தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 299

மே 15, 2023

தேவனுடைய நிர்வாகத் திட்டம் ஆறாயிரம் ஆண்டுகள் நீடிக்கும், இது அவருடைய கிரியையின் வேறுபாடுகளின் அடிப்படையில் மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல் காலம் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாண காலமாகும். இரண்டாவது கிருபையின் காலமாகும். மூன்றாவது கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலமாகும். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அடையாளம் குறிப்பிடப்படுகிறது. கிரியையிலுள்ள வேறுபாடே இதற்குக் காரணமாகும், அதாவது கிரியையின் தேவைகளே காரணமாகும். முதல் கட்டக் கிரியையானது நியாயப்பிரமாணத்தின் காலத்தில் இஸ்ரவேலில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியையை முடிக்கும் இரண்டாம் கட்டக் கிரியையானது யூதேயாவில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியைக்காக, இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு, ஒரே குமாரனாகப் பிறந்தார். இவை அனைத்துக்கும் கிரியையின் தேவைகளே காரணமாக இருந்தன. கடைசி நாட்களில், தேவன் தம்முடைய கிரியையை புறஜாதியினரிடத்திற்கு விரிவுபடுத்தி, அங்குள்ள ஜனங்களை ஜெயங்கொள்ள விரும்புகிறார், இதனால் அவருடைய பெயர் அவர்கள் நடுவே மகத்தானதாக இருக்கும். மனிதன் சகல சத்தியங்களையும் புரிந்துகொள்ளவும், அதற்குள் பிரவேசிக்கவும் அவனை வழிநடத்த அவர் விரும்புகிறார். இந்த கிரியைகள் அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. அவர் வெவ்வேறு நிலைப்பாடுகளிலிருந்து அவ்வாறு செய்தாலும், கிரியையின் தன்மையும் கொள்கைகளும் மாறாமலே இருக்கின்றன. அவர்கள் செய்த கிரியையின் கொள்கைகளையும் தன்மையையும் நீ கவனித்தால், அது அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்வாய். இன்னும் சிலர் கூறலாம்: "பிதா பிதாவாகவே இருக்கிறார்; குமாரன் குமாரனாகவே இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவே இருக்கிறார், இறுதியில் அவர்கள் ஒருவராவார்கள்." அப்படியானால் நீ எவ்வாறு அவர்களை ஒன்றாக உருவாக்க வேண்டும்? பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் எவ்வாறு ஒருவராக்க முடியும்? அவர்கள் இயல்பாகவே இருவராக இருந்தால், அவர்கள் எவ்வாறு ஒன்றாக இணைந்திருந்தாலும், அவர்கள் இரண்டு அங்கங்களாக இருந்திருக்க மாட்டார்களா? அவர்களை ஒன்றாக்குவது குறித்து நீ பேசும்போது, ஒரு முழுமையானதாக்க இரண்டு தனித்தனி அங்கங்களை வெறுமனே இணைப்பதாக இருக்காதா? ஆனால் அவர்கள் முழுமையாக்கப்படுவதற்கு முன்பு இரண்டு அங்கங்கள் இல்லையா? ஒவ்வொரு ஆவியானவரிடமும் ஒரு தனிப்பட்ட சாராம்சம் உள்ளது. மேலும், இரண்டு ஆவியானவர்களையும் ஒரே ஒருவராக உருவாக்க முடியாது. ஆவியானவர் ஒரு பொருள் அல்ல, பொருள் உலகிலுள்ள எதையும் போல் இல்லாதவர். மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா ஒரு ஆவியானவராக இருக்கிறார், குமாரன் மற்றொருவராக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இன்னொருவராக இருக்கிறார், அதன்பிறகு மூன்று ஆவியானவர்களும் மூன்று டம்ளர் தண்ணீரைப் போல ஒன்றாக கலக்கப்பட்டு, ஒரே முழுமையானவராகின்றனர். அப்படியானால் மூவரும் ஒருவராக உருவாக்கப்படுவதில்லையா? இது முற்றிலும் தவறான மற்றும் முட்டாள்தனமான விளக்கமாகும்! இது தேவனைப் பிரிப்பதில்லையா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் எல்லோரையும் எப்படி ஒருவராக்க முடியும்? அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மூன்று அங்கங்கள் அல்லவா? "இயேசு என்னுடைய நேசகுமாரன் என்று தேவன் வெளிப்படையாகக் கூறவில்லையா?" என்று மற்றவர்கள் சொல்கின்றனர். இயேசு என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்பது நிச்சயமாக தேவனால் கூறப்பட்டதுதான். தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுத்தார், ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே, பரலோகத்திலுள்ள ஆவியானவராக தமது சொந்த மனுஷ அவதரிப்புக்கு சாட்சி கொடுத்தார். இயேசு அவருடைய மனுஷ அவதரிப்பாவார், பரலோகத்திலுள்ள அவருடைய குமாரன் அல்ல. உனக்குப் புரிகிறதா? "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார்," என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லையா? மனுஷ அவதரிப்பின் காரணமாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பிரிக்கப்பட்டார்கள் அல்லவா? உண்மையில், அவர்கள் இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்கிறார். காலங்களின் மாற்றத்தின் காரணமாக, கிரியையின் தேவைகள் மற்றும் அவருடைய நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களின் காரணமாக, மனிதன் அவரை அழைக்கும் பெயரும் வேறுபடுகிறது. அவர் முதல் கட்டக் கிரியையைச் செய்ய வந்தபோது, அவரை இஸ்ரவேலரின் மேய்ப்பராகிய யேகோவா என்று மட்டுமே அழைக்க முடிந்தது. இரண்டாவது கட்டத்தில், மாம்சமாகிய தேவனை, கர்த்தர் மற்றும் கிறிஸ்து என்று மட்டுமே அழைக்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில், பரலோகத்திலுள்ள ஆவியானவரே இவரே என்னுடைய நேசகுமாரன் என்று கூறினார், இவர் தேவனுடைய ஒரே குமாரன் என்று கூறவில்லை. இது உண்மையில் நடக்கவில்லை. தேவனுக்கு எப்படி ஒரே குழந்தை இருக்க முடியும்? அப்படியானால் தேவன் மனிதனாக மாறியிருக்க மாட்டாரா? அவர் மனுஷ அவதரிப்பு என்பதால், அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்டார். இதிலிருந்தே, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு வந்தது. இது உண்மையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான பிரிவின் காரணமாக ஏற்பட்டது. இயேசு மாம்சத்தின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணினார். அவர் சாதாரண மனிதனின் மாம்சத்தைத் தரித்திருந்ததால், அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் இவ்வாறு சொன்னார்: "எனது வெளிப்புறத் தோற்றம் ஒரு சிருஷ்டியினுடையதாக இருக்கிறது. இந்தப் பூமிக்கு வருவதற்காக நான் ஒரு மாம்சத்தைத் தரித்திருந்ததால், நான் இப்போது பரலோகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன்." இந்தக் காரணத்திற்காகவே, அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனிடம் மட்டுமே ஜெபிக்க முடிந்தது. இது அவருடைய கடமையாக இருந்தது. மேலும், அதுவே மாம்சமாகிய தேவனுடைய ஆவியானவர் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவிடம் ஜெபித்ததனால், அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர் இன்னும் தேவனாகவே இருந்தார், ஏனென்றால் அவர் ஆவியானவரின் மாம்சமானவராக மட்டுமே இருந்தார், மேலும் அவருடைய சாராம்சம் இன்னும் ஆவியானவராகவே இருந்தது. அவரே தேவனாக இருந்தால், அவர் ஏன் ஜெபம் செய்தார் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். ஏனென்றால், அவர் மாம்சமாகிய தேவனாக இருந்தார், மாம்சத்திற்குள் வாழும் தேவனாக இருந்தாரே தவிர, பரலோகத்திலுள்ள ஆவியானவராக அல்ல. மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லோருமே தேவனாகவே இருக்கின்றார்கள். மூவரும் ஒருவராக உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவரை ஒரே மெய்த்தேவனாகக் கருத முடியும். இதனாலேயே, அவருடைய வல்லமை மிகவும் பெரியதாக இருக்கிறது. இதனாலேயே, அவர் ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். குமாரன் வந்து ஜெபம் செய்தபோது, அந்த ஆவியானவருக்கே அவர் ஜெபத்தை ஏறெடுத்தார். உண்மையில், அவர் ஒரு சிருஷ்டியின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். மாம்சம் முழுமையானதாக இல்லை என்பதால், அவர் முழுமையாக இல்லை, அவர் மாம்சத்திற்குள் வந்தபோது பல பெலவீனங்களைக் கொண்டிருந்தார். அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்ததால் அவர் மிகவும் கலக்கமுற்றார். அதனால்தான் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு பிதாவாகிய தேவனிடம் மூன்று முறை ஜெபம்பண்ணினார், அதேபோல் அதற்கு முன்பும் பல முறை ஜெபம்பண்ணினார். அவர் தம்முடைய சீஷர்களுடன் ஜெபம்பண்ணினார். அவர் மலை மீது தனியாக ஜெபம்பண்ணினார். அவர் மீன்பிடி படகில் ஜெபம்பண்ணினார். அவர் திரளான ஜனங்கள் மத்தியில் ஜெபம்பண்ணினார். அப்பத்தைப் பிட்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் ஏன் அவ்வாறு ஜெபம்பண்ணினார்? அவர் ஆவியானவரிடமே ஜெபம்பண்ணினார். மாம்சத்தின் கண்ணோட்டத்தில் அவர் ஆவியானவரிடமும், பரலோகத்திலுள்ள ஆவியானவரிடமும் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால், மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, இயேசு அந்தக் கட்ட கிரியையில் குமாரனானார். ஆனாலும், இந்தக் கட்டத்தில், அவர் ஜெபம்பண்ணுவதில்லை. அது ஏன்? ஏனென்றால், அவர் வெளிப்படுத்துவது வார்த்தையின் கிரியையாகும் மற்றும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பும் சிட்சிப்புமாகும். அவருக்கு ஜெபங்கள் தேவையில்லை, பேசுவதே அவருடைய ஊழியமாகும். அவர் சிலுவையில் அறையப்படுவதில்லை. மேலும், அவர் மனிதனால் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவர் தமது கிரியையை மட்டுமே செய்கிறார். இயேசு ஜெபம் பண்ணிய வேளையில், பரலோக ராஜ்யம் இறங்கி வருவதற்காகவும், பிதாவின் சித்தம் செய்யப்படுவதற்காகவும், வரவிருக்கும் கிரியைக்காகவும் பிதாவாகிய தேவனிடம் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்தில், பரலோகராஜ்யம் ஏற்கனவே இறங்கி வந்து விட்டது, அப்படியானால் அவர் இன்னும் ஜெபம் பண்ண வேண்டுமா? காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அவருடைய கிரியையாகும். மேலும் புதிய காலங்கள் இனிமேல் கிடையாது, அப்படியானால், அடுத்தக் கட்டத்திற்கு ஜெபம் பண்ண வேண்டிய அவசியமுள்ளதா? இல்லை என்று நான் நினைக்கிறேன்!

மனிதனுடைய விளக்கங்களில் பல முரண்பாடுகள் உள்ளன. மெய்யாகவே, இவை அனைத்தும் மனிதனுடைய கருத்துக்களாகும். நீங்கள் அனைவரும் மேற்கொண்டு ஆய்வு செய்யாமலேயே, அவர்கள் சொல்வது சரி என்று நம்புவீர்கள். ஒரு திரியேக தேவனைக் குறித்த இதுபோன்ற கருத்துக்கள் மனிதனுடைய கருத்துக்கள்தான் என்பதை நீங்கள் அறியவில்லையா? மனிதனுடைய எந்த அறிவும் முழுமையாகவும் பரிபூரணமாகவும் இருப்பதில்லை. அவை எப்போதும் களங்கமானவையாகவே இருக்கின்றன. மேலும், மனிதனிடம் பல கருத்துக்கள் உள்ளன. ஒரு சிருஷ்டியால் தேவனுடைய கிரியையை விளக்க முடியாது என்பதையே இது நிரூபிக்கின்றது. மனிதனுடைய மனதில் ஏராளமான காரியங்கள் உள்ளன. இவை அனைத்தும் பகுத்தறிதல் மற்றும் சிந்தனை ஆகியவற்றிலிருந்து வருகின்றன, இவை சத்தியத்துடன் முரண்படுகின்றன. உங்கள் பகுத்தறிவால் தேவனுடைய கிரியையை முழுமையாகப் பிரிக்க முடியுமா? யேகோவாவின் எல்லா கிரியைக்குள்ளும் உள்ள உள்நோக்கத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? ஒரு மனிதனாக உன்னால் அதை அறிந்துகொள்ள முடியுமா அல்லது நித்தியத்திலிருந்து நித்தியம் வரை காணக்கூடிய தேவனால் அறிந்துகொள்ள முடியுமா? வெகு காலத்திற்கு முந்தைய நித்தியத்திலிருந்து வரவிருக்கும் நித்தியம் வரை உன்னால் காண முடியுமா அல்லது அவ்வாறு செய்யக்கூடிய தேவனால் முடியுமா? நீ என்ன சொல்கிறாய்? தேவனைக் குறித்து விவரிக்க நீ எவ்விதத்தில் தகுதியுள்ளவனாக இருக்கிறாய்? உன் விளக்கம் எதன் அடிப்படையிலானது? நீ தேவனா? வானமும், பூமியும், யாவும் தேவனாலேயே சிருஷ்டிக்கப்பட்டவையாகும். இதைச் செய்தது நீ அல்ல, அப்படி இருக்கும்போது நீ ஏன் தவறான விளக்கங்களைக் கொடுக்கிறாய்? இப்போது, நீ திரித்துவ தேவனை தொடர்ந்து நம்புகிறாயா? இவ்விதமாக அது மிகவும் பாரமாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? நீ மூவரை அல்ல, ஒரே தேவனை விசுவாசிப்பது சிறந்தது. ஒளியாக இருப்பது சிறந்தது, ஏனென்றால் கர்த்தருடைய பாரம் ஒளியாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "திரித்துவம் என்பது உண்டா?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க