ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 8

என் வெளிப்படுத்துதல்கள் அவற்றின் உச்சக்கட்டத்தை எட்டும்போது, மற்றும் என் நியாயத்தீர்ப்பு முடிவுக்கு வரும்போது, அதுவே என் மக்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டு பூரணமாக்கப்படும் நேரமாக இருக்கும். எனது நோக்கத்துடன் பொருந்துகிறவர்களையும், என்னால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவர்களையும் தொடர்ந்து தேடுவதில் நான் பிரபஞ்ச உலகின் எல்லா மூலைகளுக்கும் பயணம் செய்கிறேன். யார் எழுந்து வந்து எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பது? மனிதர்கள் என்னை நேசிப்பது மிகக் குறைவு, என்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பரிதாபகரமாக சிறியதாகவே இருக்கிறது. ஜனங்களின் பலவீனத்தில் நான் எனது வார்த்தைகளின் வலிமையைச் செலுத்தவில்லை என்றால், அவர்கள் பெருமைகொண்டு, மிகைப்படுத்தி அறிவுரை கூறுவார்கள், மேலும் அவர்கள் சர்வமும் அறிந்தவர்கள் மற்றும் பூமிக்குரிய சகல விஷயங்களையும் அறிந்தவர்கள் போல ஆர்ப்பாட்டமான கோட்பாடுகளுடன் வருவார்கள். கடந்த காலத்தில் எனக்கு “விசுவாசமாக” இருந்தவர்களிலும், இன்று எனக்கு முன்பாக “உறுதியாக நிற்கிறவர்களிலும்”, இன்னும் பெருமையுடன் பேசத் துணிந்தவர்கள் யார்? தங்களுடைய சொந்த வாய்ப்புகளுக்காக இரகசியமாக மகிழ்ச்சியடையாதவர்கள் யார்? நான் ஜனங்களை நேரடியாக அம்பலப்படுத்தாதபோது, அவர்களுக்கு மறைந்துகொள்ள எங்கும் இடமில்லை, அவமானத்தால் துன்புறுத்தப்பட்டார்கள். நான் வேறு விதமாகப் பேசியிருந்தால் அது இன்னும் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும்? ஜனங்கள் இன்னும் அதிகமாக, கடன்பட்ட உணர்வு கொண்டிருப்பார்கள், ஒன்றாலும் குணப்படுத்த முடியாது என்று நம்பி, அனைவரும் அவர்களின் செயலற்ற தன்மையால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பார்கள். ஜனங்கள் நம்பிக்கையை இழக்கும்போது, ராஜ்யத்தின் வணக்கத்துடன் அறிவிப்பு முறைப்படி ஒலிக்கிறது, அதாவது, ஜனங்கள் கூறியது போல, “ஏழு மடங்காக தீவிரமடைந்த ஆவியானவர் கிரியைச் செய்யத் தொடங்குகிற காலம்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜ்யத்தின் வாழ்வு அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும் காலம் இதுதான்; என் தெய்வீகம் நேரடியாகச் செயல்பட முன்வருகிற காலம் இதுவே (அதாவது மன ரீதியான “செயலாக்கம்” எதுவும் இல்லாமல்). எல்லா ஜனங்களும் ஏதோ ஒரு கனவிலிருந்து புத்துயிர் பெற்றிருந்ததைப் போல அல்லது ஒரு கனவிலிருந்து எழுப்பப்பட்டதைப் போலப் பரபரப்பாக விரைந்து செயல்படுகிறார்கள், மேலும் விழித்தெழும்போது, இதுபோன்ற சூழ்நிலைகளில் தாங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த காலத்தில், திருச்சபை கட்டப்படுவது குறித்து நான் அதிகம் கூறினேன்; நான் பல இரகசியங்களையும் வெளிப்படுத்தினேன், ஆனால் அந்தக் கிரியையானது உச்சத்தை எட்டியபோது, அது திடீரென ஒரு முடிவுக்கு வந்தது. இருப்பினும், ராஜ்யம் கட்டப்படுவது அதிலிருந்து வேறுபட்டது. ஆவிக்குரிய உலகில் நடைபெறும் யுத்தம் அதனுடைய இறுதிக் கட்டத்தை எட்டும்போதுதான் நான் பூமியின்மேல் புதிதாக எனது கிரியையைத் தொடங்குவேன். அதாவது, எல்லா மனிதர்களும் பின்னடைவின் விளிம்பில் இருக்கும்போதுதான் நான் எனது புதிய கிரியையை முறையாக ஆரம்பித்து எழுப்புவேன். ராஜ்யத்தைக் கட்டுவதற்கும் திருச்சபையைக் கட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், திருச்சபையைக் கட்டும் விஷயத்தில், தெய்வீகத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மனிதர் மூலம் நான் செயலாற்றினேன்; நான் மனிதர்களுடைய பழைய சுபாவத்தை நேரடியாகக் கையாண்டேன், அவற்றின் அசிங்கமான தன்மைகளை நேரடியாக வெளிப்படுத்தினேன், மற்றும் அவற்றின் சாராம்சத்தையும் வெளிப்படுத்தினேன். அதன் விளைவாக, இதன் அடிப்படையில் அவர்கள் தங்களை யாரென்று அறிந்துகொண்டார்கள், அதனால் அவர்கள் தங்கள் இருதயங்களிலும் வார்த்தைகளிலும் உறுதியடைந்தார்கள். ராஜ்யத்தைக் கட்டும் விஷயத்தில், நான் நேரடியாக என் தெய்வீகத்தின் மூலம் செயல்படுகிறேன், எல்லா ஜனங்களும் என்னிடத்தில் இருப்பதை அறிந்துகொள்ளும்படி உதவுகிறேன், மற்றும் என் வார்த்தைகளைப் பற்றிய அவர்களுடைய அறிவின் அஸ்திபாரத்தில் நான் இருக்கிறேன், இறுதியில் அவர்கள் மாம்சத்தில் வந்த அவதாரமாக என்னைப் பற்றிய அறிவைப் பெறும்படி அனுமதிக்கின்றேன். இதன் நிமித்தம் முழு மனிதகுலமும் கற்பனை தேவர்களைப் பின்தொடர்வது முடிவடைகிறது, மேலும் இதனால் அவர்கள் பரலோகத்திலுள்ள தேவனுக்காகத் தங்கள் இருதயங்களில் ஓர் இடத்தை வைத்திருப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள்; அதாவது, நான் மாம்ச அவதாரமாக இருக்கும்போது நான் செய்யும் செயல்களை மனிதகுலத்திற்கு தெரியப்படுத்துகிறேன், அப்படியே பூமியில் என் நேரத்தையும் முடிப்பேன்.

ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும் காரியம் ஆவிக்குரிய உலகத்தோடு நேரடியான நோக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது, ஆவிக்குரிய உலகத்தினுடைய யுத்தத்தின் நிலையானது எனது எல்லா ஜனங்களிடையேயும் நேரடியாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் இது திருச்சபைக்குள் மட்டுமின்றி, ராஜ்யத்தின் யுகத்திலும், இன்னும் அதிகமாக, ஒவ்வொரு நபரும் தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபடுகிறார் என்பதைக் காண்பிக்கிறது. அவர்களின் சரீர உடல்கள் இருந்தபோதிலும், ஆவிக்குரிய உலகம் நேரடியாக வெளிப்படுகிறது, மேலும் அவர்கள் ஆவிக்குரிய உலகத்தின் வாழ்க்கையோடு தொடர்புகொள்கின்றார்கள். எனவே, நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கத் தொடங்கும்போது, எனது கிரியையின் அடுத்தப் பகுதிக்கு நீங்கள் சரியாக தயாராக வேண்டும். உங்களுடைய இருதயத்தை முழுவதுமாக நீங்கள் கொடுக்க வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் எனது இருதயத்தைத் திருப்திபடுத்த முடியும். முன்பு திருச்சபையில் என்ன சம்பவித்தது என்பதைக் குறித்து நான் ஒன்றும் கவலைப்படவில்லை; இன்று, அது ராஜ்யத்தில் உள்ளது. எனது திட்டத்தின் ஒவ்வொரு படியிலும் சாத்தான் பின்னால் வந்து கொண்டிருக்கிறான், என் ஞானத்தின் பிரதிபலிப்புப் படலம் போல, எனது அசல் திட்டத்தைச் சீர்குலைப்பதற்கான வழிகளையும் மற்றும் முகாந்தரங்களையும் கண்டுபிடிக்க எப்போதும் முயற்சித்து வருகிறான். ஆயினும் அதன் மோசடித் திட்டங்களுக்கு நான் கீழடங்க முடியுமா? வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் என்னைச் சேவிக்கின்றன; சாத்தானின் வஞ்சகத் திட்டங்கள் வேறு எதுவாகவும் இருக்க முடியுமா? எனது ஞானம் துல்லியமாக ஊடறுக்கும் இடம் இதுதான்; இது துல்லியமாக எனது செயல்களைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது, மேலும் இது எனது முழு இரட்சிப்புத் திட்டத்தின் செயல்பாட்டிற்கான கொள்கையாகும். ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும் சகாப்தத்தில், நான் இன்னும் சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைத் தவிர்க்கவில்லை, ஆனால் நான் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்கிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாவற்றின் மத்தியில், நான் சாத்தானின் செயல்களை என் பிரதிபலிப்புப் படலமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது என் ஞானத்தின் வெளிப்பாடு இல்லையா? இது எனது கிரியையைப் பற்றித் துல்லியமாக ஆச்சரியப்படத்தக்கதாக இல்லையா? ராஜ்யத்தினுடைய யுகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பத்தில், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் முற்றிலும் மறுரூபமாக்கப்பட்டு, அவை கொண்டாடி மகிழ்கின்றன. நீங்கள் வேறுபட்டவரா? யாருடைய இதயத்தில் தேனின் மதுரம் இல்லை? மகிழ்ச்சியில் புரண்டோடாதவர் யார்? மகிழ்ச்சியுடன் நடனமாடாதவர் யார்? துதியின் வார்த்தைகளைப் பேசாதவர் யார்?

நான் மேலே கூறிய மற்றும் விவாதித்த அனைத்தின் நோக்கங்களையும் தோற்றத்தையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா, அல்லது புரிந்துகொள்ள வில்லையா? நான் இதைக் கேட்கவில்லை என்றால், நான் வெறுமனே பேசுவதாகப் பெரும்பாலான ஜனங்கள் நம்பக்கூடும், மேலும் எனது வார்த்தைகளின் ஆதாரத்தை ஆழ்ந்தறியாமல் போகக்கூடும். நீங்கள் அவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், அவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீ அவற்றை உன்னிப்பாக வாசிக்க வேண்டும்: எனது வார்த்தைகளில் உனக்கு பயனளிக்காதது எது? உன் வாழ்க்கை வளருவதற்குக் காரணமாக இல்லாதது எது? ஆவிக்குரிய உலகத்தின் யதார்த்தத்தைக் குறித்துப் பேசாதது எது? எனது வார்த்தைகளுக்கு எந்தவிதமான தருக்க விளக்கம் அல்லது காரணமும் இல்லை என்று பெரும்பாலான ஜனங்கள் நம்புகிறார்கள், அதனால் அவர்கள் விளக்கமும் வியாக்கியானமும் இல்லாமல் இருக்கிறார்கள். எனது வார்த்தைகள் மெய்யாகவே மிகவும் சுருக்கமாகவும் மற்றும் விவரிக்க முடியாதவைகளுமாக இருக்கின்றனவா? நீங்கள் உண்மையிலேயே என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் அவற்றைப் பொம்மைகளைப்போல நடத்தவில்லையா? உன் அசிங்கமான தோற்றத்தை மறைப்பதற்கு அவற்றை நீ ஆடைகளாகப் பயன்படுத்தவில்லையா? இந்தப் பரந்த உலகில், தனிப்பட்ட முறையில் யார் என்னால் ஆய்வு செய்யப்பட்டார்கள்? என் ஆவியின் வார்த்தைகளைத் தனிப்பட்ட முறையில் கேட்டவர்கள் யார்? அநேக ஜனங்கள் இருட்டில் தடவித் தேடுகிறார்கள்; அநேகர் கஷ்டங்களுக்கு மத்தியில் ஜெபிக்கிறார்கள்; பலர் பசியுடனும் குளிருடனும், நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்; பலர் சாத்தானால் கட்டுப்பட்டு இருக்கிறார்கள்; இன்னும் பலர் எங்கு திரும்புவது என்று தெரியாமல் இருக்கிறார்கள், பலர் தங்களுடைய மகிழ்ச்சிக்கு மத்தியில் எனக்குத் துரோகம் இழைக்கிறார்கள், பலர் நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் பலர் சாத்தானுடைய வஞ்சகத் திட்டங்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். உங்களில் யார் யோபு? பேதுரு யார்? நான் ஏன் யோபுவை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளேன்? நான் ஏன் பேதுருவைப் பல முறை குறிப்பிட்டுள்ளேன்? உங்களுக்கான என் நம்பிக்கைகள் என்ன என்பதை நீங்கள் எப்போதாவது உறுதிப்படுத்தியிருக்கிறீர்களா? இதுபோன்ற விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்க நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டும்.

பேதுரு எனக்குப் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை; யோபு கூட அவனுக்கு சமமானவன் அல்ல, யுகங்கள் முழுவதும், பரிசுத்தவான்கள் அனைவரும் பேதுருவைக் காட்டிலும் மிகக் குறைவுபட்டவர்களாகப் போனார்கள். அவன் என்னை அறிந்துகொள்ள முயன்றது மட்டுமல்லாமல், சாத்தான் அவனுடைய வஞ்சகத் திட்டங்களை மேம்படுத்திக் கொண்டிருந்த காலத்திலும் என்னை அறிந்துகொண்டான். இது பேதுருவைப் பல ஆண்டுகளாக எப்போதும் என் சித்தத்திற்கு ஏற்ப எனக்கு ஊழியம் செய்ய வழிவகுத்தது, இந்தக் காரணத்தினாலேயே, அவன் ஒருபோதும் சாத்தானால் அவனது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பேதுரு யோபுவினுடைய விசுவாசத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டான், அதேவேளையில் யோபுவின் குறைபாடுகளையும் தெளிவாக உணர்ந்துகொண்டான். யோபு மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவனாக இருந்தபோதிலும், ஆவிக்குரிய உலகிலுள்ள காரியங்களைப் பற்றிய அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது, எனவே அவன் யதார்த்தத்துடன் பொருந்தாத பல வார்த்தைகளைக் கூறினான்; இது யோபுவினுடைய அறிவு ஆழமற்றது மற்றும் முழுமையற்றது என்பதைக் காண்பிக்கிறது. ஆகையால், பேதுரு எப்போதுமே ஆவியின் உணர்வைப் பெறுவதில் கவனம் செலுத்தினான், மேலும் ஆவிக்குரிய உலகத்தின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தினான். இதன் விளைவாக, அவன் என் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்ள முடிந்தது என்பது மட்டுமின்றி, சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைப் பற்றி சிறிதளவு அறிவையும் கொண்டிருந்தான். இதன் காரணமாக, என்னைப் பற்றிய அவனது அறிவு யுகங்கள் முழுவதும் வேறு எவரையும் விட அதிகமாக வளர்ந்தது.

பேதுருவினுடைய அனுபவத்திலிருந்து, மனிதர்கள் என்னை அறிந்துகொள்ள விரும்புகிறார்களா என்று பார்ப்பது கடினமல்ல, அவர்கள் தங்கள் ஆவிகளுக்குள் கவனமாகப் பரிசீலனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீ ஒரு குறிப்பிட்ட தொகையை எனக்கு புறநிலையாக “அர்ப்பணிக்குமாறு” நான் கேட்கவில்லை; இது இரண்டாம் பட்சமானது. நீ என்னை அறியவில்லை என்றால், நீ பேசுகின்ற நம்பிக்கை, அன்பு, மற்றும் விசுவாசம் யாவும் மாயைகள் மட்டுமே; அவை குமிழிகளாக இருக்கின்றன, எனக்கு முன்பாகப் பெருமை பேசும், அதேவேளையில் தன்னைக் குறித்து அறியாத ஒருவனாக நீ மாறுவது உறுதி. இப்படி இருக்கும்போது, நீ மீண்டும் ஒரு முறை சாத்தானின் பிடிக்குள் சிக்கிக்கொள்வாய், பிறகு உன்னை நீயே விடுவித்துக் கொள்ள முடியாது; நீ கேட்டின் மகனாகவும் அழிவின் பொருளாகவும் மாறிவிடுவாய். இருப்பினும், நீ பாராமுகமாக என் வார்த்தைகளைக் கவனிக்காமல் இருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி நீ என்னை எதிர்க்கிறாய். இது உண்மை, நீ என்னால் தண்டிக்கப்பட்ட பல்வேறு மற்றும் பலதரப்பட்ட ஆவிகளை ஆவிக்குரிய உலகின் வாயில் வழியாகப் பார்க்க வேண்டும். அவற்றில் என் வார்த்தைகளை எதிர்கொண்டது, செயலற்றதல்லாதது, அக்கறையற்றது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் முரண்படாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்காதது எது? அவற்றில் தங்களைப் “பாதுகாத்துக்கொள்ள” என் வார்த்தைகளைத் “தற்காப்பு ஆயுதங்களாகப்” பயன்படுத்தாதது எது? அவர்கள் என் வார்த்தைகளின் உள்ளடக்கங்களை என்னை அறிந்துகொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை, மாறாக விளையாடுவதற்கான பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இதில், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கவில்லையா? என்னுடைய வார்த்தைகள் யார்? என்னுடைய ஆவி யார்? இதுபோன்ற கேள்விகளை நான் உங்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் அவைகளைப் பற்றிய உயர்ந்த மற்றும் தெளிவான நுண்ணறிவுகளைப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே அவற்றை அனுபவித்திருக்கிறீர்களா? நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்: நீங்கள் என் வார்த்தைகளை அறியவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவற்றைக் கடைபிடிக்காவிட்டால், பிறகு நீங்கள் தவிர்க்க முடியாதபடிக்கு என்னுடைய தண்டனைக்குரிய பொருட்களாக மாறிப்போவீர்கள்! நீங்கள் மெய்யாகவே சாத்தானுக்குப் பலியாகிப்போவீர்கள்!

பிப்ரவரி 29, 1992

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 6

அடுத்த: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 10

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக