சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு, “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3). என்று வாக்குத்தத்தம் அருளினார். மேலும் அவர், “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்” (மத்தேயு 24:27). என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். கடைசி நாட்களில், அவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டு முன்னறிவித்தபடி, தேவன் மறுபடியும் மாம்சமாகி கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணியை அடிப்படையாகக் கொண்டு, வார்த்தையைப் பயன்படுத்தி நியாயத்தீர்ப்பு, சிட்சை, சுத்திகரித்தல், மற்றும் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய உலகின் கிழக்குப் பகுதியான சீனாவில் இறங்கியிருக்கிறார். இதில், வேதாகமத்தின் தீர்க்கதரிசனமான “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது” (1 பேதுரு 4:17). என்பதும், “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (வெளிப்படுத்தல் 2:7) என்பதும் நிறைவேறியுள்ளது. கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையானது கிருபையின் காலத்தை முடித்து ராஜ்யத்தின் காலத்தைக் கொண்டுவந்தது. சீனாவின் முக்கிய நிலப்பரப்பில் சர்வவல்லமையுள்ள தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் வேகமாகப் பரவியபோது, சத்தியத்தை நேசித்து தேவன் தோன்றுவதற்காய் ஏங்கிக்கொண்டிருந்த எல்லா மதங்களையும் சபைப்பிரிவுகளையும் சேர்ந்த ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்து அவை சத்தியம் என்றும், தேவனின் குரல் என்றும் அறிந்துகொண்டனர். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்று அவர்கள் உறுதியாக அறிந்து ஒருவர்பின் ஒருவராக சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்டனர். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவாகியது. சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றம் மற்றும் கிரியையால்தான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவாகியதே தவிர, அது எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்படவில்லை என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஏனென்றால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் நாமத்தில் ஜெபிக்கிறார்கள், அவருடைய கிரியைக்குக் கீழ்ப்படிகிறார்கள், அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லா சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு மனிதனை விசுவாசிக்காமல், கடைசி நாட்களில் மனுவுருவான கிறிஸ்துவை, மாம்சத்தில் உருவான ஆவியான இந்த நடைமுறை தேவனை இந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள் என்பது இவ்விதம் வெளிப்படையாகத் தெரிகிறது. வெளிப்புறத்தில், சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண் மனுஷகுமாரனேயன்றி வேறல்ல, ஆனால் சாராம்சத்தில் அவர் தேவனுடைய ஆவியையும், சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் உள்ளடக்கியவர். அவரது கிரியையும் வார்த்தையும் தேவ ஆவியின் நேரடி வெளிப்பாடும் ஆள்தத்துவத்தில் தேவனுடைய தோற்றமாகவும் உள்ளன. ஆகையால், அவரே மனுவுருவான நடைமுறை தேவன் ஆவார்.
1991 ஆம் ஆண்டில், கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அதிகாரபூர்வமாக தமது ஊழியத்தைச் சீனாவில் நடத்தத் தொடங்கினார். பின்னர், கடைசி நாட்களில் அவர் மில்லியன்கணக்கான வார்த்தைகளை வெளிப்படுத்தி மாபெரும் வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யத் தொடங்கினார். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் சொல்லுவதைப்போல, “நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்த கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). “தேவன் கடைசி நாட்களில் வார்த்தைகளின் கிரியையை செய்கிறார், மற்றும் இத்தகைய வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவருடையவை, ஏனெனில் தேவனே பரிசுத்த ஆவியானவர் மேலும் அவரால் மாம்சமாகவும் முடியும்; ஆகவே, கடந்த காலத்தில் பேசப்பட்ட ஆவியானவரின் வார்த்தைகள்தாம் இன்று மனிதனாக அவதரித்த தேவனுடைய வார்த்தைகள். … ஏனெனில் தேவன் தமது கிரியையை ஆற்றப் பேச வேண்டும் என்றால், அவர் மாம்சம் ஆகவேண்டும்; இல்லையெனில் அவரது கிரியைகள் அதன் இலக்குகளை அடைய முடியாது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?”). கடைசி நாட்களின் கிறிஸ்துவின் தோற்றம் மற்றும் பேச்சுக்களின் நிமித்தமாக, சத்தியத்தின் மேல் தாகம் கொண்டு தேடுகிறவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளால் அதிக அதிகமாக ஜெயங்கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, தேவனின் நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் தேவனின் தோற்றத்தையும் மீட்பரின் வருகையையும் கண்டிருக்கிறார்கள்.
திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவும் கடைசி நாட்களின் கிறிஸ்துவுமாகிய சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றத்தாலும் கிரியையாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பாலும் சிட்சையினாலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவானது. கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை உண்மையாகவே ஏற்றுக்கொள்பவர்களாலும், தேவனுடைய வார்த்தையால் ஜெயங்கொள்ளப்பட்டு இரட்சிக்கப்பட்டவர்களையும் கொண்டுள்ளது திருச்சபை. இது முற்றிலுமாக தனிப்பட்ட முறையில் சர்வவல்லமையுள்ள தேவனால் ஸ்தாபிக்கப்பட்டது, மேலும் அவரால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்பட்டு மேய்க்கப்படுகிறது. மேலும் இது எந்த வகையிலும் எந்த மனிதர்களாலும் நிறுவப்படவில்லை. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில் உள்ள தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா ஜனங்களாலும் இந்த உண்மை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனுவுருவான தேவனால் பயன்படுத்தப்படுகிற யாராக இருந்தாலும் சரி, இயேசு தனிப்பட்ட முறையில் பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்தெடுத்து நியமித்தது போல, அவர் தேவனால் முன்குறிக்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டு தேவனால் சாட்சியளிக்கப்படுகிறார். தேவனால் பயன்படுத்தப்படுகிறவர்கள் மட்டுமே அவருடைய கிரியையில் ஒத்துழைக்கிறார்கள். அவர்கள் அவருக்குப் பதிலாக தேவனுடைய கிரியையை ஒருபோதும் செய்வதில்லை. ஏனெனில் சீர்கெட்ட மனுக்குலம் சத்தியம் இல்லாமலும், சத்தியத்தை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு சபையை ஸ்தாபிக்க முடியாமலும் இருக்கிறது. தேவனால் பயன்படுத்தப்படுபவர்களாலோ அல்லது அவர்களை விசுவாசிக்கும் அல்லது அவர்களைப் பின்பற்றும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாலோ திருச்சபை ஸ்தாபிக்கப்படவில்லை. கிருபையின் காலத்து சபைகள் பவுலாலோ பிற அப்போஸ்தலர்களாலோ உருவாக்கப்படவில்லை. ஆனால் அவை கர்த்தராகிய இயேசுவின் கிரியையின் விளைவுகளும் கர்த்தராகிய இயேசு தம்மாலேயே ஸ்தாபிக்கப்பட்டவைகளுமாய் இருக்கின்றன. அதுபோலவே, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதனால் ஸ்தாபிக்கப்படவில்லை, ஆனால் அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையின் பலனாகும். தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷன் தண்ணீர் அளித்து, உணவளித்து சபைகளை வழிநடத்தி மனிதனின் கடமையை ஆற்றுகிறான். தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் வழிநடத்தப்பட்டு தண்ணீரும், உணவும் அளிக்கப்பட்டாலும், அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர வேறு யாரையும் விசுவாசிக்கவோ பின்பற்றவோ மாட்டார்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளையும் கிரியைகளையும் ஏற்றுக் கீழ்ப்படிகிறார்கள். இது யாராலும் மறுக்கமுடியாத ஓர் உண்மை. கடைசி நாட்களில் மனுவுருவான தேவனின் தோற்றம் மற்றும் கிரியையால், எல்லா மதப் பிரிவுகளிலும் இருக்கும் பல உண்மையான விசுவாசிகள் இறுதியில் தேவனுடைய குரலைக் கேட்டு, கர்த்தராகிய இயேசு ஏற்கெனவே வந்து தேவனுடைய வீட்டில் இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார் என்பதைக் கண்டு, அவர்கள் எல்லோரும் சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்று உறுதிப்படுத்தி இருக்கின்றனர்—மற்றும் அதனுடைய பலனாக, அவருடைய கடைசி நாட்களின் கிரியையை ஏற்றுக்கொண்டுள்ளனர். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தையால் ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரும் அவருடைய நாமத்துக்குக் கீழ்ப்படிகின்றனர். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் எல்லோரும் சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி ஜெபித்து, பின்பற்றி, கீழ்ப்படிந்து, அவரை ஆராதிக்கிறார்கள். சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள்தான் தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை ஆகிய கிரியையின் முதல் அனுபவத்தைப் பெற்று, அவருடைய நீதியான மனநிலையைப் புரிந்துகொண்டு, அவருடைய மகத்துவத்தையும் உக்கிரத்தையும் கண்டார்கள். ஆகையால அவர்கள் தேவனுடைய வார்த்தையால் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டு, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, தேவனுடைய வார்த்தையின் நீயாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ள மனதுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாக மனந்திரும்பி மாற்றம் அடைந்திருக்கிறார்கள், இவ்வாறு, அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள்.
துல்லியமாக இது ஏனெனில், சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள், மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய திட்டத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன, தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள், தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்படுத்துதலால், ஒவ்வொரு காலத்திலும் தேவனுக்கு ஒரு புதிய நாமம் உண்டு என்பதையும், தேவனுடைய புதிய நாமம் அவர் ஒரு புதிய கிரியையை நடப்பிக்கிறார் என்பதைக் குறிப்பதையும் மட்டுமல்லாமல் தேவன் ஒரு பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு புதிய காலத்தைத் தொடங்குகிறார் என்பதையும் புரிந்துகொள்ளுகிறார்கள். தேவன் ஒரு புதிய நாமத்தை ஒவ்வொரு காலத்திலும் எடுப்பது மிகப்பெரிய ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது! அதற்குள் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தேவன் தம்முடைய நாமத்தைப் பயன்படுத்தி காலத்தை மாற்றுவதோடு அந்தக் காலத்தின் கிரியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் அவருடைய மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். நியாயப்பிரமாணத்தின் காலத்தில், அவர் யேகோவா என்ற நாமத்தைப் பயன்படுத்தி நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் பிறப்பித்து பூமியில் மனுஷனுடைய வாழ்க்கையை வழிநடத்தினார். மகத்துவமும் உக்கிரமும் நிறைந்த தேவனின் மனநிலையை யேகோவா என்னும் நாமம் குறித்தது. அது மனிதனின் மேல் இரக்கத்தைக் காட்டவும் சபிக்கவும் வல்லது. கிருபையின் காலத்தில் , மனுக்குலத்தின் மீட்பின் பணியைச் செய்யவும் தமது இரக்கமும் கிருபையும் நிறைந்த மனநிலையை வெளிப்படுத்தவும் அவர் இயேசு என்ற நாமத்தைப் பயன்படுத்தினார். ராஜ்யத்தின் காலம் வந்தபோது, மனிதனை சுத்திகரிக்கவும், மனிதனை மாற்றவும், மனிதனை இரட்சிக்கவும், மனிதனின் எந்த ஒரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத தமது நீதியையும் மகத்துவமான மனநிலையையும் வெளிப்படுத்தவும் தேவனுடைய வீட்டில் இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையை நடப்பிக்க அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். தேவனின் புதிய நாமம் மனிதனால் தன்னிச்சையாக அழைக்கப்பட்ட ஒன்றல்ல, ஆனால் தமது கிரியையின் தேவைக்காக தேவன் தம்மாலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. தேவன் கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துக்கொள்ளும் நாமத்தின் வேர் வேதாகமத்தில் உள்ளது. கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது எடுக்கும் நாமம் வேதாகமத்தின் வெளிப்படுத்தல் புத்தகத்தில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்” (வெளிப்படுத்தல் 3:12). “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” (வெளிப்படுத்தல் 1:8). “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார்” (வெளிப்படுத்தல் 19:6). ராஜ்யத்தின் காலத்தின் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமம் வெளிப்படுத்தல் புத்தகத்தின் தீர்க்கதரிசனங்களை அப்படியே நிறைவேற்றுகிறது. தேவன் சர்வவல்லமையுள்ளவர், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து ஆளுகை செய்கிறார், மேலும் அவர் முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறார்; கடைசி நாட்களில், சத்தியத்தை வெளிப்படுத்தவும் தேவனுடைய வீட்டில் இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யவும் தேவன் சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தைப் பயன்படுத்துகிறார். அதில் இருந்து, ஜனங்கள் மனுவுருவான தேவனை சர்வவல்லமையுள்ள தேவன் என்றும் மனுவுருவான கிறிஸ்து நடமுறை தேவன் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் அவ்வாறே பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் ராஜ்யத்தின் சுவிசேஷம் பரவியபோது, தேவன் பிரபஞ்சம் முழுவதிலும் ஆவியானவரின் கிரியையை மீண்டும் கொண்டு வந்து, கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்ட இந்த மக்கள் கூட்டத்தினர் மீதும், தேவனால் முன்குறிக்கப்பட்டு மெய்யான வழியை உண்மையாக தேடியவர்கள் மீதும் அதைக் குவித்தார். பரிசுத்த ஆவியானவரின் கிரியை மாற்றப்பட்டதால், எல்லா சபைப்பிரிவுகளும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இழந்து பாழ்நிலம் ஆயின. இதனால் மக்கள் மெய்யான வழியைத் தேட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இது சரியாக இந்த வேதாகமத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது, “இதோ, அந்த நாட்கள் வந்துவிட்டன… நான் தேசத்தில் பஞ்சத்தை அனுப்புவேன், அது அப்பத்திற்கான பஞ்சமோ, தண்ணீருக்கான தாகமோ அல்ல, யோகோவாவின் வார்த்தைகளைக் கேட்காதிருக்கும் பஞ்சமே அது” (ஆமோஸ் 8:11). பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ், சத்தியத்தை நாடி தேவனை உண்மையாக விசுவாசித்தவர்கள் அந்திக்கிறிஸ்துக்கள் மற்றும் பொல்லாத ஊழியக்காரர்களின் கட்டுப்பாடுகளை உடைத்து, இறுதியாக தேவனின் குரலைக் கேட்டு அங்கிகரித்தார்கள். அதிக அதிகமான ஜனங்கள் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக திரும்பி வந்தனர். எல்லா மதங்களும் ஒன்றாகும் காட்சியும் எல்லா தேசங்களும் இந்த மலைக்குப் பாய்ந்துவரும் காட்சியும் எங்கும் காணப்பட்டன. எல்லா சபைப்பிரிவுகளிலும் இருந்து தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரும்பிவந்தபோது, பெரும்பாலான சபைப்பிரிவுகள் நிலைகுலைந்து வெகுநாளாக பெயரளவிலேயே இருந்து வருகின்றன. தேவனுடைய கிரியையின் அடிச்சுவடுகளை யாரால் தடுத்துநிறுத்த முடியும்? தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தேவனிடம் திரும்பி வருவதை யாரால் தடைசெய்ய முடியும்? முழு மத சமுதாயமும் சரியாக்கப்பட்டது போல் இது இருந்தது. திரும்பி வரும் வெள்ளப் போக்கு எழும்பி வரும் அலைகளைப் போல் இருந்தன—தேவனுடைய கிரியையின் வழியில் எந்த சக்தியாலும் நிற்க முடியாது. இருப்பினும், சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி தமது கிரியையைத் தொடங்கியதால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை சிசிபி அரசாங்கம் விடாமல் துன்புறுத்தியது. அது கடைசி நாட்களின் கிறிஸ்துவையும், தேவனைப் பின்பற்றி அவருக்கு சாட்சி கொடுக்கிறவர்களையும் கடுமையாக வேட்டையாடி, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைக் கொடூரமாகத் துன்புறுத்தி, கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையை ஒழிக்க முயற்சி செய்து வருகிறது. பல அவசர கூட்டங்களைக் கூட்டி சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கு திட்டங்களைத் தீட்டியது. அது பல இரகசிய ஆவணங்களை உருவாக்கி இழிவானதும் பேய்த்தனமானதுமாகிய பல வழிகளைக் கையாண்டுள்ளது: எல்லா இடங்களிலும் அறிவிப்புகளை ஒட்டியுள்ளது, பொது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள்கள், இணையம், பிற ஊடகங்கள் மூலம் வேண்டுமென்றே புனையப்பட்ட வதந்திகள், அவதூறுகள் பரப்பி குற்றம் சாட்டி, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் புகழுக்கு இகழ்ச்சி உண்டாக்கியுள்ளது; மக்களுக்கு தீய போதனைகள் மற்றும் பொய்களைவலுக்கட்டாயமாகப் போதித்துள்ளது, மூளைச்சலவையும் தன்மயமாக்குதலையும் செய்துள்ளது; மேற்பார்வை செய்யவும் கட்டுப்படுத்தவும் மூன்று-சுய சபைகளைப் பயன்படுத்தியுள்ளது, வெளிப்படையாகவும் இரகசியமாகவும் புலனாய்வு செய்ய ஒற்றர்களை அனுப்பியுள்ளது, அடிமட்டக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியுள்ளது, கண்காணிக்க அயலகத்தாருக்குக் கட்டளையிட்டுள்ளது, பெரிய வெகுமதிகளை வாக்குறுதியாக அளித்து அறிக்கைகளைத் தாக்கல் செய்ய மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது; ஜனங்களின் வீடுகளில் தன்னிச்சையாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது, அவர்களது வீடுகளைத் தாறுமாறாக்கிச் சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது, அபராதங்கள் மூலம் பணத்தை அபகரித்து தவறான முறைகளில் சொத்துக்களைச் சேர்த்துள்ளது; தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை இரகசியமாகக் கைதுசெய்துள்ளது, இஷ்டப்படி கட்டாயத் தொழிலாளர் முகாம்களில் அவர்களைத் தடுத்துச் சிறைப்படுத்தி, சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நாசம் விளைவித்துள்ளது, உயிர்வாழும் மக்களின் உறுப்புகளை அகற்றி சேகரித்துள்ளது, கேட்க முடியாதவாறு ஜனங்களை அடித்துக் கொன்றுள்ளது; சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை ஒடுக்க ஆயுதந்தாங்கிய காவலர்களையும் இராணுவத்தையும் கூட பயன்படுத்தியுள்ளது; இது போன்ற பலவற்றைச் செய்துள்ளது. சிசிபி அரசாங்கம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை—தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை - மனிதாபிமானமற்ற முறையில் கைதுசெய்து துன்புறுத்தியுள்ளது. அவர்களுடைய சொத்துக்களை நேர்மையற்ற வகையில் கொள்ளையடித்து, சரீரப் பிரகாகரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் துன்புறுத்தி சித்தரவதை செய்து, மரணத்தைக்கூட உண்டாக்கியுள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகள் பயங்கரமானவைகளாக இருந்து வருகின்றன. ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுபடி, மே 2020 வரை குறைந்தபட்சம் நூற்று அறுபத்தி நான்கு கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக: ஆன்ஹி மாகாணத்தின் சுயிக்ஸி பகுதியிலுள்ள வுகோ நகரைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரான ஷி யாங்ஜியாங் (ஆண், வயது 43) 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் உள்ளூர் காவலர்களால் இரகசியமாகக் கைதுசெய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார். மே 10 ஆம் தேதி ஷியின் உடலை மயானத்தில் அவரது குடும்பத்தினர் கண்டனர். அவரது உடல் கறுப்பாகவும், ஆங்காங்கே இரத்தம் உறைந்து சிவப்பாகவும் இருந்தது. அவராது தலையில் கடுமையான காயங்கள் இருந்தன. ஜியாங்ஸு மாகாணத்தின் ஷுயாங் பகுதியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரான யி ஆய்ஷாங் (ஆண், வயது 42), 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி அவர் சபைக்குப் பொருடகள் வாங்கிக்கொண்டிருந்த போது சிசிபி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். மூன்றாவது நாள் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். ஹேனான் மாகாணம், பிங்க்யூ பகுதி குவிங்கே மாவட்டைத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான சியாங் குஷி (பெண், வயது 46, அந்தச் சமயத்தில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் மூத்த தலைவர்களில் ஒருவர்), 2013 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஹெனான் மாகாணம் சின்மியில் சிசிபி காவல்துறையால் இரகசியமாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோதமான ஒரு நீதிமன்றத்தை அமைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற சித்தரவதையைப் பயன்படுத்தினர். காவல்துறையின் உடல் ரீதியான சித்திரவதையால் பிப்ரவரி 12 ஆம் தேதி அதிகாலை ஜியாங் மரணம் அடைந்தார்… இது தவிர, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிசிபி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு போதை மருந்துகள் ஊசிமூலம் ஏற்றப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு நாளடைவில் மூளைச்சிதைவு ஏற்பட்டது; சிலர் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதால் ஊனமாகி அவர்கள் தங்களையே பராமரிக்க முடியாமல் போயிற்று; சிலர் கட்டாய தொழிலாளர் முகாமில் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் சிசிபியால் கண்காணிக்கப்பட்டுத் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்தனர். தோராயமான ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2011 இல் இருந்து 2013 வரையிலான குறுகிய ஆண்டுகளில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட 380,380 பேர் சிசிபி அரசால் கைதுசெய்யப்பட்டு சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் அடைக்கப்பட்டனர். இந்த ஜனங்களில், சட்டவிரோத விசாரணையின் போது 43,640 பேர் எல்லா விதமான சித்திரவதைகளையும் அடைந்தனர்; 111,740 பேரின் மேல் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வெட்கக்கேடான முறையில் அபராதம் விதித்து 243,613,000 ஆர்எம்பி க்கும் மேற்பட்ட தொகை பிடுங்கப்பட்டது; 35,330 பேரின் வீடுகள் நாசமாக்கப்பட்டன, குறைந்தபட்சம் 1,000,000,000 ஆர்எம்பி (சபைக் காணிக்கை மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள் உட்பட) வலுக்கட்டாயமாக மற்றும் ஆதாரமின்றி பொது பாதுகாப்பு அமைப்புகளாலும் அவற்றின் துணை அமைப்புகளாலும் பறிக்கப்பட்டன அல்லது காவல்துறை அதிகாரிகளால் சுருட்டப்பட்டன. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீதான சிசிபி அரசின் கைது மற்றும் துன்புறுத்தலைப் பொறுத்தவரையில் இவை தோராயமான புள்ளிவிவரங்களே. ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த எல்லா கிறிஸ்தவர்களையும் கணக்கில் எடுக்கும்போது இது ஒரு பனிமலையின் முகடு மட்டுமே ஆகும். உண்மையில், சர்வவல்லமையுள்ள தேவன் தம் கிரியையைத் தொடங்கியபோது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த எண்ணற்ற கிறிஸ்தவர்கள் சிசிபி அரசால் கைதுசெய்யப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர், அல்லது கண்காணிக்கப்பட்டனர். அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைக் கடுமையாய் ஒடுக்க எல்லா விதமான கொடூர வழிமுறைகளையும் கையாண்டு சீனாவின் முக்கிய நிலப்பகுதியை ஒரு பயங்கரவாத உலகமாக மாற்றியது. மேலும், எல்லா சபைப்பிரிவுகளும் திருச்சபையின் மேல் பழிதூற்றி, கண்டனம் செய்து தாக்கின. இதனால் உடனடியாக வதந்தி பரவலாகக் கிளம்பி பலவகையான பழி, அவதூறு மற்றும் சாபங்கள் புயலாக எழும்பின. முழு சமூகமும் மதச் சமுதாயமும் எல்லாவிதமான எதிர்மறை விளம்பரத்தால் நிறைந்தன. சீர்கேடான மனுக்குலம் மெய்யான தேவனை எதிர்த்து மெய்யான வழியைத் துன்புறுத்தும் செயல் அதன் சிகரத்தைத் தொட்டது.
மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டதில் இருந்து, மனுக்குலத்தை இரட்சிக்கும் தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் ஒருபோதும் நிறுத்தவில்லை. இருப்பினும், மனுக்குலம் சத்தியத்தை அறியவில்லை, அது தேவனையும் அறிந்துகொள்ளவில்லை. இதன் விளைவாக ஒவ்வொரு முறையும் புதிய கிரியையைத் தொடங்க தேவன் மனுவுருவாகும்போதும், அதிகாரத்தில் இருப்பவர்களாலும் மதக் குழுக்களாலும் அவர் நிராகரிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இயேசு மாம்சமானபோது, அவர் ரோம அரசாலும் யூத மதவாதிகளாலும் துன்புறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டு இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். கடைசி நாட்களில், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்ய தேவன் மாம்சரூபத்தில் சீனாவுக்குத் திரும்பி வந்ததில் இருந்து, சிசிபி அரசால் அவர் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டுள்ளார். மேலும் சபிக்கப்பட்டு, பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, கண்டனம் செய்யப்பட்டு, கிறிஸ்தவத்தின் எல்லா சபைப்பிரிவுகளாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். இது மனுஷனின் சீர்கேட்டுக்கும் தீமைக்கும் ஒரு தெளிவான அறிகுறியாகும். கருப்பு மேகங்கள் அடர்ந்ததும் பிசாசுகள் அதிகாரம் செலுத்துவதுமான இப்படிப்பட்ட ஒரு பேய்களின் கோட்டையில் தேவன் தமது கிரியைச் செய்வது எவ்வளவு கடினமானது என்று நாம் கற்பனை செய்யலாம். இருப்பினும், தேவன் சர்வவல்லமையுள்ளவர். அவருக்கு மேலான அதிகாரமும் வல்லமையும் உள்ளது. சாத்தானின் வல்லமைகள் எவ்வளவு பரவலாக இருந்தாலும், எவ்வளவு தூரம் அவை எதிர்த்துத் தாக்கினாலும், அதில் பயனில்லை. சுமார் 20 ஆண்டுகளிலேயே, கடுமையான ஒடுக்கு முறையின் கீழ் சர்வவல்லமையுள்ள தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் சீனாவின் முக்கிய நிலப்பகுதி முழுவதும் பரவிவிட்டது. பல்லாயிரம் சபைகள் நாடு முழுவதும் எழுந்து பல லட்சம் மக்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் நாமத்துக்கு கீழ்ப்படிந்துள்ளார்கள். ஏறத்தாழ உடனடியாக எல்லா சபைப்பிரிவுகளும் ஆளற்றுப் போயின. ஏனெனில் தேவனுடைய ஆடுகள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டன. அவை ஏற்கெனவே சத்தத்தைப் பின்தொடர்ந்து திரும்பி வந்து, தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து அவரால் தனிப்பட்ட முறையில் தண்ணீர் அளிக்கப்பட்டு மேய்க்கப்படுகின்றன. இதன் மூலம் வேதாகமத்தின் “எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்” (ஏசாயா 2:2). என்ற தீர்க்கதரிசனம் நிறிவேறியுள்ளது. முடிவில் தேவனை உண்மையாக விசுவாசிக்கிற அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி திரும்புவது தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் இது வெகுகாலத்திற்கு முன்னரே தேவனால் திட்டமிடப்பட்டு முன்குறிக்கப்பட்டது ஆகும். யாராலும் இதை மாற்ற முடியாது! தங்கள் வயிறுமுட்ட உண்ணுவதற்காக தேவனை விசுவாசிக்கும் பொய் விசுவாசிகளும், அனைத்துப் பொல்லாத ஜனங்களும், அந்திக்கிறிஸ்துக்களும் தீமை செய்யும் பொய் மேய்ப்பர்களும், சர்வவல்லமையுள்ள தேவனை எதிர்த்து கண்டனம் செய்வோரும் தேவனுடைய கிரியையால் வெளிப்படுத்தப்பட்டு ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனுடைய கிரியையால் முழு மத சமுதாயமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியை இறுதியாக மகிமையில் நிறைவடைந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், சிசிபி அரசின் வெறித்தனமான எதிர்ப்பு மற்றும் இரத்தக்களறியான ஒடுக்குமுறையையும் மீறி தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் மின்னல் வேகத்தில் இன்னும் பரவிவருகிறது. தேவனுடைய கிரியையை ஒழித்து தடைசெய்ய சிசிபி தீட்டிய திட்டம் தோல்வி அடைந்திருக்கிறது. தேவனை விரோதிக்கும் தீய சக்திகள் யாவும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு தேவனின் மகத்துவமும் உக்கிரமும் நிறைந்த நியாயத்தீர்ப்பில் கவிழ்ந்து போயிருக்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்வது போல, “நிச்சயமாக நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், நிச்சயமாக எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், பிரதாபத்துடனும், உக்கிர கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், மனிதர்களின் எண்ணற்ற சேனைகளுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”). “எனது ராஜ்யம் முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக வடிவம் பெறுகிறது, என் சிங்காசனம் கோடானு கோடி மக்களின் இருதயங்களை ஆளுகை செய்யும். தேவதூதர்களின் உதவியுடன், எனது அரும்பெரும் சாதனை விரைவில் பலனளிக்கத் தொடங்கும். என் மகன்கள் மற்றும் என் மக்கள் அனைவரும் என் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், மீண்டும் ஒருபோதும் பிரிக்கப்படாமல் அவர்களுடன் நான் ஒன்றிணைய வேண்டும் என்று ஏங்குகிறார்கள். நான் அவர்களுடன் ஒன்றாக இருப்பதால் என் ராஜ்யத்தின் மிகப் பெரிய திரளான மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டி போடமாட்டார்களா? இது எந்தவொரு விலைக்கிரயமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரு மறு ஐக்கியமாக இருக்க முடியுமா? எல்லா மனிதர்களின் பார்வையிலும் நான் கௌரவமானவன், அனைவரின் வார்த்தைகளிலும் இவ்வாறு நான் அறிவிக்கப்படுகிறேன். மேலும், நான் திரும்பி வரும்போது, எல்லா சத்துரு படைகளையும் நான் வெல்வேன். அதற்கான நேரம் வந்துவிட்டது! நான் என் கிரியைகளைத் தொடங்குவேன், மனிதர்களிடையே ராஜாவாக ஆட்சி செய்வேன்! நான் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறேன்! நான் புறப்படவிருக்கிறேன்! எல்லோரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான். மனிதர்கள் அனைவரையும் என் நாளின் வருகையைக் காணச் செய்வேன், அவர்கள் அனைவரும் என் நாளின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 27”). ராஜ்யத்தின் சுவிசேஷம் பரவும்போது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் பெரிய அளவில் வளருகிறது. தடைபடாமல் பெரும் எண்ணிக்கையில் விசுவாசிகள் பெருகிவருகின்றனர். இன்று எப்போதையும் விட அது செழித்தோங்குகிறது. கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை ஆயிரக்கணக்கான குடும்பங்களில் வெகுநாளாக பரவிவருகிறது. அதிக அதிகமான ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். தேவனுடைய வார்த்தை மேலான அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மறுக்க முடியாத உண்மை முற்றிலுமாக “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்!” என்பதை நிரூபிக்கிறது
“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). ஆதியில் தேவன் வார்த்தையால் வானத்தையும் பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்து வார்த்தையால் மனுக்குலத்தை வழிநடத்தினார். கடைசி நாட்களிலும் தேவன் எல்லாவற்றையும் வார்த்தையாலேயே நிறைவேற்றுகிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் சுத்திகரித்தலும் பரிபூரணப்படுத்தலும் கிறிஸ்துவின் ராஜ்யம் உருவாக்கப்படுதலும் வார்த்தையாலேயே நிறைவேற்றப்படும். இது இப்படி இருக்க, எவ்வாறு சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தேவனுடைய வார்த்தையின் கிரியையால் தொடங்கப்பட்டது என்பதும், அது எவ்வாறு சர்வவல்லமையுள்ள தேவனின் வழிகாட்டுதல் மூலம் வளர்ந்தது என்பதும், சிசிபி அரசின் மிருகத்தனமான ஒடுக்குதலும் துன்புறுத்தலும், மதக் குழுக்களில் இருக்கும் அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகளின் எதிர்ப்பையும் மீறி அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பார்க்கும்போது இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது முற்றிலுமாக தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தையும் வல்லமையையும் நிரூபிக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி கிரியை செய்திராவிட்டால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை என்று ஒன்று இருந்திருக்காது, மேலும் தேவனுடைய வார்த்தைகள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை இருந்திருக்காது என்று கூறலாம். இன்று, அவர் வெளிப்படுத்தும் தமது வார்த்தைகளால் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு தண்ணீர் அளித்து போஷிக்கிறார். அவருடைய கிரியையை ஏற்றுக்கொண்ட யாவரும் அவரது வார்த்தைகளின் மேய்ச்சலையும் அவர் மனுஷனை இரட்சிக்கும் கிரியையும் அனுபவிக்கிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றை புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையை கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள ‘ஒலிவ மலையில்’ இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் இதுவாகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தையால்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மாபெரும் இரட்சிப்பை அடைந்துள்ளனர். சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் தேவனுடைய கிரியையானது இறுதியாக மகிமையில் முடிந்திருக்கிறது. தற்போது தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் எல்லா நாட்டிலும் இடத்திலும் அவரது வார்த்தையைப் பரப்பி அவரது செயல்களுக்கு சாட்சியம் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் தேவனுடைய வார்த்தைகள் பரவும். மேலும் அவர் எல்லா தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் சீக்கிரமாக வெளியரங்கமாகக் காட்சியளிப்பார். வெளியரங்கமாக தேவன் தோன்றுவதற்காக நீண்ட காலமாகக் காத்திருந்த எல்லா நாட்டிலும் இடத்திலும் உள்ள ஜனங்கள் அவர் ஏற்கெனவே இரகசியமாக உலகின் கிழக்குப் பகுதியில்—சீனாவில்—இறங்கி ஜெயங்கொள்ளும் மற்றும் இரட்சிக்கும் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்துவிட்டார் என்பதை ஒருபோதும் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்.
கடைசி நாட்களில், காலம் முடிவடையப் போகிற நிலையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் இருப்பிடமும், கொடுங்கோலர்களால் ஆளப்படுகிறதும், நாத்திகத்தின் வலுவான கோட்டையுமான சீனாவில் மனுவுருவான தேவன் இரகசியமாக இறங்கியிருக்கிறார். தேவன் தமது பன்மடங்கு ஞானத்தையும் வல்லமையையும் கொண்டு சாத்தானோடு யுத்தம் புரிந்து, தமது நிர்வாகத் திட்டத்தில் முக்கியக் கிரியையை செய்கிறார்—அதுவே சாத்தானை முற்றிலுமாக முறியடிப்பதும் மனுக்குலத்தின் முழுமையான இரட்சிப்பும் ஆகும். இருப்பினும், சீன ஆளுங்கட்சியின் காட்டுத்தனமான குற்றச்சாட்டுகள், கண்டனம், பொய் கூறுதல், அவதூறு ஆகியவற்றின் காரணமாக, இந்த உண்மைகளை அறியாத பலர் உண்மையாகவே சிசிபியின் வதந்திகளை நம்புகிறார்கள். குறிப்பாக மதக் குழுக்கள் தொடர்ந்து இந்நாள் வரை தேவனின் வருகையைக் கண்டனம் செய்து தூஷிக்கிறார்கள். அவர்கள் நாத்திக சிசிபி அரசின் பக்கம் நின்று தேவனுடைய கிரியையை எதிர்க்கிறார்கள். இது எவ்வளவு சோகமானது! அவர்கள் எதிர்க்கும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையில் திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்று இந்த ஜனங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தேவன் வெளியரங்கமாகத் தோன்றும்போது, இவர்கள் தங்கள் மார்பில் அடித்துப் பற்கடித்து அழுது புலம்புவார்கள். இது வெளிப்படுத்தலின் வார்த்தைகளை முற்றிலுமாக நிறைவேற்றுகிறது, “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்” (வெளிப்படுத்தல் 1:7). கடைசி நாட்களின் பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. பேரழிவுகள் முன்னெப்போதையும் விட பெரிதாக உருவாகி வருகின்றன. கொள்ளை நோய்கள் உலகை நாசமாக்குகின்றன. பஞ்சங்கள், வெள்ளங்கள், பூச்சிகளின் வாதை மற்றும் பிற பேரழிவுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. பெரும் பேரழிவுகள் சீக்கிரமாக நம்மேல் வரும். தேவன் முறையாக பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தையும் தம்மை எதிர்க்கும் பொல்லாத வல்லமைகளையும் சிட்சிப்பார். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒரு நிலத்துக்கும் மற்றொரு நிலத்துக்கும் இடையிலான எல்லைகளும் மாறத் தொடங்குகின்றன. ஒரு நிலம் மற்றொரு நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது, ஒரு நிலமும் மற்றொரு நிலமும் ஒன்றிணையும்போது, இந்த நேரத்தில்தான் நான் எல்லா நாடுகளையும் துண்டு துண்டாக உடைப்பேன் என்று நான் தீர்க்கதரிசனம் கூறியுள்ளேன். இந்த நேரத்தில், படைக்கப்பட்ட அனைத்தையும் புதுப்பித்து முழு பிரபஞ்சத்தையும் நான் மறுபகிர்வு செய்வேன், இதன்மூலம் பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்து பழையதைப் புதியதாக மாறுதல் செய்வேன்—இதுதான் எனது திட்டம் மற்றும் இவைதான் எனது கிரியைகள். தேசங்களும் உலக மக்களும் அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி வரும்போது, நான் வானத்தின் அருட்கொடை அனைத்தையும் எடுத்து அதனை மனித உலகிற்கு ஒப்படைப்பேன், இதனால், என் நிமித்தம், அந்த உலகம் இணையற்ற அருட்கொடையுடன் இருக்கும். ஆனால் பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:
நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனித காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றை புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்த சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”). மனுக்குல வரலாற்றில், தேவனைக் கடுமையாக எதிர்க்கும் மற்றும் தேவனை வெறியோடு எதிர்க்கும் எல்லா பொல்லாத வல்லமைகளும் தேவனால் எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்பதை நாம் காண்கிறோம். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அவைகளுடைய தீவிரமான பாவங்களால், சோதோம் கொமோரா நகரங்கள் வானத்தில் இருந்து தேவனால் அனுப்பப்பட்ட அக்கினியாலும் கந்தகத்தாலும் எரிக்கப்பட்டன. அதுபோலவே, கர்த்தராகிய இயேசுவை எதிர்த்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததாலும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதாலும் ரோமப் பேரரசு தேவனிடத்தில் இருந்து வந்த பேரழிவுகளால் அழிக்கப்பட்டன. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. கடைசி நாட்களில், தேவனை எதிர்த்து கண்டனம் செய்யும் எந்த ஒரு பொல்லாத வல்லமையும் தேவனால் சபிக்கப்படும் மற்றும் நிச்சயமாக அவரால் அழிக்கப்படும். இது துல்லியமாக தேவனின் நீதியான மனநிலையாகும்!
சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ராஜ்யம் மனுஷருக்கு மத்தியில் விரிவடைகிறது, மனுஷருக்கு மத்தியில் உருவாகிறது, மனுஷருக்கு மத்தியில் நிற்கிறது; என் ராஜ்யத்தை அழிக்க எந்த சக்தியும் இல்லை. … நீங்கள் நிச்சயமாக, என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருளினினுடைய ஆதிக்கங்களின் கழுத்தை நெரிப்பீர்கள். இருளின் நடுவே, உங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சத்தை நீங்கள் நிச்சயமாக இழக்க மாட்டீர்கள். நீங்கள் நிச்சயமாக எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானராக இருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சாத்தானின் முன்னே ஜெயிப்பவராக இருப்பீர்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ராஜ்யத்தின் வீழ்ச்சியில், என் வெற்றிக்கு சாட்சியம் அளிக்க, எண்ணற்ற கூட்டங்களுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக எழுந்து நிற்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சீனீம் தேசத்தில் உறுதியாகவும் அசையாமலும் நிற்பீர்கள். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மூலம், நீங்கள் என் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், நிச்சயமாக என் மகிமையை முழு பிரபஞ்சத்திலும் பரப்புவீர்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 19”). “மூன்று கட்ட கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவனுக்கு சாட்சி பகருகிறவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும், தேவனை அறிந்தவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும் உருவாக்கப்படும். இவர்கள் அனைவரும் தேவனை அறிந்துகொள்வார்கள், இவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலும். இவர்கள் மனிதத்தன்மையையும் அறிவையும் கொண்டிருப்பார்கள், தேவனுடைய மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியையாகும், இவர்கள்தான் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் பலன்களாவார்கள் மற்றும் சாத்தானின் இறுதி தோல்விக்கு மிகவும் வல்லமையான சாட்சிகளாவார்கள். தேவனுக்கு சாட்சி பகரக்கூடியவர்களாலேயே தேவனுடைய வாக்குத்தத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் மற்றும் இறுதியில் மீதியான ஜனக்கூட்டமாக இருப்பார்கள், இவர்களே தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தேவனுக்கு சாட்சி பகருவார்கள். நீங்கள் எல்லோருமே அந்த ஜனக்கூட்டத்தின் அங்கத்தினராகலாம் அல்லது பாதி பேர் மட்டுமே அங்கத்தினராகலாம் அல்லது ஒரு சிலரே அங்கத்தினராகலாம், இது உங்கள் விருப்பத்தையும் உங்கள் நாட்டத்தையும் பொறுத்ததாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்”). தேவனுடைய வார்த்தை நிறைவேறும், மேலும் நிறைவேறியது என்றென்றும் நிலைநிற்கும். ராஜ்யத்தின் எதிர்காலம் பிரகாசமானதும் அற்புதமானதும் ஆகும்! சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கெனவே ஒரு ஜெயங்கொள்பவர்களின் குழுவை ஏற்படுத்தியுள்ளார். தேவனுடைய கடைசி நாட்களின் கிரியை ஏற்கெனவே நிறைவேறியுள்ளது! தேவன் சீனாவிற்கு மறைவாக வந்த போது தேவனால் செய்யப்பட்ட முன்னோடிக் கிரியை மகிமையில் முடிந்துள்ளது. மேலும் அவர் சீக்கிரமாக எல்லா நாடுகள் மற்றும் இடங்களிலும் வெளியரங்கமாகத் தோன்றுவார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தேவனால் சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள் ஆவர். பரிசுத்த ஊழியத்தைத் தாங்கி அவர்கள் தேவனுடைய கிரியைக்கு சாட்சியளிக்கிறார்கள் எல்லா தேசங்களிலும் இடங்களிலும் தேவனுடைய பரிசுத்த நாமத்தை அறிவிக்கிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகம் முழுதும் வேகமாகப் பரவி வருகிறது. எல்லா தேசங்களிலும் இடங்களிலும் தேடவும் ஆராயவும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை இலவசமாகக் கிடைக்கிறது. அவை தேவனின் வார்த்தைகளே என்பதை ஒருவரும் மறுக்கத் துணியமாட்டார்கள், அவை சத்தியம் என்பதை மறுக்க ஒருவரும் துணிய மாட்டார்கள். சத்தியத்தின் மேல் தாகமும் வெளிச்சத்துக்கு ஏங்குகிற அதிக அதிகமான ஜனங்கள் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை தேடி ஆராய்கிறார்கள். அதிக அதிகமான ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவனை நோகித் திரும்பி வரும்போது டஜன் கணக்கான பல பெரிய நாடுகளிலும் பகுதிகளிலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. தேவனுடைய வார்த்தைகளின் மத்தியில் மனுக்குலம் படிப்படியாக எழுச்சிபெற்று, சத்தியத்தை ஏற்று அறியத் தொடங்கி இருக்கிறது. தேவனின் வார்த்தை மனுக்குலத்தை வழிநடத்தி எல்லாவற்றையும் நிறைவேற்றும். தேவனை உண்மையாக விசுவாசித்து மெய்யான வழியை தேடுகிற எல்லா ஜனங்களும் தேவனிடத்தில் நிச்சயமாகத் திரும்பிவந்து அவருடைய சிங்காசனத்துக்கு முன்பாகக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனுக்குலம் முழுதும் தேவன் வந்திருப்பதை, தோன்றியிருப்பதை அறியும், மேலும் அவர் நாமம் எல்லா மனுக்குலத்தின் மத்தியிலும் பெரிதாய் இருக்கும்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?