பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்

நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மேலும், நீ அனுபவிக்க வேண்டிய விஷயங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும். உன்னால் தேவனை அனுபவிக்க முடிந்தாலும், தேவன் உன்னை சிட்சிக்கும்போது அல்லது தேவன் உன்னைக் கையாளும் போது உன்னால் உணர முடியாமல் இருந்தால், தேவன் உன்னைக் கையாள்வதையும், உன்னை சிட்சிப்பதையும், நியாயந்தீர்ப்பதையும் மட்டுமே அனுபவித்தால்—இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்தச் சுத்திகரிப்பின் நிகழ்வில், உன்னால் உறுதியாக நிற்க முடியும், ஆனாலும் இன்னும் போதுமானதாக இது இல்லை. நீ இன்னும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தேவனை நேசிப்பதன் பாடம் ஒருபோதும் நின்றுவிடாது மற்றும் அதற்கு முடிவும் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பது மிகவும் எளிமையான ஒன்று என்று பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் சில நடைமுறை அனுபவங்களைப் பெற்றவுடன், தேவனை விசுவாசிப்பது என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல் எளிதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மனிதனைச் சுத்திகரிக்க தேவன் கிரியை செய்யும்போது, மனிதன் துன்பமடைகிறான். ஒரு மனிதனுடைய சுத்திகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை நேசிப்பார்கள் மற்றும் தேவனுடைய வல்லமை அவர்களில் வெளிப்படும். மாறாக, மனிதர் எவ்வளவு குறைவான சுத்திகரிப்பினைப் பெறுகிறாரோ, தேவன் மீதான அவர்களுடைய அன்பும் அவ்வளவு குறைவாகவே இருக்கும் மற்றும் தேவனுடைய வல்லமை அவ்வளவு குறைவாகவே அவர்களில் வெளிப்படும். அத்தகைய ஒரு மனிதன் எவ்வளவு அதிகமான சுத்திகரிப்பு மற்றும் வலியை மற்றும் எவ்வளவு அதிகமான வேதனையை அனுபவிக்கிறானோ, அவனிடம் தேவன் மீது அவ்வளவு ஆழமான அன்பு வளரும், தேவன்மீது அவன் கொண்டுள்ள விசுவாசம் அவ்வளவு உண்மையானதாகவும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு அவ்வளவு ஆழமானதாகவும் இருக்கும். உன் அனுபவங்களில், சுத்திகரிக்கப்பட்டதற்கு அதிகமாகத் துன்பப்படுபவர்களை, கையாளப்படுபவர்களை, ஒழுங்குபடுத்தப்படுபவர்களைக் காண்பாய் மற்றும் தேவன்மீது ஆழ்ந்த அன்பும், தேவனைப் பற்றிய ஆழமான மற்றும் கூர்மையான அறிவும் கொண்டவர்களை நீ காண்பாய். கையாளப்படுவதை அனுபவிக்காதவர்களுக்கு மேலோட்டமான அறிவு இருக்கிறது, ஆனால், “தேவன் மிகவும் நல்லவர், ஜனங்கள் அவரை அனுபவிக்கும்படிக்கு அவர் அவர்களுக்குக் கிருபையை அளிக்கிறார்,” என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடியும். ஜனங்கள் கையாளப்படுவதையும் ஒழுங்குபடுத்தப்படுவதையும் அனுபவித்திருந்தால், தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பற்றி அவர்களால் பேச முடியும். ஆகவே, மனிதனில் தேவனுடைய கிரியை எவ்வளவு அதிசயமானதாக இருக்கிறதோ அவ்வளவாக அது மதிப்புமிக்கதாக மற்றும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உனக்கு இது எவ்வளவு அசாத்தியமானதாக இருக்கிறதோ மற்றும் உன் கருத்துக்களுடன் எவ்வளவாக பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வளவாக தேவனுடைய கிரியையால் உன்னை ஜெயங்கொள்ளவும், உன்னை ஆதாயப்படுத்தவும், உன்னைப் பரிபூரணமாக்கவும் முடியும். தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! தேவன் மனிதனை இவ்வாறு சுத்திகரிக்கவில்லை என்றால், அவர் இந்த முறையின்படி கிரியை செய்யவில்லை என்றால், அவருடைய கிரியை பயனற்றதாக மற்றும் முக்கியத்துவம் இல்லாததாக இருந்திருக்கும். தேவன் இந்தக் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆதாயம் செய்வார் என்றும், கடைசி நாட்களில் அவர்களை பரிபூரணமாக்குவார் என்றும் கடந்த காலத்தில் கூறப்பட்டது. இதில், அசாதாரண முக்கியத்துவம் உள்ளது. அவர் உங்களுக்குள் எவ்வளவு பெரிய கிரியையைச் செய்கிறாரோ, அவ்வளவாக தேவன் மீதான உங்கள் அன்பு ஆழமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவாக மனிதனால் அவருடைய ஞானத்திலிருந்து ஏதேனும் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது மற்றும் அவரைப் பற்றிய மனிதனுடைய அறிவும் அவ்வளவு ஆழமானதாக இருக்கிறது. கடைசி நாட்களில், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகம் முடிவுக்கு வரும். உண்மையில் அது எளிதாக முடிவுக்கு வந்துவிட முடியுமா? அவர் மனிதகுலத்தை ஜெயங்கொண்டதும், அவருடைய கிரியை முடிந்துவிடுமா? இது மிகவும் எளிமையானதாக இருக்க முடியுமா? இது மிகவும் எளிதானது என்றுகூட ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால் தேவன் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தேவனுடைய கிரியையின் எந்தப் பகுதியை நீ குறிப்பிட விரும்பினாலும், அவை அனைத்தும் மனிதனுக்குப் புரியாதவையாக இருக்கின்றன. உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், தேவனுடைய கிரியை முக்கியத்துவம் அல்லது மதிப்பு இல்லாமல் இருக்கும். தேவன் செய்த கிரியை என்பது புரிந்துகொள்ள முடியாதது. இது உன் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மற்றும் இது உன் கருத்துக்களுக்கு மிகவும் முரண்பட்டதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அர்த்தமுள்ளதாக இருப்பதை இது காட்டுகிறது. அது உன் கருத்துக்களுடன் பொருந்தக்கூடியதாக இருந்தால், அது அர்த்தமற்றதாக இருக்கும். இன்று, தேவனுடைய கிரியை மிகவும் அதிசயமானது என்று நீ உணர்கிறாய். தேவனுடைய கிரியையை எவ்வளவு அதிகமாக அதிசயமானதென்று நீ உணர்கிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் புரிந்துகொள்ள முடியாதவர் என்று நீ உணர்கிறாய் மற்றும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு பெரியவை என்பதை நீ காண்கிறாய். மனிதனை ஜெயங்கொள்ள அவர் மேலோட்டமான, செயலற்ற கிரியைகளை மட்டுமே செய்து, வேறு எதுவும் செய்யவில்லை என்றால், மனிதனால் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவத்தைக் கண்டிருக்க முடியாது. நீ இப்போது ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய் என்றாலும், உன் ஜீவிதத்தில் உன் வளர்ச்சிக்கு இது மிகவும் பயனளிக்கிறது. எனவே, நீங்கள் இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இன்று, நீ ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய், ஆனால் அதன் பிறகு நீ உண்மையாகவே தேவனுடைய கிரியைகளைக் காண முடியும். இறுதியில், நீ சொல்வாய்: “தேவனுடைய கிரியைகள் மிகவும் அதிசயமானவை!” இவை உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளாக இருக்கும். சிறிது காலம் தேவனுடைய சுத்திகரிப்பினை அனுபவித்த பின்னர் (ஊழியக்காரர்களின் சோதனை மற்றும் சிட்சையின் காலத்திற்குப் பின்னர்), இறுதியாக சிலர் சொன்னார்கள்: “தேவனை விசுவாசிப்பது மிகவும் கடினம்!” “மிகவும் கடினம்” என்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தியிருப்பது, தேவனுடைய கிரியைகள் புரிந்துகொள்ள முடியாதவை என்பதையும், தேவனுடைய கிரியை மிகுந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது என்பதையும், அவருடைய கிரியை மனிதனால் பொக்கிஷமாகக் காத்துக்கொள்ளப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்பதையும் காட்டுகிறது. நான் இவ்வளவு கிரியைகளைச் செய்த பிறகும், உன்னிடம் சிறிதளவு அறிவும் இல்லை என்றால், என் கிரியைக்கு மதிப்பு இருக்க முடியுமா? “தேவனுக்கு ஊழியம் செய்வது மிகவும் கடினம், தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை, தேவன் உண்மையாகவே ஞானமுள்ளவர்! தேவன் மிகவும் அழகானவர்!” என்று இது உன்னைச் சொல்ல வைக்கும். ஒரு காலகட்ட அனுபவத்திற்குப் பிறகு, நீ அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல முடிந்தால், நீ தேவனுடைய கிரியையை உனக்குள் பெற்றிருக்கிறாய் என்பதை இது நிரூபிக்கிறது. ஒரு நாள், நீ வெளிநாட்டில் சுவிசேஷத்தைப் பரப்புகையில், “தேவன் மீதான உன் விசுவாசம் எவ்வாறாக இருக்கிறது?” என்று ஒருவர் உன்னிடம் கேட்டால், “தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை!” என்று உன்னால் சொல்ல முடியும். உன் வார்த்தைகள் உண்மையான அனுபவங்களைப் பற்றி பேசுவதை அவர்கள் உணருவார்கள். உண்மையாகவே இது சாட்சி பகருவதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை ஞானத்தால் நிறைந்தது என்று நீ கூறுவாய், உன்னில் அவர் செய்த கிரியை உன்னை உண்மையாகவே சமாதானப்படுத்தி உன் இருதயத்தை ஜெயங்கொண்டது. நீ அவரை எப்போதும் நேசிப்பாய், ஏனென்றால் அவர் மனிதகுலத்தின் அன்பிற்கு தகுதியானவர்! இந்த விஷயங்களை உன்னால் பேச முடியும் என்றால், உன்னால் ஜனங்களின் இருதயங்களை அசைக்க முடியும். இவை அனைத்தும் சாட்சி பகருகிறவைகளாக இருக்கின்றன. உண்மையாகவே உன்னால் மாபெரும் சாட்சி கொடுக்க முடியுமானால், ஜனங்களை கண்ணீர் சிந்த வைக்க முடியுமானால், உண்மையாகவே நீ தேவனை நேசிக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், தேவனை நேசிப்பதற்கு உன்னால் சாட்சியளிக்க முடிகிறது மற்றும் உன் மூலமாக, தேவனுடைய கிரியைகளால் சாட்சி கொடுக்க முடிகிறது. உன் சாட்சியின் மூலம், மற்றவர்கள் தேவனுடைய கிரியையை நாடுவதற்கும், தேவனுடைய கிரியையை அனுபவிப்பதற்கும், அவர்கள் அனுபவிக்கும் எந்தச் சூழலிலும் அவர்கள் உறுதியாக நிற்குமாறும் செய்யப்படுகிறார்கள். சாட்சி அளிப்பதற்கான ஒரே உண்மையான வழி இதுதான். இப்போது உன்னிடம் எதிர்பார்க்கப்படுவதும் இதுவே. தேவனுடைய கிரியை மிகவும் மதிப்புமிக்கது மற்றும் ஜனங்கள் பொக்கிஷமாகக் காத்துக்கொள்ள தகுதியானது என்பதை நீ காண வேண்டும். தேவன் மிகவும் விலைமதிப்பற்றவர் மற்றும் தாராளமானவர். பேசுவது மட்டுமல்லாமல், அவரால் ஜனங்களை நியாயந்தீர்க்கவும், அவர்களுடைய இருதயங்களைச் சுத்திகரிக்கவும், அவர்களுக்கு இன்பம் தரவும், அவர்களை ஆதாயப்படுத்தவும், ஜெயங்கொள்ளவும், அவர்களைப் பரிபூரணமாக்கவும் முடியும். தேவன் மிகவும் அன்பானவர் என்பதை உன் அனுபவத்திலிருந்து நீ காண்பாய். எனவே, நீ இப்போது தேவனை எவ்வளவாக நேசிக்கிறாய்? உண்மையாகவே இந்த விஷயங்களை உன் இருதயத்திலிருந்து உன்னால் சொல்ல முடியுமா? உன் இருதயத்தின் ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை உன்னால் வெளிப்படுத்த முடிந்தால், உன்னால் சாட்சி கொடுக்க முடியும். உன் அனுபவம் இந்த நிலையை அடைந்தவுடன், தேவனுக்கு உன்னால் சாட்சி கொடுக்க முடியும் மற்றும் நீ தகுதி பெறுவாய். உன் அனுபவத்தில் இந்த நிலையை நீ அடையவில்லை என்றால், நீ இன்னும் வெகுதொலைவில் இருப்பாய். சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது ஜனங்கள் பலவீனங்களைக் காண்பிப்பது இயல்பானது. ஆனால் சுத்திகரிப்புக்குப் பிறகு, “தேவன் அவருடைய கிரியையில் மிகவும் ஞானமுள்ளவர்!” என்று உன்னால் சொல்ல முடியும். இந்த வார்த்தைகளின் நடைமுறைப் புரிதலை உன்னால் உண்மையாகவே அடைய முடிந்தால், அது நீ மதிக்க வேண்டிய ஒன்றாக மாறும் மற்றும் உன் அனுபவத்திற்கு மதிப்பு இருக்கும்.

இப்போது நீ எதனை நாட வேண்டும்? தேவனுடைய கிரியைக்கு நீ சாட்சி அளிக்க வல்லவனாக இருக்கிறாயா இல்லையா, உன்னால் ஒரு சாட்சியாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும் மாற முடியுமா இல்லையா மற்றும் நீ அவரால் பயன்படுத்தப்பட தகுதியுடையவனா இல்லையா என நீ தேட வேண்டியவை இவையே. தேவன் உண்மையில் உன்னில் எவ்வளவு கிரியை செய்திருக்கிறார்? நீ எவ்வளவாக பார்த்திருக்கிறாய் மற்றும் எவ்வளவாக உணர்ந்திருக்கிறாய்? நீ எவ்வளவாக அனுபவித்திருக்கிறாய் மற்றும் ருசித்திருக்கிறாய்? தேவன் உன்னைச் சோதித்தாரா, உன்னுடன் செயல்பட்டாரா அல்லது உன்னை ஒழுங்குபடுத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய செயல்களும் அவருடைய கிரியையும் உன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தேவனை விசுவாசிப்பவனாகவும், அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதைத் தொடர விரும்பும் ஒருவனாகவும், உன் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் தேவனுடைய கிரியைக்கு உன்னால் சாட்சி கொடுக்க முடியுமா? உன் நடைமுறை அனுபவத்தின் மூலமாக தேவனுடைய வார்த்தையின்படி உன்னால் ஜீவிக்க முடியுமா? உன் சொந்த நடைமுறை அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்கு உன்னால் வழங்க முடியுமா மற்றும் தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்க உன் முழு ஜீவிதத்தையும் உன்னால் செலவிட முடியுமா? தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்க, உன் அனுபவம், அறிவு மற்றும் நீ செலுத்திய விலை ஆகியவற்றை நீ நம்ப வேண்டும். இவ்வாறு மட்டுமே நீ அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். நீ தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்கிற ஒருவனாக இருக்கிறாயா? உன்னிடம் இந்த விருப்பம் இருக்கிறதா? அவருடைய பெயருக்கு உன்னால் சாட்சி அளிக்க முடிந்தால், இன்னும் அதிகமாக, அவருடைய கிரியைக்கு, அவருடைய ஜனங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் அடையாளத்தில் உன்னால் ஜீவிக்க முடிந்தால், நீ தேவனுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறாய். தேவனுக்கு நீ எவ்வாறு உண்மையாகச் சாட்சி கொடுப்பாய்? தேவனுடைய வார்த்தையை நாடுவதன் மூலமும், உன் வார்த்தைகளால் சாட்சி அளிப்பதன் மூலமும், அவருடைய கிரியையை அறிந்துகொள்ளவும், அவருடைய கிரியைகளைக் காணவும் ஜனங்களை அனுமதிப்பதன் மூலமும் நீ இதைச் செய்கிறாய். இவை அனைத்தையும் நீ உண்மையாகவே நாடினால், தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார். நீ தேடுவது அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு, இறுதியில் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தால், தேவன்மீது நீ வைத்திருக்கும் இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தூய்மையானதல்ல. நிஜ ஜீவிதத்தில் தேவனுடைய கிரியைகளை எவ்வாறு காண்பது, அவர் தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்தும்போது அவரை எவ்வாறு திருப்திப்படுத்துவது, அவருடைய அதிசயத்திற்கும் ஞானத்திற்கும் நீ எவ்வாறு சாட்சி அளிக்க வேண்டும் என்பதையும், அவர் எவ்வாறு உன்னை ஒழுங்குபடுத்துகிறார், சரிப்படுத்துகிறார் என்பதற்கு நீ எவ்வாறு சாட்சி கொடுக்க வேண்டும் என்பதையும் நீ தேட வேண்டும். இவை அனைத்தும் இப்போது நீ சிந்திக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. தேவன் மீது நீ வைத்திருக்கும் அன்பானது அவர் உன்னைப் பரிபூரணமாக்கிய பிறகு தேவனுடைய மகிமையில் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக மட்டுமே இருந்தால், அது இன்னும் போதுமானதாக இல்லை மற்றும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை அதனால் பூர்த்தி செய்ய முடியாது. தேவனுடைய கிரியைக்கு உன்னால் சாட்சி கொடுக்கவும், அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவும், அவர் ஜனங்கள் மீது செய்த கிரியையை ஒரு நடைமுறை வழியில் அனுபவிக்கவும் முடியும். வலி, கண்ணீர், சோகம் எதுவாக இருந்தாலும், இவை அனைத்தையும் நடைமுறையில் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுக்குச் சாட்சி கொடுக்கின்ற உன்னைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவை உள்ளன. நீ கஷ்டப்படுவதற்கும் பரிபூரணத்தைத் தேடுவதற்கும், சரியாக, இப்போது எது உன்னை வலியுறுத்துகிறது? உண்மையாகவே உன் தற்போதைய துன்பமானது தேவனை நேசிப்பதற்காகவும், அவருக்காக சாட்சி கொடுப்பதற்காகவும் இருக்கிறதா? அல்லது அது மாம்சத்தின் ஆசீர்வாதங்களுக்காகவும், உன் எதிர்கால வாய்ப்புகளுக்காகவும், தலைவிதிக்காகவும் இருக்கிறதா? உன் நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் நீ பின்தொடரும் குறிக்கோள்கள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் அவற்றை உன் சொந்த விருப்பத்தால் வழிநடத்த முடியாது. ஒரு மனிதன் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அதிகாரத்திலிருந்து ஆட்சி செய்வதற்கும் பரிபூரணத்தை நாடினால், மற்றொரு மனிதன் தேவனைத் திருப்திப்படுத்தவும், தேவனுடைய கிரியைக்கு நடைமுறை சாட்சி அளிக்கவும் பரிபூரணத்தைத் தேடுகிறான் என்றால், பின்தொடர்வதற்கான இந்த இரண்டு வழிகளில் நீ எதைத் தேர்வு செய்வாய்? நீ முதலிலுள்ளதைத் தேர்வுசெய்தால், நீ இன்னும் தேவனுடைய தரத்திலிருந்து வெகுதொலைவில் இருப்பாய். எனது கிரியைகள் உலகங்கள் முழுவதிலும் வெளிப்படையாக அறியப்படும் என்றும் நான் உலகங்களில் ராஜாவாக ஆட்சி செய்வேன் என்றும் முன்பு சொன்னேன். மறுபுறம், உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தேவனுடைய கிரியைக்கு சாட்சி அளிக்கும்படியாக வெளியே செல்வது என்பது, ராஜாக்களாகி உலகங்கள் முழுவதற்கும் தோன்றுவது அல்ல. தேவனுடைய கிரியைகள் அகிலத்தையும், ஆகாயவிரிவையும் நிரப்பட்டும். எல்லாரும் அவற்றைப் பார்த்து ஒப்புக்கொள்ளட்டும். இந்த வார்த்தைகள் தேவனோடு தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகின்றன மற்றும் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தேவனுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். இப்போது தேவனை உனக்கு எவ்வளவு தெரியும்? தேவனுக்கு உன்னால் எவ்வளவாக சாட்சி கொடுக்க முடியும்? தேவன் மனிதனை பரிபூரணமாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொண்டவுடன், அவருடைய சித்தத்தை எவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும்? நீ பரிபூரணமாக இருக்க விரும்பினால், நீ அனுபவிப்பதன் மூலம் தேவனுடைய கிரியைக்குச் சாட்சி அளிக்க விரும்பினால், இந்த ஏவுதல் உன்னிடம் இருந்தால், எதுவும் மிகக் கடினமானதாக இருக்காது. இப்போது ஜனங்களுடைய தேவையாக விசுவாசம் இருக்கிறது. உன்னிடம் இந்த ஏவுதல் இருந்தால், எந்தவொரு எதிர்மறையான எண்ணம், செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் மாம்சத்தின் கருத்துக்கள், ஜீவிப்பதற்கான தத்துவங்கள், கலகத்தனமான மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் பலவற்றை நீ விட்டுவிடுவது எளிதாக இருக்கும்.

சோதனைகளுக்கு உள்ளாகும்போது, ஜனங்கள் பலவீனமாக இருப்பது அல்லது அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணம் இருப்பது அல்லது தேவனுடைய சித்தம் அல்லது நடப்பதற்கான அவர்களுடைய பாதை குறித்து தெளிவு இல்லாதிருப்பது ஆகியவை இயல்பானவை. எப்படியிருந்தாலும், நீ தேவனுடைய கிரியையில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். யோபுவைப் போலவே தேவனை மறுக்கக்கூடாது. யோபு பலவீனமாக இருந்தபோதும், தன் பிறந்த நாளையே சபித்தாலும், மனித ஜீவிதத்தின் அனைத்தும் யேகோவாவால் வழங்கப்பட்டது என்பதையும், அவை அனைத்தையும் எடுத்துச் செல்லும் ஒருவராக இருப்பதும் யேகோவா என்பதையும் அவன் மறுக்கவில்லை. அவன் எவ்வாறு சோதிக்கப்பட்டாலும், அவன் இந்த நம்பிக்கையை நிலைநாட்டினான். உன் அனுபவத்தில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நீ எந்தச் சுத்திகரிப்புக்கு உட்பட்டாலும், மனிதகுலத்திடம் தேவன் விரும்புவது என்னவென்றால், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய விசுவாசமும், அவர்மீதுள்ள அன்புமாக இருக்கின்றன. இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் ஜனங்களின் விசுவாசம், அன்பு மற்றும் விருப்பங்களைப் பரிபூரணப்படுத்துகிறார். தேவன் ஜனங்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார், அவர்களால் அதைப் பார்க்க முடியாது மற்றும் உணர முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், உன் விசுவாசம் தேவைப்படுகிறது. எதையாகிலும் மனிதக் கண்ணால் பார்க்க முடியாதபோது ஜனங்களின் விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் உன் சொந்தக் கருத்துக்களை விட்டுவிட முடியாதபோது உன் விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவு இல்லாதபோது, உன்னிடம் எதிர்பார்க்கப்படுவது விசுவாசம் மற்றும் நீ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சாட்சியாக இருப்பதும் ஆகும். யோபு இந்த நிலையை அடைந்தபோது, தேவன் அவனுக்குத் தோன்றி அவனிடம் பேசினார். அதாவது, உன் விசுவாசத்திலிருந்தே நீ தேவனைக் காண முடியும் மற்றும் உனக்கு விசுவாசம் இருக்கும்போது தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார். விசுவாசம் இல்லாமல், தேவனால் இதைச் செய்ய முடியாது. நீ எதை எதிர்பார்க்கிறாயோ அதை தேவன் உனக்கு வழங்குவார். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ பரிபூரணமாக்கப்பட முடியாது மற்றும் தேவனுடைய கிரியைகளை உன்னால் காண முடியாது, அவருடைய சர்வ வல்லமையையும் உன்னால் காண முடியாது. உன் நடைமுறை அனுபவத்தில் அவருடைய கிரியைகளை நீ காண்பாய் என்று உனக்கு விசுவாசம் இருக்கும்போது, தேவன் உனக்குத் தோன்றுவார் மற்றும் அவர் உனக்கு அறிவொளியைத் தருவார் மற்றும் உனக்குள்ளிருந்து உன்னை வழிநடத்துவார். அந்த விசுவாசம் இல்லாமல், தேவனால் அதைச் செய்ய முடியாது. நீ தேவன் மீதான நம்பிக்கையை இழந்திருந்தால், அவருடைய கிரியையை உன்னால் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஆகையால், நீ விசுவாசம் வைத்திருக்கும்போது, நீ தேவன் மீது சந்தேகம் கொள்ளாமலும் இருக்கும்போது மற்றும் அவர் என்ன செய்தாலும் அவர் மீது உண்மையான விசுவாசம் இருக்கும்போது மட்டுமே, அவர் உன் அனுபவங்களின் மூலம் உனக்கு அறிவொளிவூட்டி உன்னை பிரகாசிக்கச் செய்வார். அப்போதுதான் உன்னால் அவருடைய கிரியைகளைக் காண முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் விசுவாசத்தின் மூலம் அடையப்படுகின்றன. விசுவாசமானது சுத்திகரிப்பால் மட்டுமே வருகிறது மற்றும் சுத்திகரிப்பு இல்லாத நிலையில், விசுவாசம் வளர முடியாது. “விசுவாசம்” என்ற இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? விசுவாசம் என்பது எதையாகிலும் பார்க்கவோ, தொடவோ முடியாதபோது, தேவனுடைய கிரியை மனித கருத்துக்களுடன் ஒத்துப்போகாதிருக்கும்போது, அது மனிதனுக்கு எட்டாத நிலையில் இருக்கும்போது, மனிதர் கொண்டிருக்க வேண்டிய உண்மையான நம்பிக்கை மற்றும் உண்மையான இருதயமாக இருக்கிறது. இதுதான் நான் பேசும் விசுவாசமாக இருக்கிறது. கஷ்டங்கள் மற்றும் சுத்திகரிப்பின் காலங்களில் ஜனங்களுக்கு விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் விசுவாசம் என்பது சுத்திகரிப்புக்குப் பின்பு வரும் ஒன்றாக இருக்கிறது. சுத்திகரிப்பு மற்றும் விசுவாசத்தைப் பிரிக்க முடியாது. தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது முக்கியமல்ல, உன் சூழலைப் பொருட்படுத்தாமல், உன்னால் ஜீவிதத்தைத் தொடரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறவும், அவருடைய கிரியைகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது மற்றும் உன்னால் சத்தியத்தின்படி செயல்படவும் முடிகிறது. அவ்வாறு செய்வதுதான் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது நீ தேவன்மீது விசுவாசத்தை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நீ சுத்திகரிப்பு மூலம் சத்தியத்தைப் பின்தொடர முடிந்தால் மற்றும் உண்மையாகவே உன்னால் தேவனை நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருக்க முடிந்தால், அவர் என்ன செய்தாலும் நீ அவரைத் திருப்திப்படுத்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறாய் என்றால் மற்றும் அவருடைய சித்தத்திற்காக ஆழமாகத் தேடவும், அவருடைய சித்தத்தைக் குறித்து அக்கறையுடன் இருக்கவும் முடிந்தால் மட்டுமே உன்னால் தேவன் மீதான உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும். கடந்த காலத்தில், நீ ஒரு ராஜாவாக ஆட்சி செய்வாய் என்று தேவன் சொன்னபோது, நீ அவரை நேசித்தாய், அவர் உன்னை வெளிப்படையாகக் காட்டியபோது, நீ அவரைப் பின்தொடர்ந்தாய். ஆனால் இப்போது தேவன் மறைந்திருக்கிறார், உன்னால் அவரைக் காண முடியவில்லை மற்றும் உனக்குத் தொல்லைகள் வந்துவிட்டன. இப்போதும், நீ தேவன் மீதான நம்பிக்கையை இழக்கிறாயா? எனவே, நீ எப்போதுமே ஜீவிதத்தைத் தொடர வேண்டும் மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முற்பட வேண்டும். இதுதான் உண்மையான விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது மிகவும் உண்மையான மற்றும் மிகவும் அழகான அன்பாக இருக்கிறது.

கடந்த காலங்களில், ஜனங்கள் அனைவரும், தீர்மானங்களை எடுக்க தேவனுக்கு முன்பாக வந்து, “வேறு யாரும் தேவனை நேசிக்காவிட்டாலும், நான் அவரை நேசிக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் இப்போது, சுத்திகரிப்பு உன் மீது வருகிறது, இது உன் கருத்துக்களுடன் ஒத்துப்போகாததால், நீ தேவன் மீதுள்ள விசுவாசத்தை இழக்கிறாய். இது உண்மையான அன்பாக இருக்கிறதா? யோபுவின் கிரியைகளைப் பற்றி நீ பலமுறை படித்திருக்கிறாய்—அவற்றைப் பற்றி மறந்துவிட்டாயா? உண்மையான அன்பு விசுவாசத்திற்குள் இருந்து மட்டுமே வடிவம் பெற முடியும். நீ அனுபவிக்கும் சுத்திகரிப்புகள் மூலம் நீ தேவன்மீது உண்மையான அன்பை வளர்த்துக் கொள்கிறாய் மற்றும் உன் விசுவாசத்தால் மட்டுமே உன் நடைமுறை அனுபவங்களில் உன்னால் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்ள முடிகிறது மற்றும் விசுவாசத்தினால்தான் நீ உன் மாம்சத்தைக் கைவிட்டு ஜீவிதத்தைத் தொடர்கிறாய். இதைத்தான் ஜனங்கள் செய்ய வேண்டும். நீ இதைச் செய்தால், உன்னால் தேவனுடைய கிரியைகளைக் காண முடியும், ஆனால் உனக்கு விசுவாசம் இல்லாவிட்டால், உன்னால் தேவனுடைய கிரியைகளைப் பார்க்கவோ அவருடைய கிரியையை அனுபவிக்கவோ முடியாது. நீ தேவனால் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், துன்பப்படுவதற்கான விருப்பம், விசுவாசம், சகிப்புத்தன்மை, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் திறன், அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளும் திறன், அவருடைய துக்கத்தைக் கருத்தில் கொள்ளும் திறன் மற்றும் பல என எல்லாவற்றையும் நீ கொண்டிருக்க வேண்டும். ஒரு மனிதனைப் பரிபூரணமாக்குவது எளிதானது அல்ல. நீ அனுபவிக்கும் ஒவ்வொரு சுத்திகரிப்புக்கும் உன் விசுவாசம் மற்றும் அன்பு தேவைப்படுகின்றன. நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், பாதையில் முன்னேறுவது மற்றும் தேவனுக்காக உன்னை அர்ப்பணித்தல் ஆகியவை மட்டும் போதாது. தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவராக மாற நீ பல விஷயங்களை வைத்திருக்க வேண்டும். நீ துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நீ மாம்சத்தைப் பற்றிய அக்கறையை ஒதுக்கி வைக்கவும், தேவனுக்கு எதிராகக் குறைகூறாமல் இருக்கவும் வேண்டும். தேவன் உன்னிடமிருந்து தன்னை மறைக்கும்போது, அவரைப் பின்பற்றுவதற்கான விசுவாசத்தை நீ கொண்டிருக்க வேண்டும். உனது முந்தைய அன்பைத் தடுமாறவோ கலைக்கவோ அனுமதிக்காமல் பராமரிக்க வேண்டும். தேவன் என்ன செய்தாலும், அவருக்கு எதிராகக் குறைகூறுவதை விட, நீ அவருடைய வடிவமைப்பிற்குக் கீழ்ப்படிந்து, உன் மாம்சத்தைச் சபிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ சோதனைகளை எதிர்கொள்ளும்போது, நீ கடுமையாக அழும் போதிலும் அல்லது நீ அன்பு செலுத்தும் சில பொருட்களை விட்டுவிட விருப்பமில்லாமல் உணரும் போதிலும், நீ தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும். இதுவே, உண்மையான அன்பாகவும் விசுவாசமாகவும் இருக்கிறது. உன் உண்மையான வளர்ச்சி எதுவாக இருந்தாலும், நீ முதலில் கஷ்டத்தை தாங்கும் மனவுறுதியையும் உண்மையான விசுவாசத்தையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாம்சத்தை கைவிடுவதற்கான மனவுறுதியும் உன்னிடத்தில் இருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தனிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கவும், உன் தனிப்பட்ட ஆர்வங்களை இழக்கக் கொடுக்கவும் நீ ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ உன் இருதயத்தில் உன்னைப் பற்றி வருத்தப்படும் திறனுடனும் இருக்க வேண்டும்: கடந்த காலத்தில், உன்னால் தேவனை திருப்திப்படுத்த முடியவில்லை, இப்போது நீ உன்னை வருத்திக் கொள்ளலாம். இந்த விஷயங்களில் நீ குறைவில்லாமல் இருக்க வேண்டும். இவற்றின் மூலம் தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார். இந்த அளவுகோல்களை உன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், உன்னால் பரிபூரணமாக்கப்பட முடியாது.

தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் தேவனை நேசிப்பதே என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் உன்னைச் சுத்திகரிப்பதற்காகவோ அல்லது உன்னைத் துன்பப்படுத்துவதற்காகவோ பயன்படுத்துவதில்லை. மாறாக, அவருடைய கிரியைகளை நீ அறிந்துகொள்ளவும், மனித ஜீவிதத்தின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும், குறிப்பாக, தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதை நீ அறிந்துகொள்ளவும் உன்னைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய கிரியையை அனுபவிப்பது என்பது கிருபையை அனுபவிப்பதைப் பற்றியது அல்ல. மாறாக, நீ அவரை நேசிப்பதற்காகத் துன்பப்படுவதைப் பற்றியது. நீ தேவனுடைய கிருபையை அனுபவிப்பதால், அவருடைய சிட்சையையும் நீ அனுபவிக்க வேண்டும்; இவை அனைத்தையும் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுடைய அறிவொளியை நீ உனக்குள் அனுபவிக்க முடியும். மேலும், அவர் உன்னை எவ்வாறு நடத்துகிறார், உன்னை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார் என்பதையும் நீ அனுபவிக்க முடியும். இதனால், உனது அனுபவம் விரிவானதாக இருக்கும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் கிரியையை உன் மீது நடத்தியிருக்கிறார். தேவனுடைய வார்த்தை உன்னை கையாண்டிருக்கிறது, ஆனால் அது மட்டுமல்ல; அது உனக்கு அறிவொளியை அளித்துள்ளது மற்றும் உன்னைப் பிரகாசிக்கச் செய்துள்ளது. நீ எதிர்மறையான எண்ணத்துடன் பலவீனமாக இருக்கும்போது, தேவன் உனக்காக வருந்துகிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் மனிதனைப் பற்றிய அனைத்தும் தேவனுடைய திட்டங்களுக்குள் உள்ளன என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காகவே செய்யப்படுகின்றன. தேவனை விசுவாசிப்பது துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியது அல்லது அவருக்காக எல்லா விதமான காரியங்களையும் செய்வது என்று நீ நினைக்கலாம்; தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் உனது மாம்சம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உனது ஜீவிதத்தில் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது நீ வசதியாகவும் எல்லாவற்றிலும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக என்று நீ நினைக்கலாம். இருப்பினும், இவை எதுவும் தேவன் மீதுள்ள விசுவாசத்துடன் ஜனங்கள் பிணைக்க வேண்டிய நோக்கங்கள் அல்ல. இந்த நோக்கங்களுக்காக நீ விசுவாசித்தால், உனது கண்ணோட்டம் தவறானது. மேலும், நீ பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. தேவனுடைய கிரியை, தேவனுடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய ஞானம், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவரது அதிசயமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தன்மை ஆகியவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்தப் புரிதலைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட கோரிக்கைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் உனது இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு நீ இதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை அகற்றுவதன் மூலம் மட்டுமே நீ தேவன் கோரிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும், இதைச் செய்வதன் மூலம்தான் நீ ஜீவனைப் பெற்று தேவனைத் திருப்திப்படுத்த முடியும். தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் அவரை திருப்திப்படுத்துவதும், அவர் விரும்பும் மனநிலையில் வாழ்வதும் ஆகும். இதனால் அவருடைய கிரியைகளும் மகிமையும் இந்தத் தகுதியற்ற ஜனக்கூட்டத்தின் மூலம் வெளிப்படும். தேவனை விசுவாசிப்பதற்கான சரியான கண்ணோட்டம் இதுதான். மேலும், நீ நாட வேண்டிய இலக்கு இதுவே ஆகும். தேவனை விசுவாசிப்பது குறித்து உனக்குச் சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும். மேலும், நீ தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க வேண்டும், நீ சத்தியத்தின்படி ஜீவிக்க வேண்டும், குறிப்பாக அவருடைய நடைமுறைக் கிரியைகளையும், பிரபஞ்சம் முழுவதிலும் அவர் செய்கிற அதிசயிக்கத்தக்க கிரியைகளையும், அத்துடன் மாம்சத்தில் அவர் செய்கிற நடைமுறைக் கிரியைகளையும் உன்னால் காண முடியும். ஜனங்கள் தங்களது நடைமுறை அனுபவங்களின் மூலம், தேவன் தம்முடைய கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதையும், அவரது சித்தம் அவர்களை நோக்கி என்ன செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தின் நோக்கமும் ஜனங்களின் கேடு நிறைந்த சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றுவதாகும். உனக்குள் இருக்கும் அசுத்தத்தையும் அநீதியையும் வெளியேற்றிவிட்டு, உனது தவறான நோக்கங்களைத் தள்ளிவிட்டு, தேவன் மீதான உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே—உண்மையான விசுவாசத்தினால் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவன்மீது நீ வைத்திருக்கும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவனை விசுவாசியாமல் அவரை நேசிக்க முடியுமா? நீ தேவனை விசுவாசிப்பதால், அதைப் பற்றி நீ குழப்பமடைய முடியாது. தேவன் மீதான விசுவாசம் அவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் என்பதைக் கண்டவுடன் சிலர் பெலன் நிறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சுத்திகரிப்புகளை அனுபவிக்க வேண்டியிருப்பதைக் கண்டவுடன் அவர்களது முழு பெலனையும் இழந்துவிடுகிறார்கள். அதுதான் தேவனை விசுவாசிப்பது என்பதா? இறுதியில், உனது விசுவாசத்தில் நீ தேவனுக்கு முன்பாக முழுமையான மற்றும் முற்றிலுமான கீழ்ப்படிதலை அடைய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆனால் உனக்கு இன்னும் அவரிடம் முன்வைப்பதற்கு கோரிக்கைகள் உள்ளன. நீ கைவிட முடியாத பல மதக் கருத்துக்களைக் கொண்டுள்ளாய், உனது தனிப்பட்ட ஆர்வங்களை உன்னால் கைவிட முடியவில்லை, இருப்பினும் நீ மாம்சத்தின் ஆசீர்வாதங்களைத் தேடுகிறாய், தேவன் உனது மாம்சத்தை மீட்க வேண்டும் என விரும்புகிறாய், உனது ஆத்துமாவை அவர் இரட்சிக்க வேண்டும் என விரும்புகிறாய்—இவையே தவறான கண்ணோட்டம் கொண்ட ஜனங்களின் நடத்தைகள் ஆகும். மத நம்பிக்கையுள்ளவர்கள் தேவன்மீது விசுவாசம் வைத்திருந்தாலும், அவர்கள் தங்களது மனநிலையினை மாற்றிக்கொள்ள முற்படுவதில்லை, தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. மாறாக, தங்களது மாம்சத்தின் ஆர்வங்களை மட்டுமே தேடுகிறார்கள். உங்களில் பலருக்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த மத நம்பிக்கைகள் உள்ளன; இது தேவன் மீதான உண்மையான விசுவாசம் அல்ல. தேவனை விசுவாசிப்பதற்கு, ஜனங்கள் அவருக்காக துன்பப்படத் தயாராக இருக்கும் ஒரு இருதயத்தையும் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜனங்கள் நிறைவேற்றாவிட்டால், தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் தவறானது, மேலும் அவர்களுடைய மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாது. சத்தியத்தை உண்மையாகப் பின்தொடர்ந்து தேவனைப் பற்றிய அறிவைத் தேடி, ஜீவிதத்தைத் தொடரும் மனிதர்கள் மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள்.

சோதனைகள் உன் மீது வரும்போது, அந்த சோதனைகளைக் கையாள்வதில் தேவனுடைய கிரியையை எவ்வாறு பயன்படுத்துவாய்? நீ எதிர்மறையான எண்ணத்துடன் இருப்பாயா அல்லது தேவனுடைய சோதனை மற்றும் மனிதனின் சுத்திகரிப்பை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்திலிருந்து புரிந்துகொள்வாயா? தேவனுடைய சோதனைகள் மற்றும் சுத்திகரிப்புகள் மூலம் நீ எதை அடைவாய்? தேவன் மீதான உனது அன்பு வளருமா? நீ சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படும்போது, நீ யோபுவினுடைய சோதனைகளைப் பயன்படுத்தவும், தேவன் உனக்குள் செய்யும் கிரியையில் ஊக்கத்துடன் ஈடுபடவும் முடியுமா? யோபுவினுடைய சோதனைகளின் மூலம் தேவன் மனிதனை எவ்வாறு சோதிக்கிறார் என்பதை நீ காண முடியுமா? யோபுவின் சோதனைகள் உனக்கு என்ன வகையான உத்வேகத்தை அளிக்க முடியும்? நீ சுத்திகரிப்படுவதற்கு மத்தியில் தேவனுக்கு சாட்சியாக நிற்க நீ தயாராக இருப்பாயா அல்லது வசதியான சூழலில் மாம்சத்தைத் திருப்திப்படுத்த விரும்புகிறாயா? தேவன் மீதான விசுவாசம் பற்றிய உனது கண்ணோட்டம் உண்மையில் என்ன? உனது விசுவாசம் உண்மையிலேயே மாம்சத்திற்காக அல்லாமல் அவர் மீதுதான் உள்ளதா? நீ தேடுவதில் நீ தொடரும் ஓர் இலக்கு உண்மையில் உள்ளதா? நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்காக உன்னைச் சுத்திகரிப்புகளுக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிறாயா அல்லது தேவனால் தண்டிக்கப்பட்டு சபிக்கப்பட்டிருக்க விரும்புகிறாயா? தேவனுக்கு சாட்சி பகரும் விஷயத்தில் உனது கண்ணோட்டம் உண்மையில் என்ன? தேவனுக்கு உண்மையாக சாட்சி பகர சில சூழல்களில் ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? நடைமுறைத் தேவன் உன்னிடத்தில் அவருடைய உண்மையான கிரியையில் இவ்வளவு நிறைய வெளிப்படுத்தியிருக்கிறதால், உன்னிடத்தில் வெளியேறுவதற்கான எண்ணங்கள் எப்போதும் இருப்பது ஏன்? தேவன் மீதான உனது விசுவாசம் தேவனுக்காகவா? உங்களில் பெரும்பாலோருக்கு, உங்களது சொந்த நன்மைக்காக, உங்கள் சார்பாக நீங்கள் செய்யும் கணக்கீட்டின் ஒரு பகுதியாக உங்களது விசுவாசம் உள்ளது. மிகச் சிலரே தேவனுக்காக தேவனை விசுவாசிக்கிறார்கள்; இது கலகம் செய்வதல்லவா?

சுத்திகரிப்பு கிரியையின் நோக்கம் முக்கியமாக ஜனங்களின் விசுவாசத்தைப் பரிபூரணமாக்குவதாகும். இறுதியில் அடையப்படுவது என்னவென்றால், நீ வெளியேற விரும்புகிறாய், ஆனால் அதே நேரத்தில், உன்னால் வெளியேற முடிவதில்லை; மிகச் சிறிய அளவிலான நம்பிக்கை இல்லாதபோதும்கூட சிலரால் விசுவாசிக்க முடிகிறது; மேலும், ஜனங்கள் தங்களது எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி இனி நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் மட்டுமே தேவனுடைய சுத்திகரிப்பு நிறைவடையும். மனிதன் இன்னும் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் நிலையற்ற நிலையினை அடைந்திருக்கவில்லை, அவர்கள் மரணத்தை ருசிக்கவில்லை. ஆதலால், சுத்திகரிப்பு செயல்முறை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. ஊழியம் செய்பவர்களின் நிலையில் இருந்தவர்கள்கூட மிகச் சிறப்பாகச் சுத்திகரிக்கப்படவில்லை. யோபு தீவிர சுத்திகரிப்புக்கு உட்பட்டான், அவன் சார்ந்து இருப்பதற்கு அவனுக்கு எதுவும் இருக்கவில்லை. ஜனங்களுக்கு, தாங்கள் நம்பி இருக்க எதுவுமில்லை, சார்ந்து இருப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவர்கள் சுத்திகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்—இது மட்டுமே உண்மையான சுத்திகரிப்பாகும். ஊழியம் செய்பவர்களாக இருக்கும் நேரத்தில், உன் இருதயம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்திருந்தால், அவர் என்ன செய்திருந்தாலும், உனக்காக அவருடைய விருப்பம் எதுவாக இருந்திருந்தாலும், நீ எப்போதும் அவருடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தால், இறுதியில் நீ தேவன் செய்த எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய். நீ யோபுவின் சோதனைகளுக்கு உட்படுகிறாய், அதே சமயம் பேதுருவின் சோதனைகளுக்கும் நீ உட்படுகிறாய். யோபு சோதிக்கப்பட்டபோது, அவன் சாட்சியாக நின்றான். இறுதியில், யேகோவா அவனுக்கு வெளிப்பட்டார். அவன் சாட்சியாக நின்ற பின்னரே தேவனுடைய முகத்தைப் பார்க்க தகுதியானவனாக அவன் இருந்தான். “நான் தீட்டான தேசத்திலிருந்து மறைந்துகொள்கிறேன், ஆனால் என்னை பரிசுத்த ராஜ்யத்திற்குக் காட்டுகிறேன்” என்று ஏன் கூறப்படுகிறது? அதாவது, நீ பரிசுத்தனாகவும், சாட்சியாகவும் நிற்கும் போது மட்டுமே தேவனுடைய முகத்தைக் காணும் மேன்மையை நீ பெற முடியும். அவருக்காக நீ சாட்சியாக நிற்க முடியாவிட்டால், அவருடைய முகத்தைக் காண்பதற்கான மேன்மையை நீ பெற்றிருக்கமாட்டாய். நீ சுத்திகரிப்புகளை சந்திப்பதால் பின்வாங்கினால் அல்லது தேவனுக்கு எதிராகக் குறை கூறினால், அவருக்குச் சாட்சியாக நிற்கத் தவறிவிட்டு, சாத்தானின் கேலிக்குரியவனாக மாறினால், நீ தேவன் தோன்றுவதை ஆதாயம் செய்ய மாட்டாய். சோதனைகளுக்கு மத்தியில் தன் மாம்சத்தைச் சபித்து, தேவனுக்கு எதிராகக் குறை கூறாமல், தனது வார்த்தைகள் மூலம் குறை கூறாமல் அல்லது பாவம் செய்யாமல் தன் மாம்சத்தை வெறுக்க முடிந்த யோபுவைப் போல நீ இருந்தால், நீ சாட்சியாக நிற்பாய். நீ ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சுத்திகரிப்புகளுக்கு உட்பட்டால், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரிடம் நீ பிற கோரிக்கைகளையோ, உனது சொந்தக் கருத்துக்களையோ முன்வைக்காமல், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, நீயும் யோபுவைப் போல் இருக்க முடிந்தால், தேவனும் உனக்குத் தோன்றுவார். உன்னுடைய கருத்துக்கள், தனிப்பட்ட பாரபட்சமான எண்ணங்கள், சுயநல எண்ணங்கள், தனிப்பட்ட தேவைகள் மற்றும் மாம்ச ஆர்வங்கள் ஆகியவற்றை நீ கொண்டிருப்பதால் இப்போது தேவன் உனக்குத் தோன்றவில்லை. அவருடைய முகத்தைப் பார்க்க நீ தகுதியற்றவன். நீ தேவனைக் காண நேர்ந்தால், உனது சொந்தக் கருத்துக்களால் நீ அவரை அளவிடுவாய், அவ்வாறு செய்யும்போது, அவர் உன்னால் சிலுவையில் அறையப்படுவார். உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உன்னிடம் வந்தாலும், அவற்றை நீ ஒதுக்கி வைத்துவிட்டு, இவற்றிலிருந்து தேவனுடைய கிரியைகளைப் பற்றிய அறிவை அடைய முடிகிறது. மேலும், சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நீ தேவனை நேசிக்கும் உனது இருதயத்தை வெளிப்படுத்தினால், இதுவே சாட்சியாக நிற்பதாகும். உன் வீடு சமாதானமாக இருந்தால், நீ மாம்சத்தின் இன்பங்களை அனுபவிக்கிறாய், யாரும் உன்னைத் துன்புறுத்துவதில்லை, திருச்சபையில் உள்ள உனது சகோதர சகோதரிகள் உனக்குக் கீழ்ப்படிகிறார்கள், தேவனை நேசிக்கும் உனது இருதயத்தைக் காண்பிக்க முடியுமா? இந்தச் சூழல் உன்னைச் சுத்திகரிக்க முடியுமா? சுத்திகரிப்பு மூலமாக மட்டுமே தேவனை நேசிக்கும் உனது இருதயத்தைக் காண்பிக்க முடியும். மேலும், உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத விஷயங்கள் மூலம்தான் நீ பரிபூரணமானவனாக முடியும். பல முரண்பாடான மற்றும் எதிர்மறையான விஷயங்களின் மூலமாக, அனைத்து வகையான சாத்தானின் வெளிப்பாடுகளையும்—அதன் செயல்பாடுகள், குற்றச்சாட்டுகள், தொந்தரவுகள் மற்றும் வஞ்சித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சாத்தானின் அருவருப்பான முகத்தை தேவன் உனக்குக் தெளிவாகக் காண்பிக்கிறார். இதன் மூலம் சாத்தானை வேறுபடுத்தி பார்ப்பதற்கான உனது திறனை நீ பரிபூரணமாக்குகிறாய், இதனால் சாத்தானை வெறுத்து அதனைக் கைவிடுகிறாய்.

தோல்வி, பலவீனம், நீ எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்த காலங்கள் போன்ற பல்வேறு அனுபவங்கள் அனைத்தும் தேவனுடைய சோதனைகள் என்று கூறலாம். ஏனென்றால், சகலமுமே தேவனிடமிருந்து வருகின்றன, எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் அவருடைய கரங்களில் உள்ளன. நீ தோல்வியுற்றாலும் சரி, நீ பலவீனமாக இருந்து தள்ளாடினாலும் சரி, இவை அனைத்தும் தேவனிடம் உள்ளன, அவருடைய பிடியில் உள்ளன. தேவனுடைய பார்வையில், இது உனக்கான சோதனையாகும், அதை நீ அடையாளம் காண முடியாவிட்டால், அது சோதனையாக மாறும். ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு வகையான நிலைகள் உள்ளன: ஒன்று பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது, மற்றொன்று பெரும்பாலும் சாத்தானிடமிருந்து வருவதாக இருக்கலாம். ஒன்று, பரிசுத்த ஆவியானவர் உன்னை ஒளிரச் செய்து, உன்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நீ வெறுக்கவும், உன்னைப் பற்றி நீ வருந்தவும், தேவன் மீது உண்மையான அன்பு கொள்ளவும், அவரை திருப்திப்படுத்தும்படி உனது இருதயத்தை அமைக்கவும் உன்னை அனுமதிக்கும் ஒரு நிலை. மற்றொன்று உன்னை நீயே அறிந்திருக்கிற ஒரு நிலை, ஆனால் நீ எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருப்பவன் மற்றும் பலவீனமானவன். இந்த நிலை தேவனுடைய சுத்திகரிப்பு என்றும் அது சாத்தானின் சோதனை என்றும் கூறலாம். இது உனக்கான தேவனுடைய இரட்சிப்பு என்பதை நீ உணர்ந்தால், நீ இப்போது அவருக்கு கடன்பட்டிருப்பதாக பெரிதும் உணர்ந்தால், இப்போதிலிருந்து நீ அவருக்கு அதனைத் திரும்பச் செலுத்த முயற்சி செய்தால், இனிமேல் நீ அத்தகைய ஒழுக்கக்கேடான நிலைக்கு ஆளாக மாட்டாய் என்றால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதில் உனது முயற்சியை மேற்கொண்டால், நீ எப்போதுமே உன்னைக் குறைவாகக் கருதுகிற, ஏங்குகிற இருதயத்தை நீ கொண்டிருந்தால், இதுதான் தேவனுடைய சோதனையாகும். துன்பப்படுதல் முடிந்ததும், நீ மீண்டும் முன்னேறினாலும், தேவன் உன்னை வழிநடத்துவார், ஒளிரச் செய்வார், அறிவொளியூட்டுவார் மற்றும் உன்னைப் போஷிப்பார். ஆனால் நீ அதை அடையாளம் காணாமல் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்து, வெறுமனே, உன்னை நீயே நம்பிக்கையற்ற நிலையில் கைவிட்டுவிட்டது போன்று நீ நினைத்தால், சாத்தானின் சோதனையானது உன் மீது வந்திருக்கும். யோபு சோதனைகளுக்கு உட்பட்டபோது, தேவனும் சாத்தானும் ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள், யோபுவைத் துன்புறுத்த தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் யோபுவைச் சோதித்தாலும், உண்மையில் சாத்தான்தான் யோபுமீது வந்தான். சாத்தானைப் பொறுத்தவரை, அதுதான் யோபுவை சோதித்தது, ஆனால் யோபு தேவனுடைய பக்கமாக இருந்தார். அப்படி இல்லாதிருந்தால், யோபு சோதனையில் விழுந்திருப்பார். ஜனங்கள் சோதனையில் விழுந்தவுடன், அவர்கள் ஆபத்தில் விழுகிறார்கள். சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவது தேவனிடமிருந்து வந்த சோதனை என்று கூறலாம், ஆனால் நீ ஒரு நல்ல நிலையில் இல்லை என்றால், அது சாத்தானிடமிருந்து வரும் சோதனை என்றும் கூறலாம். நீ தரிசனத்தைப் பற்றிய தெளிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், சாத்தான் உன் மீது குற்றம் சாட்டும், மேலும் தரிசனத்தைக் குறித்த அம்சத்தில் உன்னை தெளிவற்றதாகச் செய்யும். நீ அதை அறிவதற்கு முன்பு, நீ சோதனையில் விழுவாய்.

நீ தேவனுடைய கிரியையை அனுபவிக்கவில்லை என்றால், நீ ஒருபோதும் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. உனது அனுபவத்தில், நீ அனைத்துக் காரியங்களையும் நீ அறிந்திருக்கவும் வேண்டும். எடுத்துக்காட்டாக, கருத்துக்கள் மற்றும் அதிகப்படியான நோக்கங்களை வளர்ப்பதற்கு என்னென்ன விஷயங்கள் உன்னை வழிநடத்துகின்றன, மேலும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க என்ன வகையான பொருத்தமான நடைமுறைகள் உன்னிடம் உள்ளன? தேவனுடைய கிரியையை உன்னால் அனுபவிக்க முடிந்தால், உன்னிடம் வளர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். நீ பெலன் கொண்டவனாக மட்டுமே தோன்றினால், இது உண்மையான வளர்ச்சி அல்ல, உன்னால் உறுதியாக நிற்க முடியாது. உன்னால் தேவனுடைய கிரியையை அனுபவிக்க முடிந்தால் மட்டுமே, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நீ அதை அனுபவித்து சிந்திக்க முடியும். நீ மேய்ப்பர்களை விட்டு வெளியேறி, தேவனை விசுவாசித்து சுதந்திரமாக ஜீவித்து, தேவனுடைய உண்மையான கிரியைகளை உன்னால் காண முடிந்தால் மட்டுமே, தேவனுடைய சித்தம் நிறைவேறும். தற்போது, பெரும்பாலான ஜனங்களுக்கு எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அதை எவ்வாறு கையாளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை; அவர்களால் தேவனுடைய கிரியைகளை அனுபவிக்க இயலாது, அவர்களால் ஆவிக்குரிய ஜீவிதத்தை ஜீவிக்க முடியாது. நீ தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு உனது நடைமுறை ஜீவிதத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

சில நேரங்களில் தேவன் உனக்கு ஒரு குறிப்பிட்ட வகை உணர்வைத் தருகிறார். இந்த உணர்வு, நீ உனது உள்ளார்ந்த இன்பத்தை இழக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை இழக்கவும் காரணமாகிறது. அதாவது, நீ அந்தகாரத்தில் மூழ்கிவிடுகிறாய். இது ஒரு வகையான சுத்திகரிப்பாகும். எதையும் நீ செய்யும்போதெல்லாம், அது எப்போதும் உனது திட்டத்தின்படி நடக்காமல் தவறாகப் போகும் அல்லது நீ அதில் மேற்கொண்டு முன்னேற முடியாமல் போகும். இது தேவனுடைய சிட்சையாகும். சில சமயங்களில், நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் கலகத்தனமான ஒன்றைச் செய்யும்போது, அது வேறு யாருக்கும் தெரியாமல் போகலாம்—ஆனால் தேவனுக்கு அது தெரிந்திருக்கும். அவர் உன்னை விட்டுவிடமாட்டார், அவர் உன்னை சிட்சிப்பார். பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிகவும் விரிவானது. ஜனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நகர்வையும், அவர்களின் ஒவ்வொரு சிந்தனையையும் யோசனையையும் அவர் மிகவும் கவனமாகக் கண்காணிக்கிறார். இதனால் ஜனங்கள் இந்த விஷயங்களைப் பற்றிய உள் விழிப்புணர்வை அடைய முடியும். நீ ஒரு முறை ஏதாவது செய்கிறாய், அது நீ திட்டமிட்டபடி நடக்காமல் தவறாகப் போகிறது, நீ மீண்டும் ஏதாவது செய்கிறாய், அது மேலும் தவறாகப் போகிறது, படிப்படியாக நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்துகொள்வாய். பல முறை சிட்சிக்கப்படுவதன் மூலம், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும், அவருடைய சித்தத்திற்கு ஏற்ப எது இல்லை என்பதை நீ அறிவாய். இறுதியில், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கான துல்லியமான பதில்கள் உனக்குள் இருக்கும். சில நேரங்களில், நீ கலகக்காரனாக இருப்பாய், மேலும் நீ தேவனால் உனக்குள்ளிருந்து கண்டிக்கப்படுவாய். இவை அனைத்தும் தேவனுடைய சிட்சையில் இருந்து வருகின்றன. தேவனுடைய வார்த்தையை நீ பொக்கிஷமாகக் கொள்ளாமல், அவருடைய கிரியையை நீ முக்கியமற்றதாகக் கருதினால், அவர் உன்னைப் புறந்தள்ளிவிடுவார். தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உனக்கு அறிவொளிவூட்டுவார். இப்போது, திருச்சபையில் குழம்பிய மற்றும் குழப்பமடைந்த விசுவாசத்தைக் கொண்டுள்ள சிலர் இருக்கிறார்கள், அவர்கள் நிறைய பொருத்தமற்ற காரியங்களைச் செய்கிறார்கள், ஒழுக்கமின்றி செயல்படுகிறார்கள். எனவே, பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களில் தெளிவாகக் காண முடிவதில்லை. சிலர் பணம் சம்பாதிப்பதற்காக, சிட்சிக்கப்படுவதை கைவிட்டு, ஒரு தொழிலை நடத்த வெளியே செல்வதற்காக தங்களது கடமைகளையும் விட்டுவிடுகிறார்கள்; அத்தகைய நபர் மேலும் அதிகமான ஆபத்தில் இருக்கிறார். தற்போது அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை தங்களுக்குள் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் அவர்கள் பரிபூரணமடைவது கடினமாக இருக்கும். தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனுடைய சிட்சையையும் காண முடியாத பலர் உள்ளனர். அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி தெளிவற்றவர்களாக இருப்பவர்கள் மற்றும் அவருடைய கிரியையை அறியாதவர்கள் ஆவர். சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நிலையாக இருக்கக்கூடியவர்கள், தேவன் என்ன செய்தாலும் அவரைப் பின்பற்றுபவர்கள், குறைந்தபட்சம் வெளியேறாதவர்கள் அல்லது பேதுரு அடைந்தவற்றில் 0.1 சதவீதத்தை அடைந்தவர்கள்கூட நன்றாகவே இருக்கிறார்கள், ஆனால் தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறதைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. பலர் விஷயங்களை விரைவாக புரிந்துகொள்கிறார்கள், தேவன்மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள், பேதுருவின் நிலையையும் மிஞ்சக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தேவன் அவர்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார். அத்தகையவர்களுக்கு சிட்சையும் அறிவொளியும் கிடைக்கும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்காத ஒன்றை அவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் அதனை உடனடியாகத் தூக்கி எறியலாம். அத்தகையவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்றவர்கள்—அவர்களின் மதிப்பு மிகவும் அதிகம்! தேவன் பல வகையான கிரியைகளைச் செய்திருக்கிறார். ஆனால் நீ இன்னும் மணல் அல்லது கல் போன்றவன் என்றால், நீ பயனற்றவனாவாய்!

சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் தேவனுடைய கிரியை அற்புதமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. அவர் ஒரு ஜனக்கூட்டத்தை பரிபூரணமாக்குவார், வேறு சிலரை புறம்பாக்குவார். ஏனென்றால், திருச்சபையில் எல்லா வகையான ஜனங்களும் இருக்கிறார்கள். சத்தியத்தை நேசிப்பவர்களும், நேசிக்காதவர்களும் இருக்கிறார்கள்; தேவனுடைய கிரியையை அனுபவிப்பவர்களும், அனுபவிக்காதவர்களும் இருக்கிறார்கள்; தங்களது கடமையைச் செய்பவர்களும், செய்யாதவர்களும் இருக்கிறார்கள்; தேவனுக்காக சாட்சி கொடுப்பவர்களும், சாட்சி கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்—அவர்களில் ஒரு பகுதியினர் அவிசுவாசிகளும் பொல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக புறம்பாக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியையை நீ தெளிவாக அறியாவிட்டால், நீ எதிர்மறையானவனாக இருப்பாய்; ஏனென்றால், தேவனுடைய கிரியையை குறைந்த ஜனக்கூட்டத்தில் மட்டுமே காண முடியும். இந்த நேரத்தில், யார் தேவனை உண்மையாக நேசிக்கிறார்கள், யார் நேசிக்கவில்லை என்பது தெளிவாகிவிடும். தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை கொண்டிருப்பார்கள், அதே நேரத்தில் அவரை உண்மையாக நேசிக்காதவர்கள் அவருடைய கிரியையின் ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுவார்கள். அவர்கள் புறம்பாக்கப்பட வேண்டியவர்களாக மாறுவார்கள். இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்படும் கிரியையின் போது வெளிப்படுத்தப்படுவார்கள், மேலும் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள். பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் தேவனால் முழுமையாக ஆதாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேதுருவைப் போலவே தேவனை நேசிக்க தகுதியானவர்கள். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் இயல்பான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் செயலற்ற அன்பை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளார்கள். மேலும், அவர்கள் தேவனை நேசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். நடைமுறை அனுபவத்தின் மூலம் அடையப்பட்ட புரிதலின் மூலம் இயல்பான அன்பு உருவாகிறது. இந்த அன்பு ஒரு மனிதனின் இருதயத்தை ஆக்கிரமித்து, அவர்களைத் தானாக முன்வந்து தேவனுக்கு அர்ப்பணிக்க வைக்கிறது; தேவனுடைய வார்த்தைகள் அவர்களின் அஸ்திபாரமாக மாறும். மேலும், அவர்களால் தேவனுக்காகத் துன்பப்பட முடிகிறது. நிச்சயமாக, இவை தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட ஒருவன் கொண்டிருப்பதாகும். நீ ஜெயங்கொள்ளப்படுகிறதை நாடினால் மட்டுமே, நீ தேவனுக்காகச் சாட்சி பகர முடியாது; ஜனங்களை ஜெயங்கொள்வதன் மூலம் மட்டுமே தேவன் தமது இரட்சிப்பின் இலக்கை அடைந்தால், ஊழியம் செய்கிறவர்கள் எடுத்து வைக்கும் அடி அந்தக் கிரியையை நிறைவடையச் செய்யும். இருப்பினும், ஜனங்களை ஜெயங்கொள்வது தேவனுடைய இறுதியான இலக்கு அல்ல, அது ஜனங்களைப் பரிபூரணப்படுத்துகிறதே ஆகும். ஆகவே, இந்த நிலை ஜெயத்தின் கிரியை என்று சொல்வதை விட, அது பரிபூரணப்படுத்துதல் மற்றும் புறம்பாக்குதல் ஆகியவற்றின் கிரியை என்று கூறலாம். சிலர் முழுமையாக ஜெயங்கொள்ளப்படவில்லை, அவர்களை ஜெயங்கொள்ளும் போக்கில், ஒரு ஜனக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். இந்த இரண்டு கிரியைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வளவு நீண்ட காலக் கிரியை முழுவதும்கூட ஜனங்கள் புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும், இது ஜெயங்கொள்ளுதலின் இலக்கு அடையப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது—இதுவே ஜெயங்கொள்ளப்படுவது குறித்த உண்மையாகும். சுத்திகரிப்புகள் ஜெயங்கொள்ளப்படுவதற்காக அல்ல, மாறாக பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவே ஆகும். சுத்திகரிப்பு இல்லாமல், ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. எனவே, சுத்திகரிப்புகள் உண்மையிலேயே மதிப்புமிக்கவை! இன்று ஒரு ஜனக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயம் செய்யப்படுகிறார்கள். முன்னர் குறிப்பிடப்பட்ட பத்து ஆசீர்வாதங்கள் அனைத்தும் பரிபூரணப்படுத்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டவை. பூமியில் தங்களது அடையாளத்தினை மாற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதென்பது பரிபூரணப்படுத்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. பரிபூரணப்படுத்தப்படாதவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

முந்தைய: தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்

அடுத்த: வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக