Tamil Sermon Series | நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

செப்டம்பர் 30, 2022

கடைசி நாட்களில், இரட்சகரான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி கிரியைசெய்து, ஏராளமான சத்தியங்களை வெளிப்படுத்தி, நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்து வருகிறார். சத்தியத்தை நேசிக்கும் மற்றும் தேவனுடய தோற்றத்துக்காக ஏங்கும் எல்லா சபைப் பிரிவுகளையும் சேர்ந்த பல மக்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளைப் படித்து அது தேவனுடைய குரலே என்றும் சர்வவல்லமையுள்ள தேவனே மறுபடியும் வந்துள்ள கர்த்தராகிய இயேசு என்றும் அங்கீகரித்துள்ளனர். மகிழ்ச்சியால் நிரம்பி, அவர்கள் அவரிடம் திரும்பி வந்து தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக எடுத்துகொள்ளப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் பங்குபெற்று வருகிறார்கள். இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறது: "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27). (© BSI) "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20). (© BSI) இருந்தாலும், இன்னும் ஏராளமான ஜனங்கள் கர்த்தர் மேகத்தின் மேல் வருவதாகக் கூறும் வேதாகம வசனத்தைப் பிடித்துக்கொண்டு, கொஞ்சமும் தேவனுடைய குரலைத் தேடிக் கேட்காமல் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் கர்த்தரை வரவேற்கும் வாய்ப்பை இழந்துபோய் பேரழிவுகளில் விழுந்து, அழுது புலம்பி பற்களைக் கடித்துக்கொடு இருக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே நம்மால் கர்த்தரை வரவேற்க முடியுமா? மெய்யான விசுவாசத்தைத் தேடுதலின் இந்த அத்தியாயம் சத்தியத்தைத் தேடவும் பதிலைக் கண்டுபிடிக்கவும் உங்களை வழிநடத்தும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க