவனுடைய மகன்களும் ஜனங்களுமாக இருப்பார்கள். உபத்திரவத்தின்போது அவர்கள் தேவனுக்கு அளித்த சாட்சியங்களால் இவை அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன; அவை காரணமின்றி கொடுக்கப்பட்ட பட்டங்களாக இருப்பதில்லை. மனுஷனின் நிலை நிறுவப்பட்டவுடன், தேவனுடைய கிரியை நின்றுவிடும், ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் இனத்தின்படி வகைப்படுத்தப்பட்டு அவர்களின் தொடக்ககால நிலைக்குத் திரும்புகின்றனர், மேலும் இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான அடையாளமாகும், இது தேவனுடைய கிரியையின் இறுதி பலனும் மனுஷனின் நடைமுறையுமாக உள்ளது, மற்றும் இது தேவனுடைய கிரியையின் தரிசனங்களின் பலனாக மற்றும் மனுஷனின் ஒத்துழைப்புமாக உள்ளது. முடிவில், மனுஷன் தேவனுடைய ராஜ்யத்தில் இளைப்பாறுதலைக் கண்டறிவான், தேவனும் இளைப்பாறுவதற்காக அவருடைய வாசஸ்தலத்திற்குத் திரும்புவார். இது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான 6,000 ஆண்டுகால ஒத்துழைப்பின் இறுதிவிளைவாக இருக்கும்.