தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்

ஆதியில் தேவன் இளைப்பாறுதலில் இருந்தார். அக்காலத்தில் பூமியில் மனிதர்களோ அல்லது வேறு எதுவுமோ இருக்கவில்லை, மேலும், தேவன் இன்னும் எந்தக் கிரியையும் செய்திருக்கவில்லை. மனுக்குலம் வாழ்ந்திருக்கத் தொடங்கிய பின்னர் மற்றும் சீர்கெட்ட பின்னரே அவர் தமது நிர்வாகக் கிரியையைத் தொடங்கினார்; அதில் இருந்து அவர் ஒரு போதும் இளைப்பாறவில்லை, ஆனால் அதற்குப் பதில் அவர் மனுக்குலத்திற்கு மத்தியில் ஓய்வின்றி கிரியையாற்றத் தொடங்கினார். மனுக்குலத்தின் சீர்கேட்டால் மற்றும் பிரதான தூதனின் கலகத்தால் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தார். அவர் சாத்தானைத் தோற்கடித்து சீர்கெட்ட மனுக்குலத்தை மீட்காவிட்டால், அவர் மீண்டும் ஒருபோதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. மனிதன் இளைப்பாறுதல் இல்லாமல் இருப்பதால் தேவனும் அவ்வாறே இருக்கிறார், அவர் இளைப்பாறும் போது மனிதனும் இளைப்பாறுவான். இளைப்பாறுதலில் வாழ்வது என்பது யுத்தம் இல்லாமல், அசுத்தம் இல்லாமல் மேலும் தொடர் அநீதி இல்லாமல் வாழ்வது ஆகும். இது சாத்தானின் இடையூறுகள் இல்லாத (இங்கு “சாத்தான்” என்பது சத்துருவின் வல்லமைகளைக் குறிக்கிறது) மற்றும் சாத்தானின் சீர்கேடுகள் இல்லாத வாழ்க்கை, மேலும் அது தேவனுக்கு எதிரான எந்த வல்லமைகளும் ஊடுறுவ முடியாத வாழ்க்கையாகும்; எல்லாம் தனது வகையைப் பின்பற்றும் மற்றும் சிருஷ்டிப்பின் கர்த்தரைத் தொழுதுகொள்ளும் வாழ்க்கை மேலும் அதில் வானமும் பூமியும் முற்றிலுமாக அமைதியில் இருக்கும்—இதுவே “மனிதர்களின் இளைப்பாறுதலான வாழ்க்கை” என்ற சொற்களின் அர்த்தமாகும். தேவன் இளைப்பாறும் போது, அநீதி பூமியின் மேல் இனிமேலும் நிலைநிற்க முடியாது, அல்லது சத்துருக்களின் வல்லமைகள் மேலும் ஊடுறுவ முடியாது, மற்றும் மனுக்குலம் ஒரு புதிய ராஜ்யத்துக்குள் நுழையும்—சாத்தானால் இனி ஒருபோதும் மனுக்குலம் சீர்கேடு அடைவதில்லை, ஆனால் மாறாக சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு இரட்சிக்கப்பட்ட ஒரு மனுக்குலமாக இருக்கும். மனுக்குலத்தின் இளைப்பாறுதல் நாளே தேவனின் இளைப்பாறுதல் நாளாகவும் இருக்கும். மனுக்குலத்தால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாத காரணத்தால்தான் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தாரே ஒழிய ஆதியிலேயே அவர் தம்மால் இளைப்பாற முடியாத காரணத்தால் அல்ல. இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பது என்பதற்கு எல்லாம் இயக்கத்தை நிறுத்துகிறது அல்லது வளராமல் போகிறது என்று அர்த்தமல்ல, அல்லது தேவன் கிரியையை நிறுத்துகிறார் அல்லது மனிதர்கள் வாழ்வதை நிறுத்துகிறார்கள் என்பதும் பொருளல்ல. சாத்தான் அழிக்கப்படுவதும், அவனது தீய செயல்களில் இணைந்துகொண்ட பொல்லாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும் மற்றும் தேவனுக்கு எதிரான வல்லமைகள் இல்லாமல் போவதும் நிகழும் போதே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் அடையாளம் இருக்கும். மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக தேவன் தமது கிரியையை ஆற்ற மாட்டார் என்பதே தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரேவேசிக்கிறார் என்பதற்கு அர்த்தமாகும். முழு மனுக்குலமும் சாத்தானின் சீர்கேடு இல்லாமல் தேவனின் ஒளிக்குள்ளும் அவரது ஆசீர்வாதத்துக்குள்ளும் வாழும், மேலும் அநீதி ஒருபோதும் ஏற்படாது என்பதுதான் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறது என்பதற்கு அர்த்தமாகும். தேவனின் பராமரிப்பிற்குள் மனிதர்கள் பூமியில் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்வார்கள். தேவனும் மனுக்குலமும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மனுக்குலம் இரட்சிக்கப்பட்டுவிட்டது, சாத்தான் அழிக்கப்பட்டுவிட்டான், மனுக்குலத்திற்குள் தேவனின் கிரியை முற்றிலுமாக முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். தேவன் தொடர்ந்து மனிதர்களின் மத்தியில் கிரியை செய்ய மாட்டார், மேலும் அவர்கள் இனிமேலும் சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ் வாழ மாட்டார்கள். அப்படி இருக்க, தேவன் இனிமேலும் கிரியை ஆற்றிக்கொண்டிருக்க மாட்டார், மனுக்குலமும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கவும் செய்யாது; தேவனும் மனிதர்களும் ஒரேநேரத்தில் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவன் தமது ஆதி ஸ்தலத்துக்குத் திரும்புவார், மேலும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் இடத்துக்குத் திரும்பிச் செல்வார்கள். தேவனின் முழு நிர்வாகமும் முடிந்துவிட்ட பின்னர் தேவனும் மனிதர்களும் தங்கும் ஸ்தலங்கள் இவைகளே. தேவனுக்கு தேவனுக்கான போய்ச்சேரும் இடம் உண்டு, மற்றும் மனுக்குலத்திற்கு மனுக்குலத்திற்கான போய்ச்சேரும் இடம் உண்டு. இளைப்பாறுதலின்போது, பூமியின் மேல் மனிதர்களுடைய வாழ்வில் தேவன் தொடர்ந்து வழிகாட்டுவார், அதே வேளையில் அவருடைய ஒளியில், அவர்கள் பரலோகத்தில் இருக்கும் ஒரே மெய் தேவனைத் தொழுதுகொள்வார்கள். தேவன் இனிமேலும் மனுக்குலத்தின் மத்தியில் வாழமாட்டார், அல்லது அவரது ஸ்தலத்தில் மனுக்குலமும் அவருடன் வாழ முடியாது. ஒரே ஆட்சி எல்லைக்குள் தேவனும் மனிதர்களும் வாழ முடியாது; மாறாக, இருவருக்கும் அவர்களுக்கே உரித்தான வாழும் முறைகள் உள்ளன. தேவன் ஒருவர் மட்டுமே மனுக்குலத்தை வழிகாட்டுகிறார், மேலும் முழு மனுக்குலமும் தேவனின் நிர்வாகக் கிரியையினால் உண்டான பலனாகும். மனிதர்கள் வழிநடத்தப்படுபவர்களோ, அவர்கள் தேவனைப் போன்ற சாராம்சம் கொண்டவர்களோ அல்ல. “இளைப்பாறுதல்” என்பது ஒருவர் தன் ஆதி ஸ்தலத்துக்குச் செல்வது ஆகும். ஆகவே, தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார் என்றால் அவர் தமது ஆதி ஸ்தலத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார் என்று அர்த்தமாகும். அவர் இனிமேலும் பூமியில் அல்லது மனுக்குலத்தின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்க அவர்களது மத்தியில் வாழ மாட்டார், மனிதர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் சிருஷ்டிப்பின் மெய்யான இலக்குகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமாகும்; அவர்கள் பூமியின் மேல் இருந்து தேவனைத் தொழுதுகொள்வார்கள், மேலும் சாதாரண மனித வாழ்வை வாழ்வார்கள். ஜனங்கள் இனிமேல் ஒருபோதும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது அவரை எதிர்க்கமாட்டார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் ஆதி வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் இது முறையே தேவன் மற்றும் மனிதர்களின் வாழ்வும் சென்றடையும் ஸ்தலமுமாகும். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தில் அது தோற்கடிக்கப்படுவதே தவிர்க்கமுடியாத போக்காகும். இந்த வகையில், தேவன் தமது நிர்வாகக் கிரியையை முடித்த பின்னர் அவர் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும், மனுக்குலத்தின் முழு இரட்சிப்பும் அவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும் அதுபோலவே தவிர்க்கமுடியாத போக்குகளாக மாறிவிட்டன. மனுக்குலத்தின் இளைப்பாறுதல் ஸ்தலம் பூமியிலும், மேலும் தேவன் இளைப்பாறும் ஸ்தலம் பரலோகத்திலும் உள்ளன. மனிதர்கள் தங்கள் இளைப்பாறுதலில் தேவனைத் தொழுதுகொள்ளும் போது, அவர்கள் பூமியில் வாழ்வார்கள், மற்றும் தேவன் மீதமுள்ள மனுக்குலத்தை இளைப்பாறுதலுக்குள் வழிநடத்தும்போது, அவர் அவர்களை பூமியில் இருந்தல்ல பரலோகத்தில் இருந்து வழிநடத்துவார். தேவன் இன்னும் ஆவியானவராகவே இருப்பார், மனிதர்கள் இன்னும் மாம்சமாகவே இருப்பார்கள். தேவனும் மனிதர்களும் வெவ்வேறு விதமாக இளைப்பாறுவார்கள். தேவன் இளைப்பாறுதலில் இருக்கும் போது அவர் வந்து மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவார்; மனிதர்கள் இளைப்பாறும் போது, அவர்கள் பரலோகத்துக்குச் செல்லவும் அங்கு வாழ்க்கையை அனுபவிக்கவும் தேவன் வழிநடத்துவார். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், சாத்தான் ஒருபோதும் இருக்க மாட்டான்; அதுபோலவே பொல்லாத மனிதர்களும் இருக்க மாட்டார்கள். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறும் முன்னர், பூமியில் தேவனை துன்புறுத்திய பொல்லாத நபர்களும், அங்கே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த விரோதிகளும் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள்; கடைசி நாட்களின் பெரும் பேரிடர்களால் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள். அந்தப் பொல்லாத ஜனங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், பூமி இனி ஒருபோதும் சாத்தானின் துன்புறுத்தலை அறியாது. அப்போதுதான் மனுக்குலம் முழு இரட்சிப்பை அடையும், மற்றும் தேவனின் கிரியை முழுமையாக நிறைவடையும். தேவனும் மனிதனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க இவைகளே முன்நிபந்தனைகளாகும்.

தேவனுடைய கிரியையின் நிறைவேறுதலை மட்டுமல்லாமல் மனுக்குலத்தின் வளர்ச்சியின் முடிவையும் அனைத்து விஷயங்களின் முடிவும் நெருங்கிவருவது சுட்டிக்காட்டுகிறது. சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டிருப்பார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியார் தங்கள் பரவலை நிறைவுசெய்து விட்டிருப்பார்கள் என்பது இதற்கு அர்த்தமாகும். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட இத்தகைய மனுக்குலத்தால் தொடர்ந்து வளர்ச்சிபெறுவது என்பது சாத்தியமற்றது என்பதும் அதன் அர்த்தமாகும். ஆதியில் ஆதாமும் ஏவாளும் சீர்கெடுக்கப்படவில்லை, ஆனால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டனர். தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் வரும்போது, ஏதேன் தோட்டத்தில் இருந்து துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும்—அவர்களின் சந்ததியாரும் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவார்கள். எதிர்கால மனுக்குலமும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரையே கொண்டிருப்பார்கள், ஆனால் அந்த மனிதர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் இரட்சிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பார்கள். இந்த மனுக்குலம் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டதாகவும், மேலும் அது பரிசுத்தமானதாகவும் இருக்கும். இந்த ஜனங்கள் ஆதியில் இருந்த மனித இனம் போல் இருக்க மாட்டார்கள்; ஆதியில் இருந்த ஆதாம் ஏவாளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையான மனுக்குலம் என்று கூட இதைக் கூறலாம். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவரிலும் இருந்து இந்த ஜனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள், மேலும் தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் கடிந்துகொள்ளுதலின் போது இறுதியாக உறுதியாக நின்றவர்களே இவர்கள்; சீர்கெட்ட மனுக்குலத்தின் மத்தியில் அவர்கள் மீந்திருக்கும் கடைசி குழுவாக இருப்பார்கள். இந்த ஜனங்கள் மட்டுமே தேவனோடு சேர்ந்து இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் புறம்பாக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாகத் தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்தைய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்குப் பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், அவர் மனிதர்களை இரட்சிக்கும் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதலே அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. மாறாக, அவரது கிரியை முழுமையாக முடிந்த பிறகு மட்டுமே இந்தப் பணி செய்யப்படும். நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது. தேவன் துன்மார்க்கரை அழிக்காமல், ஆனால் அதற்குப் பதிலாக அவர்களை மீந்திருக்க அனுமதித்தால், பின் ஒவ்வொரு மனிதரும் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாமல் போவார்கள், மேலும் தேவனால் முழு மனுக்குலத்தையும் ஒரு சிறந்த ராஜ்யத்துக்குள் கொண்டுவர முடியாமல் போகும். இத்தகைய கிரியை நிறைவடையாது. அவரது கிரியை முடிவடைந்த உடன், முழு மனுக்குலமும் முற்றிலும் பரிசுத்தமாக இருக்கும்; இந்த வழியில் மட்டுமே தேவனால் சமாதானத்துடன் இளைப்பாறுதலில் வாழ முடியும்.

இந்நாட்களில் ஜனங்களால் இன்னும் மாம்சத்தின் காரியங்களை விட்டுவிட முடியவில்லை; அவர்களால் மாம்ச இன்பம், உலகம், பணம், அல்லது அவர்களது சீர்கெட்ட மனநிலைகளை விட முடியவில்லை. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் தேடல்களை ஒரு அக்கறையற்ற முறையிலேயே நடத்துகின்றனர். உண்மையில், இந்த ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனை வைத்துக்கொள்ளுவதே இல்லை; அதைவிட மோசமானது, அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதில்லை. அவர்களது இருதயத்தில் தேவன் இல்லை, மற்றும் அதனால் தேவன் செய்யும் அனைத்தையும் அவர்களால் கண்டுணர முடிவதில்லை, மேலும் அவர் கூறும் வார்த்தைகளை நம்புவதற்கும் அவர்கள் மிகக் குறைந்த திறன் உடையவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனங்கள் மிக அதிகமான அளவில் மாம்ச சிந்தை உடையவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் மிகவும் சீர்கெட்டவர்களாக இருக்கின்றனர் மற்றும் சத்தியம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் என்னவென்றால், தேவன் மாம்சமாக முடியும் என்று அவர்கள் நம்புவதில்லை. மாம்சமாகிய தேவன் மீது நம்பிக்கை இல்லாத எவரும்—அதாவது, கண்ணுக்குத் தெரியும் தேவனையோ அல்லது அவரது கிரியை மற்றும் வார்த்தைகளையோ நம்பாத எவரும், மேலும் அதற்குப் பதில் பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான தேவனை தொழுதால்—தன் இருதயத்தில் தேவன் இல்லாத ஒரு நபராக இருப்பான். இத்தகைய ஜனங்கள் கலகக்காரர்கள் மற்றும் தேவனை எதிர்ப்பவர்கள் ஆவார்கள். சத்தியத்தைப் பற்றி எதுவும் கூற அவர்களிடம் மனிதத்தன்மை மற்றும் பகுத்தறிவு இல்லை. மேலும், இந்த ஜனங்களுக்கு, கண்ணுக்குத் தெரியும் மற்றும் தொட்டுணரத்தக்க தேவன் முற்றிலுமாக நம்பமுடியாதவராக இருக்கிறார், இருப்பினும் அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத தேவன் அதிகமாக நம்பகமானவரும் மிகவும் சந்தோஷமளிப்பவராகவும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் தேடுவது மெய்யான சத்தியத்தை அல்ல, அல்லது வாழ்க்கையின் மெய்யான சாராம்சத்தையும் அல்ல; தேவ சித்தத்தையும் அறவே இல்லை. மாறாக, அவர்கள் மனவெழுச்சியை நாடுகிறார்கள். தங்கள் சொந்த விருப்பங்களை அடைய மிகவும் உதவும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சந்தேகமின்றி அதுவே அவர்கள் நம்புவதும் நாடுவதும் ஆகும். சத்தியத்தைப் பின்பற்றுவதற்கு அல்லாமல் தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்தவே அவர்கள் தேவனை நம்புகிறார்கள். இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர் இல்லையா? அவர்கள் மிக அதிகமாக சுய-நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அவர்கள் பரலோகத்தில் இருக்கும் தேவன் தங்களைப் போன்ற “நல்லவர்களை” அழிப்பார் என்று நம்பவே மாட்டார்கள். அதற்குப் பதில், தேவன் அவர்களைப் பிழைத்திருக்க அனுமதிப்பார் என்றும் மேலும் தேவனுக்காக அநேக காரியங்களைச் செய்ததாலும் அவரிடம் கணிசமான “விசுவாசத்தை” காட்டியதாலும் சிறந்த பிரதிபலனை அளிப்பார் என்றும் நம்புகிறார்கள். கண்ணுக்குப் புலனாகிற தேவனை பின்பற்றுவதிலும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போது, அவர்கள் தேவனுக்கு விரோதமாக உடனடியாக எழும்புவார்கள் அல்லது மிகுந்த கோபத்துக்கு ஆளாவார்கள். தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கும் இகழத்தக்க ஜனங்களைப் போல தங்களைத் தாங்களே காட்டிக் கொள்ளுகிறார்கள்; சத்தியத்தைப் பின்பற்றுவதில் அவர்கள் நேர்மையான ஜனங்கள் அல்ல. இத்தகைய ஜனங்களே கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக அழைக்கப்படும் துன்மார்க்கர். சத்தியத்தைப் பின்பற்றாத ஜனங்களால் சத்தியத்தை நம்பவும் முடியாது, மேலும் அவர்களால் மனுக்குலத்தின் எதிர்காலத்தை உய்த்துணரவும் முடியாது, ஏனெனில் அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனின் எந்த ஒரு கிரியையையும் வார்த்தைகளையும் நம்புவதில்லை—மேலும் மனுக்குலம் எதிர்காலத்தில் சென்றடையும் இடத்தை நம்ப முடியாததும் இதில் அடங்கும். ஆகவே, அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் இன்னும் தீமை செய்வார்கள், மேலும் சத்தியத்தைப் பின்பற்றவே மாட்டார்கள், அல்லது நான் கோரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் மாட்டார்கள். மாறாக, தாங்கள் அழிக்கப்படுவோம் என்பதை நம்பாதவர்களே அழிக்கப்படப் போகும் ஜனங்கள். அவர்கள் எல்லோரும் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்கள் தாங்கள்தான் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்கள் என்று நம்புகிறவர்கள். அவர்கள் தங்களது துன்மார்க்கமான வழிதான் சத்தியம் என்று கருதி அதனால் அதில் மகிழ்கிறார்கள். இத்தகைய துன்மார்க்கர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் சத்தியத்தைக் கோட்பாடாகக் கருதி தங்கள் துன்மார்க்கமான காரியங்களை சத்தியம் எனக் கொள்ளுகின்றனர், ஆனால் முடிவில், அவர்கள் தாங்கள் விதைத்ததையே அறுக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை உடையவர்களாவும் அகந்தை கொண்டவர்களாகவும் இருக்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களால் சத்தியத்தை அடையமுடிவதில்லை; பரலோகத்தில் இருக்கும் தேவனை ஜனங்கள் அதிகமாக நம்பும்போதே அவர்கள் தேவனை அதிகமாக எதிர்க்கின்றனர். இந்த ஜனங்களே தண்டிக்கப்படப் போகிறவர்கள். மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், அவர்கள் சத்தியத்தை நம்பினார்களா, அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா, மற்றும் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குத் தங்களை அவர்களால் அர்ப்பணிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வகையான நபரும் தண்டனைக்குரியவரா அல்லது பிரதிபலனுக்குரியவரா என்பது தீர்மானிக்கப்படும். கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்கு ஊழியம் செய்தும் அவரை அறியாமலும் அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பவர்களிடம் சத்தியம் இல்லை. இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர், மற்றும் அக்கிரமக்காரர் சந்தேகமின்றி தண்டனைக்குரியவர்கள்; மேலும் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்துக்கு ஏற்பத் தண்டிக்கப்படுவார்கள். தேவன் மனிதர்களின் விசுவாசத்துக்குரியவர் மேலும் அவர் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உகந்தவர். தெளிவில்லாத மற்றும் அதரிசனமான தேவனில் விசுவாசம் உள்ளவர்களே தேவனை விசுவாசியாதவர்கள் மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாதவர்கள் ஆவர். கண்ணுக்குப்புலனாகும் தேவனின் ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது இந்த ஜனங்களால் இன்னும் அவரை நம்புவதற்கு முடியாமல் போனால், மேலும் மாம்சத்தில் புலனாகும் தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படியாமல் எதிர்த்தால், பின்னர் இந்த “தெளிவற்றவர்கள்”, சந்தேகமின்றி, அழிவின் பொருளாக மாறுவார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் சிலர் போல—மாம்சமாகிய தேவனை வாயால் அங்கீகரித்தும் மாம்சமாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், இறுதியில் புறம்பாக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மேலும், கண்ணுக்குப்புலனாகும் தேவனை வார்த்தையால் அங்கீகரிக்கும் யாரொருவரும், அவரால் கூறப்படும் சத்தியத்தைப் புசித்து மற்றும் பானம்பண்ணி, அதே நேரத்தில் தெளிவற்ற மற்றும் அதரிசனமான தேவனைப் பின்பற்றினால், நிச்சயமாக அழிவிற்கான பொருளாக இருப்பார்கள். தேவனின் கிரியை நிறைவடைந்த பின்னர் வரும் இளைப்பாறுதல் காலத்தில் இந்த ஜனங்களில் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்கள் அல்லது இத்தகைய ஜனங்களைப் போன்றவர்களில் ஒரு தனி நபர் கூட இளைப்பாறுதல் காலத்தில் மீந்திருக்க மாட்டார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களே பேய்த்தனமான ஜனங்கள்; அவர்களின் சாராம்சம் தேவனை எதிர்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் ஆகும், மேலும் அவர்களிடம் அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் சிறிதளவும் இருப்பதில்லை. இத்தகைய ஜனங்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். உன்னிடம் சத்தியம் இருக்கிறதா மற்றும் நீ தேவனை எதிர்க்கிறாயா என்பது உன் சாராம்சத்தைப் பொறுத்தது, உன் தோற்றத்திலோ அல்லது நீ எப்போதாவது பேசுவதிலோ அல்லது நீ நடந்துகொள்ளும் விதத்திலோ இல்லை. ஒரு தனி நபர் அழிக்கப்படுவானா இல்லையா என்பது ஒருவனின் சாராம்சத்தினால் தீர்மானிக்கப்படும்; ஒருவரின் நடத்தையும் ஒருவர் சத்தியத்தைப் பின்பற்றுவதும் வெளிப்படுத்தும் சாராம்சத்தை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. ஜனங்கள் மத்தியில், கிரியை செய்வதில் ஒருவரைப் போல் ஒருவர் இருப்பவர்களும், ஒரே அளவிலான கிரியையை செய்பவர்களும், மனித சாராம்சம் நல்லதாக இருப்பவர்களும், சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களுமான ஜனங்களே மீந்திருக்க அனுமதிக்கபப்டுவார்கள், அதே சமயம் யாருடைய மனித சாராம்சம் தீமையானதோ மற்றும் யார் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லையோ அவர்களே அழிவுக்குரிய பொருளாவார்கள். மனுக்குலம் சென்றடையும் இடத்தைப் பற்றிய அனைத்து தேவனின் கிரியை அல்லது வார்த்தைகள் ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தைப் பொறுத்து தகுந்த முறையில் ஜனங்களைக் கையாளும்; ஒரு சிறு தவறும் ஏற்படாது, மேலும் ஒரு சிறு பிழையும் நடைபெறாது. ஜனங்கள் செயலாற்றும் போதே மனித உணர்ச்சி அல்லது அர்த்தம் கலக்கிறது. தேவன் செய்யும் கிரியை மிகவும் பொருத்தமானது; அவர் எந்த சிருஷ்டிக்கும் எதிராகப் பொய்யான கூற்றைக் கொண்டுவர மாட்டார். மனுக்குலத்தின் வருங்கால சேருமிடத்தை கண்டுணராத மற்றும் நான் கூறும் வார்த்தைகளை நம்பாத அநேக ஜனங்கள் தற்போது உள்ளனர். நம்பாத அனைவரும் மட்டுமல்லாமல் சத்தியத்தைக் கடைப்பிடிக்காத எவரும் பிசாசுகளே!

தற்பொழுது, தேடுபவர்களும் தேடாதவர்களும் இரு முற்றிலும் வேறான வகையான மக்களாக உள்ளனர், அவர்கள் சென்றடையும் இடமும் வேறானவை. சத்தியத்தைப் பற்றிய அறிவை நாடுபவர்களுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குமே தேவன் இரட்சிப்பைக் கொண்டுவருவார். மெய்யான வழியை அறியாதவர்கள் பிசாசுகள் மற்றும் விரோதிகள்; அவர்கள் பிரதான தூதனின் சந்ததியார் மற்றும் அவர்களே அழிவின் பொருளாவார்கள். தெளிவற்ற தேவனின் பக்தியுள்ள விசுவாசிகள்—அவர்களும் கூட பிசாசுகள் இல்லையா? மெய்யான வழியை ஏற்காத நல்மனசாட்சி கொண்ட மக்களும் பிசாசுகள்; தேவனை எதிர்ப்பதே அவர்களுடைய சாராம்சம். மெய்யான வழியை ஏற்காதவர்களே தேவனை எதிர்ப்பவர்கள், இத்தகைய மக்கள் அநேகத் துன்பங்களை சகித்திருந்தாலும் அவர்களும் அழிக்கப்படுவார்கள். உலகத்தைக் கைவிட விருப்பம் அற்ற அனைவரும், தங்கள் பெற்றோரைப் பிரிய முடியாதவர்கள், மாம்சத்தின் பேரில் உள்ள தங்கள் இன்ப அனுபவத்தை விட்டுவிட முடியாதவர்கள் யாவரும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களே, மற்றும் அவர்கள் அழிவின் பொருட்களே. மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். விசுவாசம் இருந்தும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காதவர்கள், தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்காதவர்கள் ஆகியோரும் அழிவிற்குரிய பொருள் ஆவார்கள். துன்பப்படுதல் என்ற புடமிடுதலை அனுபவித்து உறுதியாக நின்ற மக்கள் அனைவரும் மீந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்; இவர்களே உண்மையில் சோதனைகளைச் சகித்துக்கொண்டவர்கள். தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்தப் பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்? தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அல்லவா அந்த மக்கள்? விசுவாசம் இருக்கிறது என்று கூறினாலும் சத்தியம் இல்லாமல் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்? தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியாமல் ஆசிர்வாதத்தை அடைவதற்கு நாடுபவர்கள் அல்லவா அவர்கள்? இன்று நீ இன்னும் அந்தப் பிசாசுகளுடன் இணைந்தும், அவற்றிடம் மனசாட்சியும் அன்புகொண்டும் இருக்கிறாய், ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தானிடம் நல்நோக்கில் நீ இருக்கவில்லையா? நீ பிசாசுகளுடன் சதித்திட்டம் தீட்டவில்லையா? இந்த நாட்களில் மக்களால் நன்மை தீமைக்கு இடையில் வித்தியாசத்தைக் காண முடியாவிட்டால், மற்றும் தேவனுடைய சித்தத்தைத் தேடும் எண்ணம் இல்லாமல் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து அன்புடனும் இரக்கத்துடனும் இருந்தால், அல்லது தேவனின் எண்ணங்களைத் தங்களின் சொந்த எண்ணங்களாக எந்த வகையிலாவது கொண்டிருக்க முடியாதவர்களாக இருந்தால், பின்னர் அவர்களது முடிவும் மிகவும் இழிவானதாகவே இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனை விசுவாசிக்காத எவனும் தேவனின் விரோதியே. உனக்கு மனசாட்சி இருந்தும் மற்றும் ஒரு விரோதியை நேசித்தால், உனக்கு நீதியின் உணர்வு இல்லை அல்லவா? நான் வெறுப்பவர்களிடமும் நான் ஒத்துக்கொள்ளாதவைகளிடமும் நீ இணக்கமாக இருந்தால், மற்றும் அவைகளிடம் இன்னும் அன்பு கொண்டு அல்லது அவைகளிடம் தனிப்பட்ட உணர்வு கொண்டிருப்பாயானால் நீ கீழ்ப்படியாமல் இருக்கிறாய் அல்லவா? நீ வேண்டும் என்றே தேவனை எதிர்க்கவில்லையா? இத்தகைய நபர் சத்தியத்தைக் கொண்டிருப்பானா? விரோதிகளிடம் மனசாட்சி உடையவர்களாகவும், பிசாசுகளிடம் அன்புகொண்டவர்களாகவும், சாத்தானிடம் இரக்கம் கொண்டவர்களாகவும் இருக்கும் மக்கள் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்யவில்லையா? கடைசி நாட்களில் இயேசுவை மட்டும் விசுவாசித்து மாம்சமாகிய தேவனை விசுவாசியாமல் இருக்கும் மக்களும், தேவனுடைய மனுவுருவாதலை வார்த்தைகளில் விசுவாசிப்பதாகக் கூறியும் தீமைகளைச் செய்பவரும், தேவனை விசுவாசியாமல் இருப்போர்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையே இல்லாமல், அனைவரும் அந்திக்கிறிஸ்துகளே. இந்த மக்கள் யாவரும் அழிவுக்கான பொருட்கள். மனிதர்கள் பிற மனிதர்களை மதிப்பிடும் அளவீடு அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது; யாருடைய நடத்தை நல்லதாக இருக்கிறதோ அவர்கள் நீதிமான்கள், அதே சமயம் யாருடைய நடத்தை அருவருப்பானதோ அவர்கள் துன்மார்க்கர். மனிதர்களின் சாராம்சம் அவருக்கு கீழ்ப்படிகிறதா இல்லையா என்பதை அளவீடாய்க் கொண்டு அதன் அடிப்படையில் தேவன் அவர்களை மதிப்பிடுகிறார்; தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவன் ஒரு நீதிமான், கீழ்ப்படியாத ஒருவன் ஒரு விரோதி மற்றும் ஒரு துன்மார்க்கன், இந்த நபரின் நடத்தை நல்லதா அல்லது மோசமானதா மற்றும் அவர்களது பேச்சு சரியானதா அல்லது தவறானதா என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சிலர் நல்ல செயல்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சென்றடையும் இடத்தை வருங்காலத்தில் அடைய விரும்புகிறார்கள், மற்றும் சிலரோ நல்ல சொற்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சேருமிடத்தை அடைய விரும்புகிறார்கள். தேவன் அவர்களது நடத்தையைப் பார்த்து அல்லது அவர்களின் பேச்சைக் கேட்டு மக்களின் பலாபலன்களை தீர்மானிப்பதாக ஒவ்வொருவரும் தவறாக நம்புகிறார்கள்; ஆகவே பலர் இதை அனுகூலமாகப் பயன்படுத்தி தேவனை ஏமாற்றி தற்காலிக நன்மைகளைப் பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில், ஓர் இளைப்பாறுதல் நிலையில் வாழும் மக்கள் எல்லோரும் உபத்திரவ காலத்தைச் சகித்துக் கொண்டவர்களாகவும் மற்றும் தேவனுக்கு சாட்சியாக நின்றவர்களுமாக இருப்பார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றியவர்களாகவும் உளமாற தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை தவிர்க்கும் எண்ணத்தோடு மட்டும் ஊழியம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவோர் மீந்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நபரின் பலனுக்கான ஏற்பாட்டிற்காக தேவன் பொருத்தமான அளவீடுகளை வைத்திருக்கிறார்; அவர் ஒருவரின் வார்த்தைகள் மற்றும் நடத்தையை வைத்து மட்டுமே இந்த முடிவுகளை எடுப்பதில்லை அல்லது ஓர் ஒற்றைக் கால கட்டத்தில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்தும் முடிவெடுப்பதில்லை. கடந்த காலத்தில் ஒருவர் அவருக்குச் செய்த சேவையின் காரணமாக ஒருவரின் பொல்லாத நடத்தைத் தொடர்பாக அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவதில்லை, அல்லது ஒருவர் தேவனுக்காக ஒரே முறை செய்த செலவுக்காக அவர் ஒருவரை மரணத்தில் இருந்து தப்பிக்க விடுவதில்லை. ஒருவரும் தனது பொல்லாங்குக்காகப் பழிவாங்கப்படுதலை தவிர்க்க முடியாது, மேலும் ஒருவரும் தமது தீய நடத்தையை மறைக்க முடியாது மேலும் அதன் மூலம் அழிவின் வேதனையைத் தவிர்க்க முடியாது. மக்கள் தங்கள் சொந்தக் கடமைகளை உண்மையில் நிறைவேற்ற முடியுமானால், அவர்கள் ஆசீர்வாதங்களையோ அல்லது இக்கட்டில் துன்பங்களையோ அடைந்தாலும் பிரதிபலன்களைத் தேடாமல் நித்தியமாக தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆசீர்வாதங்களைக் காணும்போது தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாகவும், ஆனால் ஆசீர்வாதங்களைக் காணாதபோது தங்கள் விசுவாசத்தை இழந்தும், முடிவில் தேவனுக்குச் சாட்சியாக நிற்க முடியாமல் அல்லது தங்கள் மேல் விழுந்த கடமைகளை அவர்களால் ஆற்ற முடியாமல் போனால், முன்னர் ஒருகாலத்தில் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்திருந்தாலும் கூட அவர்கள் அழிவிற்கான பொருளாகவே இருப்பார்கள். மொத்தத்தில், துன்மார்க்கர் தப்பி நித்தியத்துக்குள் செல்ல முடியாது, அல்லது இளைப்பாறுதலுக்குள்ளும் அவர்களால் பிரவேசிக்க முடியாது; நீதிமான்கள் மட்டுமே இளைப்பாறுதலின் நாயகர்கள். மனுக்குலம் சரியான பாதைக்குத் திரும்பிய பின், மக்களுக்கு இயல்பான மானிட வாழ்க்கை அமையும். அவர்கள் யாவரும் தங்களுக்குரிய கடமைகளை ஆற்றுவார்கள் மேலும் தேவனுக்கு முழு விசுவாசமானவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையையும் சீர்கெட்ட மனநிலைகளையும் முற்றிலுமாக விட்டுவிடுவார்கள், மேலும் அவர்கள் தேவனுக்காகவும் மற்றும் தேவன் நிமித்தமாக கீழ்ப்படியாமையும் எதிர்ப்புமாகிய இரண்டும் இல்லாமல் வாழ்வார்கள். அவர்கள் யாவராலும் முழுமையாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். இதுவே தேவன் மற்றும் மனுக்குலத்தின் வாழ்க்கையாக இருக்கும்; இதுவே ராஜ்யத்தின் வாழ்க்கையாகவும் இளைப்பாறுதலின் வாழ்க்கையாகவும் இருக்கும்.

முற்றிலும் அவநம்பிக்கை கொண்ட தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் சபைக்குள் இழுத்துக்கொண்டு வருபவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்கள், மேலும் அவர்கள் வெறுமனே இரக்கத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள். அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதை எண்ணாமலும் மற்றும் அது தேவனின் சித்தம்தானா என்பதை எண்ணாமலும் இந்த மக்கள் நேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலர் தங்கள் மனைவியை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள், அல்லது தங்கள் பெற்றோரை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள் மேலும் இதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் கிரியை செய்கிறாரோ இல்லையோ, அவர்கள் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து தேவனுக்காகத் “திறமையுள்ள மக்களைத் தத்தெடுக்கின்றனர்”. இந்த நம்பிக்கை அற்றவர்களுக்கு அன்பு காட்டுவதன் மூலம் என்ன நன்மையை அடைவது சாத்தியம்? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாத இவர்கள் தேவனைத் தடுமாற்றத்தோடு பின்பற்றினாலும், ஒருவர் நம்புவது போல அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிப்பைப் பெறக்கூடியவர்களை அவ்வளவு எளிதில் பெற முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் சோதனைக்குள் பிரவேசியாதவர்கள், மற்றும் மாம்சமாகிய தேவனால் முழுமையாக்கப்படாதவர்கள் முற்றிலுமாக முழுமையாக்க முடியாதவர்கள் ஆவர். ஆகவே, பெயரளவில் அவர்கள் தேவனைப் பின்பற்றும் கணத்தில் இருந்து, தேவ ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் நிலை மற்றும் யதார்த்தத் தன்மைகளின் காரணமாக, அவர்களை முழுமையாக்க முடியவே முடியாது. இவ்வாறிருக்க, அவர்கள் மேல் அதிகமான ஆற்றலைச் செலுத்த வேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்கிறார், அல்லது அவர் உள்ளொளி எதுவும் அளிப்பதில்லை அல்லது எந்த வழியிலும் வழிகாட்டுவதில்லை; அவர் அவர்களை வெறுமனே பின்பற்றுவதற்கு அனுமதிக்கிறார், மேலும் முடிவாக அவர்களது பலன்களை வெளிப்படுத்துவார்—இது போதுமானதாகும். மனுக்குலத்தின் உற்சாகம் மற்றும் உள்நோக்கங்கள் சாத்தானிடம் இருந்து வருகின்றன மேலும் இந்த விஷயங்களால் எந்த வகையிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நிறைவுசெய்ய முடியாது. மக்கள் எவ்வாறு இருந்தாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை தேவை. மனிதர்கள் மனிதர்களை முழுமையாக்க முடியுமா? ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காகச் செயலாற்ற எண்ணுகிறார்களா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காக செயல்படுகின்றனரா? சிருஷ்டியின் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் எண்ணமாக இருக்கிறதா? தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய கணம் முதல், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற முடியாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அடைய முடியாது; இவர்கள் நிச்சயமாக அழிவிற்கான பொருட்களாக இருக்கின்றனர். இவர்கள் மேல் ஒருவருக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பதிலீடு செய்ய முடியாது. மக்களின் உற்சாகம் மற்றும் அன்பு மானிட உள்நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் தேவனின் நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் அவை தேவனின் கிரியைக்கு மாற்றாக இருக்க முடியாது. தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன என்பதை உண்மையில் அறியாமல் பெயரளவில் தேவனை நம்பி அவரைப் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்யும் மக்கள் மேல் ஒருவர் முடிந்த அளவில் மிக அதிகமாக அன்பையும் இரக்கத்தையும் காட்டினாலும் அவர்கள் தேவனிடம் இருந்து பரிவைப் பெற முடியாது, மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் அடைய முடியாது. தேவனை முழுமனதோடு பின்பற்றும் குறைந்த திறனுடையவர்களும் அதிகமான சத்தியங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களும் கூட பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எப்போதாவது அடையலாம்; இருப்பினும், கணிசமாக நல்ல திறனிருந்தும் ஆனால் முழுமனதோடு விசுவாசிக்காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அடையவே முடியாது. இத்தகைய மக்களுக்கு இரட்சிப்பு அறவே சாத்தியமற்றது. அவர்கள் எப்போதாவது தேவனுடைய வார்த்தைகளை வாசித்தாலும், எப்போதாவது பிரசங்கங்களைக் கேட்டாலும், அல்லது தேவனுக்குத் துதி பாடினாலும், அவர்களால் இளைப்பாறுதலின் காலம் வரை முடிவாக நிலைத்திருக்க முடியாது. பிறர் எவ்வாறு அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள் அல்லது சுற்றிலும் உள்ள மக்கள் அவர்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைக் கொண்டு மக்கள் முழுமனதோடு தேடுகிறார்களா என்பது தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறதா மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்படுகிறதா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு சில காலங்களுக்குப் பின்னர் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்துள்ளது அது. ஒருவர் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெற்றால், அந்த நபரின் மனநிலை படிப்படியாக மாறும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய அவர்களின் கண்ணோட்டம் படிப்படியாக தூயதாக மாறும். எவ்வளவு காலம் மக்கள் தேவனைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தல்லாமல், அவர்கள் மாற்றத்தை அடைந்திருந்தால், அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறது என்று அர்த்தமாகிறது. அவர்கள் மாற்றம் அடையாவிட்டால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்கள் மேல் நடைபெறவில்லை என்பது பொருளாகும். இத்தகைய மக்கள் சில ஊழியங்களைச் செய்தாலும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான விருப்பமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. எப்போதாவது ஊழியம் செய்வது என்பது அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை அனுபவிப்பதைப் பதிலீடு செய்யாது. முடிவாக, அவர்கள் இன்னும் அழிக்கவே படுவார்கள், ஏனெனில் ராஜ்யத்தில் ஊழியம் செய்வோருக்குத் தேவை எதுவும் இல்லை, அல்லது பரிபூரணமாக்கப்பட்டு தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு மனநிலை மாற்றம் அடையாத எவரின் ஊழியமும் தேவையாக இருப்பதுமில்லை. “ஒருவன் கர்த்தரை நம்பும்போது, அவனது முழுக்குடும்பத்தின் மேலும் அதிர்ஷ்டம் புன்னகைபுரிகிறது” என்று கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், கிருபையின் காலத்துக்குப் பொருத்தமானவை, ஆனால் அவை மனுக்குலம் சென்றடையும் இடத்துக்குச் சம்பந்தமற்றவை. கிருபையின் காலத்தின் ஒரு கட்டத்துக்கே அவை பொருத்தமானவை. அந்த வார்த்தைகளின் கருத்து மக்கள் அனுபவித்த சமாதானம் மற்றும் பொருள்சார் ஆசீர்வாதங்களைப் பற்றியது; கர்த்தரை விசுவாசிக்கிறவனின் முழுக் குடும்பமும் இரட்சிக்கப்படும் என்பது அதன் பொருளல்ல, மேலும் ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெற்றால் அவனது முழுக் குடும்பமும் இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படும் என்பதும் பொருளல்ல. ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் அல்லது துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவதும் ஒருவனின் சாரம்சத்தைப் பொறுத்ததே தவிர ஒருவன் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எந்தப் பொது சாராம்சத்தையும் பொறுத்தது அல்ல. அந்த வகையான கூற்று அல்லது விதிக்கு ராஜ்யத்தில் இடமே இல்லை. ஒரு நபரால் மீந்திருக்க முடியுமானால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ததனால்தான், மேலும் இளைப்பாறுதல் காலம் வரை அவர்களால் மீந்திருக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படியாமல் இருந்ததும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யாமல் இருந்ததும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான போய்ச்சேருமிடம் உண்டு. ஒவ்வொரு தனிநபரின் சாரம்சத்தைப் பொறுத்து இந்தச் சேருமிடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இதற்கும் பிறருக்கும் முழுமையாகச் சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் பொல்லாத நடத்தையை, பெற்றொருக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு குழந்தையின் நீதியைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு பெற்றோரின் பொல்லாத நடத்தையை, குழந்தைக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு பெற்றோரின் நீதியைக் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பாவங்களைச் சுமக்கிறார்கள், மேலும் தங்கள் ஆசீர்வாதங்களை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். ஒருவரும் இன்னொருவருக்கான மாற்றாக இருக்க முடியாது; இதுவே நீதியாகும். மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, பெற்றோர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றால், பின் அவர்களது குழந்தைகளும் பெற முடியும், மேலும் குழந்தைகள் தீமை செய்தால், பின் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இது மனிதனின் ஒரு கண்ணோட்டம் மற்றும் மனிதன் காரியங்களைச் செய்யும் ஒரு வழி ஆகும்; இது தேவனின் கண்ணோட்டம் அல்ல. ஒவ்வொருவரின் நடத்தையில் இருந்து வரும் சாராம்சத்தைப் பொறுத்து அவர்களின் பலாபலன் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது எப்போதும் பொருத்தமாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரும் இன்னொருவரின் பாவத்தைச் சுமக்க முடியாது; இன்னும் கூறப்போனால், ஒருவருக்காக இன்னொருவர் தண்டனையை ஏற்க முடியாது. இது முழுமையானது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பால் செலுத்தும் மிகையான அன்பு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக நீதியின் காரியங்களை ஆற்றலாம் என்பதைக் குறிக்காது அல்லது ஒரு குழந்தை தன் பெற்றோருக்காகச் செய்யும் கடமை சார்ந்த அன்பு தங்கள் பெற்றொருக்காக நீதியின் காரியங்களைச் செய்ய முடியும் என்று அர்த்தமாகாது. “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுவாகும். பெற்றோர் தீமை செய்யும் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பின் அடிப்படையில் இளைப்பாறுதலுக்குள் கொண்டுசெல்ல முடியாது, அல்லது தங்கள் மனைவியை (அல்லது கணவனை) தங்கள் சொந்த நீதியான நடத்தை மூலம் இளைப்பாறுதலுக்குள் கொண்டு செல்ல முடியாது. இது ஒரு நிர்வாக விதி; யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. முடிவில், நீதியைச் செய்பவர்கள் நீதியைச் செய்பவர்கள், மற்றும் தீமை செய்கிறவர்கள் தீமை செய்பவர்களே. நீதிமான்கள் இறுதியில் பிழைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதேவேளையில் தீமைசெய்பவர்கள் அழிக்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அருவருப்பானவர்கள் அல்ல. அருவருப்பானவர்கள் அருவருப்பானவர்களே, அவர்களின் ஒரு பகுதி கூட பரிசுத்தமானது அல்ல. துன்மார்க்கரின் பிள்ளைகள் நீதியான செயல்களைச் செய்தாலும், மற்றும் நீதிமான்களின் பெற்றோர்கள் தீமைசெய்தாலும் அழிக்கப்படப் போகிறவர்கள் யாவரும் துன்மார்க்கரே, பிழைத்திருக்கப்போகிறவர்கள் யாவரும் நீதிமான்களே. விசுவாசிக்கும் கணவனுக்கும் மற்றும் அவிசுவாசியான மனைவிக்கும் இடையில் உறவில்லை, மற்றும் விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கும் அவிசுவாசிகளான பெற்றோருக்கும் இடையில் உறவில்லை; இந்த இரு வகையான மக்களும் முற்றிலும் இணக்கமற்றவர்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒருவருக்கு உடல்ரீதியான உறவினர்கள் இருப்பார்கள், ஆனால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், ஒருவருக்கு கூறுவதற்கு என உடல்ரீதியான உறவினர்கள் யாரும் இல்லை. தங்கள் கடமையைச் செய்கிறவர்கள் செய்யாதவர்களுக்கு விரோதிகள்; தேவனை நேசிக்கிறவர்களும் அவரை வெறுப்பவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கின்றனர். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்களும் அழிக்கப்பட போகிறவர்களும் இரு இணக்கமற்ற வகையான சிருஷ்டிகளாக இருக்கின்றனர். தங்கள் கடமையை ஆற்றுபவர்களால் பிழைத்திருக்க முடியும், அதேசமயம் தங்கள் கடமையை ஆற்றாதவர்கள் அழிவிற்கான பொருட்கள் ஆவர்; மேலும் என்னவென்றால், இது நித்தியத்தைக் கடந்து செல்லும். ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் கணவனை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் மனைவியை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் அவிசுவாசிகளான பெற்றோரை நேசிக்கிறாயா? தேவனை விசுவாசிப்பது என்ற மனிதப் பார்வை சரியா தவறா? நீ ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? நீ எதை அடைய விரும்புகிறாய்? நீ எவ்வாறு தேவனை நேசிக்கிறாய்? சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியாதவர்கள், மற்றும் முழுமுயற்சியை மேற்கொள்ள முடியாதவர்கள், அழிவிற்கான பொருள் ஆவார்கள். இன்றைய மக்களிடையே ஒரு உடல் ரீதியான உறவு உள்ளது, இரத்த உறவும் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில், இவை எல்லாம் கலைந்து போகும். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள். இளைப்பாறுதலில் இருப்பவர்கள் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பார்கள் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள், அதே சமயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். குடும்பங்கள் இனிமேல் பூமியில் இருப்பதில்லை; பெற்றோர் அல்லது குழந்தைகள் அல்லது மண உறவுகள் எவ்வாறு இருக்க முடியும்? விசுவாசம் மற்றும் அவிசுவாசத்திற்கு இடையில் இருக்கும் இணக்கமற்ற தன்மை இதுபோன்ற உடல் ரீதியான உறவுகளை முழுமையாகப் பிரித்துவிட்டிருக்கும்!

ஆதியில் மனுக்குலத்தில் குடும்பங்கள் இல்லை; இரு வெவ்வேறு வகையான மனிதர்களான ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணே இருந்தனர். நாடுகள் எதுவும் இல்லை, சொல்லப்போனால் குடும்பங்கள் இல்லை, ஆனால் மனுக்குலத்தின் சீர்கேட்டின் காரணமாக, எல்லா வகையான மக்களும் தங்களைத் தனித்தனிக் குலங்களாக அமைத்துக்கொண்டனர், பின்னர் இவைகள் நாடுகளாகவும் இனங்களாகவும் மாறின. இந்த நாடுகள் மற்றும் இனங்கள் சிறு தனித்தனி குடும்பங்களைக் கொண்டிருந்தன, மேலும் இந்த வகையில், மொழி மற்றும் எல்லைகளின் வித்தியாசங்களின் அடிப்படையில் அனைத்து வகையான மக்களும் பல்வேறு இனங்களாகப் பிரிந்தனர். உண்மையில், பூமியில் எத்தனை இனங்கள் இருந்த போதிலும், மனுக்குலத்தின் முன்னோர் ஒருவரே. ஆதியில், இரு வகையான மனிதர்கள் மட்டுமே இருந்தனர், ஆணும் பெண்ணுமே அந்த இரு வகையான மனிதர்கள். இருப்பினும், தேவனின் கிரியையின் முன்னேற்றம், வரலாற்றின் நகர்வு, நிலவியல் மாற்றங்களால், இந்த இரு வகையான மனிதர்களும் வேறுபடும் அளவுகளுக்கு மேலும் பல வகையான மனிதர்களாக வளர்ச்சியுற்றனர். அடிப்படையில், மனுக்குலத்தை எத்தனை இனங்கள் உருவாக்கினாலும், மனுக்குலம் முழுமையும் இன்னும் தேவனின் சிருஷ்டியே. எந்த இனத்தை மக்கள் சேர்ந்தவர்களானாலும், அனைவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் யாவரும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. அவர்கள் யாவரும் தேவனின் கரங்களால் சிருஷ்டிக்கப்படவில்லை எனினும், அவர்கள் யாவரும் தேவனால் தனியாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. மக்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், அவர்களது இலக்கு மனுக்குலம் கொண்டிருக்க வேண்டிய ஒன்றே, மற்றும் அவை மனிதர்களை வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தத்தில், அனைத்துத் துன்மார்க்கரும் அனைத்து நீதிமான்களும் சிருஷ்டிகளே. தீமை செய்யும் சிருஷ்டிகள் முடிவாக அழிக்கப்படுவார்கள், நீதியான செயல்களைச் செய்யும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த இரு வகையான சிருஷ்டிகளுக்கும் இதுவே மிகவும் பொருத்தமான ஏற்பாடு. கீழ்ப்படியாமையின் காரணமாக துன்மார்க்கர் தேவனுடைய சிருஷ்டிகளாக இருந்தபோதிலும் அவர்கள் சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மறுக்கின்றனர். தங்களை நீதியின்படி நடத்தும் சிருஷ்டிகள், அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், தாங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னரும் இரட்சிப்பைப் பெற்றவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. துன்மார்க்கர் தேவனுக்கு கீழ்ப்படியாத சிருஷ்டிகள்; இந்த சிருஷ்டிகளை இரட்சிக்க முடியாது மேலும் அவர்கள் ஏற்கெனவே முற்றிலுமாக சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர். தீமை செய்யும் மக்களும் மக்களே; அவர்கள் மிக அதிகமாக சீர்கெட்டுப்போன மனிதர்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பது போலவே, நீதியான நடத்தைகொண்ட மக்களும் சீர்கெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சீர்கெட்ட மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க விருப்பம் கொண்ட மனிதர்கள், மேலும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குத் திறன்கொண்டவர்களாக மாறினார்கள். நீதியான நடத்தை உள்ளவர்களுக்கு நீதி நிரம்பி வழிவதில்லை; மாறாக, அவர்கள் இரட்சிப்பைப் பெற்று தங்கள் சீர்கெட்ட மனநிலைகளை உடைத்து வெளிவந்தவர்கள்; அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் முடிவில் உறுதியோடு நிற்பார்கள், இருந்தாலும் இது அவர்கள் ஒருபோதும் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை என்று கூறுவதற்காக இல்லை. தேவனுடைய கிரியை முடிந்த பின்னர், அவருடைய எல்லா சிருஷ்டிகளுக்குள்ளும், அழிக்கப்படுபவர்களும் பிழைத்திருப்பவர்களும் இருப்பார்கள். இது அவருடைய ஆளுகைக் கிரியையின் தவிர்க்க முடியாத ஒரு போக்காகும்; இதை ஒருவரும் மறுக்க முடியாது. துன்மார்க்கர் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; தேவனுக்குக் கீழ்ப்படிந்து இறுதிவரை அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாகப் பிழைத்திருப்பார்கள். இந்தக் கிரியை மனுக்குலத்தின் ஆளுகையாக இருப்பதால், பிழைத்திருப்போரும் இருப்பார்கள் புறம்பாக்கப்படப் போகிறவர்களும் இருப்பார்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கான வெவ்வேறு பலன்கள் இவை, மேலும் தேவனின் சிருஷ்டிகளுக்கு இவையே மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் ஆகும். குடும்பங்களை உடைத்து, இனங்களை நசுக்கி, நாடுகளின் எல்லைகளை சீர்குலைத்து அவர்களைப் பிரிப்பதான மனிதகுலத்துக்கான தேவனின் இறுதி ஏற்பாட்டில் குடும்பங்களும் தேசிய எல்லைகளும் இருக்காது ஏனெனில் மனிதர்கள் ஒரே மூதாதையாரில் இருந்து வந்தவர்களும், தேவனின் சிருஷ்டிகளுமாய் இருக்கிறார்கள். மொத்தத்தில், தீமை செய்யும் சிருஷ்டிகள் யாவரும் அழிக்கப்படுவார்கள், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த வழியில், குடும்பங்கள் எதுவும் இருக்காது, நாடுகள் எதுவும் இருக்காது, மேலும் குறிப்பாக இனங்கள் எதுவும் வர இருக்கும் இளைப்பாறுதலின் காலத்தில் இருக்காது; இந்த வகையான மனுக்குலமே மிகப் பரிசுத்தமான மனுக்குலமாக இருக்கும். பூமியில் இருக்கும் சகலத்தையும் பராமரிக்க ஆதியில் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டனர்; ஆதியில் மனிதர்களே சகலத்துக்கும் எஜமானர்கள். மனிதனை யேகோவா சிருஷ்டித்ததற்கான நோக்கம் அவர்களைப் பூமியில் வாழ அனுமதித்து பூமியின் மேல் உள்ள யாவையும் ஆண்டுகொள்ளவே, ஏனெனில் மனுக்குலம் ஆதியில் சீர்கேடு அடையவில்லை மேலும் அதற்குத் தீமை செய்ய இயலாமல் இருந்தது. இருப்பினும், மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றின் மேலும் பராமரிப்பாளர்களாக இருக்கவில்லை. தேவனின் இரட்சிப்பின் நோக்கம் மனுக்குலத்தின் இந்தச் செயல்பாட்டை மீட்டமைப்பதும், மனுக்குலத்தின் ஆதி பகுத்தறிவையும் ஆதிக் கீழ்ப்படிதலையும் மீட்பதுமாகும்; இளைப்பாறுதலில் இருக்கும் மனுக்குலமே தேவன் தம் இரட்சிப்பின் கிரியையின் மூலமாக அடைவதாக நம்பும் விளைவின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அது ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்க்கையைப் போன்றதாக இல்லாவிட்டாலும் அதன் சாராம்சம் ஒன்றேயாகும்; முந்தையச் சீர்கேட்டை அடையாத மனுக்குலமாக இல்லாவிட்டாலும், மாறாகச் சீர்கேடு அடைந்து பின்னர் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மனுக்குலமாக இருக்கும். இரட்சிப்பைப் பெற்ற இந்த மக்கள் முடிவில் (அதாவது, தேவனுடைய கிரியை முடிவடைந்தபின்) இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். அதுபோல, தண்டிக்கப்படப் போகிறவர்களின் பலன் முடிவில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் தேவனுடைய கிரியை முடிவடைந்த பின் அழிக்கவே படுவார்கள், வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவரது கிரியை முடிந்தவுடன், அந்தத் துன்மார்க்கர்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவர், ஏனெனில் அனைத்து வகை மக்களையும் வெளிப்படுத்தும் கிரியை (துன்மார்க்கராக இருந்தாலும் அல்லது இரட்சிக்கப்பட்டோர்க்குள்ளிருந்தாலும்) ஒரேநேரத்தில் செய்யப்படும். துன்மார்க்கர் புறம்பாக்கப்படுவர், மற்றும் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட்டோர் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படுவர். ஆகவே, அனைத்துவகை மக்களின் பலாபலனும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படும். துன்மார்க்கரை ஒதுக்கிவைத்து மற்றும் அவர்களை ஒரு நேரத்தில் கொஞ்சமாக நியாயந்தீர்த்தல் அல்லது தண்டித்தலுக்கு முன்னர் இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு கூட்ட மக்களை இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்; அது உண்மையோடு ஒத்துப் போகாது. துன்மார்க்கர் அழிக்கப்படும்போது மற்றும் பிழைத்திருக்கக் கூடியவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய கிரியை நிறைவடையும். ஆசீர்வாதத்தைப் பெறுபவர்களுக்கும் துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவோருக்கும் நடுவில் முன்னுரிமை வரிசை எதுவும் இருக்காது; ஆசீர்வாதத்தைப் பெறுபவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைபவர்கள் நித்தியத்துக்கும் அழிந்து போவர்கள். கிரியையின் இந்த இரு படிகளும் ஒரே நேரத்தில் முடிக்கப்படும். சரியாகக் கூறப்போனால், கீழ்ப்படியாத மக்கள் இருக்கும் காரணத்தால்தான் கீழ்ப்படிபவர்களின் நீதி வெளிப்படுத்தப்படும், மேலும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் இருக்கும் காரணத்தால்தான் தங்கள் பொல்லாத நடத்தைக்காகத் துன்மார்க்கர் அடைந்த துரதிர்ஷ்டம் வெளிப்படுத்தப்படும். தேவன் துன்மார்க்கரை வெளிப்படுத்தாவிட்டால், பின்னர் தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிபவர்கள் ஒருபோதும் சூரியனைப் பார்க்க மாட்டார்கள்; தமக்குக் கீழ்ப்படிந்தவர்களை தேவன் பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசெல்லாவிட்டால், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் தங்களுக்குரிய பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவதற்கு முடியாமல் போவார்கள். இது தேவனுடைய கிரியையின் செயல்முறையாகும். அவர் தீயோரைத் தண்டித்து நல்லோர்க்கு பலாபலனை அளிக்கும் கிரியையைச் செய்யாவிட்டால், பின்னர் அவருடைய சிருஷ்டிகள் ஒருபோதும் தங்களது போய்ச்சேருமிடங்களுக்குள் முறையே பிரவேசிக்க முடியாமல் போகும். இளைப்பாறுதலுக்குள் மனுக்குலம் பிரவேசித்துவிட்டால், துன்மார்க்கர் அழிக்கப்படுவார்கள் மற்றும் முழு மனுக்குலமும் சரியான பாதையில் வந்துவிடும்; அனைத்து வகையான மக்களும் தாங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த வகையோடு இருப்பார்கள். இதுவே மனுக்குலத்தின் இளைப்பாறுதலின் நாள், மனுக்குலத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதப் போக்கு, மற்றும் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தால் மட்டுமே தேவனின் மாபெரும் மற்றும் இறுதிக் கிரியை நிறைவேற்றம் முழுமையை அடையும்; இதுவே அவரது கிரியையின் கடைசிப் பகுதி. இந்தக் கிரியை மனுக்குலத்தின் சீரழிந்த மாம்ச வாழ்க்கையோடு சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வரும். அதன் பின்னர் மனிதர்கள் ஒரு புதிய ஆட்சி எல்லைக்குள் பிரவேசிப்பார்கள். எல்லா மனிதர்களும் மாம்சத்தில் வாழ்வார்கள் என்பதாலும், இந்த வாழ்க்கையின் சாராம்சத்துக்கும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும். இந்த வாழ்வின் முக்கியத்துவமும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்வும் வேறுபடுகின்றன. இது ஒரு புதிய வகையான நபரின் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு மனுக்குலத்தின் வாழ்க்கை என்பதோடு மனிதத்தன்மையும் பகுத்தறிவும் மீட்டெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எனக் கூறலாம். ஒரு காலத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த மக்களான இவர்கள் தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டு அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள்; தேவனை அவமரியாதை செய்த இந்த மக்கள் பின்னர் தேவனுக்குச் சாட்சியாக நின்றார்கள். அவர்கள் அவரது சோதனைக்கு உட்பட்டு பிழைத்த பிறகு, அவர்களது வாழ்வு மிகவும் அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கும்; அவர்கள் சாத்தானுக்கு முன் தேவனுக்குச் சாட்சியாக நின்றவர்கள், மேலும் வாழத் தகுதியான மனிதர்கள். தேவனுக்குச் சாட்சியாக நிற்க முடியாதவர்களும் தொடர்ந்து வாழத் தகுதியற்றவர்களுமே அழிக்கப்படப் போகிறவர்கள். அவர்களுடைய பொல்லாத நடத்தையின் விளைவாகவே அவர்களது அழிவு இருக்கும், மற்றும் அத்தகைய அழிவுதான் அவர்களுக்கான சிறந்த சென்று சேருமிடம். வருங்காலத்தில், மனுக்குலம் அழகான ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் போது, மக்கள் தாங்கள் காணலாம் என்று கற்பனை செய்யும் கணவன் மனைவிக்கு இடையிலான உறவுகள், தந்தை மகளுக்கு இடையிலான உறவுகள் அல்லது தாய் மகனுக்கு இடையிலான உறவுகள் ஒன்றும் இருக்காது. அந்நேரத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வகையைப் பின்பற்றுவான், மற்றும் குடும்பங்கள் ஏற்கெனவே சிதறிப் போயிருக்கும். முற்றிலுமாகத் தோல்வியடைந்த, சாத்தான் ஒருபோதும் மனுக்குலத்தைத் தொந்தரவு செய்ய மாட்டான், மற்றும் அதன்பின் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தக் கீழ்ப்படியாத மக்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள், மற்றும் கீழ்ப்படியும் மக்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். இப்படியிருக்க, ஒரு சில குடும்பங்களே சீர்குலையாமல் இருக்கும்; எவ்வாறு உடல் ரீதியான உறவுகள் இருக்க முடியும்? மனுக்குலத்தின் முந்தைய மாம்ச ரீதியான உறவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்படும்; பின்னர் மக்களுக்கு இடையில் உடல் ரீதியான தொடர்புகள் எவ்வாறு இருக்க முடியும்? சாத்தானின் சீர்கெட்ட மனநிலைகள் இல்லாமல், மானிட வாழ்க்கை கடந்த காலத்தின் பழைய வாழ்க்கையாக இருக்காது, ஆனால் மாறாக ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளை இழப்பார்கள், மேலும் பிள்ளைகள் பெற்றோரை இழப்பார்கள். கணவர்கள் மனைவிகளை இழப்பார்கள், மற்றும் மனைவிகள் கணவர்களை இழப்பார்கள். தற்போது உடல் ரீதியான உறவுகள் மக்களுக்கு இடையில் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொருவரும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் அவை ஒருபோதும் இருக்காது. இத்தகைய மனுக்குலம் மட்டுமே நீதியையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்கும்; இத்தகைய மனுக்குலம் மட்டுமே தேவனை ஆராதிக்க முடியும்.

தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரகமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதிச் சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதிச் சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்கக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களைச் சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதிச் செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவரது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்குக் கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதிச் சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதில் இருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்.

முந்தைய: மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்

அடுத்த: இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக