தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 24

பிப்ரவரி 16, 2023

யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காகத் தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழைய கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயப்பிரமாணத்தின் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். ஒவ்வொரு முறையும் தேவன், கிரியையின் புதிய கட்டத்தைத் தொடங்கும்போது, எப்போதும் ஒரு புதிய ஆரம்பம் இருக்க வேண்டும், மேலும் அது எப்போதும் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும். தேவனின் மனநிலையிலும், அவர் கிரியை செய்யும் முறையிலும், அவருடைய கிரியை செய்யப்படும் இடத்திலும் மற்றும் அவரது நாமத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படியானால், புதிய யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்வது மனுஷனுக்கு கடினம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தேவன் மனுஷனால் எவ்வாறு எதிர்க்கப்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது கிரியையைச் செய்கிறார், எப்போதும் மனுஷகுலம் முழுவதையும் முன்னோக்கிக் கொண்டுசெல்கிறார். இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க