Christian Song | தேவனின் இருதயத்தை எப்போதாவது புரிந்துகொண்டவர் யார்? (Tamil Subtitles)
மார்ச் 7, 2022
உலகப் புகழையும், மனுஷனிடையே உள்ள அரவணைப்பையும் அன்பையும்,
மனுஷனிடையே உள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் அனுபவிக்காமல்,
எதையும் வைத்துக்கொள்ளாமல்,
தம்முடைய அனைத்தையும் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
ஜனங்கள் அவரிடத்தில் அன்பில்லாமல் இருக்கிறார்கள்,
அவர் ஒருபோதும் பூமியில் உள்ள அனைத்து ஐசுவரியங்களையும் அனுபவித்ததில்லை,
அவர் தமது நேர்மையான, பாசமுள்ள இருதயம் முழுவதையும் மனுஷனுக்காக அர்ப்பணித்தார்,
அவர் தம்மை முழுவதுமாக மனிதகுலத்திற்காக அர்ப்பணித்தார்—
மேலும் அவருக்கு எப்போதாவது ஆறுதல் அளித்தவன் யார்?
மனுஷன் எல்லா பாரங்களையும் அவர் மீது குவித்துவிட்டான்,
அவன் எல்லா துரதிர்ஷ்டங்களையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டான்,
அவன் மிகவும் துரதிர்ஷ்டவசமான அனுபவங்களை அவர் மீது திணிக்கிறான்,
எல்லா அநியாயங்களுக்கும் அவர் மீது பழி சுமத்துகிறான்,
அவர் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அவர் யாருக்காவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரா? ஈடாக எதையும் கேட்டதுண்டா?
அவர் மீது அனுதாபம் காட்டியவன் யார்?
சாதாரண மனுஷர்களாக,
உங்களில் யாருக்கு கற்பனை நிறைந்த குழந்தைப் பருவம் இல்லை?
யாருக்கு வண்ணமயமான இளமைப் பருவம் இல்லாதிருந்தது?
அன்புக்குரியவர்களின் அரவணைப்பு யாருக்கு இல்லை?
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பு இல்லாதவன் யார்?
மற்றவர்களின் மரியாதை இல்லாமல் இருப்பவன் யார்?
தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரவான்களின் ஆறுதல் இல்லாதிருப்பவன் யார்?
மேலும் அவர் எப்போதாவது அரவணைப்பையும் ஆறுதலையும் அனுபவித்திருக்கிறாரா?
அவருக்கு எப்போதாவது கொஞ்சம் மனுஷீக ஒழுக்கத்தைக் காட்டியவன் யார்?
இதுவரை அவரைப் பொறுத்துக் கொண்டவன் யார்?
இதுவரை கடினமான காலங்களில் அவருடன் இருந்தவன் யார்?
மனுஷன் எந்தத் தயக்கமும் இல்லாமல்
அவரிடம் கோரிக்கைகளை மட்டுமே வைக்கிறான்.
மாம்சத்தில் வாழும் மனுஷன், ஆவியிலிருந்து வந்த மனுவுருவான தேவனை,
தேவனாக எப்படிக் கருத முடியும்?
மனுஷர்கள் மத்தியில் இருக்கிற யாரால் அவரை அறிய முடியும்?
மனுஷர்கள் மத்தியில் சத்தியம் எங்கே இருக்கிறது?
உண்மையான நீதி எங்கே இருக்கிறது?
தேவனுடைய மனநிலையை அறியக்கூடியவன் யார்?
பரலோகத்தில் இருக்கும் தேவனுடன் யார் போட்டியிட முடியும்?
அவர் மனுஷர்கள் மத்தியில் வந்தபோது,
தேவனை ஒருவனும் அறிந்திருக்கவில்லை,
மேலும் அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார் என்பதில் ஆச்சரியமில்லை.
தேவன் இருப்பதை மனுஷனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
உலகத்தின் இருளை விரட்ட அவன் எப்படி ஒளியை அனுமதிக்க முடியும்?
இதெல்லாம் மனுஷனின் மரியாதைக்குரிய பக்தியும் நேர்மையான பிரவேசமும் அல்லவா?
மேலும் தேவனுடைய கிரியை மனுஷனின் பிரவேசத்தை மையமாகக் கொண்டதல்லவா?
நீங்கள் தேவனுடைய கிரியையை மனுஷனின் பிரவேசத்துடன் இணைத்து,
மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி,
மனுஷன் திறமைக்கு ஏற்றவாறு சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இவ்விதமாக, தேவனுடைய கிரியை அதன் இறுதியில்,
அவருடைய மகிமையைப் பெறுதலுடன் முடிவடையும்!
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்