தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 118

ஆகஸ்ட் 3, 2022

யோனா 4 ஆனால் அது யோனாவை மிகவும் அதிருப்திப்படுத்தியது, அவன் கடுங்கோபம் கொண்டு யேகோவாவிடம் ஜெபித்துச் சொன்னான்: யேகோவாவே, நான் என் நாட்டில் இருந்தபோது இதைத்தான் சொன்னேனஅல்லவா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; ஏனென்றால் நீர் கிருபைகொண்ட, இரக்கமுள்ள தேவன் என்றும், நீடிய பொறுமையும் நிறைவான அன்பும் கொண்டவர் என்றும், தீங்கு குறித்து மனம்வருந்தும் தேவனென்றும் அறிவேன். ஆகையால் யேகோவாவே, இப்போதே என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அதற்கு யேகோவா, நீ கோபம்கொள்வது சரியா? என்றார். ஆகவே, யோனா நகரத்தை விட்டு வெளியேறி, நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்று, அங்கே ஒரு குடிசை அமைத்து, நகரத்திற்கு சம்பவிக்கப்போகிறதை காணுமட்டும் நிழலில் உட்கார்ந்திருந்தான். யேகோவா தேவன், யோனாவின் தலைக்கு மேல் நிழலாக இருக்கும்படியும் அவனுடைய துக்கத்திலிருந்து அவனை விடுவிக்கும்படியும் ஆமணக்குச் செடியொன்றை முளைக்கச் செய்தார். அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனாவும் மகிழ்ச்சியுற்றான். ஆனால் மறுநாள் கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு புழுவை அனுப்பினார், அது ஆமணக்குச் செடியை அரிக்க, அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது, கிழக்கிலிருந்து வெப்பக் காற்று வரும்படி தேவன் கட்டளையிட்டார்; உச்சிவெயில் யோனாவின் தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோனான்; தனக்குள்ளே சாவை விரும்பி: நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடியைக் குறித்து கோபங்கொள்வது சரியா என்றார்; அதற்கு அவன், நான் மரண பரியந்தமும் கோபமாயிருப்பது சரியே என்றான். அதற்குக் கர்த்தர்: நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா என்றார்.

சிருஷ்டிகர் மனித குலத்திற்காக தன்னுடைய உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறார்

யேகோவா தேவனுக்கும் மற்றும் யோனாவிற்கும் இடையே நடந்த இந்த உரையாடலானது மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகருடைய உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என்பதில் சந்கேமில்லை. ஒரு புறத்தில் யேகோவா தேவன் சொன்னது போல, "வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா?" என்று கூறுவதில் தம்முடைய ராஜரீகத்தின் கீழ் எல்லா சிருஷ்டிகளைக் குறித்த சிருஷ்டிகருடைய புரிதலை இது அறிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் நினிவேயைக் குறித்த தேவனுடைய புரிதலானது மேம்போக்கான ஒன்றல்ல. அந்த நகரத்திலுள்ள உயிரினங்களின் (மக்கள் மற்றும் மிருக ஜீவன்கள்) எண்ணிக்கையை அவர் அறிந்தது மட்டுமன்றி, எத்தனைப்பேர் வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அதாவது எத்தனை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். மனித இனத்தைக் குறித்த தேவனுடைய பரந்தப் புரிதலுக்கு உறுதியான ஓர் ஆதாரமிது. இந்த உரையாடலானது மக்கள் மீதான சிருஷ்டிகருடைய மனப்பான்மையை அறிவிக்கிறது, அதாவது சிருஷ்கருடைய இருதயத்தில் மனிதகுலத்தைக் குறித்த பாரம் என்று இதைச் சொல்லாம். இது யேகோவா தேவன் "நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா…?" என்று கூறினது போன்றதாகும். இவைகள் யோனாவை நோக்கிக் கடிந்துக்கொண்ட தேவனுடைய வார்த்தைகள், ஆனால் அவைகள் எல்லாம் உண்மையானவைகள்.

நினிவே மக்களுக்கு யேகோவா தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும் பொறுப்பு யோனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவன் யேகோவா தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை, அந்த நகர மக்களுக்கான அவருடைய கவலையையும் மற்றும் எதிர்ப்பார்ப்பையும் அவன் புரிந்துக்கொள்ளவில்லை. இந்தக் கண்டிப்பில், மனிதகுலமானது தேவனுடைய கரங்களின் கிரியை என்பதை அவனுக்கு அவர் எடுத்துச்சொல்ல விரும்பினார், ஒவ்வொரு தனிநபரும் தேவனுடைய எதிர்ப்பார்ப்பைத் தங்கள் தோள்களின் மீது சுமந்துச் செல்லும்படிக்கும் மற்றும் ஒவ்வொரு தனி நபரும் தங்களுடைய வாழ்விற்கு தேவன் அளித்தவற்றை அனுபவிக்கும்படிக்கும் அவர் ஒவ்வொரு தனிநபர் மீதும் தம்முடைய கடின முயற்சியைப் பயன்படுத்தியிருக்கிறார், ஏனெனில் ஒவ்வொருவருக்காகவும் கடின முயற்சி என்ற விலையைக் கொடுத்து இருக்கிறார். இந்தக் கடிந்துக்கொள்ளுதலானது யோனா ஆமணக்குச் செடியை நேசித்துப்போல தேவன் தம்முடைய சொந்தக் கரங்களின் கிரியைகளாகிய மனித குலத்தை நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அந்த நகரத்தில் பல குழந்தைகள் மற்றும் ஒன்றுமறியாத மிருக ஜீவன்கள் இருக்கிற காரணத்தினால் மனித குலத்தை தேவன் அவ்வளவு எளிதில் அல்லது சாத்தியமாகும் கணப்பொழுதுவரை எவ்விதத்திலும் அழிக்கமாட்டார். வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாத தேவனுடைய கிரியைகளான இளைஞர்களோடு இடைபடும்போது தேவன் அவர்களுடைய வாழ்வை முடிப்பது மற்றும் அவர்களுடைய முடிவை அவசரகதியில் தீர்மானிப்பது சிறியதாகக் கருதப்பட்டது. அவர்கள் வளருவதைப் பார்க்க தேவன் விரும்பினார், அவர்கள் அவர்களுடைய முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல மாட்டார்கள், அவர்கள் யேகோவா தேவனின் எச்சரிக்கையை மறுபடியும் கேட்கக் கூடாது என நம்பினார், அவர்கள் நினிவேயின் கடந்த காலத்திற்கு அத்தாட்சியாக இருப்பார்கள் என அவர் நம்பினார். சற்றுக் கூடுதலாக சொல்வதென்றால் தேவன் நினிவே நகரத்தை அது மனந்திரும்பின பிறகு பார்க்க விரும்பினார், மனந்திரும்புதலைப் பின்தொடர்ந்து அதன் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினார், மிக முக்கியமாக நினிவே நகரம் தேவனுடைய இரக்கத்தின் கீழ் மறுபடியும் வாழ்வதை விரும்பினார். ஆகையால் தேவனுடைய கண்களில் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அந்தச் சிருஷ்டிகள் நினிவேயின் எதிர்காலமாக இருந்தனர். அவர்கள் யேகோவா தேவனின் வழிகாட்டுதலின் கீழ் நினிவேயின் கடந்த காலம் மற்றும் அதனுடைய எதிர்காலம் ஆகிய இரண்டிற்கும் சாட்சியாக இருக்கும் முக்கியமான வேலையைச் சுமப்பது போன்று, நினிவேயின் அருவருக்கத்தக்கக் கடந்தகாலத்திற்கும் சாட்சியைச் சுமப்பார்கள். அவருடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த அறிவிப்பில், யேகோவா தேவன் மனிதகுலத்திற்குச் சிருஷ்டிகரின் இரக்கத்தை அதனுடைய நிறைவான அளவில் அளித்தார். "சிருஷ்டிகரின் இரக்கம்" என்பது வெறும் சொற்றொடருமல்ல, வெற்று வாக்குத்தத்தமுமல்ல; அது உறுதியான கோட்பாட்டையும், முறைகளையும், நோக்கங்களையும் கொண்டது. தேவன் உண்மையுள்ளவராகவும், மெய்யானவராகவும் இருக்கிறார், அவர் பொய்யானவற்றைப் பயன்படுத்துவதில்லை அல்லது வேஷம் மாறுவதில்லை, இதைப்போன்று மனிதகுலத்தின் மீது அவருடைய இரக்கம் எல்லா நேரத்திலும் எல்லாக் காலங்களிலும் முடிவில்லாமல் பொழியப்பட்டிருக்கிறது. எப்படியாயினும், அவர் மனிதகுலத்திற்கு ஏன் இரக்கம் காட்டுகிறார் மனித குலத்திற்கு அவர் எவ்வாறு இரக்கம் காட்டுகிறார் மனித குலத்தின் மேல் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார் மற்றும் மனித குலத்திற்கான அவருடைய உண்மையான உணர்வுகள் எவை என்பதற்கு யோனாவுடன் பரிமாறப்பட்ட அறிக்கை ஒன்றே இன்று வரை பிரத்தியேக வாய்மொழி அறிக்கையாக இருக்கிறது. யேகோவா தேவனுடைய சுருக்கமான வார்த்தைகள் இந்த உரையாடலில் மனித குலத்துடனான அவருடைய எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமையாக வெளிப்படுத்துகிறது; அவைகள் மனித குலத்துடனான அவருடைய இருதயத்தினுடைய அணுகுமுறையின் உண்மையான ஒரு வெளிப்பாடு, மேலும் அவைகள் மனித குலத்தின் மீது அவர் பொழிந்த இரக்கத்திற்கான உறுதியான ஆதாரம். அவருடைய இரக்கமானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எப்பெழுதும் பொழியப்படுவதுப்போன்று, மனிதகுலத்தின் மூத்தவர்கள் மீது மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் இளைய உறுப்பினர்கள் மீதும் பொழியப்பட்டது. தேவனுடைய கோபமானது மனிதகுலத்தின் ஒரு சில மூலைகளில் மற்றும் ஒரு சில காலங்களில் அவ்வப்போது கீழிறங்கி வந்தாலும், தேவனுடைய இரக்கமானது ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. அவருடைய சிருஷ்டிகளை ஒரு தலைமுறைக்குப் பிறகு மற்றுமொரு தலைமுறைக்கு வழிநடத்துகிறார் மற்றும் வழிவகுக்குகிறார் ஒரு தலைமுறைக்குப் பின்னர் அடுத்த தலைமுறையை நேசிக்கிறார், ஏனெனில் யேகோவா தேவன் "நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா…?" என்று கூறினது போன்று மனிதகுலத்தை நோக்கிய அவருடைய உண்மையான உணர்வுகள் ஒருபோதும் மாறாதவை. அவர் தம்முடைய சொந்தச் சிருஷ்டிப்புகளை எப்பொழுதும் நேசிக்கிறார். இந்த இரக்கமானது சிருஷ்டிகருடைய நீதியின் இயல்பாகவும் மற்றும் சிருஷ்கருடைய முழுத் தனித்துவமாகவும் இருக்கிறது!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க