தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 122
ஆகஸ்ட் 3, 2022
ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)
ஒருவருடைய ஜீவிதத்தின் போக்கில், ஒவ்வொரு நபரும் தொடர்ச்சியான முக்கியமான சந்தர்ப்பங்களுக்கு வருகிறார்கள். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை நிர்ணயிக்கும் மிக அடிப்படையான மற்றும் மிக முக்கியமான நிலைகள் இவை. இதில் பின்வருபவை, ஒவ்வொரு நபரும் தங்களது ஜீவிதத்தின் போக்கில் கடந்து செல்ல வேண்டிய இந்த வழித்தடங்களின் சுருக்கமான விளக்கங்களாகும்.
முதல் சந்தர்ப்பம்: பிறப்பு
ஒரு நபர் எங்கே பிறக்கிறார், அவர் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறார், அவரது பாலினம், தோற்றம் மற்றும் பிறந்த நேரம் என இவை ஒரு நபருடைய ஜீவிதத்தின் முதல் சந்தர்ப்பம் குறித்த விவரங்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தின் சில விவரங்களை யாராலும் தேர்வு செய்யமுடியாது. அவை அனைத்தும் சிருஷ்டிகரால் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. அவை எந்த வகையிலும் வெளிப்புறச் சூழலால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தக் காரணிகளும் இந்த உண்மைகளை மாற்ற முடியாது. அவை சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு நபர் பிறக்க வேண்டும் என்றால், அந்த நபருக்காகச் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்த தலைவிதியின் முதல்படியை அவர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார் என்று அர்த்தமாகும். இந்த விவரங்கள் அனைத்தையும் அவர் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானித்திருப்பதால், அவற்றில் எதையும் மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு நபருடைய பிறப்பின் நிலைமைகளானது அவருடைய அடுத்தடுத்த தலைவிதியைப் பொருட்படுத்தாமல், முன்னரே தீர்மானிக்கப்படுகின்றன, அவை அப்படியே இருக்கின்றன; அவை ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை, மேலும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைப் பற்றிய சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அவை எந்த வகையிலும் பாதிப்பதில்லை.
1. சிருஷ்டிகருடைய திட்டங்களிலிருந்து ஒரு புதிய ஜீவிதம் பிறக்கிறது
முதல் சந்தர்ப்பத்தின் விவரங்களான ஒருவருடைய பிறந்த இடம், ஒருவருடைய குடும்பம், ஒருவருடைய பாலினம், ஒருவருடைய உடல் தோற்றம், ஒருவர் பிறந்த நேரம், என இவற்றுள், ஒரு நபர் எதனைத் தேர்வு செய்யக்கூடும்? பொதுவாக, ஒருவருடைய பிறப்பு என்பது தானாக நடக்கும் நிகழ்வாகும். ஒருவர் விருப்பமின்றி, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்துடன் பிறக்கிறார்; ஒருவர் விருப்பமின்றி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உறுப்பினராகிறார், ஒரு குறிப்பிட்ட குடும்ப மரத்தின் கிளையாகிறார். இந்த முதல் ஜீவிதச் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு வேறு வழியில்லை, மாறாக சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட பாலினம் மற்றும் தோற்றத்துடன் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், மேலும் ஒரு நபருடைய ஜீவகாலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளபடி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கிறார். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒரு நபர் என்ன செய்ய முடியும்? அனைத்திற்கும் மேலாக, ஒருவருடைய பிறப்பு தொடர்பான இந்த விவரங்களில், ஒன்றைக் குறித்தும் ஒருவர் தேர்வு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை. சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பு மற்றும் அவரது வழிகாட்டுதல் மட்டும் இல்லாவிட்டால், இந்த உலகில் புதிதாகப் பிறக்கும் ஒரு ஜீவனுக்கு எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், உறவுகள், சொந்தம், உண்மையான வீடு எனஎதுவும்தெரியாது. ஆனால் சிருஷ்டிகருடைய மிகச்சிறந்த ஏற்பாடுகள் காரணமாக, இந்த புதிய ஜீவிதத்தில் தங்குவதற்கு ஒரு இடம், பெற்றோர், தனக்குச் சொந்தமான இடம் மற்றும் உறவினர்கள் என இவற்றைப் பெற்றுள்ளது. எனவே ஜீவிதம் அதன் பயணத்தின் போக்கில் அமைந்திருக்கிறது. இந்தச் செயல்முறை முழுவதிலும், இந்தப் புதிய ஜீவிதத்தின் தோற்றம் சிருஷ்டிகருடைய திட்டங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜீவன் வைத்திருக்கும் அனைத்தும் சிருஷ்டிகரால் வழங்கப்படுகிறது. தனக்கென எதுவுமில்லாமல் ஒரு விடுதலையான மிதக்கும் உடலில் இருக்கும் ஜீவன், படிப்படியாக ஒரு சதை மற்றும் இரத்தமாகப் புலப்பட்டு, உறுதியான மனிதனாக, தேவனுடைய சிருஷ்டிப்புகளில் ஒன்றாகவும், சிந்திக்கும், சுவாசிக்கும் ஒன்றாகவும், சூட்டையும் குளிரையும் உணர்கிற ஒன்றாகவும் மாறுகிறது; மேலும், பொருள் உலகில் சிருஷ்டிக்கப்பட்டவருடைய வழக்கமான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடிய; படைக்கப்பட்ட ஒரு மனிதன் ஜீவிதத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்திற்கும் உட்படும் ஒன்றாக ஜீவன் மாறுகிறது. சிருஷ்டிகர் ஒரு நபருடைய பிறப்பை முன்கூட்டியே தீர்மானிப்பது என்றால் உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர் அந்த நபருக்கு வழங்குவார் என்று அர்த்தமாகும்; அதைப் போலவே, ஒரு நபர் பிறக்கிறார் என்றால் சிருஷ்டிகரிடமிருந்து உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெறுவார்கள் என்றும், அதுமுதல், அவர்கள் சிருஷ்டிகரால் வழங்கப்பட்ட மற்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்ட மற்றொரு வடிவத்தில் ஜீவிப்பார்கள் என்றும் அர்த்தமாகும்.
2. வெவ்வேறு மனிதர்கள் ஏன் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கின்றார்கள்
மனிதர்கள் மறுபிறவி எடுத்தால், ஒரு கற்பனை குடும்பத்தில் தோன்ற வேண்டும் என்று பெரும்பாலும் கற்பனை செய்ய விரும்புகிறார்கள். பெண்களாக இருந்தால், அவர்கள் ஸ்னோ ஒயிட்போல தோற்றமளிக்கவும், எல்லோராலும் நேசிக்கப்படவும் விரும்புவார்கள். ஆண்களாக இருந்தால், அவர்கள் இளவரசர் சார்மிங்போல, எதையும் செய்யாமலே, உலகம் முழுவதையும் தங்களது கையின் அசைவில் ஆட்சி செய்ய விரும்புவார்கள். தங்களது பிறப்பைப் பற்றி பலர் மாயையான காரியங்களை உருவாக்குகிறார்கள். மேலும் அதில் மிகுந்த அதிருப்தி அடைந்து, தங்களது குடும்பம், அவர்களுடைய தோற்றம், பாலினம், அவர்கள் பிறந்த நேரம் போன்றவற்றின் மீது கூடக் கோபப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஏன் பிறக்கிறார்கள் அல்லது ஏன் ஒரு குறிப்பிட்டத் தோரணையில் உள்ளார்கள் என்பதை ஜனங்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் எங்கு பிறந்தார்கள் அல்லது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும் என்பதும் சிருஷ்டிகருடைய ஆளுகையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மேலும் இந்த நோக்கம் ஒருபோதும் மாறாது. சிருஷ்டிகருடைய பார்வையில், ஒருவர் பிறந்த இடம், ஒருவருடைய பாலினம் மற்றும் ஒருவருடைய உடல் தோற்றம் அனைத்தும் தற்காலிகமான விஷயங்களாகும். அவை முழு மனிதகுலத்தின் தனது சர்வவல்லமையின் ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டுள்ள சிறிய குறிப்புகளும், அடையாளங்களும் ஆகும். ஒரு நபருடைய உண்மையான இலக்கு மற்றும் விளைவு எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் அவர்களுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் நிறைவேற்றும் பணி மற்றும் அவரது ஆளுகைத் திட்டம் முடிந்ததும் சிருஷ்டிகர் அருளும் தீர்ப்பால் தீர்மானிக்கப்படுகிறது.
ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருப்பதாகவும், எந்தவொரு விளைவும் காரணமின்றி இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே, ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய தற்போதைய ஜீவிதம் மற்றும் ஒருவருடைய முந்தைய ஜீவிதம் ஆகியவற்றுடன் நிச்சயமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருடைய மரணம் அவர்களுடைய தற்போதைய ஆயுட்காலத்தை முடிக்குமானால், ஒரு நபருடைய பிறப்பு ஒரு புதிய சுழற்சியின் தொடக்கமாக இருக்கிறது. ஒரு பழைய சுழற்சி ஒரு நபருடைய முந்தைய ஜீவிதத்தைப் பிரதிபலிக்கிறது என்றால், புதிய சுழற்சி இயற்கையாகவே அவர்களுடைய தற்போதைய ஜீவிதத்தைக் குறிக்கிறது. ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய கடந்த கால ஜீவிதத்துடனும், ஒருவருடைய தற்போதைய ஜீவிதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளதால், ஒருவருடைய பிறப்புடன் அவருடைய கடந்த கால இருப்பிடம், குடும்பம், பாலினம், தோற்றம் மற்றும் இது போன்ற பிற காரணிகள் அனைத்தும் அவருடைய தற்போதைய ஜீவிதத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இதன்பொருள், ஒரு நபருடைய பிறப்பின் காரணிகள் ஒருவருடைய முந்தைய ஜீவிதத்தால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், தற்போதைய ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றது. இது மனிதர்கள் பிறக்கும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு காரணமாகிறது: சிலர் ஏழைக்குடும்பங்களில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் பணக்காரக் குடும்பங்களில் பிறக்கிறார்கள். சிலர் சாதாரண முன்னோர்களைப் பெற்றுள்ளனர், மற்றவர்கள் சிறப்பான பரம்பரைகளைக் கொண்டுள்ளனர். சிலர் தெற்கிலும், மற்றவர்கள் வடக்கிலும் பிறக்கிறார்கள். சிலர் பாலைவனத்திலும், மற்றவர்கள் பசுமையான நிலங்களிலும் பிறக்கிறார்கள். சிலருடைய பிறப்புகளில் சந்தோஷம், நகைப்பு மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளன; மற்றவர்கள் கண்ணீர், பேரழிவு மற்றும் துயரத்தை கொண்டு வருகிறார்கள். சிலர் பொக்கிஷமாகப் பிறக்கிறார்கள், மற்றவர்கள் களைகளைப் போல ஒதுக்கி வைக்கப்படுவார்கள். சிலர் சிறந்த அம்சங்களுடன் பிறக்கிறார்கள், மற்றவர்கள் வக்கிரமானவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் பார்ப்பதற்கு அழகானவர்கள், மற்றவர்கள் அசிங்கமானவர்கள். சிலர் நள்ளிரவில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் மதிய வெயிலின் அடியில் பிறக்கிறார்கள். … எல்லா வகையான ஜனங்களின் பிறப்புகளும் சிருஷ்டிகரால் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தலைவிதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன; அவர்களுடைய பிறப்புகள் தற்போதைய ஜீவிதத்தில் அவர்களுடைய தலைவிதியையும், அவர்கள் செய்யப்போகும் செயல்களையும், அவர்கள் நிறைவேற்றும் பணிகளையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்டவை, அவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை; முன்னரே தீர்மானிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து யாராலும் தப்ப முடியாது, யாராலும் தங்களுடைய பிறப்பை மாற்ற முடியாது, தங்களுடைய தலைவிதியை யாரும் தேர்வு செய்ய முடியாது.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்