சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான்

செப்டம்பர் 2, 2020

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டபோது, மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கான தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் தொடங்கினார். மனுக்குலத்தின் இரட்சிப்பிற்காக தேவன் மூன்று கட்ட கிரியைகளைச் செய்துள்ளார், அவையாவான நியாயப்பிரமாண காலத்தில் யேகோவா தேவனுடைய கிரியை, கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவின் கிரியை மற்றும் ராஜ்யத்தின் காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியை. நியாயப்பிரமாண காலத்தில், யேகோவா தேவன் நியாயப்பிரமாணங்களை வெளியிட்டு மனுக்குலத்தின் வாழ்க்கையை வழிநடத்தினார், ஜனங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதை ஜனங்களுக்குத் தெரியப்படுத்தினார் மற்றும் பாவம் என்றால் என்ன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். ஆனால் நியாயப்பிரமாண காலத்தின் இறுதி கட்டங்களின் வருகையின்போது, மனுக்குலத்தின் சீர்கேடு இன்னும் ஆழமாகிவிட்டது, ஜனங்கள் அடிக்கடி நியாயப்பிரமாணங்களை மீறி யேகோவா தேவனுக்கு எதிராக பாவம் செய்தனர். அவர்களுடைய மீறுதல்களின் நிமித்தமாக அவர்கள் கண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டனர். இதனால், மனுக்குலத்தின் தேவைகளுக்கு பதலளிக்கும் விதமாக, கிருபையின் காலத்தில் தேவன் மனித உருவமெடுத்து, கர்த்தராகிய இயேசுவானார். அவர் மனுக்குலத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார், மனிதனை பாவத்திலிருந்து மீட்டு, தேவனுக்கு முன்பாக வந்து தேவனிடம் ஜெபிக்கவும், பாவத்தை அறிக்கையிடவும், மனந்திரும்பவும், தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டு, தேவனுடைய கிருபை மற்றும் ஆசீர்வாதங்கள் என்னும் செல்வத்தின் கீழ் வாழவும் ஜனங்களுக்கு உதவினார். ஆனால் ஜனங்களுடைய பாவ சுபாவம் இன்னும் சரிசெய்யப்பட வேண்டியதிருந்ததால், அவர்கள் இன்னும் அடிக்கடி பாவம் செய்து தேவனை எதிர்த்தனர். ஆகவே, ராஜ்யத்தின் காலத்தில் தேவன் மறுபடியும் மாம்சமாகி, கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் சர்வவல்லமையுள்ள தேவன் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்வதற்கும், மனுக்குலத்தின் இரட்சிப்பு மற்றும் சுத்திகரிப்புக்கான சகல சத்தியங்களையும் வெளிப்படுத்தவும் சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தை பயன்படுத்தி, மனுக்குலத்தின் பாவ சுபாவங்களை நீக்குகிறார், மனிதர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமையும் தேவனை எதிர்ப்பதையும் நிறுத்த வைத்து, ஜனங்களை உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படியவும் தொழுதுகொள்ளவும் வைக்கிறார். இறுதியாக மனுக்குலத்தை ஒரு அழகான சென்றடையும் இடத்திற்கு வழிநடத்திச் செல்கிறார். நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலத்தில் தேவன் செய்த கிரியைகள் வேறுபட்டிருந்தாலும், அவர் எடுத்துக்கொண்ட நாமங்களும் அவர் காண்பித்த மனநிலையும் வேறுபட்டிருந்தாலும், அவருடைய கிரியையின் சாராம்சமும் நோக்கங்களும் ஒன்றுதான். எல்லாமே மனுக்குலத்தை இரட்சிப்தற்காகத்தான், எல்லா கிரியைகளும் தேவனாலேயே செய்யப்படுகின்றன. சர்வவல்லமையுள்ள தேவன் சொன்னார், "யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்த தற்போதையக் கட்டம் வரை, என இந்த மூன்றுக் கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியை தான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்றுக் கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான்" (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தேவன் என்றும், அவர்தான் தேவனாக தோன்றியவர் என்றும், அவர்தான் மனுவுருவான மாம்சத்தில் உள்ள தேவன் என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிலர் உண்மையிலேயே அறிந்திருக்கின்றனர். உண்மையிலேயே, கர்த்தராகிய இயேசு சொன்னதை வேதாகமம் நீண்ட காலமாகவே தெளிவாக பதிவு செய்துள்ளது, "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9). "பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்றேன்" (யோவான் 10:38). "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்" (யோவான் 10:30). கர்த்தராகிய இயேசு, "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்" என்று சொன்னபோது, தானும் யேகோவாவும் ஒரே ஆவியை உடையவர்கள் என்பதை அவர் சொன்னார். கர்த்தராகிய இயேசுவால் சொல்லப்பட்ட வார்த்தைகளும் யேகோவாவால் சொல்லப்பட்ட வார்த்தைகளும் ஒன்றே. அவை இரண்டும் சத்தியமே, அவை ஒரே ஆவியானவரின் வார்த்தைகளே, அவற்றின் ஆதாரமும் ஒன்றே. அதாவது, கர்த்தராகிய இயேசுவும் யேகோவாவும் ஒரே தேவன்தான். அதேபோல், கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் ஆதாரமும், கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய வார்த்தைகளும் ஒன்றே, அவை பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள், அவைதான் சத்தியம், அவைதான் தேவனுடைய சத்தம். வேதாகமத்தில் அதிக எண்ணிக்கையிலான தீர்க்கதரிசனங்கள் கர்த்தர் திரும்பி வருவதையும் கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையையும் பற்றியவை என்பது கர்த்தரை விசுவாசிக்கின்ற எல்லோருக்கும் தெரியும். கர்த்தராகிய இயேசு சொன்னதுபடி, "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:3). "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 22:12). "அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்" (லூக்கா 21:27). "இதோ, திருடனைப்போல் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 16:15). "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" (யோவான் 12:48). பேதுருவின் முதல் நிருபத்திலும் சொல்லப்பட்டுள்ளது, "நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது" (1 பேதுரு 4:17). கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு திரும்பி வருவார், வார்த்தைகளை வெளிப்படுத்துவார், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்வார் என்று இந்த வேத வசனங்களில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது. கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் வரும்போது, கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையை அவர் செய்கிறார், மேலும் மனிதகுலத்தின் சுத்திகரிப்பு மற்றும் இரட்சிப்புக்கான சகல சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையும் கர்த்தராகிய இயேசுவின் கிரியையும் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றுதான்—ஒரே தேவன்தான்! இது கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை முழுமையாக நிறைவேற்றுகிறது: "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:12-13). கடைசி நாட்களில் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் சத்திய ஆவியானவரின் உருவமாக இருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசு.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவத்திற்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கும் இடையிலான வேறுபாடு

மனுவுருவான கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையைத் தொடர்ந்து கிறிஸ்தவம் தோன்றியது; இது கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ...

ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை எடுத்துக்கொள்கிறார்

அநேகருக்கு இது ஏன் என்று புரியவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனானவர் திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசுவாக இருப்பதனால், கர்த்தராகிய இயேசு கடைசி...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித்...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் நோக்கங்கள் என்ன?

வேதாகமத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளின்படியும், சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையின் படியும் முழு...