ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 10

ராஜ்யத்தின் காலம், கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது கவலையல்ல; மாறாக, எனது கிரியையைத் தனித்தே செய்ய நான் பூமியில் இறங்கினேன், இது மனுஷரால் மனதில் எண்ணங்கொள்ளவோ அல்லது செய்து முடிக்கவோ முடியாத ஒன்று. அநேக ஆண்டுகளாக, உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து, திருச்சபையைக் கட்டியெழுப்புவது மட்டுமே கிரியையாக இருந்தது, ஆனால் ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது பற்றி யாரும் ஒருபோதும் கேள்விப்படவில்லை. இதைப் பற்றி நான் என் சொந்த வாயினால் பேசினாலும், அதன் சாராம்சம் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நான் ஒருமுறை மனுஷரின் உலகில் இறங்கி, அவர்களின் துன்பங்களை அனுபவித்துக் கவனித்தேன், ஆனால் என் அவதரிப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் அவ்வாறு செய்தேன். ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவுடன், என் மாம்ச அவதரிப்பு முறைப்படி என் ஊழியத்தைச் செய்யத் தொடங்கியது; அதாவது, ராஜ்யத்தின் ராஜா முறையாகத் தனது இறையாண்மையின் வல்லமையைத் துவங்கினார். இதிலிருந்து மனுஷ உலகிற்கு இறங்கிவந்த ராஜ்யம்—வெறுமனே ஒரு நேரடி வெளிப்பாடாக இல்லாமல்—மெய்யான யதார்த்தத்தில் ஒன்றாகும் என்பது தெளிவாகிறது; இது “நடைமுறைப்படுத்தலின் யதார்த்தம்” என்பதன் அர்த்தத்தின் ஓர் அம்சமாகும். எனது செயல்களில் ஒன்றைக் கூட மனுஷர் ஒருபோதும் கண்டிருக்கவில்லை, என் சொற்களில் ஒன்றையும் அவர்கள் கேட்டிருக்கவும் இல்லை. அவர்கள் என் செயல்களைப் பார்த்திருந்தாலும், அவர்கள் என்ன கண்டுபிடித்திருப்பார்கள்? நான் பேசுவதை அவர்கள் கேட்டிருந்தால், அவர்கள் என்ன புரிந்துகொண்டிருப்பார்கள்? உலகம் முழுவதும், எல்லோரும் என் இரக்கத்திலும் கிருபைக்குள்ளேயும் தான் ஜீவித்திருக்கிறார்கள், ஆனால் எல்லா மனுஷரும் என் நியாயத்தீர்ப்பின் கீழ்தான் இருக்கிறார்கள், அதேபோல் என் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். ஜனங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சீர்கெட்டிருந்தாலும் கூட, நான் அவர்களிடம் இரக்கமுள்ளவராகவும், அன்புள்ளவராகவும்தான் இருக்கிறேன்; அவர்கள் அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாகக் கீழ்படியும்போதும், நான் அவர்களுக்குச் சிட்சையை அளிக்கிறேன். இருப்பினும், நான் அனுப்பிய துன்பங்களுக்கும் சுத்திகரிப்புக்கும் மத்தியில் இல்லாத மனுஷர் யாராவது இருக்கிறார்களா? அநேக ஜனங்கள் வெளிச்சத்திற்காக இருளைக் கடந்து செல்கிறார்கள், அநேகர் அவர்களது சோதனைகளுக்காகக் கடுமையாகப் போராடுகிறார்கள். யோபுவுக்கு நம்பிக்கை இருந்தது, ஆனால் அவன் தனக்கென ஒரு வழியைத் தேடவில்லையா? சோதனைகளை எதிர்கொள்வதில் என் ஜனங்கள் உறுதியாக நிற்க முடியும் என்றாலும், அதை உரக்கச் சொல்லாமல், ஆழமாக விசுவாசிக்கும் யாராவது இருக்கிறார்களா? ஜனங்கள் தங்கள் இருதயங்களில் சந்தேகங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்போது தங்கள் நம்பிக்கைகளுக்குக் குரல் கொடுப்பது இல்லையா? சோதனையின் போது உறுதியாக நின்ற அல்லது உண்மையாகக் கீழ்படிந்த மனுஷர் யாரும் இல்லை. இந்த உலகத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக நான் என் முகத்தை மறைக்காவிட்டால், மனுஷ இனம் முழுவதும் என் எரியும் விழிகளின் கீழ் கவிழும், ஏனென்றால் நான் மனுஷரை எதுவும் கேட்பதில்லை.

ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கும் போது—இது ஏழு இடி முழங்கும்போதும் கூட—இந்த ஒலி வானத்தையும் பூமியையும் தூண்டி, பரலோகத்தை உலுக்கி, ஒவ்வொரு மனுஷனின் இருதயத் துடிப்புகளையும் அதிர்வுறச் செய்கிறது. நான் அந்தத் தேசத்தை அழித்து என் ராஜ்யத்தை ஏற்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் ராஜ்யத்திற்கான கீதம் சடங்குடன் எழும்புகிறது. அதைவிட முக்கியமாக, என் ராஜ்யம் பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், நான் என் தேவதூதர்களை உலகத்துத் தேசங்கள் ஒவ்வொன்றிற்கும் அனுப்பத் தொடங்குகிறேன், இதனால் அவர்கள் என் புத்திரர்களையும், என் ஜனங்களையும் மேய்ப்பார்கள்; இது எனது கிரியையின் அடுத்தக் கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமாகும். இருப்பினும், நான் தனிப்பட்ட முறையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டிருக்கும் இடத்திற்கு வந்து, அதனுடன் போட்டியிடுகிறேன். மனுஷர் அனைவருமே என்னை மாம்சத்தில் அறிந்துகொண்டு, என் செயல்களை மாம்சத்தில் காண முடிந்தால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை சாம்பலாக மாறி ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடும். என் ராஜ்யத்தின் ஜனங்களாகிய நீங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெறுப்பதால், உங்கள் செயல்களால் நீங்கள் என் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டும், இந்த வழியில் வலுசர்ப்பத்திற்கு அவமானத்தைத் தரவேண்டும். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வெறுக்கத்தக்கது என்பதை நீங்கள் உண்மையாக உணர்கிறீர்களா? அதுவே ராஜ்யத்தை ஆளும் ராஜாவின் எதிரி என்று நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்களா? நீங்கள் எனக்கு அற்புதமாகச் சாட்சிகொடுக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைத் தோற்கடிக்க முடியும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்; இந்தப் படிநிலையை நீங்கள் அடைய வேண்டும் என்பதே என் தேவையாயிருக்கிறது. இதை உங்களால் செய்ய முடியுமா? இதை உங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? மனுஷரால் சரியாகச் செய்யக் கூடிய விஷயம்தான் என்ன? அதை என்னால் செய்ய முடியும் அல்லவா? யுத்தம் இணையும் இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் இறங்குகிறேன் என்று நான் ஏன் கூறுகிறேன்? நான் விரும்புவது உங்கள் நம்பிக்கையைத்தான், உங்கள் கிரியைகளை அல்ல. மனுஷர் அனைவரும் என் வார்த்தைகளை நேரடியாக ஏற்றுக்கொள்ள இயலாது, அதற்குப் பதிலாக ஒரு பக்கவாட்டுப் பார்வையை அவற்றிடம் காட்டுங்கள். உங்கள் இலக்குகளை அடைய இது உங்களுக்கு உதவுகிறதா? இந்த வழியில் நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்களா? உண்மையைச் சொல்வதானால், பூமியிலுள்ள மனுஷரில், ஒருவருக்குக் கூட என்னை நேருக்கு நேர் பார்க்கும் திறன் இல்லை, மேலும் ஒருவரால் கூட என் வார்த்தைகளின் தூய்மையான மற்றும் கலப்படமற்ற அர்த்தத்தைப் பெற முடியாது. ஆகவே, எனது குறிக்கோள்களை அடைவதற்கும், ஜனங்களின் இருதயங்களில் என் உண்மையான பிம்பத்தை நிலைநிறுத்துவதற்கும் பூமியில் முன்னோடியில்லாத ஒரு திட்டத்தை நான் ஏற்படுத்தியுள்ளேன். இந்த வழியில், கருத்துக்கள் ஜனங்கள் மீது அதிகாரம் செலுத்தும் சகாப்தத்தை நான் முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

இன்று, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் நான் இறங்குவது மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறேன், இது முழு பரலோகத்தையும் நடுங்க வைக்கிறது. எனது நியாயத்தீர்ப்புக்கு உட்படாத ஒரு இடம் ஏதேனும் உள்ளதா? நான் பேரழிவு மழையைப் பொழியாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? நான் செல்லும் எல்லா இடங்களிலும், எல்லா வகையானப் “பேரழிவின் விதைகளையும்” சிதறடிக்கிறேன். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான். இன்னும் பல ஜனங்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் என்னைப் பார்க்கவும் அனுமதிக்க நான் விரும்புகிறேன், இந்த வழியில், பல ஆண்டுகளாக பார்க்க முடியாத ஆனால் இப்போது மெய்யாகவே பார்க்க முடிகிற ஒரு தேவனைப் போற்றுவதற்காக வாருங்கள். எந்தக் காரணத்திற்காக நான் உலகை உருவாக்கினேன்? மனுஷர் சீர்கெட்டபின்பும், நான் ஏன் அவர்களை முற்றிலுமாக அழிக்கவில்லை? எந்தக் காரணத்திற்காக மனுஷ இனம் முழுவதும் பேரழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறது? மாம்சத்தை அணிவதற்கான என் நோக்கம் என்ன? நான் எனது கிரியையைச் செய்யும்போது, கசப்பு மட்டுமல்ல, இனிப்புச் சுவையையும் கூட மனுஷர் கற்றுக்கொள்கிறார்கள். உலகில் உள்ள எல்லா மனுஷரிலும், என் கிருபையினுள் வாழாதவர் யார்? நான் மனுஷருக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை வழங்கவில்லை என்றால், உலகில் யார் ஏராளமாக அனுபவிக்க முடியும்? உங்களை என் ஜனங்களின் இடத்தைப் பிடிக்க அனுமதிப்பது ஓர் ஆசீர்வாதமாக இருக்க முடியுமா? நீங்கள் என் ஜனங்கள் அல்ல, மாறாக கிரியை செய்பவர்கள் மட்டுமே என்று இருந்தால் என் ஆசீர்வாதங்களுக்குள் நீங்கள் இருக்க மாட்டீர்களா? என் வார்த்தைகளின் தோற்றத்தை உங்களில் ஒருவர் கூட புரிந்து கொள்ள முடியாது. மனுஷர்—நான் அவர்களுக்கு வழங்கிய மகுடங்களைப் பொக்கிஷமாகக் கருதுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள், அவர்களில் அநேகர், “சேவை செய்பவர்” என்ற மகுடத்தின் காரணமாக, அவர்களின் இருதயங்களில் மனக்கசப்பைப் போஷிக்கிறார்கள், மற்றும் அநேகர், “என் ஜனங்கள்,” என்ற மகுடத்தின் காரணமாக அவர்களுடைய இருதயங்களில் எனக்கான அன்பை வளர்த்துக் கொள்கிறார்கள். என்னை முட்டாளாக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; என் கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன! உங்களில் யார் விருப்பத்துடன் பெறுகிறார்கள், உங்களில் யார் முழுமையான கீழ்ப்படிதலைக் கொடுக்கிறார்கள்? ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கவில்லை என்றால், உங்களால் மெய்யாகவே முடிவுக்குக் கீழ்படிந்திருக்க முடியுமா? மனுஷரால் என்ன செய்ய முடியும், எந்தளவிற்கு சிந்திக்க வல்லவர்கள் மற்றும் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்—இவை அனைத்தையும் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்மானித்துவிட்டேன்.

அநேக ஜனங்கள் என் முகம் வெளிச்சத்தில் எரிவதை ஏற்றுக்கொள்கிறார்கள். எனது ஊக்கத்தால் ஈர்க்கப்பட்ட அநேக ஜனங்கள், தொடர்ந்து தேட தங்களையே தூண்டிக் கொள்கிறார்கள். சாத்தானின் படைகள் என் ஜனங்களைத் தாக்கும்போது, அவர்களைத் தடுக்க நான் இருக்கிறேன்; சாத்தானின் சதிகள் அவர்களது வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்தும் போது, மீண்டும் திரும்பி வராதபடிக்கு நான் அவற்றை முறியடித்து திருப்பி அனுப்புகிறேன். பூமியில், எல்லா விதமான பொல்லாத ஆவிகளும் ஓய்வெடுப்பதற்கான இடத்தை நிரந்தரமாகத் தேடுகின்றன, மேலும் அவை உட்புகக்கூடிய மனுஷ பிரேதங்களை முடிவில்லாமல் தேடுகின்றன. என் ஜனமே! நீங்கள் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். ஒருபோதும் கட்டுப்பாடற்றுப்போகாதீர்! ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளாதீர்! எனது வீட்டில் உன் விசுவாசத்தை நீ வழங்கு, விசுவாசத்தினால் மட்டுமே பிசாசின் தந்திரத்திற்கு எதிராக எதிர்குற்றஞ்சாட்ட முடியும். எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் கடந்த காலத்தில், ஒரு காரியத்தை எனக்கு முன்பாகவும், இன்னொன்றை என் முதுகுக்குப் பின்னாலும் செய்ததைப் போலத் தற்போதும் நடந்து கொள்ளாதீர்; இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஏற்கெனவே மீட்பிற்கு அப்பாற்பட்டவர் ஆவீர்கள். இது போன்ற போதுமான வார்த்தைகளை நான் அதிகமாக உச்சரிக்கவில்லையா? மனுஷரின் பழைய இயல்பைத் திருத்த முடியாது என்பதால், ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டல்களை நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. சலிப்படைய வேண்டாம்! நான் சொல்வது எல்லாம் உங்கள் தலையெழுத்தை உறுதி செய்வதற்காகத்தான்! ஒரு வெறுக்கத்தக்க மற்றும் இழிவான இடம்தான் சாத்தானுக்குத் தேவை; நீங்கள் எந்தளவிற்கு நம்பிக்கையற்ற முறையிலும், ஒழுக்கமற்ற முறையிலும் இருக்கிறீர்களோ, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிய மறுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அந்த அசுத்த ஆவிகள் உங்களை ஊடுருவுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பெறும். நீங்கள் இந்த நிலைக்கு வந்திருந்தால், உங்கள் விசுவாசம் வெறுமனே உரையாடலைத் தவிர வேறொன்றுமில்லை, அதற்கு எந்தவொரு மெய்மையும் இல்லாமல், அசுத்த ஆவிகள் உங்கள் தீர்மானத்தைத் தகர்த்து அதனை எனது கிரியையைச் சீர்குலைக்கப் பயன்படும் கீழ்ப்படியாமை மற்றும் சாத்தானுடைய சதிகளாக மாற்றுகின்றன. அங்கிருந்து, நீங்கள் எந்த நேரத்திலும் என்னால் அடித்து நொறுக்கப்படுவீர்கள். இந்தச் சூழ்நிலையின் கனம் பற்றி யாருக்கும் புரிவதில்லை; ஜனங்கள் அனைவரும் அவர்கள் கேட்கும் விஷயங்களை நோக்கிச் செவிட்டுக் காதைத் திருப்புகிறார்கள், கொஞ்சமும் எச்சரிக்கையாக இருப்பதில்லை. கடந்த காலத்தில் என்ன செய்யப்பட்டது என்பது எனக்கு நினைவில் இல்லை; மீண்டும் ஒரு முறை நான் “மறப்பேன்” என்றும் அதன்மூலம் உன்னிடம் மென்மையாக இருப்பேன் என்றும் நீ இன்னும் காத்திருக்கிறாயா? மனுஷர் என்னை எதிர்த்திருந்தாலும், நான் அவர்களை எதிர்க்க மாட்டேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் சிறிய சரீர வளர்ச்சி கொண்டவர்கள், ஆகவே நான் அவர்களிடம் அதிகக் கோரிக்கைகளை வைப்பதில்லை. எனக்குத் தேவையானது எல்லாம் அவர்கள் ஒழுக்கங்கெட்டுப் போகக்கூடாது என்பதும், கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுமே ஆகும். நிச்சயமாக இந்த ஒரு நிபந்தனையைப் பூர்த்தி செய்வது உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டது, இல்லையா? தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் பல இரகசியங்களை நான் வெளிப்படுத்த வேண்டும் என அநேக ஜனங்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், பரலோகத்தின் அனைத்து இரகசியங்களையும் நீ புரிந்து கொண்டாலும், அந்த அறிவைக் கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? அது என் மீதான உன் அன்பை அதிகரிக்குமா? என் மீதான உன் அன்பைத் தூண்டுமா? நான் மனுஷரைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை, அவர்களைப் பற்றிய ஒரு முடிவை நான் எளிதாக எடுப்பதுமில்லை. இவை மனுஷரின் உண்மையான சூழ்நிலைகள் இல்லையென்றால், நான் இவ்வளவு எளிதாக அவர்களை அவ்வாறு முடிசூட்ட மாட்டேன். கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள்: நான் உங்களை எத்தனை முறை அவதூறாகப் பேசியுள்ளேன்? நான் உங்களை எத்தனை முறை குறைத்து மதிப்பிட்டுள்ளேன்? உங்கள் உண்மையான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நான் உங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறேன்? முழு மனதுடன் உங்களை வெல்ல என் சொற்கள் எத்தனை முறை தவறியுள்ளன? உங்களுக்குள் ஆழமாக ஒத்ததிர்வு ஏற்படுத்தாமல் நான் எத்தனை முறை பேசியிருக்கிறேன்? உங்களில் யார் என் வார்த்தைகளை அச்சமின்றி, நடுங்காமல் படித்திருக்கிறீர், நான் உங்களைப் பாதாளத்திற்குள் அடித்துத் தள்ளுவேன் என்ற ஆழ்ந்த பயம் யாருக்கு இருக்கிறது? என் வார்த்தைகளிலிருந்து சோதனைகளைத் தாங்காதவர் யார்? என் சொற்களுக்குள் அதிகாரம் இருக்கிறது, ஆனால் இது மனுஷருக்குச் சாதாரண நியாயத்தீர்ப்பை வழங்குவதற்காக அல்ல; மாறாக, அவர்களின் உண்மையான சூழ்நிலைகளை நினைவில் கொண்டு, என் வார்த்தைகளில் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை நான் தொடர்ந்து அவர்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்பதற்காக. உண்மையில், என் சர்வ வல்லமையுள்ள வல்லமையை என் வார்த்தைகளில் கண்டுணரக்கூடியவர் எவரேனும் இருக்கிறாரா? பசும்பொன்னால் தயாரிக்கப்பட்ட என் வார்த்தைகளைப் பெற யாராவது இருக்கிறார்களா? நான் எத்தனை வார்த்தைகள் பேசியிருக்கிறேன்? யாராவது அவற்றை எப்போதாவது பொக்கிஷமாக்கி இருக்கிறீரா?

மார்ச் 3, 1992

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 8

அடுத்த: ராஜ்ய கீதம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக