தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 3
மே 13, 2023
சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு தேவன் எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்; அவர் சாத்தானைத் தோற்கடிக்க மட்டுமே விரும்புகிறார். அவருடைய எல்லா கிரியைகளும்—அது சிட்சையாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பாக இருந்தாலும்—அது சாத்தானை நோக்கியது; அது மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டு மேற்கொள்ளப்படுகிறது, அது சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, அது ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது: சாத்தானுக்கு எதிராக இறுதிவரை யுத்தம் செய்வது! சாத்தானை வென்றெடுக்கும் வரை தேவன் ஒருபோதும் ஓய மாட்டார்! அவர் சாத்தானைத் தோற்கடித்தவுடன் மட்டுமே ஓய்வார். ஏனென்றால், தேவன் செய்த எல்லாக் கிரியைகளும் சாத்தானை நோக்கியவையாகும், மேலும் சாத்தானால் சீர்கெட்டவர்கள் அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதாலும், சாத்தானுக்கு எதிராகப் போராடாமல், அவனுடன் முறித்துக் கொள்ளாமல், சாத்தான் இந்த மக்கள் மீது உள்ள அவனது பிடியைத் தளர்த்த மாட்டான், மேலும் அவர்களை ஆதாயப்படுத்த முடியாது. அவர்களை ஆதாயப்படுத்தாவிட்டால், சாத்தான் தோற்கடிக்கப்படவில்லை, அவன் முறியடிக்கப்படவில்லை என்பதை அது நிரூபிக்கும். எனவே, தேவனின் 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தில், முதல் கட்டத்தில் அவர் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தார், இரண்டாவது கட்டத்தில் அவர் கிருபையின் காலக் கிரியையைச் செய்தார், அதாவது சிலுவையில் அறையப்படும் கிரியை மற்றும் மூன்றாம் கட்டத்தில் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையை அவர் செய்கிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் சாத்தான் மனிதகுலத்தை எந்த அளவுக்கு சீர்கேடாக்கியிருக்கிறானோ அந்த அளவுக்கு அவனை நோக்கியிருக்கும், இது எல்லாமே சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே, மற்றும் ஒவ்வொரு கட்டமும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனதாகும். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் சாராம்சமானது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான யுத்தமாகும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் கிரியையும் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையாகும், அது சாத்தானுடன் யுத்தம் செய்யும் கிரியை. தேவன் 6,000 ஆண்டுகளாக யுத்தம் செய்தார், இப்படியாக இறுதியில் மனிதனை புதிய உலகத்திற்குக் கொண்டு வர அவர் 6,000 ஆண்டுகளாகக் கிரியை செய்துள்ளார். சாத்தான் தோற்கடிக்கப்படும்போது, மனிதன் முற்றிலும் விடுவிக்கப்படுவான். இது இன்று தேவனின் கிரியையின் வழிகாட்டுதல் அல்லவா? துல்லியமாக இதுதான் இன்றைய கிரியையின் வழிகாட்டுதலாகும்: மனிதனின் முழுமையான விடுதலை மேலும் மனிதனை விடுவிப்பது, இதனால் அவன் எந்த விதிகளுக்கும் உட்படாமல் இருக்க அல்லது எந்த கட்டுகளாலும் அல்லது கட்டுப்பாடுகளாலும் மட்டுப்படுத்தப்படாமல் இருக்க முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்பவும் செய்யப்படுகின்றன, அதாவது நீங்கள் நிறைவேற்றக் கூடியது எதுவோ அது உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் மீது எதையும் திணிப்பதற்கான "வாத்தைக் கூண்டுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவது" அல்ல; மாறாக, இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கட்ட கிரியையும் மனிதனின் உண்மையான தேவைகளுக்கும் வேண்டப்படுவனவற்றுக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது; ஒவ்வொரு கட்ட கிரியையும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது. உண்மையில், ஆரம்பத்தில் சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிப்புகளுக்கும் இடையில் எந்தத் தடைகளும் இல்லை. இந்தத் தடைகள் அனைத்தும் சாத்தானால் ஏற்பட்டவை. மனிதனைச் சாத்தான் எவ்வாறு தொந்தரவு செய்தான், சீர்கேடாக்கினான் என்பதன் காரணமாக அவனால் எதையும் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. மனிதன் பாதிக்கப்பட்டவன், அவன் ஏமாற்றப்பட்ட ஒருவன். சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், சிருஷ்டிக்கப்பட்டவர்கள் சிருஷ்டிகரைப் பார்ப்பார்கள், சிருஷ்டிகர் சிருஷ்டித்தவர்களைப் பார்க்கவும் தனிப்பட்ட முறையில் அவர்களை வழிநடத்தவும் முடியும். பூமியில் மனிதன் கொள்ள வேண்டிய ஜீவிதம் இது மட்டுமேயாகும். எனவே, தேவனின் கிரியை முதன்மையாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்