Christian Song | தேவன் அருளும் ஜீவன் மனுக்குலத்துக்குத் தேவை (Tamil Subtitles)

பிப்ரவரி 17, 2022

மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல்,

அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும்,

நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது.

மனித முன்னேற்றத்தைப் பாதுகாக்க பலரும் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் தேவன் வழிகாட்டியாக இல்லாமல், மனிதனின் உள்ளே வெறுமையாக இருக்கிறான்.

மனுஷனின் ஜீவனாக யாரும் இருக்க முடியாது என்பதால், எந்தவொரு கோட்பாடோ,

அறிவியலோ, அறிவோ, ஜனநாயகமோ அவனுக்கு

முழுமையான ஆறுதலைத் தரமுடியாது.

மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான்.

ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் இவற்றால் தடுக்க இயலாது.

அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும்

ஒரு நியாயமான சமூகத்துக்கும் மேலாக பல விஷயங்கள் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது.

தேவனுடைய இரட்சிப்பும், அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது.

இவையே மனிதனுக்கு தேவைப்படுபவைகளாகும்.

தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே,

அவனது தேவைகள் பூர்த்தியடையும்;

மனிதனின் ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் அவனது ஆவிக்குரிய வெறுமை,

இந்த விஷயங்களை தீர்க்க முடியும்.

ஏனென்றால், மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்,

அறிவில்லாத தியாகங்களும் ஆராய்ச்சிகளும் அதிக துயரத்திற்கு மாத்திரமே வழிவகுக்கும்

மற்றும் மனுஷனை ஒரு நிலையான பயத்தில் மாத்திரமே வைத்திருக்கும்.

எதிர்காலத்தை எதிர்கொள்ள அல்லது

முன்னோக்கி செல்லும் பாதை என்ன என்று தெரியாமல்,

அறிவியலுக்கும் அறிவுக்கும் ஆழ்ந்த வெறுமை உணர்வுக்கும் பயப்படுவான்.

ஒரு சுதந்திர நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும், மனுக்குலத்தின்

தலைவிதியிலிருந்து யாரும் தப்ப முடியாது.

ஆள்பவனாக இருந்தாலும் அல்லது ஆளப்படுபவனாக இருந்தாலும், மனிதனின் இலக்குகளை,

மனிதனின் மர்மங்களை ஆராயும் விருப்பத்திலிருந்து தப்பி ஓட முடியாது,

இந்த ஆழமான வெறுமையிலிருந்து வெளியேற முடியாது.

இந்த சமூக நிகழ்வுகள் மனிதனுக்கு பொதுவானவை,

இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஒரு மாபெரும் மனுஷனாலும் முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான்.

தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது.

ஒரு தேசம் அல்லது ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பை பெறமுடியவில்லை என்றால்,

அவர்கள் இருளை நோக்கி காலடி எடுத்து வைப்பார்கள்,

மேலும் தேவன் அவர்களை நிர்மூலமாக்குவார்.

அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும்

ஒரு நியாயமான சமூகத்துக்கும் மேலாக பல விஷயங்கள் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது.

தேவனுடைய இரட்சிப்பும், அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது.

இவையே மனிதனுக்கு தேவைப்படுபவைகளாகும்.

தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே,

அவனது தேவைகள் பூர்த்தியடையும்;

மனிதனின் ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் அவனது ஆவிக்குரிய வெறுமை,

இந்த விஷயங்களை தீர்க்க முடியும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க