தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 151

மார்ச் 26, 2023

தேவன், சாத்தானைத் தோற்கடிக்க மனுஷ நிர்வகித்தலைப் பயன்படுத்துகிறார். ஜனங்களைச் சீரழிப்பதன் மூலம், சாத்தான் அவர்களின் தலைவிதியை நெருக்கி, தேவனின் கிரியையைச் சீர்குலைக்கிறான். மறுபுறம், மனிதகுலத்தை இரட்சிப்பதே தேவனின் கிரியையாக இருக்கிறது. தேவன் செய்யும் கிரியையின் எந்தக் கட்டம் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக இல்லை? எந்த நடவடிக்கை ஜனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும், அவர்கள் நீதியுடன் நடந்துகொள்வதற்கும், நேசிக்கக்கூடியவர்களின் உருவத்தை வெளிப்படுத்துவதற்கும் இல்லை? இருப்பினும், சாத்தான் இதைச் செய்வதில்லை. அவன் மனிதகுலத்தைச் சீரழிக்கிறான்; அவன் தொடர்ந்து பிரபஞ்சம் முழுவதும் மனிதகுலத்தைச் சீரழிக்கும் கிரியையை மேற்கொள்கிறான். நிச்சயமாக, தேவன் சாத்தானிடம் கவனம் செலுத்தாமல் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார். சாத்தானுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் தேவனால் வழங்கப்பட்டதே; தேவன் அவருடைய எல்லா அதிகாரத்தையும் மொத்தமாகக் கொடுக்கவில்லை, எனவே சாத்தான் என்ன செய்தாலும், அவனால் ஒருபோதும் தேவனை மிஞ்ச முடியாது, எப்போதும் தேவனின் பிடியில்தான் இருக்கமுடியும். தேவன் பரலோகத்தில் இருந்தபோது அவருடைய எந்தக் கிரியைகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் வெறுமனே சாத்தானுக்கு அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதியைக் கொடுத்து, மற்ற தேவதூதர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர அவர் அனுமதித்தார். ஆகையால், சாத்தான் என்ன செய்தாலும், அவனால் தேவனின் அதிகாரத்தை மிஞ்ச முடியாது, ஏனென்றால் தேவன் முதலில் வழங்கிய அதிகாரம் மிகக் குறைவானதுதான். தேவன் கிரியை செய்கையில், சாத்தான் இடையூறு செய்கிறான். கடைசி நாட்களில், அவனது இடையூறுகள் முடிவடையும்; அதேபோல், தேவனின் கிரியையும் முடிவடையும், மேலும் தேவன் பரிபூரணப்படுத்த விரும்பும் மனுஷர், பரிபூரணப்படுத்தப்படுவர். தேவன், ஜனங்களை நேர்மறையாக வழிநடத்துகிறார்; அவரது வாழ்க்கை ஜீவத்தண்ணீர்போன்றது, அளவிட முடியாதது மற்றும் எல்லையற்றது. சாத்தான் மனுஷனை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சீரழித்துவிட்டான்; முடிவில், ஜீவத்தண்ணீர் மனுஷனைப் பரிபூரணப்படுத்தும், சாத்தானால் தலையிட்டு அவனது கிரியையைச் செய்ய இயலாது. இதன்மூலம், தேவனால் இந்த ஜனங்களை முழுமையாகத் திரும்பப் பெற முடியும். இப்போது கூட, சாத்தான் இதை ஏற்க மறுக்கிறான்; அவன் தொடர்ந்து தேவனுக்கு எதிராகத் தன்னைத் தூண்டுகிறான், ஆனால் அவர் அதைக் கவனிப்பதே இல்லை. "சாத்தானின் அந்தகாரப் படைகள் அனைத்தையும், சகல அந்தகாரச் செல்வாக்குகளையும் நான் வெற்றி கொள்வேன்," என்று தேவன் கூறியுள்ளார். இது இப்போது மாம்சத்தில் செய்யப்பட வேண்டிய கிரியை, மேலும் இதுவே தேவன் மாம்சமாக மாறுவதையும் முக்கியமாக்குகிறது: அதாவது, கடைசி நாட்களில் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையின் கட்டத்தை நிறைவு செய்வதற்கும், சாத்தானுக்குச் சொந்தமான அனைத்தையும் துடைத்தெறிவதற்கும் இந்தக் கிரியை செயல்படுத்தப்படும். சாத்தானுக்கு எதிரான தேவனுடைய வெற்றி தவிர்க்கமுடியாதது! உண்மையில், சாத்தான் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே தோல்வியடைந்து விட்டான். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் முழுவதும் சுவிசேஷம் பரவத் தொடங்கியபோது—அதாவது, தேவனின் மனுஷ அவதரிப்பு அவருடைய கிரியையைத் தொடங்கியதும், இந்தக் கிரியை செயல்பாட்டிற்கு வந்தது—சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டான், ஏனென்றால் மனுஷ அவதரிப்பின் நோக்கம் சாத்தானை வெல்வதே ஆகும். தேவன் மீண்டும் மாம்சமாகி, எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத தன் கிரியையைத் துவங்கிவிட்டார் என்பதைச் சாத்தான் கண்டவுடனேயே, இந்தக் கிரியையைக் கண்டு அவன் திகைத்துப்போனான், மேலும் எந்தக் குறும்புகளையும் செய்யத் துணியவில்லை. முதலில் சாத்தான், தானும் ஏராளமான ஞானத்தைக் கொண்டிருப்பதாக நினைத்து, தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவித்தான்; எவ்வாறாயினும், தேவன் மீண்டும் மாம்சமாக மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அல்லது அவருடைய கிரியையில், மனுஷரை வென்று சாத்தானைத் தோற்கடிக்க தேவன் சாத்தானின் கலகத்தனத்தை மனிதகுலத்திற்கான வெளிப்பாடாகவும் நியாயத்தீர்ப்பாகவும் பயன்படுத்துவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தேவன் சாத்தானை விட புத்திசாலி, அவருடைய கிரியைகள் அதை விட புத்திசாலித்தனமானவை. ஆகையால், நான் முன்பு கூறியது போல், "நான் செய்யும் கிரியை சாத்தானின் தந்திரங்களுக்குப் பிரதியுத்தரமாக மேற்கொள்ளப்படுகிறது; இறுதியில், நான் என் சர்வவல்லமையையும், சாத்தானின் வல்லமையற்ற தன்மையையும் வெளிப்படுத்துவேன்." தேவன் தனது கிரியையை முன்னணியில் மேற்கொள்வார், அதே நேரத்தில் சாத்தான் பின்னால் மேற்கொள்வான், இறுதியில், அவன் அழிக்கப்படுவான்—தன்னை எது அடித்தது என்று கூட அவனுக்குத் தெரியாது! அடித்து நொறுக்கப்பட்ட பின்னரே அவன் உண்மையை உணருவான், அதற்குள் அவன் ஏற்கனவே அக்கினிக்கடலில் எரிக்கப்பட்டிருப்பான். அப்போது அவன் முழுமையாக உறுதிப்பட்டிருப்பான் இல்லையா? ஏனென்றால், சாத்தானுக்குக் கிரியை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இருக்காது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க