ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை எடுத்துக்கொள்கிறார்

நவம்பர் 27, 2020

அநேகருக்கு இது ஏன் என்று புரியவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனானவர் திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசுவாக இருப்பதனால், கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்ய வரும்போது அவர் "சர்வவல்லமையுள்ள தேவன்" என்று அழைக்கப்படுகிறார். அவர் ஏன் இன்னும் "இயேசு" என்ற நாமத்தைக் கொண்டிருக்கவில்லை? உண்மையிலேயே, தேவன் தமது ஒரு கட்ட கிரியையைச் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர் ஒரு புதிய நாமத்தைக் கொண்டிருக்கிறார். கிரியைக்கு ஏற்றார்போல் தேவனே இந்த புதிய நாமத்தை எடுத்துக்கொள்கிறார், இது ஜனங்கள் விரும்பியபடி அவரை அழைக்கின்ற ஒன்று அல்ல. கடைசி நாட்களில் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், கூறப்பட்டுள்ளது, "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்" (வெளிப்படுத்தல் 3:12). "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்" (வெளிப்படுத்தல் 1:8). "அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்" (வெளிப்படுத்தல் 19:6). ராஜ்யத்தின் காலத்தைச் சேர்ந்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமம் வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களின் முழுமையான நிறைவேறுதலாகும். ஒவ்வொரு காலத்திலும் தேவன் எடுக்கும் நாமமானது ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, மேலும் அந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையுடன் நெருக்கமாக தொடர்புகொண்டுள்ளது. சர்வவல்லமையுள்ள தேவன் இது தொடர்பான இரகசியங்களை வெளிப்படுத்தும்போது அவர் சொன்னார்,

"ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையை தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது" (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).

"'யேகோவா' என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். 'இயேசு' என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்கு பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்கு சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. 'யேகோவா' என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் வணங்கப்படும் தேவனுக்கான மரியாதையாகும். 'இயேசு' என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது ஆளுகைத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாக பிரதிநிதித்தும் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே" (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

ஒவ்வொரு காலத்திலும் தேவன் எடுக்கும் நாமத்துக்கு பிரதிநிதித்துவ முக்கியத்துவம் இருப்பதாக சர்வவல்லமையுள்ள தேவன் தெளிவாகக் கூறினார்: ஒவ்வொன்றும் தேவனுடைய கிரியையையும் அந்தந்த காலத்தில் அவர் வெளிப்படுத்தும் மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாண காலத்தின் போது, தேவன் தமது நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் அறிவிக்கவும், பூமியில் மனிதனின் ஜீவிதத்தை வழிநடத்தவும் யேகோவா என்னும் நாமத்தைப் பயன்படுத்தினார். யேகோவா என்ற நாமம் மனிதன் மீது இரக்கத்தைக் கொண்டிருக்கவும் மற்றும் மனிதனை சபிக்கவும்கூடிய தேவனுடைய மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கிருபையின் காலத்தில், மனுக்குலத்தின் மீட்பின் கிரியையைச் செய்வதற்கும், தயை மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ள தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும் தேவன் இயேசு என்னும் நாமத்தைப் பயன்படுத்தினார். ராஜ்யத்தின் காலத்தில், தேவன் சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுகிறார். மேலும், அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், மனிதனின் சீர்கெட்ட மனநிலைகளை வெளிப்படுத்தி நியாயந்தீர்க்கவும் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார், இதனால் அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இரட்சிக்கப்படுவார்கள், இதன் மூலம் எந்தவொரு இடறலையும் சகித்துக்கொள்ளாத அவருடைய நீதியான, மகிமையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. தேவன் தமது நாமத்தைப் பயன்படுத்தி காலத்தை மாற்றுகிறார், மேலும் காலத்தின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார். யேகோவா தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைச் செய்தபோது, யேகோவா என்ற நாமத்திடம் ஜெபிப்பதன் மூலமும் அவருடைய நியாயப்பிரமாணங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலமும் மட்டுமே ஜனங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட முடிந்தது. கிருபையின் காலம் வந்தபோது, மீட்பின் கிரியையைச் செய்ய தேவன் இயேசு என்ற நாமத்தைப் பயன்படுத்தினார். மேலும், ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதோடு, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படி கர்த்தருடைய நாமத்தில் மனந்திரும்புதலுக்காக ஜெபிக்கவும், கர்த்தராகிய இயேசு அருளிய சத்தியத்தையும் கிருபையையும் அனுபவிக்கவும் வேண்டியதிருந்தது. ஜனங்கள் இன்னும் யேகோவா என்னும் நாமத்தையே பற்றிக்கொண்டு, கர்த்தராகிய இயேசுவை ஏற்க மறுத்ததால், அவர்கள் தேவனுடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்து, அந்தகாரத்தில் விழுந்து, யூத பரிசேயர்களைப் போல தேவனால் சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். கடைசி நாட்களின் வருகையின்போது, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயந்தீர்க்கும் கிரியையைச் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை தேவன் பயன்படுத்துகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும், தேவனுடைய கிரியையின் படிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவிப்பதன் மூலமும் மட்டுமே, ஜனங்களால் சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அதைப் பெற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து விடுபடவும், சுத்திகரிக்கப்படவும், தேவனுடைய இரட்சிப்பைப் பெறவும் முடியும். இறுதியாக, தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை ஒரு முறை பாவத்திலிருந்து இரட்சிப்பார்; அவர் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பார், துன்மார்க்கரைத் தண்டித்து, ஒவ்வொருவரையும் அவரவருடைய வகையின்படி பிரித்து, மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தமது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தை ஏற்க மறுத்து, கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியையை மறுப்பவர்கள் எல்லோராலும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது, மேலும் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க சதாகாலமும் தகுதியற்றவர்களாகவும் இருப்பார்கள்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்?

வார்த்தைகள் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகப் பேசப்படுகின்றனவா, ஒரு தீர்க்கதரிசி மூலமாக தெரிவிக்கப்படுகின்றனவா அல்லது கர்த்தராகிய இயேசுவின்...

சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான்

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டபோது, மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கான தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் தொடங்கினார். மனுக்குலத்தின்...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகள்

(1) சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் வேதாகமத்தில் இருந்து உருவாகின்றன. சர்வவல்லமையுள்ள...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித்...