தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 23
செப்டம்பர் 8, 2023
இயேசு தம்முடைய மனுவுருவாதலில் முற்றிலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதிருந்தபோதிலும், அவர் எப்போதும் தம்முடைய சீஷர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்குத் தேவையானதை வழங்கினார், உதவினார், மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தார். அவர் எவ்வளவு கிரியையைச் செய்தாலும், எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், அவர் ஒருபோதும் ஜனங்களிடம் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, மாறாக எப்போதும் பொறுமையுள்ளவராகவும், அவர்களின் பாவங்களை சகிப்பவராகவும் இருந்தார். எனவே கிருபையின் காலத்தின் ஜனங்கள் அவரை "பிரியமான இரட்சகராகிய இயேசு" என்று அன்பாக அழைத்தனர். அக்கால ஜனங்களுக்கு—அதாவது எல்லா ஜனங்களுக்கும்—இயேசு என்னவாக இருந்தார் மற்றும் என்ன கொண்டிருந்தார் என்றால், இரக்கமும் கிருபையுமாகும். அவர் ஒருபோதும் ஜனங்களின் மீறுதல்களை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களை அவர் நடத்திய விதம் அவர்களின் மீறுதல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது வேறுபட்ட காலம் என்பதால், அவர்கள் நிறைவாகப் புசிக்கத்தக்கதாக, அவ்வப்போது ஜனங்களுக்கு மிகுதியான ஆகாரத்தை அவர் வழங்கினார். தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையோடு நடத்தினார், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். ஜனங்கள் அவரை விசுவாசிப்பதற்கும், அவர் செய்த அனைத்தும் மிகுந்த அக்கறையுடனும், உண்மையுடனும் செய்யப்பட்டிருப்பதை ஜனங்கள் காணும் பொருட்டும், அவருடைய கரங்களில் மரித்தவர்கள் கூட உயிர்த்தெழ முடியும் என்பதையும் வெளிக்காட்ட, அழுகிய சடலத்தையும் உயிர்த்தெழும்பச் செய்தார். இவ்வாறு அவர் மௌனமாக சகித்துக்கொண்டு, அவர்களிடையே மீட்பின் கிரியையைச் செய்தார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, அவர் மனிதகுலத்தின் பாவங்களைத் தம்மீது எடுத்துக்கொண்டு மனிதகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மாறியிருந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் சிலுவைக்கான வழியைத் திறந்திருந்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையின் பொருட்டு தம்மையே தியாகம் செய்து, தம்முடைய இரக்கம், கிருபை மற்றும் பரிசுத்தம் என அனைத்தையும் மனிதகுலத்திற்கு வழங்கினார். அவர் மனிதகுலத்திடம் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ளவராகவும், ஒருபோதும் பழிவாங்காதவராகவும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பவராகவும், மனந்திரும்பும்படி அவர்களை அறிவுறுத்தியவராகவும், பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவராகவும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிலுவையின் பொருட்டு தங்களைத் தியாகம் செய்யக் கற்றுக் கொடுத்தவராகவும் இருந்தார். அவர் சகோதர சகோதரிகளிடம் கொண்டிருந்த அன்பு மரியாள் மீதான அன்பையும் மிஞ்சியது. அவருடைய மீட்பிற்காக, வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதும், பிசாசுகளைத் துரத்தியதும் அவர் செய்த கிரியையின் கொள்கைகளாக இருந்தன. அவர் எங்கு சென்றிருந்தாலும், தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையுடன் நடத்தினார். அவர், ஏழைகளை ஐஸ்வரியவான்களாகவும், முடவர்களை நடக்கவும், குருடர்களைப் பார்க்கவும், மேலும் செவிடர்களைக் கேட்கவும் செய்தார். தாழ்த்தப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும், பாவிகளையும்கூட தன்னுடன் ஒரே மேஜையில் அமர அவர் அழைத்தார். அவர்களை ஒருபோதும் விலக்கிக் கொள்ளாமல், எப்போதும் பொறுமையாக இருந்தார். ஒரு மேய்ப்பனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப்போனால், அவன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுப் போய்க் காணாமற்போனதைத் தேடுவான். அவன் அதைக் கண்டுபிடித்தால், அதைக்குறித்து அதிகமாய் சந்தோஷப்படுவான் என்றும் கூறினார். ஒரு தாய் ஆடு தனது ஆட்டுக்குட்டிகளை நேசிப்பதைப் போல அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை நேசித்தார். அவர்கள் மூடர்களாகவும், அறிவற்றவர்களாகவும், அவருடைய பார்வையில் பாவிகளாகவும் இருந்தபோதிலும், சமுதாயத்தில் கீழானவர்களாக இருந்தபோதிலும், இந்தப் பாவிகளை, அதாவது மற்றவர்களால் இகழப்பட்ட மனிதர்களை அவருடைய கண்மணிபோல கருதினார். அவர்களுக்கு அவர் தயவாக இருந்ததால், பலிபீடத்தின் மீது ஓர் ஆட்டுக்குட்டி பலியிடப்படுவது போல, அவர்களுக்காக அவர் தம் உயிரைக் கொடுத்தார். அவர்களுடைய ஊழியக்காரனைப் போல அவர் அவர்களுக்கிடையே சென்று, தம்மைப் பயன்படுத்தவும், தம்மைக் கொல்லவும் அனுமதித்தார். நிபந்தனையின்றி அவர்களுக்குத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் பிரியமான இரட்சகராகிய இயேசுவாக இருந்தார். ஆனால் ஓர் உயர்ந்த பீடத்திலிருந்து ஜனங்களுக்கு அறிவுரை வழங்கிய பரிசேயர்களுக்கு, அவர் இரக்கத்தையும் கிருபையையும் காட்டவில்லை, மாறாக வெறுப்பையும் மனக்கசப்பையும் காட்டினார். அவர் பரிசேயர்களிடையே தமது கிரியையை அதிகமாக நடப்பிக்கவில்லை, அவ்வப்போது அவர்களுக்குப் போதித்துக் கண்டித்தார். அவர்களின் மத்தியில் அவர் மீட்பின் கிரியையையும் செய்யவில்லை, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யவில்லை. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவருடைய இரக்கத்தையும், கிருபையையும் அளித்தார். இந்தப் பாவிகளுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, கடைசி வரை சகித்துக்கொண்டார். மேலும், எல்லா மனிதர்களையும் முழுமையாக மீட்டுக்கொள்ளும் வரை ஒவ்வொரு அவமானத்தையும் அனுபவித்தார். இது அவரது கிரியைகளின் மொத்த விவரமாகும்.
இயேசுவின் மீட்பு இல்லாவிட்டால், மனிதகுலம் என்றென்றும் பாவத்தில் வாழ்ந்து, பாவத்தின் சந்ததியாக, பிசாசுகளின் சந்ததியாக மாறியிருக்கும். இவ்வாறு தொடர்ந்தால், உலகம் முழுவதும் சாத்தான் வசிக்கும் இடமாக, அவனின் வசிப்பிடமாக மாறியிருக்கும். எவ்வாறாயினும், மீட்பின் கிரியைக்காக மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும் கிருபையையும் காட்ட வேண்டும். அத்தகைய வழிமுறைகளால் மட்டுமே மனிதகுலம் மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இறுதியாக, மனிதகுலம் தேவனால் முற்றிலுமாகவும் முழுமையாகவும் ஆதாயப்படுத்தப்படுவதற்கான உரிமையைப் பெற முடியும். இந்தக் கிரியையின் கட்டம் இல்லாதிருந்தால், ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் முன்னேறியிருந்திருக்க முடியாது. இயேசு சிலுவையில் அறையப்படாமல், நோயாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் மட்டுமே செய்திருந்தால், ஜனங்களால் தங்கள் பாவங்களிலிருந்து முழுமையான மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. இயேசு பூமியில் தமது கிரியையைச் செய்யச் செலவழித்த மூன்றரை ஆண்டுகளில், அவர் மீட்பின் கிரியையில் பாதியை மட்டுமே முடித்தார்; பின்னர், சிலுவையில் அறையப்பட்டு, பாவ மாம்சத்தின் தோற்றமாக மாறுவதன் மூலம், பிசாசிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அவர் சிலுவையில் அறையப்படுவதைச் செய்து முடித்து, மனிதகுலத்தின் தலைவிதியை மேற்கொண்டார். அவர் சாத்தானின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னரே, அவர் மனிதகுலத்தை மீட்டுக்கொண்டார். முப்பத்தி மூன்றரை ஆண்டுகளாக அவர் பூமியில் துன்பப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டார், அவதூறாகப் பேசப்பட்டார், கைவிடப்பட்டார், அவர் தலை சாய்க்க இடமில்லை, ஓய்வெடுக்க இடமில்லை, பின்னர் அவர் உயிரோடு சிலுவையில் அறையப்பட்டார். ஒரு பரிசுத்தமான பாவமறியா உடல் சிலுவையில் அறையப்பட்டது. அங்குள்ள ஒவ்வொரு விதமான துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைக் கேலி செய்து வாரினால் அடித்தார்கள், சேவகர்கள் அவருடைய முகத்தில் துப்பினர். ஆயினும் அவர் மவுனமாக இருந்தார், இறுதிவரை சகித்துக்கொண்டார், நிபந்தனையின்றி மரணம் வரைக்கும் தம்மை ஒப்புக்கொடுத்தார். அதன்பிறகு அவர் மனிதகுலம் முழுவதையும் மீட்டுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் இளைப்பாற அனுமதிக்கப்பட்டார். இயேசு செய்த கிரியை கிருபையின் காலத்தை மட்டுமே குறிக்கிறது. இது நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் குறிக்கவில்லை, கடைசி நாட்களின் கிரியைக்கு மாற்றாகவும் இல்லை. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கடந்து வந்த இரண்டாவது காலத்தில், அதாவது மீட்பின் காலத்தில் இயேசுவினுடைய கிரியையின் சாராம்சம் இதுவே.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்