தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 163

ஏப்ரல் 15, 2023

ஏசாயா, எசேக்கியேல், மோசே, தாவீது, ஆபிரகாம் மற்றும் தானியேல் ஆகியோர் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடையே தலைவர்களாகவோ தீர்க்கதரிசிகளாகவோ இருந்தார்கள். ஏன் அவர்கள் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஏன் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு சாட்சி பகரவில்லை? பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் கிரியையைத் தொடங்கியதும், அவருடைய வார்த்தைகளைப் பேசத் தொடங்கியதும் ஏன் அவருக்கு சாட்சி பகர்ந்தார்? ஏன் பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு சாட்சி பகரவில்லை? அவர்கள் மாம்சமான மனிதர்கள், அனைவரும் "ஆண்டவன்" என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அழைக்கப்பட்டதைக் கவனம் கொள்ளாமல், அவர்களின் கிரியை அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சத்தைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சம் ஆகியவை அவர்களின் அடையாளத்தைக் குறிக்கின்றன. அவர்களின் சாராம்சம் அவர்களின் பட்டங்களுடன் தொடர்புடையது அல்ல. அது அவர்கள் வெளிப்படுத்தியவை மற்றும் அவர்கள் வாழ்ந்த விதம் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவன் என்று சாதாரணமானவர்கள் அழைக்கப்படுவதில் எதுவும் இல்லை, ஒரு நபர் எந்த வகையிலும் அழைக்கப்படலாம், ஆனால் அவருடைய சாராம்சம் மற்றும் இயல்பான அடையாளம் மாற்ற முடியாததாக இருந்தது. அந்தக் கள்ளக் கிறிஸ்துக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள் மற்றும் ஏமாற்றுபவர்களில், "தேவன்" என்று அழைக்கப்படுபவர்களும் இருந்தார்கள் இல்லையா? ஏன் அவர்கள் தேவன் இல்லை? ஏனென்றால் அவர்களால் தேவனின் கிரியையைச் செய்ய முடியாது. அடிப்படையில் அவர்கள் மனிதர்கள், ஜனங்களை ஏமாற்றுகிறார்கள், தேவன் அல்ல, எனவே அவர்கள் தேவனின் அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. பன்னிரண்டு கோத்திரங்களில் தாவீது ஆண்டவன் என்றும் அழைக்கப்படவில்லையா? இயேசு ஆண்டவர் என்றும் அழைக்கப்பட்டார். இயேசு மட்டும் ஏன் மனுஷ ரூபமெடுத்த தேவன் என்று அழைக்கப்பட்டார்? எரேமியாவும் மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? மேலும் இயேசு மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? தேவனின் சார்பாக இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? அவருடைய சாராம்சம் வேறுபட்டது என்பதால் அல்லவா? அவர் செய்த கிரியை வேறுபட்டது என்பதால் அல்லவா? பட்டப்பெயர் முக்கியமா? இயேசு மனுஷகுமாரன் என்றும் அழைக்கப்பட்டாலும், அவர் தேவனின் முதல் மனுஷ அவதரிப்பு ஆவார், அவர் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும், மீட்பின் கிரியையைச் செய்யவும் வந்திருந்தார். மனுஷ குமாரன் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களிடமிருந்து இயேசுவின் அடையாளமும் சாரமும் வேறுபட்டவை என்பதை இது நிரூபிக்கிறது. இன்று, பரிசுத்த ஆவியானவரினால் பயன்படுத்தப்பட்டவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று உங்களில் யார் சொல்லத் துணிகிறார்கள்? இதுபோன்ற காரியங்களை யாராவது சொல்லத் துணிகிறார்களா? நீ இதுபோன்ற காரியங்களைச் சொன்னால், எஸ்ராவின் தீர்க்கதரிசன புத்தகம் ஏன் நிராகரிக்கப்பட்டது, அந்தப் பண்டைய காலப் புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் ஏன் அதேபோல் செய்யப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், நீங்கள் ஏன் இத்தகைய நிலையற்ற தேர்வுகளைச் செய்யத் துணிகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேர்ந்தெடுப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? இஸ்ரேலில் இருந்து அநேக கதைகளும் நிராகரிக்கப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று நீ நம்பினால், சில புத்தகங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருந்தால், அவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு வாசிக்க அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவை மனிதனின் சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்படவோ நிராகரிக்கப்படவோ கூடாது. அதைச் செய்வது தவறாகும். பவுல் மற்றும் யோவானின் அனுபவங்கள் அவர்களின் தனிப்பட்ட உள்ளுணர்வுடன் கலந்தன என்று சொல்வதால் அவர்களின் அனுபவங்களும் அறிவும் சாத்தானிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உள்ளுணர்வுகளிலிருந்து வந்த காரியங்களை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் அறிவு அந்த நேரத்தில் அவர்களின் நிஜ அனுபவங்களின் பின்னணிக்கு ஏற்ப இருந்தது, இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று யாரால் விசுவாசத்துடன் சொல்ல முடியும்? நான்கு சுவிசேஷங்களும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்றால், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒவ்வொருவரும் இயேசுவின் கிரியையைப் பற்றி ஏன் வித்தியாசமாகச் சொன்னார்கள்? நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், பேதுரு எவ்வாறு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான் என்ற வேதாகமத்தில் உள்ள விளக்கங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் வேறுபட்டவை, அவை ஒவ்வொன்றும் அவற்றின் தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. அறியாதவர்கள் அநேகர், "மனுஷ ரூபமெடுத்த தேவனும் ஒரு மனிதராவார், ஆகவே அவர் பேசும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து முழுமையாக வர முடியுமா? பவுல் மற்றும் யோவானின் வார்த்தைகள் மனிதனின் சித்தத்துடன் கலந்திருந்தால், அவர் பேசும் வார்த்தைகள் உண்மையில் மனிதனின் சித்தத்துடன் கலக்கப்படவில்லையா?" இப்படிச் சொல்லும் ஜனங்கள் குருடர்கள் மற்றும் அறிவற்றவர்கள்! நான்கு சுவிஷேசங்களையும் கவனமாக வாசியுங்கள். இயேசு செய்த காரியங்களையும், அவர் பேசிய வார்த்தைகளையும் பற்றி அவர்கள் பதிவுசெய்ததை வாசியுங்கள். ஒவ்வொரு விளக்கமும் மிகவும் வித்தியாசமானது, ஒவ்வொன்றும் அதன் சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏன் முரண்பாடுகள் உள்ளன? இதைக் காண முடியாத அளவிற்கு மனிதன் மிகவும் முட்டாளானவன் அல்லவா? தேவனுக்காக சாட்சி பகர உன்னைக் கேட்டால், நீ எந்த வகையான சாட்சிகளைப் பகர முடியும்? தேவனை அறிவதற்கான அத்தகைய ஒரு வழியில் அவருக்கு சாட்சி பகர முடியுமா? "யோவான் மற்றும் லூக்காவின் பதிவுகள் மனித விருப்பத்துடன் கலந்திருந்தால், உங்கள் தேவன் பேசும் வார்த்தைகள் மனித விருப்பத்துடன் கலக்கப்படவில்லையா?" என்று பிறர் உன்னிடம் கேட்டால், உன்னால் தெளிவான பதிலைக் கொடுக்க முடியுமா? லூக்காவும் மத்தேயுவும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டிருந்து, இயேசுவின் கிரியையைப் பார்த்திருந்த பின், இயேசுவின் கிரியையின் சில யதார்த்தங்களை நினைவுறுத்தும் படியாக, அவர்கள் தங்கள் சொந்த அறிவைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் அறிவு பரிசுத்த ஆவியானவரினால் முழுமையாக வெளிப்பட்டது என்று நீ சொல்ல முடியுமா? வேதாகமத்திற்கு வெளியே, அவர்களை விட உயர்ந்த அறிவைக் கொண்ட அநேக ஆவிக்குரிய பிரமுகர்கள் இருந்தார்கள், ஆகவே, அவர்களின் வார்த்தைகள் பிற்கால சந்ததியினரால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? அவை பரிசுத்த ஆவியானவரினாலும் பயன்படுத்தப்படவில்லையா? இன்றைய தினத்தின் கிரியையில், இயேசுவின் கிரியையின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்ட எனது சொந்த உள்ளுணர்வுகளைப் பற்றி நான் பேசவில்லை என்பதையும், இயேசுவின் கிரியையின் பின்னணிக்கு எதிராக எனது சொந்த அறிவைப் பற்றியும் நான் பேசவில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு என்ன கிரியை செய்தார்? இன்று நான் என்ன கிரியை செய்கிறேன்? நான் செய்வதற்கும் சொல்வதற்கும் எந்த முன் மாதிரியும் இல்லை. இன்று நான் நடந்து செல்லும் பாதை இதற்கு முன் ஒருபோதும் நடக்கப்படவில்லை, இது ஒருபோதும் யுகங்களுக்கும் தலைமுறைகளுக்கும் முன்பான ஜனங்களால் நடக்கப்படவில்லை. இன்று, இது தொடங்கப்பட்டுள்ளது, இது ஆவியானவரின் கிரியை அல்லவா? இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றாலும், கடந்த காலத் தலைவர்கள் அனைவரும் மற்றவர்களின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் தங்கள் கிரியையைச் செய்தார்கள்; இருப்பினும், தேவனாகிய அவருடைய கிரியை வேறுபட்டது. இயேசுவின் கிரியையின் கட்டம் ஒரே மாதிரியாக இருந்தது. அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார். அவர் வந்ததும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், மனிதன் மனந்திரும்பி அறிக்கையிட வேண்டும் என்று கூறினார். இயேசு தம்முடைய கிரியையை முடித்த பிறகு, பேதுருவும் பவுலும் மற்றவர்களும் இயேசுவின் கிரியையைச் செய்யத் தொடங்கினார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு பரலோகத்திற்கு ஏறிய பிறகு, அவர்கள் சிலுவையின் வழியைப் பரப்ப ஆவியானவரால் அனுப்பப்பட்டார்கள். பவுலின் வார்த்தைகள் போற்றப்பட்டாலும், பொறுமை, அன்பு, துன்பம், முக்காடிடுதல், ஞானஸ்நானம் அல்லது பின்பற்ற வேண்டிய பிற உபதேசங்கள் போன்ற இயேசு கூறிய அஸ்திபாரத்தின் அடிப்படையிலும் அவை அமைந்தன. இவை அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் பேசப்பட்டன. அவர்களால் ஒரு புதிய வழியைத் திறக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க