ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 6

ஆவியானவரின் விஷயங்களைப் பற்றி புலனுணர்வுடன் இருங்கள், மற்றும் என் ஆவி மற்றும் என் இருப்பு, மற்றும் என் வார்த்தை மற்றும் என் இருப்பு ஆகியவற்றைப் பிரிக்க முடியாத முழுமையாகக் கருதும் உண்மையான திறன் கொண்ட என் வார்த்தையில் கவனம் செலுத்துங்கள், இதனால் எல்லா ஜனங்களும் என் முன்னிலையில் என்னைத் திருப்திப்படுத்த முடியும். அங்குள்ள அனைத்தின் மீதும் நான் கால் பதித்துள்ளேன், அண்டத்தின் பரந்த விரிவாக்கம் முழுவதையும் நான் பார்த்துள்ளேன், மற்றும் மனுஷர்களிடையே உள்ள இனிப்பையும் கசப்பையும் ருசித்துக்கொண்டே, நான் அனைத்து ஜனங்களிடையேயும் நடந்துள்ளேன்—இருப்பினும், மனுஷன் என்னை ஒருபோதும் உண்மையாக அறிந்ததில்லை, என் பயணத்தின்போது ஒருபோதும் அவன் என்னைக் கவனித்ததில்லை. ஏனென்றால் நான் அமைதியாக இருந்தேன், ஒருபோதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யவில்லை, யாரும் என்னை உண்மையாகப் பார்த்ததில்லை. இன்று கடந்தகாலத்தைப் போல் இல்லை: சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒருபோதும் பார்த்திராத காரியங்களை நான் செய்வேன், காலங்காலமாக ஒருபோதும் கேள்விப்படாத வார்த்தைகளைப் பேசுவேன், ஏனெனில், அனைத்து ஜனங்களும் என்னை மாம்சத்தில் அறிந்துகொள்ளும்படி கேட்கிறேன். இவை என்னுடைய நிர்வகித்தலின் படிநிலைகள், ஆனால் மனுஷனுக்கு இதனுடைய அறிவு சிறிதளவுகூட இல்லை. நான் வெளிப்படையாகப் பேசினாலும், ஜனங்கள் மனம் குழம்பியே இருக்கிறார்கள்; அதனை அவர்கள் புரிந்துகொள்வது கடினம். இது மனுஷனின் தாழ்மை நிலையல்லவா? துல்லியமாக, நான் சரிசெய்ய விரும்புவது இது அல்லவா? பல ஆண்டுகளாக, நான் மனிதரில் எதுவும் செய்யவில்லை; பல ஆண்டுகளாக, என் அவதார மாம்சத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த போதிலும், என் தெய்வீகத்தன்மையிலிருந்து நேரடியாக வெளிவந்த குரலை யாரும் கேட்கவில்லை. இவ்வாறு ஜனங்கள் வேறு வழி எதுவுமின்றி என்னைப் பற்றி தெரிந்து கொள்ளாதிருக்கிறார்கள், இருப்பினும் இது காலம் காலமாக அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பைப் பாதிக்கவில்லை. எவ்வாறாயினும், இன்று நான் உங்களிடத்தில் புரிந்துகொள்ள முடியாத மற்றும் அளவிட முடியாத அதிசயமான கிரியையைச் செய்திருக்கிறேன், மேலும் நான் பல வார்த்தைகளைப் பேசியுள்ளேன். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில், என் சமுகத்தில் என்னை நேரடியாக எதிர்க்கும் பலர் உள்ளனர். நான் இப்போது உனக்குச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.

தினமும் நீங்கள் தெளிவற்ற தேவனிடத்தில் ஜெபிக்கிறீர்கள், என் சித்தத்தைப் புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முயல்கிறீர்கள். இருப்பினும் என் வார்த்தைகளை எதிர்கொள்ளும்போது, நீங்கள் அவற்றை வித்தியாசமாகப் பார்க்கிறீர்கள்; நீங்கள் என் வார்த்தைகளையும் ஆவியையும் முழுமையாகக் கருதுகிறீர்கள், ஆனாலும் அவை என் ஆவியால் இயக்கப்படுகின்ற அத்தகைய வார்த்தைகளை உச்சரிக்க நான் அடிப்படையில் இயலாதவன் என்று நம்பி, என் இருப்பை ஒதுக்கித் தள்ளுகிறீர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் உனக்குத் தெரிந்தது என்ன? என் வார்த்தைகளை நீங்கள் ஒரு கட்டம் வரை நம்புகிறீர்கள், ஆனாலும்கூட நான் மாம்சத்தை அணிந்திருப்பதன் மீது மாறுபட்ட தீவிரத்தன்மையுடன் கருத்துக்கள் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதைப் படிக்க ஒவ்வொரு நாளும் செலவிடுகிறீர்கள், மேலும், “அவர் ஏன் அவ்விதம் செய்கிறார்? என்று சொல்கிறீர்கள். அவை உண்மையில் தேவனிடமிருந்து வந்தவையா? சாத்தியமே இல்லை! அவர் என்னைவிட பெரிய அளவில் வித்தியாசமாக இல்லை—அவர் ஓர் இயல்பான, சாதாரண மனிதர்.” அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு விளக்க முடியும்?

உங்களில் யார் மேற்கண்டவையைக் கொண்டிருக்கவில்லை? இதுபோன்ற விஷயங்களால் ஆக்கிரமிக்கப்படாதவர் யார்? உனது சொந்த சொத்தின் பகுதிகள் போலவும் அந்த விஷயங்களை நீ வைத்திருப்பது போலவும், அவற்றைச் சுதந்திரமாக விட்டுவிட ஒருபோதும் விரும்பவில்லை என்பது போலவும் தோன்றுகிறது. இன்னும் நீங்கள் உள்ளான முயற்சிகளைப் பின்தொடர்வதில்லை; அதற்குப் பதிலாக, அதை நானே செய்யவேண்டும் என்று காத்திருக்கிறீர்கள். உண்மையைச் சொல்வதாக இருந்தால், என்னைத் தேடாத எந்தவொரு நபரும் என்னை எளிதில் அறிந்து கொள்வதில்லை. இவை நான் உங்களுக்குக் கற்பிக்கும் அற்பமான சொற்கள் அல்ல. உன் குறிப்புக்கான மற்றொரு கண்ணோட்டத்தில் நான் உனக்கு மற்றொரு உதாரணத்தை வழங்க முடியும்.

பேதுரு பற்றிக் குறிப்பிடும்போது, ஜனங்கள் அவனைப் பற்றிச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு முடிவே இல்லை. அவன் தேவனை மறுதலித்த மூன்று முறையும், சாத்தானைச் சேவிப்பதன் மூலம் தேவனை எவ்வாறு சோதித்தான், இறுதியில் அவன் தேவனுக்காக எவ்வாறு தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டான், மற்றும் பலவற்றை அவர்கள் உடனடியாக நினைவுகூர்கிறார்கள். இப்போது நான், பேதுரு என்னை எப்படி அறிந்திருந்தான், அவனுடைய இறுதி முடிவு என்ன என்பது பற்றி உங்களுக்கு விவரிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன். பேதுரு நல்ல திறனுள்ளவன், ஆனால் அவனுடைய சூழ்நிலைகள் பவுலின் நிலைமைகளைப் போல இல்லை: அவனுடைய பெற்றோர் என்னைத் துன்புறுத்தினார்கள், அவர்கள் சாத்தானால் பீடிக்கப்பட்ட பேய்கள், இதன் விளைவாக அவர்கள் பேதுருவுக்கு தேவனைப் பற்றி எதுவும் கற்பிக்கவில்லை. பேதுரு புத்திசாலி, திறமையானவன், சிறு வயதிலிருந்தே அவனது பெற்றோரால் வாஞ்சையுடன் வளர்க்கப்பட்டான். ஆயினும், பெரியவனான பின்னர், அவன் அவர்களது விரோதியாக மாறினான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை, பின்னர் அவர்களுக்கு எதிராகத் திரும்பினான். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, வானமும் பூமியும் எல்லாமே சர்வ வல்லவரின் கைகளில் உள்ளன என்றும், எல்லா நேர்மறையான விஷயங்களும் தேவனிடமிருந்து வருகின்றன மற்றும் அவை சாத்தானால் செயல்படுத்தப்படாமல் அவரிடமிருந்து நேரடியாக வெளியிடப்படுகின்றன என்றும் அவன் நம்பினான். பேதுருவுடைய பெற்றோரின் மாறுபட்ட தனிப்பண்பானது என்னுடைய அன்பான இரக்கம் மற்றும் கருணை பற்றிய அதிக அறிவை அவனுக்குக் கொடுத்தது, இதனால் என்னைத் தேடுவதற்கான அவனது விருப்பத்தை உயர்த்தியது. அவன் என் வார்த்தைகளை ருசிப்பதிலும் குடிப்பதிலும் மட்டுமல்ல, மேலும், என் சித்தத்தைப் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தினான், மேலும் அவனது இருதயத்தில் எப்போதும் விழிப்புடன் இருந்தான். இதன் விளைவாக, அவன் எப்போதும் தனது ஆவியை உணர்ந்தவனாக இருந்தான், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் அவன் என் சொந்த இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான். தோல்வியில் சிக்கிக் கொள்வது பற்றிய ஆழ்ந்த அச்சத்துடன், தன்னைத் தானே ஊக்குவிப்பதற்கு, கடந்த காலங்களில் ஜனங்களின் தோல்விகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தான். ஆகவே, காலங்காலமாக தேவனை நேசித்த அனைவரின் விசுவாசத்தையும் அன்பையும் அவன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினான். இப்படியாக—எதிர்மறை அம்சங்களில் மட்டுமல்ல, மிக முக்கியமாக, நேர்மறையான அம்சங்களிலும்—அவன் மிக விரைவாக முன்னேறினான், இதனால் எனக்கு முன்பாக அவனுடைய அறிவு எல்லாவற்றிலும் மிகப் பெரியதாக மாறியது. அப்படியானால், அவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் எப்படி என் கையில் ஒப்படைத்தான், உணவு, உடை, தூக்கம் மற்றும் அவன் வாழ்ந்த இடம் பற்றிய முடிவுகளை எடுப்பதில் கூட அவன் எப்படி என்னைச் சரணடைந்தான் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது சிரமமில்லை, அதற்குப் பதிலாக எல்லாவற்றிலும் என்னைத் திருப்திப்படுத்தியதன் அடிப்படையில் எனது செல்வத்தை அனுபவித்தான். அவன் பாதி மரித்துப் போகும் படிக்கு—நான் அவனை எண்ணற்ற சோதனைகளுக்கு, இயற்கையாகவே சோதனைகளுக்கு உட்படுத்தினேன், ஆனால் இந்த நூற்றுக்கணக்கான சோதனைகளுக்கு மத்தியில், அவன் ஒருபோதும் என்மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை அல்லது என்னில் ஏமாற்றத்தை உணரவில்லை. நான் அவனைக் கைவிட்டேன் என்று நான் சொன்னபோதும், அவன் சோர்வடையவில்லை, ஒரு நடைமுறை வழியில் மற்றும் கடந்தகால நடைமுறைக் கொள்கைகளுக்கு ஏற்ப என்னைத் தொடர்ந்து நேசித்தான். அவன் என்னை நேசித்தாலும் நான் அவனைப் புகழ்ந்து பேச மாட்டேன், இறுதியில் அவனைச் சாத்தானின் கைகளில் தள்ளுவேன் என்று சொன்னேன். ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு இடையில், அவனுடைய மாம்சத்தின் மீது வராத ஆனால் வார்த்தைகளாக இருந்த சோதனைகளுக்கு இடையில், அவன் இன்னும் என்னிடம் ஜெபித்து, “தேவனே! வானம், பூமி மற்றும் எல்லாவற்றிலும், சர்வவல்லமையுள்ள உமது கைகளில் இல்லாத எந்த மனிதனும், எந்த உயிரினமும், அல்லது ஏதேனும் உள்ளதா? நீர் என்னிடம் இரக்கமாயிருக்கும்போது, உமது கருணையால் என் இருதயம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. நீர் என்னை நியாயந்தீர்க்கும்போது, நான் தகுதியற்றவனாக இருந்தாலும், உமது செயல்களின் புரிந்துகொள்ள முடியாத தன்மையைப் பற்றி நான் அதிகம் உணர்கிறேன், ஏனென்றால் நீர் அதிகாரமும் ஞானமும் பெற்று நிறைந்திருக்கிறீர்கள். என் மாம்சம் கஷ்டங்களை அனுபவித்தாலும், என் ஆவி ஆறுதலடைகிறது. உம்முடைய ஞானத்தையும் செயல்களையும் நான் எவ்வாறு புகழ்ந்து பேசாமல் இருக்க முடியும்? உம்மை அறிந்த பிறகு நான் மரித்தாலும், நான் எப்படி மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அதைச் செய்யாதிருக்க முடியும்? சர்வவல்லமை உடைய ஒருவரே! உம்மைப் பார்க்க என்னை அனுமதிக்க உண்மையிலேயே நீர் விரும்பவில்லையா? உமது தீர்ப்பைப் பெற நான் உண்மையில் தகுதியற்றவனா? நீர் பார்க்க விரும்பாத ஒன்று என்னுள் இருக்கக்கூடும் என்பதாலா?” இத்தகைய சோதனைகளின் போது, பேதுருவுக்கு என் சித்தத்தைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவன் என்னால் பயன்படுத்தப்படுவதில் பெருமையும் கௌரவமும் அடைந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது (மனிதகுலம் என் மகத்துவத்தையும் கோபத்தையும் காணும்படி அவன் என் தீர்ப்பைப் பெற்றிருந்தாலும்), இந்தச் சோதனைகளால் அவன் வருத்தப்படவில்லை. எனக்கு முன்பாக அவன் விசுவாசமாக இருந்ததாலும், அவனை நான் ஆசீர்வதித்ததாலும், அவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனுக்கு ஒரு முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் இருந்து வருகிறான். நீங்கள் பின்பற்ற வேண்டியது துல்லியமாக இது அல்லவா? பேதுருவைப் பற்றி நான் ஏன் இவ்வளவு நீண்ட விவரத்தைக் கொடுத்தேன் என்பதைப் பற்றி நீண்டதாகவும் கடினமாகவும் சிந்தியுங்கள்; இவை நீங்கள் செயல்படும் கொள்கைகளாக இருக்க வேண்டும்.

சிலர் என்னை அறிந்திருந்தாலும், நான் மனிதனின் மீது என் கோபத்தைக் கட்டவிழ்த்து விடவில்லை, ஏனென்றால் ஜனங்கள் மிகவும் குறைவுபட்டிருக்கிறார்கள், நான் அவர்களிடம் கேட்கும் அளவை அவர்கள் அடைவது கடினம். ஆகையால், நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சரியாக இன்று வரை, மனிதனைச் சகித்துக்கொண்டிருக்கிறேன், இருப்பினும் என் சகிப்புத்தன்மையின் காரணமாக நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். பேதுரு மூலம், நீங்கள் என்னை அறிந்துகொண்டு என்னைத் தேட வேண்டும்; அவனது எல்லா செயல்பாடுகளின் மூலமாகவும், நீங்கள் எப்போதும் இல்லாத அளவுக்குப் பிரகாசம் பெற வேண்டும், இதனால் மனிதனால் எட்டப்படாத ராஜ்யத்தை அடைய வேண்டும். பேரண்டம் மற்றும் ஆகாயவிரிவு முழுவதும், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும், பூமியிலும் பரலோகத்திலும் உள்ள சகலமும் என் இறுதிக் கட்டக் கிரியைக்குத் தங்கள் அனைத்து முயற்சியையும் தருகின்றன. நிச்சயமாக, சாத்தானின் சக்திகள் கட்டளைக்கிணங்க, நீங்கள் பார்வையாளர்களாக இருக்க விரும்பவில்லை, அல்லவா? சாத்தான் எப்போதுமே மக்களின் இருதயங்களில் என்னைப் பற்றிய அறிவைப் பறித்துக் கொண்டு, பற்களைக் கடித்துக் கொண்டு, நகங்களைக் காட்டிக்கொண்டு அதன் இறுதி மரணக் கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் அதன் தந்திரமான திட்டங்களுக்கு நீங்கள் இரையாக விரும்புகிறீர்களா? எனது கிரியை இறுதியாக முடிந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? என் சகிப்புத்தன்மையை நான் மீண்டும் ஒரு முறை காட்டுவதற்கு நீங்கள் காத்திருக்கிறீர்களா? என்னைப் பற்றிய அறிவை நாடுவது முக்கியம், ஆனால் நடைமுறையில் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. என் வார்த்தைகள் உங்களுக்கு நேரடியாக வெளிப்படுத்தப்படுகின்றன, மேலும் நீங்கள் என் வழிகாட்டலைப் பின்பற்ற முடியும் என்று நம்புகிறேன், உங்களுக்காகத் திட்டங்களையும் லட்சியங்களையும் இனிமேல் வைத்துக்கொள்ளாதீர்கள்.

பிப்ரவரி 27, 1992

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 5

அடுத்த: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 8

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக