தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 20

மார்ச் 28, 2023

நியாயப்பிரமாணத்தின் காலத்தில், மோசேயை எகிப்தில் இருந்து பின்தொடர்ந்துவந்த இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலமாக யேகோவா பல கட்டளைகளை அளித்தார். யேகோவாவால் இஸ்ரவேலர்களுக்கு இந்தக் கட்டளைகள் அளிக்கப்பட்டன, மற்றும் இதில் எகிப்தியர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை; இவை இஸ்ரவேலர்களைக் கட்டுப்படுத்துவதற்கானவை, மேலும் அவர் இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தி தமது நோக்கப்படி அவர்கள் நடப்பதற்கு வலியுறுத்தினார். அவர்கள் ஓய்வுநாளை ஆசரித்தாலும், அவர்கள் தங்கள் பெற்றோரை மதித்தாலும், அவர்கள் விக்கிரகங்களை வணங்கினாலும், இது போன்றவைகளில் எல்லாம், அவர்கள் பாவிகளா அல்லது நீதிமான்களா என்பதை நியாயம்தீர்க்கும் கொள்கைகள் இவைகளாகவே இருந்தன. அவர்கள் மத்தியில், யேகோவாவின் அக்கினியால் பட்சிக்கப்பட்ட சிலர் இருந்தனர், சிலர் கல்லெறியப்பட்டுக் கொலையுண்டனர், மேலும் சிலர் யேகோவாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர் மற்றும் இது அவர்கள் இந்தக் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார்களா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுநாளை ஆசரிக்காதவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஓய்வுநாளை ஆசரிக்காத ஆசாரியர்கள் யேகோவாவின் அக்கினியால் அழிக்கப்பட்டனர். தங்கள் பெற்றோர்களை மதிக்காதவர்கள் கூட கல்லெறிந்து கொல்லப்பட்டனர். இவை எல்லாம் யேகோவாவால் கட்டளையிடப்பட்டவை. யேகோவா தமது கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களை எதற்காக ஏற்படுத்தினார் என்றால், அவர் மக்களை அவர்களது வாழ்க்கையில் வழிநடத்திச் செல்லும் போது, அவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்யாமல் அவருக்குச் செவிகொடுத்து, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே. அவர் தமது எதிர்கால கிரியைகளுக்கு அடித்தளம் அமைக்கச் சிறந்தது எனப் புதிதாகப் பிறந்த மனித குலத்தை இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஆகவே யேகோவா செய்த கிரியைகளின் அடிப்படையில் இந்தக் காலம் நியாயப்பிரமாணத்தின் காலம் என்று அழைக்கப்பட்டது. யேகோவா பல வார்த்தைகளைக் கூறி, பெரும் கிரியைகளை நடத்தியபோதிலும், அவர் அறியாமையில் கிடந்த இந்த மக்களுக்கு மனிதர்களாக இருப்பது எவ்வாறு, எவ்வாறு வாழ்வது, எவ்வாறு யேகோவாவின் வழியில் நடப்பது என்றெல்லாம் போதித்து அவர்களை நேர்மறையாக வழிநடத்த மட்டுமே செய்தார். பெரும்பாலும், அவர் ஆற்றிய கிரியைகள் மக்களைத் தமது வழிகளைப் பின்பற்றி தம் நியமங்களைக் கடைபிடிக்க வைப்பதற்காகவே. உலக அசுத்தங்களுக்கு ஆழமாக ஆட்படாதவர்கள் மத்தியில் இந்தக் கிரியைகள் நடப்பிக்கப்பட்டன; அவர்களது மனநிலையை அல்லது வாழ்க்கை முன்னேற்றத்தை மாற்றியமைக்கும் அளவுக்கு அது விரிவானதாக இல்லை. நியாயப்பிரமாணங்களைப் பயன்படுத்தி மக்களைத் தடுத்து கட்டுப்படுத்துவதிலேயே அவர் அக்கறை கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு யேகோவா ஆலயத்தில் இருக்கும் ஒரு தேவன் மட்டுமே, வானத்தில் இருக்கும் ஒரு தேவன். அவர் ஒரு மேக ஸ்தம்பம், ஓர் அக்கினி ஸ்தம்பம். இன்று அவரது பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள்—என்று மக்கள் அறிந்துள்ளவற்றை, அவற்றை விதிகள் என்றுகூட ஒருவர் கூறலாம்—கீழ்ப்படிவது ஒன்றுதான் யேகோவா அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தது எல்லாம். ஏனெனில் யேகோவா அவர்களை உருமாற்ற எண்ணவில்லை, ஆனால் மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிக பொருட்களை அவர்களுக்கு அளித்ததும் தம்முடைய வாயாலேயே அவர்களுக்கு அறிவுறுத்தியதுமே அவர் செய்தவை. ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள் தங்களிடம் வைத்திருக்க வேண்டிய ஒன்றும் அவர்களிடம் இல்லை. ஆகவே, மக்கள் உலகில் தங்கள் வாழ்க்கைக்காக வைத்திருக்க வேண்டியவற்றை யேகோவா அவர்களுக்கு அளித்தார். இவ்வாறு தங்கள் முன்னோர்களான ஆதாமும் ஏவாளும் வைத்திருந்ததைவிட அதிகமாக மக்கள் வைத்திருக்குமாறு யேகோவா அளித்தார். ஏனெனில் யேகோவா ஆரம்பத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்ததைவிட அவர் இவர்களுக்கு அளித்தது மிதமிஞ்சியதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரவேலில் யேகோவா ஆற்றிய கிரியை மனிதகுலத்தை வழிநடத்துவதற்கும் மனிதகுலம் தனது சிருஷ்டிகரை அறிந்துகொள்ளுவதற்காகவும் மட்டுமே. அவர் அவர்களை அடக்கியாளவில்லை அல்லது அவர்களை உருமாற்றம் செய்யவில்லை, ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட மட்டுமே செய்தார். இதுவே நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவாவின் கிரியைகளின் தொகுப்பாகும். இதுவே பின்னணி, உண்மைக் கதை, இஸ்ரவேல் தேசம் முழுவதிலும் அவர் ஆற்றிய கிரியையின் சாராம்சம், மற்றும் அவரது ஆறாயிரம் ஆண்டு கிரியையின் ஆரம்பம்—மனிதகுலத்தை யேகோவாவின் கரங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க. இதில் இருந்து அவரது ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டத்தின் இன்னும் அதிகமான கிரியைகள் பிறந்தன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பிற காணொளி வகைகள்

பகிர்க

ரத்து செய்க