நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?

இப்போது நீங்கள் உயிர்வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமானதாகும், இது உங்கள் இலக்குக்கும் உங்கள் விதிக்கும் மிகவும் முக்கியமானதாகும், எனவே இன்று உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்க வேண்டும், மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்தையும் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். நீங்கள் இந்த வாழ்க்கையை வீணாக வாழ்ந்திருக்காத விதத்தில், உங்களால் முடிந்தவரை அதிக ஆதாயங்களைப் பெறும் விதத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவழித்து உங்களை செதுக்கவேண்டும். நான் ஏன் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசுகிறேன் என்று நீங்கள் குழப்பமடையலாம். வெளிப்படையாகச் சொல்வதானால், உங்கள் யாருடைய நடத்தையிலும் எனக்குச் சிறிதளவும் மகிழ்ச்சியில்லை, ஏனென்றால் உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைகள் இன்று நீங்கள் இருப்பது போல இல்லை. அதனால்தான், நான் இப்படிச் சொல்கிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள், உங்கள் கடந்த காலம் உதவிக்காக கண்ணீர் வடிக்கிறது, மேலும் சத்தியத்தைத் தொடர்வதற்கான மற்றும் வெளிச்சத்தைத் தேடுவதற்கான முன்னாள் இலக்குகள் அவற்றின் முடிவை நெருங்குகின்றன. இதுதான் உங்கள் கைமாற்றின் இறுதிக் காட்சி, இது நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்றாகும். நீங்கள் என்னைப் பெரிதும் ஏமாற்றிவிட்டீர்கள் என்பதற்காக உண்மைகளுக்கு மாறாக நான் பேச விரும்பவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம், நிஜத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம், ஆனாலும் நான் இதை உங்களிடம் கண்டிப்பாகக் கேட்டாக வேண்டும்: இத்தனை வருடங்கள், உங்கள் இருதயங்கள் சரியாக எதனால் நிரப்பப்பட்டுள்ளன? அவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லாதீர்கள், நான் ஏன் இதுபோன்ற காரியங்களைக் கேட்டேன் என்று என்னிடம் கேட்காதீர்கள். இதை அறிந்து கொள்ளுங்கள்: ஏனென்றால் உங்களை எனக்கு நன்றாக தெரியும், உங்கள் மீது மிகவும் அதிகமாக அக்கறை காட்டுகிறேன், உங்கள் நடத்தையிலும் செய்கைகளிலும் எனது இருதயத்தை மிகவும் அதிகமாக ஈடுபடுத்தியுள்ளேன், எனவே நிறுத்தாமலும் கசப்பான மனநிலை கொள்ளாமலும் உங்கள் தவறுக்குக் கணக்குக் கொடுக்குமாறு உங்களை அழைத்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் எனக்கு அக்கறையின்மையையும் தாங்க முடியாத பிரிவையும் தவிர வேறு எதையும் திருப்பித் தரவில்லை. நீங்கள் என்னைக் குறித்து மிகவும் அலட்சியமாக இருக்கிறீர்கள்; எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்க சாத்தியமுள்ளதா? நீங்கள் இதைத்தான் நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையிலேயே என்னை தயவுடன் நடத்தவில்லை என்பதையே இது மேலும் நிரூபிக்கிறது. எனவே, உங்கள் தலைகளை நீங்கள் மணலில் புதைக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருக்கிறீர்கள், அப்படியானால் எனக்குக் கணக்குக் கொடுப்பதற்கு நீங்கள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்கிற கேள்வி என்னவென்றால், உங்கள் இருதயங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள், யாருக்காக வாழ்கிறீர்கள் என்று உங்களுக்குள்ளேயே கேட்க முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் இந்த கேள்விகளைப் பற்றி ஒருபோதும் கவனமாக சிந்திக்காமல் இருந்திருக்கலாம், எனவே நான் உங்களுக்குப் பதில்களை வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்?

மனிதன் தனக்காகவே வாழ்கிறான், தனக்கே விசுவாசமாக இருக்கிறான் என்ற உண்மையை ஞாபகசக்தி கொண்ட எவரும் ஒப்புக்கொள்வார்கள். உங்கள் பதில்கள் முற்றிலும் சரியாக இருக்கும் என்று நான் நம்பமாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வாழ்க்கையில் வாழ்கிறீர்கள், ஒவ்வொருவரும் உங்கள் சொந்தத் துயரத்தில் துயரப்படுகிறீர்கள். நீங்கள் நேசிக்கிறவர்களுக்கும், உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களுக்குமே விசுவாசமாக இருக்கிறீர்கள்; நீங்கள் உங்களுக்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சுற்றியுள்ள மக்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்களால் தூண்டப்படுவதனால், நீங்கள் உண்மையிலேயே உங்களுக்கு விசுவாசமாக இல்லை. நீங்கள் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்காக அல்ல, ஏதாவது ஒரு காரியத்தில் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதற்காகவே நான் இந்த வார்த்தைகளைப் பேசுகிறேன், ஏனென்றால் பல வருடங்களாக, உங்களில் யாரிடமிருந்தும் நான் ஒருபோதும் விசுவாசத்தைப் பெறவில்லை. இத்தனை வருடங்கள் நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் என் மீது சிறிதளவு கூட விசுவாசத்தைக் காண்பிக்கவில்லை. மாறாக, நீங்கள் நேசிக்கும் நபர்களையும் உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களையும் சுற்றியே பெரிதும் வலம் வந்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் எல்லா நேரங்களிலும், அவற்றை உங்கள் இருதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள், அவற்றை ஒருபோதும் கைவிடவில்லை. நீங்கள் நேசிக்கிற எந்தவொரு காரியத்தைப் பற்றியும் நீங்கள் ஆர்வமாக அல்லது ஆவலாக இருக்கும்போதெல்லாம், நீங்கள் என்னைப் பின்பற்றும் போது அல்லது என் வார்த்தைகளைக் கேட்கும்போதுகூட இதுதான் நடக்கிறது. ஆகையால், நான் உங்களிடம் கேட்கும் விசுவாசத்தை, நீங்கள் விரும்பும் உங்களது “விருப்பமானவைகளுக்கு” பயன்படுத்தி எனக்குப் பதிலாக அவைகளுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் எனக்காக ஒன்று அல்லது இரண்டு காரியங்களைத் தியாகம் செய்தாலும், அது உங்களுக்குரிய அனைத்தையும் குறிப்பிடாது, மேலும் நீங்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்காது. உங்களுக்கு ஆர்வமுள்ள காரியங்களிலேயே நீங்கள் ஈடுபாட்டுடன் காணப்படுகிறீர்கள்: சிலர் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், மற்றவர்கள் கணவன்மார்கள், மனைவிமார்கள், செல்வம், வேலை, மேலதிகாரிகள், அந்தஸ்து அல்லது பெண்கள் ஆகியோருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். நீங்கள் விசுவாசமாக இருக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர மாட்டீர்கள்; மாறாக, இந்தக் காரியங்களை அதிக அளவிலும் உயர் தரத்திலும் வைத்திருக்க நீங்கள் இன்னும் ஆர்வம் கொள்வீர்கள், நீங்கள் ஒருபோதும் அவற்றை விட்டுவிட மாட்டீர்கள். நானும் எனது வார்த்தைகளும் நீங்கள் ஆர்வமாக இருக்கிற பொருட்களுக்குப் பின்னாலேயே தள்ளப்படுகிறோம். அவற்றை கடைசியாக வரிசைப்படுத்துவதற்கு உங்களுக்கு வேறு வழியில்லை. தாங்கள் விசுவாசமாக இருக்கிற காரியங்களை கடைசி இடத்தில் வைக்கிறவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய இருதயங்களில் என்னைப் பற்றிய ஒரு சிறிய தடயம்கூட இருப்பதில்லை. நான் உங்களிடம் அதிகம் கேட்பதாக அல்லது உங்கள் மீது தவறாகக் குற்றஞ்சாட்டுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும்போது, நீங்கள் ஒருபோதும் எனக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்ற உண்மையை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற நேரங்களில், இது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்போதும், உங்கள் உழைப்புகளுக்காக நீங்கள் வெகுமதி பெறும்போதும், போதுமான சத்தியத்தினால் நீங்கள் நிரப்பப்படவில்லை என்று நீங்கள் சோகமாக உணரவில்லையா? எனது அங்கீகாரத்தைப் பெறாததற்காக நீங்கள் எப்போது அழுதீர்கள்? உங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் திருப்தியடையவில்லை; அவர்கள் சார்பாக நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், அவர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யவில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும், என்னைப் பற்றி நீங்கள் எப்போதும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருக்கிறீர்கள்; நான் உங்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறேன், ஆனால் நான் உங்கள் இருதயங்களில் வசிக்கவில்லை. எனது அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் நீங்கள் ஒருபோதும் உணர்வதில்லை, நீங்கள் அவற்றை ஒருபோதும் பாராட்டியதில்லை. நீங்கள் சுருக்கமான பிரதிபலிப்பில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள், இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறீர்கள். நான் நீண்ட காலமாக ஏங்கிய “விசுவாசம்” இது அல்ல, ஆனால் நான் இதை நீண்ட காலமாக வெறுக்கிறேன். ஆனாலும், நான் என்ன சொன்னாலும், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு காரியங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள்; உங்களால் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் நீங்கள் அனைவரும் மிகவும் “தன்னம்பிக்கையுடன்” இருக்கிறீர்கள், நான் பேசிய வார்த்தைகளிலிருந்து எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் தேர்வு செய்கிறீர்கள். நீங்கள் இன்றும் இவ்வாறே இருந்தால், உங்கள் தன்னம்பிக்கையைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள் என்னிடம் உள்ளன. மேலும் என்னவென்றால், எனது வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை என்றும், அவற்றில் எதுவும் சத்தியங்களைச் சிதைக்காது என்றும் உங்களை ஒப்புக்கொள்ள வைப்பேன்.

இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தைத் தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஓர் அமைதியான குடும்பத்திற்கும் உடைந்த குடும்பத்திற்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்; செல்வத்திற்கும் கடமைக்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், கரைக்குத் திரும்ப[அ] விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள்; ஆடம்பரத்திற்கும் வறுமைக்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்களுக்கும் எனக்கும் இடையில் யாரை தேர்வு செய்வது என்று வரும்போது, நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; கருத்துக்கும் சத்தியத்திற்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைத்து விதமான உங்கள் தீய செயல்களையும் பார்த்த நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டேன். உங்கள் இருதயங்கள் மென்மையாக இருக்க பெரிதும் மறுக்கின்றன என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாகச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்? இன்னும் முந்தையதாகவே இருக்குமா? நீங்கள் இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் தாங்க முடியாத துக்கத்தையுமே கொண்டு வருவீர்களா? உங்கள் இருதயங்கள் இன்னும் சிறிதளவு சௌகரியத்திலேயே இருக்குமா? என் இருதயத்தை ஆறுதல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? இந்த நேரத்தில், நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஒப்புக்கொடுப்பீர்களா அல்லது அவற்றில் சோர்வடைவீர்களா? எனது நாள் உங்கள் கண்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் எதிர்கொள்வது ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியாகும். இருப்பினும், இந்தத் தொடக்கப் புள்ளி கடந்த புதிய வேலையின் ஆரம்பம் அல்ல, ஆனால் பழைய வேலையின் முடிவு என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதாவது, இதுதான் இறுதிச் செயல். இந்தத் தொடக்கப் புள்ளி பற்றிய அசாதாரணமானது எது என்பதை உங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இருப்பினும், விரைவில் ஒரு நாளில், இந்தத் தொடக்க புள்ளியின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், எனவே நாம் அதை ஒன்றாகக் கடந்து சென்று, வரவிருக்கும் முடிவை வரவேற்போம்! ஆனாலும், உங்களைப் பற்றிய எனது தொடர்ச்சியான கவலை என்னவென்றால், அநீதியையும் நீதியையும் எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்போதும் முந்தையதையே தேர்வு செய்கிறீர்கள். இருப்பினும், இவை எல்லாம் உங்கள் கடந்த காலத்தில் நடந்தவை. இதைச் செய்வது மிகவும் கடினம் என்றாலும், நான் உங்களுடைய கடந்த காலச் செயல்கள் அனைத்தையும் மறந்துவிடுவேன் என்று நம்புகிறேன். ஆனாலும், அதைச் செய்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறை என்னிடம் உள்ளது: எதிர்காலம் கடந்த காலத்தை மாற்றட்டும், உங்களுடைய இன்றைய உண்மையான சுயத்தைக் கொடுத்து உங்கள் கடந்த காலத்தின் நிழல்களைப் போக்க விடுங்கள். எனவே ஒரு முறைக்கூட தேர்வு செய்ய நான் உங்களைத் தொந்தரவு செய்துதான் ஆகவேண்டும்: நீங்கள் உண்மையில் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள்?

அடிக்குறிப்பு:

அ. கரைக்குத் திரும்புதல்: இது ஒரு சீன வழக்குச் சொல், இதற்கு “தீய வழிகளில் இருந்து திரும்புதல்” என்று அர்த்தம்.

முந்தைய: நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து

அடுத்த: சென்றடையும் இடம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக