Christian Movie | தேவபக்திக்குரிய இரகசியம்: தொடர் | Spreading the Gospel of the Lord Jesus' Return

ஜனவரி 2, 2022

லின் போயென் பல தசாப்தங்களாகக் கர்த்தரை விசுவாசித்துவரும் வயதானதொரு பிரசங்கியார். கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் அந்திக்கிறிஸ்துவின் படைகளான போதகர்களாலும் மூப்பர்களாலும் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு மத சமுதாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். லின் போயென் தாக்கப்பட்டு, குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு, பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அவர் பயத்தால் பின்வாங்கவில்லை. மாறாக, அவருடைய விசுவாசம் முன்னை விட உறுதியானது. இதனால் மத உலகின் போதகர்களும் மூப்பர்களும் ஒரு நல்ல தோற்றத்தைப் போலியாகப் புனைந்துள்ளனர் என்பதை இறுதியாக அவர் புரிந்துகொண்டார். அதே நேரத்தில், கிறிஸ்து மட்டுமே சத்தியமும் வழியும் ஜீவனுமாய் இருக்கிறார் என்றும் கிறிஸ்து ஒருவரால் மட்டுமே மனிதனை சுத்திகரித்து பரிபூரணப்படுத்த முடியும் என்றும் அறிந்து கொள்ளுகிறார். இதனால் தேவனுக்கு ஓர் உண்மையான சாட்சியாக மாறுவதற்காகக், கிறிஸ்துவைப் பின்தொடரவும், கிறிஸ்துவுக்காக சாட்சி கொடுக்கவும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்காகத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்யவும், தன் மனநிலையின் உருமாற்றத்தை நாடவும் முடிவெடுக்கிறார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட லின் போயென் மாறவில்லை, கொஞ்சம் கூட அவர் தன் விசுவாசத்தை விடவில்லை, அதைவிட மேலாக கிழக்கத்திய மின்னலை விசுவாசித்து, கர்த்தராகிய இயேசு மறுபடியும் வந்துவிட்டார் அவரே சர்வவல்லமையுள்ள தேவன் என்று எல்லா இடங்களிலும் சாட்சி கொடுக்கிறார் என்று கேள்விப்பட்ட சிசிபி அரசு அவரைத் தேடப்படும் குற்றவாளியாகப் பட்டியலிட்டு எல்லா இடமும் அவரைக் கைது செய்யச் சென்றனர். இதனால் லின் போயென் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. ஒவ்வொரு இடத்திலும் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியையை சாட்சி பகர்ந்தார். உண்மையுள்ள, நல்ல சுபாவமுள்ள விசுவாசிகளை தேவனின் பக்கமாக வழிநடத்த அவரால் முடிந்தது. இந்த வீடியோ சுவிசேஷத்தைப் பரப்பி தேவனுக்காக சாட்சி கொடுத்த லின் போயெனின் உண்மைக் கதையைப் பற்றிக் கூறுகிறது.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க