தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 8

மார்ச் 16, 2023

தேவனுடைய கிரியைதான் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனமாகும், ஏனென்றால் தேவனுடைய கிரியையை மனுஷனால் அடைய முடியாது, மனுஷன் இதைக் கொண்டிருக்கவும் இல்லை. மூன்று கட்ட கிரியைகள் தேவனுடைய முழு நிர்வாகமாகும், மேலும் மனுஷனால் அறிந்துகொள்ளப்பட வேண்டிய மாபெரும் தரிசனம் எதுவுமில்லை. இந்த வல்லமையான தரிசனத்தை மனுஷன் அறிந்திருக்கவில்லை என்றால், தேவனை அறிந்துகொள்வது எளிதானதல்ல. தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல. மேலும், மனுஷன் நடக்கும் பாதை பெருமளவில் கடினமானதாகிவிடும். தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இந்த தரிசனங்கள்தான் மனுஷனை இந்நாள் வரையிலும் பாதுகாத்து, மனுஷனுக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அளித்துள்ளன. எதிர்காலத்தில், உங்கள் அறிவு ஆழமாக வேண்டும், மேலும் அவருடைய முழு சித்தத்தையும், அவருடைய ஞானமான கிரியையின் சாராம்சத்தையும் நீங்கள் மூன்று கட்ட கிரியைகளுக்குள் அறிந்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் உண்மையான வளர்ச்சியாகும். கிரியையின் இறுதிக் கட்டம் தனியாக நிற்காது, ஆனால் இது முந்தைய இரண்டு கட்டங்களுடன் சேர்ந்து உருவான முழுமையின் ஒரு பகுதியாக இருக்கிறது, அதாவது மூன்று கட்ட கிரியைகளில் ஒன்றை மட்டுமே செய்வதன் மூலம் இரட்சிப்பின் முழு கிரியையையும் முடிக்க முடியாது என்று சொல்லலாம். இறுதிக் கட்ட கிரியையினால் மனுஷனை முழுமையாக இரட்சிக்க முடிந்தாலும், இந்த ஒற்றைக் கட்டத்தை மட்டுமே செய்ய வேண்டியது அவசியம் என்றோ, முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் மனுஷனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிக்க தேவையில்லை என்றோ அர்த்தமல்ல. மூன்று கட்டங்களின் எந்த ஒரு கட்டமும் முழு மனுக்குலத்தாலும் அறியப்பட வேண்டிய ஒரே தரிசனம் என்று கருத முடியாது, ஏனென்றால் இரட்சிப்பின் முழு கிரியையும் மூன்று கட்ட கிரியைகளையும் குறிக்கிறது, அவற்றில் ஒரு கட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. இரட்சிப்பின் கிரியை நிறைவேற்றப்படாத வரை, தேவனுடைய நிர்வாகத்தால் ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாது. தேவனுடைய இயல்பு, அவருடைய மனநிலை மற்றும் அவருடைய ஞானம் ஆகியவை இரட்சிப்பின் கிரியை முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்றன. இவை மனுஷனுக்கு ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் படிப்படியாக இரட்சிப்பின் கிரியையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரட்சிப்பின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், அவருடைய இயல்பின் ஒரு பகுதியையும் வெளிப்படுத்துகிறது. எந்தக் கட்ட கிரியையும் தேவனுடைய இயல்பை நேரடியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு, மூன்று கட்ட கிரியைகள் முடிந்த பிறகு மட்டுமே இரட்சிப்பின் கிரியை முழுமையாக முடிக்க முடியும், ஆகையால் தேவனுடைய முழுமையைப் பற்றிய மனுஷனுடைய அறிவை தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு கட்ட கிரியையிலிருந்து மனுஷன் பெறுவது அவருடைய கிரியையின் ஒரு பகுதியில் வெளிப்படுத்தப்படும் தேவனுடைய மனநிலையாகும். இக்கட்டங்களுக்கு முன்னும் பின்னும் வெளிப்படுத்தப்படும் மனநிலையையும் இயல்பையும் இது குறிக்க முடியாது. ஏனென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையை ஒரு காலகட்டத்தில் அல்லது ஒரு இடத்தில் உடனடியாக முடிக்க முடியாது, ஆனால் வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனுஷனுடைய வளர்ச்சி நிலைக்கு ஏற்ப படிப்படியாக ஆழமாகிறது. இதுதான் இக்கட்டங்களில் செய்யப்படும் கிரியையாகும், இது ஒரு கட்டத்தில் மட்டும் முடிக்கப்படுவதில்லை. ஆகையால், தேவனுடைய முழு ஞானமும் ஒரு தனி கட்டத்தில் மட்டுமல்லாமல் மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய முழு இயல்பும் மற்றும் முழு ஞானமும் இந்த மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய இயல்பு உள்ளது மற்றும் ஒவ்வொரு கட்டமும் அவருடைய கிரியையின் ஞானத்தின் ஒரு பதிவாக இருக்கிறது. இந்த மூன்று கட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய முழு மனநிலையையும் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். மேலும், தேவனை வணங்கும் போது ஜனங்களுக்கு இந்த அறிவு இல்லையென்றால், அவர்கள் புத்தரை வணங்குபவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தையக் கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க