Christian Movie 2022 | புடமிடுகிறவனின் அக்கினி | A Christian's Faith Testimony of Being Persecuted (Tamil Subtitles)
மே 17, 2022
ஒரு சபையின் தலைவரான சென் சின்ஜி, 2006 ஆம் ஆண்டு தனது கடைமையைச் செய்து கொண்டிருக்கும் போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்படுகிறார். சபையின் மூப்பரான ஜாவ் குயிலனோடு சேர்த்து அவர் கடைசியில் கைதுசெய்யப் படுகிறார். சபைத் தலைவர்களையும் பணத்தை வைத்திருக்கும் இடத்தையும் அறியும் முயற்சியில், காவல்துறையினர் அவர்களை விசாரித்து, கேள்விகளுக்குப் பதில் கூறுமாறு வற்புறுத்தப்படுகின்றனர், அவர்களை அடித்தல், கைவிலங்கினால் தொங்கவிடுதல் போன்ற உத்திகளையும் கூட பயன்படுத்துகின்றனர். சென் சிங்ஜி எதையும் கூறாததால், அவர்கள் அவரை ஒரு இரகசிய விசாரணை இடத்துக்குக் கொண்டு சென்று துணியை எல்லாம் கழற்றி அவமானப்படுத்துகின்றனர், அவர் நினைவிழக்கும் வரை மின்சார அதிர்ச்சி அளிக்கின்றனர். வாழ்வுக்கும் மராணத்துக்கும் இடையில் தான் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அவர் உணரும் போது, தனது கடைசி சொட்டு பலத்தை எல்லாம் திரட்டி தேவனிடம் ஜெபிக்கிறார். மயக்கத்தில் இருக்கும் போது தேவதூதர் கூட்டம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு பாடலைப் பாடி அவரை உற்சாகப்படுத்தி மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பக் கொண்டுவருவதைப் பார்க்கிறார். அவர் தன் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறார், மேலும் தேவனுக்கு சாட்சி பகரவும் சாத்தானை அவமானப்படுத்தவும் உறுதியேற்கிறார். மிருகத்தனமான சித்திரவதைகளும் பலனளிக்காத நிலையில், காவல்துறையினர் அவரது கணவரைக் கூட்டிவந்து தேவனுக்கு துரோகம் செய்யவும் சபையைக் காட்டிக் கொடுக்கவும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் இருமுறை சென் சின்ஜிக்கு அருகில் ஒற்றர்களை அனுப்பி சபையைப் பற்றிய விவரத்தை அறிய முற்படுகின்றனர். தேவனைச் சார்ந்து நின்று அவர் சாத்தானின் தந்திரங்களில் இருந்து தப்பினாலும் போலீஸ் விடுவதாயில்லை. பின்னர் ஒரு குளிர்காலத்தில் பனிபொழியும் நாளில் அவர்கள் சென் சின்ஜியையும் ஜாவ் குயிலனையும் மறுகல்வி அளிக்கும் ஒரு சிறை முகாமுக்குக் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் எல்லோருக்கும் முன் இவர்கள் இருவருடைய ஆடைகளையும் வலுக்கட்டாயமாக முழுமையாக உரிந்து நிர்வாணமாக நிற்க வைக்கின்றனர். …
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்