தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 121

ஏப்ரல் 13, 2023

தேவனுடைய சகல சிருஷ்டிகளிலும் மிகவும் உயர்ந்தவனான மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறான். ஆகையால் மனுஷனுக்கு தேவனுடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு மனுஷனே தவிர, சாத்தான் அல்ல. இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமும், மனுஷனுடைய ஆத்துமாவுமே தவிர, பிசாசு அல்ல. தேவன் முற்றிலுமாக நிர்மூலமாக்குவதின் இலக்காக சாத்தான் இருக்கிறான். மனுஷன் தேவனுடைய இரட்சிப்பின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்துள்ளது. ஆகையால் முதலில் இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சமானது மிகவும் ஆழமாக சீர்கேடடைந்துள்ளது. இது தேவனை எதிர்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே இது தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக எதிர்க்கவும் மறுக்கவும் செய்கிறது. இந்த சீர்கேடான மாம்சம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. மாம்சத்தின் சீர்கேடான மனநிலையை சரிக்கட்டுவதையோ மாற்றுவதையோ காட்டிலும் கடினமானது வேறு எதுவுமில்லை. தொல்லைகளைத் தூண்டுவதற்காகவே மனுஷனுடைய மாம்சத்திற்குள் சாத்தான் வருகிறான். தேவனுடைய கிரியையைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேவனுடைய திட்டத்தை நாசமாக்குவதற்காகவும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு மனுஷன் சாத்தானாக மாறி, தேவனுக்கு சத்துருவாகிவிட்டான். மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு, அவன் முதலில் வெல்லப்பட வேண்டும். ஏனென்றால் தேவன் ஜெயங்கொள்வதற்காக எழுந்தருளி, தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதற்காகவும், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்காகவும் மாம்சத்திற்குள் வருகிறார். சீர்கெட்டுப்போன மனுஷனுடைய இரட்சிப்பும், அவருக்கு எதிராகக் கலகம் செய்யும் சாத்தானின் தோல்வியும் அழிவுமே அவரது நோக்கமாகும். மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம் அவர் சாத்தானை தோற்கடிக்கிறார், அதே நேரத்தில் சீர்கெட்ட மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார். இவ்வாறு, இது ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை அடையும் ஒரு கிரியையாக இருக்கிறது. அவர் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மாம்சத்தில் பேசுகிறார், மனுஷனுடன் சிறப்பாக செயல்படுவதற்கும், மனுஷனைச் சிறப்பாக ஜெயங்கொள்வதற்கும் மாம்சத்தில் எல்லா கிரியைகளையும் செய்கிறார். தேவன் மாம்சமாகும் கடைசி முறையில், கடைசி நாட்களில் அவருடைய கிரியை மாம்சத்தில் முடிவடையும். அவர் எல்லா மனுஷர்களையும் வகைவாரியாக வகைப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகத்தையும் முடிப்பார். மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையை எல்லாம் முடிப்பார். பூமியில் அவருடைய கிரியை எல்லாம் முடிந்த பிறகு, அவர் முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன் மனுக்குலத்தை முழுமையாக ஜெயங்கொண்டு, மனுக்குலத்தை முழுமையாக ஆதாயப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று அர்த்தமல்லவா? தேவன் மாம்சத்தில் தமது கிரியையை முடித்து, சாத்தானை முழுமையாக தோற்கடித்து, ஜெயங்கொண்டவராக இருக்கும்போது, மனுஷனை மோசம்போக்க சாத்தானுக்கு மேற்கொண்டு வாய்ப்பு இருக்காது. மனுஷனை மீட்பதும், மனுஷனுடைய பாவங்களை மன்னிப்பதுமே தேவனுடைய முதல் மனுஷ அவதரிப்பின் கிரியையாகும். இப்போது இது மனுக்குலத்தை ஜெயங்கொண்டு, முழுவதும் ஆதாயப்படுத்தும் கிரியையாக இருக்கிறது, இதனால் சாத்தானுக்கு இனிமேல் அதன் கிரியையைச் செய்ய எந்த வழியும் இருக்காது. அது முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுப் போய்விடும். தேவனே முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். இதுவே மாம்சத்தின் கிரியையாகும். இது தேவனால் செய்யப்படும் கிரியையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க