தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 276

ஏப்ரல் 15, 2023

இன்று, பரிசுத்த ஆவியானவரினால் பயன்படுத்தப்பட்டவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று உங்களில் யார் சொல்லத் துணிகிறார்கள்? இதுபோன்ற காரியங்களை யாராவது சொல்லத் துணிகிறார்களா? நீ இதுபோன்ற காரியங்களைச் சொன்னால், எஸ்ராவின் தீர்க்கதரிசன புத்தகம் ஏன் நிராகரிக்கப்பட்டது, அந்தப் பண்டைய காலப் புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் ஏன் அதேபோல் செய்யப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், நீங்கள் ஏன் இத்தகைய நிலையற்ற தேர்வுகளைச் செய்யத் துணிகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேர்ந்தெடுப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? இஸ்ரேலில் இருந்து அநேக கதைகளும் நிராகரிக்கப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று நீ நம்பினால், சில புத்தகங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருந்தால், அவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு வாசிக்க அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவை மனிதனின் சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்படவோ நிராகரிக்கப்படவோ கூடாது. அதைச் செய்வது தவறாகும். பவுல் மற்றும் யோவானின் அனுபவங்கள் அவர்களின் தனிப்பட்ட உள்ளுணர்வுடன் கலந்தன என்று சொல்வதால் அவர்களின் அனுபவங்களும் அறிவும் சாத்தானிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உள்ளுணர்வுகளிலிருந்து வந்த காரியங்களை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் அறிவு அந்த நேரத்தில் அவர்களின் நிஜ அனுபவங்களின் பின்னணிக்கு ஏற்ப இருந்தது, இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று யாரால் விசுவாசத்துடன் சொல்ல முடியும்? நான்கு சுவிசேஷங்களும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்றால், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒவ்வொருவரும் இயேசுவின் கிரியையைப் பற்றி ஏன் வித்தியாசமாகச் சொன்னார்கள்? நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், பேதுரு எவ்வாறு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான் என்ற வேதாகமத்தில் உள்ள விளக்கங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் வேறுபட்டவை, அவை ஒவ்வொன்றும் அவற்றின் தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. அறியாதவர்கள் அநேகர், "மனுஷ ரூபமெடுத்த தேவனும் ஒரு மனிதராவார், ஆகவே அவர் பேசும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து முழுமையாக வர முடியுமா? பவுல் மற்றும் யோவானின் வார்த்தைகள் மனிதனின் சித்தத்துடன் கலந்திருந்தால், அவர் பேசும் வார்த்தைகள் உண்மையில் மனிதனின் சித்தத்துடன் கலக்கப்படவில்லையா?" இப்படிச் சொல்லும் ஜனங்கள் குருடர்கள் மற்றும் அறிவற்றவர்கள்! நான்கு சுவிஷேசங்களையும் கவனமாக வாசியுங்கள். இயேசு செய்த காரியங்களையும், அவர் பேசிய வார்த்தைகளையும் பற்றி அவர்கள் பதிவுசெய்ததை வாசியுங்கள். ஒவ்வொரு விளக்கமும் மிகவும் வித்தியாசமானது, ஒவ்வொன்றும் அதன் சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏன் முரண்பாடுகள் உள்ளன?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க