Christian Dance | தேவனை நேசிக்கும் இருதயத்துடன் அவரைத் துதியுங்கள் | Praise Song (Tamil Subtitles)

அக்டோபர் 31, 2021

நாம் தேவனை நினைத்து, ஜெபித்து-வாசித்து, ஐக்கியம் கொண்டு,

தியானித்து, சிந்தித்து, தேவனைத் தேடுகிறோம்.

தேவனுடைய வார்த்தைகளில் வாழ்ந்து, நாம் அவருடைய அழகைக் காண்கிறோம்.

சத்தியம் நம்மை விடுவிக்கிறது;

நாம் தேவனுடைய உண்மை அன்பை ருசிக்கிறோம்.

திருச்சபை ஜீவன் மகத்தானது; துதி அநேக வடிவங்கள் கொண்டது.

தேவனை துதித்துப் பாடி நடனம் ஆடுவதை நிறுத்த முடியவில்லையே.

நம் துதியில் விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லையே.

உள்ளார்ந்த துதி எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக்குகிறதே.

தேவ சமூகத்தில் இருக்கிற ஜீவன் உண்மை சந்தோஷத்தைத் தருகிறதே.

நாம் தேவனை எந்நாளும் நேசித்துக் கீழ்ப்படிவோமே.

தேவனுடைய மகத்தான இரட்சிப்பைக் கண்டு,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே.

நாம் சத்தியத்துடன் ஐக்கியப்பட்டு,

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பெறுகிறோம்.

நாம் அனுபவங்களைப் பகிர்கிறோம்; நமது வாழ்க்கை வளர்கிறது.

நாம் எல்லோரும் தேவராஜ்யத்தின் ஜனங்களே,

தேவனை நேசிக்கும் உண்மை இருதயத்தை உடையவர்களே.

நாம் ஒரு மனதுடன் இருதயத்துடன் நம் கடமைகளைச் செய்கிறோமே,

நாம் தேவனின் ஆசீர்வாதங்களையும் தலைமைத்துவத்தையும் காண்கிறோமே.

நியாயத்தீர்ப்பு நம்மைச் சுத்திகரிக்கிறதே,

நாம் தேவன் நீதியுள்ளவர் எனக் காண்கிறோமே.

நம் சீர்கேடுகளை நாம் தூக்கி எறிந்து விட்டுப் புதிதாக்கப்பட்டோமே.

நேர்மையான மனுஷனுடைய சாயலை நாம் வாழ்ந்து காட்டுகிறோமே.

தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க இது ராஜ்யத்தின் ஜீவனே.

தேவ சமூகத்தில் இருக்கிற ஜீவன் உண்மை சந்தோஷத்தைத் தருகிறதே.

நாம் தேவனை எந்நாளும் நேசித்துக் கீழ்ப்படிவோமே.

தேவனுடைய மகத்தான இரட்சிப்பைக் கண்டு,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே.

சகோதர சகோதரிகளே ஒன்றாகக் கூடுங்கள்.

நாம் அநேக உயர்வு தாழ்வுகள் வழியாகக் கடந்து சென்றோம்.

அரசாங்கத்தின் அடக்குமுறை மிகக் கடுமையானதே,

உபத்திரவத்தையும் பாடுகளையும் நாம் சகித்தோமே.

ஒரு போதும் நம் உறுதியை எதுவும் அசைத்ததில்லையே.

இது தேவ வார்த்தைகளின் வழிநடத்துதலின் காரணமே.

நம் இரட்சிப்புக்காக தேவன் செலுத்திய

கடினமான விலைக்கிரயம் அளவிடமுடியாததே.

தேவன் நம் மத்தியில் வாழ்ந்து, எப்போதும் நம்மை வழி நடத்துகிறாரே.

இந்த அழகான காலமும் ஜீவனும் பெரிதும் மதிக்கப்படுகிறதே.

தேவ சமூகத்தில் இருக்கிற ஜீவன் உண்மை சந்தோஷத்தைத் தருகிறதே.

நாம் தேவனை எந்நாளும் நேசித்துக் கீழ்ப்படிவோமே.

தேவனுடைய மகத்தான இரட்சிப்பைக் கண்டு,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே.

தேவ சமூகத்தில் இருக்கிற ஜீவன் உண்மை சந்தோஷத்தைத் தருகிறதே.

நாம் தேவனை எந்நாளும் நேசித்துக் கீழ்ப்படிவோமே.

தேவனுடைய மகத்தான இரட்சிப்பைக் கண்டு,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே,

ஒருமனதுடன் தேவனைத் துதிப்போமே.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க