தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 14

மே 5, 2023

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மனுஷனின் சாட்சியமும் தேவைப்படுகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுக்கும் சாத்தானுக்கும் மத்தியிலான ஒரு யுத்தமாக இருக்கின்றது, சாத்தான் இந்த யுத்தத்தின் இலக்காக இருக்கிறான், அதேவேளையில் மனுஷன் இந்தக் கிரியையினால் பரிபூரணப்படுத்தப்படும் ஒருவனாக இருக்கிறான். தேவனின் கிரியை பலன் கொடுக்குமா அல்லது கொடுக்காதா என்பது தேவனுக்கு மனுஷன் அளிக்கும் சாட்சியத்தைச் சார்ந்துள்ளது. தேவன் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இந்தச் சாட்சியைக் கேட்கிறார்; இது சாத்தானுக்கு முன்பாகச் செய்யப்பட்ட சாட்சியமாகும், மற்றும் இது அவருடைய கிரியையின் விளைவுகளுக்கும் சான்றாகும். தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. இவ்விதமாக, மனுஷன் "மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை" என்ற உண்மையைப் பற்றிக்கொள்கிற வரையில், தேவனுடைய நிர்வாகக் கிரியை, படிப்படியாகத் தனது உச்சத்தை அடைகின்றது, இந்த வழியில் மனுஷன் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் போன்றே, அவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகின்றன. மனுஷன் தேவனுடன் உண்மையிலேயே எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கக் கூடுமோ, அவ்வளவு அதிகமாக தேவன் மகிமை அடைகிறார். மனிதனின் ஒத்துழைப்பு என்பது அவன் கொடுக்க வேண்டிய சாட்சியாக உள்ளது, மற்றும் அவன் கொடுக்கிற சாட்சியம் மனிதனின் நடைமுறையாக உள்ளது. ஆகையால், தேவனுடைய கிரியை சரியான விளைவை ஏற்படுத்துமா இல்லையா, மற்றும் உண்மையான சாட்சியம் இருக்க முடியுமா இல்லையா என்பது பிரிக்க இயலாத வகையில் மனுஷனின் ஒத்துழைப்பு மற்றும் மனுஷனின் சாட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரியை முடிக்கப்படுகின்றபோது, அதாவது, தேவனுடைய நிர்வகித்தல் அனைத்தும் அதன் முடிவை எட்டுகின்றபோது, மனுஷன் உயர்ந்த சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவான், மேலும் தேவனுடைய கிரியை முடிவடையும்போது, மனுஷனின் நடைமுறையும் பிரவேசமும் அவற்றின் உச்சத்தை அடையும். கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்த மூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வருகிறபோது, தேவனுடைய கிரியை அதன் முடிவை எட்டியிருக்கும், மேலும் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களை அடைவதற்குத் தேவனுடனான மனுஷனுடைய ஒத்துழைப்பு இனி இருக்காது, மற்றும் மனிதகுலம் முழுவதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள், மற்றும் அப்போதில் இருந்து, தேவனுக்கு எதிரான கலகமோ எதிர்ப்போ இருக்காது. மனுஷனிடம் தேவன் எந்தக்கோரிக்கைகளையும் வைக்க மாட்டார், மற்றும் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் இன்னும் அதிகமாக இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும், இது மனுஷனும் தேவனும் ஒன்றாக இருக்கும் ஒரு வாழ்வாகும், தேவனுடைய நிர்வகித்தல் முடிந்த பின்பு மற்றும் மனுஷன் சாத்தானின் பிடியிலிருந்து தேவனால் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு வரும் வாழ்வாகும். தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்ற முடியாதவர்கள் இத்தகைய வாழ்க்கையை அடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இருளில் தாழ்த்திக் கொண்டிருப்பார்கள், அங்கே அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருப்பார்கள்; அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவரைப் பின்பற்றாதவர்கள், அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவருடைய எல்லாக் கிரியைக்கும் கீழ்ப்படியாதவர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க