தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 162

ஏப்ரல் 15, 2023

"மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளுக்கும், கடந்த கால தீர்க்கதரிசிகளும் மற்றும் அப்போஸ்தலர்களும் செய்தவற்றிற்கும் வித்தியாசம் என்ன? தாவீது கர்த்தர் என்றும் அழைக்கப்பட்டார், இயேசுவும் அப்படித்தான். அவர்கள் செய்த கிரியை வேறுபட்டிருந்தாலும், அவை ஒரே காரியமென்று அழைக்கப்பட்டன. எனக்குச் சொல்லுங்கள், ஏன் அவர்களின் அடையாளங்கள் ஒன்று போல் இல்லை? யோவான் கண்டது ஒரு தரிசனமாக இருந்தது, அதுவும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்ததாக இருந்தது, மேலும் பரிசுத்த ஆவியானவர் சொல்ல நினைத்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது. யோவானின் அடையாளம் இயேசுவின் அடையாளத்திலிருந்து ஏன் வேறுபட்டது?" என்று சிலர் கேட்பார்கள். இயேசு பேசிய வார்த்தைகளால் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது, அவை தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. யோவான் கண்டது ஒரு தரிசனம், அவர் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாமல் இருந்தார். இயேசுவைப் போலவே யோவானும், பேதுருவும், பவுலும் அநேக வார்த்தைகளைப் பேசினார்கள், ஆனாலும் அவர்கள் ஏன் இயேசுவைப் போன்ற அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை? அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது என்பதே இதற்கு முக்கியமான காரணம். இயேசு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தேவனுடைய ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு யாரும் செய்திராத கிரியையான புதிய யுகத்தின் கிரியையை அவர் செய்தார். அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார், அவர் யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் தேவனையே பிரதிநிதித்துவப்படுத்தினார், அதேசமயம் பேதுரு, பவுல் மற்றும் தாவீது ஆகியோர் இயேசுவால் அல்லது யேகோவாவால் அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேவனின் ஒரு சிருஷ்டிப்பின் அடையாளத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆகவே, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் தேவனின் ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் தேவனின் சிருஷ்டிகளாக இருந்தனர். அவர்கள் தேவனின் நாமத்தால் கிரியை செய்தார்கள் அல்லது தேவனால் அனுப்பப்பட்ட பிறகு கிரியை செய்தார்கள். மேலும், அவர்கள் இயேசு அல்லது யேகோவா ஆரம்பித்த யுகங்களில் கிரியை செய்தார்கள், அவர்கள் வேறு எந்தக் கிரியையும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளாக மட்டுமே இருந்தனர். பழைய ஏற்பாட்டில், அநேக தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தார்கள், அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களை எழுதினார்கள். அவர்களை தேவன் என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் இயேசு கிரியை செய்ய ஆரம்பித்தவுடன், தேவனின் ஆவியானவர் அவரை தேவன் என்று சாட்சி பகிர்ந்தார். அது ஏன்? இந்தக் கட்டத்தில், இதற்கு முன்பே, அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பல்வேறு நிருபங்களை எழுதி, அநேக தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள் என்பதை நீ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும்! பிற்காலத்தில், ஜனங்கள் அவற்றில் சிலவற்றை வேதாகமத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுத்தார்கள், சில தொலைந்து போயின. அவர்களால் பேசப்படுபவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று சொல்பவர்கள் இருந்தாலும், ஏன் அவற்றில் சில நன்மையாகக் கருதப்படுகின்றன, அவற்றில் சில தீமையாகக் கருதப்படுகின்றன? சிலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், மற்றவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? அவை உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரினால் பேசப்பட்ட வார்த்தைகளாக இருந்தால், அவற்றைத் தேர்ந்தெடுப்பது ஜனங்களுக்கு அவசியமா? இயேசு பேசிய வார்த்தைகளின் விவரங்களும் அவர் செய்த கிரியையும் நான்கு சுவிஷேசங்களில் ஒவ்வொன்றிலும் ஏன் வேறுபடுகின்றன? இது அவற்றை எழுதியவர்களின் தவறு அல்லவா? சிலர் கேட்பார்கள், "பவுலும் மற்ற ஆசிரியர்களும் எழுதிய புதிய ஏற்பாட்டின் நிருபங்களும் அவர்கள் செய்த கிரியையும் மனிதனின் சித்தத்திலிருந்து ஓரளவு உயர்ந்து, மனிதனின் கருத்துக்களால் கலப்படம் செய்யப்பட்டதால், இன்று நீர் (தேவன்) பேசும் வார்த்தைகளில் மனிதனின் தூய்மையற்ற தன்மை இல்லையா? அவை உண்மையில் மனிதனின் கருத்துக்கள் எதையும் கொண்டிருக்கவில்லையா?" தேவன் செய்த கிரியையின் இந்த நிலை பவுல் மற்றும் அநேக அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்ததைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அடையாளத்தில் வேறுபாடு இருப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமாக, மேற்கொள்ளப்படுகிற கிரியையிலும் வேறுபாடு உள்ளது. பவுல் தாக்கப்பட்டு கர்த்தருக்கு முன்பாக விழுந்தபின், பரிசுத்த ஆவியானவரினால் கிரியைக்கு வழிநடத்தப்பட்டார், அவர் அனுப்பப்பட்ட ஒருவரானார். ஆகவே அவர் சபைகளுக்கு நிருபங்களை எழுதினார், இந்த நிருபங்கள் அனைத்தும் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றின. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே கிரியை செய்ய பவுல் கர்த்தரால் அனுப்பப்பட்டார், ஆனால் தேவன் தாமே வந்தபோது, அவர் எந்த நாமத்திலும் கிரியை செய்யவில்லை, தேவனுடைய ஆவியானவரைத் தவிர வேறு எவரையும் அவருடைய கிரியையில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. தேவன் தனது கிரியையை நேரடியாகச் செய்ய வந்தார். அவர் மனிதனால் பரிபூரணமாக்கப்படவில்லை, அவருடைய கிரியை எந்த மனிதனின் போதனைகளிலும் மேற்கொள்ளப்படவில்லை. கிரியையின் இந்தக் கட்டத்தின் போது, தேவன் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிக் கூறுவதன் மூலம் வழிநடத்துவதில்லை, மாறாக, தன்னிடம் உள்ளதைப் பொறுத்து நேரடியாக அவருடைய கிரியையைச் செய்கிறார். உதாரணமாக, ஊழியம் செய்பவர்களுக்குரிய சோதனை, சிட்சிப்பின் நேரம், மரணத்தின் சோதனை, தேவனை நேசிக்கும் நேரம்…. இது அனைத்தும் முன்பு செய்யப்பட்டிராத கிரியை, இது மனிதனின் அனுபவங்களை விட தற்போதைய யுகத்தின் கிரியையாகும். நான் கூறிய வார்த்தைகளில், மனிதனின் அனுபவங்கள் எவை? அவை அனைத்தும் ஆவியானவரிடமிருந்து நேரடியாக வரவில்லையா, அவை ஆவியானவரினால் வெளியாக்கப்படவில்லையா? உன் திறமை மிகவும் மோசமாக இருப்பதால்தான் நீங்கள் யதார்த்தத்தை நிதானிக்க முடியவில்லை! நான் கூறும் நடைமுறை வாழ்க்கைமுறை, பாதையை வழிநடத்துவதாகும், இதற்கு முன்னர் யாராலும் எப்போதும் பேசப்படவில்லை, இந்தப் பாதையை யாரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை, அல்லது இந்த யதார்த்தத்தை அறிந்திருக்கவில்லை. நான் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, யாரும் அவற்றைப் பேசவில்லை. இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரும் பேசவில்லை, அத்தகைய விவரங்களை அவர்கள் இதுவரைப் பேசியதில்லை, மேலும், இந்தக் காரியங்களை வெளிப்படுத்த யாரும் இதுபோன்ற நிலைகளைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று நான் வழிநடத்தும் பாதையை யாரும் வழிநடத்தவில்லை, அது மனிதனால் வழிநடத்தப்பட்டிருந்தால், அது ஒரு புதிய வழியாக இருந்திருக்காது. உதாரணமாகப் பவுலையும் பேதுருவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இயேசு பாதையை வழிநடத்துவதற்கு முன்பு அவர்களுக்குச் சொந்த அனுபவங்கள் இல்லாதிருந்தது. இயேசு வழிநடத்திய பின்புதான் அவர்கள் இயேசு பேசிய வார்த்தைகளையும், அவர் வழிநடத்திய பாதையையும் அனுபவித்தார்கள். இதிலிருந்து அவர்கள் அநேக அனுபவங்களைப் பெற்றார்கள், மேலும் அவர்கள் நிருபங்களை எழுதினார்கள். எனவே, மனிதனின் அனுபவங்கள் தேவனின் கிரியைக்கு சமமானவை அல்ல, தேவனின் கிரியை என்பது மனிதனின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களால் விவரிக்கப்படும் அறிவுக்கு சமமானதல்ல. இன்று நான் ஒரு புதிய பாதையை வழிநடத்துகிறேன், புதிய கிரியையைச் செய்கிறேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன், என் கிரியையும் வெளிப்பாடுகளும் யோவானிடமிருந்தும் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவை. அது அப்படியல்ல, நான் ஒருபோதும் அனுபவங்களைப் பெற்று, பின்னர் அவற்றைப் பற்றி உங்களிடம் பேசுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், அது உங்களை நீண்ட காலத்திற்கு முன்பே தாமதப்படுத்தியிருக்காதா? கடந்த காலத்தில், அநேகர் பேசிய அறிவும் போற்றப்பட்டது, ஆனால் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் ஆவிக்குரிய நபர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அடிப்படையில் மட்டுமே பேசப்பட்டன. அவர்கள் பாதையை வழிநடத்தவில்லை, ஆனால் அவர்களின் அனுபவங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பார்த்திருந்தவற்றிலிருந்து வந்தவர்கள், அவர்களின் அறிவிலிருந்து வந்தவர்கள். சில அவர்களின் கருத்துக்கள், மற்றும் சில அவர்கள் சுருக்கமாகக் கூறியிருந்த அனுபவத்தை உள்ளடக்கியவை. இன்று, எனது கிரியையின் தன்மை அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மற்றவர்களால் வழிநடத்தப்படுவதை நான் அனுபவித்ததில்லை, மற்றவர்களால் பரிபூரணமாக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நான் பேசிய மற்றும் விவாதித்தவை எல்லாம் வேறு யாரையும் போன்றதல்ல மற்றும் வேறு யாராலும் பேசப்படவுமில்லை. இன்று, நீங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் பேசும் வார்த்தைகளின் அடிப்படையில் உங்கள் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வெளிப்பாடுகளும் கிரியையும் இல்லாமல், இந்தக் காரியங்களை அனுபவிக்கும் திறன் கொண்டவர்கள் யார், (ஊழியம் செய்பவர்களின் சோதனை, சிட்சிப்புக் காலம்…), அத்தகைய அறிவைப் பற்றி யாரால் பேச முடியும்? இதைக் காண்பதற்கு நீ உண்மையில் தகுதியற்றவனா? கிரியையின் நிலையைப் பொருட்படுத்தாமல், என் வார்த்தைகள் பேசப்பட்டவுடன், நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஏற்ப ஐக்கியம் கொள்ளவும், அதன்படி கிரியை செய்யவும் தொடங்குகிறீர்கள், அது உங்களில் எவரும் நினைவில் கொண்டிருந்த ஒரு வழி அல்ல. இவ்வளவு தூரம் வந்திருந்தும், இதுபோன்ற தெளிவும் எளிமையுமான கேள்வியைக் காண உன்னால் இயலவில்லையா? இது யாரோ நினைவில் கொண்ட ஒரு வழி அல்ல, எந்தவொரு ஆவிக்குரிய நபரின் அடிப்படையிலானதும் இல்லை. இது ஒரு புதிய பாதை, முன்பு இயேசு பேசிய அநேக வார்த்தைகள் கூட இனி ஒருபோதும் பொருந்தாது. நான் பேசுவது ஒரு புதிய சகாப்தத்தைத் திறக்கும் கிரியை, அது தனித்து நிற்கும் கிரியை. நான் செய்யும் கிரியை மற்றும் நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும் புதியவை. இது இன்றைய தினத்தின் புதிய கிரியை அல்லவா? இப்படியே இயேசுவின் கிரியையும் இருந்தது. அவருடைய கிரியையும் ஆலயத்தில் இருந்தவர்களிடமிருந்து வேறுபட்டது, அதுவும் பரிசேயர்களின் கிரியையிலிருந்தும் கூட வேறுபட்டது, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவராலும் செய்யப்பட்டதைப் போல எந்த ஒற்றுமையையும் அது கொண்டிருக்கவில்லை. அதைக் கண்டபின், ஜனங்களால் தீர்மானம் செய்ய முடியவில்லை. "இது உண்மையில் தேவனால் செய்யப்பட்டதா?" இயேசு யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர் மனிதனுக்கு கற்பிக்க வந்தபோது, அவர் பேசியதெல்லாம் பழைய ஏற்பாட்டின் பண்டையக் கால புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் கூறியதை விட புதியவை, வேறுபட்டவை, இதன் காரணமாக ஜனங்கள் உறுதியில்லாதவர்களாகவே இருந்தனர். இதுதான் மனிதனை சமாளிக்க மிகவும் கடினமானவனாக்குகிறது. இந்தப் புதிய கட்ட கிரியையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உங்களில் பெரும்பாலோர் நடந்து வந்த பாதை, அந்த ஆவிக்குரிய நபர்களின் அஸ்திபாரத்தைக் கடைப்பிடிப்பதும், பிரவேசிப்பதும் ஆகும். ஆனால், நான் இன்று செய்யும் கிரியை மிகவும் வித்தியாசமானது, அதனால் அது சரியானதா இல்லையா என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை. முன்பு நீ எந்தப் பாதையில் நடந்தாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை, யாருடைய "உணவை" நீ புசித்தாய், அல்லது உன் "தகப்பனாக" நீ தெரிந்து கொண்டாய் என்பதில் எனக்கு விருப்பமில்லை. மனிதனை வழிநடத்த நான் வந்திருந்து புதிய சிருஷ்டிப்புகளைக் கொண்டு வந்திருப்பதால், என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நான் சொல்வதற்கேற்ப கிரியை செய்ய வேண்டும். நீ எவ்வளவு வல்லமையுள்ள "குடும்பத்தைச்" சேர்ந்தவனாக இருந்தாலும், நீ என்னைப் பின்பற்ற வேண்டும், நீ உன் முந்தைய நடைமுறைகளின்படி கிரியை செய்யக்கூடாது, உன் "வளர்ப்புத் தகப்பன்" பொறுப்பில் இருந்து விலக வேண்டும், நீ உன் நியாமான பங்கைப் பெற உன் தேவனுக்கு முன் வர வேண்டும். நீ முழுமையாக என் கைகளில் இருக்கிறாய், மேலும் நீ உன் வளர்ப்புத் தகப்பனுக்கு அதிகமான குருட்டு விசுவாசத்தை அர்ப்பணிக்கக்கூடாது. அவன் உன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இன்றைய தினத்தின் கிரியை தனித்து நிற்கிறது. நான் இன்று சொல்வது அனைத்தும் கடந்த காலத்திலிருந்து ஒரு அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இது ஒரு புதிய ஆரம்பம், அது மனிதனின் கையால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ சொன்னால், நீ இரட்சிப்புக்கு அப்பாற்பட்ட அளவுக்குக் குருடனாய் இருக்கிறாய்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க