கிறிஸ்தவத்திற்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கும் இடையிலான வேறுபாடு

செப்டம்பர் 2, 2020

மனுவுருவான கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையைத் தொடர்ந்து கிறிஸ்தவம் தோன்றியது; இது கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ திருச்சபை. கடைசி நாட்களில், மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் வந்து, கிருபையின் காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து, ராஜ்யத்தின் காலத்தை அறிமுகப்படுயிருக்கிறார். மேலும், கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையினுடைய அஸ்திபாரத்தின் மேல், அவர் சத்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் மற்றும் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார். எல்லா கிறிஸ்தவ சபைப் பிரிவுகளிலும், சத்தியத்தை நேசிக்கிற, கர்த்தர் தோன்றுவதை வாஞ்சிக்கிற பலர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தேவனுடைய சத்தத்தை அடையாளம் கண்டுகொண்டனர். சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுவாக திரும்பி வந்திருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். ஒவ்வொருவரும் சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்டு ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினர், இதிலிருந்துதான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை பிறந்தது. ஆகையால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மற்றும் கிறிஸ்தவம் இரண்டும் தேவன் தோன்றியதானலும், அவருடைய கிரியையினாலும் பிறந்தவையாகும், ஆனால் கிறிஸ்தவம் என்பது கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையின் பலனாகும். நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்ய கடைசி நாட்களில் தேவன் மாம்சமாகியபோது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை பிறந்தது; இது ராஜ்யத்தின் காலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ திருச்சபையாகும். இரண்டு திருச்சபைகளும் வெவ்வேறு காலங்களில் மட்டுமே தோன்றி கிரியை செய்வதற்காக மாம்சமாகியதிலிருந்து தோன்றின. கிறிஸ்தவம் என்பது கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஒரு திருச்சபையாகும், அதே நேரத்தில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை என்பது ராஜ்யத்தின் காலத்தைச் சேர்ந்த ஒரு திருச்சபையாகும், இது இன்றைய தேவனுடைய தனிப்பட்ட கிரியை மற்றும் வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிற மற்றும் மேய்க்கப்படுகிற ஒன்றாகும். மறுபுறம், கிறிஸ்தவம் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இழந்துவிட்டது, ஏனென்றால் அது தேவனுடைய அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை, மேலும் இது தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை எதிர்க்கிறது மற்றும் நிந்திக்கிறது; இது தேவனால் கடிந்துகொள்ளப்பட்டு கைவிடப்பட்ட ஒரு திருச்சபையாகும், ஆகவே கிறிஸ்தவம் தேவனுடையதாக இருப்பதை தேவன் அங்கீகரிக்கவில்லை, மாறாக இது தேவனை எதிர்க்கும் மற்றும் நிந்திக்கும் ஒன்றாக உள்ளது. அப்படியானால், இரண்டிற்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திற்கு ஏறிச்சென்றுவிட்டார். அவர் பூமியில் இல்லை. கிறிஸ்தவ ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை நம்புகின்றனர் என்றாலும், அவர்கள் அவரை ஒருபோதும் சந்தித்ததுமில்லை, அவர்கள் அவரால் மேய்க்கப்படவுமில்லை அல்லது அவரால் தண்ணீர் பாய்ச்சப்படவுமில்லை, கர்த்தருடைய வார்த்தைகளை கடைப்பிடிப்பதிலோ அனுபவிப்பதிலோ அவர்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவை அறியவுமில்லை, மேலும் அவருடைய ஆவியானவரையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே, கிறிஸ்தவ திருச்சபையானது பரலோகத்திலுள்ள கற்பனையான மற்றும் பொய் தேவர்களை மட்டுமே நம்புகிறதே தவிர, கடைசி நாட்களில் மனுவுருவான கிறிஸ்துவை நம்பவில்லை. ஆகவே, அத்தகைய திருச்சபை உண்மையான கிறிஸ்தவம் அல்ல; இது புத்த மதத்திலிருந்து அல்லது தாவோயிசத்திலிருந்து வேறுபடாத ஒரு மதக் குழுவாகக் குறைக்கப்பட்டுள்ளது, அது தேவனுடைய திருச்சபை அல்ல. ஆதலால், கர்த்தர் திரும்பி வந்து பரலோக ராஜ்யத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கான கிறிஸ்தவத்தின் வாஞ்சை முற்றிலும் கற்பனையானதாகும். கிறிஸ்தவத்தில் சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொள்பவர்கள் தேவனுக்கு முன்பாக எழுப்பப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகளாவர். இருப்பினும், பெரும்பாலான ஜனங்கள் கடைசி நாட்களில் தேவனுடைய நியாத்தீர்ப்பின் கிரியையை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வேதாகமத்திலுள்ள எழுத்துக்களையும் உபதேசத்தையும் மட்டுமே பேசி, மதம் சார்ந்த விதிகளையும் சடங்காசாரங்களையும் பற்றிக்கொள்கின்றனர். அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை, அதற்குப் பதிலாக கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை நிந்திக்கவும் எதிர்க்கவும் தங்களால் முடிந்தவரை செய்வதில் சிசிபி-யின் சாத்தானிய ஆட்சிமுறையைப் பின்பற்றுகின்றனர். இந்த ஜனங்களே புத்தியில்லாத கன்னிகைகள். இவர்கள் ஏற்கனவே தேவனால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர், புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர், நீக்கப்பட்டிருக்கின்றனர். தேவன் அவர்களை அங்கீகரிக்கவில்லை, அவர்கள் பெயரளவிலான "கிறிஸ்தவர்களாக" மட்டுமே உள்ளனர். மேலும், அவர்கள் நீண்ட காலமாக பெயரில் மட்டுமே கொண்டிருந்த கிறிஸ்தவத்தின் சாராம்சத்தை இழந்துவிட்டனர்.

சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி கிரியைச் செய்ய ஆரம்பித்தபோது, தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை ஏற்றுக்கொண்ட ஒரு குழுவின்மீது கவனம் செலுத்துவதற்காக முழு பிரபஞ்சத்திலும் ஆவியானவருடைய கிரியையை தேவன் ஏற்கெனவே நிறுத்திவிட்டார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனிடம் ஜெபித்தும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணியும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றிருக்கின்றனர், அவர்கள் தேவனுடைய வளமான வாழ்க்கை வசதியைப் பெற்றிருக்கின்றனர், அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றுகின்றனர், அனுபவிக்கின்றனர், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவிக்கின்றனர், அவர்கள் சத்தியத்தைப் பற்றிய வளமான புரிதலைக் கொண்டுள்ளனர், அவர்களுடைய சீர்கேடானது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது, அவர்களுடைய மனநிலைகள் மாற்றப்பட்டு வருகின்றன, மேலும் அவர் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று, பேரழிவுகளுக்கு முன் தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஜெயங்கொண்டவர்களின் குழுவாகின்றனர். இருப்பினும், கிறிஸ்தவத்தில், தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் அமர்ந்திருக்கும் சிறு எண்ணிக்கையிலான ஜனங்களே புத்தியுள்ள கன்னிகைகளாக உள்ளனர். கிறிஸ்தவத்திலுள்ள பெரும்பாலானவர்கள் தேவனுடைய கிரியையின் அடிச்சுவடுகளை பின்பற்றத் தவறியது மட்டுமின்றி, சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை ஆகியவற்றை எதிர்ப்பதிலும் நிந்திப்பதிலும் மதம் சார்ந்த உலகிலுள்ள அந்திக்கிறிஸ்துவின் தீய சக்திகளையே இன்னும் பின்பற்றுகின்றனர். அவர்கள் நீண்ட காலமாகவே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை இழந்துவிட்டனர், அவர்கள் தேவனால் வெறுக்கப்பட்டுள்ளனர், புறந்தள்ளப்பட்டுள்ளனர், பேரழிவில் மூழ்கி, கசப்பான கண்ணீரை வடித்து அழுது, தங்கள் பற்களைக் கடிக்கின்றனர்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்?

வார்த்தைகள் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகப் பேசப்படுகின்றனவா, ஒரு தீர்க்கதரிசி மூலமாக தெரிவிக்கப்படுகின்றனவா அல்லது கர்த்தராகிய இயேசுவின்...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித்...

ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை எடுத்துக்கொள்கிறார்

அநேகருக்கு இது ஏன் என்று புரியவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனானவர் திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசுவாக இருப்பதனால், கர்த்தராகிய இயேசு கடைசி...

சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான்

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டபோது, மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கான தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் தொடங்கினார். மனுக்குலத்தின்...