தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 15
ஏப்ரல் 11, 2023
முழு நிர்வாகக் கிரியைகளிலும், மனுஷனைச் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிப்பதே மிகவும் முக்கியமான கிரியையாகும். சீர்கெட்ட மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்வதே முக்கியமான கிரியையாகும். இதனால் ஜெயங்கொள்ளப்பட்ட மனுஷனுடைய இருதயத்தில் தேவனுடைய உண்மையான பயபக்தியானது மீட்டெடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சாதாரண வாழ்க்கையை அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் சாதாரண வாழ்க்கையை அடைய அவனுக்கு உதவுகிறது. இந்தக் கிரியை முக்கியமானதாகும், இது நிர்வாகக் கிரியையின் மையப் பகுதியாகும். இரட்சிப்பின் மூன்று கட்டங்களில், நியாயப்பிரமாண காலத்தின் முதல் கட்டமானது நிர்வாகக் கிரியைகளின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இது இரட்சிப்பின் கிரியையின் சிறிய தோற்றத்தை மாத்திரமே கொண்டிருந்தது. மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் ஆரம்பமாக இருக்கவில்லை. முதல் கட்டக் கிரியை ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், மனுஷன் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை மாத்திரமே அறிந்திருந்தான், மனுஷனிடம் அதிக சத்தியமில்லை, நியாயப்பிரமாண காலத்தின் கிரியைகள் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களோடு தொடர்புடையவையாகவும் இல்லை, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை எவ்வாறு இரட்சிப்பது என்ற கிரியையைப் பற்றி அக்கறை கொண்டதாகவும் இல்லை. இவ்வாறு தேவனுடைய ஆவியானவர் மனுஷனுடைய சீர்கேடான மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத மிகவும் எளிதான இந்தக் கட்டக் கிரியையை செய்து முடித்தார். இந்தக் கட்டக் கிரியையானது நிர்வாகத்தின் மையத்துடன் சற்றுத் தொடர்புடையதாக இருந்தது. மேலும் இது மனுஷனுடைய இரட்சிப்பின் அதிகாரப்பூர்வக் கிரியையுடன் பெரிய தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தேவன் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆவியானவரால் செய்யப்படும் கிரியையானது மறைமுகமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. மேலும் இது மனுஷனை மிகவும் பயமுறுத்துவதாகவும், அவனால் அணுக முடியாததாகவும் இருக்கிறது. இரட்சிப்பின் கிரியையை நேரடியாகச் செய்வதற்கு ஆவியானவர் பொருத்தமானவர் அல்ல, மனுஷனுக்கு நேரடியாக ஜீவனை அளிப்பதற்கும் பொருத்தமானவர் அல்ல. மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது என்னவென்றால் ஆவியின் கிரியையை மனுஷனுக்கு நெருக்கமான ஒரு அணுகுமுறையாக மாற்றுவதேயாகும். அதாவது, மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்றால் தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு ஒரு சாதாரண, இயல்பான மனுஷனாக மாறுவதேயாகும். தேவன் தமது கிரியையில் ஆவியானவரின் இடத்தைப் பிடிக்க மனுஷனாக அவதரிக்க வேண்டியதிருக்கிறது. மேலும் மனுஷனைப் பொறுத்தவரை, தேவன் கிரியை செய்வதற்கு இதைவிடப் பொருத்தமான வழி இல்லை. இந்த மூன்று கட்டக் கிரியைகளில், இரண்டு கட்டங்கள் மாம்சம் மூலமாகச் செய்யப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு கட்டங்களும் நிர்வாகக் கிரியையின் முக்கியக் கட்டங்களாக இருக்கின்றன. இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒன்றுக்கொன்று இணக்கமுள்ளவையாகும். இவை ஒன்றுக்கொன்று பரிபூரணமாக இணங்கி இருக்கின்றன. தேவன் மனுஷனாக அவதரித்ததின் முதல் கட்டம் இரண்டாம் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. மேலும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒரு முழுமையை உருவாக்குகின்றன எனவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இல்லை என்றும் கூறலாம். தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் அவருடைய மாம்சமான அடையாளத்தில் தேவனால் செய்யப்படுகின்றன, ஏனென்றால் அவை முழு நிர்வாகக் கிரியைக்கும் மிகவும் முக்கியமானவையாகும். தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளின் கிரியை இல்லாமல், முழு நிர்வாகக் கிரியைகளும் நிறுத்தப்படும், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்கும் என்று ஏறக்குறைய சொல்லலாம். இந்தக் கிரியை முக்கியமானதா இல்லையா என்பது மனுக்குலத்தின் தேவைகள், மனுக்குலத்தின் சீர்கேட்டின் யதார்த்தம் மற்றும் சாத்தானின் கீழ்ப்படியாமையின் கடுமைத்தன்மை மற்றும் கிரியையின் இடையூறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். கிரியையைச் செய்யக்கூடிய சரியானவர், கிரியை செய்பவர் செய்யும் கிரியையின் தன்மை மற்றும் கிரியையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறார். இந்த கிரியையின் முக்கியத்துவம் என்று வரும்போது, தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியை அல்லது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியை அல்லது மனுஷனால் செய்யப்படும் கிரியை ஆகியவற்றில் எந்தக் கிரியை முறையைப் பின்பற்றுவது என்பதன் அடிப்படையில், முதலில் அகற்றப்படுவது மனுஷனால் செய்யப்படும் கிரியையாகும். மேலும் கிரியையின் தன்மை மற்றும் மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராக ஆவியானவரின் கிரியையின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மாம்சத்தால் செய்யப்படும் கிரியை மனுஷனுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும், அதிக நன்மைகளை வழங்கும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கிரியையை ஆவியானவர் செய்ய வேண்டுமா அல்லது மாம்சம் செய்ய வேண்டுமா என்று தேவன் தீர்மானித்த நேரத்தில் இதுவே தேவனுடைய சிந்தையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டக் கிரியைக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு அடிப்படையும் உள்ளது. இவை ஆதாரமற்ற கற்பனைகளுமல்ல, இவை தன்னிச்சையாகச் செய்யப்படுபவையும் அல்ல. அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ஞானம் உள்ளது. இதுவே தேவனுடைய எல்லாக் கிரியைகளுக்கும் பின்னால் உள்ள சத்தியமாகும். குறிப்பாக, மாம்சமான தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷர் நடுவே கிரியை செய்வதனால், இதுபோன்ற ஒரு மகத்தான கிரியையில் தேவனுடைய திட்டம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆகையால், தேவனுடைய ஞானமும், அவருடைய தன்மையின் முழுமையும் அவருடைய கிரியையில் உள்ள ஒவ்வொரு செயலிலும், சிந்தனையிலும், யோசனையிலும் பிரதிபலிக்கின்றன. இது தேவனுடைய மிகவும் உறுதியான மற்றும் முறையான இருப்பாகும். இந்த நுட்பமான சிந்தனைகளும் கருத்துக்களும் மனுஷனுக்குக் கற்பனை செய்து பார்ப்பதற்கும், நம்புவதற்கும் கடினமானதாகும், மேலும், அறிந்துகொள்வதற்கும் மனுஷனுக்கு கடினமானதாகும். மனுஷனால் செய்யப்படும் கிரியையானது பொதுவான கொள்கையின்படி செய்யப்படுகிறது, இது மனுஷனுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தேவனுடைய செயல்கள் பெரியவையாகவும், தேவனுடைய கிரியை ஒரு பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், அவற்றின் பின்னால் மனுஷனால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல நுணுக்கமான மற்றும் துல்லியமான திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளன. அவருடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் கொள்கையின்படி செய்யப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷ பாஷையால் பேச முடியாத பல காரியங்களும் உள்ளன. இவை மனுஷனால் பார்க்க முடியாத காரியங்களாகும். இது ஆவியானவரின் கிரியையாகவோ அல்லது மாம்சமான தேவனுடைய கிரியையாகவோ இருந்தாலும், ஒவ்வொன்றும் அவருடைய கிரியையின் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவர் ஆதாரமின்றி கிரியை செய்வதில்லை, அவர் அற்பமான கிரியையைச் செய்வதில்லை. ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அவருடைய இலக்குகளும் உடன் இருக்கின்றன. அவர் கிரியை செய்வதற்காக மனுஷனாக மாறும்போது (அதாவது, அவர் தமது வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும்போது), அதில் அவருடைய நோக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் வேறு எதற்காகத் தமது அடையாளத்தை உடனடியாக மாற்றுவார்? அவர் வேறு எதற்காகத் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் நபராக உடனடியாக மாறி, பாடுகளை அனுபவிக்க வேண்டும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்