திருச்சபைத் திரைப்படம் | மனுக்குலத்தை இரட்சிக்க தேவன் ஏன் இருமுறை மாம்சமானார் (சிறப்பம்சம்)

மார்ச் 8, 2022

கிருபையின் காலத்தில். மனுவுருவான தேவன் மனுஷனின் பாவத்தைத் தன் மேல் ஏற்றுக்கொண்டு சிலுவையில் அறையப்பட்டு மனுக்குலத்தை மீட்கும் பணியை நிறைவுசெய்தார். கடைசி நாட்களில், தேவன் மீண்டும் ஒருமுறை சத்தியத்தை வெளிப்படுத்தி முற்றிலுமாக மனுஷனைச் சுத்திகரித்து இரட்சிக்க மனுவுருவெடுத்தார். ஆகவே, மனுஷனின் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய தேவன் ஏன் இருமுறை மனுவுருவெடுக்க வேண்டும்? சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: "மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும்" (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). இந்த வீடியோ தேவனின் இரு மனுவுருவெடுத்தல்களைப் பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க