Christian Movie | என் வீடு எங்கே இருக்கு | Real Story of a Girl Turning Toward God (Family Film)

நவம்பர் 22, 2021

வென்யாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவளோட பெற்றோர் பிரிந்துவிட்டனர், அதன் பிறகு அவள் தன்னுடைய அப்பாவுடனும் சித்தியுடனும் வாழ்ந்தாள். அவளுடைய சித்தியால் அவளை ஏற்றுக்கொள்ள முடியாமல், எப்போதும் அவளுடைய அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். அவருக்கு வேற வழியில்லாம, அவர் வென்யாவை அவளுடைய அம்மாவின் வீட்டிற்கு அனுப்ப வேண்டியதாயிருந்தது, ஆனால் அவளுடைய அம்மாவோ அவளுடைய தொழிலை நடத்துவதில் முழு கவனம் செலுத்தினாள், வென்யாவை கவனிக்க நேரமில்லை, ஆகையால் அவள் வளர்க்கப்படுவதற்காக அடிக்கடி அவளுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். பல வருட வளர்ப்பு பராமரிப்பு வாழ்க்கைக்குப் பிறகு, இளம் வென்யா தனிமையாகவும் உதவியற்றவளாகவும் உணர்ந்தாள், ஒரு வீட்டின் அரவணைப்புக்காக ஏங்கினாள். அவளுடைய அப்பாவும் சித்தியும் விவாகரத்து செய்தபோதுதான் அவள் தனது அப்பாவின் பக்கம் திரும்பினாள், அப்போதிருந்து நல்லதோ கெட்டதோ அவளுக்கென்று ஒரு வீடு இருந்தது.

வென்யா வளர்ந்ததும், அவள் ரொம்ப எச்சரிக்கையானவளாகவும் கீழ்ப்படிதலுள்ளவளாகவும் இருந்தாள், மேலும் அவள் கடினமாகப் படித்தாள். ஆனால் அவள் தனது கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்த போது, அவளுக்கு துரதிர்ஷ்டம் வந்தது: அவளுடைய அம்மாவுக்கு மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு, முடமாகி படுத்த படுக்கையாகிப் போனார். அவளுடைய தாயின் கணவன் அவளுடைய அம்மாவைக் கைவிட்டார், மேலும் அவளுடைய சொத்துக்கள் அனைத்தையும் கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார், அதன்பிறகு அவளுடைய அப்பா கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்… வென்யாவால் வீட்டின் சுமையை தாங்க முடியவில்லை, ஆகையால் அவளால் செய்ய முடிந்ததெல்லாம் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மன்றாடுவது மட்டும்தான், ஆனால் அவள் புறந்தள்ளப்பட்டாள். …

உதவியை நாடாமல் வென்யா துன்பப்பட்ட போது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைக் குறித்து வென்யா, அவளது அம்மா மற்றும் சகோதரி ஆகியோரிடம் சாட்சி பகர்ந்தனர். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக ஜனங்களுடைய வாழ்க்கையில் வேதனைக்கான காரணத்தை அவர்கள் புரிந்துகொண்டனர், ஜனங்கள் தேவனுக்கு முன்பாக வந்தால் மட்டுமே அவர்களால் தேவனுடைய பாதுகாப்பைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பதையும் புரிந்துகொண்டனர். தேவனுடைய வார்த்தைகள் அளிக்கும் ஆறுதல் மூலமாக மட்டுமே அம்மாவும் மகள்களும் தங்களுடைய வேதனையிலிருந்தும் உதவியற்ற நிலையிலிருந்தும் வெளியே வர முடிந்தது. வென்யா உண்மையிலேயே தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்தாள்; இறுதியாக அவள் ஒரு வீட்டின் அரவணைப்பை உணர்ந்தாள், ஒரு மெய்யான வீட்டிற்கு வந்தாள். …

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க