N. தேவன் மூலம் கிடைக்கும் மனநிலை மாற்றத்தையும் பரிபூரணத்தையும் பின்தொடர்வது எப்படி என்பது குறித்து
504. மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சி பகிரவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடரவும் முடியாது. மனிதன் தன்னை சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் தாக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடர்பவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, அவதரித்த தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்துவிட்டார், மனிதன் அவரைப் பற்றிய ஞானத்தையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய செயல்படுகிற மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை வென்றிட அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாகிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகள் மட்டுமே சாத்தானை அவமதிக்க முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாய் கடந்துபோய் தம்மை தெரிந்துகொண்டவர்களை, கையாண்டு நேர்த்தியாக்கி, அவருக்குச் சாட்சி பகிர பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகிர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்கு தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் புகழ்ச்சியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் உருமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதை தேவன் அனுமதிக்க மாட்டார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து
506. மனிதனின் மனநிலையை மாற்றுவது அவனது சாராம்சத்தைப் பற்றிய அறிவு, அடிப்படை மாற்றங்களான அவனது சிந்தனை, சுபாவம் மற்றும் மனதின் கண்ணோட்டம் ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்தில் ஆரம்பிக்கிறது. இவ்வழியில் மட்டுமே மனிதனின் மனநிலையில் உண்மையான மாற்றங்கள் அடையப்படும். மனிதனின் அசுத்தமான மனநிலையானது அவனுடைய வாழ்வு சாத்தானால் நஞ்சூட்டப்பட்டு, நசுக்கப்பட்டதிலிருந்தும், அவனுடைய சிந்தனை, அறநெறி, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மேல் சாத்தான் விளைவித்த மோசமான தீங்கிலிருந்தும் தோன்றுகிறது. அதனுடைய மிகச்சரியான காரணம் என்னவென்றால் மனிதனின் அடிப்படைக் காரியங்கள் சாத்தானால் கெடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவைகளை உண்மையாக எப்படிப் படைத்தாரோ அதைப்போல முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. மனிதன் தேவனை எதிர்த்து, சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல் போகிறான். இப்படி, மனிதனுடைய மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய புரிதலையும், சத்தியத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றக்கூடிய அவனுடைய சிந்தனை, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து
507. தனது வாழ்க்கையில், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு, அவனது மனநிலையில் மாற்றங்களை அடைந்திட விரும்பினால், உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும், ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் விரும்பினால், அவன் தேவனின் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், சாத்தானின் கையாளுதலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்து, தேவனின் வெளிச்சத்தில் வாழும்படி, அவரிடமிருந்து விலகிச் செல்வதற்காக, தேவனின் ஒழுக்கப்படுத்துதலும் தேவன் அடிப்பதாலும் அவரிடமிருந்து விலகிட அனுமதிக்கக்கூடாது. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்புமே ஒளி மற்றும் மனிதனின் இரட்சிப்பின் ஒளி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், மேலும் மனிதனுக்கு இதைவிட சிறந்த ஆசீர்வாதம், கிருபை அல்லது பாதுகாப்பு எதுவும் இல்லை. மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான், மாம்சத்தில் இருக்கிறான். அவர் சுத்திகரிக்கப்படாமல், தேவனின் பாதுகாப்பைப் பெறாவிட்டால், மனிதன் இன்னும் பாழானவனாகிவிடுவான். அவர் தேவனை நேசிக்க விரும்பினால், அவர் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டும். “தேவனே, நீர் என்னைத் தயவாக நடத்தும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆறுதலை உணர்கிறேன். நீர் என்னைத் தண்டிக்கும்போது, நான் இன்னும் பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். நான் பலவீனமாக இருந்தாலும், சொல்லப்படாத துன்பங்களை சகித்துக்கொண்டாலும், கண்ணீரும் சோகமும் இருந்தாலும், இந்த துக்கம் என் கீழ்ப்படியாமையின் காரணமாகவும், என் பலவீனம் காரணமாகவும் இருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். உமது ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால் நான் அழுகிறேன், உமது தேவைகளுக்கு நான் போதுமானவனாக இல்லாததால் கவலையும் வருத்தமும் அடைகிறேன், ஆனால் நான் இந்த சாம்ராஜ்யத்தை அடைந்திட தயாராக இருக்கிறேன், உம்மைத் திருப்திப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உம் தண்டனை எனக்கு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது, மேலும் எனக்கு சிறந்த இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. உம் நியாயத்தீர்ப்பு, உம் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் மேலோங்கச் செய்கிறது. உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உமது இரக்கத்தையும் அன்பான கிருபையையும் நான் அனுபவிக்க மாட்டேன். இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக உம் அன்பு வானங்களைத் தாண்டி மற்ற எல்லாவற்றின் மேலும் சிறந்து விளங்குகிறது என்பதை நான் காண்கிறேன். உன் அன்பு இரக்கம் மற்றும் அன்பான கிருபை மட்டுமல்ல. அதை விட, அது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உம் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எனக்கு அதிகமாக கொடுத்திருக்கின்றன. உன் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், ஒருவர் கூட சுத்திகரிக்கப்பட மாட்டார்கள், மேலும் ஒரு மனிதனாலும் கூட சிருஷ்டிகரின் அன்பை அனுபவிக்க முடியாது.”
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து
508. நீ பரிபூரணப்படுத்தப்பட்டவனாக இருக்க விரும்பினால், நீ முதலில் தேவனால் நேசிக்கப்படவேண்டும். ஏனென்றால், அவர்தாம் நேசிப்பவர்களையும் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களையும் அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் நீ இருக்க விரும்பினால், அவருடைய கிரியையைக்கு கீழ்ப்படியும் ஒரு இருதயம் உன்னிடத்தில் இருக்க வேண்டும், நீ சத்தியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும், சகலத்திலும் தேவனின் பரிசோதனை இருப்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்கிற அனைத்தும் தேவனின் பரிசோதனைக்கு உட்பட்டதா? உனது நோக்கம் சரியானதா? உனது நோக்கம் சரியாக இருந்தால், தேவன் உன்னைப் பாராட்டுவார்; உனது நோக்கம் தவறாக இருந்தால், உனது இருதயம் நேசிப்பது தேவனை அல்ல, மாம்சத்தையும் சாத்தானையும் என்பதை இது காட்டுகிறது. ஆகையால், சகலத்திலும் தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக நீ ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ ஜெபிக்கும்போது, நான் உனக்கு முன்னால் நேரில் நிற்கவில்லை என்றாலும், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கிறார், அது நானும், நீ ஜெபிக்கிற தேவனுடைய ஆவியானவர் ஆகியோருமே. இந்த மாம்சத்தை நீ ஏன் நம்புகிறாய்? தேவனின் ஆவியானவரை அவர் கொண்டிருப்பதால் நீ நம்புகிறாய். இந்த மனிதன் தேவனின் ஆவியினை கொண்டிருக்காமல் இருந்தால் நீ அவரை நம்புவாயா? இந்த மனிதனை நீ நம்பும்போது, நீ தேவனின் ஆவியை நம்புகிறாய். இந்த மனிதனுக்கு நீ பயப்படும்போது, நீ தேவனின் ஆவிக்கு பயப்படுகிறாய். தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கை இந்த மனிதன் மீதான நம்பிக்கை, இந்த மனிதனின் மீதான நம்பிக்கை தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கையும் ஆகும். நீ ஜெபிக்கும்போது, தேவனுடைய ஆவி உன்னிடத்தில் இருப்பதையும், தேவன் உனக்கு முன்பாக இருப்பதையும் உணர்கிறாய். ஆகவே, நீ அவருடைய ஆவியிடம் ஜெபிக்கிறாய். இன்று, பெரும்பாலான ஜனங்கள் தங்களது செயல்களை தேவனின் முன் கொண்டுவர மிகவும் பயப்படுகிறார்கள்; நீ அவருடைய மாம்சத்தை ஏமாற்றும்போது, அவருடைய ஆவியானவரை நீ ஏமாற்ற முடியாது. தேவனின் பரிசோதனையைத் தாங்க முடியாத எந்தவொரு விஷயமும் சத்தியத்துடன் முரண்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது தேவனுக்கு எதிராக பாவம் செய்வதாகும். ஆகவே, நீ ஜெபிக்கும்போதும், பேசும்போதும், உன் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும்போதும், உன் கடமையைச் செய்யும்போதும், உன் தொழிலை கவனிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தை தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும். உன் செயல்பாட்டை நீ நிறைவேற்றும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார், உனது நோக்கம் சரியானது மற்றும் தேவனின் வீட்டின் பணிக்காக நீ இருக்கும் வரை, நீ செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார்; உனது செயல்பாட்டை நிறைவேற்ற நீ உண்மையிலேயே உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீ ஜெபிக்கும்போது, உன் இருதயத்தில் தேவன்மீது அன்பு வைத்திருந்தால், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிசோதனையை நாடினால், இவை உனது நோக்கமாக இருந்தால், உனது ஜெபங்கள் பலனளிக்கும். உதாரணமாக, நீ கூட்டங்களில் ஜெபிக்கும்போது, உனது இருதயத்தைத் திறந்து தேவனிடம் ஜெபம் செய்து, பொய்யைப் பேசாமல் உனது இருதயத்தில் இருப்பதை அவரிடம் கூறினால், உனது ஜெபங்கள் நிச்சயமாக பலனளிக்கும். உனது இருதயத்தில் தேவனை நீ ஊக்கமாக நேசிக்கிறாயானால், தேவனுக்கு ஆணையிடுவித்துக்கொள்: “வானத்திலும் பூமியிலும் சகலத்திலும் இருக்கும் தேவனே, நான் உம்மிடம் ஆணையிடுவித்துக்கொள்கிறேன்: உம்முடைய ஆவியானவர் நான் செய்யும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்து கவனித்துக்கொள்வதோடு, உம்முடைய சமூகத்தில் நான் நிற்கும்படியாக நான் செய்யும் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணும். என் இருதயம் எப்போதாவது உம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டாலோ அல்லது அது எப்போதாவது உமக்குத் துரோகம் செய்தாலோ என்னை கடுமையாக சிட்சித்து சபித்துவிடும். இந்த உலகத்திலோ அல்லது அடுத்த உலகத்திலோ என்னை மன்னிக்க வேண்டாம்!” அத்தகைய ஆணையிடுவித்துக்கொள்ள உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ தைரியமில்லாதவன் என்பதையும், நீ இன்னும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறாய் என்பதையும் இது காட்டுகிறது. இந்த தீர்மானம் உன்னிடம் உள்ளதா? இது உண்மையிலேயே உனது தீர்மானமாக இருந்தால், நீ இந்த ஆணையைச் செய்துகொள்ள வேண்டும். அத்தகைய ஆணையைச் செய்துகொள்ள உனக்கு தீர்மானம் இருந்தால், தேவன் உனது தீர்மானத்தை நிறைவேற்றுவார். நீ தேவனிடம்ஆணையிடுவித்துக்கொள்ளும்போது, அவர்அதற்குச் செவிகொடுக்கிறார். உன் ஜெபத்தின் அளவையும் உனது கைக்கொள்ளுதலையும் பொறுத்து நீ பாவமுள்ளவனா அல்லது நீதிமானா என்பதை தேவன் தீர்மானிக்கிறார். இது இப்போது உன்னை பரிபூரணப்படுத்துவதற்கான செயல்முறையாகும். மேலும், நீ பரிபூரணமாக்கப்படுவதில் உனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய பரிசோதனையை ஏற்றுக்கொள்வாய்; நீ ஏதாவது மூர்க்கத்தனமான கலகத்தை செய்தால் அல்லது நீதேவனுக்குத் துரோகம் செய்தால், அவர் உனது ஆணையை நிறைவேற்றுவார், இதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும், அது அழிவோ சிட்சிப்போ எதுவாக இருந்தாலும், இது உன் சொந்த செயலாகும். நீஆணையிடுவித்துக்கொண்டாய், எனவே, நீ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஆணையிடுவித்துக்கொண்டாலும், அதைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ அழிவை அனுபவிப்பாய். ஆணையிட்டுக்கொண்டது உன்னுடையது என்பதால், தேவன் உன் உறுதிமொழியை நிறைவேற்றுவார். சிலர் ஜெபித்த பிறகு பயந்து, “எல்லாம் முடிந்துவிட்டது! துஷ்பிரயோகம் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; பொல்லாத காரியங்களைச் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; என் உலக ஏக்கங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!” என புலம்புகிறார்கள். இந்த ஜனங்கள் இன்னமும் உலகப்பற்றையும் பாவத்தையும் நேசிக்கிறார்கள். அவர்கள் அழிவை அனுபவிப்பது உறுதி.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து
513. தற்போது, நீங்கள் முக்கியமாக தேட வேண்டியது என்னவென்றால் நீங்கள் எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து ஜனங்கள், விஷயங்கள் மற்றும் காரியங்கள் மூலமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், இதனால் தேவனுக்குள் இருப்பதே பெரும்பாலும் உங்களுக்குள்ளும் உருவாக்கப்படும். நீங்கள் முதலில் பூமியில் தேவனுடைய சுதந்தரத்தைப் பெற வேண்டும்; அப்போதுதான் நீங்கள் தேவனிடமிருந்து அதிக அதிகமான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க தகுதியுள்ளவர்களாவீர்கள். இவை தான் நீங்கள் தேட வேண்டியவையும், எல்லாவற்றிற்கும் முன்பு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியவையும் ஆகும். எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட நீங்கள் எவ்வளவு அதிகமாக முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் எல்லாவற்றிலும் தேவனுடைய கரத்தைப் பார்க்க முடியும், இதன் விளைவாக நீங்கள் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் மூலமாக தேவனுடைய வார்த்தையாக இருப்பதற்குள்ளும் மற்றும் அவருடைய வார்த்தையின் யதார்த்தத்துக்குள்ளும் நுழைய தீவிரமாக முயற்சி செய்வீர்கள். பாவங்களைச் செய்யாதிருத்தல், அல்லது வாழ்வதற்கான எண்ணங்கள், தத்துவம் மற்றும் மனித விருப்பம் இல்லாதிருத்தல் போன்ற செயலற்ற நிலைகளினால் மட்டுமே உங்களால் திருப்தியடைந்துவிட முடியாது. தேவன் மனிதனை பல வழிகளில் பரிபூரணமாக்குகிறார். எல்லா காரியங்களிலும் பரிபூரணமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, மேலும் நீ அளவில்லாமல் பெறுவதற்கு அவர் உன்னை நேர்மறையான வார்த்தைகளினால் மட்டுமல்ல, எதிர்மறையான வார்த்தைகளினாலும் பரிபூரணமாக்க முடியும். ஒவ்வொரு நாளும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும், ஆதாயப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வாறு அனுபவித்த பிறகு, நீ பெரிதும் மாற்றப்படுவாய், மேலும் நீ முன்பு அறிந்திராத பல விஷயங்களை இயல்பாகவே புரிந்துகொள்வாய். மற்றவர்களிடமிருந்து அறிவுரை தேவைப்படாது. உனக்குத் தெரியாமலே, தேவன் உனக்கு அறிவூட்டுவார், இதனால் நீ எல்லாவற்றிலும் ஞானத்தைப் பெறுவாய், மேலும் உன் அனுபவங்கள் அனைத்தையும் விரிவாக பெறுவாய். தேவன் உன்னை நிச்சயமாகவே வழிநடத்துவார், இதனால் நீ இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ திரும்பாமல், இவ்வாறு அவரால் பரிபூரணப்படுத்தப்படும் பாதையில் செல்வாய்.
… நீங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், எல்லா காரியங்களையும் எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களுக்கு நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் ஞானத்தைப் பெற முடியும். இது நல்லதாக அல்லது கெட்டதாக இருந்தாலும், இது உனக்கு நன்மைகளைக் கொண்டுவர வேண்டும், மேலும் அது உன்னை எதிர்மறையானவராக மாற்றிவிடக்கூடாது. எது எப்படி இருந்தாலும், தேவனுடைய பக்கத்தில் நிற்கும்போது, உன்னால் காரியங்களை கணிக்க முடிய வேண்டும், அவற்றை மனுஷனுடைய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யவோ அல்லது ஆராய்ந்து பார்க்கவோ கூடாது (இது உன் அனுபவத்தில் ஒரு விலகுதலாக இருக்கும்). நீ இவ்வாறு அனுபவித்தால், உன் இருதயம் உன் வாழ்க்கையின் பாரங்களால் நிரப்பப்படும். தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் நீ தொடர்ந்து வாழ்வாய், உன் பழக்கவழக்கத்திலிருந்து எளிதில் விலகாமல் இருப்பாய். இதுபோன்ற ஜனங்களுக்கு முன்னால் ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. இது நீங்கள் தேவனை உண்மையாக நேசிக்கிறீர்களா என்பதையும், தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கும், அவருடைய ஆசீர்வாதங்களையும் சுதந்தரத்தையும் பெறுவதற்குமான தீர்வு உங்களிடம் உள்ளதா என்பதையும் பொறுத்துள்ளது. வெறும் தீர்வு மட்டும் போதாது, உங்களிடம் அதிக அறிவு இருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் எப்போதும் உங்கள் பழக்கத்திலிருந்து விலகியிருப்பீர்கள். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் பரிபூரணமாக்க சித்தமுள்ளவராக இருக்கிறார். இப்போதைய நிலவரப்படி, பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தேவனுடைய கிரியையை மிகவும் நீண்ட காலமாக ஏற்றுக்கொண்டிருந்தாலும், தேவனுடைய கிருபையில் குளிர் காய்வதில் மட்டுமே அவர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு மாம்சத்தின் சிறிய ஆறுதலைக் கொடுக்க மட்டுமே தேவனை அனுமதிக்க விரும்புகின்றனர், ஆனாலும் அதிகமான மற்றும் உன்னதமான வெளிப்பாடுகளைப் பெற விரும்பவில்லை. மனுஷனின் இருதயம் எப்போதும் வெளியில் இருப்பதையே இது காட்டுகிறது. மனுஷனின் வேலை, அவனது சேவை மற்றும் தேவனுக்கான அவனது அன்பின் இருதயம் ஆகியவை சில அசுத்தங்களைக் கொண்டிருந்தாலும், அவனது உள் அங்கம் மற்றும் அவனது பின்னோக்கிய சிந்தனையைப் பொருத்தவரை, மனுஷன் தொடர்ந்து மாம்சத்தின் சமாதானத்தையும் இன்பத்தையும் தேடுகிறான், மனுஷனை பரிபூரணமாக்கும் தேவனின் நிபந்தனைகள் மற்றும் நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்று எதையும் கவனிப்பதில்லை. ஆகையால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமானதாகவும், தரம் தாழ்ந்ததாகவும் உள்ளது. அவர்களுடைய வாழ்க்கை சிறிதும் மாறவில்லை. அவர்கள் தேவன் மீதுள்ள விசுவாசத்தை ஒரு முக்கியமான விஷயமாகவே கருதுவதில்லை, அவர்கள் மற்றவர்களுக்காகவே விசுவாசம் வைத்திருப்பது போலவும், நோக்கங்கள் வழியாகச் செல்வது போலவும் நோக்கமில்லாத ஜீவியத்தில் நிலைதடுமாறி கவனமில்லாமல் சமாளிப்பது போலவும் இருக்கிறது. சிலர் மட்டுமே எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தைக்குள் பிரவேசித்து, அதிக மற்றும் செல்வச் செழிப்பான காரியங்களை ஆதாயப்படுத்திக் கொண்டு, இன்று தேவனுடைய வீட்டில் உள்ள மாபெரும் செல்வந்தர்களாகின்றனர் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதங்களை அதிகப்படியாகப் பெறுகின்றனர். நீங்கள் எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், பூமியில் தேவன் வாக்குத்தத்தம் செய்தவைகளைப் பெற முடிந்தால், எல்லாவற்றிலும் தேவனால் ஞானமடைய முற்பட்டால் மற்றும் வருடங்களை வீணாக்கவில்லை என்றால், இதுதான் தீவிரமாக உட்பிரவேசிப்பதற்கான சிறந்த பாதையாகும். இவ்வாறு மட்டுமே நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதியுள்ளவனாக இருப்பாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணப் படுத்தப்பட்டிருக்கிறவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்” என்பதிலிருந்து
514. தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரிங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையை அடைகிறாய். உன்னை பரிபூரணப்படுத்த தேவன் எந்த வகையான நபரின் மூலமும் கிரியை செய்வார் அல்லது எந்த நபர், சம்பவம் அல்லது காரியத்தின் மூலம் அவர் உன் காரியங்களைப் பெறவோ அல்லது பார்க்கவோ அனுமதிப்பார் என்பது உனக்குத் தெரியாது. இந்தச் சரியான பாதையில் நீ அடியெடுத்து வைக்க முடிந்தால், நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவாய் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் முடியவில்லை என்றால், உன் எதிர்காலம் இருண்டும், ஒளியில்லாமலும் காணப்படும் என்பதையே இது காட்டுகிறது. நீ சரியான பாதைக்கு வந்ததும், எல்லா காரியங்களிலும் நீ வெளிப்படுத்துதலைப் பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு எதை வெளிப்படுத்தினாலும், நீயே காரியங்களை அனுபவிக்க அவர்களுடைய அறிவின் அடிப்படையில் நீ செயல்பட்டால், இந்த அனுபவம் உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், மேலும் இந்த அனுபவத்திலிருந்து உன்னால் மற்றவர்களுக்கும் கொடுக்க இயலும். சொன்தையே மீண்டும் மீண்டும் சொல்வோர் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்; உன் சொந்த உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மற்றவர்களின் ஞானம் மற்றும் வெளிச்சத்தின் மூலம் ஒரு நடைமுறை வழியை கண்டுபிடிக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். இது உன் சொந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தேவனிடமிருந்து வரும் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து நீ அனுபவிக்க வேண்டும். நீ சகலத்திலும் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும், சகலத்திலும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் உன் வாழ்க்கை வளர்சியடையலாம். இதுபோன்ற நடைமுறை மிக விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து
515. நீ உண்மையிலேயே பரிபூரணமடைய விரும்புகிறாயா? நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், உன் மாம்சத்தை ஒதுக்கி வைக்கும் தைரியத்தை நீ பெறுவாய், தேவனுடைய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியும், மேலும் நீ செயலற்றவனாகவோ பலவீனமானவனாகவோ இருக்க மாட்டாய். தேவனிடமிருந்து வரும் சகலத்திற்கும் உன்னால் கீழ்ப்படிய இயலும், மேலும் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யப்படும் உன் செயல்கள் அனைத்தும் தேவனுக்கு பணிவானதாக இருக்கும். நீ ஒரு நேர்மையான நபராக இருந்து, சகலத்திலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தால், நீ பரிபூரணப்படுவாய். மற்றவர்களுக்கு முன்னால் ஒரு விதமாகவும், அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் மற்றொரு விதமாகவும் செயல்படும் அந்த வஞ்சக ஜனங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நித்திய நாசம் மற்றும் அழிவின் புத்திரர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேவனுக்கு அல்ல, சாத்தானுக்கே சொந்தமானவர்கள். அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அல்ல! உன் செயல்களையும் நடத்தையையும் தேவனுக்கு முன்பாக வைக்கவோ அல்லது தேவனுடைய ஆவியால் ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாவிட்டால், உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என்பதற்கான ஆதாரம் இதுதான். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நீ ஏற்றுக்கொண்டு, உன் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்தினால் மாத்திரமே, நீ பரிபூரணமாக்கப்படும் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும். நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் தேவனுடைய சித்தத்தைச் செய்யவும் விரும்பினால், ஒரு வார்த்தைகூட குறைகூறாமலும், தேவனுடைய கிரியையை மதிப்பிடவோ அல்லது நியாயந்தீர்க்கவோ முயற்சிக்காமல், நீ தேவனுடைய சகல கிரியைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவைதான் தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான குறைந்தபட்ச தேவைகளாகும். தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்புகிறவர்களுக்கான அத்தியாவசியமான தேவை பின்வருமாறு: சகலத்திலும் தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்பட வேண்டும். தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதாவது உன் செயல்கள் மற்றும் நடத்தை அனைத்தையும் தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும் என்பதாகும். உன் செயல்கள் சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்தாலும், உன் நோக்கங்கள் சரியானதாக இருப்பதால், நீ அவற்றை தேவனிடமோ அல்லது உன் சகோதர சகோதரிகளிடமோ காண்பிக்க அஞ்சுவதில்லை, மேலும் நீ தேவனுக்கு முன்பாக சத்தியம் செய்யத் துணிகிறாய். உன் ஒவ்வொரு நோக்கத்தையும், சிந்தனையையும், யோசனையையும் தேவன் பரிசோதிப்பதற்காக நீ அவற்றை அவருக்கு முன்பாக வைக்க வேண்டும்; நீ அதன்படி நடந்து இந்த பாதையில் பிரவேசிப்பாயானால், உன் வாழ்க்கையில் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து
516. நீ தேவனால் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், துன்பப்படுவதற்கான விருப்பம், விசுவாசம், சகிப்புத்தன்மை, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் திறன், அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளும் திறன், அவருடைய துக்கத்தை கருத்தில் கொள்ளும் திறன் மற்றும் பல என எல்லாவற்றையும் நீ கொண்டிருக்க வேண்டும். ஒரு மனிதனைப் பரிபூரணமாக்குவது எளிதானது அல்ல. நீ அனுபவிக்கும் ஒவ்வொரு சுத்திகரிப்புக்கும் உன் விசுவாசம் மற்றும் அன்பு தேவைப்படுகின்றன. நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், பாதையில் முன்னேறுவது மற்றும் தேவனுக்காக உன்னை அர்ப்பணித்தல் ஆகியவை மட்டும் போதாது. தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவராக மாற நீ பல விஷயங்களை வைத்திருக்க வேண்டும். நீ துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நீ மாம்சத்தைப் பற்றிய அக்கறையை ஒதுக்கி வைக்கவும், தேவனுக்கு எதிராக குறைகூறாமல் இருக்கவும் வேண்டும். தேவன் உன்னிடமிருந்து தன்னை மறைக்கும்போது, அவரைப் பின்பற்றுவதற்கான விசுவாசத்தை நீ கொண்டிருக்க வேண்டும். உனது முந்தைய அன்பைத் தடுமாறவோ கலைக்கவோ அனுமதிக்காமல் பராமரிக்க வேண்டும். தேவன் என்ன செய்தாலும், அவருக்கு எதிராக குறைகூறுவதை விட, நீ அவருடைய வடிவமைப்பிற்கு கீழ்ப்படிந்து, உன் மாம்சத்தை சபிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ சோதனைகளை எதிர்கொள்ளும்போது, நீ கடுமையாக அழும் போதிலும் அல்லது நீ அன்பு செலுத்தும் சில பொருட்களை விட்டுவிட விருப்பமில்லாமல் உணரும் போதிலும், நீ தேவனை திருப்திப்படுத்த வேண்டும். இதுவே, உண்மையான அன்பாகவும் விசுவாசமாகவும் இருக்கிறது. உன் உண்மையான வளர்ச்சி எதுவாக இருந்தாலும், நீ முதலில் கஷ்டத்தையும், உண்மையான விசுவாசத்தையும் அனுபவிக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாம்சத்தை கைவிடுவதற்கான விருப்பமும் உன்னிடத்தில் இருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தனிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கவும், உன் தனிப்பட்ட ஆர்வங்களை இழக்கக் கொடுக்கவும் நீ ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ உன் இருதயத்தில் உன்னைப் பற்றி வருத்தப்படும் திறனுடனும் இருக்க வேண்டும்: கடந்த காலத்தில், உன்னால் தேவனை திருப்திப்படுத்த முடியவில்லை, எனவே, இப்போது நீ உன்னை வருத்திக் கொள்ளலாம். இந்த விஷயங்களில் நீ குறைவில்லாமல் இருக்க வேண்டும். இவற்றின் மூலம்தான் தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். இந்த அளவுகோல்களை உன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், உன்னால் பரிபூரணமாக்கப்பட முடியாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து
523. ஜனங்கள் பரிபூரணத்திற்கான பாதையில் கால் வைக்கும்போது, அவர்களின் பழைய மனநிலையை மாற்றுவது சாத்தியமாகிறது. மேலும், அவர்களின் ஜீவிதங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, மேலும் அவர்கள் படிப்படியாக சத்தியத்திற்குள் இன்னும் ஆழமாக நுழைகின்றனர். அவர்களால் உலகத்தையும், சத்தியத்தைத் தொடராத அனைவரையும் வெறுக்க முடிகிறது. அவர்கள் குறிப்பாக தங்களையே வெறுக்கிறார்கள், ஆனால் அதை விட, அவர்கள் தங்களையே தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தின்படி ஜீவிக்கத் தயாராக இருக்கிறார்கள், மேலும் சத்தியத்தைத் தொடர்வதை அவர்கள் தங்கள் இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மூளைகளால் உருவாக்கப்பட்ட எண்ணங்களுக்குள் ஜீவித்திருக்க விரும்பவில்லை, மேலும் மனுஷனின் சுயநீதி, அகந்தை மற்றும் சுய எண்ணம் ஆகியவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்கள் உரிமையுடனான வலுவான உணர்வோடு பேசுகிறார்கள், விவேகத்தோடும் ஞானத்தோடும் விஷயங்களைக் கையாளுகிறார்கள், தேவனுக்கு விசுவாசமாகவும் கீழ்ப்படியும்படியும் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை அனுபவித்தால், அவர்கள் செயலற்றவர்களாகவோ பலவீனமானவர்களாகவோ மாறுவது மட்டுமல்லாமல், தேவனிடமிருந்து பெற்ற இந்த சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் அவர்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், அது அவர்களைப் பாதுகாக்கிறது. அவர்கள் சமாதானம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்வதில்லை, மற்றும் பசியைப் போக்க ரொட்டியையும் தேடுவதில்லை. அவர்கள் விரைவான மாம்ச இன்பங்களையும் பின்பற்றுவதில்லை. பரிபூரணப்படுத்தப்பட்டவர்களுக்கு இதுதான் நிகழ்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)” என்பதிலிருந்து
526. தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தில், ஜீவனுக்குறிய காரியங்களில் அவன் அக்கறையுடல் இருக்கவில்லை, சத்தியத்திற்குள் பிரவேசிப்பதைத் தொடரவில்லை, அவனுடைய மனநிலையின் மாற்றங்களைத் தொடரவில்லை என்றால், தேவனின் கிரியையைக் குறித்த அறிவைப் பின்தொடர்வது மிகக் குறைவு என்றால், அவன பரிபூரணமாக்க முடியாது. நீங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், தேவனின் கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அவருடைய தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், இந்தக் கிரியை ஏன் மனிதனின் மீது மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீ ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்த வகையான தண்டனையின் போது, நீ பேதுருவைப் போன்ற அனுபவங்களையும் அறிவையும் அடைந்திட முடியுமா? நீ தேவனைப் பற்றியும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றியும் அறிவைப் பின்தொடர்ந்தால், உன் மனநிலையின் மாற்றங்களைத் தொடர்ந்தால், நீ பரிபூரணமாகப்பட வாய்ப்பு இருக்கிறது.
பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்களுக்கு, ஜெயம் கொள்ள வேண்டிய இந்த படி தவிர்க்க முடியாதது. மனிதன் ஜெயம் பெற்றிருக்கும் போது ஒரு முறைதான் அவன் பரிபூரணமாக்கப்பட்ட கிரியையை அனுபவிக்க முடியும். ஜெயம் பெறும் பாத்திரத்தை மட்டுமே செய்வதில் பெரிய மதிப்பு இல்லை, இது தேவனின் பயன்பாட்டிற்கு உங்களைப் பொருந்தமானவர்களாக காண்பிக்காது. நீ சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதில் நீ பங்கெடுப்பதற்கான வழிமுறைகள் இருக்காது, ஏனென்றால் நீ ஜீவனைத் தொடரவில்லை, மேலும் மாற்றத்தையும் புதுப்பித்தலையும் நீ தொடரவில்லை, எனவே உனக்கு ஜீவியத்தின் உண்மையான அனுபவம் இருக்கவில்லை. இந்தப் படிப்படியான கிரியையின் போது, நீ ஒரு முறை சேவை செய்பவனாகவும், முரணாகவும் செயல்பட்டாய், ஆனால் கடைசியில் நீ பேதுருவாக இருக்கத் தொடரவில்லை என்பதாலும், உன் நாட்டம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்ட பாதையின்படி இல்லை என்பதாலும், இயற்கையாகவே, உன் மனநிலையில் மாற்றங்களை நீ அனுபவிக்க மாட்டாய். நீ பரிபூரணராக இருப்பதைத் தொடர்பவனாக இருந்தால், நீ சாட்சி பகிர்வாய், மேலும், “தேவனின் இந்தப் படிப்படியான கிரியையில், தேவனின் தண்டனைக்கான மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையை நான் ஏற்றுக்கொண்டேன், நான் மிகுந்த துன்பங்களைத் தாங்கினாலும், தேவன் மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன், தேவனால் செய்யப்பட்ட கிரியையை நான் பெற்றுள்ளேன், தேவனின் நீதியைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறேன், அவருடைய தண்டனை என்னைக் காப்பாற்றியிருக்கிறது. அவருடைய நீதியான மனநிலை என்மேல் வந்து ஆசீர்வாதங்களையும் கிருபையையும் கொண்டு வந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் தான் என்னைப் பாதுகாத்து தூய்மைப்படுத்தியது. நான் தேவனால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டிருக்காவிட்டால், தேவனின் கடுமையான வார்த்தைகள் என்மீது வரவில்லை என்றால், நான் தேவனை அறிந்திருக்க முடியாது, நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ஒருவர் அனுபவிப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, எல்லா சிருஷ்டிகளும் தேவனின் நீதியான மனநிலையையும் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தேவனின் மனநிலை மனிதனின் இன்பத்திற்கு தகுதியானது என்பதை ஒரு சிருஷ்டியாக இன்று நான் காண்கிறேன். சாத்தானால் பாழாக்கப்பட்டிருக்கிற ஒரு சிருஷ்டியாக, ஒருவர் தேவனின் நீதியான மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவருடைய நீதியான மனநிலையில் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது, மற்றும் அதற்குமேலாக, அங்கே மிகுந்த அன்பும் இருக்கிறது. இன்று தேவனின் அன்பை முழுமையாக ஆதாயம் செய்ய எனக்கு இயலாதவனாய் இருக்கிறேன் என்றாலும், அதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, இதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்”, என்றும் நீ கூறுவாய். பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிப்பவர்கள் நடந்துவந்த பாதை இதுதான், மற்றும் இது அவர்கள் பேசுவதின் அறிவாகும். அத்தகையவர்கள் பேதுருவைப் போன்றவர்கள். அவர்களுக்கும் பேதுருவைப் போன்ற அனுபவங்கள் உள்ளன. அத்தகையவர்களும் ஜீவனைப் பெற்றவர்கள், சத்தியத்தைக் கொண்டவர்கள். அவர்கள் கடைசி வரை அனுபவிக்கும் போது, தேவனின் நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் நிச்சயமாக சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்து, தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து
527. பேதுரு போன்றவர்களும், பரிபூரணமாக்கப்படுவதைத் தொடரும் ஜனங்களுமே நான் விரும்புகிறவர்களாவர். இன்றைய சத்தியம் அதற்காக ஏங்குகிறவர்களுக்கும் அதைத் தேடுவோருக்கும் கொடுக்கப்படுகிறது. தேவனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறவர்களுக்கு இந்த இரட்சிப்பு அளிக்கப்படுகிறது, மேலும் அது உங்களால் மட்டுமே ஆதாயப்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல. அதன் நோக்கம் என்னவென்றால், நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படலாம். தேவன் உங்களை ஆதாயப்படுத்துவதற்காக நீங்கள் தேவனை ஆதாய செய்வீர்கள். இன்று நான் இந்த வார்த்தைகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன், நீங்கள் அவற்றைக் கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் இந்த வார்த்தைகளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும். முடிவில், நீங்கள் இந்த வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் நேரம் இந்த வார்த்தைகளின் மூலம் நான் உங்களை ஆதாயம் செய்த தருணமாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் இந்த வார்த்தைகளை ஆதாயம் செய்தும் இருப்பீர்கள், அதாவது, இந்த உயர்ந்த இரட்சிப்பை நீங்கள் ஆதாயம் செய்து இருப்பீர்கள். நீங்கள் சுத்தப்படுத்தப்பட்டவுடன், நீங்கள் ஒரு உண்மையான மனிதராகிவிட்டீர்கள். சத்தியத்தின்படி வாழவோ, அல்லது பரிபூரணமாக்கப்பட்ட ஒருவரின் சாயலை வெளிப்படுத்தவோ உன்னால் இயலாது என்றால், நீ ஒரு மனிதன் என்று சொல்ல முடியாது, ஆனால் நடைப்பிணம் என்றும், மிருகம் என்றும் சொல்லலாம், ஏனென்றால், நீ சத்தியமில்லாமல் இருக்கிறாய், அதாவது நீ யேகோவாவின் மூச்சு இல்லாமல் இருக்கிறாய், ஆகவே நீ ஆவி இல்லாத இறந்த மனிதனாவாய்! ஜெயம்பெற்ற பிறகு சாட்யளிக்க முடியும் என்றாலும், நீ பெற்றிருப்பது ஒரு சிறிய இரட்சிப்புதான், மேலும் நீ ஒரு ஆவி கொண்ட ஒரு ஜீவனாக மாறவில்லை. நீ தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்திருந்தாலும், உன் மனநிலை புதுப்பிக்கப்படவில்லை அல்லது இதன் விளைவாக மாற்றம் பெறவில்லை. நீ இன்னும் உங்கள் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், நீ இன்னும் சாத்தானுக்கு உரியவன், நீ சுத்திகரிக்கப்பட்டிருக்கிற ஒருவன் அல்ல. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் மட்டுமே மதிப்பானவர்கள், இது போன்றவர்கள் மட்டுமே உண்மையான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து