தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 140

நவம்பர் 22, 2022

மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். மனிதனால் அடைய முடியாதவையாகிய தேவனின் சாராம்சம் அவரிடம் இருப்பதாலும், தேவனுடைய மனநிலையை அவர் கொண்டிருப்பதாலும், அவருடைய கிரியையில் ஞானம் இருப்பதாலும், இதைப் பற்றி அதிகமாக எதுவுமில்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை எந்தவொரு மனிதனாலும் அகற்ற முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன். இவ்விதமாக, நீ உண்மையிலேயே ஜீவனுக்கான வழியைத் தேட விருப்பப்பட்டால், தேவன் பூமிக்கு வந்தே மனுஷனுக்கு ஜீவனுக்கான வழியைக் கொடுக்கும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீ முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் கடைசி நாட்களில்தான் அவர் பூமிக்கு வந்து மனுஷனுக்கு ஜீவனின் வழியைக் கொடுக்கிறார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கடந்த காலத்தில் அல்ல; இது இன்று தான் நடக்கிறது.

கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளை உன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க