சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் நோக்கங்கள் என்ன?
வேதாகமத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளின்படியும், சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையின் படியும் முழு இணக்கத்தோடு சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குத் தண்ணீர் அளித்து மேய்த்துவருகிறது. இதனால் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழும், ஆகாரம், தண்ணீர் அளித்தல் மற்றும் மேய்த்தலினாலும், தேவனுடைய வார்த்தைகளில் இருக்கும் சத்தியங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு, வாழ்க்கை மற்றும் மதிப்புகளின் சரியான கண்ணோட்டத்தையும், தொடர்வதற்கான சரியான இலக்குகளையும் கொண்டு, தேவனுடைய வழியைப் பின்பற்றி, தேவனுடைய ஆணைகளைப் பற்றிக்கொண்டு, உலகத்திற்கு ஒளியாகவும் உப்பாகவும் இருந்து தேவனை மகிமைப்படுத்தி, தேவனால் போற்றப்படுவார்கள் மற்றும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க தகுதி பெறுவார்கள்.
தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமான ஒரு சபையை ஸ்தாபிப்பதை சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பின்பற்றுபவர்கள், தேவனுடைய வார்த்தைகளிலும், தேவனுடைய அன்பிலும் ஊழியம் செய்து ஒருவருக்கொருவர் பகர்ந்துகொள்ள முடியும், கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதிக்க முடியும், தேவனுக்கு ஒரு உண்மையான சாட்சியாகவும் தேவனுடைய கிருபையின் வெளிப்படுத்தலாகவும் மாற முடியும்.
சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதையும் அதற்கு சாட்சி கொடுப்பதையும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்துள்ள கடைசி நாட்களின் கர்த்தராகிய இயேசு என்பதையும், அவர் “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது” (1 பேதுரு 4:17) என்று வேதாகமத்தில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளபடி கிரியையை ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் ஜனங்கள் பார்க்க இது அனுமதிக்கிறது. இது சரியாகக் கடைசி நாட்களில் மனுஷனை முற்றிலுமாக சுத்திகரித்து இரட்சிக்கும் தேவனுடைய கிரியை ஆகும். சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்படும் எல்லா சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் மட்டுமே மனிதனால் தனது சாத்தானிய மனநிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், பாவக்கட்டில் இருந்து விடுபடவும், சுத்திகரிக்கப்படவும், தேவனை அறியவும், தேவனுக்குக் கீழ்ப்படியவும், தேவனை ஆராதிக்கவும், ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும், கடைசி நாட்களின் பெரும் பேரழிவுகளில் இருந்து தப்பிப் பிழைக்கவும், தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் முடியும்—இது மட்டுமே மனுக்குலத்திற்கான அழகிய சென்றுசேரும் இடமாகும். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியையைப் பரப்பி அதற்கு சாட்சிகொடுப்பதும், அதன் மூலம், தேவனுக்கு முன்பாக தேவனுடைய இருப்பை அங்கீகரிப்பவர்களையும் சத்தியத்தை நேசிப்பவர்கள் அனைவரையும் கடைசி நாட்களின் தேவனுடைய இரட்சிப்பை ஏற்று அதை அடையும்படி கொண்டுவருதல்—இதுதான் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கான கட்டளையும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் நோக்கங்களும் ஆகும்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?