தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்

மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்களுக்குள்ளும் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆனால் நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்ட கிரியைகளும் அடங்கும். உலகை சிருஷ்டிக்கும் கிரியை என்பது முழு மனுக்குலத்தையும் உருவாக்கும் கிரியையாக இருந்தது. இது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையாக இருக்கவில்லை, இதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது, மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை, ஆகையால் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தது. மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது சாத்தானால் மனுஷன் சீர்கெடுக்கப்பட்டபோதுதான் துவங்கியது, ஆகையால் மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்டபோது தான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் துவங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் விளைவாகவே மனுஷனை தேவன் நிர்வகிப்பது துவங்கியது, இது உலகை சிருஷ்டிக்கும் கிரியையிலிருந்து எழும்பவில்லை. மனுக்குலம் ஒரு சீர்கெட்ட மனநிலையைப் பெற்ற பிறகுதான் நிர்வாகக் கிரியையானது செயல்பாட்டுக்கு வந்தது. ஆகையால், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில் நான்கு கட்டங்கள் அல்லது நான்கு யுகங்களுக்குப் பதிலாக மூன்று பகுதிகளே அடங்கும். மனுக்குலத்தை தேவன் நிர்வகிப்பதைக் குறிப்பிட இதுவே சரியான வழியாகும். இறுதிக் காலம் முடிவுக்கு வரும்போது, மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். நிர்வாகக் கிரியையின் முடிவு என்றால் சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும், அப்போது முதல் மனுக்குலத்திற்கான இந்தக் கட்டம் முடிந்துவிட்டது என்றும் அர்த்தமாகும். சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை இல்லாமல், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது இருக்காது, அல்லது மூன்று கட்ட கிரியைகளும் இருக்காது. மனுக்குலத்தின் சீர்கேடே இதற்கான சரியான காரணமாகவும் இருந்தது. மனுக்குலத்திற்கு இரட்சிப்பு அவசரமாக தேவைப்பட்டதால், யேகோவா உலகை சிருஷ்டிப்பதை முடித்துவிட்டு, நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையை ஆரம்பித்தார். அப்போதுதான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது துவங்கியது, அதாவது அப்போதுதான் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை துவங்கியது. “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்றால் பூமியில் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தின் (இன்னும் சீர்கெட்டுப்போகவிருந்த மனுக்குலம்) ஜீவிதத்தை வழிநடத்துதல் என்று அர்த்தமில்லை. மாறாக, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனுக்குலத்தின் இரட்சிப்பு என்று அர்த்தமாகும், அதாவது இந்த சீர்கெட்ட மனுக்குலத்தை மாற்றுவது என்று அர்த்தமாகும். இதுதான் “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்பதன் அர்த்தமாகும். மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையில் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆகையால் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில், உலகை சிருஷ்டிக்கும் கிரியையும் அடங்காது, மாறாக உலகின் சிருஷ்டிப்பிலிருந்து தனித்திருக்கும் மூன்று கட்ட கிரியைகள் மட்டுமே அடங்கும். மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையைப் புரிந்து கொள்ள, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். இரட்சிக்கப்படுவதற்கு அனைவரும் இதைத்தான் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவனுடைய சிருஷ்டிகளாகிய நீங்கள் மனுஷனானவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும், மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணத்தையும், அத்துடன் மனுஷனுடைய இரட்சிப்பின் செயல்முறையையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய தயவைப் பெறுவதற்கான முயற்சியில் உபதேசத்தின்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்து, தேவன் மனுக்குலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் அல்லது மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணம் ஆகியவை பற்றிய எந்த அறிவும் இல்லையென்றால், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இதில்தான் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையைப் பற்றி பரந்த அளவில் அறியாதிருக்கும்போது, கடைப்பிடிக்கக்கூடிய அந்த சத்தியங்களை மட்டும் புரிந்துகொள்வதோடு நீ திருப்தி அடைந்துவிடக்கூடாது. அப்படி திருப்தியடைந்தால், நீ மிகவும் இறுமாப்புள்ளவனாக இருக்கிறாய். மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை, முழு உலகத்திற்கும் சுவிசேஷம் வருதல், சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை கிரியையின் மூன்று கட்டங்களாகும், இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும். உனது ஜீவிதம் தொடர்பான எளிய சத்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இந்த மாபெரும் இரகசியங்கள் மற்றும் தரிசனங்களைக் குறித்து நீ எதையும் அறியவில்லை என்றால், உன் ஜீவிதமானது பார்க்கப்படுவதற்குத் தவிர வேறொன்றுக்கும் உதவாத ஒரு குறைபாடுள்ள தயாரிப்புக்கு ஒப்பாக இல்லையா?

மனுஷன் நடைமுறையில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவனுடைய கிரியையையும், மனுஷன் என்ன அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் இரண்டாம் நிலையாக பார்ப்பானேயானால், இது அவனுக்கு சிறிதளவும் ஞானமில்லாததாகவும் முட்டாள்தனமானதாகவும் இருக்காதா? நீ தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நீ தெரிந்துகொண்டே ஆக வேண்டும்; நீ கடைப்பிடிக்க வேண்டியவற்றை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை எவ்வாறு பின்தொடர்வது என்பதை அறிந்த ஒருவனாக இருப்பாய். நீ சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான நாள் வரும்போது, தேவன் ஒரு மகத்துவமான மற்றும் நீதியுள்ள தேவன் என்றும், அவர் உன்னதமான தேவன் என்றும், எந்தவொரு மாபெரும் மனிதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒரு தேவன் என்றும், அவர் எல்லோருக்கும் மேலான தேவன் என்றும் மட்டுமே உன்னால் சொல்ல முடிந்து…, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சாராம்சத்தைக் கொண்ட வார்த்தைகளைப் பேசுவதற்கு முற்றிலுமாக தகுதியற்றவனாக இருக்கும்போது உன்னால் இந்த பொருத்தமற்ற மற்றும் மேலோட்டமான வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிந்து, தேவனை அல்லது தேவனுடைய கிரியையைப் பற்றி சொல்ல உன்னிடம் எதுவுமில்லை என்றால், மேலும், உன்னால் சத்தியத்தை விளக்கிக்கூறவோ அல்லது மனுஷனிடம் குறைபாடுள்ளதாக காணப்படுவதை வழங்கவோ முடியவில்லை என்றால், உன்னைப் போன்ற ஒருவனால் தன் கடமையை சிறப்பாகச் செய்ய முடியாது. தேவனுக்கு சாட்சி பகருவதும், ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும் எளிதான காரியம் அல்ல. முதலில் நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியத்தாலும், தரிசனங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய கிரியையின் பல்வேறு அம்சங்கள் கொண்ட தரிசனங்கள் மற்றும் சத்தியத்தைப் பற்றி நீ தெளிவாக அறிந்திருக்கும்போது, மேலும் உன் இருதயத்தில் நீ தேவனுடைய கிரியையை அறிந்துகொள்கிறாய். மேலும், நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது மனுஷனுடைய சுத்திகரிப்பாக இருந்தாலும் சரி தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், உனது அஸ்திபாரமாக மாபெரும் தரிசனத்தைக் கொண்டிருப்பதையும், கடைப்பிடிப்பதற்கான சரியான சத்தியத்தையும் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், உன்னால் தேவனை இறுதிவரை பின்பற்ற முடியும். தேவன் என்ன கிரியை செய்தாலும், அவருடைய கிரியையின் நோக்கம் மாறாது, அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது, மனுஷன் மீதான அவருடைய சித்தம் மாறாது என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அவருடைய கிரியையின் கொள்கைகள் மாறாது, மனுஷனை இரட்சிக்கும் அவருடைய நோக்கமும் மாறாது. அது மனுஷனுடைய முடிவை அல்லது மனுஷன் சென்றடையும் இடத்தை வெளிப்படுத்தும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது இறுதிக் கட்டத்தின் கிரியை அல்லது தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது மனுஷன் மீது கிரியை செய்யும் காலமாக இருந்தால், அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது. அவருடைய கிரியையின் மையநோக்கம் எப்போதும் மனுக்குலத்தின் இரட்சிப்பாகவே இருக்கும்; இதுதான் தேவன் மீதான உனது விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளின் நோக்கம் முழு மனுக்குலத்தின் இரட்சிப்பாக இருக்கிறது, அதாவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிப்பதாகும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குறிக்கோளையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றபோதிலும், ஒவ்வொன்றும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது, ஒவ்வொன்றும் மனுக்குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப செய்யப்படும் வெவ்வேறு இரட்சிப்பின் கிரியையாக இருக்கிறது. இந்த மூன்று கட்ட கிரியைகளின் நோக்கத்தை நீ அறிந்துகொண்டதும், ஒவ்வொரு கட்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீ அறிந்துகொள்வாய், மேலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வாய். உன்னால் இந்த நிலையை அடைய முடிந்தால், இந்த மாபெரும் தரிசனங்கள் எல்லாம் தேவன் மீதான உன் விசுவாசத்தின் அஸ்திபாரமாக மாறும். நீ நடைமுறைக்கான எளிய வழிகளை அல்லது ஆழ்ந்த சத்தியங்களைத் தேடுவது மட்டுமின்றி, நடைமுறையுடன் தரிசனங்களை இணைக்க வேண்டும், இதன்மூலம் கடைப்பிடிக்கக்கூடிய சத்தியங்கள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு ஆகிய இரண்டும் காணப்படும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை முழுமையாகப் பின்பற்றும் ஒருவனாக இருப்பாய்.

மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையத்தில் உள்ளன, அவற்றில் தேவனுடைய மனநிலையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைப் பற்றி அறியாதவர்களால் தேவன் தமது மனநிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை உணர முடிவதில்லை, தேவனுடைய கிரியையின் ஞானத்தையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் மனுக்குலத்தை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றியும், முழு மனுக்குலத்திற்கான அவருடைய சித்தத்தைப் பற்றியும் அறியாதிருக்கிறார்கள். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் முழு வெளிப்பாடாகும். மூன்று கட்ட கிரியைகளையும் அறியாதவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பல்வேறு வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்ட கிரியையில் எஞ்சியிருக்கும் உபதேசத்தை மட்டுமே உறுதியாக பிடித்துக்கொண்டிருப்பவர்கள் தேவனை உபதேசத்திற்குள் அடக்குபவர்களாக இருக்கிறார்கள், தேவன் மீதான அவர்களுடைய நம்பிக்கை தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. இதுபோன்றவர்கள் ஒருபோதும் தேவனுடைய இரட்சிப்பைப் பெற மாட்டார்கள். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளால் மட்டுமே தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் மற்றும் முழு மனுக்குலத்தையும் இரட்சிப்பதற்கான தேவனுடைய நோக்கத்தையும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் முழு செயல்முறையையும் முழுமையாக வெளிப்படுத்த முடியும். இதுவே அவர் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஆதாயப்படுத்தினார் என்பதற்குச் சான்றாகும்; இதுவே தேவன் வெற்றிசிறந்ததற்கான சான்றாகும், மேலும் இதுவே தேவனுடைய முழு மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில் ஒரு கட்டத்தை மட்டுமே புரிந்துகொள்பவர்கள் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை மட்டுமே அறிவர். மனுஷனுடைய கருத்துக்களில், இந்த ஒரு கட்ட கிரியை உபதேசமாக மாறுவது எளிதானது. மேலும், மனுஷன் தேவனைப் பற்றி நிலையான விதிமுறைகளை உருவாக்கி, தேவனுடைய மனநிலையின் இந்த ஒரு பகுதியை தேவனுடைய முழு மனநிலையின் பிரதிநிதித்துவமாகப் பயன்படுத்துவான் என்பது சாத்தியமாகிறது. மேலும், மனுஷனுடைய கற்பனையின் பெரும்பகுதி கலக்கப்படுகிறது, அதாவது தேவன் ஒரு காலத்தில் இப்படி இருந்ததால், அவர் எல்லா காலத்திலேயும் இப்படியே இருப்பார், ஒருபோதும் மாற மாட்டார் என்று நம்பி, தேவனுடைய மனநிலை, இருக்கும் நிலை மற்றும் ஞானம், அத்துடன் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் ஆகியவற்றை குறுகிய வரம்பிற்குள் மனுஷன் மட்டுப்படுத்துகிறான். மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொண்டவர்களாலும் புரிந்துகொண்டவர்களாலும் மட்டுமே தேவனை முழுமையாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ள முடியும். குறைந்தபட்சம், அவர்கள் தேவனை இஸ்ரவேலரின் அல்லது யூதர்களின் தேவன் என்று வரையறுக்க மாட்டார்கள், மனுஷருக்காக எப்போதும் சிலுவையில் அறையப்படும் ஒரு தேவனாக அவரைப் பார்க்க மாட்டார்கள். தேவனுடைய ஒரு கட்ட கிரியையின் மூலமாக மட்டுமே ஒருவர் தேவனை அறிந்துகொண்டால், அவரது அறிவு மிகச் சிறியதாக இருக்கிறது, இது சமுத்திரத்திலுள்ள ஒரு துளியின் அளவை விட பெரியது அல்ல. இல்லையென்றால், பல பழைய மதக் காவலாளிகள் ஏன் தேவனைச் சிலுவையில் உயிருடன் அறைந்தார்கள்? இது மனுஷன் தேவனை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அடைத்து வைத்திருப்பதனால்தான் அல்லவா? பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும் உபதேசத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் தேவனை எதிர்க்கவில்லையா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கவில்லையா? இதுபோன்றவர்களின் அனுபவங்கள் மேலோட்டமானவை என்றாலும், அவர்கள் இயல்பாகவே அகந்தையுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாவும் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியமாகக் கருதுகின்றனர், பரிசுத்த ஆவியானவரின் ஒழுக்கங்களைப் புறக்கணிக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை “உறுதிப்படுத்த” தங்கள் பழைய அற்பமான வாக்குவாதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு செயலைச் செய்கின்றனர், மேலும் தங்கள் சொந்தக் கல்வி மற்றும் புலமையை முழுமையாக நம்புகின்றனர், மேலும் அவர்களால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லவா, புதிய யுகத்தால் அவர்கள் புறம்பாக்கப்படமாட்டார்களா? தேவனுக்கு முன்பாக வந்து அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அறியாதவர்களாகவும், விவரமறியாத பாதகர்களாகவும் இல்லையா, அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் என்பதைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள் அல்லவா? வேதாகமத்தைக் குறித்த மிகக் குறைவான அறிவைக் கொண்டு, அவர்கள் உலகின் “கல்வியாளர்களை” வரம்பு மீறி நடக்கச் செய்ய முயற்சி செய்கிறார்கள்; ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு மேலோட்டமான உபதேசத்தைக் கொண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறார்கள், மேலும் அது தங்களின் சொந்த சிந்தனை முறையைச் சுற்றியே சுழல முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறுகிய பார்வையுடைவர்களாக இருப்பதனால், 6,000 ஆண்டுகால தேவனுடைய கிரியையை ஒரே பார்வையில் பார்க்க முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கென்று குறிப்பிடத் தகுந்த எந்த அறிவும் கிடையாது! உண்மையில், தேவனைப் பற்றிய அறிவை ஜனங்கள் எந்த அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மெதுவாக அவருடைய கிரியையை நியாயந்தீர்க்கிறார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய இன்றைய கிரியையைப் பற்றிய அறிவைக் குறித்து சிறிதளவு பேசுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நியாயத்தீர்ப்புகளில் கண்முடித்தனமாக இருப்பதில்லை. ஜனங்கள் தேவனை எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாகவும், அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர், அந்த அளவுக்கு அவர்கள் தேவன் இருப்பதை தேவையில்லாமல் பறைசாற்றுகின்றனர், ஆனாலும் அவர்கள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், உண்மையான ஆதாரங்கள் எதையும் கொடுப்பதில்லை. இதுபோன்றவர்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பவர்கள் அற்பமானவர்களே! பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இல்லாதவர்கள், தங்கள் வாயால் அலம்புகிறார்கள், விரைவாக நியாந்தீர்க்கிறார்கள், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சரித்தன்மையை மறுக்க தங்கள் மனப்பாங்கிற்கு அளவுக்குமீறிய சுதந்திரம் கொடுக்கிறார்கள் மற்றும் அதை அவமதிக்கிறவர்களாகவும் தூஷிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள், இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியம் செய்யவில்லையா? மேலும், அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாவும், இயல்பாகவே பெருமை கொண்டவர்களாகவும், கட்டுப்பாடில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா? இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாள் வந்தாலும், தேவன் அவர்களைச் சகித்துக்கொள்ள மாட்டார். தேவனுக்காகக் கிரியை செய்பவர்களை அவர்கள் குறைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்கிறார்கள். இதுபோன்ற முரட்டாட்டம் பண்ணுகிறவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்த யுகத்திலோ அல்லது வரவிருக்கும் யுகத்திலோ, அவர்கள் என்றென்றும் நரகத்தில் அழிந்து போவார்கள்! இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதாகப் பாசாங்கு செய்கின்றனர். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தேவனுடைய நிர்வாக ஆணைகளுக்கு இடறலுண்டாக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே கட்டுப்பாடில்லாத, ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படியாத இறுமாப்புள்ளவர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடக்கவில்லையா? எப்போதும் புதியவரும், ஒருபோதும் முதுமையடையாதவருமான தேவனை அவர்கள் நாளுக்கு நாள் எதிர்க்கவில்லையா? தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதை இன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகள் உங்களுக்குப் பயனளிக்கக்கூடியவை, அவை வெற்றுப் பேச்சுக்கள் அல்ல. குதிரையின் மீது அமர்ந்து பாய்ந்து செல்லும்போது பூக்களைப் பார்ப்பது போல நீங்கள் அவற்றை வெறுமனே படித்தால், எனது கடின உழைப்பு எல்லாம் பயனற்றதாக இருக்காதா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த சுபாவத்தை அறிந்துகொள்ள வேண்டும். உங்களில் பெரும்பாலனவர்கள் வாக்குவாதத்தில் திறமையானவர்களாக இருக்கிறீர்கள்; தத்துவார்த்த கேள்விகளுக்கான பதில்கள் உங்கள் நாவில் புரளுகின்றன, ஆனால் சாராம்சம் தொடர்பான கேள்விகளுக்கு உங்களிடம் சொல்ல எதுவுமில்லை. இன்றும் கூட, நீங்கள் அற்பமான உரையாடலில் ஈடுபடுகிறீர்கள், உங்கள் பழைய மனநிலைகளை மாற்ற இயலாதவர்களாக இருக்கிறீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலானவர்களுக்கு மேலான சத்தியத்தை அடைவதற்காக நீங்கள் பின்தொடரும் வழியை மாற்றும் எண்ணம் இல்லை, மாறாக உங்கள் வாழ்க்கையை அரை மனதுடன் மட்டுமே வாழ்கிறீர்கள். இதுபோன்றவர்களால் எப்படி தேவனை இறுதி வரை பின்பற்ற முடியும்? நீங்கள் பாதையின் முடிவு வரை அரைமனதுடன் பின்பற்றி வந்தாலும், உங்களுக்கு அதனால் கிடைக்கும் பலன் என்னவாக இருக்கும்? உண்மையிலேயே பின்தொடர்வதா அல்லது முன்கூட்டியே விட்டுவிடுவதா என்று மிகவும் காலதாமதமாவதற்கு முன்பே உங்கள் யோசனைகளை மாற்றிக்கொள்வது நல்லது. காலம் செல்லச் செல்ல நீங்கள் பிறரை உறிஞ்சும் ஓர் ஒட்டுண்ணியாக மாறிவிடுவீர்கள், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான மற்றும் இழிவான பங்கை வகிக்க விரும்புகிறீர்களா?

மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு கிரியையின் பதிவாகும்; அவை மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் பதிவாகும், அவை கற்பனையானவை அல்ல. நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய முழு மனநிலையைப் பற்றிய அறிவைக் கண்டடைய விரும்பினால், தேவனால் செய்யப்படும் மூன்று கட்ட கிரியைகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்தக் கட்டத்தையும் தவிர்க்கக்கூடாது. இதுவே தேவனை அறிய முற்படுபவர்களால் அடையப்பட வேண்டிய குறைந்தபட்ச காரியங்களாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவை மனுஷனால் பொய்யாக புனைய முடியாது. இது மனுஷனால் கற்பனை செய்யக்கூடிய ஒன்றல்ல, ஒரு தனி நபருக்கு வழங்கப்படும் பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு தயவின் விளைவும் அல்ல. மாறாக, இது தேவனுடைய கிரியையை மனுஷன் அனுபவித்த பிறகு வரும் ஒரு அறிவாகும். மேலும், இது தேவனுடைய கிரியையைப் பற்றிய உண்மைகளை அனுபவித்த பிறகு மட்டுமே வரும் தேவனைப் பற்றிய அறிவாகும். இத்தகையதொரு அறிவை உடனே பெற முடியாது, மேலும் இது கற்பிக்கக்கூடிய ஒன்றும் அல்ல. இது முற்றிலும் தனிப்பட்ட அனுபவத்துடன் தொடர்புடையதாகும். மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பானது இந்த மூன்று கட்ட கிரியைகளின் மையத்தில் தான் உள்ளது, ஆனாலும் இரட்சிப்பின் கிரியைக்குள் பல கிரியை செய்யும் முறைகளும், தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தும் பல வழிமுறைகளும் அடங்கும். இதுதான் மனுஷன் அடையாளம் காண்பதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது, மேலும் இதுதான் மனுஷன் புரிந்துகொள்வதற்கு கடினமானதாக இருக்கிறது. யுகங்களைப் பிரித்தல், தேவனுடைய கிரியையில் காணப்படும் மாற்றங்கள், கிரியை நடக்கும் இடத்தின் மாற்றங்கள், இந்த கிரியையைப் பெறுபவரின் மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற பல என இவை அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் முறையிலுள்ள வேறுபாடு, அத்துடன் தேவனுடைய மனநிலை, சாயல், நாமம், அடையாளம் ஆகியவற்றின் மாற்றங்கள் அல்லது பிற மாற்றங்கள் என அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளின் பகுதியாகும். ஒரு கட்ட கிரியையால் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இது யுகங்களைப் பிரிப்பதையோ, அல்லது தேவனுடைய கிரியையின் மாற்றங்களையோ மற்றும் பிற அம்சங்களையோ உள்ளடக்குவதில்லை. இது தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய முழு கிரியையாகும். இரட்சிப்பின் கிரியையில் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய மனநிலையையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டும்; இந்த உண்மையில்லாமல், தேவனைப் பற்றிய உங்கள் அறிவு வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை, அது வெற்றுப் பேச்சே தவிர வேறு எதுவுமில்லை. இதுபோன்ற அறிவால் மனுஷனை நம்ப வைக்கவோ ஜெயங்கொள்ளவோ முடியாது; இது யதார்த்தத்துடன் முரண்படுகிறது, இது உண்மை அல்ல. இது ஏராளமானதாகவும், காதுக்கு இனிமையானதாகவும் இருக்கலாம், ஆனால் இது தேவனுடைய உள்ளார்ந்த மனநிலையுடன் முரண்பட்டால், தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். அவர் உனது அறிவைப் பாராட்டமாட்டார் என்பது மட்டுமின்றி, அவரை தேவதூஷணம் செய்த பாவியாக இருப்பதற்காக அவர் உன்னைப் பழிவாங்குவார். தேவனை அறிந்துகொள்வதற்கான வார்த்தைகள் இலகுவாக பேசப்படுவதில்லை. நீ சரளமாக பேசுகிறவனாகவும் வாக்கு வல்லமையுள்ளவனாகவும் இருந்தாலும் மற்றும் கருப்பை வெள்ளையாக இருப்பதாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் இருப்பதாகவும் வாதாடக்கூடிய அளவிற்கு உனது வார்த்தைகள் மிகவும் சாதுரியமாக இருந்தாலும், தேவனுடைய அறிவைப் பற்றி பேசுதல் என்று வரும்போது, நீ இன்னும் அறிவில்லாதவனாகவே இருக்கிறாய். தேவன் என்பவர் நீ கண்மூடித்தனமாக நியாயந்தீர்க்கக்கூடிய ஒருவரோ அல்லது சாதாரணமாகப் புகழக்கூடிய ஒருவரோ அல்லது ஆர்வமற்று சிறுமைப்படுத்தப்படக்கூடிய ஒருவரோ அல்ல. நீ எல்லோரையும் புகழ்கிறாய், ஆனாலும் தேவனுடைய உன்னதமான கிருபையை விவரிக்க சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நீ போராடுகிறாய், இதைத்தான் தோல்வியுற்றவர் ஒவ்வொரும் உணர வேண்டும். தேவனை விவரிக்கும் திறன் கொண்ட மொழிப் புலமையாளர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் விவரிக்கும் துல்லியம் தேவனுக்குரியவர்கள் பேசும் சத்தியத்தில் நூறில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது, தேவனுக்குரியவர்கள் குறைவான சொற்களை மட்டுமே கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில் வளமான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இவ்வாறு, தேவனைப் பற்றிய அறிவு துல்லியத்திலும் உண்மைத்தன்மையிலும் தான் இருக்கிறது, வார்த்தைகளை சாதுரியமாக பயன்படுத்துவதிலோ வளமான சொற்களைக் கொண்டிருப்பதிலோ இல்லை என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால், மனுஷனுடைய அறிவும் தேவனுடைய அறிவும் முற்றிலும் வேறுபட்டவையாகும். தேவனை அறிந்துகொள்ளும் பாடமானது மனுக்குலத்தின் எந்த இயற்கை அறிவியலையும் விட உயர்ந்ததாகும். இது தேவனை அறிந்துகொள்ள முயற்சிக்கிறவர்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானவர்களால் மட்டுமே அடையக்கூடிய ஒரு பாடமாகும், இதை திறமையுள்ள எந்தவொரு நபராலும் அடைந்துவிட முடியாது. ஆகையால், நீங்கள் தேவனை அறிந்துகொள்வதையும், சத்தியத்தைப் பின்தொடர்வதையும் வெறும் குழந்தையால் அடையக்கூடிய விஷயங்களாகப் பார்க்கக்கூடாது. நீ உன் குடும்ப வாழ்க்கை, அல்லது உன் தொழில், அல்லது உன் திருமணத்தில் முற்றிலும் வெற்றிபெற்றவனாக இருக்கலாம், ஆனால் சத்தியம் மற்றும் தேவனுடைய வார்த்தை என்று வரும்போது, உன்னையே காண்பிக்க உன்னிடம் எதுவுமில்லை மற்றும் நீ எதையும் அடையவுமில்லை. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது உனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், தேவனை அறிந்துகொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இதுதான் உங்கள் சிரமமாக இருக்கிறது, இதுதான் முழு மனுக்குலமும் எதிர்கொள்ளும் சிரமமாக இருக்கிறது. தேவனை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றவர்களில், தரத்தைப் பூர்த்தி செய்பவர்கள் யாருமில்லை. தேவனை அறிந்துகொள்வது என்றால் என்ன, அல்லது தேவனை அறிந்துகொள்வது ஏன் அவசியம், அல்லது தேவனை அறிந்துகொள்ள ஒருவர் எந்த அளவை அடைய வேண்டும் என்று மனுஷனுக்குத் தெரியாது. இதுதான் மனுக்குலத்திற்கு மிகவும் குழப்பமானதாக இருக்கிறது, இது மனுக்குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இக்கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை, இக்கேள்விக்கு பதிலளிக்கவும் யாரும் தயாராக இல்லை. ஏனென்றால், இன்றுவரை மனுக்குலத்திலுள்ள யாரும் இக்கிரியையைப் பற்றிய ஆய்வில் எந்த வெற்றியும் பெற்றதில்லை. ஒருவேளை, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய புதிர் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்படும்போது, தேவனை அறிந்த திறமையானவர்களைக் கொண்ட ஒரு கூட்டம் அடுத்தடுத்து தோன்றும். நிச்சயமாகவே, அதுதான் விஷயம் என்று நம்புகிறேன். மேலும், நான் இக்கிரியையைச் செய்வதற்கான செயல்முறையில் இருக்கிறேன் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற திறமையான நபர்கள் தோன்றுவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் இந்த மூன்று கட்ட கிரியைகளின் உண்மைக்கு சாட்சி கொடுப்பவர்களாக மாறுவார்கள். நிச்சயமாகவே, இந்த மூன்று கட்ட கிரியைகளுக்கு அவர்கள்தான் முதலில் சாட்சி பகருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால், தேவனுடைய கிரியை முடிவடையும் நாளில் இதுபோன்ற திறமையானவர்கள் வெளிப்படாவிட்டால் அல்லது மாம்சமாகிய தேவனால் பரிபூரணமாக்கப்படுவதைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்ட இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தால், அதைவிட வேதனையும் வருத்தமும் மிக்கது எதுவுமில்லை. ஆனாலும், இது மிகவும் மோசமான சூழ்நிலைதான். எது எப்படி இருந்தாலும், உண்மையிலேயே பின்தொடர்பவர்களால்தான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆதிகாலம் முதற்கொண்டு, இதுபோன்ற கிரியைகள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இதுபோன்ற கிரியை மனித வளர்ச்சி வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. தேவனை அறிந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக உன்னால் உண்மையிலேயே மாற முடிந்தால், இது சகல சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மேலான கெளரவமாக இருக்காதா? மனுக்குலத்தின் மத்தியில் எந்த சிருஷ்டியாகிலும் தேவனால் அதிகமாக பாராட்டப்படுவானா? இதுபோன்ற கிரியையை அடைவது எளிதானதல்ல, ஆனால் இறுதியில் இன்னும் வெகுமதிகளை அறுவடை செய்யும். அவர்களுடைய பாலினம் அல்லது நாடு என எதுவாக இருந்தாலும், தேவனைப் பற்றிய அறிவை அடையக்கூடிய அனைவரும் இறுதியில் தேவனுடைய மிகப் பெரிய கனத்தைப் பெறுவார்கள், மேலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். இதுதான் இன்றைய கிரியையாகும். இது எதிர்காலத்தின் கிரியையும் ஆகும். இது 6,000 ஆண்டுகால கிரியைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடைசி மற்றும் மிக உயர்ந்த கிரியையாகும், மேலும் இது ஒவ்வொரு வகை மனுஷரையும் வெளிப்படுத்தும் ஒரு கிரியை முறையாகும். தேவன் மனுஷனை அறிந்துகொள்ளச் செய்யும் கிரியையின் மூலம், மனுஷனுடைய வெவ்வேறு தராதரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: தேவனை அறிந்தவர்களே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியுள்ளவர்கள், அதேநேரத்தில் தேவனை அறியாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியற்றவர்கள். தேவனை அறிந்தவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள், தேவனை அறியாதவர்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று அழைக்க முடியாது. தேவனுக்கு நெருக்கமானவர்களால் தேவனுடைய எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியும், ஆனால் அவருக்கு நெருக்கமில்லாதவர்கள் அவருடைய எந்த கிரியைக்கும் தகுதியானவர்கள் அல்ல. இது உபத்திரவங்கள், சுத்திகரிப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் இறுதியில் தேவனைப் பற்றிய அறிவை மனுஷனை அடைய அனுமதிப்பதற்காகவே உள்ளன, இதன்மூலம் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிவான். இதுதான் இறுதியில் அடையப்படும் பலனாகும். மூன்று கட்ட கிரியைகளில் எதுவும் மறைக்கப்படவில்லை, இது தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு நன்மையானதாக இருக்கிறது மற்றும் தேவனைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற மனுஷனுக்கு உதவுகிறது. இக்கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு நன்மை பயக்கின்றவையாக இருக்கின்றன.

தேவனுடைய கிரியைதான் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனமாகும், ஏனென்றால் தேவனுடைய கிரியையை மனுஷனால் அடைய முடியாது, மனுஷன் இதைக் கொண்டிருக்கவும் இல்லை. மூன்று கட்ட கிரியைகள் தேவனுடைய முழு நிர்வாகமாகும், மேலும் மனுஷனால் அறிந்துகொள்ளப்பட வேண்டிய மாபெரும் தரிசனம் எதுவுமில்லை. இந்த வல்லமையான தரிசனத்தை மனுஷன் அறிந்திருக்கவில்லை என்றால், தேவனை அறிந்துகொள்வது எளிதானதல்ல. தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல. மேலும், மனுஷன் நடக்கும் பாதை பெருமளவில் கடினமானதாகிவிடும். தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இந்த தரிசனங்கள்தான் மனுஷனை இந்நாள் வரையிலும் பாதுகாத்து, மனுஷனுக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அளித்துள்ளன. எதிர்காலத்தில், உங்கள் அறிவு ஆழமாக வேண்டும், மேலும் அவருடைய முழு சித்தத்தையும், அவருடைய ஞானமான கிரியையின் சாராம்சத்தையும் நீங்கள் மூன்று கட்ட கிரியைகளுக்குள் அறிந்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் உண்மையான வளர்ச்சியாகும். கிரியையின் இறுதிக் கட்டம் தனியாக நிற்காது, ஆனால் இது முந்தைய இரண்டு கட்டங்களுடன் சேர்ந்து உருவான முழுமையின் ஒரு பகுதியாக இருக்கிறது, அதாவது மூன்று கட்ட கிரியைகளில் ஒன்றை மட்டுமே செய்வதன் மூலம் இரட்சிப்பின் முழு கிரியையையும் முடிக்க முடியாது என்று சொல்லலாம். இறுதிக் கட்ட கிரியையினால் மனுஷனை முழுமையாக இரட்சிக்க முடிந்தாலும், இந்த ஒற்றைக் கட்டத்தை மட்டுமே செய்ய வேண்டியது அவசியம் என்றோ, முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் மனுஷனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிக்க தேவையில்லை என்றோ அர்த்தமல்ல. மூன்று கட்டங்களின் எந்த ஒரு கட்டமும் முழு மனுக்குலத்தாலும் அறியப்பட வேண்டிய ஒரே தரிசனம் என்று கருத முடியாது, ஏனென்றால் இரட்சிப்பின் முழு கிரியையும் மூன்று கட்ட கிரியைகளையும் குறிக்கிறது, அவற்றில் ஒரு கட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. இரட்சிப்பின் கிரியை நிறைவேற்றப்படாத வரை, தேவனுடைய நிர்வாகத்தால் ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாது. தேவனுடைய இயல்பு, அவருடைய மனநிலை மற்றும் அவருடைய ஞானம் ஆகியவை இரட்சிப்பின் கிரியை முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்றன. இவை மனுஷனுக்கு ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் படிப்படியாக இரட்சிப்பின் கிரியையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரட்சிப்பின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், அவருடைய இயல்பின் ஒரு பகுதியையும் வெளிப்படுத்துகிறது. எந்தக் கட்ட கிரியையும் தேவனுடைய இயல்பை நேரடியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு, மூன்று கட்ட கிரியைகள் முடிந்த பிறகு மட்டுமே இரட்சிப்பின் கிரியை முழுமையாக முடிக்க முடியும், ஆகையால் தேவனுடைய முழுமையைப் பற்றிய மனுஷனுடைய அறிவை தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு கட்ட கிரியையிலிருந்து மனுஷன் பெறுவது அவருடைய கிரியையின் ஒரு பகுதியில் வெளிப்படுத்தப்படும் தேவனுடைய மனநிலையாகும். இக்கட்டங்களுக்கு முன்னும் பின்னும் வெளிப்படுத்தப்படும் மனநிலையையும் இயல்பையும் இது குறிக்க முடியாது. ஏனென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையை ஒரு காலகட்டத்தில் அல்லது ஒரு இடத்தில் உடனடியாக முடிக்க முடியாது, ஆனால் வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனுஷனுடைய வளர்ச்சி நிலைக்கு ஏற்ப படிப்படியாக ஆழமாகிறது. இதுதான் இக்கட்டங்களில் செய்யப்படும் கிரியையாகும், இது ஒரு கட்டத்தில் மட்டும் முடிக்கப்படுவதில்லை. ஆகையால், தேவனுடைய முழு ஞானமும் ஒரு தனி கட்டத்தில் மட்டுமல்லாமல் மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய முழு இயல்பும் மற்றும் முழு ஞானமும் இந்த மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய இயல்பு உள்ளது மற்றும் ஒவ்வொரு கட்டமும் அவருடைய கிரியையின் ஞானத்தின் ஒரு பதிவாக இருக்கிறது. இந்த மூன்று கட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய முழு மனநிலையையும் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். மேலும், தேவனை வணங்கும் போது ஜனங்களுக்கு இந்த அறிவு இல்லையென்றால், அவர்கள் புத்தரை வணங்குபவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தையக் கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் அழிக்கப்படாத முந்தைய கட்டத்தின் அஸ்திபாரத்திலிருந்து தொடர்கிறது. இவ்வாறு, எப்போதும் புதியதாகவும், ஒருபோதும் பழையதாகாத அவருடைய கிரியையில், தேவன் இதற்கு முன்பு ஒருபோதும் மனுஷனுக்கு வெளிப்படுத்தாத தனது மனநிலையின் அம்சங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதனுக்கு எப்போதும் தனது புதிய கிரியையையும் அவருடைய புதிய இருப்பையும் வெளிப்படுத்துகிறார். பழைய மதக் காவலர் இதை எதிர்ப்பதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாலும், அதை வெளிப்படையாக எதிர்த்தாலும், தேவன் தான் செய்ய விரும்பும் புதிய கிரியையை எப்போதும் செய்கிறார். அவரது கிரியை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, இதன் விளைவாக அது எப்போதும் மனுஷனுடைய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஆகையால், அவருடைய கிரியையின் காலத்தையும் பெறுநர்களையும் போலவே, அவருடைய மனநிலையும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும், அவர் இதற்கு முன் எப்போதும் செய்திராத கிரியையையே செய்கிறார், இதற்கு முன் செய்த கிரியைக்கு முரண்பாடாகவும் வேறுபாடாகவும் இருப்பதாக மனுஷனுக்குத் தோன்றும் கிரியையையும் செய்கிறார். மனுஷனால் ஒரு வகையான கிரியையை அல்லது ஒரு நடைமுறைப் பாதையை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், தங்களுக்கு முரண்பாடான அல்லது தங்களை விட உயர்வான கிரியை அல்லது நடைமுறை வழிகளை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாகும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் புதிய கிரியையைச் செய்கிறார், அதனால்தான் தேவனுடைய புதிய கிரியையை எதிர்க்கும் மத வல்லுநர்கள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகிறது. தேவன் எவ்வாறு எப்போதுமே புதியவராக இருக்கிறார், ஒருபோதும் பழையவராக இருப்பதில்லை என்பது பற்றி மனுஷனுக்கு எந்த அறிவும் இல்லை என்பதனாலும், தேவனுடைய கிரியையின் கொள்கைகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும் மற்றும் தேவன் மனுஷனை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும், இந்த ஜனங்கள் வல்லுநர்களாகிவிட்டனர். ஆகையால், இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் கிரியையா, அது தேவனுடைய கிரியையா என்பதை மனுஷனால் முழுவதுமாகச் சொல்ல முடியவில்லை. பலர் முன்பு வந்த வார்த்தைகளுடன் தொடர்புடைய ஒன்றின் மனப்பாங்கைப் பற்றிக்கொண்டு, அதை ஏற்றுக்கொள்கிறார்கள். முந்தைய கிரியையுடன் வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள் மற்றும் புறக்கணிக்கின்றார்கள். இன்று, நீங்கள் அனைவரும் இதுபோன்ற கொள்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கவில்லையா? மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் உங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மேலும் முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் தாங்கள் அறிந்துகொள்ள அவசியமில்லாத ஒரு பாரமாகவே இருப்பதாக நம்புகிறவர்களும் இருக்கின்றார்கள். இக்கட்டங்கள் ஜனங்களுக்கு அறிவிக்கப்படக்கூடாது என்றும், முடிந்த அளவு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனால் மூன்று கட்ட கிரியைகளின் முந்தைய இரண்டு கட்டங்களால் ஜனங்கள் குழப்பமாக உணர மாட்டார்கள் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். முந்தைய இரண்டு கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வது மிகவும் அதிகமானது என்றும், தேவனை அறிந்துகொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள், நீங்களும் அப்படித்தான் நினைக்கின்றீர்கள். இன்று, இவ்விதமாகச் செயல்படுவது சரியானது என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்கள், ஆனால் எனது கிரியையின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரும் நாள் வரும்: முக்கியத்துவமில்லாத எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் மூன்று கட்ட கிரியைகளை உங்களுக்கு அறிவிப்பதனால், அவை உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும். இந்த மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையமாக இருப்பதால், அவை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரின் மையமாக வேண்டும். ஒரு நாள், நீங்கள் அனைவரும் இந்தக் கிரியையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை அறியாததினாலும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த உங்கள் முரட்டாட்டமான நடத்தையினாலும், நீங்கள் தேவனுடைய கிரியையை எதிர்க்கிறீர்கள் அல்லது இன்றைய கிரியையை அளவிட உங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையைக் கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் மூலதனம் ஆகும். உன்னுடைய ஒழுக்கம் எவ்வளவு அதிகமாக சீர்கெட்டிருக்கிறதோ, உன்னுடைய குணாதிசயங்கள் எவ்வளவு அதிகமாக அருவருப்பாக இருக்கிறதோ, உன்னுடைய மனிதத்தன்மை எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களைக் கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள். உனது கருத்துக்கள் சரிசெய்யப்படாவிட்டால், அவை எப்போதும் தேவனுக்கு எதிராகவே இருக்கும். நீ ஒருபோதும் தேவனுடன் இணக்கமாக இருக்கமாட்டாய், எப்போதும் அவரிடமிருந்து விலகியே இருப்பாய்.

உனது பழைய கருத்துக்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் மட்டுமே உன்னால் புதிய அறிவைப் பெற முடியும், ஆனால் பழைய அறிவு என்பது பழைய கருத்துக்களுக்கு சமமானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. “கருத்துக்கள்” என்பவை மனுஷன் கற்பனை செய்யும் யதார்த்தத்துடன் முரண்படுகின்ற காரியங்களைக் குறிக்கின்றன. பழைய அறிவானது ஏற்கனவே பழைய யுகத்திலேயே காலாவதியாகி, புதிய கிரியைக்குள் மனுஷன் பிரவேசிப்பதைத் தடுத்திருந்தால், இதுபோன்ற அறிவும் ஒரு கருத்தாகும். இதுபோன்ற அறிவுக்கான சரியான அணுகுமுறையை மனுஷனால் எடுக்க முடிந்தால், பழையதையும் புதியதையும் இணைத்துப் பல அம்சங்களிலிருந்து தேவனை அறிந்துகொள்ள முடிந்தால், பழைய அறிவு மனிதனுக்கு ஒரு உதவியாக மாறி, மனுஷன் புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அடிப்படையாகிவிடுகிறது. தேவனை அறிந்துகொள்வதற்கான பாதையில் எவ்வாறு பிரவேசிப்பது, தேவனை அறிந்துகொள்வதற்கு எந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் உனது கருத்துக்களையும் பழைய மனநிலைகளையும் எவ்வாறு அகற்றுவது போன்ற பல கொள்கைகளை அறிந்துகொள்ளுமாறு தேவனை அறிந்துகொள்வதற்கான பாடமானது உன்னிடம் கேட்டுக்கொள்கிறது, இதன்மூலம் தேவனுடைய புதிய கிரியையின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியலாம். தேவனை அறிந்துகொள்வதற்கான பாடத்திற்குள் நுழைவதற்கான அஸ்திபாரமாக இக்கொள்கைகளைப் பயன்படுத்தினால், உனது அறிவு மென்மேலும் ஆழமாகும். தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றியும், அதாவது மூன்று கட்ட கிரியைகளைப் பற்றியும் உனக்கு தெளிவான அறிவு இருந்தால், தேவனுடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்களையும் தற்போதைய கட்டத்துடன் முழுமையாக தொடர்புபடுத்தவும், அதுதான் தேவனால் செய்யப்பட்ட கிரியை என்று உன்னால் பார்க்கவும் முடிந்தால், நீ ஒரு ஈடுஇணையற்ற உறுதியான அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பாய். மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகள் வெவ்வேறு யுகங்களிலும் இடங்களிலும் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிரியையும் வேறுபட்டதாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரே தேவனால் செய்யப்படும் கிரியையாகும். எல்லா தரிசனங்களிலும், இதுவே மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. மனுஷனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தால், அவனால் உறுதியாக நிற்க முடியும். இன்று, பல்வேறு மதங்கள் மற்றும் மதப்பிரிவுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அறிவதில்லை, மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் பரிசுத்த ஆவியானவருடையதல்லாத கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடிவதில்லை, இதனால், அவர்கள் கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் போலவே, இந்தக் கட்ட கிரியையும் யேகோவா தேவனால் செய்யப்படுகிறதா என்று சொல்ல முடிவதில்லை. ஜனங்கள் தேவனைப் பின்பற்றினாலும், பெரும்பாலானவர்களால் இது சரியான வழிதானா என்று இன்னும் சொல்ல முடிவதில்லை. தேவனால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படுகிற வழி இதுதானா, தேவன் மாம்சமாகியிருப்பது உண்மைதானா என்று மனுஷன் கவலைப்படுகிறான், மேலும் இதுபோன்ற விஷயங்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய எந்த துப்பும் இன்னமும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. தேவனைப் பின்பற்றுபவர்களால் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகையால், பேசப்படும் செய்திகள் இந்த ஜனங்கள் மத்தியில் ஒரு பகுதியளவு தாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளன, மேலும் அவற்றால் முழுவதும் பயனுள்ளதாக இருக்க முடியாது, ஆதலால் இதுபோன்றவர்களின் ஜீவிய பிரவேசத்தை இது பாதிக்கிறது. மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும். மனுஷனுடைய தரிசனங்கள் தெளிவற்றவையாக இருப்பதனாலும், மனுஷன் யேகோவாவை தேவனாகவும், இயேசுவை கர்த்தராகவும் மட்டுமே அறிந்திருப்பதாலும், இன்றைய மாம்சமாகிய தேவனைப் பற்றி இரு மனதுடன் காணப்படுவதாலும், பலர் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள், இன்றைய கிரியையை பற்றிய கருத்துக்களால் குழம்பியிருக்கின்றார்கள், பெரும்பாலானவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் காணப்படுவதோடு, இன்றைய கிரியையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றி மனுஷனிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், கடைசி இரண்டு கட்ட கிரியைகளின் யதார்த்தத்தை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் அவற்றைப் பார்த்ததும் இல்லை. ஏனென்றால், இந்தக் கட்ட கிரியைகளை மனுஷன் விரும்புவது போலக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவன் எதைக் கொண்டு வந்தாலும், இதுபோன்ற கற்பனைகளை நிரூபிக்க எந்த உண்மைகளும் இல்லை, அவற்றைச் சரிசெய்ய யாருமில்லை. மனுஷன் தனது மனப்போக்கிற்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கிறான், எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு, அவனது கற்பனையைச் சுதந்திரமாக அலையவிடுகிறான். ஏனென்றால், அவனுடைய கற்பனைகளைச் சரிபார்க்க எந்த உண்மைகளும் இல்லை, ஆகையால் மனுஷனுடைய கற்பனைகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை “உண்மை” ஆகின்றன. இவ்வாறு மனுஷன் தன் மனதில் கற்பனை செய்துள்ள தேவனை நம்புகிறான், யதார்த்த தேவனையோ தேடுவதில்லை. ஒரு நபருக்கு ஒரு வகையான நம்பிக்கை இருந்தால், நூறு பேரிடம் நூறு வகையான நம்பிக்கைகள் இருக்கும். மனுஷன் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தைக் காணாததாலும், அவன் அதைக் காதுகளால் மட்டுமே கேட்டு, அதைக் கண்களால் காணாததால், அவன் இதுபோன்ற நம்பிக்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். மனுஷன் புராணங்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் உண்மைகளைப் பற்றிய அறிவை அரிதாகவே கேள்விப்பட்டிருக்கின்றான். இவ்வாறு, ஒரு வருடமாக மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களின் மூலமாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள். இது தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசித்தவர்களுக்கும் பொருந்தும். உண்மைகளைப் பார்க்க முடியாதவர்களால் ஒருபோதும் தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்ட ஒரு விசுவாசத்திலிருந்து தப்பிக்க முடியாது. மனுஷன் தனது பழைய கருத்துக்களின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புதிய பிரதேசத்திற்குள் பிரவேசித்துவிட்டதாக நம்புகிறான். தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியாதவர்களின் அறிவு என்பது கருத்துக்களும் வதந்திகளுமே தவிர வேறு எதுவுமில்லை என்று மனுஷனுக்குத் தெரியாதா? மனுஷன் தனது கருத்துக்கள் சரியானவையாகவும் பிழையில்லாமலும் இருப்பதாக நினைக்கிறான், மேலும் இந்தக் கருத்துக்கள் தேவனிடமிருந்து வந்தவை என்றும் நினைக்கிறான். இன்று, மனுஷன் தேவனுடைய கிரியையைக் காணும்போது, பல வருடங்களாகக் கட்டி வைத்திருந்த கருத்துக்களை விட்டுவிடுகிறான். கடந்த காலத்தின் கற்பனைகளும் கருத்துக்களும் இந்தக் கட்டத்தின் கிரியைக்கு ஒரு தடையாக மாறியுள்ளன. மேலும், இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிடுவதும், இதுபோன்ற கருத்துக்களை மறுப்பதும் மனுஷனுக்கு கடினமாகிவிட்டது. இன்றுவரை தேவனைப் பின்தொடர்ந்தவர்களில் பலரின் இந்தப் படிப்படியான கிரியையைப் பற்றிய கருத்துக்கள் இன்னும் படுமோசமாகிவிட்டன. இவர்கள் மாம்சமாகிய தேவன் மீது படிப்படியாக ஒரு பிடிவாதமான பகைமையை உருவாக்கியுள்ளனர். இந்த வெறுப்பின் மூலக்காரணமானது மனுஷனுடைய கருத்துக்களிலும் கற்பனைகளிலும்தான் உள்ளது. மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் இன்றைய கிரியைக்கு எதிரியாகிவிட்டன, இக்கிரியை மனுஷனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உண்மைகள் மனுஷனை அவனுடைய கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்க அனுமதிக்காததினாலும் மற்றும் அவற்றை மனுஷனால் எளிதில் மறுக்க முடியாததினாலுமே இது நடந்துள்ளது. மேலும், மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் உண்மைகள் இருப்பதை ஆதரிக்கவில்லை. மேலும், மனுஷன் உண்மைகளின் சரித்தன்மையையும் உண்மைத்தன்மையையும் குறித்துச் சிந்திக்காததனால், பிடிவாதமாகத் தனது கருத்துக்களை அவிழ்த்துவிட்டு, தனது சொந்த கற்பனையைப் பயன்படுத்துகிறான். இது மனுஷனுடைய கருத்துகளின் தவறு என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இது தேவனுடைய கிரியையின் தவறு என்று கூற முடியாது. மனுஷன் தான் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் தேவனுடைய எந்தக் கட்ட கிரியையும் அல்லது அதில் எந்த சிறு பகுதியையும் அவன் தன்னிச்சையாக மறுக்காமல் போகலாம்; தேவனுடைய கிரியைக் குறித்த உண்மை மனுஷனால் மீறக்கூடாததாக இருக்கிறது. நீ உனது கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்கலாம், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய நல்ல கதைகளைத் தொகுக்கலாம், ஆனால் யேகோவா மற்றும் இயேசுவின் ஒவ்வொரு கட்ட கிரியையின் உண்மையையும் நீ மறுக்காமல் இருக்கலாம். இது ஒரு கொள்கையாகும், மேலும் இது ஒரு நிர்வாக ஆணையாகும். மேலும், இந்தப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்ட கிரியையானது மனுஷனுடைய கருத்துக்களுடன் பொருந்தாது என்றும், முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான காரியம் அல்ல என்றும் மனுஷன் நம்புகிறான். அவனுடைய கற்பனையில், முந்தைய இரண்டு கட்டங்களின் கிரியையும் நிச்சயமாகவே இன்றைய கிரியைக்கு சமமானதல்ல என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும், அவருடைய கிரியை எப்போதும் நடைமுறையானது என்றும் மற்றும் யுகத்தைப் பொருட்படுத்தாமல், அவருடைய கிரியையின் உண்மையை எதிர்க்கும் ஒரு பெரிய ஜனக்கூட்டம் எப்போதும் இருக்கும் என்றும் நீ எப்போதாவது கருதியிருக்கிறாயா? இந்தக் கட்ட கிரியையை இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த காலங்களிலும் தேவனை எதிர்த்திருப்பார்கள், ஏனென்றால் இதுபோன்றவர்கள் எப்போதுமே தேவனுடைய எதிரிகளாகத்தான் இருப்பார்கள். தேவனுடைய கிரியைப் பற்றிய உண்மையை அறிந்தவர்கள், மூன்று கட்ட கிரியைகளையும் ஒரே தேவனுடைய கிரியையாகவே பார்ப்பார்கள் மற்றும் தங்களுடைய கருத்துக்களை விட்டுவிடுவார்கள். இவர்கள்தான் தேவனை அறிந்தவர்கள், இதுபோன்றவர்கள்தான் தேவனை உண்மையாகவே பின்பற்றுபவர்கள். தேவனுடைய முழு நிர்வாகமும் அதன் முடிவை நெருங்கும் போது, தேவன் எல்லாவற்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். மனுஷன் சிருஷ்டிகரின் கைகளால் சிருஷ்டிக்கப்பட்டான், இறுதியில் அவர் மனுஷனை தமது ஆளுகையின் கீழ் முழுமையாகத் திருப்பிக் கொண்டுவர வேண்டும்; இதுவே மூன்று கட்ட கிரியைகளின் முடிவாகும். கடைசிக்கால கிரியையின் கட்டமும், இஸ்ரவேல் மற்றும் யூதேயாவிலுள்ள முந்தைய இரண்டு கட்டங்களும் முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள தேவனுடைய நிர்வாகத் திட்டமாகும். இதை ஒருவராலும் மறுக்க முடியாது, இது தேவனுடைய கிரியையைக் குறித்த உண்மையாகும். இந்தக் கிரியையை ஜனங்கள் அதிகம் அனுபவித்திருக்கவில்லை அல்லது கண்டிருக்கவில்லை என்றாலும், உண்மைகள் இன்னும் உண்மைகளாகவே இருக்கின்றன, இது எந்த மனிதனும் மறுக்க முடியாததாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் தேவனை நம்புகிறவர்கள் எல்லோரும் மூன்று கட்ட கிரியைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நீ ஒரு கட்ட கிரியையை மட்டுமே அறிந்திருந்து, மற்ற இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் கடந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய முழுமையான சத்தியத்தை உன்னால் பேச முடியாது மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ தேவனை அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை, ஆகையால் தேவனுக்குச் சாட்சி பகருவதற்கு நீ பொருத்தமானவனாக இல்லை. இக்காரியங்களைப் பற்றிய உனது தற்போதைய அறிவு ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இறுதியில் அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும். ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய முழு கிரியையையும் கண்டு அவருடைய ஆளுகையின் கீழ் அடிபணிவார்கள். இக்கிரியையின் முடிவில், எல்லா மதங்களும் ஒன்றாகிவிடும், எல்லாச் சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் திரும்புவார்கள், எல்லாச் சிருஷ்டிகளும் ஒரே மெய்தேவனை வணங்குவார்கள். தீய மதங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும், மீண்டும் ஒருபோதும் தோன்றாது.

மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய இந்த தொடர்ச்சியான குறிப்பு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? யுகங்கள் கடந்து செல்வது, சமுதாய வளர்ச்சி மற்றும் இயற்கையின் மாறிவரும் முகம் அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் மாற்றங்களைப் பின்பற்றுகின்றன. மனுக்குலமானது தேவனுடைய கிரியையுடன் காலப்போக்கில் மாறுகிறது, அது தானாகவே உருவாவதில்லை. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளும் சகல சிருஷ்டிகளையும், ஒவ்வொரு மதத்தையும், மதப்பிரிவையும் சேர்ந்த அனைவரையும் ஒரே தேவனுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்காக குறிப்பிடப்படுகின்றன. நீ எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறுதியில் நீங்கள் எல்லோரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் அடிபணிவீர்கள். தேவனால் மட்டுமே இந்தக் கிரியையைச் செய்ய முடியும்; இதை எந்த மதத் தலைவராலும் செய்ய முடியாது. உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் மாற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவரால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்குக் கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது. யேகோவா தாமே மனுக்குலத்தை சிருஷ்டித்து ஒவ்வொன்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தினார். கடைசிக்காலம் வரும்போது, அவர் தமது சொந்தக் கிரியையை தாமே செய்வார், சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். இக்கிரியையை தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆதி முதல் இன்று வரை செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் எல்லாமே தேவனாலேயே செய்யப்பட்டன, அவை ஒரே தேவனாலேயே செய்யப்பட்டன. மூன்று கட்ட கிரியைகளின் உண்மை என்பது முழு மனுக்குலத்திற்கான தேவனுடைய தலைமைத்துவத்தைப் பற்றிய உண்மையாகும், இது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளின் முடிவில், சகலமும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும். ஏனென்றால், முழு பிரபஞ்சத்திலும் இந்த ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார், வேறு எந்த மதங்களும் இல்லை. உலகைச் சிருஷ்டிக்க முடியாதவரால் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது, அதேநேரத்தில் உலகைச் சிருஷ்டித்தவர் நிச்சயமாக அதை முடிவுக்குக் கொண்டுவர வல்லவராய் இருப்பார். ஆகையால், ஒருவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல், மனுஷனை அவனுடைய மனதை வளர்த்துக் கொள்ள உதவ மட்டுமே முடிந்தால், அவர் நிச்சயமாக தேவனாக இருக்க மாட்டார், நிச்சயமாக மனுக்குலத்தின் கர்த்தராக இருக்க மாட்டார். அவரால் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்ய முடியாது. இதுபோன்ற கிரியையைச் செய்யக்கூடியவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார், இக்கிரியையைச் செய்ய முடியாத எல்லோருமே நிச்சயமாக எதிரிகளாக இருக்கின்றனரே தவிர, அவர்கள் தேவன் அல்ல. தீய மதங்கள் அனைத்தும் தேவனுடன் இணக்கமாக இல்லை. மேலும், அவை தேவனுடன் இணக்கமாக இல்லை என்பதனால், அவை தேவனுடைய எதிரிகளாக இருக்கின்றன. கிரியைகள் அனைத்தும் இந்த ஒரு மெய்தேவனாலேயே செய்யப்படுகின்றன, மேலும் முழு பிரபஞ்சமும் இந்த ஒரே தேவனாலேயே கட்டளையிடப்படுகிறது. அவருடைய கிரியை இஸ்ரவேலில் அல்லது சீனாவில் செய்யப்பட்டாலும், கிரியை ஆவியானவரால் அல்லது மாம்சத்தினால் செய்யப்பட்டாலும், எல்லாமே தேவனாலேயே செய்யப்படுகிறது, வேறு ஒருவராலும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரே முழு மனுக்குலத்தின் தேவனாக இருக்கிறார், அதனால் அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும், தடையின்றியும் கிரியை செய்கிறார். இதுவே எல்லா தரிசனங்களிலும் மிகவும் பெரியதாகும். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்யவும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்பினால், நீ தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும், சிருஷ்டிகளுக்கான தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அவருடைய நிர்வாகத் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர் செய்யும் கிரியையின் முக்கியத்துவம் அனைத்தையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தேவனுடைய தகுதியான சிருஷ்டிகள் அல்ல! தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ எங்கிருந்து வந்தாய் என்று உனக்குப் புரியவில்லை என்றால், மனுக்குலத்தின் வரலாற்றையும், தேவன் செய்த கிரியைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும், இன்று வரை மனுக்குலம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் முழு மனுக்குலத்திற்கும் கட்டளையிடுகிறவர் யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றால், உன்னால் உன் கடமையைச் செய்ய இயலாது. தேவன் இன்று வரை மனுக்குலத்தை வழிநடத்தியுள்ளார். பூமியில் மனுஷனை சிருஷ்டித்தது முதல் அவர் மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை. பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் கிரியை செய்வதை நிறுத்துவதில்லை, மனுக்குலத்தை வழிநடத்துவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை, மனுக்குலத்தை ஒருபோதும் விட்டுவிட்டதில்லை. ஆனால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை மனுஷன் உணரவுமில்லை, அவன் தேவனை அறியவுமில்லை. தேவனுடைய சகல சிருஷ்டிகளுக்கும் இதைவிட இழிவானது ஏதேனும் உண்டா? தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷனை வழிநடத்துகிறார், ஆனால் மனுஷன் தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்வதில்லை. நீ தேவனுடைய ஒரு சிருஷ்டி, ஆனாலும் உனது சொந்த வரலாற்றை நீ புரிந்துகொள்ளவில்லை, உனது பயணத்தில் உன்னை வழிநடத்தியவர் யார் என்று தெரியவில்லை, தேவன் செய்த கிரியையை நீ அறியாமல் இருக்கிறாய், அதனால் உன்னால் தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. நீ இன்னும் இப்போது இதையெல்லாம் பற்றி அறிந்துகொள்ளவில்லை என்றால், நீ ஒருபோதும் சாட்சி பகருவதற்குத் தகுதியானவனாக இருக்க மாட்டாய். இன்று, சிருஷ்டிகர் தனிப்பட்ட முறையில் சகல ஜனங்களையும் மீண்டும் ஒரு முறை வழிநடத்துகிறார் மற்றும் சகல ஜனங்களையும் அவருடைய ஞானம், சர்வவல்லமை, இரட்சிப்பு மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காணச் செய்கிறார். ஆனாலும் நீ இன்னும் உணரவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை, ஆகையால் நீ இரட்சிப்பைப் பெறாத ஒருவன் அல்லவா? சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில்லை, அதேநேரத்தில் தேவனுக்குச் சொந்தமானவர்களால் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடிகிறது. நான் பேசும் வார்த்தைகளை உணர்ந்து புரிந்துகொள்பவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள், தேவனுக்கு சாட்சி கொடுப்பார்கள். நான் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரும் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது, மேலும் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாலும், தேவனுடைய கிரியையை உணராதவர்களாலும் தேவனுடைய அறிவை அடைய இயலாது, இதுபோன்றவர்கள் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது. நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க விரும்பினால், நீ தேவனை அறிந்திருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவானது தேவனுடைய கிரியையின் மூலமே பெறப்படுகிறது. மொத்தத்தில், நீ தேவனை அறிந்துகொள்ள விரும்பினால், நீ தேவனுடைய கிரியையை அறிந்திருக்க வேண்டும்: தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். மூன்று கட்ட கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவனுக்கு சாட்சி பகருகிறவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும், தேவனை அறிந்தவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும் உருவாக்கப்படும். இவர்கள் அனைவரும் தேவனை அறிந்துகொள்வார்கள், இவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலும். இவர்கள் மனிதத்தன்மையையும் அறிவையும் கொண்டிருப்பார்கள், தேவனுடைய மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியையாகும், இவர்கள்தான் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் பலன்களாவார்கள் மற்றும் சாத்தானின் இறுதித் தோல்விக்கு மிகவும் வல்லமையான சாட்சிகளாவார்கள். தேவனுக்குச் சாட்சி பகரக்கூடியவர்களாலேயே தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் மற்றும் இறுதியில் மீதியான ஜனக்கூட்டமாக இருப்பார்கள், இவர்களே தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தேவனுக்குச் சாட்சி பகருவார்கள். நீங்கள் எல்லோருமே அந்த ஜனக்கூட்டத்தின் அங்கத்தினராகலாம் அல்லது பாதிப் பேர் மட்டுமே அங்கத்தினராகலாம் அல்லது ஒரு சிலரே அங்கத்தினராகலாம், இது உங்கள் விருப்பத்தையும் உங்கள் நாட்டத்தையும் பொறுத்ததாகும்.

முந்தைய: தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்

அடுத்த: சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக