தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?

ஜனங்கள் நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் “தேவன்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளாமலே, வெறுமையாகக் கலக்கத்துடனே பின்பற்றுகிறார்கள். ஏன் மனிதன் தேவனை அவ்வாறு விசுவாசிக்க வேண்டும், அல்லது தேவன் என்றால் என்ன என்று அவர்கள் எந்த விவரமும் பெற்றிருக்கவில்லை. தேவனை விசுவாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் மட்டுமே ஜனங்களுக்குத் தெரியும், ஆனால் தேவன் என்றால் யாரென்று தெரியவில்லை, அவர்கள் தேவனை அறியவில்லை என்றால், இது ஒரு சிறந்த பெரிய நகைச்சுவை அல்லவா? இவ்வளவு தூரம் வந்திருந்து, ஜனங்கள் அநேக பரலோக மறைபொருட்களைக் கண்டிருந்தாலும், மனிதனால் முன்பு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிக ஆழமான அறிவைக் கேட்டிருந்தாலும், மனிதனால் சிந்திக்கப்படாத மிக அடிப்படையான அநேக சத்தியங்களை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். சிலர், “நாங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசிக்கிறோம். தேவன் என்றால் யார் என்று எங்களுக்கு எப்படித் தெரியாதிருக்கும்? இந்தக் கேள்வி எங்களைக் குறைத்து மதிப்பிடவில்லையா?” என்று சிலர் கூறலாம். இருப்பினும், உண்மையில், இன்று ஜனங்கள் என்னைப் பின்தொடர்ந்தாலும், இன்றைய எந்தக் கிரியையும் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் மிகத் தெளிவான மற்றும் எளிதான கேள்விகளைக் கூட கிரகித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள், தேவனைப் பற்றிய மிகவும் சிக்கலான கேள்விகளை ஒருபுறம் தனியே விட்டு விடுகிறார்கள். நீ எந்த அக்கறையும் கொள்ளாத, நீ அடையாளம் காணாத கேள்விகளே நீ புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்விகள் என்பதை அறிந்துகொள், ஏனென்றால் எதைக் கொண்டு உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில், நீ கவனம் செலுத்தாமலும், நீ அக்கறைக் கொள்ளாமலும், ஜனக்கூட்டத்தைப் பின்பற்ற மட்டுமே உனக்கு தெரிகிறது. நீ தேவன் மீது ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் என்பது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் என்றால் யார் என்று உனக்கு உண்மையாகவே தெரியுமா? மனிதன் என்றால் யார் என்று உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் மீது விசுவாசம் கொண்ட ஒரு மனிதனாக, நீ இந்த காரியங்களைப் புரிந்துகொள்ளத் தவறினால், தேவனுடைய விசுவாசி என்ற மேன்மையை நீ இழக்கவில்லையா? இன்று எனது கிரியை இதுதான்: ஜனங்கள் அவர்களின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் செய்யும் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், தேவனின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது எனது ஆளுகைத் திட்டத்தின் இறுதி செயலும், இது எனது கிரியையின் கடைசிக் கட்டமுமாகும். அதனால்தான் வாழ்வின் இரகசியங்கள் அனைத்தையும் முன்கூட்டியே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும். இது இறுதி யுகத்தின் கிரியை என்பதால், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத வாழ்வின் அனைத்துச் சத்தியங்களையும் நான் உங்களுக்கு கட்டாயமாகச் சொல்ல வேண்டும், நீங்கள் வெறுமனே மிகக் குறைபாடுள்ளவராகவும் மற்றும் மிக மோசமானவராகவும் இருப்பதால் அதைப் புரிந்துகொள்ளவோ அல்லது தாங்கவோ திறமையற்று இருக்கிறீர்கள். நான் என் கிரியையை முடிப்பேன்; நான் செய்ய வேண்டிய கிரியையை நான் முடிப்பேன், இருள் இறங்கும்போது நீங்கள் மீண்டும் வழிதவறி, தீய ஒருவரின் ஆலோசனைகளுக்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக நான் உங்களுக்காக நியமிக்கப்பட்ட அனைத்தையும் உங்களுக்குச் சொல்வேன். இங்கு உங்களுக்குப் புரியாத பல வழிகள் உள்ளன, அவற்றில் நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் அறியாதவர்கள்; உங்கள் ஸ்தானமும் உங்கள் குறைகளும் எனக்கு முற்றிலும் நன்றாகத் தெரியும். ஆகையால், நீங்கள் புரிந்துகொள்ள இயலாத அநேக வார்த்தைகள் இருந்தாலும், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத இந்தச் சத்தியங்களை நான் உங்களுக்குச் சொல்ல இன்னும் ஆயத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் உங்கள் தற்போதைய ஸ்தானத்தில், நீங்கள் எனக்கு அளித்த சாட்சியத்தில் நீங்கள் உறுதியாக நிற்க முடியுமா என நான் கவலைப்படுகிறேன். இதை உங்களில் நான் சிறிதளவும் எண்ணவில்லை; நீங்கள் அனைவரும் எனது வழக்கமான பயிற்சிக்கு உட்படுத்தப்படாத மிருகங்கள், மேலும் உங்களுக்குள் எவ்வளவு மகிமை இருக்கிறது என்பதை என்னால் முற்றிலும் காண இயலாது. நான் உங்களிடம் அதிக ஆற்றலைச் செலவிட்டிருந்தாலும், உங்களில் உள்ள நேர்மறையான அம்சங்கள் வழக்கத்தில் இல்லை என்று தோன்றுகிறது, மேலும் எதிர்மறை அம்சங்களை ஒருவரின் விரல்களால் எண்ணி விடலாம், மற்றும் சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டுவரும் சாட்சியங்களாக மட்டுமே ஊழியம் செய்யுங்கள். உங்களில் உள்ள எல்லாவற்றிலும் சாத்தானின் விஷம் இருக்கிறது. நீங்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர் போல நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். விஷயங்களைப் பொருத்து, நான் உங்களின் பல்வேறு உணர்வுகளையும் மற்றும் நடத்தைகளையும் பார்க்கிறேன், இறுதியாக, உங்கள் உண்மையான ஸ்தானத்தை நான் அறிவேன். இதனால்தான் நான் எப்போதும் உங்கள் மீது வருத்தம் கொள்கிறேன்: தங்கள் சொந்த வாழ்க்கையை ஜீவிக்க விடப்பட்ட மனிதர்கள், அவர்கள் இன்று இருப்பதைக் காட்டிலும் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்களா அல்லது ஒப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா? உங்களின் குழந்தைத்தனமான ஸ்தானம் உங்களைக் கவலையடையச் செய்யவில்லையா? தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைப் போல நீங்கள் உண்மையிலேயே எல்லா நேரங்களிலும், என்னில் மட்டுமே விசுவாசம் கொண்டவர்களாக இருக்க முடியுமா? உங்களிடமிருந்து வெளிப்படுவது தங்கள் பெற்றோரிடமிருந்து விலகிச் சென்ற பிள்ளைகளின் குறும்புத்தனம் அல்ல, ஆனால் அது எஜமானர்களின் சவுக்குகளை அடைய முடியாத விலங்குகளிடமிருந்து வெளிப்படும் மிருகத்தன்மையாக இருக்கிறது. நீங்கள் உங்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், இதுவும் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் பலவீனமாக உள்ளது; இது உங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வியாதியாக உள்ளது. ஆகவே, இன்று நான் உங்களுக்கு அளிக்கும் ஒரே புத்திமதி என்னவென்றால், எனக்கு நீங்கள் அளித்த சாட்சியத்தில் உறுதியாக நிற்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், பழைய வியாதியை மீண்டும் வெளி வர அனுமதிக்க வேண்டாம். சாட்சியத்தை ஏற்பது மிக முக்கியமானதாக உள்ளது—இது எனது கிரியையின் இருதயமாகும். ஒரு சொப்பனத்தில் தனக்கு வந்த யேகோவாவின் வெளிப்பாட்டை மரியாள் ஏற்றுக்கொண்டது போல நீங்களும் எனது வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் கீழ்ப்படிதலினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மட்டுமே பரிசுத்தமானது என்ற தகுதியைப் பெறுகிறது. என் வார்த்தைகளை அதிகம் கேட்கும் நீங்கள் என்னால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என் விலையேறப்பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ளீர்கள்; நீங்கள் சாதாரணமாகவே ஒருவருக்கொருவர் வேறுபட்டு உள்ளீர்கள். ஆனால் அவர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பெற்றுள்ளீர்கள்; அவர்கள் என் பிரசன்னத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும்போது, நீங்கள் என்னுடன் இனிமையான நாட்களைக் கழித்து, என் நன்மையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, என்னோடு கத்தி வீண்சண்டையிடுவதற்கும், என் சொத்துக்களில் உங்கள் பங்கைக் கோருவதற்கும் உங்களுக்கு எது உரிமை கொடுக்கிறது? நீங்கள் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லையா? நான் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகத் தருகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு மனதை உருக்கும் துக்கத்தையும் மற்றும் சஞ்சலத்தையும், அடக்கமுடியாத கோபத்தையும் மற்றும் அதிருப்தியையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் வெறுக்கத்தக்கவர்கள்—ஆனாலும் நீங்கள் பரிதாபகரமானவர்கள், அதனால் எனது அதிருப்தியை உட்கிரகித்துக்கொண்டு, என்னுடைய எதிர்ப்புகளை உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகாலக் கிரியைகளில், நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஏனென்றால் மனிதகுலத்தின் வளர்ச்சியையே முழுவதும் கண்டறியப் பெற்றேன், பழங்காலத்தின் புகழ்பெற்ற மூதாதையர்களால் உங்களுக்கு எஞ்சியிருக்கும் விலைமதிப்பற்ற பரம்பரைச் சொத்துக்களைப் போல, உங்களிடையே உள்ள “புரளிகள்” மட்டுமே மிகவும் புகழ்பெற்றவையாக மாறிப்போயுள்ளன. அந்த மனிதநேயமற்ற பன்றிகளையும் நாய்களையும் எப்படி நான் வெறுக்கிறேன். உங்கள் மனசாட்சியில் அதிக குறைபாடு உள்ளது! நீங்கள் குணத்தில் மிகவும் இழிவானவர்! உங்கள் இருதயங்கள் மிகவும் கடுமையானவை! நான் இத்தகைய வார்த்தைகளை எடுத்து இஸ்ரவேல் புத்திரரிடம் கிரியைப் புரிந்திருந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே மகிமை அடைந்திருப்பேன். ஆனால் உங்கள் நடுவில் இதனை அடைய முடியாததாக இருக்கிறது; உங்கள் நடுவில், தயவற்ற அலட்சியமும், உங்கள் புறக்கணிப்பும் மற்றும் உங்கள் சாக்குபோக்குகளும் மட்டுமே உள்ளன. நீங்கள் மிகவும் உணர்ச்சியற்றவராக, முற்றிலும் மதிப்பற்றவராக இருக்கிறீர்கள்!

நீங்கள் உங்களுடைய அனைத்தையும் எனது கிரியைக்கு அர்ப்பணிக்க வேண்டும். எனக்கு நன்மை பயக்கும் கிரியையை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ளாத எல்லாவற்றையும் உங்களுக்கு விளக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன், இதனால் நீங்கள் குறைவுபடும் அனைத்தையும் என்னிடமிருந்து உங்களால் பெற முடியும். உங்கள் குறைபாடுகள் எண்ண முடியாத அளவுக்கு இருந்தாலும், உங்களுக்கு எனது இறுதி இரக்கத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து நன்மையடையவும், உங்களில் இல்லாத மகிமையை அடையவும் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத மகிமையை அடையவும், நான் உங்களிடம் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்ய நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் பல ஆண்டுகளாகக் கிரியைப் புரிந்தேன், இன்றுவரை எந்த மனிதனும் என்னை அறிந்திருக்கவில்லை. நான் வேறு யாரிடமும் சொல்லாத இரகசியங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

மனிதர்கள் நடுவில், அவர்களால் காண இயலாத ஆவியானவராகவும், அவர்களோடு ஒருபோதும் ஒன்றிணைய முடியாத ஆவியானவராகவும் நான் இருந்தேன். பூமியில் எனது மூன்று கட்ட கிரியைகள் (உலகத்தை சிருஷ்டித்தல், மீட்டெடுத்தல் மற்றும் அழித்தல்) காரணமாக, அவர்கள் நடுவில் எனது கிரியையைச் செய்ய நான் வெவ்வேறு நேரங்களில் (பகிரங்கமாக இல்லாமல்) அவர்கள் மத்தியில் தோன்றுகிறேன். நான் மனிதர்கள் நடுவில் முதன்முதலில் மீட்பு யுகத்தின் போது வந்தேன். நிச்சயமாக, நான் ஒரு யூதக் குடும்பத்தில் இருந்துதான் வந்தேன்; எனவே, தேவன் பூமிக்கு வந்ததை முதலில் கண்டது யூதர்கள்தான். நான் இந்தக் கிரியையை மனிதனில் செய்ததற்கான காரணம் என்னவென்றால், எனது மீட்பின் கிரியையில் என் மனுவுரு மாம்சத்தைப் பாவத்திற்குக் காணிக்கையாக உபயோகிக்க விரும்பினேன். இவ்வாறு, என்னை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான். நான் மாம்சத்தில் கிரியை செய்தது அதுவே முதல் முறை ஆகும். ஆட்கொண்டு பரிபூரணப்படுத்துவதே ராஜ்யத்தின் யுகத்தில் என் கிரியையாகும், ஆகவே நான் மீண்டும் எனது மேய்த்தல் கிரியையை மாம்சத்தில் செய்கிறேன். இரண்டாவது முறையாக நான் மாம்சத்தில் கிரியை செய்கிறேன். கிரியையின் இறுதி இரண்டு கட்டங்களில், ஜனங்கள் செய்ய வேண்டியவற்றோடு இனி கண்ணுக்குப் புலப்படாத, தொட்டுணர முடியாத ஆவியானவர் இருக்கிறார், ஆனால் ஆவியானவர் மாம்சமாக உணரப்படுகிறார். இவ்வாறு, மனிதனின் பார்வையில், தேவனின் தோற்றம் மற்றும் உணர்வு எதுவுமில்லாமல், நான் மீண்டும் ஒரு மனிதனாக மாறுகிறேன். மேலும், ஜனங்கள் காண்கிற தேவன் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார், இது அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் தருகிறது. மீண்டும் மீண்டும், எனது அசாதாரண கிரியை அநேக ஆண்டுகளாக கொண்டிருந்த பழைய நம்பிக்கைகளைச் சிதறடித்துவிட்டது. ஜனங்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்! தேவன் வெறுமனே பரிசுத்த ஆவியாக மட்டும் இல்லை, அவர் ஆவியாகவும், ஏழு மடங்கு வலுவூட்டப்பட்ட ஆவியாகவும் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய ஆவியாகவும் இருக்கிறார், ஆனாலும் அவர் ஒரு மனிதராகவும் இருக்கிறார்—அவர் ஒரு சாதாரண மனிதராகவும், விதிவிலக்காக பொதுவான மனிதராகவும் இருக்கிறார். அவர் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார். அவர்கள் இருவரும் மனிதர்களுக்குப் பிறந்தவர்கள், ஒருவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், மற்றொருவர் ஆவியிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு மனிதனுக்குப் பிறந்தவர் என்பதில் அவர்கள் வேறுபடுகிறார்கள். தேவனின் மனுவுரு மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்வதில் ஒத்திருக்கின்றார்கள், மேலும் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார் என்பதில் இருவரும் வேறுபடுகின்றார்கள். இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்த மீட்பர், மற்றொருவர் கோபமும் நியாயமும் நிறைந்த நீதியின் தேவன். ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார். ஒருவர் ஆதியென்றால், மற்றொருவர் அந்தம். ஒருவர் பாவமில்லாத மாம்சமாக இருக்கும்போது, மற்றொருவர் மீட்பை நிறைவு செய்து, கிரியையைத் தொடர்கின்ற, ஒருபோதும் பாவம் செய்யாத மாம்சமாக இருக்கிறார். இருவரும் ஒரே ஆவியால் ஆனவர்கள், ஆனால் அவர்கள் வெவ்வேறு மாம்சங்களில் வாசம்பண்ணுகிறார்கள், மற்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தார்கள், மேலும் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அனைத்து கிரியைகளும் பரஸ்பர நிறைவை உண்டாக்கி, ஒருபோதும் முரண்படுவதில்லை, மற்றும் அவை ஒரே சுவாசத்தில் பேசப்படலாம். இருவருமே ஜனங்கள்தான், ஆனால் ஒருவர் ஆண் குழந்தையாகவும், மற்றொருவர் பெண் குழந்தையாகவும் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகளாக, ஜனங்கள் கண்டது ஆவியானவரை மட்டுமல்ல, மற்றும் ஒரு மனிதரை மட்டுமல்ல, ஒரு ஆணைத்தான் கண்டார்கள், ஆனால் மனித கருத்துக்களுடன் ஒத்துப் போகாத அநேக காரியங்களையும் கண்டார்கள்; எனவே, மனிதர்கள் ஒருபோதும் என்னை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர்கள் பாதி விசுவாசத்தையும் பாதி சந்தேகத்தையும் வைத்திருக்கிறார்கள்—நான் இருப்பதைப் போல, இதுவரை நானும் ஒரு மாயையான சொப்பனமாக இருக்கிறேன்—அதனால்தான், இன்றுவரை, தேவன் என்றால் யாரென்று ஜனங்களுக்குத் தெரியவில்லை. ஓர் எளிய வாக்கியத்தில் உன்னால் என்னை உண்மையில் தொகுக்க முடியுமா? “இயேசு வேறு யாருமல்ல தேவன்தான், தேவன் வேறு யாருமல்ல இயேசுதான்” என்று நீ உண்மையிலேயே சொல்லத் துணிகிறாயா? “தேவன் வேறு யாருமல்ல ஆவியானவர்தான், ஆவியானவர் வேறு யாருமல்ல தேவன்தான்” என்று சொல்வதற்கு நீ மிகவும் தைரியமாக இருக்கிறாயா? “தேவன் மாம்சத்தில் உடை தரித்த ஒரு மனிதர்” என்று நீ இனிமையாகச் சொல்கிறாயா? “இயேசுவின் உருவம் தேவனின் பெரிய உருவமாக இருக்கிறது” என்று உறுதியாகக் கூற உனக்குத் தைரியம் இருக்கிறதா? தேவனின் மனநிலையையும் உருவத்தையும் முழுமையாக விளக்க உன்னுடைய வாக்குவல்லமையை உபயோகிக்க இயலுமா? “தேவன் தனது சொந்த உருவத்திற்குப் பிறகு ஆண்களை மட்டுமே சிருஷ்டித்தார், பெண்களை அல்ல” என்று சொல்ல உனக்குத் தைரியம் இருக்கிறதா? நீ இதைச் சொன்னால், நான் தேர்ந்தெடுத்தவர்கள் நடுவில் எந்த ஸ்திரீயும் இருக்க மாட்டாள், ஸ்திரீகள் மனிதகுலத்தின் ஓர் இனமாக மிகக் குறைந்த அளவிலேயே இருப்பார்கள். தேவன் என்றால் யார் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் ஒரு மனிதரா? தேவன் ஓர் ஆவியா? தேவன் உண்மையில் ஓர் ஆணா? நான் செய்ய வேண்டிய கிரியையை இயேசுவால் மட்டுமே முடிக்க முடியுமா? எனது சாராம்சத்தைத் தொகுக்க நீ மேலே உள்ள ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவுச் செய்தால், நீ மிகவும் அறிவில்லாத விசுவாசமுள்ள விசுவாசியாய் இருக்கிறாய். நான் ஒரு முறை மனுவுரு மாம்சமாக கிரியைப் புரிந்தால், ஒரு முறை மட்டுமே, நீ என்னை வரையறுக்கிறாயா? ஒரே பார்வையில் நீ என்னை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா? உன்னுடைய வாழ்நாளில் நீ வெளிப்படுத்தியவற்றின் அடிப்படையில் என்னை முழுமையாகத் தொகுக்க முடியுமா? எனது இரு மனுஉருவங்களிலும் நான் இதே போன்ற கிரியையைச் செய்திருந்தால், நீ என்னை எப்படி உணருவாய்? என்னை என்றென்றும் சிலுவையில் அறைய விட்டு விடுவாயா? நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?

உங்கள் விசுவாசம் மிகவும் உண்மையானது என்றாலும், உங்களில் எவராலும் என்னைப் பற்றிய ஒரு முழுமையான விவரத்தையும் கொடுக்க முடியாது, நீங்கள் காணும் அனைத்து உண்மைகளுக்கும் எவராலும் முழு சாட்சியம் அளிக்க முடியாது. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இன்று, உங்களில் பெரும்பாலோர் உங்கள் கடமைகளைக் கைவிடுவது, அதற்கு பதிலாக மாம்சத்தைப் பின்தொடர்வது, மாம்சத்தைத் திருப்திப்படுத்துவது, பேராசையுடன் மாம்சத்தை அனுபவிப்பது என்று இருக்கிறீர்கள். உங்களிடம் கொஞ்சம் சத்தியம் உள்ளது. அப்படியானால், நீங்கள் கண்ட எல்லாவற்றிற்கும் நீங்கள் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்க முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? இன்று நீ கண்ட எல்லாவற்றிற்கும் உன்னால் சாட்சியமளிக்க முடியாத ஒரு நாள் வந்தால், நீ சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் செயல்பாட்டை இழந்திருப்பாய், மேலும் நீ இதுவரை ஜீவிப்பதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. நீ மனிதனாக இருக்கத் தகுதியற்றவனாய் இருப்பாய். நீ மனிதனாக இருக்க மாட்டாய் என்று கூட சொல்லலாம்! நான் உங்களிடம் அளவிட முடியாத கிரியையைச் செய்துள்ளேன், ஆனால் நீ தற்போது எதையும் கற்றுக்கொள்ளாமல், எதிலும் விழிப்புணர்வில்லாமல், உன் உழைப்பை வீணாக்கியிருப்பதால், எனது கிரியையை விஸ்தரிக்க வேண்டிய நேரம் வரும் பொழுது, நீ புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் வெறித்து, வாயடைத்து, முற்றிலும் உபயோகமற்று இருப்பாய். அது உன்னை எல்லா நேரத்திலும் பாவியாக உருவாக்காது? அந்த நேரம் வரும் பொழுது, நீ ஆழமாக மனஸ்தாபப்படவில்லையா? நீ மனவருத்தத்தில் மூழ்க மாட்டாயா? இன்று எனது கிரியைகள் அனைத்தும் சோம்பலாகவும் மற்றும் சலிப்பாகவும் செய்யப்படவில்லை, ஆனால் எனது வருங்காலக் கிரியைக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதாகும். நான் ஒரு முட்டுக்கட்டைக்குள்ளாகி விட்டேன் என்பதல்ல, மேலும் புதியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். நான் செய்யும் கிரியையை நீ புரிந்துகொள்ள வேண்டும்; இது தெருவில் விளையாடும் ஒரு குழந்தையால் செய்யப்பட்ட ஒன்று அல்ல, ஆனால் இது என் தந்தையின் பிரதிநிதித்துவத்தில் செய்யப்படும் கிரியை ஆகும். இதையெல்லாம் நானே செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; மாறாக, நான் என் தந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இதற்கிடையில், உங்கள் வேலை உறுதியாக பின்பற்றுவதும், கீழ்ப்படிவதும், மாறுவதும், மற்றும் சாட்சியளிப்பதும் ஆகும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், என்னில் நீங்கள் ஏன் விசுவாசம் கொள்ள வேண்டும்; இது நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஆகும். என் பிதா அவருடைய மகிமையின் நிமித்தமாக உலகைச் சிருஷ்டித்த தருணத்திலிருந்து உங்கள் அனைவரையும் எனக்காக முன்குறித்தார். எனது கிரியையின் நிமித்தம், அவருடைய மகிமையின் நிமித்தம், அவர் உங்களை முன்குறித்தார். என் பிதாவினால்தான் நீங்கள் என்னில் விசுவாசம் கொள்கிறீர்கள்; என் பிதாவின் தீர்க்கதரிசனத்தின் காரணமாகவே நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள். இவை எதுவும் உங்கள் சொந்த விருப்பப்படி இல்லை. அதைவிட முக்கியமானது என்னவென்றால், எனக்கு சாட்சியமளிக்கும் நோக்கத்திற்காக, என் பிதா எனக்கு வழங்கியவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அவர் எனக்கு உங்களைக் கொடுத்ததால், நான் உங்களுக்கு வழங்கிய வழிகளையும் அதேபோல் நான் உங்களுக்குப் போதிக்கும் வழிகளையும் மற்றும் வார்த்தைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் என் வழிகளைக் கடைப்பிடிப்பது உங்கள் கடமையாகும். என் மீதான உங்கள் விசுவாசத்தின் மூல நோக்கம் இதுதான். ஆகையால், நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: நீங்கள் என் வழிகளைக் கடைப்பிடிக்க என் பிதா எனக்கு வழங்கிய ஒரே ஜனங்களாக இருக்கிறீர்கள். எனினும், நீங்கள் என்னில் மட்டுமே விசுவாசம் கொள்கிறீர்கள்; நீங்கள் என்னுடையவர்கள் அல்ல, ஏனென்றால் நீங்கள் இஸ்ரவேல் குடும்பத்தார் அல்ல, அதற்குப் பதிலாக பழைய சர்ப்பத்தைப் போன்றவர்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் எனக்காகச் சாட்சியம் அளியுங்கள் என்பதுதான், ஆனால் இன்று நீங்கள் என்னுடைய வழிகளில் கட்டாயமாக நடக்க வேண்டும். இவை அனைத்தும் எதிர்கால சாட்சியங்களின் நிமித்தமாக இருக்கிறது. நீங்கள் என் வழிகளைக் கேட்கும் மனிதராக மட்டுமே செயலாற்றினால், நீங்கள் பெறுமதி இல்லாமல் இருப்பீர்கள், என் பிதா உங்களை எனக்கு வழங்கியதன் முக்கியத்துவம் இழக்கப்படும். உங்களிடம் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான்: நீங்கள் என் வழிகளில் நடக்க வேண்டும்.

முந்தைய: ஆசீர்வாதங்களைக் குறித்த உங்கள் புரிதல் என்ன?

அடுத்த: உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக