2021 Christian Short Film | "நோவாவின் நாட்கள் வந்துவிட்டன" | How to Be Saved by God in Disasters (Tamil Subtitles)

செப்டம்பர் 20, 2021

நோவாவின் காலத்தில் இருந்த மனிதகுலத்தை நாம் திரும்பிப் பார்க்கலாம். மனந்திரும்புதலுக்கென்று எந்த சிந்தனையையும் செலுத்தாமல் மனிதன் எல்லா வகையான தீய செயல்களிலும் ஈடுபட்டான். ஒருவரும் தேவனுடைய வார்த்தைக்குச் செவிசாய்க்கவில்லை. முடிவில் அவர்களுடைய கடினத்தன்மையும், தீங்குகளும் தேவனுடைய கோபத்தைத் தூண்டியது, இறுதியில் பெருவெள்ளத்தின் பேரழிவால் அவர்கள் மாண்டுபோயினர். எட்டு பேர் கொண்ட நோவாவின் குடும்பத்தினர் மட்டுமே தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து உயிர்பிழைக்க முடிந்தது. இப்போது, கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன. மனிதகுலத்தின் சீர்கேடுகள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. எல்லோரும் தீமையை மதிக்கிறார்கள். மதரீதியான முழு உலகமும் அதன் கால ஓட்டத்தைப் பின்பற்றுகிறது. அவர்கள் சத்தியத்தைச் சிறிதளவேனும் விரும்புவதில்லை. நோவாவின் நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன! மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதர்கள் மத்தியில் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பைச் செய்ய தேவன் மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளார். தேவன் மனிதனை இரட்சிக்கும் கடைசி காலம் இது! மனிதகுலம் எதைத் தேர்வு செய்ய வேண்டும்?

இது ஓர் உண்மைச் சம்பவம். சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிங்பின் நாட்டின் குடிமக்கள் தொடர்ந்து சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டதால், அவர்கள் இரண்டு பேரழிவுகளை சந்தித்துள்ளனர். மிகப்பெரும் சிச்சுவான் பூகம்பத்தின் போது சர்வ வல்லமையுள்ள தேவனை நம்பிய பல சகோதர சகோதரிகள் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தனர். இந்த உண்மைகள் கண்கூடாகப் பார்க்கப்பட்டன: தேவனை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிபவர்கள், தேவனை மறுத்து, எதிர்ப்பவர்கள். இந்த இரண்டு வகையான ஜனங்களுக்கும் இரண்டு பெரும் வித்தியாசமான முடிவுகள் உள்ளன.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க