முன்னுரை

ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனை புறக்கணித்தல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், அகற்றப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியம். நானே மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளை கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவன் பேசும் வார்த்தைகள் வெளிப்படையானவையாக அல்லது வெளிப்புற தோற்றத்தில் ஆழமாக இருந்தாலும், அவை அனைத்தும் மனிதன் ஜீவனுக்குள் நுழைகையில் இன்றியமையாத சத்தியங்களாக இருக்கின்றன. அவை ஜீவத்தண்ணிரின் நீரூற்று ஆகும். அவை மனிதனை ஆவியில் மற்றும் மாம்சத்தில் ஜீவிக்க உதவுகின்றன. மனிதன் உயிருடன் இருக்க தேவையானதை அவை வழங்குகின்றன. அவனது அன்றாட ஜீவிதத்தை நடத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நம்பிக்கையையும், இரட்சிப்பைப் பெறுவதற்கு அவன் கடந்து செல்ல வேண்டிய பாதை, குறிக்கோள் மற்றும் திசையையும், தேவனுக்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக அவர் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொரு சத்தியத்தையும், மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிகிறான், வணங்குகிறான் என்பது பற்றிய ஒவ்வொரு சத்தியத்தையும் அவன் கொண்டிருக்க வேண்டும். அவை மனிதனுடைய ஜீவித்தத்தை உறுதி செய்யும் உத்தரவாதம், அவை மனிதனுடைய அன்றாட அப்பம் மற்றும் அவை மனிதனை வலிமையாகவும் எழுந்து நிற்கவும் உதவும் உறுதியான ஆதரவும் ஆகும். சாதாரண மனிதத்தன்மையின் சத்தியத்தின் யதார்த்தத்தில் அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் சத்தியத்தால் நிறைந்திருக்கும் அது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மூலம் வாழ்கிறது. இதனால் மனிதகுலம் கேட்டிலிருந்து விடுபட்டு, சாத்தானின் கண்ணிகளுக்குத் தப்பித்து, மனிதகுலத்திற்கு சிருஷ்டிகர் தரும் சளைக்காத போதனை, அறிவுரை, ஊக்கம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றால் நிறைந்திருக்கும். அவை நேர்மறையானவை. அவை, அனைத்தையும் புரிந்துகொள்ள மனிதர்களுக்கு வழிகாட்டும் மற்றும் அறிவூட்டும் கலங்கரை விளக்கமாகும். அவை மனிதர்கள் வெளியே ஜீவிப்பதையும், நீதியான மற்றும் நன்மையான அனைத்தையும் வைத்திருப்பதையும் உறுதி செய்யும் உத்தரவாதம் ஆகும். அவை எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் அளவிடும் அளவுகோல் ஆகும். அவை இரட்சிப்பு மற்றும் ஒளியின் பாதையை நோக்கி மனிதர்களை வழிநடத்தும் வழிகாட்டி ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவன் என்ற சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார். தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவன் என்னும் ஜீவத்தண்ணீர் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகை சிருஷ்டித்தது முதலே, ஜீவனின் ஜீவ ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைகிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவனே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவனே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாகவும் திகழ்கிறார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்தில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய ஜீவனின் உந்துசக்தியாகவும், மனித ஜீவியத்தின் வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்தையும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி. மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், இது முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது, அதற்காக எந்த சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமையால் எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சியிருக்க இயலும். அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி சக்தியாலும் அடக்கி ஆட்கொள்ள முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது ஜீவிக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தை பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய வல்லமையை விஞ்சியிருக்க இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருளாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சள் புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் ஞானத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள மறைபொருட்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே பரலோகத்திற்குச் சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

அடுத்த: I. மனுக்குலத்தை இரட்சிப்பதற்கு தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைக் குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக