தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 164

ஏப்ரல் 15, 2023

அந்த நேரத்தில் இயேசுவின் வெளிப்பாடுகளும் கிரியைகளும் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்கு ஏற்ப அவர் தனது கிரியையைச் செய்யவில்லை. இது கிருபையின் காலத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு ஏற்றாற்போல் மேற்கொள்ளப்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த கிரியையின்படி, அவருடைய சொந்தத் திட்டத்தின்படி, அவருடைய ஊழியத்தின்படி பிரயாசப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை. அவர் செய்த எதுவும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி இல்லை, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கிரியை புரிய வரவில்லை. தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிப்படையாகச் செய்யப்படவில்லை, மேலும் அவர் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவோ அல்லது பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை வேண்டுமென்றே உணரவோ வரவில்லை. ஆயினும் அவருடைய கிரியைகள் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளைப் பாழாக்கவில்லை, அவர் முன்பு செய்திருந்த கிரியையையும் இடையூறு செய்யவில்லை. எந்தவொரு கோட்பாட்டையும் பின்பற்றாமல் அதற்குப் பதிலாக அவரே செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது என்பது அவருடைய கிரியையின் முக்கிய அம்சமாகும். அவர் ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஞானதிருஷ்டிக்காரரோ அல்ல, ஆனால் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செய்ய உண்மையாக வந்த ஒரு செய்கைக்காரர், அவர் தனது புதிய யுகத்தைத் தொடங்கவும், அவருடைய புதிய கிரியையைச் செய்யவும் வந்தார். நிச்சயமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, பழைய ஏற்பாட்டில் பண்டைய தீர்க்கதரிசிகள் பேசிய அநேக வார்த்தைகளையும் அவர் நிறைவேற்றினார். இன்றைய கிரியையும் பழைய ஏற்பாட்டின் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளையும் நிறைவேற்றியுள்ளது. "பழைய பஞ்சாங்கத்தை" நான் வைத்திருப்பதில்லை என்பது போன்றதுதான் இது, அவ்வளவுதான். ஏனென்றால், நான் செய்யவேண்டிய கிரியைகள் அதிகம் உள்ளன, நான் உங்களிடம் பேச வேண்டிய அநேக வார்த்தைகள் உள்ளன, இந்தக் கிரியையும் இந்த வார்த்தைகளும் வேதாகமத்தின் பத்திகளை விளக்குவதை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் இதுபோன்ற கிரியைக்கு பெரியதான முக்கியத்துவம் அல்லது மதிப்பு உங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு உதவ முடியாது, அல்லது உங்களை மாற்ற முடியாது. வேதாகமத்திலிருந்து எந்தவொரு பத்தியையும் நிறைவேற்றுவதற்காக புதிய கிரியையைச் செய்ய நான் விரும்புகிறதில்லை. வேதாகமத்தின் பண்டைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்ற மட்டுமே தேவன் பூமிக்கு வந்திருந்தால், யார் பெரியவர், மனுஷனாக அவதரித்த தேவனா அல்லது அந்தப் பண்டைய தீர்க்கதரிசிகளா? எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்க்கதரிசிகள் தேவனுக்குப் பொறுப்பானவர்களா, அல்லது தேவன் தீர்க்கதரிசிகளுக்குப் பொறுப்பானவரா? இந்த வார்த்தைகளை நீ எவ்வாறு விளக்குகிறாய்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க