சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகள்

செப்டம்பர் 2, 2020

(1) சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் கோட்பாடுகள்

கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் வேதாகமத்தில் இருந்து உருவாகின்றன. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் கோட்பாடுகள், சிருஷ்டிப்பின் காலத்தில் இருந்து நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம், ராஜ்யத்தின் காலம் ஆகியவற்றில் நடைபெற்ற கிரியைகளின்போது வெளிப்படுத்தப்பட்ட அனைத்து சத்தியங்களில் இருந்தும் உருவாகின்றன. அதாவது, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள், மற்றும் திரும்பிவந்திருக்கும் கடைசி நாட்களின் கர்த்தராகிய இயேசுவான சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட ராஜ்யத்தின் கால வேதாகமமான—மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை—ஆகியவையே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் ஆகும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பிரமாணங்களையும் கட்டளைகளையும் ஆணையிட்டு மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் யேகோவா தேவனின் கிரியையை பழைய ஏற்பாடு பதிவுசெய்கிறது; கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவால் செய்யப்பட்ட மீட்பின் பணியைப் புதிய ஏற்பாடு பதிவுசெய்கிறது; ராஜ்யத்தின் காலத்தில் மனுக்குலத்தின் சுத்திகரித்தலுக்கும் இரட்சிப்புக்கும் தேவையான எல்லா சத்தியங்கள் மட்டுமல்லாமல் கடைசி நாட்களின்போது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியைகளின் ஒரு விளக்கமுமே மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையாகும். கிரியையின் மூன்று கட்டங்களிலும் தேவன் நிகழ்த்திய எல்லா உரைகளுமே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகள் ஆகும். அதாவது கிரியையின் இந்த மூன்று கட்டங்களின் போதும் தேவன் வெளிப்படுத்திய அனைத்து சத்தியங்களும் ஆகும். இவைகளே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் ஆகும்.

கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு செய்த கிரியையினால் பிறந்ததே கிறிஸ்தவம். ஆனால் கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியை மட்டுமே கிருபையின் காலத்தில் செய்ததாக அது நம்புகிறது. மனுவுருவான கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு மனிதனின் பாவநிவாரண பலியாகி, மனிதனை சாத்தானின் கரத்தில் இருந்து விடுவித்து, அவனை ஆக்கினைத் தீர்ப்பில் இருந்தும், நியாயப்பிரமாணத்தின் சாபத்தில் இருந்தும் விடுவித்தார். பாவங்கள் மன்னிக்கப்பட மனிதன் செய்ய வேண்டியது எல்லாம் தேவனுக்கு முன்னால் வந்து அவனது பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புவதே, மேலும் தேவன் அளிக்கும் அளவற்ற கிருபையையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பதே ஆகும். கர்த்தராகிய இயேசுவினால் செய்யப்பட்ட மீட்பின் பணி இதுவே. கர்த்தராகிய இயேசுவின் மீட்பினால் மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், மனிதன் தன் பாவ சுபாவத்தில் இருந்து விடுபடவில்லை, அவன் இன்னும் பாவத்தால் கட்டப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறான். இறுமாப்பும் அகந்தையும் கொண்டவனாகி பாவம் செய்து தேவனை எதிர்க்காமல் அவனால் இருக்கமுடியவில்லை. புகழையும் ஆதாயத்தையும் தேடுதல், பொறாமையும் விதண்டாவாதமும் உடையவனாக இருத்தல், பொய்சொல்லி ஜனங்களை ஏமாற்றுதல், உலகத்தின் பொல்லாத போக்குகளைப் பின்தொடர்தல் போன்ற காரியங்களைச் செய்கிறான். மனிதன் பாவத்தின் கட்டில் இருந்து விடுபட்டு பரிசுத்தம் ஆகவில்லை. கர்த்தராகிய இயேசு பலமுறை தாம் மீண்டும் வந்து கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்யப் போவதாகத் தீர்க்கதரிசனம் உரைத்து இவ்வாறு கூறினார்: “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22-27). மேலும் பேதுருவின் முதலாம் நிரூபம் அதிகாரம் 4, வசனம் 17 இல் இப்படி எழுதப்பட்டுள்ளது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்திருக்கும், கர்த்தராகிய இயேசு. அவர் மனிதனின் சுத்திகரிப்புக்கும் இரட்சிப்புக்கும் தேவையான எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார், தேவனுடைய வீட்டில் தொடங்கி நியாத்தீர்ப்பின் கிரியையை செய்திருக்கிறார், மேலும் வேதாகமத் தீர்க்கதரிசனங்களை முற்றிலுமாக நிறைவேற்றியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தைதான், வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்(வெளிப்படுத்தல் 2:7) மேலும் அது கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையின் ஒரு விளக்கம் ஆகும். சர்வவல்லமையுள்ள தேவனால் செய்யப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியைதான் மனுக்குலத்தின் இரட்சிப்புக்கான தேவனுடைய கிரியையின் கடைசிக் கட்டமாகும். இதுவே மிகவும் அடிப்படையான முக்கியக் கட்டமும் ஆகும். மனிதன் தேவனால் இரட்சிக்கப்பட்டு பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிக்க விரும்பினால் அவன் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பின் கிரியையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இதில் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது: “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை மனுஷன் ஏற்றுக்கொண்டு அனுபவித்தால் மட்டுமே, அவனால் தேவனுடைய பரிசுத்தத்தையும் நீதியையும், சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மனுஷனின் சாராம்சத்தையும் மற்றும் அது குறித்த சத்தியத்தையும் அறியவும், தேவனுக்கு முன்பாக உண்மையாக மனந்திரும்பவும், பாவத்தில் இருந்து விலகவும், தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக மாறவும் தேவனை ஆராதிக்கவும், தேவனால் ஆதாயப்படுத்தப்படவும் முடியும். அப்போது மட்டுமே அவன் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கத் தகுதிபெற்று, தேவனுடைய வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக் கொண்டு, அழகிய சென்றடையும் இடத்தை அடைய தகுதியுள்ளவனாவான்.

தேவன் உலகத்தை சிருஷ்டித்ததைத் தொடர்ந்து மனுக்குலத்தை இரட்சிக்கும் தமது கிரியையைத் தொடங்கினார். கடைசி நாட்களில் தேவனுடைய வீட்டில் தொடங்கும் நியாயத்தீர்ப்பின் கிரியையை அவர் முடிக்கும்வரை மனிதனின் இரட்சிப்புக்கான அவரது நிர்வாகத்திட்டம் நிறைவடையாது. கிரியையின் மூன்று கட்டங்களிலும் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகள் மற்றும் எல்லா சத்தியங்களிலும் இருந்தும், நம்மால் முழுமையாகப் பார்க்க முடிவது என்னவென்றால், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் மனிதனைப் பயன்படுத்தி செய்யப்பட்ட தேவனின் கிரியையாக இருந்தாலும் சரி, அல்லது கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம் ஆகிய இரு காலங்களிலும் மனுவுருவான அவர் செய்த கிரியையாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே ஆவியானவரின் வார்த்தைகளும் சத்தியத்தின் வெளிப்பாடுகளுமாகவே உள்ளன; சாராம்சத்தில், பேசுவதும் கிரியை செய்வதும் ஒரே தேவனே. ஆகையால், தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களிலும் அவரால் வெளிப்படுத்தப்பட்ட எல்லா சத்தியங்களும்—வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையில் பதிவுசெய்யப்பட்டுள்ள கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்டவைகளும்—சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் அமைகின்றன.

(2) மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையைப் பற்றி

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனின் தனிப்பட்ட வார்த்தைகளே மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை ஆகும். கடைசி நாட்களில் அவரது நியாயத்தீர்ப்பின் கிரியையின்போது மனிதனை சுத்திகரித்து இரட்சிக்க தேவன் வெளிப்படுத்தியிருக்கிற சத்தியங்களே இவை எல்லாம். இந்த சத்தியங்கள் பரிசுத்த ஆவியானவரின் நேரடியான வெளிப்படுத்தல்களாகவும், தேவனுடைய ஜீவன் மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடுகளாகவும், மற்றும் தேவனுடைய மனநிலை மற்றும் அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் ஆகியவற்றின் வெளிப்படுத்துதல்களாகவும் இருக்கின்றன. மனுஷன் தேவனை அறிவதற்கும் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்படுவதற்கும் இவையே ஒரே வழியாகும். சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியுள்ள வார்த்தைகள் மனிதனின் செயல்கள் மற்றும் நடத்தைகளின் உன்னதக் கொள்கைகளாக இருக்கின்றன, மேலும் மனிதனின் வாழ்க்கைக்கு இவற்றை விட உயர்ந்த நீதிமொழிகள் எதுவும் இல்லை.

கிறிஸ்தவ விசுவாசிகள் வேதாகமத்தை வாசிப்பது போல சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையில் உள்ள சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை தினமும் படிக்கின்றனர். எல்லா கிறிஸ்தவர்களும் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த நீதிமொழிகளாகவும் எடுத்துக்கொள்ளுகின்றனர். கிருபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் எல்லோரும் வேதாகமத்தை வாசித்து வேதாமத்தின் பிரசங்கங்களைக் கேட்டார்கள். ஜனங்களின் நடத்தையில் படிப்படியாக சில மாற்றங்கள் ஏற்பட்டன, மேலும் அவர்கள் குறைந்த அளவிலேயே பாவங்கள் செய்தனர். அதுபோல, சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளைப் படிப்பதின் மூலமும், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதின் மூலமும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சத்தியத்தைப் படிப்படியாகப் புரிந்துகொண்டு பாவத்தின் கட்டில் இருந்து விடுபடுகிறார்கள். அவர்களுடைய சாத்தானுக்குரிய மனநிலைகள் சுத்திகரிக்கப்பட்டு மாற்றம் அடைகிறது. அவர்கள் அதற்குப் பின்னும் பாவம்செய்து தேவனை விரோதிப்பது இல்லை. தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிதல் உள்ளவர்களாக மாறுகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் படித்து, தேவனுடைய வார்த்தைகளை கடைபிடித்து அனுபவிப்பதன் மூலமாகவே, மனிதனின் சீர்கெட்ட மனநிலை சுத்திகரிக்கப்பட்டு மாற்றமடையும் மேலும் மனிதனால் உண்மையான மனிதனின் சாயலில் வாழவும் முடியும் என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றன. இவை யாராலும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். நியாயப்பிரமாணத்தின் காலத்திலும் கிருபையின் காலத்திலும் தேவன் கிரியை செய்த போது வெளிப்படுத்திய தேவனுடைய வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கடைசி நாட்களின் கிரியையில் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இரண்டின் ஆதாரமும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்துதான் வருகிறது, மேலும் இரண்டும் ஒரே தேவனின் வெளிப்படுத்தல்கள்தான். கர்த்தராகிய இயேசு கூறியபடி, சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளும் கிரியையும் வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களை முற்றிலுமாக நிறைவேற்றியுள்ளன: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). இவ்வாறே, இது வெளிப்படுத்தின விசேஷத்தில் இப்படிப் பதிவுசெய்யப்பட்டுள்ளது, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). “அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். … இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்(வெளிப்படுத்தல் 5:1, 5).

இன்று, நாம் எல்லாரும் ஓர் உண்மையைப் பார்த்திருக்கிறோம்: சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துகிற வார்த்தைகள் யாவும்தான் சத்தியம். அவற்றிற்கு அதிகாரமும் வல்லமையும் இருக்கின்றன—அவைதாம் தேவனின் குரல். ஒருவராலும் இதை மறுக்கவோ மாற்றவோ முடியாது! நீண்ட காலமாக மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை எல்லா நாட்டிலும் பிரதேசங்களிலும் உள்ள மக்கள் தேடி ஆராய இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அவை தேவனின் வார்த்தைகள் இல்லை அல்லது சத்தியம் இல்லை என்று மறுக்க யாரும் துணியமாட்டார்கள். தேவனின் வார்த்தைகள் முழு மனுக்குலத்தையும் முன்னோக்கி ஊக்குவிக்கின்றன. தேவனுடைய வார்த்தைகளின் மத்தியில் மக்கள் படிப்படியாக எழுப்புதல் அடைய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் படிப்படியாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். சத்தியத்தை அறிந்து வருகிறார்கள். மேலும் தேவனால் ராஜ்யத்தின் காலத்துக்குள் வழிநடத்தப்படுகிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் பூமியை ஆளும் காலமே ராஜ்யத்தின் காலமாகும். தேவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் செய்துமுடிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இன்று வேதாகமத்தை எல்லா விசுவாசிகளும் அங்கீகரிப்பது போல, மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையை தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் கடைசி நாட்களின் தேவனுடைய வார்த்தைகள் என்று வெகுவிரைவில் அங்கீகரிப்பார்கள். இன்று, மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தைதான், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் நம்பிக்கைகளின் அடிப்படையாக இருக்கிறது. அடுத்த காலத்தில் அது முழு மனுக்குலத்தின் இருப்புக்குமான அடிப்படையாய் நிச்சயமாக மாறும்.

(3) தேவனின் நாமங்கள் மற்றும் தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்கள்

சாத்தானின் சீர்கேட்டைத் தொடர்ந்து, மனுஷன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான். அவனுடைய சீர்கேடு இன்னும் ஆழமாக வளர்ந்துவிட்டது. மனிதனால் தன்னைப் பாவக் கட்டில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் தேவனின் இரட்சிப்பு தேவைப்படுகிறது. சீர்கெட்ட மனுக்குலத்தின் தேவைகளுக்கு இணங்க, நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும், ராஜ்யத்தின் காலத்திலும் தேவன் கிரியையின் மூன்று கட்டங்களை செய்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் காலத்தில், நியாயப்பிரமாணங்களையும் கற்பனைகளையும் பிறப்பிக்கும் மற்றும் மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கிரியையை செய்தார். கிருபையின் காலத்தில், தேவன் மாம்சமாகி, அவர் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் அவர் செய்த கிரியையின் அடிப்படையில் சிலுவையில் அறையபப்டும் கிரியையை நிறைவேற்றி மனிதனை பாவத்தில் இருந்து மீட்டார். ராஜ்யத்தின் காலத்தில், தேவன் இன்னும் ஒருமுறை மாம்சமாகி, கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட மீட்பின் கிரியையின் அடிப்படையில், தேவன் மனுஷனின் சுத்திகரித்தல் மற்றும் இரட்சிப்புக்கான சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். மேலும் நம்மை சுத்திகரித்து இரட்சிப்பதற்கான ஒரே வழியில் வழிநடத்துகிறார். நமது ஜீவனைப் போல சத்தியத்தை அடைந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதித்தால்தான், தேவனுடைய ராஜ்யத்துக்குள் வழிநடத்தப்பட தகுதிபெற்றவர்கள் ஆகி தேவனுடைய வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவோம். மனிதனை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இணைந்துள்ளன, ஒவ்வொரு கட்டமும் தவிர்க்க முடியாதது, ஒவ்வொன்றும் முந்தியதை விட உயர்வாகவும் ஆழமாகவும் செல்கிறன. இவையே வெவ்வேறு காலங்களில் தேவன் செய்த கிரியையின் மூன்று கட்டங்களாகும். மனுக்குலத்தின் இரட்சிப்புக்கு கிரியையின் இந்த மூன்று கட்டங்களும் மட்டுமே தேவனின் முழுமையான கிரியை ஆகும்.

மூன்று நாமங்களான—யேகோவா, இயேசு, மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன்—ஆகியவையே நியாயப்பிரமானத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம் ஆகியவற்றில் தேவன் கொண்ட வெவ்வேறு நாமங்களாகும். வெவ்வேறு காலங்களில் அவரது கிரியை வேறுபடுவதால் அவர் வெவ்வேறு நாமங்களை எடுத்துக் கொள்கிறார். ஒரு புதிய காலத்தை தொடங்க தேவன் ஒரு புதிய நாமத்தைப் பயன்படுத்தி அந்தக் காலத்தின் கிரியையைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் தேவனுடைய நாமம் யேகோவா என்பதாகவும், கிருபையின் காலத்தில் இயேசு என்பதாகவும் இருந்தது. ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஒரு புதிய நாமத்தை—சர்வவல்லமையுள்ள தேவன்—என்பதைப் பயன்படுத்துகிறார். இது வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறது: “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில் … ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்(வெளிப்படுத்தல் 3:7-12). “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்(வெளிப்படுத்தல் 1:8). இந்த மூன்று கட்டங்களிலும் தேவனுடைய நாமங்களும் கிரியையும் வேறானவைகளாக இருந்தாலும், சாரம்சத்தில் தேவன் ஒருவரே, மற்றும் ஆதாரம் ஒன்றே.

மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களும் ஒரே தேவனின் கிரியையே ஆகும். ஒவ்வொரு காலத்திலும் தேவன் வெவ்வேறு கிரியைகளைச் செய்து வெவ்வேறு நாமங்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய சாராம்சம் ஒருபோதும் மாறுவதில்லை; இவ்வாறு, யேகோவாவும், இயேசுவும், சர்வவல்லமையுள்ள தேவனும் ஒன்றான ஒரே தேவனே. யேகோவாவின் தோற்றமே இயேசு. திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுவே சர்வவல்லமையுள்ள தேவன். ஆகவே, வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கி, எல்லாவற்றிற்கும் ஆணையிடுகிற, எல்லாவற்றின் மேலும் ஆளுகை செலுத்துகிற, நித்தியமானவரும், ஒன்றான ஒரே தேவனுமான சிருஷ்டிகரே சர்வவல்லமையுள்ள தேவன்.

மனுஷனை இரட்சிக்கும் கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் மனிதனுக்குத் தம் முழுமையான மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனுடைய மனநிலையை நம்மைப் பார்ப்பதற்கு அனுமதித்தது இரக்கத்தாலும் அன்பாலும் மட்டுமல்லாமல், நீதி, மகத்துவம், மற்றும் உக்கிரத்தினாலும் ஆகும். அவரது சாராம்சம் பரிசுத்தமும் நீதியுமானது, சத்தியமும் அன்புமானது. தேவனின் மனநிலையையும் தேவனின் அதிகாரத்தையும் வல்லமையையும் எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்டதும் அல்லது சிருஷ்டிக்கப்படாததும் கொண்டிருக்கவில்லை. சிருஷ்டிப்பின் காலத்தில் இருந்து உலகத்தின் முடிவுவரை, தேவன் எவ்வாறு கிரியை செய்தாலும் அல்லது எவ்வாறு அவருடைய நாமம் மாறினாலும் அல்லது எவ்வாறு மனிதனுக்கு தோற்றமளிப்பது என்பதை அவர் தேர்ந்தெடுத்தாலும் அவரது சாராம்சம் ஒருபோதும் மாறாது, தேவன் தேவனே, மேலும் அவர் பேசும் எல்லா வார்த்தைகளும் சத்தியமே. வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது, மற்றும் அவற்றில் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்?

வார்த்தைகள் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகப் பேசப்படுகின்றனவா, ஒரு தீர்க்கதரிசி மூலமாக தெரிவிக்கப்படுகின்றனவா அல்லது கர்த்தராகிய இயேசுவின்...

ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை எடுத்துக்கொள்கிறார்

அநேகருக்கு இது ஏன் என்று புரியவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனானவர் திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசுவாக இருப்பதனால், கர்த்தராகிய இயேசு கடைசி...

கிறிஸ்தவத்திற்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கும் இடையிலான வேறுபாடு

மனுவுருவான கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையைத் தொடர்ந்து கிறிஸ்தவம் தோன்றியது; இது கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித்...