Sermon Series: Seeking True Faith | மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்? (Tamil Subtitles)

டிசம்பர் 25, 2022

கடைசி நாட்களில் தேவன் மனுக்குலத்தின் நடுவே தமது நியாயத்தீர்ப்பைச் செய்வார் என்பதையும், சிருஷ்டிகர் மனுக்குலத்துக்கு தோற்றமளித்து தனிப்பட்ட முறையில் தமது உரைகளை வெளிப்படுத்துவார் என்பதையும் எல்லா விசுவாசிகளும் அறிவார்கள். ஆகையால், தேவன் எவ்வாறு இந்த நியாயத்தீர்ப்பைச் செய்கிறார்? வானத்தில் தோன்றி நம்முடன் பேசுகிறது அவருடைய ஆவியானவரா? கர்த்தராகிய இயேசுவே நம்மிடம் கூறினார்: "பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்" (யோவான் 5:22). (© BSI) "அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்" (யோவான் 5:27). (© BSI) ஆகவே கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்ய மனுஷகுமாரனாக தேவன் மாம்சத்தில் வருகிறார் என்பதுதான் இதற்கு அர்த்தம். நியாயத்தீர்ப்புக் கிரியைச் செய்ய தேவன் மாம்சமாவதுதான், இரட்சகர் மனுக்குலத்தைஇரட்சிக்க வருவதாகும். ஆகவே, ஒருவர் இரட்சகரை வரவேற்க முடியுமா என்பது அவர்கள் இரட்சிக்கப்பட்டு பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியுமா என்பதைப் பொறுத்தது. கர்த்தரின் விசுவாசிகள் பலரும் கேட்கலாம்: தேவனே ஏன் மாம்சத்தில் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்ய வேண்டும்? அவர் ஏன் கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தில் அதைச் செய்யக் கூடாது? இங்கேதான் இர்கசியம் இருக்கிறது. மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்ற இந்த அத்தியாயம் சத்தியத்தைத் தேடி பதிலைக் கண்டுபிடிக்க உங்களுக்கு வழிகாட்டும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க